Monday, January 15, 2018

திங்கக்கிழமை : கோக்கோ ஸ்வீட் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி

இந்த இனிப்பு என் பையனுக்கு மிகவும் பிடித்தது. எனக்கு இதிலெல்லாம் இஷ்டமில்லை. நான் டிரெடிஷனல் இனிப்பு வகைகளை, அதுவும் தமிழ்நாட்டு பாரம்பரிய இனிப்புவகைகளைத்தான் விரும்புவேன். (மைசூர்பாக், மனோகரம், அல்வா, அதிரசம், திரட்டிப்பால் போன்று). அவனுக்காக என் ஹஸ்பண்ட், தீபாவளிக்குச் செய்தது இந்த இனிப்பு. நானும் அப்போது அங்கிருந்ததால், எங்கள் பிளாக் தி.பதிவுக்காக எல்லாவற்றையும் படம் எடுத்துக்கொண்டேன். ரெண்டு தெரு தூரத்துல ஸ்ரீகிருஷ்ணாவும், கிராண்ட் ஸ்வீட்சும், இன்னும் சிறிது தூரத்தில் அடையாறு ஆனந்தபவனும் இருக்கும்போது எதுக்கு எல்லா ஸ்வீட்சையும் மெனக்கெட்டு செய்து கஷ்டப்படணும்கறது என் கட்சி. ஆனா, அந்த அந்தப் பண்டிகைகளுக்கு முடிந்த அளவு அதற்குரிய பக்ஷணங்களை செய்துவிடவேண்டும் என்பது என் ஹஸ்பண்டின் கட்சி. உங்களுக்குத் தெரியும், சமையலறையைப் பொருத்த மட்டில், யார் சொல் நிற்கும் என்று.  

​​

தேவையான பொருட்கள்
1 ½ (ஒன்றரை) கப் பால் பவுடர் – நாங்க இங்கிருந்து கொண்டுபோயிருந்த அல்மராய் பால் பவுடர் உபயோகப்படுத்தினோம்.
1 கப் கும்பாரமா ஜீனி
½ (அரை) கப் தண்ணீர்
¼ (கால்) கப் வெண்ணெய்
4 மேசைக்கரண்டி கோக்கோ பவுடர்

எப்படிச் செய்யறதுன்னு பார்த்துடலாமா?


முதல்ல பால் பவுடர் மற்றும் கோக்கோ பவுடரையும் ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக கலக்கிவையுங்கள்.


ஒரு கடாயில் ஜீனியும் தண்ணீரும் சேர்த்து ஜீனிப் பாகு தயார் செய்யுங்கள். ரொம்ப திக்கான பாகு (பக்கத்துல கொஞ்சம் தண்ணீர் உள்ள கப் வைத்துக்கொண்டு, அதுல ஒரு துளி பாகைப் போட்டீங்கன்னா அது உடனே உருண்டையா உருட்டற மாதிரி ஆகணும். அப்படீன்னா நல்ல பாகா ஆகணும்)
ஜீனிப் பாகு தயாராகும்போதே ஒரு தட்டுல கொஞ்சம் நெய் தடவி ரெடியா வச்சுக்குங்க.பாகு ரெடியானதும் அதில் வெண்ணெயைப் போட்டுவிட்டு, அடுப்பை அணைத்துவிடவும்.

கடாயில், கலந்துவைத்துள்ள பால்பவுடர்+கோக்கோ பவுடர் கலவையை கொஞ்சம் கொஞ்சமாக இட்டு நன்றாகக் கிளறுங்கள் (ஞாபகம் இருக்கட்டும், நாம் அடுப்பை அணைத்துவிட்டோம்). கொஞ்சம் வேகமாகக் கலந்து இந்த மிக்ஸை அப்படியே தட்டில் விடவும்.மேல் பகுதியை நல்லா ஒரு கரண்டியால் அழுத்தி, ஸ்மூத்தாக இருக்கும்படி செய்துகொள்ளவும்.கொஞ்சம் சூடு குறைந்ததும் கத்தியை வச்சு துண்டங்களுக்காக கோடு போட்டுக்கொள்ளுங்கள். நல்லா ஆறின பின்பு, அதனை வெட்டி எடுத்துவிடலாம்.என்ன தவறுகள் வரலாம்?

ஜீனிப் பாகை ரொம்ப கெட்டியாக்கினோம்னா, பால்பவுடர் மிக்ஸ் சேர்க்கும்போது தட்டில் பரப்பும்விதத்தில் அமையாதுபோகும். அப்படி இருந்தால் கொஞ்சம் வென்னீர் விட்டுக்கொள்ளலாம். இல்லையென்றால், பால்பவுடர்+கோக்கோ மிக்ஸை கொஞ்சம் குறைவாகப் போட்டுக்கொள்ளலாம்.

ஜீனிப் பாகு கெட்டியாவதற்குக் கொஞ்சம் முன்பு தவறுதலா எடுத்துட்டோம்னா, மிக்ஸ் சேர்த்தபின்பு, அது கட்டியாக தட்டில் ஆறுவதற்கு கொஞ்சம் அதிகமான நேரம் பிடிக்கும். அதுவரை உங்க பசங்க ஸ்வீட்டை எடுக்காமல் பார்த்துக்கணும்.

இதேபோல, கோக்கோ பவுடருக்குப் பதில், ஹார்லிக்ஸையோ போர்ன்விட்டாவையோ வைத்தும் செய்யலாம்னு எனக்குத் தோணுது.

நான் சாம்பிளுக்கு ஒரு ஸ்வீட் மட்டும் சாப்பிட்டுப் பார்த்தேன். எனக்கு மனசுல, இந்த ஸ்வீட், சாக்லெட் போன்று (அந்த வகையான சுவை) இருப்பதால் பசங்களுக்குப் பிடிக்கிறது என நினைத்துக்கொண்டேன். என் பையனுக்கு ரொம்பப் பிடித்திருந்தது. நீங்களும் உங்கள் பசங்களுக்குச் செய்துதாருங்கள்.

அன்புடன்

நெல்லைத்தமிழன்
68 comments:

துரை செல்வராஜூ said...

வாழ்க..

துரை செல்வராஜூ said...

ஸ்ரீராம் மற்றும் அனைவருக்கும் வணக்கம்..

காளைகளும் பசுக்களும் எருமைகளும் வாழ்க...

Thulasidharan V Thillaiakathu said...

இனிய காலை வணக்கம் துரைசெல்வராஜு சகோ அண்ட் ஸ்ரீராம்
திங்க வந்துட்டேன்...
கீதா

ஸ்ரீராம். said...

இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

ஸ்ரீராம். said...

இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.

Thulasidharan V Thillaiakathu said...

ஆ!!! 6 மணிக்குப் போட்ட கமென்ட் இப்பத்தான் வந்துருக்கு...

ஆம் ஆவினங்களும், அவற்றிற்குத் துணை புரியும் வேளாண்மையும், வேளாண்மைக்குத் துணைபுரியும் எல்லா உயிரினங்களும் அந்தச் சூழல் சுழற்சி உயிர்ப்புடன் எப்போதும் இருக்க வேண்டும்!!!! இயற்கையையும் எல்லா உயிரினங்களையும் வாழ்த்துவோம்!!இவை இல்லையேல் மனிதன் இல்லை

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

துரை சகோ இன்று மாட்டுப் பொங்கல் பதிவு இல்லையா...

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

நெல்லைத் தமிழன் அபாரமான ரெசிப்பி மகன் இங்கிருந்தவரை நான் அடிக்கடிச் செய்த ரெசிப்பி. சர்க்கரை மட்டும் நான் தலைதட்டிக் கொஞ்சம் குறைவாகப் போடுவேன். அப்புறம் பாகும் கொஞ்சம் முன் பருவம்...நீங்கள் சொல்லியிருப்பது போல் நேரம் எடுக்கும் செட் ஆக...அதுவரை செய்த பாத்திரத்தைச் சுரண்டிக் கொண்டிருப்பான் என் பையன். எங்கள் வீட்டில் எல்லோருக்கும் பிடித்த ஸ்வீட். இதில் கோகோவும், ட்ரிங்கிங்க் சாக்கலேட்டும் போடுவேன். வெனிலா எஸன்ஸும் கொஞ்சம் சேர்ப்பேன்....அப்புறம் இதில் இன்ஸ்டன்ட் காஃபி பௌடர் சேர்த்தும் தனியாகவோ அல்லது கோகோவுடன் சேர்த்தோ செய்யலாம்...

நீங்கள் சொல்லியிருப்பது போல் ஹார்லிக்ஸ் போர்ன்விட்டா எல்லாம் அப்புறம் பாதாம் மிக்ஸ் இப்படி மனதில் தோன்றியதை எல்லாம் செய்திருக்கேன்.....இப்போது வெகுவாகக் குறைந்துவிட்டது. வீட்டில் எல்லோரும் பெரியவர்கள்....வீட்டுக் குழந்தைகள் எல்லோரும் ஓரோரு இடத்தில் என்று ஆகிப் போனதால் யாரேனும் கேட்டல் செய்து கொடுக்கிறேன்.

ப்ளெயினாக வெனிலா மட்டும் சேர்த்தும்...டபுள் டெக்கராகவும் அதாவது ப்ளெயின் வொய்ட் வெனிலா அண்ட் கோகோ கலந்தது என்று செய்யலாம்...நன்றாக இருக்கும்...

உங்கள் படம் மனதை அள்ளுது...உங்க ஹஸ்பன்ட்கிட்ட சொல்லுங்க செமையா இருக்கு...பக்கத்துல இருக்கற கிருஷ்னா ஸ்வீட்ஸோ இல்லை க்ரான்ட் ஸ்வீட்ஸோ அல்லது அடையார் ஆனந்த பவனோ கூட இதற்கு நிகர் கிடையாதுனும் சொல்லுங்க...நானும் உங்கள் ஹஸ்பன்ட் கட்சிதான்..வீட்டில் செய்வதுதான் பிடிக்கும்.

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

நான் பெரும்பாலும் நெஸ்ட்லே பௌடர்தான் இங்கு பயன்படுத்துகிறேன். ஏனோ அமுலும், ஆவினும் இதற்கு அவ்வளவாக ஒத்து வருவதில்லை..அதுவும் ஆவின் ஒத்தே வருவதில்லை. நெஸ்ட்லெ அல்லது அமுல் தான்...

உங்க ஹஸ்பண்ட்கு என் பாராட்டைச் சொல்லிடுங்க...ரொம்ப அழகா செஞ்சுருக்காங்க...

இதில் ஒரு கப் மைதா, ஒரு கப் அல்லது கூடுதலாக இருந்தாலும் ஓகெதான் மில்க் பௌடர் சேர்த்து இதே போன்று...ஆனால் முதலில் மைதாவை கொஞ்சம் நெய்யில் வறுத்து விட்டு (கலர் மாறாமல்) ஆறியதும் பௌடருடன் கலந்து வைத்து வெனிலா அல்லது சாக்கோ கலந்து அல்லது இரண்டும் சேர்த்து டபுள் டெக்கராக என்றும் செய்யலாம்...

மைதா கலக்காமல் ஐஸிங்க் சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைக்காமல் சாக்கலேட் செய்யலாம். அதில் நிலக்கடலை எல்லாம் கலந்து விதம் விதமாக..

இப்படிச் செய்யும் ஸ்வீட்டில் கூட நான் தட்டில் நிலக்கடலை, திராட்டை பாதாம் கேஷ்யு என்று தனித் தனியாகவோ அல்லது கலந்தோ....பரத்தி வைத்து கிளறிக் கொட்டி..செய்ததுண்டு..

அப்புறம் என் நாத்தானார் முன்பு என் மகன் சிறுவனாக இருந்தப்ப ரைஸ் கிரிஸ்பிஸ் பாக்கெட் கொடுப்பாங்க (லண்டனிலிருந்து) அல்லது வீட் க்ரிஸ்பிஸ் இப்படித் தருவதையும் தட்டில் பரத்தி வைத்து கிளறிக் கொட்டிச் செய்ததுண்டு..அதுவும் நீங்க இருக்கற ஊர்ல இப்படியான க்ரிஸ்பிஸ் கிடைக்குமே செய்யலாம்...

கீதா

middleclassmadhavi said...

Recipes are super. Thanks in particular to Geetha madam for different versions...I learnt basic one frm my colleague abt 25 years ago... Sweet memories:))

Kamala Hariharan said...

வணக்கம சகோதரரே

நெல்லை தமிழன் அவர்களின் கோக்கோ ஸ்வீட் மிகவும் நன்றாக உள்ளது. அவர் பாணியில் செய்முறை விளக்கங்களும் படங்களும் மிக அருமை. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

அனைவருக்கும் உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

Bhanumathy Venkateswaran said...

பொங்கல் கொண்டாட்டத்தில் இன்று திங்கற கிழமை என்பதை மறந்து விட்டேன். நினைவூட்டியதற்கு நன்றி!

செய்ய சுலபமான ஸ்வீட் இது. இரண்டு படங்களும் வித்தியாசமாக இருக்கிறதே? ஒன்று ரொம்ப டார்க்காகவும், மற்றது மைசூர் பாக் நிறத்திலும் இருக்கிறது. உண்மையில் மில்க் சாக்லெட் நிறத்தில் இருக்கும்.

துரை செல்வராஜூ said...

@ Thulasidharan V Thillaiakathu said...
>>> துரை சகோ இன்று மாட்டுப் பொங்கல் பதிவு இல்லையா...<<<

இன்று மாட்டுப் பொங்கல் பதிவு இல்லாமல் எப்படி?...

நேற்று காலையில் பொங்கல் வைத்து சாப்பிட்டபின் அசந்து தூங்கி விட்டேன்..

இதோ இன்னும் சற்று நேரத்தில்!..

middleclassmadhavi said...

Where is my comment? Testing...

இளமதி said...

அனைவருக்கும் அன்பு வணக்கம்!

தையோடு தந்த முதற்பதிவு! தித்திக்கக்
கையோடு வந்தது களிப்பு!

கொக்கோ இனிப்பென்று கூறவே தித்திப்பு!
சிக்கலே இல்லாச் செயல்!

கொக்கோ இனிப்புக் கொடுத்தீர் சகோதரரே!
பக்குவமாய்ச் செய்கை, படம்!

சகோதரர் நெ.த அவர்களே!

கோக்கோ பவுடர் - கொக்கோ பவுடர் தானே!..
ஏன் கோக்கோ என்றெழுதுகின்றீர்கள்?..

வழமைபோல சீரான செயல்முறை + படங்கள்!
எல்லாம் சிறப்பாக இருக்கின்றன.
பதிவிற்கும் பகிர்விற்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள்!

athiraமியாவ் said...

ஆஆஆஆஆவ்வ்வ்வ்வ் இன்று நெல்லைத் தமிழனின் சுவீட்டோ... கண்ணில நிறைய விசயம் படுதே:)... அனைத்துக்கும் கொஞ்த்தால வாறேன்ன்ன்:)..

என்னாது துரை அண்ணன் மயங்கிட்டாரோ???:) அப்போ எப்பூடி கெளப் பொங்கல் பொயிங்கிறதூஊஊஊ?:)..

athiraமியாவ் said...

///கோக்கோ பவுடர் - கொக்கோ பவுடர் தானே!..
ஏன் கோக்கோ என்றெழுதுகின்றீர்கள்?.///

ஆஆஆவ்வ்வ்வ் இளமதி அதேதான்... இதுதான் கேய்க்க நிறைய விசயம் கண்ணில படுது என்றேன்ன்ன்ன்... கோலாலம்பூர் நினைப்பில கோக்கோ ஆக்கிட்டார்ர்ர்ர்ர்ர்ர்:) இண்டைக்கு விடக்குடா:)..

துரை செல்வராஜூ said...

@ Thulasidharan V Thillaiakathu said...

>>> துரை சகோ இன்று மாட்டுப் பொங்கல் பதிவு இல்லையா...<<<

இன்றைய பதிவு வெளியாகி உள்ளது..
அவசியம் வருகை தரவும்..

Angel said...

ஹலோவ் மியாவ் அண்ட் இளமதி
hyphenation ..co-coa powder இப்படித்தான் வரும்
கோ க்கோ னு தான் சரியான பிரிட்டிஷ் ப்ரொனவுன்சேஷன் அமெரிக்கன் கொஞ்சம் கொ ஸ்லைட்டா அழுத்தாம சொல்வாங்க

https://en.oxforddictionaries.com/definition/cocoa இங்கே போய் கேளுங்க

Angel said...

கொக்கோ :) யாரோ அடிக்கடி பூஸோ கொக்கோ னு அதே நினைப்பில் இருக்காங்கன்னு நினைக்கிறேன்

Angel said...

இந்த கோக்கோ ஸ்வீட் அம்மா மில்க் மெய்டில் செய்வாங்க :) கொஞ்சம் முந்திரி பருப்பு உடைச்சி சேர்ப்பாங்க நல்லா இருக்கு செய்யணும் நானும் ..

Angel said...

கும்பாரமா :)) அவ்வ்வ் எதோ ப்ரவுன் சுகர் வெரைட்டினு நினைச்சிட்டேன் முதலில் அப்புறம் கண்டுபிடிச்சேன் அது குவிச்சுன்னு

athiraமியாவ் said...

///மைசூர்பாக், //

ஆங்ங்ங்ங் இது எந்த பார்க்?:) தை பிறந்ததுதான் பிறந்துது அதிரா கண்ணுக்கு எல்லாமே தெரியுதே?:))..

//Angel said...
ஹலோவ் மியாவ் அண்ட் இளமதி //

ஹலோ மிஸ்டர் ...என்னதான் நீங்க நெல்லைத்தமிழனுக்கு சப்போர்ட் பண்ணிப்போட்டு:), டக்கென அடுத்த ரெசிப்பியை வெளியிட்டு அவரின் அடிதடியில இருந்து தப்பலாம் எண்டு மட்டும் நினைச்சிடாதீங்க:)).. அது கோ கோ இல்ல:) கொகோ தான் ஜொள்ளிட்டேன்ன்:)..

athiraமியாவ் said...

///அந்த அந்தப் பண்டிகைகளுக்கு முடிந்த அளவு அதற்குரிய பக்ஷணங்களை செய்துவிடவேண்டும் என்பது என் ஹஸ்பண்டின் கட்சி. உங்களுக்குத் தெரியும், சமையலறையைப் பொருத்த மட்டில், யார் சொல் நிற்கும் என்று. ///

தெரியுதெல்லோ?:) அப்போ டக்குப் பக்கெனச் சரண்டராகி, அவவை ஊக்கப்படுத்துவதை விட்டுப் போட்டு எதுக்கு ஒவ்வொரு பண்டிகையின்போதும்.. இப்பூடிப் பேசி மூக்குடைபடுறீங்க?:) கர்ர்ர்:)).. அடுத்த தீபாவளிக்கு நீங்களே முந்திச் சொல்லிடுங்கோ.. வீட்டிலயே சுவீட்ஸ் எல்லாம் செய்வோம் என ஓகே?:)) மறந்திடாதீங்க:)).. ஹா ஹா ஹா..

athiraமியாவ் said...

///(ஞாபகம் இருக்கட்டும், நாம் அடுப்பை அணைத்துவிட்டோம்)///

அச்சச்சோ அபச்சாரம் அபச்சாரம்:) ஹா ஹா ஹா:)).. சுவீட் செய்தது உங்க ஹஸ்பண்ட்:).. ஆனா அடுப்பை அணைக்கும்போது மட்டும் ஏதோ நீங்கதான் செய்ததுபோல நாங்க அணைச்சிட்டோம் என சவுண்டு விட்டுக்கொண்டு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

KILLERGEE Devakottai said...

OK

athiraமியாவ் said...

மிக ஈசியாக இருகு, கடசிப்படம் பார்க்க நன்றாக இருக்கு, இடையில ஏன் கறுப்பா இருக்கு ஏதும் கமெராவில் விளையாடிப் பார்த்தனீங்களோ?:)..

இதில அந்த பாகு காச்சுவதிலதானே இருக்கு தெக்கினிக்கே:).. எனக்கு அதுதான் பயம், பாகு சரி வராவிட்டால் எல்லாமே குப்பைக்குத்தான் போகும்..

நம் நாட்டிலும், மற்றும் இங்கு ஸ்கொட்டிஸ் உம் ரின் மில்க் இலதான் செய்து எடுப்பார்கள்.. ஊரில் மில்க் ரொபி என்போம்.. இங்கு “ரப்லெட்:)” என்போம்.

//நீங்களும் உங்கள் பசங்களுக்குச் செய்துதாருங்கள்.
//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அப்போ நாங்க சாப்பிடக்கூடாதா?:)...

உண்மையிலயே ஈசியும் சுவையுமான ஒரு சுவீட்டாகவே இருக்கு.. உங்கள் ஹஸ்பண்ட்டுக்கு இதைக் குடுத்திடுங்கோ...

http://m.img.brothersoft.com/android/2e/2edd90d99ac3df23ab633d381b7256c0_screeshots_0.jpeg

athiraமியாவ் said...

///Angel said...
கும்பாரமா :)) அவ்வ்வ் எதோ ப்ரவுன் சுகர் வெரைட்டினு நினைச்சிட்டேன் முதலில் அப்புறம் கண்டுபிடிச்சேன் அது குவிச்சுன்னு//

ஹையோ இது என்ன மொழி??? கும்பாரம்.. குவிச் சுவிச் எண்டு கொண்டு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) எல்லோரும் சுத்தத் தமிழ்ல பேசோணும் ஜொள்ளிட்டேன்ன்ன்:) மீக்கு டமில்ல டி ஆக்கும்:) அதனால எங்காவது டமிலை ஆரும் கொல்வதை ச்ச்ச்சும்மா பார்த்துக் கொண்டு காக்கா போயிட முடியாது என்னால கர்ர்ர்:))

நெல்லைத் தமிழன் said...

ஸ்ரீராம் - எங்கள் பிளாக் - வெளியிட்டமைக்கு நன்றி. கொஞ்சம் பிஸியாயிட்டேன். பிறகு வருகிறேன். இரண்டாவது படம் ஃப்ளாஷ் உபயோகித்து எடுத்ததால் (சென்னையில் சமையலறையில் தேவையான வெளிச்சம் இல்லை) அதற்கு முந்தைய படத்துக்கும் இதற்கும் நிறத்தில் வேறுபாடு தெரிகிறது. ஃப்ளாஷ் எடுத்துப் போட்ட படம்தான் சரியான நிறத்தைக் காண்பித்திருக்கிறது.

அபயாஅருணா said...

அட ரொம்ப ஈஸியா இருக்கே! செய்து பார்த்து விட்டுச் சொல்கிறேன்

துரை செல்வராஜூ said...

@ athiraமியாவ் said...

>>> அது கோ கோ இல்ல:) கொகோ தான் ஜொள்ளிட்டேன்ன்:) <<<

நல்லநேரம்.. அது கோ கோ இல்ல:) கொக்கரக்கோ பவுடர்.. அப்படி... ண்டு ஜொள்ளாமப் போனியளே!..

நாங்க தப்பிச்சோம்!..

காமாட்சி said...

இன்று எங்கள் பிளாக் உள்ளே போகவே முடியவில்லை. முடிந்தபோது படித்து எழுதிய கமென்ட் என்ன ஆச்சோ தெரியவில்லை.மொத்தத்தில்உங்க ஹஸ்பென்ட் மிக்க அருமையாகச் செய்கிரார்.நீங்களும் அப்படியே! அன்புடன்

G.M Balasubramaniam said...

என் மனைவி அவ்வப்போது இந்த ஸ்வீட் செய்வார் எனக்குப் பிடிக்கும்

நெல்லைத் தமிழன் said...

வாங்க துரை செல்வராஜு சார்..

எப்படித்தான் ஒரு நாள் விடாம 6 மணிக்கு உங்களால (உங்க நேரம் 3.30 க்கு) இங்க வர முடியுதோ. ஷிஃப்ட் முடியும் நேரமா?

வாங்க கிதா ரங்கன். மாட்டுப் பொங்கலுக்கு புதுசா பொங்கல் இன்னைக்கு செய்வாங்களா அல்லது நேத்திக்கு மிஞ்சின பொங்கல்தானா மாடுகளுக்கு?

நன்றி கில்லர்ஜி

நன்றி அபயா அருணா. ரொம்ப சுலபம். ஆனால் நான் பண்ணியதில்லை.

வாங்க காமாட்சியம்மா. இப்போ சில நாட்களாக இந்தப் படுத்தல் இருக்கு. நான் எழுதற பின்னூட்டங்களும் நிறைய தடவை காணாமல் போகிறது (என் பின்னூட்டம் இருக்கும். அப்புறம் சில நிமிடங்கள் கழித்து வந்து பார்த்தால் மறைந்துபோயிருக்கும்). உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க ஜி.எம்.பி. சார்... இப்போதான் முதல் முதலா, 'எனக்குப் பிடிக்கும்'னு இந்தத் தளத்துல சொல்லியிருக்கீங்கன்னு நினைக்கறேன். எனக்கு இந்த ஸ்வீட்டில் இஷ்டமில்லை.

நெல்லைத் தமிழன் said...

நன்றி கீதா ரங்கன். உங்கள் நெடிய பின்னூட்டங்களைப் படித்தேன். நீங்க சொன்ன வேரியேஷன்ஸ் நல்லாத்தான் இருக்கும். ஆனாலும் எனக்கு இந்த ஸ்வீட் அவ்வளவு இஷ்டமில்லை. நீங்க சொன்ன காம்பினேஷன்லாம் முயற்சி பண்ணக்கூடியவைதான். ஊட்டி சாக்கலேட் என்று சொல்லப்படுவதும் இதுமாதிரிதான் செய்யறாங்களோ என்னவோ. மிக்க நன்றி.

நெல்லைத் தமிழன் said...

வருக கமலா ஹரிஹரன். உங்கள் கருத்துக்கு நன்றி.

நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன். ஃப்ளாஷ் போட்டதால் நிறம் சரியாக வரவில்லை என நினைக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

இங்கே ப்ரௌனீஸ் ரொம்பப் பிடிக்கும் பசங்களுக்கு. நானும் ட்ரிங்கிங்க் சாகலேட்
வைத்து மில்க் மெயிடுடன் செய்திருக்கிறேன்.
உங்க ஹஸ்பெண்டு பிரமாதமா செய்திருக்காங்க.
நெல்லைத்தமிழன் வாழ்க வளமுடன்.

நெல்லைத் தமிழன் said...

வருகைக்கு நன்றி இளமதி அவர்கள். கொக்கோ பவுடர் என்பது சரிதான்.

உங்கள் குறட்பாக்கள் நன்றாக இருந்தன. நீங்க சர்வ சாதாரணமாக எழுதறதைப் பார்த்து, அவ்வளவு சுலபமா இது (எழுதுவது) என்று தோன்றவைக்கிறீர்கள். பாராட்டுகள்.

நெல்லைத் தமிழன் said...

ஏஞ்சலின் - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. உங்கள் அடுத்த ரெசிப்பி எது?

நெல்லைத் தமிழன் said...

உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி அதிரா. எனக்கு இந்த இனிப்பு பிடிக்காததால், பசங்களுக்குத்தான் (சாக்லேட் சுவை பிடிப்பவர்களுக்கு) பிடிக்குமாக்கும் என்று நினைத்தேன்.

ஏன் 'கும்பாரம்' என்று சொல்கிறார்கள் என்று பாடம் எடுக்கலாம் என்று நினைத்தேன். என் லண்டன் 'ஸ்லீப்பர் செல்' (இப்போ இதைச் சொல்வதுதான் ஃபேஷன். 'செக்' என்று சொல்வது ஃபேஷன் இல்லை) ஏஞ்சலின், ஏற்கனவே உங்களுக்கு 'விளக்கு விளக்கு'என விளக்கிய தமிழ் வார்த்தைகளுக்கு, எனக்கு இன்னும் 'செக்' (இது வேற செக்) அனுப்பலைனு சொன்னதுனால இப்போ பாடம் கிடையாது.

என் ஹஸ்பண்ட் இதெல்லாம் படிப்பாங்க. அதனால நான் ஸ்பெஷலா சொல்லவேண்டாம்.

நெல்லைத் தமிழன் said...

வாங்க வல்லி சிம்ஹன் அம்மா. கருத்துக்கு மிக்க நன்றி.

நெல்லைத் தமிழன் said...

ஏற்கெனவே இடதுகை சுட்டு விரலில் வலி இருக்கு. இப்போ ஒவ்வொரு பின்னூட்டத்துக்கும் நிறைய தடவை அழுத்தினால்தான் பின்னூட்டம் வெளியாகிறது. அதனால்தான் இன்று சுருக்கமான பின்னூட்டங்கள். அனைவருக்கும் நன்றி.

Angel said...

//January 15, 2018 at 8:32 PM
நெல்லைத் தமிழன் said...
ஏஞ்சலின் - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. உங்கள் அடுத்த ரெசிப்பி எது?//

cocoa :)
cocoa almond milk shake இனிமே இங்கிலீஷை இங்கிலீஷா மட்டுமே எழுதணும் னு ஆர்டர் :) no no order

Angel said...

@நெல்லைத்தமிழன்

take care .use warm compress also if you have cooking olive oil warm it and gently massage on the area .i do this for my daughter and is very effective

athiraமியாவ் said...

ஆஆஆஆஆவ்வ்வ்வ்வ் டமிலில் கதைச்சால் அடி விழுந்திடும் எண்டு டக்குப்பக்கெனக் கட்சி மாறிட்டா என் செக்:)... விடமாட்டேன்ன்ன்ன்ன் தமிழ்நாட்டில் பிறந்துவிட்டு தமிழைப் பேசாமலிருப்போரை தேம்ஸ்ல தள்ளுவேன்ன்ன்ன்ன்:) இது உந்த நெல்லைத்தமிழனின் ஹஸ்பண்ட் செய்த கொக்கோ மேல சாத்தியம்:)... வெரி சோரி:) சத்தியம்:)....

Angel said...

@miyaav its very sorry :)not (sori )வெரி சோரி:) haahaaa :)

Angel said...

இன்று முதல் உறுதி மொழி எடுக்கிறேன் தமிழை ஆங்கிலம் கலக்காமல் எழுத முயல்கிறேன் அதே போல table போன்ற ஆங்கில வார்த்தைகளை மேசை என்றே குறிப்பிடுவேன் அல்லது அவ்விடம் table என்றே எழுத வேண்டும் :) என்று யானை இடுகின்றேன்
மியாவ் எங்காவது tin என்பதை ரின் என்று போட்டீங்களோ அவ்ளோதான் :)))

Angel said...

@மியாவ் ஹாஹாஆ வாங்களேன் உங்களுக்கு தமிழ் தனிப்போதனை வகுப்புக்கள் வேண்டுமென்றால் இப்போதே விவரங்களை பதிவு செய்யவும் ஒரு மணிநேரத்துக்கு 100 பவுண்ட் :)

Asokan Kuppusamy said...

மிகவும் நன்று

athiraமியாவ் said...

ஹலோ மிஸ்டர் மை செக்:)... நான் எப்பவும் ஒரேமாதிரித்தான் இருப்பேன் ...:) இதை 2008 இலயே ஹைஸ் அண்ணன் ஜொள்ளிட்டார்ர்ர்... அதிரா நிறம் மாறும் பச்சோந்தி அல்ல என:) அந்தப் பெறுமையை வெரி சாரி ஹையோ சொறி இன்று ஏன் இப்பூடித் த்டுமாறுது:)... பெருமையைக் காப்பாத்துவேன்:) அதனால ஜொள்வதைத்தான் எழுதுவேன்... எழுதுவதைத்தான் பேசுவேன்:)... அதாவது tin = 🦂ரின்:)
நொட் டின் ஆக்கும் din = டின் ஊக்கே?:)???:) இதுக்குள்ள அதிராவை வச்சே உழைக்கப் பார்க்கிறா கர்ர்ர்ர்ர்ர்:))

Angel said...

ஒழுங்கு மரியாதையாக tin என்பதை tin என்றே சொல்லிடுங்க இல்லைன்னா பதப்படுத்திய என்று தமிழில் எழுதுங்க அதை விடுத்தது t வர வேண்டிய இடத்தில r எப்படி வர்ர்ர்ரும் :) அதைத்தான் மேலே குறிப்பிட்டுள்ளேன் இனிமே எங்காச்சும் யாராவது ஆங்கிலத்தையும் தமிழையும் சேர்த்து எழுதினா உங்களை hadrian's wall மேலே கடுங்குளிரில் நிக்க வைப்பேன் :)

Angel said...

very sorry :) உங்கள் ஹைஷ் அண்ணாவை இங்கே சபைக்கு அழைத்து வந்து 2008 இல் சொன்னதை சொல்ல சொல்லுங்க :) ஏனென்றால் அப்போ நான் அதை கேக்கலை பார்க்கலை :)

Angel said...

//அதிரா நிறம் மாறும் பச்சோந்தி அல்ல என:) அந்தப் பெறுமையை வெரி சாரி ஹையோ சொறி இன்று ஏன் இப்பூடித் த்டுமாறுது:)... //

சொறி// இன்னொருதரம் இந்த படை சொரி சொறி னு எழுதினா அவ்வளவுதான் :) பின் தோட்டத்தில் இருக்கிற ரோஸ் முள்ளால சொரிஞ்சி போட்ருவேன் உங்களை :))

இளமதி said...

குறட்பாக்களை ரசித்துப் பாராட்டியமைக்கு மிக்க நன்றி சகோதரர் நெல்லைத்தமிழன் அவர்களே!

athiraமியாவ் said...

கர்ர்ர்ர்ர்ர்ர்:) முருகா எண்டு என்பாட்டில இருந்த என்னை ... சொறிஞ்சு விட்டுப்போட்டு:).. இப்போ என்னையும் இங்கிலீசில எழுதட்டாம் கர்ர்ர்ர்ர்ர்:).. இதில நான் எப்போதாவது ஜண்டைக்கு :) வந்தேனா:) கர்ர்ர்ர்ர்ர்:)... என்னை நானாகவே இருக்க விட்டால்தான் ஒரிஜினல் குவாலிட்டி கிடைக்கும் ஜொள்ளிட்டேன் கர்ர்ர்ர்ர்ர்:)))..

இந்தப் பயத்திலதான்போல ஸ்ரீராமும் வெளியே வரவில்லை:) ஹா ஹா ஹா:))

Angel said...

Yes miyaav its true and better not to change ourselves :) if i ever copied your way of writing for instance ஜாமீ ஈ ஈ and other words you usually write it would look awkward. Haaaa haa

Angel said...

ஆமாம் மியாவ் உண்மைத்தான் .ஒருவரும் மற்றவருக்காகவும் தங்களை மாற்றிக்க கூடாது .இப்போ நானே உங்களை மாதிரி எழுத ஆரம்பிச்சா என்னோட ஐடென்டிட்டி ஒரிஜினாலிட்டி போயிடும் :) நான் ஜாமீ னு இழுத்து எழுதினா நல்லா இருக்காதே :) அது copy cat மாதிரி இருக்கும் ..அப்புறம் ஸ்ரீராமுக்கு தெரியும் நாங்க கும்மியடிக்கிறோம்னு :)

Angel said...

போன்லருந்து கமெண்ட் போட்டா அது காக்கா தூக்கிட்டு போயிடுதே :) அதுவும் இங்கிலிஷ் கமெண்டா பார்த்து தூக்கிட்டு ஓடுது இங்கிலீஸ் காக்கா :)

Avargal Unmaigal said...

கடைசி படத்தை பார்க்கும் போதே தெரிகிறது இந்த ஸ்வீட் மிக அருமையாக இருக்ககுமென்று நிச்சயம் செய்து பார்த்து என் பெண்ணிற்கு செய்த்து கொடுக்கணும்

Avargal Unmaigal said...

கருத்து சொல்லும் பலரும் கருத்து சொல்லிவிட்டு பல முறை சப்மிட் செய்ய வேண்டி இருக்கிறது என சொல்வதை பார்க்கிறேன்.. கருத்து சொல்லி ஒரு முறை சப்மிட் பட்டனை அழுத்தினால் போதும். அப்படி அளித்துவிட்டு கிழே லெப்ட் சைடு கார்னரை பார்த்தால் அதில் சில மெசேஜ் வருவதை கவனிக்கலாம் அதில் ரிக்வெஸ்ட் ப்ராசஸிங்க் சப்மிட் என்று வரும் அதன்பின் கருத்து தளத்தில் வெளியாகும் முன்பு இது வேகமாக நடைபெற்றதால் கருத்து போட்டவுடன் பதிவாகும் ஆனால் இப்ப அதற்கு சிறிது நேரம் எடுக்கிறது அவ்வளவுதான்

நெல்லைத் தமிழன் said...

நன்றி அசோகன் குப்புசாமி.

நன்றி அவர்கள் உண்மைகள் மதுரைத் தமிழன். செய்துபாருங்க (எனக்கு கடைசில எல்லாவற்றையும் கலக்கும் போர்ஷன் கொஞ்சம் கஷ்டமாத் தெரிஞ்சது). இப்போலாம் நீங்க 'சைவப் பூனை'ஆயிட்டமாதிரி தெரியுது. உங்கள் இடுகைகளில் அரசியல் காரம் குறைந்துள்ளதே. நீங்க சொன்னபடி, இடதுபக்கம் கீழே உள்ள மெசேஜைப் பார்த்து, 'பொறுமையா' இருக்கக் கற்றுக்கொண்டேன். இப்போல்லாம் blogger.com response ரொம்ப slowஆகிவிட்டது.

நெல்லைத் தமிழன் said...

அதிரா - நீங்க ஏஞ்சலின் சொன்னதை மனதில் வச்சுக்காதீங்க. நீங்க எப்போதும் எழுதுவதுபோல் எழுதுங்க. படிக்க நல்லா இருக்கணும். இங்க என்ன, 'இலக்கண வகுப்பா' நடக்குது. நாங்க சும்மா ஜாலியா, அந்தத் தவறுகளை பூதாகரமாக்கி எழுதுவோம். ஆனால் உங்கள் 'எழுத்து நடை'யை மாற்றாதீங்க. அதுதான் கொஞ்சம் ரசிக்கும்படியா இருக்கு (உங்க ஊர் மொழியா அல்லது எழுத்துப் பிழையா அல்லது ஏதேனும் புது வார்த்தையா என்று நாங்கள் எப்போதும்போல் கன்ஃப்யூஸ் ஆகிக்கறோம்)

Angel said...

Haa haa naanga ஜாலியா விளையாடினொம்

புலவர் இராமாநுசம் said...

இனித்தது பதிவு!

Angel said...

ஹாஹாஹா :)@நெல்லைத்தமிழன் அதிரா க்ளியர் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம எழுதினா அப்புறம் நம்மளுக்கு கலாய்க்க ஆள் கிடைக்காது அதனால் இவங்க இப்படி எழுதினா தான் நமக்கு ஜாலியா ஓட்டலாம் :)

நெல்லைத் தமிழன் said...

வாங்க புலவர் ஐயா. .உங்கள் கருத்துக்கு நன்றி.

Geetha Sambasivam said...

போர்ன்விடா, பூஸ்ட் போன்றவற்றில் கூடச் செய்யலாம். இப்போல்லாம் செய்யறதில்லை.

நெல்லைத் தமிழன் said...

வாங்க கீதா சாம்பசிவம் மேடம். ஒரு வழியா, வேலை எல்லாம் முடிந்ததா? நீங்கள் சொல்லியிருப்பது சரி. எனக்கு ஹார்லிக்ஸ் மைசூர்பாக்கு செய்யணும்னு எண்ணம். கொஞ்சம் ஹார்லிக்ஸ் கலந்தால் முடிந்தது என நினைக்கிறேன்.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!