வியாழன், 29 ஜூலை, 2010

என்ன நினைத்து என்னை அழைத்தாயோ? எண்காலி 04

டிர்ர்ரிங் ...... டிர்ர்ரர்ர்ரிங் ................
ட்டடக் ..... டக் .....  டக் ....
ஞீ ஈ ஈ .......... ஈ
(என்ன இதெல்லாம்? )
ஒன்று : வழக்கமான டெலிபோன் சத்தம் இல்லை.  வாசல் அழைப்பு மணி சத்தம்.
இரண்டு : தாழ்ப்பாள் விலக்கும் சத்தம்.
மூன்று : கதவில் உள்ள (எண்ணைப் பசையே காணாத) கீல், கதவைத் திறக்கும்பொழுது எழுப்பிய ஓசை.

"வாடா வா. என்ன ஏதோ மென்பொருள் வன்பொருள் எதையோ ரிச்சி ஸ்ட்ரீட்லேயிருந்து வாங்கிகிட்டு வந்திருக்கேன் என்று சொன்னாயே அது என்ன? என்ன செய்யும்?"

"அவசரப் படாதே! இதோ பாரு இந்த சிறப்புக் கருவிக்கு, "ஒலி - எழுத்து, யோசி, அச்சிடு, பேழையிடு' என்று பெயர்."

"இது எதற்கு? என்ன செய்யும்?"

"என்ன இப்படி கேட்டுட்டே? இங்கே பாரு இந்த பச்சை சுவிட்சை ஆன் செய்."

"செஞ்சிட்டேன் - அப்புறம் என்ன செய்யணும் என்பதையும் சொல்லிவிடு."

"இப்போ பால் கிட்டே - உனக்குத் தோன்றுகிற கேள்வி எதையாவது கேளு."

"இதோ கேட்கிறேன். எங்க வீட்டு நாற்காலிக்கு எவ்வளவு கால்கள்?"

என்ன ஆச்சரியம்? உடனே அந்த கருவியில் ட்டிர்ர் டிக் டிக் டிக் என்ற சப்தத்துடன் நான்கு காப்சூல்கள் வந்து விழுந்தன. 

"என்னடா இது? ஒருநாளைக்கு, ஒரு வேளைக்கு ஒன்றாக இரண்டு வேளைகள், இரண்டு நாட்களுக்கு இந்த காப்சூல்களை சாப்பிடணுமா?"

"போடா பக்கி. அதெல்லாம் எதுவும் இல்லை. இந்த காப்சூல்களை அப்படியே எண்காலி கிட்டே போடு. அது ஒரு காப்சூலை எடுத்து கொடுக்கும்."

அவ்வாறே செய்கிறான். பால் ஒரு காலால் ஒரு காப்சூலை எடுத்து வெளியே போடுகிறது. 

"அட! ஆமாம். இரு அது எடுத்துக் கொடுத்த இந்த காப்சூலுக்குள் என்ன இருக்கிறது பார்க்கிறேன்! ஹூம் ரொம்ப சுலபமான கேள்வி கேட்டேன், அது என்னடா என்றால், மூன்று கால்கள் என்று எழுதிய பேப்பரை எடுத்துக் கொடுத்திருக்கு!"

"அப்படியா?"

"ஹ ஹ ஹா - எண்காலிக்கு ஒரு நாற்காலிக்கு எவ்வளவு கால் என்று கூடத் தெரியவில்லை. இதை எல்லாம் வெச்சிகிட்டு ஏதாவது ஜோசியம் பார்த்துச் சொன்னால் எவனாவது நம்ம முதுகுல டின் கட்டிடுவான்!" என்று சொல்லிக்கொண்டே உட்கார்ந் ...

'டமால்' 

பிளாஸ்டிக் நாற்காலியின் ஒரு முன் பக்கக் கால் 'பப்பரப்பா' என்று விரிந்து ஒடிந்து கீழே விழுந்தான் நம் கதா நாயகன். எண்காலி ஒரு கையால் வாயைப் பொத்திக்கொண்டு 'புர்ர்க்' என்று சிரித்தது.

**********
கதா நாயகன் அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள், பால் கேள்வி பதில்கள் மேலும் கொஞ்சம் :

? நான் உட்கார்ந்து, கௌரவமான தொழில் செய்து சில்லறை சேர்க்க ஆசைப் படுகிறேன். என்ன தொழில் செய்யலாம்?
! கட்டணக் கழிப்பிடம் வைக்கவும். !

? நான் பொழுதெல்லாம் சும்மா உட்கார்ந்து கழிக்க ஆசைப் படுகிறேன். என்ன செய்யலாம்? 
! மேற்கண்ட கட்டணக் கழிப்பிடம் போய் பொழுதெல்லாம் கழியவும் - சாரி கழிக்கவும்! 

? ஏதாவது அலை வீசினால், எதிர்க் கட்சி ஜெயிக்கலாம் என்கிறார்கள்; எதிர் வரும் தேர்தலில் அலை வீசவேண்டும் என்றால் என்ன செய்வது?
! தேர்தல்கள் எல்லாவற்றையும் கடலோர மாவட்டங்களில் மட்டும் வைக்கவும்!

(தொடரும்)  

11 கருத்துகள்:

  1. ? ஏதாவது அலை வீசினால், எதிர்க் கட்சி ஜெயிக்கலாம் என்கிறார்கள்; எதிர் வரும் தேர்தலில் அலை வீசவேண்டும் என்றால் என்ன செய்வது?
    ! தேர்தல்கள் எல்லாவற்றையும் கடலோர மாவட்டங்களில் மட்டும் வைக்கவும்!

    ..... what a novel idea! ha,ha,ha,ha,ha...

    பதிலளிநீக்கு
  2. இந்த பால் படுத்தற பாடு தாங்கலை:))

    பதிலளிநீக்கு
  3. "நாற்காலி, கடலோர மாவட்டங்களில் தேர்தல்.." ஆஹா.. நல்ல இருக்குதே..

    பதிலளிநீக்கு
  4. கடலோர மாவட்டங்களில் தேர்தல் என்றால்தானே சூறாவளி சுற்றுப் பயணங்கள் பலனளிக்கும்! பால் விவரமானவர் தான்

    பதிலளிநீக்கு
  5. எல் கே சார்!
    ஓடிக்கொண்டு இருக்கிறோம். பால் பெயரில் இன்சூரன்ஸ் பாலிசி எடுக்க !! அதுவரை கடத்தல் திட்டத்தை ஒத்திப் போடுங்க!
    பாஸ்கரன் கூறிய சூறாவளி சுற்றுப் பயண தொடர்பு நன்றாக உள்ளது.
    சித்ரா, வானம்பாடிகள், மாதவன் ஆகியோருக்கு எங்கள் நன்றி.

    பதிலளிநீக்கு
  6. பாலுக்கு எப்பிடி இருக்கு நேரம்ன்னு சாத்திரம் கேக்கணும் !

    பதிலளிநீக்கு
  7. ஹேமா, பாலுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்க தயார் என்று ஜோஸ்யம் பார்த்த சில பிரமுகர்கள் கூறியுள்ளனர். என்ன துறை வேண்டும் என்றும் கேட்டிருக்கின்றனர்.

    பதிலளிநீக்கு
  8. ஹா ஹா ஹா சூப்பர்... இனிமே அப்பா அம்மா சொல்றத கேக்கரமோ இல்லையோ எண்காலி சொல்றத தப்பாம கேக்கணும்... இல்லேனா நம்ம கதாநாயகன் நிலைமை தான் நமக்கும்

    பதிலளிநீக்கு
  9. //பாலுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்க தயார் என்று ஜோஸ்யம் பார்த்த சில பிரமுகர்கள் கூறியுள்ளனர்//

    அடப்பாவமே அப்ப அதுவும் லஞ்சம் எல்லாம் கேக்குமோ... சகவாச தோஷம் வந்துடுமோன்னு ஒரு பயம் தான்

    பதிலளிநீக்கு
  10. குரோம்பேட்டைக் குறும்பன்30 ஜூலை, 2010 அன்று 8:14 PM

    ஒரு எண்காலியை வைத்துக்கொண்டு அப்பப்போ கும்மி அடிக்கிறீங்க. விரைவில் எங்கள் ப்ளாக் என்ற பெயரை மாற்றி, எண்காலி ப்ளாக் என்று வைத்துவிடுவீர்களோ என்று தோன்றுகிறது!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!