திங்கள், 28 ஜனவரி, 2013

உள் பெட்டியிலிருந்து 012013

                   
** ஒரு பொய் சொல்லி ஒரு நட்பை இழப்பது எளிது. அந்த நட்பை மீண்டும் பெற 1000 உண்மைகள் கூட உதவுவதில்லை.    
===========================================

                                                

** "நானழகா நிலவழகா" காதலி கேட்டாள்.
           
"தெரியாது... ஆனால் உனைப் பார்க்கும்போது நிலவின் நினைவு வருவதில்லை. நிலவைப் பார்க்கும்போது உன் நினைவு வருகிறது"    

============================================
 
** கண்களால் காணும்போதும் புரியவில்லை!
கைகளால் எடுத்தும் தெரியவில்லை!!
யோசித்தாலும் விளங்கவில்லை!!!
இது என்ன என்ன? அன்பா, நட்பா காதலா?
அடப் போங்கப்பா... பரீட்சை வினாத்தாள்!
                                                    
============================================
 
** மனித மனங்கள் வினோதம்தான். அவர்கள் அறிவைப் பற்றி கர்வம் இருக்கும் அளவு அவர்களின் கர்வம் பற்றிய அறிவு இல்லை!   
=============================================

வெற்றியை நோக்கி..

                                                    

                                                    முடிவே தெரியாத
                                                    பாதையில்
                                                    பயணிக்கிறேன்...
                                                    முடிவில் நீ இருப்பாய்
                                                    என்று நம்பி!

                                                        
==============================================

உங்களுடன் இருப்பதில் எல்லோரும் மகிழ்கிறார்கள் என்றால் சமாதானமாகச் சென்று விட்டுக் கொடுப்பதில் நீங்கள் மன்னன் என்று பொருள்!     
===============================================

உங்களை எல்லோரும் நேசிப்பதன் காரணம் புரிந்து கொள்ள முடியாதவர்களால் மட்டுமே உங்களை வெறுக்க முடியும்!    
================================================
 
"சோக்காக்கும்....."                                  
1) மனைவி : "எங்க.. கிச்சன்ல சத்தம் கேக்குது... திருடன் வந்து நான் செஞ்ச பிரியாணியைச் சாப்பிடறான் போல இருக்குங்க..."

கணவன் : "இப்ப நான் யாரக் கூப்பிடணும்? ஆம்புலன்ஸா, போலீசா?"
     
==========================================

                                                                   

2) "மின்வாரியத்துக்குத் தொலைபேசி 'கரண்ட் எப்ப வரும் நைனா' ன்னு கேட்டா 'உன் செல்லுல இன்னுமா சார்ஜ் இருக்கு'ன்னு கேக்கறாம்பா...."    
=======================================

                                                                        

3) ஒரு பெண் தொலைபேசியில் : "சார்... என் குழந்தைகளில் ஒருவனுக்கு நீங்கள் தந்தை என்பதால் நான் உங்களைச் சந்தித்துப் பேச விரும்புகிறேன்..."

இவன் : "ஓ மை காட்! ராணியா?"  


அவள் : "இல்லை"


இவன் : "சோனியா?"


அவள் : "இல்லை"


இவன் : "நித்யா?"


அவள் (குழம்பிப் போய்): "இல்லை... சார்.. நான் உங்கள் பையனின் வகுப்பு ஆசிரியை"
     
================================================

ஹிஹி...
                                                        
                                                                  
தாயுடன் நிற்கும் எட்டு வயதுக் குழந்தையிடம் வலிக்குமளவு மட்டையில் அடிவாங்கிக் கண்கள் கலங்கினாலும், வேறு ஒன்றும் செய்ய முடியாமல் அந்தக் குழந்தையின் கன்னத்தைத் தட்டி, "சுட்டிக் குழந்தை" என்று சொன்ன கோப கனத்தை அனுபவித்திருக்கிறீர்களா?     
================================================

தத்துப்பித்துவம்

கடந்தகாலத் தவறைச் சரிசெய்ய முயல்வதை விட அந்த அனுபவத்தில் எதிர்காலத்தைக் கணிக்க முயல்வது மேல்.   
=================================================

டெண்டுல்கர் சொன்னா சரியாத்தான் இருக்கும்...

                                                          

"நல்ல முடிவுகள் அனுபவங்களிலிருந்துதான் வருகின்றன... ஆனால் அனுபவங்கள் என்னவோ தவறான முடிவுகளிலிருந்துதான் வருகின்றன"     
================================================

உண்மைதான் இல்ல...?


நாம் எப்போது தேவைப்படுகிறோமோ அப்போதுதான் நினைவுகூரப் படுகிறோம்...
    
==================================================

"உட்கார்றா முண்டம்..."


                                                             
                                                       

வாத்தியார் : "பசங்களா... நீங்க நல்லாப் படிச்சு நம்ம நாட்டுக்கு நல்ல பேரு வாங்கித் தரணும்.."

மாணவன் : "ஏன் சார்... இந்தியாங்கற பேரே நல்லாத்தான இருக்கு...?"
    
==================================================

"ஆர்வம் தாங்கலீங்க..."


ஆற்றின் நடுவே ஒரு அறிவிப்புப் பலகை இருப்பதைக் கண்ட அவன், இங்கிருந்தே அதைப் படிக்க முடியாததால், ஆற்றில் குதித்து நீந்தி அதன் அருகே சென்று படித்தான்..


"தயவு செய்து உள்ளே குதிக்காதீர்கள். முதலைகள் ஜாக்கிரதை"
    
==================================================

நல்ல மருத்துவர்


"மனிதனுக்கு நல்ல மருந்து அன்பும் அரவணைப்பும்தான்..."


"அதில் சரியாகவில்லையென்றால்...?"


மருத்துவர் புன்னகைக்கிறார். "அளவை அதிகப் படுத்துங்கள்"
    
==================================================

இனிய காலை வணக்கம்
 

                                                                
இயற்கை எவ்வளவு இனிமையாக இன்னொரு நாளை உங்களுக்குக் கொடுத்திருக்கிறது... உங்களுக்குத் தேவை என்பதால் மட்டுமல்ல, உங்கள் தேவையை நாடும் ஒருவருக்காகக் கூட இருக்கலாம்...   

                            

16 கருத்துகள்:

  1. //சோக்காக்கும்//
    ட்யூப்லைட்...???

    //ஹிஹி...//
    அவ்ளோ பொறுமைல்லாம் கிடயாது!! சிரிச்சுகிட்டேவாவது ஒரு திட்டு விட்டாத்தான் மனசு ஆறும். :-)

    //மருத்துவர் புன்னகைக்கிறார். "அளவை அதிகப் படுத்துங்கள்" //

    இது மட்டும் நடந்துட்டா....
    .
    .
    .
    .
    .
    .
    மருந்து கம்பெனிக்காரங்க ஒழிஞ்சாங்க!! பாவம்.

    பதிலளிநீக்கு
  2. க்யுட் ஜோக்ஸ்! கலக்கல் கவிதைகள் கலந்த அருமையான கதம்பம்! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  3. // "நல்ல முடிவுகள் அனுபவங்களிலிருந்துதான் வருகின்றன... ஆனால் அனுபவங்கள் என்னவோ தவறான முடிவுகளிலிருந்துதான் வருகின்றன" //

    சரியாப் பார்த்துப்போடுங்க.. கமல் சொல்லியிருப்பாருன்னு நினைக்கிறேன்.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  4. இயற்கை எவ்வளவு இனிமையாக இன்னொரு நாளை உங்களுக்குக் கொடுத்திருக்கிறது... உங்களுக்குத் தேவை என்பதால் மட்டுமல்ல, உங்கள் தேவையை நாடும் ஒருவருக்காகக் கூட இருக்கலாம்... /

    உள்பெட்டியிலிருந்து வந்த பொக்கிஷம்..

    பதிலளிநீக்கு
  5. இயற்கை எவ்வளவு இனிமையாக இன்னொரு நாளை உங்களுக்குக் கொடுத்திருக்கிறது... உங்களுக்குத் தேவை என்பதால் மட்டுமல்ல, உங்கள் தேவையை நாடும் ஒருவருக்காகக் கூட இருக்கலாம்... /

    உள்பெட்டியிலிருந்து வந்த பொக்கிஷம்..

    பதிலளிநீக்கு
  6. எல்லாமே சூப்பர்!
    //"மின்வாரியத்துக்குத் தொலைபேசி 'கரண்ட் எப்ப வரும் நைனா' ன்னு கேட்டா 'உன் செல்லுல இன்னுமா சார்ஜ் இருக்கு'ன்னு கேக்கறாம்பா...." //
    சிரிச்சு மாளல. :)))

    இனிய காலை வணக்கம் மனதை தொட்டது.

    பதிலளிநீக்கு
  7. அனைத்துமே அருமை.
    காலை வணக்கம் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  8. எல்லாமே பிரமாதமா இருக்கு.

    பதிலளிநீக்கு
  9. இயற்கை எவ்வளவு இனிமையாக இன்னொரு நாளை உங்களுக்குக் கொடுத்திருக்கிறது... உங்களுக்குத் தேவை என்பதால் மட்டுமல்ல, உங்கள் தேவையை நாடும் ஒருவருக்காகக் கூட இருக்கலாம்... //

    சிரித்து மகிழ்ந்தேன் இந்த இனிமையான நாளில்.

    பதிலளிநீக்கு
  10. இரசிக்க வைத்தன அனைத்துமே:)! அருமையான தொகுப்பு.

    பதிலளிநீக்கு
  11. //தாயுடன் நிற்கும் எட்டு வயதுக் குழந்தையிடம் வலிக்குமளவு மட்டையில் அடிவாங்கிக் கண்கள் கலங்கினாலும், வேறு ஒன்றும் செய்ய முடியாமல் அந்தக் குழந்தையின் கன்னத்தைத் தட்டி, "சுட்டிக் குழந்தை" என்று சொன்ன கோப கனத்தை அனுபவித்திருக்கிறீர்களா? //

    அவ்வளவெல்லாம் பொறுமை இல்லை. தாயிடமே கோவிச்சுப்பேன், பிள்ளையை இப்படியா வளர்க்கிறதுனு!

    பதிலளிநீக்கு
  12. ஜோக்கெல்லாம் ஜோக்கா இருக்கு.

    பதிலளிநீக்கு
  13. உள் பெட்டியின் உள்ளே ஒரு பெட்டி இருக்கிறது, போலிருக்கே! அதை என்று திறந்து கடைபரப்புவதாக உத்தேசம்?..

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!