சிறு வயதில் படம் பெயர் சொல்லி விளையாடுவது உண்டு.. ஒருவர் பாடி, விட்ட அடியின் ஏதாவது ஒரு எழுத்தை முதல் எழுத்தாகக் கொண்டு அடுத்தவர் பாட வேண்டும் என்று விளையாடுவது உண்டு. பாடல்களில் ஓரிரு வரிகள் சொல்லி முதலடி என்ன என்று சொல்லி விளையாடுவது உண்டு.
இப்போதும் நாம் எங்காவது சென்று கொண்டிருப்போம். எங்கிருந்தாவது ஏதாவது பாடலின் ஓரிரு வரிகள் காதில் விழும். தெரிந்த பாடல் என்று மனதில் அடிக்கும். அருகிலிருப்பவர்கள் பேச்சு, வேலை என்று கவனம் சிதறினாலும் அந்தப் பாடல் என்ன என்று தெரிந்து கொள்ளாத வரை பல்லிடுக்கில் மாட்டிய உணவுத் துகளின் அவஸ்தை இருக்கும்... மெல்ல பாடிப் பார்ப்போம்... யாரையாவது கேட்டு பார்ப்போம்...
மதுரைப் பக்கங்களில் பாட்டுப் பாடுகிறான் என்று சொல்வதற்கு பதில் பாட்டு படிக்கிறான் என்பார்கள். சிலர் 'பாடுவதைக்' கேட்கும் போது வேண்டுமென்றேதான் அப்படிச் சொல்கிறார்களோ என்றும் தோன்றும். என்னிடம் என் நண்பர்கள் ஏதாவது ஒரு பாட்டைச் சொல்லி 'பாட்டு படியேன்...' என்னும் போது அந்தப் பாடலை கவிஞர் பாணியில் 'படித்து' விடுவேன்... (பாடினாலும் அப்படிதான் இருக்கும் என்பது வேறு விஷயம்)
ஆனால் அபபடி வசனமாக பாடலைச் சொல்வது கூட என் நண்பர்கள் சிலருக்கு வராது. முதல் வரியைச் சொல்லி விட்டு அடுத்த வரிக்கு சற்றே திரும்பி நின்று அடுத்தடுத்த வரிகளை மனதினுள் பாடிப் பார்த்துக் கொண்டு சொல்வார்கள்.
நீண்ட கட்டுரையாக எழுதுவதை சுருக்கி சில வரிகளில் கவிதையாக்குகிறார்கள் கவிஞர்கள். திறமைசாலிகள். நமக்குக் கவிதை வராது. சுருக்கி எழுதியதை நீட்டினால்.... கண்டு பிடிக்க முடிகிறதா என்று பார்க்கலாமே என்று தோன்றியது.
சில திரைப் பாடல்கள்... கவிதைக்குப் பொருள் கூறுவது போல வேறு வார்த்தைகளில் சாதா வரிகளாக... பாடலின் இடையில் வரும் வரிகள்... இதிலிருந்து அந்தப் பாடல்களை ஊகிக்க முடிகிறதா என்று பாருங்கள்... 'பூ...! இவ்வளவுதானா...' என்கிறீர்களா..? சும்மா தமாசு...!
2) நன்றாக வாழும்போது பார்க்க வரும் உறவு ஜனம் யாவும் சாப்பிடக் கூட வழியில்லாத போது வருமா...உலகில் பணத்தை மிஞ்சி ஒன்றும் இல்லை என்று ஆன பிறகு என்ன உறவுகள் வேண்டியிருக்கிறது... துன்பப் படும் இதயத்துக்கு யார் ஆறுதல் தருகிறார்களோ அவர்கள் தான் சகோதரர்கள்...
3) இளமை போகும்..முதுமை வரும். மாலையிட்டு தாலி கட்டிய அழகிய மனைவியுடன் அன்புடன் பிரியாமல் மடியில் படுத்து சரசம் செய்ய வயது ஒரு தடையல்ல...
4) எந்த ஒன்று என்னை ஈர்த்தது...மூக்கின் நுனியில் உள்ள மர்மமா... கள்ளமில்லா போகன்வில்லா புன்னகையா... நீ நடந்ததால் மதிப்பு கூடிப் போன பாதைகளும் உனக்காக ஐஸ் பாதை போட்ட இயற்கையும்... ப்ளீஸ்...என் வீடு வரை வருவாயா...என் வீடு உனக்குக் கட்டாயம் பிடித்துப் போகும்... என்னையும்தான்...
5) உனது மடியில் கண்கள் சொக்க நான் தூங்குவதற்கு என்ன பேறு பெற்றேனோ...என்ன என்று கூறுவேன்...? இந்தப் பிறவி மட்டுமல்ல ஏழேழு பிறவியிலும் தொடரும் சொந்தம்... வாழும் காலம் யாவும் உன் இதயமே எனது அடைக்கலம்.
6) என் உள்ளம் எப்படித் தெரியுமா....எப்படி உலகத்துக்கு எல்லை இல்லையோ அது போலத்தான்... புதிய உலகில் எல்லோருக்கும் நல்ல பொழுதாகவே விடியும்.... ஒரு வகையில் எல்லோருக்கும் உதவும் காற்றும் என் பாடலும் ஒன்றுதான்.
7) பகல் வேளையில் விளக்குடன் சென்ற மேதை மனிதனைக் காணோம் தேடுகிறேன் என்று விளக்கம் சொன்னாராம். யார் மனிதன் என்றால் பிறப்பால் வளர்ப்பால் அல்ல குணத்தால் மனத்தால் வாழ்பவன் மனிதன் என்று சொன்னாராம்.
என்ன.. எல்லாம் ஈசிதானே...பின்னூட்டத்தில் விடைகள் வந்து குவிந்து விடும். மீனாக்ஷி வாரம் ஒரு சினிமாப் பதிவு விருப்பம் தெரிவித்திருந்தார். அதற்காக என்று கூட வைத்துக் கொள்ளலாம். மீனாட்சிக்கு எல்லாம் சுலபமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
3.கல்யானமாலை கொண்டாடும் பெண்ணே
பதிலளிநீக்குஎனது ஸ்கோர் ௦%
பதிலளிநீக்குஒரே சிச்சுவுஷேசனல் தமிழ்ல நிறைய பாடல்கள் வந்திருப்பதானல் பயங்கர குழப்பமா இருக்கு... எதாச்சும் ஒரு க்ளு கொடுங்க...
பதிலளிநீக்குதாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஎல்லாக் கேள்விகளும் மிக எளிதாக அதுவும் “தெரியாது” என்ற ஒரே விடையைக் கொண்டிருப்பதால், அடுத்த முறை கடினமான கேள்விகளைக் கேளுங்கள் :)
பாட்டின் வரிகளைப் பொன்மொழிபோல ஆக்கிவிட்டிருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குமுடியவில்லை.4 ஆவது பாட்டின் சாயல் சூர்யாவின் பாடல்"என் வீடு வா உனக்கும் பிடிக்கும்"என்பதுபோல இருக்கு !
2. அண்ணன் என்னடா........தம்பி என்னடா அவசரமான உலகத்திலே
பதிலளிநீக்கு3. கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே........
மெட்ராசுல வெயில் எப்படி?
பதிலளிநீக்கு7.தம்பிக்கு ஒருபாட்டு (நான் ஏன் பிறந்தேன்? மக்கள் திலகம் நடித்த திரைப்பட்த்தில் இடம்பிடித்த பாடல் எங்க சித்தப்பாரு அடிக்கடி கேட்கும் பாடல்...
பதிலளிநீக்கு6.பாடும் போது நான் தென்றல் காற்று என்று ஆரம்பிக்கும் மக்கள் திலகத்தின் இன்னொரு பாடல்
இப்படியிருக்கும் அதில்
எல்லைகளில்லா உலகம், என் இதயமும் அதுபோல் நிலவும்,புதுமை உலகம் மலரும், நல்லப் பொழுதாய் யாருக்கும் புலரும்,
5.கண்ணன் ஒரு கைக்குழந்தை என்று தொடங்கும் சிவக்குமார் நடித்த பத்ரகாளி திரைப்படத்தின் பாடல்
உன் மடியில் நானுறங்க,கண்ணிரண்டும் தான் மயங்க,என்ன தவம் செய்தேனோ,என்னவென்று சொல்வேனோ?,உன் மடியில் நானுறங்க,கண்ணிரண்டும் தான் மயங்க,என்ன தவம் செய்தேனோ என்னவென்று சொல்வேனோ?
மை ஆல் டைம் ஃபேவரைட் சாங் இது.. செம்ம ரொமான்ஸ் கணவன் மனைவி பாடல்
4.ஹுர்ரே....
நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
வாரணம் ஆயிரம்...
3, இது எல் கே சொல்லிபோட்டாரு அதேதான்
வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும் ஆனாலும் அன்பு மாறாதம்மா மாலையிடும் சொந்தம் முடிபோட்ட பந்தம் பிரிவென்னும் சொல்லே அறியாதம்மா அழகான மனைவி அன்பான துணைவி அடைந்தாலே பேரின்பமே மடிமீது துயில சரசங்கள் பயில மோகங்கள் ஆரம்பமே....
2.அண்ணன் என்னடா தம்பி என்னடா
பணத்தி மீதுதான் பக்தி என்ற பின் பந்த பாசம் ஏனடா?
பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும் அண்ணன் தம்பிகள் தானடா..
வாழ்க்கை தத்துவம் சிவாஜி நடித்த பழநி எனும் திரைக்காவியத்திலிருந்து...
1.தெரியலை ஹிஹிஹி கண்டிப்பா மீனாட்சி மேடம் சொல்வாங்க
1. அன்னக்கிளி உன்னை தேடுதே ...ஆறு மாசம் ஒரு வருஷம்......
பதிலளிநீக்கு2. அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே .....
ஐயோ தலைய வலிக்குது . அப்புறமா வர்ரேன் ..ஜூட் .............
:) நியாயமா இது! இசை பத்தின பதிவை போடுங்கன்னுதான் சொன்னேன். அதுக்காக இப்படி எல்லாம் புதிரை போட்டு, நீங்களே எனக்கு சுலபமா வேற இருக்கும்னு நினைக்கறதா! நல்லா இருக்கே கதை! :)
பதிலளிநீக்குரொம்ப சுவாரசியமா இருக்கு. நன்றி! எல்லாருமே எல்லா விடையும் சொல்லிட்டாங்க. எனக்கும் நாலாவது புதிரை தவிர மத்தது தெரிஞ்சுது.
1. அன்னக்கிளியே உன்னை தேடுதே.....அன்னக்கிளி
2. அண்ணன் என்னடா
3. கல்யாண மலை கொண்டாடும் ........புது புது அர்த்தங்கள் (LK. already சொல்லிட்டார்)
5. கண்ணன் ஒரு கை குழந்தை ......பத்ரகாளி
6. பாடும்போது நான் தென்றல் காற்று.... நேற்று இன்று நாளை
7. தம்பிக்கு ஒரு பாட்டு ......நான் ஏன் பிறந்தேன்
//மெட்ராசுல வெயில் எப்படி///
பதிலளிநீக்குha ha ha.--geetha
உங்களுடைய ஏழாவது புதிரை படித்தவுடன் நினைவுக்கு வந்த படம் 'லக்ஷ்மி கல்யாணம்'. அந்த படத்தில் சிவாஜி இப்படித்தான் பகல் நேரத்தில் கையில் விளக்குடன் மனிதரை தேடிக்கொண்டே 'யாரடா மனிதன் அங்கே' என்ற பாடலை பாடுவார். அதனால் ஏழாவது பாடலுக்கான விடை இந்த பாடலாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் வரிகள் உங்கள் புதிருக்கு பொருந்தவில்லை. இந்த படம் சோகப் படமாக இருந்தாலும், வசனங்கள் மிக மிக அருமையாக இருக்கும். சிவாஜியும், நம்பியாரும் அற்புதமாக நடித்திருப்பார்கள். 'யாரடா மனிதன் அங்கே'.... இந்த பாடலில் கண்ணதாசன் வரிகள் அற்புதமாக இருக்கும்.
பதிலளிநீக்குஒரு பாட்டு கூட தெரியலைங்க... தோல்விய ஒத்துக்கறேன்... நீங்களே சொல்லிடுங்க... நல்ல புதிர்
பதிலளிநீக்குதெரிந்த பாடல்களை சிலர் சொல்லிட்டாங்க. நா என்ன பண்றது.
பதிலளிநீக்குபுது பட பாடல்களை புதிரில் போடுங்கள்
பதிலளிநீக்குஹசிலி பிசிலி
அடியேய் கொல்லுதே
டாடி மம்மி வீட்டில் இல்லை
வருக.... வருக......
பதிலளிநீக்குLK,
Madhavan,
நாஞ்சில் பிரதாப், (நாங்க க்ளூ கொடுக்கும் முன்னால் எல்லோரும் எல்லா பதிலையும் சொல்லிட்டாங்க..!)
பின்னோக்கி, வாழ்த்துக்களுக்கு நன்றி
ஹேமா, (சரியாய்தான் ஊகித்திருக்கிரீர்கள்)
பெயர் சொல்ல விருப்பமில்லை, (சபாஷ்)
அப்பாதுரை, (இதைப் படிச்சுமா உங்களுக்கு இந்த சந்தேகம் வருது!)
ப்ரியமுடன் வசந்த், (சபாஷ், நீங்க MGR பாடலைச் சொல்லுவீங்கன்னு எதிர்பார்க்கவே இல்லை...)
கக்கு மாணிக்கம், (சரிதான்... ஆனாலும் புதிரில் வந்த வரிகளைச் சொல்லியிருக்கலாமே..!)
meenakshi, (பத்திரிக்கைல பெயர் போட்டா முன்னால இருந்து நடத்தி வைக்கணும்... அது மாதிரி பதிவுல பெயர் போட்டா இப்படியா லேட்டா வரது...ஆனாலும் லேட்டஸ்ட்டா வந்துட்டீங்க... யாரடா மனிதன் இங்கே பாடலை மறக்க முடியுமா? இந்தப் பாடலை கண்ணதாசன் பதிவில் குறிப்பிட்டுள்ளோம் ஏற்கெனவே ...)
geetha santhanam,
அப்பாவி தங்கமணி, (ரொம்ப ஓவர் அப்பாவிங்க நீங்க... மேலே எல்லோரும் பதில் எல்லாம் சொல்லிட்டாங்க... பார்க்கலியா?)
தமிழ் உதயம், (உண்மைதான்)
ராம்ஜி யாஹூ, (கேள்விக்கு பதில் சொல்லுங்கன்னு சொன்னா பதிலைச் சொல்லி இந்தக் கேள்வியைக் கேளுங்கன்னு சொல்றீங்களே...!)
நன்றி...எல்லோருக்கும். எல்லோருமே ஒன்றிரெண்டாக பதில் சொல்லியாகி விட்டதால் தனியாக எதுவும் சொல்ல வேண்டியதில்லாமல் போய் விட்டது!
எல்லோரையும் வழிமொழிகிறேன்
பதிலளிநீக்குவிஜய்
எனக்கென்னவோ பணம் பந்தியிலே பாட்டுதான் நினைவு வந்தது..
பதிலளிநீக்குஅப்புறம் கேப்டன் மகள் படத்தில் எஸ்பிபி பாடும் ஏதோ அது ஏதோ ஒன்று உன்னிடம் இருக்கிறது''
அந்தப் பாட்டும் தோன்றியது. ஒரே அர்த்தத்தில் பல பாடல்களோ.:)
4. நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
பதிலளிநீக்குஎன் வீடு வா என்னை பிடிக்கும்
வல்லிசிம்ஹன் சொல்லும் பாடல் இதுவா-
எந்த பெண்ணிடமும் இல்லாதது ஒன்று அது ஏதோ உன்னிடம் உள்ளது
நான் சுத்தம் எனக்கு ஒன்னுமே தெரியல.எனக்கும் மார்க் ௦ தான் ..அடடே கணக்கு மாதிரி இதுலயும் புட்டுகிச்சா
பதிலளிநீக்குசுவாரஸ்யம்:)!
பதிலளிநீக்கு//meenakshi said...
பதிலளிநீக்குஇப்படி எல்லாம் புதிரை போட்டு, நீங்களே எனக்கு சுலபமா வேற இருக்கும்னு நினைக்கறதா! நல்லா இருக்கே கதை! :)//
//meenakshi said...
பதிலளிநீக்குஇப்படி எல்லாம் புதிரை போட்டு, நீங்களே எனக்கு சுலபமா வேற இருக்கும்னு நினைக்கறதா! நல்லா இருக்கே கதை! :)//
அது !!!!
ATHE THAAN RAMJI.
பதிலளிநீக்குLOVELY LOVELY SONG.