Monday, January 14, 2013

புத்தகச் சந்தை விஜயம்..

                 
இரண்டாம் நாளும் மூன்றாம் நாளும் புத்தகச் சந்தை விஜயம். முதல் நாள் அப்பாவுடன். மறுநாள் மாமாவுடன்!
 
புத்தகம் வாங்க வேண்டும் என்று நினைப்பது பாவம் என்று நினைக்குமளவு இருக்கிறது கண்காட்சி நடக்குமிடத்தை அடைவது. நந்தனம் YMCA மைதானம் என்பது கேட்க மிக எளிதாக இருந்தாலும் உள்ளே சென்று வருவது அவ்வளவு சுலபமல்ல. குறிப்பாக வயதானவர்களுக்கு. பழைய மைதானம் இந்த வகைகளில் ப்ளஸ்!

சனிக்கிழமை காலை 11.15 முதல் மாலை 4 மணி வரையும் ஞாயிறு மதியம் 2.15 முதல் மாலை ஆறரை மணி வரையும் உள்ளே சுற்றி வந்தோம்.


சனிக்கிழமை அன்று பார்த்த வி ஐ பி நடிகர் நாசர். அவ்வளவு கூட்டமில்லை, மாலை நாங்கள் கிளம்பும் வரையும் கூட! (மறுநாள் தினமணியில் சனிக்கிழமை காலை முதலே கட்டுக்கடங்காத கூட்டம் என்று செய்தி!). நடுவில் ஒரு வரிசை தவிர மற்ற வரிசையில் ஸ்டால்கள் போதிய இடைவெளியில் அமைந்திருந்தாலும் ஸ்டால்களுக்குள் நுழைந்து வருவது கஷ்டமாக இருப்பது போலத் தோன்றியது.

கேமிரா வைத்து பு.ப எடுக்காமல் அவசரத்துக்கு அலைபேசியில் எடுத்த தெளிவில்லாத பு.படங்களுக்கு நானே பொறுப்பு!


வழக்கமான ஸ்டால்கள். வழக்கமான புத்தகங்கள். வெளியே சற்றுத் தள்ளி 'சாப்பிட வாங்க' மெண்டீன். ரவா தோசை, பூரி, சப்பாத்தி 40 ரூபாய். ,பூரியும் சப்பாத்தியும் மும்மூன்று வைத்தார்கள். ரவா தோசை (ஸ்டாக் இல்லை) கூட 3 கொடுப்பார்களோ என்று கேட்கத் தோன்றியது. கை கழுவ நீண்ட தூரம் செல்ல வேண்டும்.

 

சரிதாயணம் டிஸ்கவரியில் வாங்கிக் கொண்டேன். ஜவர்லாலின் 'மௌனத்தின் அலறல்' (மொழிபெயர்ப்பு) மற்றும் சில புத்தகங்கள்.
 
          
எல்லா ஸ்டால்களிலும் டி. செல்வராஜின் 'தோல்' (சாகித்ய அகாடெமி) கண்ணில் பட்டது. பாலகுமாரனின் 'கங்கை கொண்ட ராஜேந்திரன்'  புதிய புத்தகம்  இருந்தது. 330 ரூபாய்.
 
சாகித்ய அகாடமி அரங்கம் முதல் நாள் தப்பு ஸ்பெல்லிங் உடன் இருந்து மறுநாள் அது சரி செய்யப் பட்டிருந்தது! இந்த அரங்கில் 50, 60, 70 களில் வந்த சாகித்ய அகாடமி வென்ற புத்தகங்கள் 50 சதவிகிதம் தள்ளுபடி விலையில் கிடைத்தன.


வேறொரு ஸ்டாலில் யதேச்சையாக 'கோவை அனுராதா' புத்தகத்தை எடுத்துப் புரட்ட, அருகில் வந்த விற்பனையாளர் 'எடுங்க சார்... 50 சதவிகிதம் தள்ளுபடி' என்றார்

பரிசளிக்க என்று சில புத்தகங்கள் எடுத்தேன். கீதா பிரஸ்ஸில் பகவத்கீதைப் புத்தகம் 10 ரூபாய், திருப்பாவை விளக்கத்துடன் என்ற புத்தகம் 25 ரூபாய் என்று... இன்னொரு ஸ்டாலில் விஷ்ணுசஹஸ்ரநாமம், லலிதா சஹஸ்ரநாமம், மற்றும் கனகதாரா ஸ்தோத்ரம் என்றும் வாங்கிக் கொண்டேன். 7 ரூபாய், 12 ரூபாய் என்று விலைகள். நண்பர்களுக்குப் பரிசளிக்க உதவும்!                                                                  

அப்பா என் சுயசரிதை (உ.வே.சா), ராஜாஜி குழந்தைகளுக்கு எழுதிய புத்தகம், ராஜாஜியின் ஜெயில் டைரி, குண்டூசித் தொகுப்பு என்று வாங்கினார். என் பாஸ் கேட்ட வேதவல்லி வெங்கடாசலம் எழுதிய சமையல் புத்தகம் கிடைக்கவேயில்லை. 'மௌனியின் சிறுகதைகள்' இருக்கிறதா என்றால் சில ஸ்டால்களில் 'மௌலியா' என்றும் கேட்டார்கள். வைக்கப்போவதாகச் சொன்ன தொடுதிரைத் தேடு கணினி கண்ணில் படவேயில்லை. கழிவறை.... ம்ஹூம்... அது தனிக்கதை!

14 comments:

ஊரான் said...

இந்த ஆண்டு 750 அரங்குகள் - 10 இலட்சம் தலைப்புகள் 1 கோடி புத்தகங்கள் - சென்ற ஆண்டு ரூ12 கோடிக்கு விற்பனை என சென்னையில் நடைபெற்று வரும் 36 வது புத்தகக் கண்காட்சி பற்றி தொலைக்காட்சி ஊடகங்கள் ஏற்படுத்தும் பரபரப்பைப் பார்க்கும் போது எழுத்துலகில் ஒரு மொபெரும் புரட்சி நடப்பதைப் போன்ற ஒரு பிரமிப்புதான் பார்ப்பவர்களுக்குத் தோன்றும்.

புத்தகக் கண்காட்சி: எதற்காக?
http://www.hooraan.blogspot.com/2013/01/blog-post.html

ஹுஸைனம்மா said...

//நண்பர்களுக்குப் பரிசளிக்க உதவும்!//
என்கிற வாசகத்துக்குக் கீழே கார்கள் வரிசையாக நிற்கும் படம் இருக்கிறதே. நெஜம்மாவா!! போட்டி வச்சு குடுப்பீங்களா இல்லை தெரிஞ்ச/பிடிச்ச நண்பர்களுக்கா?

இப்படிக்கு
உங்களுக்குத் தெரிஞ்ச மற்றும் பிடிச்ச நட்பு,
ஹுஸைனம்மா

Geetha Sambasivam said...

நிக்கிற காரிலே எது உங்க கார்??? அது சரி, எங்கள் ப்ளாகிலே போட்டிக் கொடுக்கப் போகும் பரிசுக்கா இந்தப் புத்தகங்கள்??? முக்கியமான நபரைச் சந்தித்தது பற்றிச் சொல்லவே இல்லையே? :))))) மற்றபடி புத்தகக் கண்காட்சிக்கெல்லாம் நான் போனதே இல்லை. ஆன்மிகக் கண்காட்சி திருவான்மியூரில் நடந்தப்போ போனேன். அங்கேயும் புத்தகங்கள் தான். கிட்டத்தட்ட அதுமாதிரி தானே புத்தகக் கண்காட்சியும்?

Geetha Sambasivam said...

//கழிவறை.... ம்ஹூம்... அது தனிக்கதை! //

இதுக்காகவே எனக்கு வட இந்தியாவும்,யு.எஸ்ஸும் மிகப் பிடிக்கும். எங்கே போனாலும் கவலையே இல்லாமல் தைரியமாய் நுழைய முடியும் இடம். இங்கே மனிதர்களாக மதிக்கவே மாட்டாங்க! :(((((

T.N.MURALIDHARAN said...

கண்காட்சி நடக்கும் இடம் போக்கு வரத்துக்கு வசதி என்றாலும் நுழைவு வாயிலில் இருந்து உள்ளே நெடுந்தூரம் போக வேண்டி இருக்கிறது. நேற்று நானும் போய் இருந்தேன்.

Anonymous said...

நன்றி! புத்தக கண்காட்சியை இங்கிருந்தபடியே பாத்தாச்சு. வி.ஐ.பி. யாரும் வரலியா?

//கழிவறை.... ம்ஹூம்... அது தனிக்கதை! // இது கொடுமை. இதுக்காகவே ஒரே இடம் போகணும்னா ஓராயிரம் முறை யோசிக்கணும். :(

வல்லிசிம்ஹன் said...

நீங்க போனபோது கூட்டம் இல்லை. தினமணில வரலாறு காணா கூட்டம்னு வந்ததா:)
நடக்கணுமா. Buggy வண்டி ஏற்பாடு செய்தால் போகிறேன்:)


நீங்கள் சொல்வது நல்ல ஐடியாதான். ஆனால் படிப்பாங்களான்னு பார்த்து கொடுங்க!

Meenakshi Ramana said...

In the Ramakrishna Mission Stall,there was a book(pages around 130)about Swami Vivekananda for Rs.10/-On saturday we bought 3 books. But when I went on sunday, there was no stock.
There was so much crowd in the Gorakpur Gita Press stall.I just stood outside and purchased some Gita books for Rs.10

வெங்கட் நாகராஜ் said...

பொறாமையா இருக்கு சென்னை வாசிகளை நினைச்சா....

இங்கேயும் அடுத்த மாதம் புத்தகத் திருவிழா. ஆனா ஹிந்தி மயமா இருக்கும். தமிழ் பதிப்பாளர்கள் 10 பேர் வந்தாலே அதிகம்...ம்ம்ம்ம்....

சீனு said...

நான் இன்னைக்குப் போறேனே ...

RAMVI said...

புத்தக கண்காட்சியை பற்றி அருமையாக விவரித்து இருக்கீங்க,என்னை மாதிரி வெளியூர் ஆளுங்க எல்லாம் படிச்சு சநதோஷப்பட்டுகற மாதிரி.நன்றி.

புத்தக்கடையைவிட சாப்பாட்டுக்கடையில் கூட்டம் அதிகம் போல இருக்கு.

பால கணேஷ் said...

Me also enquired about mouni book. I got an information that mounis stories are available in Natham Geetham book stall. I will go there by tomorrow and confirm this to you. Many thanks for purchasing 'sarithayanam'. The content of that book mostly familiar to you. I hopt you'll enjoy the layout and arts. tks.

அமைதிச்சாரல் said...

கொடுத்து வெச்ச சென்னைவாசிகள் :-))

ராமலக்ஷ்மி said...

நல்லாத் தொகுத்து வழங்கியுள்ளீர்கள்:). பெங்களூரில் இந்த வருடக் கண்காட்சியில் கன்னட புத்தகக் கடைகளை விட, தமிழ் கடைகளிலேயே அதிகக் கூட்டமாய் இருந்தது. விற்பனை எப்படி என்பது தெரியாது:).

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!