- விபத்துச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.
- கொலை, கொள்ளை, கற்பழிப்புச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.
- நேர்மையாக நடந்த ஒருவர் பற்றிய செய்தியாவது வேண்டும்.
- சென்ற வாரத்துச் செய்திகளிலிருந்து, இதோ சில B+ செய்திகள்....
=======================================================================
1) குன்னூர் மற்றும் உதகை பகுதிகளில் 5 ரூபாய்க்கு மருத்துவம் பார்க்கிறார்
டாக்டர் பஜாஜ் கோவிந்த். இவர் பாகிஸ்தான், கராச்சியில் ஒரு வசதியான
குடும்பத்தில் 1942 ஆம் வருடம் பிறந்தவர். இவரின் தாயார் இந்தியா
பற்றியும், கீதை பற்றியும் சொல்லி வந்ததில் மும்பை வந்து பள்ளிக்கல்வி,
மருத்துவக் கல்வி முடித்து, பெங்களுரு, மும்பை நகரங்களில் மருத்துவப்
பணியாற்றிவிட்டு, கடந்த 5 வருடங்களாக குன்னூர் வாசம். 'மருத்துவத் தொழில்
வியாபாரமல்ல, உயிரைப் பாதுகாப்பதற்கே' என்ற தாயின் வாக்கிற்கேற்ப,
இலவசமாகப் பார்க்கும் எந்த ஒரு விஷயத்துக்கும் மதிப்பு இருக்காது என்பதால் 5
ரூபாய்க்கு மருத்துவம் பார்க்கிறார். அந்த 5 ரூபாயையும் நேரடியாக
வாங்காமல், ஊராட்சி அலுவலகத்தில் செலுத்தச் செய்து, அந்த வருமானத்தையும்
மருந்து மாத்திரை வாங்கி இலவச விநியோகம் செய்ய உபயோகப் படுத்திக்
கொள்கிறார். (தினமணி)
2)
கன்னியாகுமரி மாவட்டம்,
மார்த்தாண்டம் நகரத்திலிருந்து அருமனை செல்லும் சாலையில், ஐந்தாவது கிலோ
மீட்டரில் இருக்கும் மேல்புறம் கிராமத்தில்தான் இருக்கிறது, ஷிஜியின் வீடு.
விவசாயம் செய்ய நிலம் தேவையில்லை என்று நிரூபித்து வீட்டு மொட்டை
மாடியிலேயே பல்வகைச் செடிகளை வளர்த்து, சாதனை செய்து வருகிறார். பக்கத்து வீட்டில்
வளர்க்கும் மாடுகளிடமிருந்து தொழுவுரம் பெற்று வாரம் ஒரு முறை போடுகிறார்.
"எங்க வீட்டுக்குக் காய்கறிகளை விலை கொடுத்து வாங்கி வருஷக் கணக்காகுது.
தினமும் சாயங்காலம் மாடியில ஒரு சுத்து வந்து செடிகளைப் பாத்தா...
அன்னிக்கு இருந்த டென்ஷன் எல்லாம் காணாம போயிடும். இயற்கை முறையில
விளையறதால உடம்புக்கும் கெடுதல் இல்லை. மொத்தத்துல எங்க உடம்பையும்
மனசையும் இந்த மாடித்தோட்டம்தான் ஆரோக்கியமா வெச்சுக்கிட்டிருக்கு''
என்று
கூறும் ஷிஜியின் செல்போன் எண் : 77087-81763.
முகப்புத்தகத்தில் சத்தியானந்தன் சுப்பிரமணியன் பானுமதி பதிவு செய்ததிலிருந்து.
4)
பெங்களுரு நகரின் பெல்லாந்துர் பகுதியில் பார்பர் ஷாப் நடத்தி வரும் 30
வயது ரஷீத் ஆலம் மகனுக்கு ரத்தப் புற்று நோய் என்றும், அதைக் குணமாக்க 20
லட்ச ரூபாய்க்கு மேல் செலவாகும் என்றும் தெரிந்து கொண்ட, பன்னாட்டு
நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் ரஷீத் கான் மற்றும் நண்பர்கள் அவரின்
சோகத்துக்கான காரணம் கேட்டு அறிந்து, விவரம் பெற்று, முகப்புத்தகத்தில்
'சேவ் சிசான்' என்று பக்கம் தொடங்கி, விவரம் கொடுத்து, முதல் நாளே 40,000
ரூபாய்க்கு மேல் கிடைக்கப் பெற்றதில் உற்சாகமடைந்து, இப்போது முழுப்பணம்
கலெக்ட் செய்ததும் அவரிடம் கொடுக்க ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
5) ஏழை விவசாயக்
குடும்பத்தில் பிறந்து, மில்லில் வேலை பார்த்து, இடைப்பட்ட நேரத்தில்
தள்ளுவண்டியில் பழங்கள் விற்க ஆரம்பித்த திரு சின்னசாமி, அந்தப் பழங்களை
சொந்தமாகப் பயிரிட்டு விற்க முடிவு செய்து,
இரண்டு ஏக்கர் அளவில் குட்டை வெட்டி, மழை நீரைத் தேக்கி, 70 ஏக்கர் நிலத்தில் 4 கிணறுகளை வெட்டி,குட்டையில் தேங்கிய நீரை, பி.வி.சி.,
பைப் மூலம் கிணற்றுக்குள் செலுத்தி, அதன் மூலம், 20 ஆழ்துளை கிணறுகள்
அமைத்து, நீர் ஆதாரம் இல்லாத இடத்தில், ஆண்டு முழுவதும் விவசாயம் பார்க்கிறார். அவரிடம் உள்ள, 70 பசுக்கள், 150 ஆடுகளிலிருந்து சாணம், புழுக்கை, சிறுநீரையும்;
கோழி பண்ணையிலிருந்து பெறும் கோழிக் கழிவுகளையும்; கல் உப்பு, காய்ந்த
சருகு, சோகையை மக்கச் செய்து, இயற்கை உரமாக பயன்படுத்துகிறார். வேப்ப
மரங்களின் விதையை அரைத்து, பூச்சிகள் வராமல் தெளிக்கிறார். ஊடு பயிராக
பீட்ரூட், கத்தரிச் செடி, மிளகாய் செடி, வெண்டை என, பயிரிடுகிறார்.
வீட்டின் முன்னே கொடியில் பாகற்காய், புடலங்காய், பீர்க்கங்காயும். கீரை
வகைகளையும் பயிரிட்டு, தினமும் லாபம் ஈட்டுகிறார். (தினமலர்)
6) "கூகுள்'
நிறுவன வேலையை ராஜினாமா செய்து, ஏரிகளை சீரமைக்கும், 25 வயது, அருண்
கிருஷ்ணமூர்த்தி கூறுகிறார் : "சிறு வயதிலேயே ஏரி, பறவைகள் பிடிக்கும். சென்னை
கீழ்க்கட்டளை ஏரியில் பறவை, மீன், ஆமை இருந்தன. பின் குப்பை கிடங்காக
மாறியதால், ஏரியை சீரமைக்கும் எண்ணம் ஏற்பட்டது. நன்கு படித்து,
"கூகுள்' கணினி நிறுவனத்தில் வேலை செய்தேன். வேலை பார்க்கும் போதே
ஆந்திராவின், குருநாதன் செருவு ஏரி, 2009ல், சென்னையின், லட்சுமி புஷ்கரம்
ஏரிகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, முழுவதும் தூர் வாரி, சுற்றிலும்
வேலியிட்டு, நண்பர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உதவியோடு
சீரமைத்தேன். ஆர்வத்தால், "கூகுள்' நிறுவன வேலையை ராஜினாமா செய்து, முழு
நேரமும் ஏரியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டேன்.
சுற்றுச் சூழல் பற்றிய நிகழ்ச்சிகளை நடத்தி, ஆர்வமுள்ள பள்ளி மாணவர்களை,
என்னுடன் இணைத்தேன். 2011ல், இ.எப்.ஐ., எனும் சுற்றுச் சூழலுக்கான தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை துவங்கி, 900 மாணவர்களோடு நிர்வகிக்கிறேன். தெருக்
கூத்து நடத்தி, மக்களிடம் சுற்றுப்புறச் சூழல் விழிப்புணர்வு
ஏற்படுத்தினோம்.
தமிழகம், ஆந்திரா, டில்லி என, மூன்று இடங்களில்
செயல்படுகிறோம். யாரிடமும் பண உதவி பெறாமல், ஒரு தகவல் தொடர்பு நிறுவனம்
நடத்தி, அதன் வருவாயில், அமைப்பை நடத்துகிறேன். டாக்குமென்ட்ரி படங்கள்
எடுத்து, சர்வதேச போட்டிகளில் விருது வென்றிருக்கிறேன்.
ஏரிகளை
சீரமைத்து, சுற்றுச் சூழலை பாதுகாத்ததற்காக, சர்வதேச இளைஞர் சங்கமும்,
சுவிட்சர்லாந்தின், "ரோலக்ஸ்' நிறுவனமும் விருது அளித்து பெருமைப்படுத்தின.
விருதுக்கான பணத்திற்கு பதில், கீழ்கட்டளை ஏரியை மறுசீரமைக்கும் தொழில்
நுட்ப உதவிகளை வழங்க கேட்டேன். நிறுவனம் அதற்கு சம்மதம் தெரிவித்தது.
விரைவில் பணி துவங்கும்.
மொபைல்: 99402 03871.
7) பெண்களுக்கு
எதிரான பாலியல் வன்முறையில் ஈடுபடுவர்களிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள
'ரோபாட் காலணி' யை உருவாக்கி உள்ளனர் மராட்டிய மாநிலம், 'தானே'யைச் சேர்ந்த
பள்ளிக்கூட மாணவிகள். ''இந்த
காலணியின் அடிப்பகுதியில் 5 வோல்ட் மின்னழுத்தம் இருக்கக்கூடிய மின்சார
சுற்று பொருத்தப்பட்டுள்ளது. சமூக விரோதிகள் யாரினும் நெருங்கி வந்தால்
காலணியை 2 முதல் 3 தடவை தரைப்பகுதியில் வேகமாக உதைத்து அழுத்தம்
கொடுத்தால், மின்சார சுற்று செயல்பட தொடங்கிவிடும். அப்போது, காலணியில்
பொருத்தப்பட்ட வயர்லஸ் அலாரம் ஒலி எழுப்பும்.
மேலும், ப்ளூடூத்
சேவை மூலம் நண்பர்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பும் வசதி மற்றும் எங்கே
இருக்கிறார்கள் என்பது உள்ளிட்ட தகவல்களை உடனடியாக தெரியப்படுத்தவும்
செய்யும். விமானத்தில் உள்ளதைப்போல கருப்புப்பெட்டியும்
பொருத்தப்பட்டிருகிறது.. அது, அங்கே நிகழும் சம்பவத்தை முழுமையாக பதிவு
செய்யும்.
பாதுகாப்புக்காக, மிளகாய்ப்பொடி, தற்காப்பு கலைகள்னு
பிரத்யேக தயார் நிலைக்கு இடையே, எப்போதும் கூடவே இருக்கும் இந்த காலணிகள்,
சிறந்த பாதுகாப்பு ஆயுதம்! '' என்கின்றனர், இதை உருவாக்கிய பள்ளி மாணவிகள்.
இவர்கள், 9 - ம் வகுப்பு மற்றும் 7-
ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது. ( 'அவள்
விகடனி'லிருந்து எடுத்து முகப்புத்தகத்தில். )
ஊட்டியில் மருந்துகள் கொடுக்கும்
பதிலளிநீக்குஅம்மாவும், கன்யாகுமரியில் மாடித்தோட்டம் வைத்துப் பரமரிக்கும் ஷிஜிக்கும் வாழ்த்துகள்.ஸேவ் சிசான்'' வெற்றி பெற்று அந்தக் குழந்தை நலமடைய வேண்டும் சீக்கிரமே குணமடைய வேண்டும்
எல்லாவற்றிலும் இன்னும் மகிழ்ச்சி அளிக்கக் கூடிய திரு.சின்னசாமியின் உழைப்பு.அதுவும் இந்தத் தண்ணிர் இல்லக் காலத்தில் இவ்வளவு அருமையான விஷயத்தை செய்பவர் வணக்கத்துக்குரியர்தான்.
அதைவிட அழகு அருண் கிருஷ்ணமூர்த்தியின் சேவை. வாழவேண்டும் நன்றாக வாழவேண்டும்.
ரோபொட் காலணி ஏற்கனவே படித்ததுதான்.
இது பெண்களுக்கு மிகவும் உபயோகப்படும். இதைத் தயாரித்த தானே மாணவிகள் வாழ்க.
மொட்டை மாடி விவசாயம் புருவத்தை உயர்தத வைத்தது என்றால் அநதக் காலணி பற்றி தகவல்கள் கை தட்ட வைத்தது. இன்றைய நிலையில் பெண்களைப் பாதுகாக்க இதுபோன்ற விஷயங்கள் அவசியம் தேவை தான். பாஸிட்டிவ் செய்திகள் மனதுக்கு இதம்.
பதிலளிநீக்குமொட்டை மாடி தோட்டத்தினைப் பார்த்தவுடனேயே பிடித்து விட்டது. மாணவிகள் அசத்தலான ஒரு கண்டுபிடிப்பினைச் செய்திருக்கிறார்கள் - தேவையானதும் கூட. ஏரி பாதுகாப்பு - சிறப்பான விஷயம்.
பதிலளிநீக்குநல்ல செய்திகள் பகிர்வுக்கு மிக்க நன்றி.
இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!
பதிலளிநீக்குபூஸ்ட் அளித்தன பாசிட்டிவ் செய்திகள்! தன்னம்பிக்கை மனிதர்களை பாராட்டுவோம்! நன்றி!
பதிலளிநீக்குமொட்டை மாடி தோட்டம் கண்ணைக் கவருகிறது. 5 ரூபாய் மருத்துவம் ஆச்சரியம் தான்.
பதிலளிநீக்குஇனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்-எழில்
பதிலளிநீக்குநல்ல செய்திகள். நல்ல பகிர்வு.
பதிலளிநீக்குமாடித் தோட்டம் அசத்தல்.
மொட்டை மாடியில் இவ்ளொ பெரிய தோட்டமா !
பதிலளிநீக்குமொட்டை மாடில இவ்வளவு பெரிய தோட்டமா! Hats off!
பதிலளிநீக்கு