வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

வெள்ளிக்கிழமை வீடியோ 140228::

       
                
ஒரிஜினலா நாங்க போட நினைத்த ஒளிக்காட்சி பதிவேற மறுக்கின்றது. ஆறுதல் பரிசாக இதோ ஒன்று. 
   
பாடலைப் பாடியவர் எஸ் ஜி கிட்டப்பா. இருபத்தேழு வருடங்கள் மட்டும் வாழ்ந்து மறைந்த இசைமேதை. 
             

10 கருத்துகள்:

 1. எவரெனி நிர்னயின்சனா, காயாத கானகத்தே நின்றுலாவும்,
  ராக சுத்த ரச பாலமு தேசி என ஒரு தொகுப்பு உண்டு...

  பதிலளிநீக்கு
 2. சுருதி - 4 கட்டைகுறள் இல்லை...ஹிஹி... குரல் ஓங்கினால் 5,6 கட்டை...! இவரைப் போல முயற்சி செய்தவர்கள் :


  வீ.ஏ .செல்லப்பா அவர்கள், சி.எஸ்.ஜெயராமன் அவர்கள், டி.ஆர். மகாலிங்கம் அவர்கள் +

  including எங்கள் TMS...!

  பதிலளிநீக்கு
 3. வணக்கம்

  காலத்தால் அழியாத காவியங்கள்.
  நினைவு படுத்தியமைக்கு வாழ்த்துக்கள் ஐயா

  நன்றி
  அன்புடன்
  ரூபன்

  பதிலளிநீக்கு
 4. கிட்டப்பா-சுந்தராம்பாள் கதைய "காவியத் தலைவன்" ன்ற பேர்ல படமா எடுக்கறாங்களாம்!

  பதிலளிநீக்கு
 5. இது வரை கேட்டிராத பாடல்....

  பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 6. அப்பாதுரை சார் கேட்டதால், கொஞ்சம் ஆராய்ச்சி செய்து பார்த்தேன். நாடக மேடைப் பாடல்களில், அவரைப் போன்று மேல் ஸ்தாயியில் தொடர்ந்து பாடியவர் யாரும் இல்லை. அவருடைய இசை ஞானம் பிறவியிலேயே அமைந்ததாக தோன்றுகிறது.
  விக்கி சொல்கிறார்:
  கிட்டப்பா செங்கோட்டையில் பிறந்தவர். இயற்பெயர் ராமகிருஷ்ணன். அப்பொழுது செங்கோட்டை திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்தது. இவரது தந்தையின் பெயர் கங்காதர அய்யர். தாயார் மீனாட்சி அம்மாள். இவருடன் பிறந்தோர் சுப்புலட்சுமி, சிவகாமி, அப்பாத்துரை, சுப்பையா, செல்லப்பா, சங்கரன், காசி, பிச்சம்மாள், நாராயணன் ஆகியோர். வீட்டிலுள்ளோர் செல்லமாக அழைத்த பெயர் கிட்டன். அதுவே கிட்டப்பா என்ற பெயராக நிலைத்து விட்டது. குடும்பத்தின் வறுமையினால் இவருக்கு முறையான கல்வி கிடைக்கவில்லை. ஆனால் சங்கரதாஸ் சுவாமிகள் ஆதரவால் இசையிலும் நாடகக்கலையிலும் நல்ல தேர்ச்சி பெறமுடிந்தது. மிகச் சிறிய வயதிலேயே நாடகங்களில் நடித்து நல்ல பெயர் எடுத்தார். இவர் 5-ஆம் வயதில் முதன்முதல் மேடையேறினார். தனது 8-ஆவது வயதில் சிலோனில் நடைபெற்ற நாடகங்களில் நடித்தார். அங்கிருந்த இந்திய வர்த்தக அமைப்பு இவரது கலைத்திறமையைப் பாராட்டித் தங்கப் பதக்கமும் சான்றிதழும் வழங்கிப் பெருமைப் படுத்தியது. பாடகியாக வளர்ந்து கொண்டிருந்த கே. பி. சுந்தராம்பாளுக்கும் இவருக்கும் 1927ல் திருமணம் நடந்தது. இவர்கள் திருமணம் காதல் திருமணமாகும். திருமணத்துக்குப் பின் இருவரும் சேர்ந்து நடித்த பல நாடகங்கள் அமோகவெற்றி பெற்றன. ஓயாத உழைப்பே இவரது உடல் நலத்துக்குக் கேடாக அமைந்தது. திருவாரூரில் நடித்துக் கொண்டிருக்கும்போது மேடையிலேயே மயங்கி விழுந்து இவரது உயிர் பிரிந்தது. 1933ல் இவர் இறந்தபோது இவருக்கு வயது 28தான்.[1][2]....

  (மேலும் ஒரு உபரித் தகவல், என் அசோக் லேலண்டு அலுவலகத்தில் பிளானிங் பகுதியில், எஸ் ஜி செல்லப்பா என்று ஒருவர் சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்பு பணி செய்தார். எல்லோரும் அவரை, எஸ் ஜி கிட்டப்பாவின் சகோதரர் என்று கூறினார்கள். உண்மையா பொய்யா என்று எனக்குத் தெரியாது.)

  பதிலளிநீக்கு
 7. harmonium Kasi Iyer than kadaisi kalaththil Maduraiyil vasiththaar. avaroda ponnu Durgalakshmi oru kalaththil en friend. :) Pinnar chennaikkuk kudi peyarnthathakak kelvi. Nanga Rajasthan ponappurama touch illai. :)

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!