திங்கள், 29 ஜனவரி, 2018

திங்கக்கிழமை 180129 : இஞ்சி மொரபா - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பிஇஞ்சி மொரபா 

தேவையான பொருள்கள்:

இஞ்சி(இளசாக)  -  200 gm 

சர்க்கரை செய்முறை:

இளசாக இருக்கும் இஞ்சியை தோல் சீவி துருவிக் கொள்ளவும். இஞ்சித் துருவலைப் போல ஒன்றரை அல்லது இரு மடங்கு சர்க்கரையை அடி  கனமான ஒரு பாத்திரத்தில் போட்டு, அது முழுகும் வரை தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சவும். சர்க்கரை நன்கு கரைந்து பாகு கொதிக்க ஆரம்பிக்கும் பொழுது இஞ்சித் துருவலை சேர்த்து அடி  பிடிக்காமல் கிளறவும். 

இஞ்சி, சர்க்கரை பாகு கலவை தேங்காய் பர்பி போல பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும் பொழுது ஒரு தட்டில் கொட்டி துண்டு போடவும். துண்டுகள் சிறியதாக இருக்க வேண்டும். 


ஆறிய இஞ்சி மொரபா துண்டுகளை ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக் கொண்டால் தேவையான பொழுது எடுத்து சாப்பிடலாம். வயிற்று உப்புசம், வாயுத் தொல்லை போன்ற சமயங்களில் நல்ல பலன் அளிக்கும். 

அசிடிட்டி தொல்லை உள்ளவர்கள் அதிகம் சாப்பிட வேண்டாம்.தமிழ்மணம்.

63 கருத்துகள்:

 1. ஸ்ரீராம் மற்றும் கீதா/ கீதா அனைவருக்கும் அன்பின் வணக்கம்..

  பதிலளிநீக்கு
 2. காலை வணக்கம் ஸ்ரீராம் அண்ட் துரை செல்வராஜு அண்ணா...

  கீதா

  பதிலளிநீக்கு
 3. துரை செல்வராஜூ ஸார்... கீதா / கீதா வைக் காணோம்!

  பதிலளிநீக்கு
 4. சர்க்கரை என்பது நாட்டுச் சர்க்கரை தானே...

  அதுதான் நல்லது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலை வணக்கம் சார்! நாட்டு சர்க்கரை இல்லை. அஸ்கா சர்க்கரை தான்(ஜீனி). நன்றி!

   நீக்கு
 5. ஓ... ஒரு கீதா வந்தாச்சு! காலை வணக்கம்

  பதிலளிநீக்கு
 6. ஹும் இவ்வளவு நேரம் ப்ளாகர் சண்டை போட்டது ஹா ஹா ஹா ஹா...கான்ஃபிளிக்ட் என்று சொல்லியது !!!!!
  ஆஜர் மொரபா திங்க வந்துட்டேன்...ஹை கில்லர்ஜியின் பதிவு இஞ்சி மொரபா வந்ததே!!!

  இஞ்சி மொரபாவைப் பார்த்ததும் என் அப்பா வழிப்பாட்டி நினைவு...பாட்டி அடிக்கடி செய்து வைப்பார். தாத்தாவுக்கும் எங்களுக்கும் என்று...

  கீதா

  பதிலளிநீக்கு
 7. முறப்பா என்பது அரபி வார்த்தை தெரியுமோ!...

  Jam வகைகளை முறப்பா என்றே சொல்வர்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி இதில் இன்னொரு ஆச்சர்யம் அரேபியர்கள் Jam ஐ முரப்பா என்று அரபு மொழியில் சொல்கின்றார்கள்.

   நாம் ஆங்கில வார்த்தையையே சொல்கிறோம்.

   தமிழில் என்னவென்று தேடியபோது கிடைத்த பதில் கண்டு அதிர்ந்தேன். காரணம் தமிழில் அதன் பெயர் முரப்பா.

   தமிழும், அரபியும் இணைந்த வார்த்தைகளில் முரப்பாவும் ஒன்று.

   நீக்கு
 8. ஓ... ஒரு கீதா வந்தாச்சு! காலை வணக்கம்//

  ஹா ஹா ஹா ஹா யெஸ்!!! நான் ஆஜர்!!!

  என் பையனுக்கும் செய்ததுண்டு....முதலில் என் பாட்டி செய்வது போன்று துருவிச் செய்ததுண்டு... பின்னர் அரைத்துச் செய்வதானது... கோவில்பட்டி இஞ்சி மொரபா போல...

  பாட்டி வெல்லம் போட்டும் செய்வார். எனவே அப்புறம் நான் வெள்ளைச் சர்க்கரையைக் குறைத்துக் கொள்ளத் தொடங்கியதும் அப்படியும் நான் செய்ததுண்டு..

  சிறிய வயதில் சில சமயம் நாங்கள் சாப்பிட மாட்டோம் என்பதால் பாட்டி இதை லேகியமாகவும் நெய் கொஞ்சம் போட்டு செய்துவைப்பார். எங்களைச் சாப்பிட வைக்க என்னெல்லாமோ டெக்னிக் (தக்கனிக்)

  பானுக்கா சூப்பர் ரெசிப்பி!!!!!! ஆமாம் அக்க்கா வயிறு உப்புசம் வாயுத் தொல்லைக்கு நல்லது. அதுக்குத்தான் பாட்டி அப்போது எல்லாம் இஞ்சித் தொகையல் அரைத்தால் நாங்கள் சாப்பிட மாட்டோம் என்று இப்படிச் செய்து வைப்பார்..

  கீதா

  பதிலளிநீக்கு
 9. இப்போத் தான் வரேன். வழக்கம் போல் மடிக்கணினி! ஹிஹிஹி, அலுத்துப் போச்சு! அப்புறம் இன்னிக்குத் "திங்க"ற கிழமைனு மறந்துட்டேன். முகநூலில் பார்த்துட்டு ஓடோடி வந்தால் காரசாரமான இஞ்சி மொர(B)பா! சாப்பிட்டேன். நெல்லிக்காயையும் இம்மாதிரி சர்க்கரைப் பாகில் தேன் கலந்து ஊறப் போட்டு வைச்சுட்டுச் சாப்பிடலாம். அது ரொம்பவே நல்லது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Good morning கீதா அக்கா! சிறிய நெல்லிக்காயில்(அருகில் நெல்லிக்காய்) மொரபா செய்வதுண்டு. நன்றி!

   நீக்கு
 10. இஞ்சி மொரப்பா
  சிறுவயதில் வாங்கிய நினைவுகள் வருகின்றன

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்போதும் கிடைக்கிறது,ஆனால் ஒரே சர்க்கரை, இஞ்சி வாயில் தட்டுப்பட்டால் அதிர்ஷ்டம். நன்றி!

   நீக்கு
 11. என் அம்மாவின் அம்மா அவ்வப்போது இஞ்சி மொரபாவை வாயில் அடக்கி வைத்துக் கொள்வார். அப்புறம் மொரபா இல்லாத போது இஞ்சியைத் துருவிக் கொண்டு அதனுடன் வெல்லம் கலந்து வாயில் போட்டுக் கொள்வார்.

  கீதா

  பதிலளிநீக்கு
 12. வாவ் இஞ்சி மொரப்பா சாப்பிட்டு இருக்கிறேன் இங்கேயும் கிடைக்கிறது ஆனால் இது வரை செய்து பார்த்ததில்லை பானுமதிம்மா கொடுத்த முறை மிக எளிதாக இருக்கிறது செய்து பார்த்துவிட வேண்டும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்! முயற்சி செய்து பாருங்கள். சுலபம்தான். நன்றி

   நீக்கு
 13. கீதாக்கா ஆஹா நான் சொல்ல வந்ததை கீதாக்கா சொல்லிட்டாங்க...ஆமாம் நெல்லிக்காய். இது எங்கள் வீட்டில் பாட்டிலில் போட்டு வைத்துவிடுவது வழக்கம். அப்புறம் நெல்லி கிடைக்கும் போது சிலவற்றை உப்பில் நீர் விட்டுக் கொள்ளும்..அதில் ஊறப்போட்டு வைத்து விட்டால் அவ்வப்போது குலுக்கு விட்டு ...எப்போது வேண்டுமானாலும் பச்சடி செய்து கொள்ளலாம். அப்புறம் நெல்லியை ஸ்டீம் செய்து தேன் மற்றும் வெல்லப்பாகில் துண்டுகளாக்கிபோட்டு ப்ரிசெர்வ் செய்து வைக்கலாம். நெல்லி மொரபாவும்....என் நாத்தனாருக்கு கேன்சர் வந்த போது நெல்லி எடுத்துக் கொள்ளச் சொன்ன போது இப்படி முதலில் வெல்லத்தில் செய்ததுண்டு. கான்சருக்கு வெள்ளைச் சர்க்கரை ஆகாது என்றும் சொல்லப்படுகிறது...ஸ்வீட்டிற்கு கான்சர் செல்களை அதிகமாக்கும் தன்மை உண்டென்று சொல்லப்படுகிறது. அப்புறம் நெல்லியை உப்பில் இட்டு வைத்துக் கொடுத்தோம்.

  கீதா

  பதிலளிநீக்கு
 14. பானுக்கா உங்கள் அளவையும் குறித்துக் கொண்டேன்...

  கடைகளில் விற்கப்படுவதில் அவை சேர்ந்து வருவதற்கும் பீஸ் போடுவதற்கும் கார்ன் ஸ்டார்ச் சேர்க்கிறார்கள் என்று நினைக்கிறேன்....

  கீதா

  பதிலளிநீக்கு
 15. மிக அருமை, பானு மா. பெண்ணுக்கு இஞ்சி மிகப் பிடிக்கும்.
  செய்து பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Good morning வல்லி அக்கா!சுலபம்தான், செய்து பாருங்கள். நன்றி!

   நீக்கு
 16. காலை வணக்கம் பானுக்கா....

  இன்று மொரபா கொடுத்து நாவில் நீர் ஊற வைத்துவிட்டீர்கள்....எங்க வீட்டுல செய்து வைச்சா என்னாகும்னா....நான் எப்பவுமே நிதானமா சாப்டறவ...கொஞ்சமா எடுத்துப்பேன்..ஸோ சரி நிதானமா எடுத்துக்கலாம்னு நினைச்சு விட்டா...நான் சாப்டு பாக்கறதுக்குள்ளயும் டப்பாகாலியாகியிருக்கும்.....ஹா ஹா ஹா....அப்படிச் சாப்பிடுவதும் நல்லது இல்லையே...அதனால இப்பல்லாம் இப்படிச் செய்யறது ரொம்ப அபூர்வம்...அதனால கேட்டால் செய்து எல்லாருக்கும் கொடுத்துட்டு வீட்டுக்கு 4 பீஸ் வைச்சுட்டு விட்டுடறது..ஹா ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
 17. அனைவருக்கும் காலை வணக்கம். சகோ நலமா...

  இஞ்சி மொரபாவை இப்போதே சாப்பிட ஆசை வந்து விட்டது...எடுக்கத்தான் முடியவில்லை....ஹிஹி...

  பதிலளிநீக்கு
 18. அந்தப்புள்ள கேட்ட கேள்வியில் இஞ்சி முரப்பாவை மறக்க வைத்தது இங்கு பதிவைப் படித்ததும் ஆசை வந்து விட்டது.

  பதிலளிநீக்கு
 19. @ KILLERGEE Devakottai said...

  அன்பின் ஜி...

  தாங்கள் எனது கருத்துக்கு வருவீர்கள் என்பது தெரியும்...

  நானும் 1991 ல் இந்த சமையற் பெருங்கூடத்துக்கு வந்து இங்குள்ள பொருட்களின் அரபுப் பெயர்களைப் பயின்றபோது திகைத்து விட்டேன்...

  நாம் தாரை வார்த்த தமிழ் வார்த்தைகளுள் இதுவும் ஒன்று போல...

  அரபி சொல்கின்றான் - முறப்பா எங்கள் வார்த்தை!.. - என்று..

  நான் சொன்னேன் - அடே.. இந்த இஞ்சி எங்களுடையது!.. - என்று..

  முறைத்தபடி போய் விட்டான்..

  பதிலளிநீக்கு
 20. சமீபத்தில் கில்லர்ஜி இடுகையில் இஞ்சி முரப்பா படம் பார்த்தபோது செய்து அனுப்பவேண்டும் என்று தோன்றியது. ஆனால் இப்போது இனிப்பை விட்டுவிட முயற்சி எடுத்துக்கொண்டிருப்பதால் செய்யவில்லை.

  ரெசிப்பி சுலபம். நல்லா வழுமூன இஞ்சியை அரைத்தால், கட் பண்ணுவது இன்னும் சுலபம். இல்லைனா, நார் இருப்பதால், சரியா சதுரம் சதுரமாக கட் ஆகாது.

  இங்க நம்ம ஊர் இஞ்சியை உபயோகப்படுத்தியிருக்கீங்க. அதுல தோல் எடுப்பது பெரிய வேலை. இங்கு சைனா இஞ்சி (ரொம்பப் பெரியது) எப்போதும் கிடைக்கும். (ஓமனில் புத்தம் புதிய சைனா இஞ்சி அங்கேயே விளைவிப்பதால் கிடைக்கும்). அதற்கு தோல் எடுப்பதும் அவ்வளவு கஷ்டமில்லை. ஆனால், இந்திய இஞ்சிதான் காரம் அதிகமாகவும், ஹெல்துக்கு நல்லதாகவும் இருக்கும்.

  இங்க சொல்லியிருக்கற மாதிரி, கடைகள்ல விற்பது ஜீனி அதிகமாகவும் இஞ்சி குறைவாகவும் இருக்கும் (இஞ்சி விலை அதிகம் என்பதால்).

  பதிலளிநீக்கு
 21. என்ன... முரப்பா, தமிழ் வார்த்தைனு சொல்றீங்க. ஏன் அது அராபியர்களிடமிருந்தோ அல்லது INVADERSகளிடமிருந்தோ வந்திருக்கக்கூடாது? பூரி கிழங்கு, குருமா, சப்பாத்தி, பிரியாணி - இவை எதுவுமே தமிழ் வார்த்தைகள் அல்ல.

  பதிலளிநீக்கு
 22. @ நெல்லைத் தமிழன் said...

  >>> பூரி கிழங்கு, குருமா, சப்பாத்தி, பிரியாணி - இவை எதுவுமே தமிழ் வார்த்தைகள் அல்ல..<<<

  நியாயம் தான்... தமிழர்களுடன் அரபிகளின் வர்த்தகத் தொடர்பு ஏற்பட்ட காலத்தில் இருந்து முறப்பா என்பது புழங்கியிருக்கலாம்..

  அதனால் தமிழர்களின் வார்த்தை என்று கொண்டாடப்பட்டு விட்டதே தவிர அது தமிழ் வார்த்தை அல்ல..

  ஆனாலும் அந்த இஞ்சி மட்டும் நம்முடையது..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆங்கிலம் தான் மற்ற மொழி வார்த்தைகளை அப்படியே ஏற்றுக் கொண்டிருக்கிறது என்று நினத்தேன். தமிழுமா...? நல்லதுதான். அப்போது தான் வளர முடியும். காபி, டீ இவைகளும் தமிழ் வார்த்தைகள் கிடையாது.

   நீக்கு
 23. எளிய இனிய பதார்த்தம்...பயணங்களின் போது மிக உபயோகமாக இருக்கும் என நினைக்கிறேன்...

  கண்டிப்பாக செய்யது பார்க்க வேண்டும்..

  பதிலளிநீக்கு
 24. இளசா இருக்கணும்னா புது இஞ்சி வரும்போது வாங்க வேண்டும். தோல் மெல்லிசா இருக்கும்.துருவியோ,அரைத்தோ அந்த இஞ்ஜியைப் பிழிந்து சர்க்கரைப்பாகு காய்ச்சும் போதே சேர்த்து விட்டால், பிசிறே தட்டாது. பிழிந்த இஞ்ஜியில்,மேலும்சிறிது தண்ணீர் சேர்த்து ,சர்க்கரையில் தண்ணீருக்கு பதில் சேர்க்கலாம்.வாயில்ப் போட்டால் கறையும். நீங்கள் செய்திருப்பதும்,சுலபம்,நன்னாயிருக்கு. ஒருஸ்பூன் நெய் சேர்த்து விட்டால் பக்ஷணமாகப் பறந்து போகும். நன்றி அன்புடன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடுத்த முறை செய்யும் பொழுது நெய் சேர்க்கிறேன். நன்றி!

   நீக்கு
 25. அஜிரணத்திற்கு நன்மை அளிக்கும் பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அஜீரணத்திற்கு மட்டும் அல்ல சளித் தொல்லைக்கும் இஞ்சி நல்லதாம். நன்றி!

   நீக்கு
 26. @காமாட்சிம்மா - //பக்ஷணமாகப் பறந்து போகும்// - நான் நாலாவது படிக்கும்போது எங்க அம்மா இஞ்சிமொரப்பா பண்ணுவாங்க. இனிப்பு பிடிக்கும் என்பதால், டிராயர்ல ரெண்டு சைடுலயும் ரெண்டு ரெண்டு பீஸ், அம்மாவுக்குத் தெரியாம ஸ்கூலுக்கு எடுத்துக்கிட்டு போவேன். சில சமயம் சாப்பிட மறந்து, வீட்டுல இரவு, தோய்க்கப்போட்ட டிராயர்ல எறும்பு போகும்போதுதான் அம்மா கண்டுபிடிப்பாங்க. உங்கள் கருத்தைப் படித்தவுடன், இந்த என் லீலை நினைவுக்கு வந்தது.

  பதிலளிநீக்கு
 27. இஞ்சி முறபா நல்லாத்தான் முறைக்கிறா:).. இப்படி ஒன்று இருப்பதையே இன்றுதான் பானுமதி அக்கா மூலம் அறிகிறேன், இது நல்ல சுவீட்தான், இஞ்சி ரீ குடிப்பதைப்போல இதைச் சாப்பிட்டு விடலாம்.

  அன்று கில்லர்ஜி படமும் போட்டுச் சொன்னதைப் பார்த்து, நான் நினைத்தது மில்க் ரொஃபி யைத்தான், ஊரில் இப்படி அழைப்பார்களாக்கும் என:)).. என்னில ஒரு பயக்கம்:).. எதையும் பெரிசாக ஆராயமாட்டேன்.. அப்படியே கடந்து விடுவேன்:).. அதனாலதான் பிரச்சனைகள் வந்தால்கூட அதை அப்படியே பலநேரம் கடந்து போய் விடுவேன்.

  சிம்பிளான மற்றும் என்போன்றோருக்கு தெரியாத ஒரு புதுக் ரெசிப்பியை இன்று அறிமுகபடுத்தி இருக்கிறீங்க பானுமதி அக்கா.. நன்றி நன்றி..

  பதிலளிநீக்கு
 28. எனக்கு இஞ்சி பிடிக்காது உணவில் எப்படியாவது சிறிதுசேர்த்து விடுவாள் மனைவி வாங்கிக் கட்டிக் கொள்வாள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கள் திட்டுவதை பொருட்படுத்தாமல் உங்கள் உடம்புக்கு நல்லது என்று செய்து கொடுக்கும் உங்கள் மனைவியை போற்றுகிறேன்.

   நீக்கு
 29. ஹஆஹாஆ :) கில்லர்ஜி போஸ்ட் பின்னூட்டத்தில் அதிரடி அதிரா செய்வார்கள்னு போட்டிருந்தார் அதுக்குள்ள எப்படியாவது செஞ்சிடணும்னு நேத்து ரெசிப்பி எடுத்து வச்சேன் :) ஆச்சர்யம் இன்னிக்கு எங்கள் பிளாக் ஆசையை நிறைவேற்றிவிட்டது

  பதிலளிநீக்கு
 30. சுலபமான ரெசிப்பி கண்டிப்பா செஞ்சுபார்க்கிறேன் பானுக்கா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. செய்து விட்டு எப்படி வந்தது என்று கூறுங்கள். காமாட்சி அம்மா கூறியிருப்பதை போல ஒரு ஸ்பூன் நெய்யும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

   நீக்கு
 31. இஞ்சி முரப்பா எளிதாக இருக்கிறது.
  காமாட்சி அக்கா சொல்வது போல் பானு சொன்ன அளவை வைத்து செய்கிறேன்.
  இருவருக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்திருக்கிறீர்கள். நலம்தானே?

   நீக்கு
 32. ரொம்ப ஈஸியான் ரெஸிபி.

  மொரப்பா என்று ஏன் பெயர் வந்தது?..

  மொர மொர என்று இருப்பதினாலோ?

  இஞ்சியைத் துணுக்கு துணுக்காக வெட்டிக்கொண்டு அதில் எலும்பிச்சையை பிழ்ந்து வெயில் உலர்த்தி காய வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். காலாதிகாலத்திற்கு கெட்டுப் போகாமல் இருக்கும்.

  வயிற்றுப் பிரட்டல், அஜீரணக் கோளாறு சமயங்களில் ரெண்டு துணுக்கு எடுத்து வாயில் போட்டுக் கொண்டு மென்றால், அ.கோ. எல்லாம் ஹோ கயா!

  போன வாரம் முழுக்க ஒரு இண்டஸ்ட்ரி மாதிரி எங்கள் வீட்டில் இந்த தயாரிப்பு தான். இரண்டு ஹார்லிக்ஸ் பாட்டில் அளவு தேறி இருக்கிறது. யு.எஸ். பயணம் போது எடுத்துச் செல்வதற்காக.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அது மொரப்பாவா? மொரபாவா? மொறபாவா? அரபி வார்த்தையாமே? வருகைக்கு நன்றி!

   நீக்கு
 33. அசிடிட்டி உள்ளவர்கள் அதிகம் சாப்பிட.வேண்டாம் என்பது உண்மை!

  பதிலளிநீக்கு
 34. ஹூம், மூணு தரம் கொடுத்தும் என்னோட கருத்தை ஏற்கவே இல்லை! அதான் அடுத்த பதிவுக்கு லேட் ஆயிடுச்சு. அந்தக் கமென்ட் எங்கே போச்சு? காக்கா ஊஷ்???????????????

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் பின்னூட்டத்தை ஏற்கவில்லை என்பது தெரிந்து விட்டதே, என் கருத்துகள் ஏற்கப் பட்டதா இல்லையா? என்பதே தெரியாமல் குழப்பம் 😞😞

   நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!