Saturday, January 20, 2018

படிக்காததால் நேர்ந்த அவமானங்கள் ....


1)  ஒரு ரூபாய்க்கு வடையுடன் 12 ரூபாய்க்கு சாப்பாடு.  தாத்தா பாட்டி கடை.  இதிலும் அவர் நாலு பெண்களுக்குத் திருமணமும் செய்து வைத்திருக்கிறார்.  "லாபம் கிடக்குது; உழைப்புக்கான கூலி கிடைச்சா போதும்" என்று சொல்கிறார் அம்மா என்று அன்புடன் அழைக்கப்படும் லட்சுமி அம்மாள்.  (தகவல் மற்றும் லிங்க் உதவிக்கு நன்றி ராஜி சகோ)


2)  இரவு 10 மணிக்கு மீண்டும் ஆட்டோவை எடுத்துக்கொண்டு கிளம்புகிறார். ஹோட்டல்களுக்குச் சென்று, மீதமாகும் உணவுகளை சேகரித்துக்கொண்டு, வீட்டுக்கு வருகிறார். அங்கு தனது தாயுடன் சேர்ந்து, உணவை தனித்தனியே பார்சல் செய்கிறார். ஆதரவற்றவர்களின் இருப்பிடங்கள் நோக்கிச் செல்கிறார். சிறிது நேரத்தில், பசித்தவர்களின் வயிறு போல, வாசுதேவனின் மனமும் நிறைகிறது.  இவ்வாறு யாருக்கும் பயனின்றி வீணாகும் உணவுகளைச் சேகரித்து சாலையோரவாசிகளின் பசியாற்றுகிறார் மதுரையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் டி.ஆர்.வாசுதேவன் (31).
3)  படிக்காததால் தனக்கு நேர்ந்த அவமானங்கள் இனி யாருக்கும் நேரக்கூடாது என்ற வைராக்கியம்தான் ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி கற்பதற்கான வசதிகளை ஏற்படுத்தி தரத் தூண்டியிருக்கிறது பெரியகுளம் விவசாயி சரவணனுக்கு.


31 comments:

துரை செல்வராஜூ said...

வாழ்க..

Thulasidharan V Thillaiakathu said...

இனிய காலை வணக்கம் சொல்ல வந்துட்டேனுங்க!!!எல்லோருக்கும்! ஸ்ரீராம் துரை செல்வராஜு சகோ இனிய காலை வணக்கம்!

கீதா

ஸ்ரீராம். said...

காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்...

ஸ்ரீராம். said...

காலை வணக்கம் கீதா ரெங்கன்.

துரை செல்வராஜூ said...

வணக்கம் ஸ்ரீராம்...
மற்றும் அனைவருக்கும் நல்வரவு..

Bhanumathy Venkateswaran said...

காலை வணக்கம்!

துரை செல்வராஜூ said...

ஏழைகளின் இதயம் இப்படி இயங்குகின்றது...

ஆனால்
அரசு ஊழியர் மாநகர ஆணையர் லஞ்சம் வாங்கிய போது தஞ்சையில் கைது செய்யப்பட்டிருக்கிறார்..

இது எப்படி இருக்கிறது??..

Bhanumathy Venkateswaran said...

நல்ல மனங்கள் வாழ்க!

ஸ்ரீராம். said...

காலை வணக்கம் பானு அக்கா.

Thulasidharan V Thillaiakathu said...

லட்சுமி அம்மாளுக்கும், வாசுதேவன் அவர்களுக்கும் வாழ்த்துகள்! பாராட்டுகள்...பொக்கே!

சரவணன் அவர்களுக்கும் பொக்கே! அதுவும் வித்தியாசமான சேவை குருப்பெயர்ச்சி அன்று வழங்குதல் என்பது..குருவின் பெயரிலேயே சங்கம் என்று..பக்தி கலந்த சேவை! வித்தியாசமானது! ஏழைப் பெண்களுக்கான திருமண சேவையும் செய்துவருவதும் பாராட்டிற்குரியது...

கல்வியைத் தொடர்ந்து கற்காமல் போனதால் அவமானப்பட்டதாக வருத்தப்படும் சரவணன் அவர்கள் வருத்தப்படவேண்ட்ய அவசியமே இல்லை. கல்வி கற்றும் அவமானப்படுபவர்களும் இருக்கிறார்கள். படித்தவர்கள் எந்த விழிப்புண்ர்வும் சரி சேவை மனப்பான்மையும் இல்லாமல் இருப்பவர்களும் இருக்கிறார்கள். ஏட்டுப்படிப்பல்ல கல்வி. சரவணன் அவர்களுக்கு வாழ்த்துகள்!

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

ஹை பானுக்கா நீங்களும் வரிசைக்கு வந்துட்டீங்களா!!! காலை வணக்கம் பானுக்கா!!!

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

ஏழைகளின் இதயம் இப்படி இயங்குகின்றது...

ஆனால்
அரசு ஊழியர் மாநகர ஆணையர் லஞ்சம் வாங்கிய போது தஞ்சையில் கைது செய்யப்பட்டிருக்கிறார்..

இது எப்படி இருக்கிறது??..//

ஆமாம் துரை செல்வராஜு சகோ! அதைத்தான் சரவணன் அவர்களுக்குச் சொல்லியிருந்தேன்...கல்வி என்பது ஏட்டுக் கல்வி அல்ல இல்லையா...கல்வி கற்று பெரிய பதவியில் இருப்பவர்கள் செய்யும் ஊழல்கள் அவர்கள் கற்ற கல்விக்கு அவர்கள் ஏற்படுத்தும் அவமானம் மட்டுமல்ல அவர்கள் கற்றது கல்வியே அல்ல. அவர்கள்தான் அறிவிலிகள். இங்கு குறிப்பிடப்படும் மனிதர்கள் அனைவரும் அறிவாளிகள்!!!

கீதா

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

போற்றுதலுக்குரிய பெருமக்கள்.

துரை செல்வராஜூ said...

என்னால் விரைவாக விரிவாக தட்டச்சு செய்ய இயலவில்லை.

எனினும் கீதா அவர்களை வழி மொழிகின்றேன்..

லஞ்சம் வாங்கியதால் பிடிபட்ட அரசு ஊழியர் கற்றது கல்வியே அல்ல..

இவர்களெல்லாம் வீட்டுக்கும் நாட்டுக்கும் அவமான சின்னங்கள்..

நானும் சில காலம் அரசு ஊழியனாகப் பணி செய்தவன் தான்.. லஞ்சம் கொதுக்க மனமில்லாததால் 35 ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்க்கையைத் தொலைத்தவன்..

ஆனால் இப்போது தான் புரிகின்றது - நான் இழந்தது எதுவும் இல்லை..

லஞ்சம் வாங்கிய அரசு ஊழியன் தான் எல்லாவற்றையும் இழந்து நிற்கிறான்..

ஏனெனில் மானம் மரியாதை தான் உயர்ந்த செல்வம்..

கரந்தை ஜெயக்குமார் said...

போற்றுதலுக்கு உரியவர்கள
போற்றுவோம்
தம இணைக்க இயலவில்லை நண்பரே

KILLERGEE Devakottai said...

நல்ல மனங்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறது வாழ்க வையகம்.

நெல்லைத் தமிழன் said...

'நல்ல செய்திகளைப் படிக்கும்போது எப்போதும் மகிழ்ச்சியாகிறது உள்ளம். பகிர்வுக்கு நன்றி.

இளமதி said...

அனைவருக்கும் இனிய வணக்கம்!

அத்தனை உள்ளங்களும் போற்றுதற்கு உரியவர்கள்!
மனதில் தங்க வைத்துக்கொள்ள வேண்டிய முன்மாதிரியானவர்கள்!

நல்ல பதிவு + பகிர்வு.
மிக்க நன்றியுடன் வாழ்த்துக்கள்!

இளமதி said...

அனைவருக்கும் இனிய வணக்கம்!

அத்தனை உள்ளங்களும் போற்றுதற்கு உரியவர்கள்!
மனதில் தங்க வைத்துக்கொள்ள வேண்டிய முன்மாதிரியானவர்கள்!

நல்ல பதிவு + பகிர்வு.
மிக்க நன்றியுடன் வாழ்த்துக்கள்!

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

இந்த வயதிலும் லட்சுமி அம்மாளின் சேவை மகத்தானது. ஏழைகளின் வாழ்வுக்காக தன் நேரத்தையும் உழைப்பையும் கணிசமாக செலவழித்து வரும் ஆட்டோ டிரைவர் டி.ஆர் வாசுதேவன், பெரியகுளம் விவசாயி சரவணன் ஆகியோர் போற்றி பாராட்டபட வேண்டியவர்கள். அனைவருக்கும் பகிர்ந்தளித்த தங்களுக்கும் என் உளம் நிறைந்த வாழ்த்துக்கள்.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

athiraமியாவ் said...

நிறையப் பணத்தை வைத்துக் கொண்டே, எனக்குக் கடன்... என்னால எதுவும் பண்ண முடியவில்லை என அழுவோர் பலர் இருக்கும் இக்காலத்தில்.. இருப்பதை வைத்து மகிழ்ச்சியாக குடும்பத்தை நடத்திக் கொண்டிருப்போரைப் பார்க்க, அவர்களுக்கு ஏதாவது உதவலாமே எனத்தான் மனம் எண்ணும்...

துரை செல்வராஜூ said...

அன்பின் ஸ்ரீராம்..
நமது தளத்தில் - உங்களிடம் சில வார்த்தைகள்.... தொடர் பதிவு வெளியாகி உள்ளதே..

தங்களை அன்புடன் அழைக்கின்றேன்..

ஜீவி said...

ஆச்சரியமான தகவல்கள். தொண்டு உள்ளங்களை இறைவன் காக்கட்டும்.

Asokan Kuppusamy said...

நல்ல மனம் நீடுழி வாழ்க பாராட்டுகள்

Angel said...

உழைப்பிற்கான ஊதியம் கிடைத்தால் போதுமென்ற தங்கமனசுக்காரங்க ஏழைகளின் பசி தீர்க்கும் லட்சுமி பாட்டியும் தாத்தாவும் நல்லா இருக்கணும்
வாசுதேவன் சேவை சிறப்பான சேவை .மோஸ்ட்லீ பாதையோரம் வசிப்பவர்களுக்கு சமைக்க வசதி இருக்காது அவங்களுக்கு இப்படி மீதமானத கொண்டு சேர்ப்பது சிறப்பான சேவை .
கல்விக்கு கைக்கொடுக்கும் சரவணன் வாழ்க

Geetha Sambasivam said...

அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். அருமையான தொண்டு! பசிக்கும் வயிறுகள் இப்போதும் உள்ளன என்பதை நினைத்தால் மனம் வருந்தத் தான் செய்கிறது.

ராமலக்ஷ்மி said...

தன்னலமற்ற சேவை. பாராட்டுக்குரிய மனிதர்கள்.

பரிவை சே.குமார் said...

போற்றுதலுக்குரியோரை வாழ்த்துவோம்.

Geetha Sambasivam said...

வந்தாச்சு, வந்தாச்சு!

Geetha Sambasivam said...

எங்கே, இன்னும் சிம்லா, சிக்கிம் படங்கள் வரலை?

G.M Balasubramaniam said...

நல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!