புதன், 14 ஜூலை, 2010

கவனம் + கற்பனை = காசு

ஆங்கிலத்தில்,  Observation + Imagination = Money என்று ஒரு Formula எப்பவோ படித்த ஞாபகம். தமிழில் சொன்னால், இதை, 
அவதானிப்பு + படைப்பாற்றல் திறன் = பணம் என்று கூறலாம்.
இதற்கு நடைமுறை வாழ்க்கையில் எவ்வளவோ நல்ல உதாரணங்களைக் காட்டமுடியும். பிட்சா முதல் செல் ஃபோன் உறை வரை.


அவதானிப்பு, அவதானித்தல் என்றால் என்ன?
சதாவதானி, தசாவதானி என்றெல்லாம் கேள்விப் பட்டிருப்பீர்கள். பல வெவ்வேறு விஷயங்களை கவனத்தில் (ஒரே நேரத்தில்) கொண்டு, அவற்றில் தேவையானவற்றை,  நினைத்த மாத்திரத்தில் வெளிக்கொண்டு வருகின்ற  திறமையை அவதானித்தல் என்று கொள்ளலாம். பத்து விஷயங்களில் இதைச் செய்பவர்களை தசாவதானி என்று கூறுவர். இது போல நூறு விஷயங்களை கவனத்தில் கொண்டு செய்யக் கூடியவரை சதாவதானி என்பர். எனவே, அவதானித்தல் என்றால், மனக்குவிப்பு (concentration of the mind) செய்து விஷயங்களை கிரஹித்துக் கொள்வது. (உங்கள் ஊரில் நீங்க நடந்து செல்லும் பொழுது, எந்த எந்த கடைகளில் அதிகக் கூட்டம் இருக்கிறது என்று கவனித்திருக்கிறீர்களா?)

Imagination அல்லது Creativity  (நமக்குப் பரிச்சயமான வார்த்தை படைப்பாற்றல் திறன்  ) Creativity is generation of ideas to achieve a target. படைப்பாற்றல் என்பது, சுருக்கமாக, ஓர் இலக்கை அடைய உற்பத்தி செய்யப்படும் பற்பல யோசனைகள், செயல்கள். பள்ளிக்கூடக் காலத்திலோ அல்லது அலுவலக நாட்களிலோ பொய் சொல்லி (உண்மை சொல்லி அல்ல) லீவு எடுத்தவர்கள் எல்லோருமே படைப்பாற்றல் திறன் கொண்டவர்கள்தான். 

அவதானிப்பால் பெற்ற ஞானத்துடன், நம் மனத்தின் படைப்பாற்றல் திறனை கலந்து, புதிய பொருளை அல்லது ஒரு புதிய சேவையை உருவாக்கி, அதனை வைத்து, பணம் சம்பாதிக்க முடியும் என்பதுதான் இங்கே சொல்ல வருகின்ற சமாச்சாரம்.

வாசகர்கள், சொந்தத் தொழில் செய்ய வேண்டும் என்று நினைத்தால், எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்? ஏன்? 

6 கருத்துகள்:

  1. இதற்கு மேல் இன்னொன்றும் வேண்டும் - துணிவு.

    பதிலளிநீக்கு
  2. தணிக்கையாளர் - எனக்கு எப்பொழுதும் அடுத்தவர் பணியில் குறை கண்டு பிடிப்பது கை வந்த கலை!

    பதிலளிநீக்கு
  3. Like multiplexing, if a person is able to successfully manage various tasks we call him xx-avadhani depending upon the value of xx. It is more distributed attention than focus on a single point - the opposite of dhyanam?

    பதிலளிநீக்கு
  4. சொந்தத் தொழில் செய்யறதெல்லாம் எனக்கு வராது! :) பேச்சுத் திறமை இல்லை. அதோடு அதிர்ஷ்டம் என்பதும் கிடையாது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!