சனி, 1 மார்ச், 2014

பாஸிட்டிவ் செய்திகள்




1) சாதாரண பேருந்து ஒட்டுனர். மாதம் பத்தாயிரம் ரூபாய் வருமானத்தில மனைவி, குழந்தைகளுடன் வாழும் சராசரி எளிய இந்தியன்.ஆனால் அந்த இந்தியனுக்குள் அடுத்தவருக்கு உதவுவது ஒன்றே தன் வாழ்க்கையின் லட்சியம் என்று எரியும் ஜோதிதான் அவரைப்பற்றிய இந்த கட்டுரை.இதற்காக பத்து பைசா கூட வாங்கியதும் கிடையாது, வாழ்நாள் முழுவதும் வாங்கப்போவதும் கிடையாது.பரமசிவம்.




2) கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம் மஞ்சேரி யானைக்கயம் பகுதியை சேர்ந்தவர் அப்துல் மாலிக். இரும்பழி என்ற இடத்தில் உள்ள பள்ளியில், 1992ம் ஆண்டு முதல் ஆசிரியராக பணியாற்றும் மாலிக், ஆற்றை நீந்திக்கடந்து பள்ளிக்கு சென்று, கிராமப்புற மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகிறார். இவரைப்பற்றி முன்னர் வந்த செய்தியை முன்னரே நம் பாஸிட்டிவ் செய்திகளில் சொல்லியிருக்கிறோம். இப்போது இந்த செய்தியை, ஊடகங்கள் வாயிலாக, லண்டன் டாக்டர் மன்சூர் ஆலம் என்பவர் கேள்விப்பட்டார். தொடர்ந்து இணையதளம் வாயிலாக, இப்பள்ளியை தொடர்பு கொண்டார்.

இந்நிலையில், திடீரென இந்தியா வந்த டாக்டர் மன்சூர் ஆலம்,70, நேற்று முன்தினம் குறிப்பிட்ட பள்ளிக்கு சென்று ஆசிரியர்கள்,மற்றும் மாணவர்களுடனும் உரையாடினார். தொடர்ந்து ஆசிரியர் மாலிக் தினமும் இரண்டு முறை நீந்தி கடக்கும் ஆற்றை பார்த்தார். ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள பைபர் படகை வாங்கி பரிசளிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.
                                           

அதுமட்டுமின்றி பள்ளியில் கூடுதல் வகுப்பறையும் அமைத்து தருவதாகவும், கம்ப்யூட்டர்கள் வாங்கித்தருவதாகவும் அவர் உறுதி கூறியுள்ளார். பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து இவர் 40 ஆண்டுகளுக்கு முன் லண்டனுக்கு சென்றுள்ளன மன்சூர் ஆலம், அங்கு 'மென்டல் ஹெல்த்தில்' டாக்டர் பட்டம் பெற்று, அங்கேயே பணியாற்றி வருகிறார். 'படகு கிடைத்தால் தனது தினசரி சிரமத்திற்கு முடிவு கிடைக்கும், மாணவர்களுக்கு கூடுதல் நேரம் வகுப்பு எடுக்க முடியும்', என, மாலிக் தெரிவித்துள்ளார்.

3) 'நான்தான் கை நிறைய சம்பாதிக்கிறேனே பிறகு எதற்கு அரசின் சலுகை...' என்று கேட்கிறார் பூவரசு.

                          


4) ஈரம் மகேந்திரன்.


                                  

5)  சாதனைப் பெ
ண்மணி  ஈரோடு கலைவாணி.






14 கருத்துகள்:

  1. // நான்தான் கை நிறைய சம்பாதிக்கிறேனே பிறகு எதற்கு அரசின் சலுகை...? // பூவரசு அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    80,000 பெரிதா...? 15,000 பெரிதா... எனும் பல தகவல்களுடன் ஈரோடு கலைவாணி அவர்களின் விளக்கம் மிகவும் அருமை...

    மற்ற அனைத்து பாஸிட்டிவ் செய்திகளுக்கும் நன்றி...

    பதிலளிநீக்கு
  2. அனைத்து பாஸிட்டிவ் செய்திகளுக்கும் பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  3. கலைவாணி அவர்கள் சாதனை பற்றி விளக்கமான கட்டுரை
    ஒன்று எனக்கு பெட்டர் இந்தியா என்னும் என்.ஜி. வோ. விடமிருந்து
    வந்துள்ளதை நானும் எனது வலையில் பகிர்ந்துள்ளேன்.
    www.wallposterwallposter.blogspot.in
    நன்றி.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  4. ஒரு டிரைவர் ,ஒரு ஆசிரயர் ,ஒரு மாற்றுத் திறனாளி,ஒரு பதிவர் ,ஒரு விவசாயப் பெண்மணி ஆகியோர் செய்த சாதனையை சொல்லிஇருப்பது அருமை !

    பதிலளிநீக்கு
  5. மாலிக் போன்ற ஆட்களுக்கு நல்லது நடக்க இணையமும் ஒரு காரணி என்பதை நினைக்கும் போது கொஞ்சம் பெருமையாக உள்ளது சார்



    பதிலளிநீக்கு
  6. பரமசிவம், பூவரசு, கலைவாணி, மகி என எல்லோரின் செய்திகளும் மனதிற்கு இதம் தந்தன.பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  7. சிறப்பான மனிதர்கள் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்ட உங்களுக்கு எனது வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  8. all are good one. spelling mistake, sathanai penmani. imposition ezuthunga. :)

    பதிலளிநீக்கு
  9. தொடர்ந்து படிக்கிறேன். படித்தவுடன் மனம் நிறைந்துபோகிறது. உங்களைப்போல் இன்னும் நாலுபேர் ஒவ்வொரு ஊரிலும் இந்தச் செய்திகளைப் பரப்பினால் எவ்வளவு நன்மை விளையும்!

    பதிலளிநீக்கு
  10. தொடர்ந்து படிக்கிறேன். படித்தவுடன் மனம் நிறைந்துபோகிறது. உங்களைப்போல் இன்னும் நாலுபேர் ஒவ்வொரு ஊரிலும் இந்தச் செய்திகளைப் பரப்பினால் எவ்வளவு நன்மை விளையும்!

    பதிலளிநீக்கு
  11. மிக அருமை! அதுவும் திரு. மன்சூர் ஆலம் அவர்களின் கருணையை பாராட்ட வார்த்தைகளில்லை!!

    பதிலளிநீக்கு
  12. சாதனை மனிதர்கள்! உயர்ந்த உள்ளத்தினர்! பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  13. இந்தக் காலத்தில் பரமசிவம் போல் மனிதர்களா? இன்னும் நான் ஆச்சர்யத்திலிருந்து விடுபடவில்லை. வாழ்த்துக்கள் அவருக்கு.டாக்டர் மன்சூர் ஆலம் உதவி பாராட்டுக்குரியது.
    வெளிநாட்டு வாழ இந்தியர்கள் நினைத்தால் இந்தியா எங்கோ இருக்கும் என்பதற்கு இவரே சாட்சி. கெமிக்கல் போடாமல் விவசாயம் செய்யும் பெண்மணியும் பாராட்டுக்குரியவர். எல்லோருக்கும்
    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!