வியாழன், 8 ஜூலை, 2010

இது சோதனை ஊர்தல்

இதற்கு கவிதை / கமெண்ட் எழுதுங்கள். 
சப்தம் எதுவும் புரியாது. 
பயம் வேண்டாம்.

23 கருத்துகள்:

  1. குரோம்பேட்டைக் குறும்பன்8 ஜூலை, 2010 அன்று 8:11 PM

    கவிதைதானே? இதோ எழுதறேன்.

    கொக்கு? பற பற!
    கோழி? பற பற!
    நத்தை? நற நற!
    (நற நற மட்டும் நான் பல்லைக் கடிக்கும் சப்தம்)

    பதிலளிநீக்கு
  2. இதுக்கு கவிதையா. அவ்வ்வ்வ்வ்

    பதிலளிநீக்கு
  3. நிலம் பிளந்த ஊர்கள்
    ஊர்கிறேன் இன்னும்
    குறுக்கும் நெடுக்குமாய்.

    நீலமும் சிவப்புமாய்
    அரசியல் வர்ணங்கள்.

    வறுமை மட்டும்
    என் பின் தொடரும்
    கோடாய் !

    கு.கு கவிதை.....ஹி ஹி.

    பதிலளிநீக்கு
  4. ஹேமா - பிரமாதமான கவிதை. அட்சர லக்ஷம் பெறும்.

    பதிலளிநீக்கு
  5. நா ஒரு நத்தை
    நோக்கு உண்டா அத்தை
    பல்லுல இருக்கா சொத்தை
    டாக்டருக்கு நோட்டு கத்தை..

    (ஹி.. ஹி.. என்னால அவ்ளோதான் முடியும்.. சாரி.)

    பதிலளிநீக்கு
  6. தேடித் தேடிப் பார்த்துவிட்டேன்
    நத்தை என்று என்னைச் சொன்ன
    செந்தரை நிலத்தோரெ
    நானொரு அட்டை.
    ஒட்ட இடம் கிடைக்காமல்
    ஊரும் இன்னோரு கட்டை.:)

    பதிலளிநீக்கு
  7. மாதவன் உங்க பெயரை விஜய மாதவன் என்று மாற்றிக்கொள்ள உத்தேசம் உண்டா?

    பதிலளிநீக்கு
  8. வல்லிசிம்ஹன் said...
    தேடித் தேடிப் பார்த்துவிட்டேன்
    நத்தை என்று என்னைச் சொன்ன
    செந்தரை நிலத்தோரெ
    நானொரு அட்டை.
    ஒட்ட இடம் கிடைக்காமல்
    ஊரும் இன்னோரு கட்டை.:)

    கடைசி மூன்று வரிகள் சூப்பர்! ஆனா நீங்க கூட விஜய என்ற வார்த்தையை சேர்த்துக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது. (மாதவனுக்கு அடுத்தபடியாக விஜய பட்டம் உங்களுக்குத்தான்)

    பதிலளிநீக்கு
  9. குரோம்பேட்டைக் குறும்பன்9 ஜூலை, 2010 அன்று 10:02 AM

    வல்லிசிம்ஹன் நீங்க விஜய டி ராஜேந்தர் பற்றிக் கேள்விப் பட்டது இல்லையா?

    பதிலளிநீக்கு
  10. 'விஜய' -- ஹா.. ஹா.. ஹா... நல்லாச் சொன்னீங்க அப்பு..
    'ஜெயா', 'விஜய', 'ஸ்ரீ' எல்லலாமே நல்ல விஷயங்கள் தானே..

    பதிலளிநீக்கு
  11. நான் சொல்ல நினைத்தது 'ஜெய'
    எப்ப வேணுமோ அப்போ 'கால்' வராது.. வேண்டாத நேரத்துல வந்துடும். (வந்துடிச்சு)
    -- Murphy's law.

    பதிலளிநீக்கு
  12. (குணா கமல் ஸ்டைலில் படிக்கவும்)

    அட்டையே!
    அன்போடு
    கவிஞன் நான்,
    எழுதும் கடிதம், இல்ல லெட்டர், இல்ல மடல்,
    வேணாம் கடிதம்னே வச்சுக்குவோம்
    உன்னை எண்ணிப் பாக்கையில்
    அரசியல் தோணுது,
    அதை எழுத நினைக்கையில்
    ஆட்டோ ஓடுது.....
    அவ்............!

    பதிலளிநீக்கு
  13. ஆண்டவன் அருளால்
    அட்டை என பிறந்தேன்,
    அணு அணுவாய்
    ரத்தம் ருசித்தேன்,
    இன்றோ
    எனக்குண்டான
    ரத்தம்
    ஆள்பவர்களால்
    உறிஞ்சப் பட்டுவிட்டதே!

    (யாருப்பா......ஆட்டோவைக் கூப்பிடறது?)

    பதிலளிநீக்கு
  14. என்னங்க இது, கவிதை எழுத அழகா பூ, வானம் என்று அழ்காகக் கொடுக்கக் கூடாதா? அட்டையைப் பார்த்துவிட்டு கவிதை என்ன தூக்கம் கூட வரமாடேங்குது.--கீதா

    பதிலளிநீக்கு
  15. //Madhavan said...
    நா ஒரு நத்தை
    நோக்கு உண்டா அத்தை
    பல்லுல இருக்கா சொத்தை
    டாக்டருக்கு நோட்டு கத்தை..
    //
    புடிங்க பரிசா ஒரு மாங்கா பத்தை!

    பதிலளிநீக்கு
  16. ஒஹ்! அது அட்டையா..? அப்பன்னா இதோ கவிதை..

    'நா ஒரு அட்டை
    போடமாட்டேன் சட்டை
    இருப்பேன் குளம் குட்டை
    போடுவேன் ரோடு பட்டை'

    பதிலளிநீக்கு
  17. பெயர் சொல்ல விருப்பமில்லை, மாதவன் இருவரும் சும்மா புகுந்து விளையாடறாங்க! சூப்பர்.

    பதிலளிநீக்கு
  18. குரோம்பேட்டைக் குறும்பன்9 ஜூலை, 2010 அன்று 1:03 PM

    வீடியோவில் நடித்திருப்பது அட்டை இனம் அல்ல. நத்தை இனம் என்றுதான் சொல்லுவார்கள். கூடு அல்லது வீடு இல்லாத நத்தை. அட்டை இனம் உடலின் மீது ஒட்டிக கொண்டால், அதன் மீது எரியும் நெருப்புக் குச்சி வைத்துதான் பிய்த்து எடுக்க முடியும். இங்கு காணப்படும் இந்த நத்தை மீது, கொஞ்சம் உப்பு போட்டாலே, அது மழைக்கால உப்பு நார்த்தங்காய் போல கொச கொச என்று போய்விடும்.

    பதிலளிநீக்கு
  19. குரோம்பேட்டைக் குறும்பன்9 ஜூலை, 2010 அன்று 1:19 PM

    முதலில் சோதனை ஓட்டம்.
    அப்புறம் சோதனை ஊர்தல்.
    அதற்கப்புறம்?

    பதிலளிநீக்கு
  20. ..எங்கள் said..."பெயர் சொல்ல விருப்பமில்லை, மாதவன் இருவரும் சும்மா புகுந்து விளையாடறாங்க! சூப்பர்."

    Thanks.

    ஆமா சார்.. என்னோட கடை சரக்கு
    (http://madhavan73.blogspot.com) சரியா வியாபாரம் ஆக மாட்டேங்குது.. ஓங்க கடையில என்னோட தெறமைய காமிச்சு பெரியாளா ஆகமாட்டோமா.. அதான், இந்த மாதிரி..

    பின்குறிப்பு :
    "கருத்துரைத்தவர்கள் டாப் 20" பட்டியலில் ஓர் குறிப்பு சேர்க்க முடியுமா : Madhavan = Madhavan (below ) + maddy 73 (old ). இல்லேன்ன்ன என்னோட 23 (old) கமெண்டு தெரியாமப் போயிடும் இன்னும் கொஞ்ச நாள்ல..

    பதிலளிநீக்கு
  21. மாதவன் சார். டாப் இருபது பட்டியல் ஒரு தான்தோன்றிப் பட்டியல். அதில் எதுவும் நம்மால் மாற்ற முடியாது. கூகிள ஆண்டவர் நடப்பு தேதியிலிருந்து கடந்த ஒரு மாத காலத்தில் வந்த கமெண்டுகளை கணக்கில் எடுத்துக் கொண்டு அதை அளித்து வருகிறார். தொடர்ந்து முன்னணியில் இருப்பதற்கு, உங்கள் ப்ளாக் பெயரை அடிக்கடி மாற்றாமல் இருந்தால் போதுமானது. மேலும் உங்கள் சுவையான கமெண்ட்ஸ் - எங்கள் ஒவ்வொரு பதிவிற்கும் (நீங்க ஏற்கெனவே செய்வது போன்று) போட்டு வந்தால் போதும்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!