சனி, 25 ஆகஸ்ட், 2012

பாசிட்டிவ் செய்திகள் இந்த வாரம் 19/8/12 To 25/8/12

           
எங்கள் B+ செய்திகள்! 
    
-விபத்துச் செய்தி இல்லாத நாள் வேண்டும்
    
-கொலை, கொள்ளை, கற்பழிப்பு, கள்ளக் காதல் செய்தி இல்லாத நாள் வேண்டும்
            

-தற்கொலைச் செய்தி இல்லாத நாள் வேண்டும்
              

-நேர்மையாக நடந்த ஒருவர் பற்றிய செய்தியாவது வேண்டும்.  

சென்ற வாரத்து செய்திகளில் இருந்து, இதோ சில B+ செய்திகள்!  
         
ஞாயிறு   


கே கே நகர் ஆற்காடு சாலையில் அனாதையாகக் கிடந்த இரண்டாயிரம் ரூபாய்ப் பணத்தை தனியார்க் கல்லூரி மாணவிகள் கிருத்திகா, ஜூலியன் ஷாலினி இருவரும் (எவ்வளவு பணம் என்று எண்ணிப் பார்க்காமல்) அருகிலிருந்த காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

----------------------------------

அசாம் கலவரத்தில் அம்மாநில மக்கள் ஊர் திரும்பிச் செல்ல வேண்டாம் என்று சொன்ன தமிழக அரசு அம்மக்களுக்கு பாதுகாப்பு தர தமிழ்நாடு காவல் துறையை முடுக்கி விட்டிருந்தது. போலீசார் கனிவாகப் பேசுகிறார்களா என்பதை ஒரு வேற்று மாநிலத்தவர் போல குரலை மாற்றிப் பேசி, சென்னை  டி ஜி பி  ராமானுஜம் சோதனை செய்து,  கனிவாகப் பேசிய சப் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், ஏட்டு ரமணி இருவரையும் பாராட்டி ஆயிரம் ரூபாய் பரிசுப் பணமும் கொடுக்கப்பட்டது.   
-----------------------------------------

திங்கள்

மாட்டுக்குக் கொம்பு சீவும், வர்ணம் பூசுவோர் ஒருநாளைக்கு 2,500 To 3,000 ரூபாய் வரை சம்பாதிக்கின்றனர். என்ஜினீரிங் படித்து விட்டு சம்பாதிப்பதை விட இது அதிகம்தான் என்கிறது தினமலர்.
-----------------------------------           
                  

படிக்க வாய்ப்பில்லாதோருக்கு இரவில் சொல்லிக் கொடுக்கப்படும் பள்ளியில் படிக்கச் சென்ற சிறுமி தானே மேலும் சில சிறுமிகளை சேர்த்து சாதனை செய்துள்ளார். இடம் புளியந்தோப்பு சாஸ்திரி நகர். சிறுமி பெயர் லக்ஷ்மி.      
---------------------------------------

செவ்வாய்  

வெயிலில் ஒரு மூதாட்டி இறந்ததைக் கண்ணால் கண்ட, விருதுநகருக்கு அருகே உள்ள சேத்தூரைச் சேர்ந்த வெற்றிலை வியாபாரி தலைமலை கடந்த இருபது ஆண்டுகளாக காந்தி ஜெயந்தி, சுதந்திர தினம் ஆகிய நாட்களில் மரக்கன்றுகளை வைத்து, வளர்த்து, பராமரித்து வருகிறார். இவரது சேவையை பாராட்டி குஜராத், தமிழக அரசுகள் விருது வழங்கியுள்ளன. வருமானத்தில் பாதியை, மரக்கன்றுகள் வளர்ப்பதற்கு செலவிடுகிறார். தேவதானம் நச்சாடை தவிர்தருளிய சுவாமி கோயில் பூஜைக்கு தேவையான பூக்களுக்காக, ஒரு தோட்டத்தை அமைத்துள்ளார்; அருகில் 120 மரக்கன்றுகளையும் பராமரித்து வருகிறார். மரக்கன்றுகளையும் இலவசமாக தருகிறார். 93632 62808 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.   
-----------------------------------------

சென்னை எழிலகத்தில் கடந்த ஜனவரி மாதம் 16 - ம் தேதி அதிகாலை பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டதை யாரும் மறந்திருக்க முடியாது. அப்போது சென்னை மத்திய கோட்ட தீயணைப்பு அதிகாரி பிரியா ரவிச்சந்திரன் உள்ளே நுழைந்து கோப்புகளை பாதுகாக்க முயல, எதிர்பாராதவிதமாக தீயில் சிக்கி உடல் முழுவதும் பலத்த தீக்காயங்களுடன் உடன் இருந்த அதிகாரிகளால் காப்பாற்றப்பட்டார். இந்தியாவின் முதல் பெண் கோட்ட தீயணைப்பு அதிகாரியான இவர், இன்று வரை தீக்காயங்களுக்காக சிகிச்சை எடுத்து வருகிறார். இந்நிலையில் பிரியா ரவிச்சந்திரனின் வீர தீர செயலை பாராட்டி அவருக்கு ஜனாதிபதி விருது கொடுக்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.          
---------------------------------------------

வியாழன் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உதவுவதையே தன்னுடைய லட்சியமாகக் கொண்டிருக்கிறார் ராமு. பொதுவாக பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டால், நட்பு, உறவு என எல்லாவற்றிலிருந்தும் ஒதுங்கிக் கொண்டு தன்னைச் சுருக்கிக் கொண்டுவிடுபவர்களே அதிகம். இவரோ, வங்கியிலிருந்து ஓய்வு பெற்றபிறகுதான் சமூகப் பணிகளில் இளைஞரின் ஆர்வத்தோடும் வேகத்தோடும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார். "தாய் இல்லம்' சமூக சேவை தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் மூலம் தாய் உள்ளத்தோடு சமூகப் பணிகளை ஆற்றிவரும் ராமு திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள, தச்சம்பட்டு என்ற சிறிய கிராமத்தில் விவசாயக்குடும்பத்தில் பிறந்து, சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரியில் மு.வ., மற்றும் அன்பழகனாரிடமும் படித்து 1957-ல் இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் தற்காலிக ஊழியராகச் சேர்ந்து, படிப்படியாக பதவி உயர்வு பெற்று, உதவி தலைமை மேலாளராகி 1994-ல் ஓய்வு பெற்றவர். 
               
இரண்டு கண்களும் தெரியாத, டாக்டர் வில்லியம் டேவிட் என்பவர் வண்டலூரில் நடத்திவந்த சமூக சேவை நிலையத்தில் 30 ஆண்டுகளாக ஈடுபட்டு பல சேவைகளை அவருடன் சேர்ந்து செய்து, அவரின் மறைவுக்குப் பின், அந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பேற்று, சுமார் ஓர் ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள அந்த சமூக சேவை மையத்தில் அனாதை குழந்தைகள் பராமரிப்பு, 200 குழந்தைகள் படிக்கும் பள்ளி பராமரிப்பு, மெழுகுவர்த்தி, ஊதுபத்தி செய்தல், இலவச கணினிப் பயிற்சி போன்ற சேவைகளைச் செய்து, தன் தொடர்ச்சியாக "தாய் இல்லம்' சமூக சேவை அறக்கட்டளை என்னும் தொண்டு நிறுவனத்தை சென்னை, அண்ணாநகரில் கடந்த 2005-ஆம் ஆண்டு பதிவுசெய்து, அதன் சேவை மையத்தை திருவண்ணாமலை மாவட்டம் தச்சம்பட்டு கிராமத்தில் நடத்தி வருகிறார்.   
----------------------------------------------
வெள்ளி    
 

மூத்தோர் சர்வதேச தடகள போட்டி இலங்கை தலைநகர் கொழும்பில் சமீபத்தில் நடந்தது. இதில் இந்தியா சார்பில் கலந்துக் கொண்ட திருத்தணியை சேர்ந்த 86 வயதான பி.நடேச ரெட்டி 4 தங்கப்பதக்கத்தை வென்று அசத்தி விட்டார்.. 85 முதல் 89 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் பங்கேற்ற அவர் சங்கிலி குண்டு எறிதலில் 8.98 மீட்டர் தூரம் வீசி முதலிடமும், வட்டு எறிதலில் 19.50 மீட்டர் தூரம் எறிந்து முதலிடமும் பெற்றார். இதே போல் குண்டு எறிதல் (7.10 மீட்டர்), ஈட்டி எறிதலிலும் (15.90 மீட்டர்) அவரை யாராலும் முந்த முடியவில்லை. சாதனைகளுக்கு வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபித்து வரும் நடேச ரெட்டி கடந்த 15 ஆண்டுகளாக பல்வேறு போட்டிகளில் பங்கேற்று மொத்தம் 65 பதக்கங்களை குவித்துள்ளார். தமிழக அரசின் சிறந்த விளையாட்டு வீரர் விருதினையும் பெற்றிருக்கிறார்.   
                 
உடலில் தெம்பு இருக்கும் வரை தொடர்ந்து விளையாடுவேன் என்று நம்பிக்கையுடன் கூறும் நடேச ரெட்டி தற்போது திருத்தணியில் உள்ள தளபதி கே.வினாயகம் மெட்ரிக் பள்ளியில் கைப்பந்து பயிற்சியாளராக உள்ளார்.  (முகப் புத்தகத்திலிருந்து)    
----------------------------------------------------

சனி

திருப்பூர் ஊத்துக்குளி ரோட் ரயில்வே சுரங்கப் பாலம் கட்டுவதற்காக அங்கிருந்த 75 வயது வேம்பு-அரச மரம் வேரோடு பெயர்க்கப் பட்டு கண்டெயினரில் எடுத்துச் செல்லப் பட்டு நிப்-டீ கல்லூரி வளாகத்தில் நடப்பட்டது. (தினமலர்)  
----------------------------------------------------

காற்றாலைகள் வேகத்தால் மின்வெட்டு கொஞ்சம் குறைக்கப் பட்டுள்ளதாம்.(தினமலர்)
----------------------------------------------------

இளைய கலைஞரின் இனிய முயற்சி...
          
இரண்டு நாட்கள் முன்பு நடந்த ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் ஓயரிவில் பாடிய கவுதமின் பாடல் பகிர்வு. வாசகர்களுக்கு மூன்று கேள்விகளில்,  தான் சமீபத்தில் கண்கலங்கிய அனுபவமாக ஹாரி பாட்டர் குறிப்பிட்டிருக்கும் பாடலும் இதுவே! கேட்டு அழவும்!


                     

20 கருத்துகள்:

 1. அருமையான செய்திகள். அதுவும் இந்த கௌதம் பையன் எல்லோரையுமழவைத்துவிட்டான்,. அதையும் கேட்டுப் பதிந்ததற்கு மிகவும் நன்றி.
  பெண்கள் இருவர் பணத்தக் கண்டெடுத்துக் காவல் நிலையத்தில் சேர்த்தது,நம் நாட்டு இளைஞர்கள் பொறுப்போடுதான் இருக்கிறார்கள் என்னும் பாசிடிவ் செய்தி கொடுத்தத்,

  பதிலளிநீக்கு
 2. திருத்தணிப் பெரியவர் ...வாவ்.இப்படி அல்லவோ இருக்கணும்னு வாழ்ந்து காட்டுகிறார். பார்வையிலேயே வீரம் தெரிகிறது.

  பதிலளிநீக்கு
 3. எல்லா செய்திகளும் சூப்பர் வகையைச் சேந்தவை வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 4. நாளை நடக்கும் பதிவர் சந்திப்பும் பாசிடிவ் செய்தி தாங்க. மறக்காம வந்துடுங்க ஸ்ரீராம்

  பதிலளிநீக்கு
 5. எல்லாச் செய்திகளுமே அருமையாக இருந்தாலும் இந்தச் செய்தி ரொம்பவே கவர்ந்தது. அது,

  செவ்வாய்
  வெயிலில் ஒரு மூதாட்டி இறந்ததைக் கண்ணால் கண்ட, விருதுநகருக்கு அருகே உள்ள சேத்தூரைச் சேர்ந்த வெற்றிலை வியாபாரி தலைமலை கடந்த இருபது ஆண்டுகளாக காந்தி ஜெயந்தி, சுதந்திர தினம் ஆகிய நாட்களில் மரக்கன்றுகளை வைத்து, வளர்த்து, பராமரித்து வருகிறார். இவரது சேவையை பாராட்டி குஜராத், தமிழக அரசுகள் விருது வழங்கியுள்ளன. வருமானத்தில் பாதியை, மரக்கன்றுகள் வளர்ப்பதற்கு செலவிடுகிறார். தேவதானம் நச்சாடை தவிர்தருளிய சுவாமி கோயில் பூஜைக்கு தேவையான பூக்களுக்காக, ஒரு தோட்டத்தை அமைத்துள்ளார்; அருகில் 120 மரக்கன்றுகளையும் பராமரித்து வருகிறார். மரக்கன்றுகளையும் இலவசமாக தருகிறார். 93632 62808 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
  -----------------------------------

  தன்னலம் கருதாத சேவை வாழ்க, வளர்க.

  பதிலளிநீக்கு
 6. அது என்ன B+ மட்டும்?? A+ O+ மட்டும் கிடையாதா? ஹிஹிஹி, Be Positive என்பதைச் சுருக்கமாச் சொல்றீங்கனு தெரியும். ஆனாலும் இது நமக்கு டவுட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு! :))))

  fyi me O- :)))))))))

  பதிலளிநீக்கு
 7. அனைத்தும் நல்ல செய்திகள்..

  பதிலளிநீக்கு
 8. 85 வயதுப் பெரியவர் பதக்கங்களோடு -- ஆச்சர்யம்தான்.

  //காற்றாலைகள் வேகத்தால் மின்வெட்டு கொஞ்சம் குறைக்கப் பட்டுள்ளதாம்//

  ஹும்.. இதையும் பாஸிடிவ்வா எடுத்துக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டோம் பாருங்க!! ஊரில் யாருக்கு ஃபோன் பண்ணாலும் இந்தப் புலம்பல்தான், பாவம்.

  பதிலளிநீக்கு
 9. அனைத்துமே மனதுக்கு இதம் தரும் செய்திகள்!

  பதிலளிநீக்கு
 10. எல்லாமே மனசுக்கு உற்சாகமளிக்குது. இப்படியெல்லாம் ஒண்ணு ரெண்டு சம்பவங்கள் நடக்கறதாலதான் நாட்டுல மழை பெய்யுது.

  பதிலளிநீக்கு
 11. அனைத்துமே நல்ல செய்திகள்....

  பாராட்டுகள்....

  பதிலளிநீக்கு
 12. சிறப்பான பகிர்வு! நன்றி!

  இன்று என் தளத்தில்
  சித்துண்ணி கதை!
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_25.html
  பிறந்த குழந்தை பேசியது! பரவிய வதந்தி!
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_1427.html

  பதிலளிநீக்கு
 13. வாரம் முழுதுமே ஓரளவு நல்ல செய்திகளும் சந்தோஷமுமே...நல்லது தொடரட்டும் !

  பதிலளிநீக்கு
 14. எல்லாமே நன்று.
  அந்த பாடல் என் கண்களையும் கலங்க வைத்து விட்டது.

  பதிலளிநீக்கு
 15. கௌதம் பாடியது நல்லா இருந்தாது. அத்தன பேரும் அழுதது கொஞ்சம் செயற்கையா இருந்தது. எதுக்கு இந்த கூத்துகள் எல்லாம்னு கேட்க தோணியது...

  அடுத்து கரென்ட் ..அதிகப்படியானா மின்சார உபயோகத்தை எப்ப கை விடறோமோ அப்ப பிரச்சனை குறையும் . நம்ம மேலையும் தப்பு இருக்கு.

  பதிலளிநீக்கு
 16. கௌதம் பாட்டு பற்றி, நான் நினைத்ததை, அப்படியே எழுதியிருக்கின்றார், எல் கே.!!

  பதிலளிநீக்கு
 17. //kg gouthaman said...
  கௌதம் பாட்டு பற்றி, நான் நினைத்ததை, அப்படியே எழுதியிருக்கின்றார், எல் கே.!!//

  ஒரு பெரீய்ய்ய ரிப்பீட்டு!! :-))))

  அந்த நிகழ்ச்சியில் ஒரே ஒரு நல்லது என்னன்னா, சங்கீத உலக ஜாம்பவான்கள் எல்லாரையும் ஒரே இடத்தில் பார்க்க முடிந்தது. :-))

  பதிலளிநீக்கு
 18. அருமையான செய்திகள் ஸ்ரீராம்....

  வீதியில் கண்ட பணத்தை எவ்வளவுன்னு கூட எண்ணி பார்க்காம கொண்டு போய் காவல்நிலையத்தில் ஒப்படைச்சதை படிக்கும்போது அட நம்ம குழந்தைகள் நல்லதை மட்டுமே செய்றாங்களேன்னு சந்தோஷமா இருக்குப்பா..

  போலீஸ்காரங்க ஒழுங்கா சேவை செய்றாங்களான்னு அடிக்கடி இப்படி செக் பண்றது நல்லவிஷயம்னா.. அப்படி செக் செய்தாலும் நல்லபடி அவங்க நம்பிக்கை பொய்க்காம நடந்துக்கிட்டாங்களே அதுவே ரொம்ப நல்லவிஷயம்...

  அன்பு நன்றிகள் ஸ்ரீராம் பகிர்வுக்கு.

  பதிலளிநீக்கு
 19. //கே கே நகர் ஆற்காடு சாலையில் அனாதையாகக் கிடந்த இரண்டாயிரம் ரூபாய்ப் பணத்தை தனியார்க் கல்லூரி மாணவிகள் கிருத்திகா, ஜூலியன் ஷாலினி இருவரும் (எவ்வளவு பணம் என்று எண்ணிப் பார்க்காமல்) அருகிலிருந்த காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.//

  Enga orru !!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!