சனி, 17 ஜூலை, 2010

அகட விகடம் 170710

ஆத்தூர் அருகே குடிநீர் கேட்டு சாலை மறியல். 
ஆத்தூரிலேயே நீர் இல்லை என்றால், மக்கள் 'ஆற்றாமை' கொள்வது சரிதான்.

கூட்டுப் படைகளை எதிர்கொள்ள தயார்: மாவோயிஸ்ட்.
இப்படி சொன்னால் கூட்டுப் படையினர் குழம்பிப் போய்விடுவார்களோ?


கம்ப்யூட்டரில் இந்திய ரூபாய் குறியீடு.
இந்திய ரூபாயின் மதிப்புக் குறையாமல் ஈடு செய்வதில் குறியாக இருந்தால் நலம்


புதுடில்லியில் டெங்கு காய்ச்சல்.
(வாசகர்கள் கமெண்டுக்கு )விருதுநகர் கேந்திரிய வித்யாலயாவில் மாணவர்சேர்க்கை.
* மாணவர்கள் படிப்போடு டூ விடாமல், சேர்க்கையாக இருந்தால் சரி. 
** சேர்க்கை சரியில்லை என்று பிறகு பெற்றோர் சொல்லாமல் இருக்கவேண்டும். 


ஊழல் வழக்கு: எச்.பி.சி.எல்., இயக்குநர் கைது.
மற்றவர்கள் தப்பிவிட்டார்களோ? 

வான்வழி தாக்குதலில்: 17 தாலிபான்கள் பலி.
தாலிபான்களுக்கு பலி கொடுத்துதானே பழக்கம்? 


மதுரை விமான நிலைய புதிய டெர்மினல்15 நாளில் திறப்பு.
(வாசகர்கள் கமெண்டுக்கு )


குப்பையில் தபால்கள் : மக்கள் அதிர்ச்சி.
* junk mail என்று தபால்காரர் நினைத்துவிட்டார் போலிருக்கு. 
** பழிக்குப் பழி என்று மக்கள், தபால் பெட்டியில் குப்பை போடாமல் இருந்தால் சரி. 


சரக்கு அடித்துவிட்டு, லாரியை தண்டவாளத்தில் ஓட்டி சென்ற லாரி டிரைவர்! 
அப்போ ஒரு சரக்கு ரயில் வந்து லாரியில் மோதிடிச்சோ? 


வாக்காளர் பட்டியல் திருத்தம் : நரேஷ்குப்தா தகவல். 
என்ன மார்க்?  அது பற்றிய தகவல் உண்டா?


+2 போலி சான்றிதழ் தயாரிக்க ரூபாய் பத்தாயிரம்.
அடேங்கப்பா - படிச்சு மார்க் வாங்கறது சிக்கனமா இருக்கும் போலிருக்கு. 

ஐநூறு ஆண்டுகள் தொன்மை வாய்ந்த மரத்திற்கு, தொல்காப்பியர் பெயர்.
தொல்காப்பியர் காலம் இரண்டாயிரத்து எண்ணூற்று எழுபது ஆண்டுகளுக்கு முன்பு. (May 1, 865 BC says Wiki) நமக்கு ரொம்ப தெரிஞ்ச தமிழ் உரை, 'கோனார் தமிழ் உரை' என்பதால், அவர் பெயரை வைத்திருக்கலாம் என்கிறார் எஸ் எஸ் எல் சி பரீட்சை இன்னும் எழுதிக் கொண்டிருக்கும் என் தாத்தா. 


அணையை பார்வையிடச் சென்ற முன்னாள் முதல்வர் கைது.
அவரே 'அன்னை'யை பார்க்க சென்றிருந்தால், வரவேற்பு கிடைத்திருக்கும். 


நித்யானந்தா பக்தர்கள் பெங்களூருக்கு பாத யாத்திரை.
மாளவிகா போன்ற பக்தைகளை தரிசனம் செய்யவோ?


போலி என்கவுண்டர் வழக்கில் 12 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை.
12 பேரும் ஏதாவது போலி டாக்டரிடம் போலி சான்றிதழ் பெற்று, Poly கிளினிக்ல அட்மிட் ஆகி தப்பிப்பார்களாகுக!


மன வேதனையை விலக்க படம் பார்த்தார் எடியூரப்பா.
சுறா பார்த்திருந்தா மன வேதனை இன்னும் அதிகரித்திருக்கும். 


கபில் தந்த உலகக் கோப்பை! ஸ்ரீக்காந்த் பெருமிதம்.
கபில் தந்ததா? International Cricket Council தந்தது இல்லையா? 

18 கருத்துகள்:

 1. பிரியமுடன் வசந்த் மாதிரியே இருக்கீங்களே! ஈசியானதை எல்லாம் நீங்க போட்டுட்டு கஷ்டமானதை எங்ககிட்ட கேக்குறீங்க? :)

  பதிலளிநீக்கு
 2. பெ சொ வி - அப்போ நீங்க நாங்க ஏற்கெனவே போட்டிருக்கின்ற கமெண்டுக்கு அடிஷனல் கமெண்ட் எழுதுங்க !! :))

  பதிலளிநீக்கு
 3. //எங்கள் said...
  பெ சொ வி - அப்போ நீங்க நாங்க ஏற்கெனவே போட்டிருக்கின்ற கமெண்டுக்கு அடிஷனல் கமெண்ட் எழுதுங்க !! :))
  //

  இதுக்குப் பேர் தான் சொந்த செலவுல சூனியம் வச்சிக்கறதுங்கறதோ!
  அவ்.................!

  பதிலளிநீக்கு
 4. //+2 போலி சான்றிதழ் தயாரிக்க ரூபாய் பத்தாயிரம்.
  //

  மாட்டிகிட்டா தப்பிக்க எத்தனை லட்சம்?

  பதிலளிநீக்கு
 5. //நித்யானந்தா பக்தர்கள் பெங்களூருக்கு பாத யாத்திரை.//

  என்று முடியும் இந்த போதை யாத்திரை?

  பதிலளிநீக்கு
 6. பதிவை விட பின்னூட்டம் நல்லா இருக்கு:)

  பதிலளிநீக்கு
 7. எங்க இருக்கு கேள்வி ?
  எதுக்கு பதில் சொல்லணும் ?

  பதிலளிநீக்கு
 8. ஹேமா - வாசகர் கம்மெண்டுக்காக இரண்டு செய்திகள் நாங்க ஒதுக்கி இருக்கின்றோம். அதைத்தான் பெ சொ வி சொல்கிறார்.

  பதிலளிநீக்கு
 9. எப்போ பார் இங்க எதாவது நடந்துகிட்டே இருக்கே ..பலே ..நான் சும்மா பாக்க வந்தேன்

  பதிலளிநீக்கு
 10. //புதுடில்லியில் டெங்கு காய்ச்சல்.//

  இந்தியாவுல டெல்லி (தலைநகரம்) தான் முக்கியமான இடம்னு அதுக்குக் கூட தெரியுமோ ?

  //மதுரை விமான நிலைய புதிய டெர்மினல்15 நாளில் திறப்பு.
  (வாசகர்கள் கமெண்டுக்கு )//

  15 நிமிஷத்துல திறக்க(ஒபெநிங் செறேமோனி) வேண்டியதுக்கு , 15 நாளா ?

  நான் மிகவும் ரசித்தவை : Junk mail (postman).

  பதிலளிநீக்கு
 11. //புதுடில்லியில் டெங்கு காய்ச்சல்.//

  எல்லா காய்ச்சலுக்கும் டெல்லி தான் காரணம் என்று சொல்கிறார் ஒரு அரசியல் வித்தகர்.

  பதிலளிநீக்கு
 12. //** பழிக்குப் பழி என்று மக்கள், தபால் பெட்டியில் குப்பை போடாமல் இருந்தால் சரி. //
  எதுக்கு குப்பை? அதுதான் (கூரியர் வந்தப்புறம்) எப்பவோ குட் பை சொல்லியாச்சே!

  பதிலளிநீக்கு
 13. குரோம்பேட்டைக் குறும்பன்18 ஜூலை, 2010 அன்று PM 12:38

  பெ சொ வி சார். தபால் பெட்டிகளும், தபால்களும் இன்னமும் இந்தியாவின் பெரும்பான்மை இடங்களில் முழுமையான உபயோகத்தில் இருந்துகொண்டுதான் உள்ளன. சராசரி இந்தியனின் மாத வருமானத்தில், அவன் ஒரு குரியர் அனுப்பினால், ஒரு வாரத்திற்கு பட்டினி கிடக்கவேண்டியது இருக்கும்.

  பதிலளிநீக்கு
 14. //** பழிக்குப் பழி என்று மக்கள், தபால் பெட்டியில் குப்பை போடாமல் இருந்தால் சரி. //

  ஐயோ அதையும் நாங்கள் செய்து இருக்கின்றோம். என் அண்ணன், சித்தப்பா பசங்க எல்லோரும் வேர்கடலை சாப்பிட்டு அதன் தோளியை ஒரு கூடை நிறைய தபால் பெட்டியில் போட்டு - தபால்காரர் எடுக்கும்போது ஒளிந்திருந்து பார்த்திருக்கின்றோம் !!

  உருபடாத கும்பல் என்று நீங்கள் திட்டுவது காதில் விழுகின்றது.

  1976 இல் (எனக்கு பத்து வயது) - என் தந்தை வழி சித்தப்பா வீட்டிற்கு (பல்லடம் என்ற ஊர்) கோடைவிடுமுறைக்கு சென்றோம். அங்கே நடந்த கூத்து. இது மட்டுமா - ரவிக்கை போடாமல் பால்காரி, மோர்க்காரி என்று வரும் பெண்களை - பட்டினத்தான் நகரத்தை பார்பதுப்போல் நாங்கள் - ரிவேர்ஸ் ஜொள்ளு !! (அப்போதே !!).

  தந்தை வழி / தாய் வழி என்று அத்தை, மாமன், சித்தப்பா, பெரியப்பா என்று விடுமுறைக்கு செல்வோம். சுகம். எவ்வளவு இனிமையான வருடங்கள்.
  சென்னை அண்ணா நகரிலிருந்து அசோக் நகர் பெரியப்பா வீட்டில் போய் இரண்டு மாதங்கள் இருப்பதே சுகம். அசோக் பில்லர் பக்கத்தில் உள்ள சிந்தாமணி / காமதேனு கட்டிக்கொண்டிருந்த நேரம் !! அசோக் பில்லரிலிருந்து கத்திப்பாரா ஜங்ஷன் வரை காடுகள் !! மாங்காய் / மாம்பழ தோட்டத்தை அடித்து தின்போம் !

  என் மகன்கள் இப்போது எது செய்தாலும் திட்டும் என்னை உயிருடன் விட்டு வைத்த என் தந்தை / தாய் மற்றும் உறவினர்களை என்னவென்று சொல்லுவது !!

  பதிலளிநீக்கு
 15. //+2 போலி சான்றிதழ் தயாரிக்க ரூபாய் பத்தாயிரம்.
  அடேங்கப்பா - படிச்சு மார்க் வாங்கறது சிக்கனமா இருக்கும் போலிருக்கு. // Good, makes one think! Kindly don't make fun of Kapildev, he is a Genuine cricketer, because of his historical 175 against Zimbabwe, India went to the final and won the World cup in 1983. Also, that victory made cricket famous in India and these bachchas Tendulkar, bindulkar, Dono, Chani are reaping the benefits in the form of money, women and fame whereas those men of Kapil are still struggling to get a good house to live in.

  பதிலளிநீக்கு
 16. Jayadeva ji,
  The fun in last line is not on Kapil. It is on the statement made by Sri. We are also fans of the great cricketer and all rounder, Kapil Dev.

  பதிலளிநீக்கு
 17. போலி என்கவுண்டர் வழக்கில் 12 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை.
  12 பேரும் ஏதாவது போலி டாக்டரிடம் போலி சான்றிதழ் பெற்று, Poly கிளினிக்ல அட்மிட் ஆகி தப்பிப்பார்களாகுக!
  //

  சூப்பரு...

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!