வெள்ளி, 24 ஜூன், 2011

கண்ணதாசன் பிறந்த நாளில் ...

                           
கவியரசரின் எண்பத்து ஐந்தாவது பிறந்த தினமாகிய இன்று, அவர் எழுதிய ஐயாயிரம் திரைப்பாடல்களில் எங்களுக்குப் பிடித்த முப்பதை இங்கே பட்டியலிட்டிருக்கிறோம்.  (அவர் அமரராகி முப்பது வருடங்கள் ஆகி விட்டன.) இவற்றிலிருந்து, வாசகர்கள், தங்களுக்கு மிகவும் பிடித்த ஐந்து பாடல்களை வரிசையாக தேர்ந்தெடுத்து,  அந்தப் பாடல்கள் தங்களுக்கு ஏன் பிடிக்கும் என்பதையும் பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்கிறோம்.

1) காலங்களில் அவள் வசந்தம் .. பாவ மன்னிப்பு.

2) நினைக்கத்  தெரிந்த மனமே...ஆனந்த ஜோதி

3) யார் அந்த நிலவு....சாந்தி

4) காதல் சிறகை.....பாலும் பழமும்..

5) உன்னை ஒன்று கேட்பேன்  ... புதிய பறவை.

6) கண்கள் எங்கே ... கர்ணன்

7) கொடியில் இரண்டு மலருண்டு......உயிரா மானமா

8) நான் மலரோடு தனியாக .........இரு வல்லவர்கள்

9) ஆட்டுவித்தால் யாரொருவர்.... அவன்தான் மனிதன்

10) நான் பேச நினைப்பதெல்லாம்...பாலும் பழமும்

11) சொர்க்கத்தில் கட்டப்பட்ட தொட்டில்...மன்னவன் வந்தானடி

12) அமைதியான நதியிலே.. ஆண்டவன் கட்டளை.

13) வெள்ளி நிலா முற்றத்திலே ... வேட்டைக்காரன்

14) ஒரே ஒரு ஊரிலே.. படிக்காத மேதை.

15) யாரடா மனிதன் அங்கே ... லக்ஷ்மி கல்யாணம் (?)

16) போயும் போயும் மனிதனுக்கிந்த...தாய் சொல்லைத் தட்டாதே  

17) மாலைப் பொழுதின் மயக்கத்திலே ... பாக்யலக்ஷ்மி

18) பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும்... சாந்தி நிலையம்.

19)  கண்ணே கலைமானே -- மூன்றாம்பிறை

20) ஏதோ மனிதன் பிறந்து விட்டான்.. பனித்திரை

21) உன்னைத்தான் நானறிவேன்... வாழ்க்கைப் படகு

22) என்னை யாரென்று எண்ணி எண்ணி ... பாலும் பழமும்

23) இதய வீணை தூங்கும்போது... இருவர் உள்ளம்

24) யாரைத்தான் நம்புவதோ... பறக்கும் பாவை

25) புத்தியுள்ள மனிதரெல்லாம்... அன்னை

26) கண்ணிலே அன்பிருந்தால்... ஆனந்தி
 
27) சொன்னது நீ தானா ? - நெஞ்சம் மறப்பதில்லை.
 
28) நெஞ்சம் மறப்பதில்லை - பாடலும், படமும் அதே
 
29) அண்ணன் என்னடா தம்பி என்னடா --- பழனி
 
30) என்னுயிர்த் தோழி, கேளொரு சேதி - கர்ணன்.

(இவை தவிர உங்களுக்குப் பிடித்த வேறு பாடல்கள் இருந்தாலும், உங்கள் கருத்துரையில் தெரிவிக்கலாம்)
                            

20 கருத்துகள்:

  1. எல்லாமே இரத்தின பாடல்கள்தான் சார்
    கவியரு கண்ணதாசனின் எழுத்தில் சொல்லப்படாத விஷயங்களே கிடையாது , பாலும் பழமும் , கர்ணன் இவ்விரண்டு படங்களிலிருந்து ஒன்றுக்கும் மேற்பட்ட பாடல்கள் வந்திருப்பது, அந்த பாடல்களுக்கு உயிர் கொடுத்த நடிகர் திலகத்தையே சேரும்,
    அதிலும் யார் அந்த நிலவு பாடலில் சிகரட் பிடித்து கொண்டே அவர் நடந்து வரும் ஸ்டைல் இன்றுவரை யாராலும் நினைத்து பார்க்க முடியாதது

    ஆட்டுவித்தால் யாரொருவன் பாடலில் சோகத்தை பிழிந்தெடுக்கும் அவரது கண்கள் யாரிடமும் காண முடியாதது, அந்த பாத்திரமாகவே ஒன்றி போய்விடும் அவரின் நடிப்பு அமர்க்களம்.

    பதிலளிநீக்கு
  2. அத்துனையும் முத்துக்கள். நன்றி. ;-))

    பதிலளிநீக்கு
  3. மறக்க கூடாத, மறக்கவே முடியாத பாடல்கள். எனது தளத்திலும் கவியரசர் கண்ணதாசன் பிறந்த நாள் பதிவுள்ளது. வாசித்தீர்களா.

    பதிலளிநீக்கு
  4. ஆழ்கடல் முத்துக்கள் அத்தனையும். அதில் ஐந்தை மட்டும் கோர்த்தெடுப்பது எங்ஙனம்? சில பாடல்கள் பொதுவிலும், சில படங்களின் சூழலோடு பொருத்திக் கேட்கையில் இன்னும் ஆழமான அர்த்தங்களுடனும் மிளிருபவை.

    பதிலளிநீக்கு
  5. இந்த பாடல்களுக்கான லிங்கைக் கொடுங்க. கேட்டுப் பாத்துட்டு, நாளைக்குச் சொல்றேன். (தூங்கிடாம இருந்தா.. ;-)) )

    பதிலளிநீக்கு
  6. நான் பேச நினைப்பதெல்லாம், மாலை பொழுதின் மயக்கத்திலே, யார் அந்த நிலவு, நான் மலரோடு தனியாக, நெஞ்சம் மறப்பதில்லை.
    நீங்க ஐந்து பாட்டுன்னு சொன்னதால இந்த தேர்வு. ஆனா, எனக்கு எல்லா பாட்டுமே பிடிக்கும். பாடல்கள் எல்லாம் பிடித்ததற்கு பாடல் வரிகளும், மெட்டும், குரலும்தான் காரணம். இதற்கு மேலும் இந்த பாடல்கள் எல்லாம் உயிரோடு கலந்தது எப்படி என்று மனசு டைரிலதாங்க எழுதி வைக்க முடியும். வெளில சொல்ல முடியுங்களா! :)
    இந்த பாட்டுகளை எல்லாம் ஒலிபரப்பி இருந்திருக்கலாமே. பதிவில் பாடல்களை கேட்பதும் ஒரு தனி சுவாரசியம்தான்.

    பதிலளிநீக்கு
  7. கண்ணதாசன் பாடல்களில் நீங்கள் கொடுத்திருக்கும் அத்தனையும் வைரங்கள்.

    எதை விடுவது. இருந்தாலும் நான் ரசித்த,ரசித்துக் கொண்டிருக்கும் பலபாடல்கள் அந்தந்த பருவத்தில் நாம் உணரும் வாழ்க்கையின் வேதனையையோ,மகிழ்ச்சியையோ வெளிக்கொணரும் வார்த்தைகளாக இருக்கும்.

    மீனாக்ஷி சொல்வது போல் அவை டைரிக் குறிப்புகள்.

    பிடித்தவை,

    யார் அந்த நிலவு....மயக்கும் வரிகள், சிவாஜியின் நடை,டி

    எஸ்ஸின் குரல்

    ,



    ௨,இதயவீணை தூங்கும்போது பாடமுடியுமா.

    மீண்டும் சுசீலாவின் குரல், பாடகியின் ekkam

    3 நான் மலரோடு...

    4, கண்கள் எங்கே

    5 உன்னை ஒன்று கேட்பேன்.

    *************************************************

    தூது செல்ல ஒரு தோழி

    வாராதிருப்பானோ....வண்ணமலர்க் கண்ணன் அவன்,

    கண்ணன் வருவான் கதை சொல்லுவான்,

    கேள்வி



    பிறந்தது அன்று,

    யாருக்கு மாப்பிள்ளை யாரோ:)

    உள்ளம் என்பது ஆமை...விட்டாள் ஆயிரம் பாடல்கள் சொல்வேன்:௦)

    பதிலளிநீக்கு
  8. ஐயாயிரம் பாடல்கள் எழுதியிருக்கிறாரா! ஒரு படத்துக்கு மூணு பாட்டு சராசரியா பாத்தாலும் ஆயிரத்தைனூறு படங்களுக்கு மேல் (எனக்கு கணக்கு கொஞ்சம் வரும்)... வாவ். இன்றைய வைரமுத்து போன்றவர்கள் இன்னும் அதிகம் எழுதியிருப்பார்களோ என்று தோன்றுகிறது. வாலி எத்தனை பாடல்கள் எழுதியிருக்கிறார்? (இப்படி quiz பண்ணுவாருனு தெரிஞ்சிருந்தா பதிவே போட்டிருக்க மாட்டேனே?)

    கண்ணதாசன் எழுதிய 'எட்டடுக்கு மாளிகையில்' பாடல் கேட்டிருக்கிறீர்களா?

    பதிலளிநீக்கு
  9. வல்லிசிம்ஹன் சொல்வதை எதிரொலிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  10. 'தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே' - shakespeareன் வரியை அதை விட அழகாகத் தமிழில் சொன்னவர். அவர் எழுதின வரிகளில் சட்டென்று மனதிலேறி பிரமிக்க வைத்தவை பல உண்டு.

    பதிலளிநீக்கு
  11. பச்சை வண்ண சேலை கட்டி முத்தம் சிந்தும் நெல்லம்மா, பருவம் வந்தப் பெண்ணைப் போலே நாணம் என்ன சொல்லம்மா

    பதிலளிநீக்கு
  12. அப்பாதுரை சார்! அந்தக் காலத்துப் படங்களில் எல்லாம் குறைந்த பட்சம் பத்துப் பாடல்களாவது இருந்திருக்கும். அந்தக் கணக்கில் பார்த்தால், ஐயாயிரம் பாடல்களுக்கு, ஐநூறு படங்கள் போதும். வாலி அவர்கள் பாட்டு எழுதி இருப்பது, இதுவரையில், இருநூற்று அறுபத்தெட்டு படங்கள் என்று விக்கி கூறுகிறார். சராசரியாக (இந்தக் காலமும் சேர்ந்திருப்பதால்) ஒரு படத்துக்கு ஐந்து பாடல்கள் என்று கணக்கிட்டால், ஆயிரத்து ஐநூறு பாடல்கள் என்று குத்து மதிப்பாகக் கூறலாம். சரியான புள்ளி விவரங்கள் யாரிடமாவது இருந்தால் சொல்லலாம்.

    பதிலளிநீக்கு
  13. //ராமலக்ஷ்மி said... ஆழ்கடல் முத்துக்கள் அத்தனையும். அதில் ஐந்தை மட்டும் கோர்த்தெடுப்பது எங்ஙனம்?//

    Ditto.

    //A.R.ராஜகோபாலன் said... அதிலும் யார் அந்த நிலவு பாடலில் சிகரட் பிடித்து கொண்டே அவர் நடந்து வரும் ஸ்டைல் இன்றுவரை யாராலும் நினைத்து பார்க்க முடியாதது//

    Absolutely true

    பதிலளிநீக்கு
  14. காலங்களில் அவள் வசந்தம்

    என்னை யாரென்று எண்ணி எண்ணி

    மாலைப் பொழுதின் மயக்கத்திலே

    சொர்க்கத்தில் கட்டப்பட்ட தொட்டில்

    உன்னைத்தான் நானறிவேன்..

    அப்படியே முப்பது பாட்டையும் சொல்லலாம் … ஐந்து மட்டும் தான் எனும் நிபந்தனையை முன்னிட்டு சொல்வதென்றால் ..சிறந்ததில் மேலும் சிறந்தது எனும் வகையில் …பாடகர்கள் இப்பாடலை அளித்தவிதம் என்ற முறையில் எனது தேன்கிண்ணம்.

    பதிலளிநீக்கு
  15. எல்லாமே பிடிக்கும் பில்டர் பண்ண முடியலை

    பதிலளிநீக்கு
  16. கவிஞர் பிறந்து என்பத்தி ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன என்று கூறி விட்டு, அவர் அமரர் ஆகி முப்பது ஆண்டுகள் ஆனா படியால் முப்பது பாட்டுகள் பட்டியலிடுகிறோம் என்பது என்ன நியாயம் ? நீங்கள் எண்பத்தைந்து பாடல்கள் அல்வா ?

    பதிலளிநீக்கு
  17. 1 .ஆட்டுவித்தால் யாரொருவர்...-
    அவனின்றி அணுவும் அசையாது என்பதை சொன்னதால்.
    2 அண்ணன் என்னடா தம்பி என்னடா -- வாழ்கையின் நிதர்சனம் சொன்ன பாடல்
    3 .புத்தியுள்ள மனிதரெல்லாம்...--- வாழ்க்கையில் தோற்றுப் போனவர்களுக்கான ஆறுதல் பாடல்.
    4 . காலங்களில் அவள் வசந்தம் - கீதையிலிருந்து எடுத்த காதல்
    5 . சொன்னது நீ தானா ?- பாடல் எழுதிய பின்னணி .

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!