வியாழன், 23 ஆகஸ்ட், 2012

வாசகர்களுக்கு மூன்று கேள்விகள் 08


பத்திரிகைகளுக்கு நாம் கேள்விகள் அனுப்பினால், அது பிரசுரமானால், அந்தக் கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்வார்கள். 

இங்கு ஒரு மாறுதல்.

எங்கள் கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லுங்களேன்...1) நீங்கள் அழுது விட்டேன் என்று சொல்லக் கூடிய, அல்லது அழுகையே வந்தது என்று சொல்ல நேர்ந்த ஒரு சந்தர்ப்பம் ஒன்றைச் சொல்லுங்களேன்....
[உள் பெட்டியில் குழந்தையின் டைரிக் குறிப்பைப் பார்த்து அழுது விட்டேன் என்று சொல்லக் கூடாது!!  :)))...]

2) பிறரிடம் கேட்கக் கூடிய கேள்விகள் என்ன? கேட்கக் கூடாத கேள்விகள் என்ன?


3) ஐ.க்யூ அதிகம் இருப்பவர்களுக்கு பொதுவான குணங்கள் உண்டா?
(இது சுஜாதாவிடம் கேட்கப் பட்ட கேள்வி. அடுத்த பதிவு வெளியிடப் பட்டவுடன் சுஜாதா இந்தக் கேள்விக்கு அளித்த பதிலைத் தருகிறேன் - அதுவரை யாரும் இந்தக் கேள்விக்குத் தங்கள் பதிலுடன் இதையும் சொல்லாவிட்டால்! )

17 கருத்துகள்:

 1. Question 1:

  மனதை நெகிழ்த்தும் காட்சி உள்ள சினிமா பார்த்தால் கண்ணிலிருந்து தண்ணியா ஓடிடும்.

  மகிழ்ச்சியில் அழ வைத்த இரு படங்கள் : தமிழில் : பசங்க. ஹிந்தியில் தாரே ஜாமீன் பர். இரு படத்தையும் பல முறை பார்த்திருக்கேன் ஒவ்வொரு முறையும் அழுகாச்சி தான்

  பதிலளிநீக்கு
 2. Question 2:

  பிறரிடம் கேட்கக் கூடிய கேள்விகள் என்ன? கேட்கக் கூடாத கேள்விகள் என்ன?

  சம்பளம், குடும்ப வாழ்க்கை போன்ற ரொம்ப பெர்சனல் கேள்வி நெருங்கிய நண்பனே ஆயினும் கேட்க கூடாது.

  பேசுபவருக்கு ஆர்வம் உள்ள துறை பற்றி நிறைய கேட்கலாம். அதில் அவர்கள் நிறைய பேசுவாங்க. நாம நிறைய தெரிஞ்சுக்கலாம்

  பதிலளிநீக்கு
 3. Question 3:

  ஐ.க்யூ அதிகம் இருப்பவர்களுக்கு பொதுவான குணங்கள் உண்டா?

  அறிவு ஜீவிகள் பொதுவா விஷயங்களை ஜெனரலைஸ் பண்ணி பேசுவாங்க. (இது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று) வேறு ஏதும் தெரியலை. தலைவர் சொன்ன வித்தியாச பதில் தெரிஞ்சிக்க ஆவல்

  பதிலளிநீக்கு
 4. 1. சமீபத்தில் என்றால், ரமலான் மாத பிரார்த்தனைகளின்போதுதான். அதன்பிறகு சந்தர்ப்பம் வாய்க்கவில்லை - ஐ மீன் வீட்டில் இன்னும் சண்டை வரவில்லை.

  2. கேட்கக்கூடாதது - புதிதாய்ச் சந்திக்கும் தம்பதியரிடம், குழந்தைகள் இருக்கிறதா என்று!! ரொம்பவே தர்மசங்கடப்படுத்தும் - கேட்டவங்களையும்.

  அமீரகத்திற்கு வேலை தேடி வந்திருப்பவரிடம், வேலை கிடைச்சிடுச்சா என்றும்...

  கேட்கக்கூடியது - இதுக்கு எதுவும் ப்ரிஸ்க்ரைப் பண்ண முடியாது. ‘எப்படி (என்ன வாகனத்தில்) வந்தீங்க’ன்னு கேட்டாகூட தப்பா எடுத்துக்கிற ஆட்கள் உண்டு. ஆளைப் பொறுத்துத்தான்...

  ஒரு ஃப்ரெண்ட்கிட்ட ‘பசங்க எப்படி இருக்காங்க’ன்னு கேட்கவே மாட்டேன். பின்னே? உடனே, இதைச் சாப்பிட மாட்டேங்கிறான், அதைச் சாப்பிட மாட்டேங்கிறான், (அதுவும் ஓரக்கண்ணால chubby-ஆ இருக்கிற என் சின்னவனையும் பாத்துகிட்டே..) சும்மா வாமிட் பண்றான், நைட் தூங்க மாட்டேங்கிறான்... ந்னு நிறுத்தாம ஒரே புகார் மயம். ஏதோ நம்ம புள்ளை மட்டும் டைம்-டேபிள் பிரகாரம் எல்லாம் சரியா செய்றமாதிரி...

  (இப்ப நீங்க “இனி வாசகர் கேள்விகள் கேக்கலாமா, வேண்டாமான்னு” யோசிக்க ஆரம்பிச்சிருப்பீங்க....) :-))))

  பதிலளிநீக்கு
 5. 3. ஐக்யூ அதிகமா உள்ளவங்க - யு மீன், புத்திசாலிகள்?

  சுத்துவட்டாரத்துல அப்படி யாரும் இல்லை.. தெரிஞ்சா பாத்து கவனிச்சுட்டு சொல்றேன்.

  பதிலளிநீக்கு
 6. 1. பெரும்பாலும் தப்பாய்ப் புரிந்து கொள்ளப் படுகிறேன். அதை நினைத்து சில சமயம் அழுகை வந்தது உண்டு; இப்போல்லாம் அழாமல் இருக்கப் பழகிக் கொண்டு வருகிறேன். :)))))))


  2.புதுசாய்ப் பார்க்கிறவங்க கிட்டேத் தான் யோசிச்சுக் கேள்விகள் கேட்க வேண்டி இருக்கும். கொஞ்சம் பழகினவங்கன்னா அவங்க குணம் புரிஞ்சிருக்கும். அதுக்குத் தகுந்தாப்போல் கேட்க வேண்டியது தான். :)))))


  3. ஐ.க்யூ??? ஹிஹிஹி ஐ!!!!!!!!!!!!!!!!! க்யூவிலே இருக்காங்களா? ஐ. க்யூன்னா என்னங்க அர்த்தம். ஐ. க்யூவிலே இருக்கிறதா? நான் வரிசை??? :P :P:P:P

  புத்திசாலி ஆயிட்டோமுல்ல!

  பதிலளிநீக்கு
 7. 1)சமீபத்தில் காலில் அடிபட்டு முடங்கியிருந்த போது,முகமறியாத பதிவுலக நட்புகளின் தொலைபேசி விசாரிப்புகள்,கண்ணீர் வரவழைத்தன.

  2)உங்க சம்பளம் என்ன?-கேட்கக்கூடாது
  சௌக்கியமா? கேட்கலாம்.

  3) எனக்கு ஐ.க்யூ.அதிகமில்லை.எனவே பதில் சொல்லத்தெரியவில்லை!

  பதிலளிநீக்கு
 8. எங்கள் ப்ளாக்24 ஆகஸ்ட், 2012 அன்று AM 9:12

  // ஹுஸைனம்மா said...
  3. ஐக்யூ அதிகமா உள்ளவங்க - யு மீன், புத்திசாலிகள்?

  சுத்துவட்டாரத்துல அப்படி யாரும் இல்லை.. தெரிஞ்சா பாத்து கவனிச்சுட்டு சொல்றேன்.//

  மேடம், நீங்க கண்ணாடி பார்த்தாலே போதுமே! ஐ க்யூ அதிகம் உள்ள ஒருவரைப் பார்க்கலாமே!

  பதிலளிநீக்கு
 9. //நீங்க கண்ணாடி பார்த்தாலே போதுமே//

  என்னா ஐஸுப்பா!! :-)))

  அப்படின்னா, அறிவுஜீவிகள் ’அடக்கமா’ இருப்பாங்க(அதாவது இருக்கிற மாதிரி காட்டிப்பாங்க)ங்கிறதுதான் பொதுக்குணம், சரியா? :-D :-D

  பதிலளிநீக்கு
 10. 1. சமீபத்தில் Dave pelzer ன் 'A child called it' ஐப் படித்தபோது.

  2. கேட்கக் கூடியது- அவர்களுடைய சாதனைகளை, கூடாதது- அவர்களுடைய சொந்த விஷயங்களைப் பற்றி

  3.

  1. சோடாபுட்டி கண்ணாடி அணிந்திருப்பார்கள்.

  2. எதையும் சாதாரண மக்களுக்கு தேவையில்லாத கோணத்தில் யோசிப்பார்கள்.

  2. கேட்கப்படும் கேள்விகளுக்கெல்லாம் கிறுக்குத்தனமான பதிலைக் கொடுப்பார்கள்.

  சுஜாதா பாணியில் 'பாயைப் பிராண்டிக் கொண்டிருப்பார்கள்' என்றும் சொல்லலாம். (மன்னிக்கவும் இது தான் எனக்குத் தோன்றியது)

  பதிலளிநீக்கு
 11. 1. ஒரு நாள் கண்ணாடிலே பார்க்கிறேன் தலைமுடியெல்லாம் சுத்தமா கொட்டிப் போய்..
  2. அனேகமாக என்ன வேண்டுமானாலும் கேட்கலாம். கேட்கக் கூடாதது: அறிவு இருக்கா?
  3. புத்திசாலித்தனம், பொறாமை

  பதிலளிநீக்கு
 12. ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு பதிவே எழுதணும்... அதனால் எஸ்கேப்...

  (எங்க ஊரில் நேற்று முதல் 13 மணி நேரம் கரண்ட் கட்... இதுவும் ஒரு காரணம்)

  பதிலளிநீக்கு
 13. நிறைய முறை அழுது இருக்கிறேன்! எல்லாவற்றையும் எழுத பதிவே போட வேண்டும்.
  சம்பளம் கேட்க கூடாது கடன் கேட்க கூடாது. நலம் விசாரிக்கலாம்
  மூணாவதுக்கு பதில் தெரிய வில்லை!

  இன்று என் தளத்தில்
  அஷ்டமி நாயகன் பைரவர்!
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_24.html

  பதிலளிநீக்கு
 14. அழாமல் ஒரு வழ்க்கையா. எங்களுக்கு எல்லாம் நினைத்தாலே கண்ணில நீர் பொங்கிடும். உ-ம் கண்ணிலே நீர் எதற்குப் பாடலைக் கேட்டால் போதும். பூஹூஊஊஉ.
  2,பிறரிடம் ஒண்ணுமே கேடக் கூடாது என்பது சமீபத்தில் கற்ற பாடம்.அவங்களாச் சொன்னாக் கேட்டுக்கலாம்.
  3ஐ கியூ அதிகம் இருப்பவர்கள் எக்செந்த்ரிக் ஆக இருப்பார்களோ.

  பதிலளிநீக்கு
 15. சூப்பர் சிங்கர் தூத்துக்குடி தம்பி பாடும் போது (உள்ளத்தில் நல்ல உள்ளம்) கொஞ்சம் கலங்கியது.. கண்ணுங்க..

  தனிப்பட்ட விடயங்கள் எதுவாயிருந்தாலும் அது கேட்கக பட கூடாது
  .. சொன்னால் சொல்லட்டும்

  இருக்க வாய்ப்பில்லை.. குணம் i q பார்த்து வராது என்று நினைக்கிறேன் (ஐன்ஸ்டைன்க்கும், பில் கேட்ஸ்க்கும் பொது குணம் இருக்குமா போல உள்ளது)
  எனக்கு தெரியலைங்க.. விட்ட்ருங்க.. அவ்.....

  பதிலளிநீக்கு
 16. நிறைய சந்தர்பங்கள் இருக்கு. நான் அழ கேக்கணுமா! :)
  என் அப்பா இறப்பதற்கு நான்கு நாட்களுக்கு முன் தொலைபேசியில் என்னிடம் 'வலி தாங்க முடியலைம்மா, இது எப்பேற்பட்ட வலின்னு என்னால சொல்ல கூட முடியலைம்மா ' அப்படின்னு ரொம்ப பலவீனமான குரல்ல வேதனையோட சொன்னது இன்னிக்கும் நெனச்ச உடனே அழுதுடுவேன். அவரோட வலியோட வேதனையை என்னால உணர முடியாம போயிருக்கலாம். ஆனா அதை அவர் சொன்ன போது அவர் குரலில் வெளிப்பட்ட வேதனையே என்னை இன்னிக்கும் துடிக்க வைச்சிடும்.

  யார் யார் கிட்ட என்ன கேக்கணும்னு நமக்கு தோன்றதோ அதை எல்லாம் தாராளமா கேக்கலாம்.
  உங்க சம்பளம் எவ்வளவு?

  தன்னம்பிக்கை. வெகு சிலரிடம் தன்னடக்கமும் இருக்கும்.

  பதிலளிநீக்கு
 17. எங்கள் ப்ளாக்25 ஆகஸ்ட், 2012 அன்று PM 12:26

  வருகை தந்து பதிலளித்த அனைவருக்கும் நன்றி.
  மோகன் குமார், தாரே ஜமீன் பர் படத்துக்கு எனக்கும்....ஹி..ஹி..

  நன்றி ஹுஸைனம்மா... என்ன கேட்டாலும் தப்பா எடுத்துக்கரவங்க இருக்காங்க என்பதில் இங்கும் அனுபவம் உண்டு!

  நன்றி கீதா சாம்பசிவம்.. முதல் பதில் நெகிழ்ச்சி.. இரண்டாவது பதில் மகிழ்ச்சி... மூன்றாவது பதில் படித்து நாங்கள் ஐ சி யு க்கு போய்ட்டோம்! :))

  நன்றி சென்னைப்பித்தன் சார்... உங்கள் கால் முற்றிலும் குணமாகி விட்டதா?

  ஹேமா (HVL), மூன்றாவது கேள்விக்கு பதில்கள் அருமை.

  அப்பாதுரை... :)))

  தனபாலன்... பதிவு எப்போ போடுகிறீர்கள் என்று சொல்லவும்...:)))

  s. suresh.... நன்றி.

  நன்றி வல்லிம்மா...இளகிய மனம் உங்களுக்கு.

  நன்றி ஹாரி பாட்டர்... முதல் பதில் 'சேம் பின்ச்'!

  மீனாக்ஷி.. மூன்று பதில்களுமே சிறப்பு. மூன்றாவது சுஜாதா பதிலை விட சிறப்பு!

  அந்த மூன்றாவது கேள்விக்கு சுஜாதாவின் பதில்..:
  "ஐ க்யு அதிகமாய் இருப்பதுதான்"  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!