ஓ ஏ வுக்கு வந்திருந்த கடிதங்களில் முக்கியமானவற்றை எடுத்துக் கொண்டு, ஜெயிலில் இருக்கும் ஓ ஏ விடம் காட்டி, அவர் சொல்படி நடவடிக்கைகள் எடுப்பது, கோவிந்தராஜன் வேலை.
வழக்கம் போல, அன்று வந்த கடிதங்களை எடுத்துக் கொண்டு, காலுசிங்கையும் (கோக்க கோலாவுடன்) அழைத்துக் கொண்டு ஜெயிலுக்குக் கிளம்பினார், கோவிந்தராஜன். எல்லா நாட்களிலும் நிகழ்கின்ற நிகழ்வுதான், இது. எந்தக் கடிதத்திலாவது, 'கான்ஃபிடென்ஷியல்' என்று போட்டிருந்தால், அதைப் பிரித்துக் கூட பார்க்காமல், அப்படியே கொண்டு சென்று, ஓ ஏ விடம் கொடுத்துவிடுவார். எ சா பெட்டியில் போட்ட கடிதத்தையும், அப்படித்தான் எடுத்துச் சென்று ஓ ஏ விடம் கொடுத்தார், கோவிந்தராஜன்.
ஓ ஏ போன்ற பெரும் பணக்காரர்களுக்கு சிறையில் எவ்வளவோ சலுகைகள், வசதிகள் உண்டு. அவற்றில்,உதவியாளர் கொண்டுவருகின்ற கடிதங்களைப் படித்து, பதில் எழுத, அல்லது பதில் என்ன எழுதுவது என்று ஆலோசனை கூற, மருத்துவர் சிபாரிசோடு கோக்க கோலா + ஆஸ்பிரின் அவ்வப்போது சாப்பிடுவது, எல்லாம் அடங்கும்.
கோவிந்தராஜன் அன்றைக்குக் கொண்டுவந்து கொடுத்த கடிதங்களை ஒவ்வொன்றாக படித்து, நிதானமாக, என்ன நடவடிக்கைகள் தேவை என்று கடிதங்களின் ஓரத்தில் எழுதி அவைகளை, கோவிந்தராஜனிடம் கொடுத்தார். ஆனால், எ சா & கா சோ கடிதத்தை மட்டும், பிறகு தருவதாகக் கூறி, தன்னிடமே வைத்துக் கொண்டார்.
*******************************
எ சா கேட்டார்: "சோ - நான் போய் அந்த போஸ்ட் மார்ட்டம் டாக்டரைப் பார்த்து, போஸ்ட் மார்ட்டம் செய்ததில், பிங்கி கல்யாணம் ஆகாதவர் என்று எப்படித் தெரிந்துகொண்டார் என்று கேட்டு, பதில் தெரிந்து வருகின்றேன். அதுவரை நீ சமர்த்தா உன் தோழியோடு பேசிக் கொண்டிரு."
கா சோ : "சரி. என்னை இந்தூர் ஜெயில் வாசலில் இருக்கின்ற மேனேஜ்மென்ட் இன்ஸ்டிடியூட் வாசலில் இறக்கிவிட்டுச் செல்லுங்கள். நான் என் தோழியோடு பேசிக்கொண்டிருக்கின்றேன். நீங்க திரும்ப வரும்பொழுது, நானும் வந்துவிடுகின்றேன்."
எ சா: "சரி, அப்படியே செய்கின்றேன்."
வாடகை காரை, நேரு பார்க் ரோடு வழியாக விடச் சொல்லி, இந்தூர் ஜெயில் வாசலில் சோபனாவை இறக்கி விட்டுவிட்டு, எ சா ஆஸ்பத்திரி பக்கம் காரை ஓட்டச் சொன்னார்.
------------- X -----------------------------
மறுநாள் கு ர, எ சா, கா சோ கோஷ்டி இந்தூரை விட்டுக் கிளம்பி, விமானம் மூலம் ஊர் வந்து சேர்ந்தனர். சோபனாவின் தோழியை தினமும் அலைபேசியில் தொடர்புகொண்டு சிறைச்சாலையிலிருந்து செய்தி எதுவும் உண்டா என்று கேட்டுக் கொண்டிருந்தனர்.
மறுநாள் கு ர, எ சா, கா சோ கோஷ்டி இந்தூரை விட்டுக் கிளம்பி, விமானம் மூலம் ஊர் வந்து சேர்ந்தனர். சோபனாவின் தோழியை தினமும் அலைபேசியில் தொடர்புகொண்டு சிறைச்சாலையிலிருந்து செய்தி எதுவும் உண்டா என்று கேட்டுக் கொண்டிருந்தனர்.
*********************************
சில நாட்கள் கழித்து, சிறைச்சாலைக்கு வந்த கோவிந்தராஜனிடம், ஓ ஏ, ஒரு கவரைக் கொடுத்து, அதை ஒரு வாரம் கழித்து, திறந்து படிக்கவேண்டும் என்று சொன்னார். கோவிந்தராஜன், சரி என்று சொல்லி, அதை வாங்கி வைத்துக்கொண்டார். அந்த வேண்டுகோள் சற்று விசித்திரமாகப் பட்ட போதிலும், அவர் ஓ ஏ வைக் கேள்விகள் எதுவும் கேட்பதில்லை; கேட்டதில்லை என்பதால், ஓ ஏ கொடுத்த கவரை, அப்படியே வாங்கி வைத்துக் கொண்டார்.
ஆனால், அன்று மாலையே, போலீஸ் ஜீப் வந்து கோவிந்தராஜனை, சிறைக்குக் கூப்பிட்டுச் சென்றனர்.
ஓ ஏ தற்கொலை செய்துகொண்டார் என்ற ஒற்றை வரி அதிர்ச்சி தகவலைத் தெரிந்துகொண்டார், ஜீப்பில் சென்றுகொண்டிருந்த போது.
சிறையதிகாரியும், மற்றும் சில போலீஸ் அதிகாரிகளும், சமீபத்தில் ஓ ஏ சொன்னது என்ன, செய்தது என்ன போன்ற தகவல்களை, கோவிந்தராஜனிடம் கேட்டுத் தெரிந்துகொண்டனர்.
அப்பொழுது, கோவிந்தராஜன், அன்று காலை ஓ ஏ கொடுத்த கவர் பற்றிக் கூறினார். போலீஸ் அதிகாரிகள், கோவிந்தராஜனுடன், சென்று, அவரிடம் ஓ ஏ கொடுத்த கவரை வாங்கி வந்தனர்.
அந்தக் கவருக்குள், இரண்டு கடிதங்கள் இருந்தன.
(அடுத்த பதிவில் முடியும்) - ஸ்வீட் எடு; கொண்டாடு!!
எல்லாரையும் சகட்டு மேனிக்குக் கொலை, தற்கொலை பண்ணிக்கச் சொல்லிட்டு எல்லாருமே ஆவி உலகில் போய்க் கல்யாணம் பண்ணிட்டு செட்டில் ஆகற ஐடியாவா இருக்குமோ?
பதிலளிநீக்குஹிஹிஹி, கண்டு பிடிச்சாச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச், ஓ ஏ தான் மனைவியையும் கொன்னிருக்கார், பிங்கியையும் கொன்னிருக்கார். சே, இப்படியா மாசக் கணக்கில் கதையை இழுக்கிறது? ஓஏ மனைவி பேரே மறந்தூ போச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்! :))))))
பதிலளிநீக்குகூகிள் மேப்பிலே நல்லாவே இந்தூரின் இட அமைப்பு கொடுத்திருக்காங்க இல்லை? :))))
பதிலளிநீக்குஆஹா... முக்கியமான இடத்தில் "தொடரும்" போட்டி விட்டீர்களே...
பதிலளிநீக்கு// திண்டுக்கல் தனபாலன் said...
பதிலளிநீக்குஆஹா... முக்கியமான இடத்தில் "தொடரும்" போட்டி விட்டீர்களே...//
தொடருமா? அப்படி எங்கும் போடவில்லையே நான்!
ok antha adutha pathivu eppothu ?
பதிலளிநீக்கு//Vinoth Kumar said...
பதிலளிநீக்குok antha adutha pathivu eppothu ?//
இறுதி - இருபத்தாறாம் பகுதி எப்பொழுது வெளியாகும் என்பதை,இருபத்து நான்காம் பகுதியிலேயே
சொல்லியிருக்கின்றாரே பதிவாசிரியர்! வினோத் குமார் அதைப் படிக்கவில்லையா?
innam oru varam irkka....?
பதிலளிநீக்குpathirikaiyil pannura mathiri ....
aththa thethia pottu ippave veliyidungalen....