எழுத்தாளர் தான் படைக்கும்
படைப்புகளில் இருப்பார் என்று சொல்வார்கள். சுஜாதாவின் பாத்திரங்களான
கணேஷ் - வசந்த் பாத்திரங்களில் கணேஷ் சுஜாதாவின் முதிர்ச்சி பெற்ற பழமை
சார்ந்த பதிப்பு. வசந்து புதுமை கலந்த, குறும்பு மனத்தின் பிரதிபலிப்பு.
ஆக, இரண்டும் சுஜாதாதான்! (இது ஒரு பெரிய கண்டு பிடிப்பா என்று யாரும் திட்ட வேண்டாம்!)
சுஜாதா பற்றி ஒரு
பெருவியப்பு என்ன என்றால், அவர் படித்திருப்பது பொறியியல். ஆனால் கணேஷ்
வசந்த் கதைகளில் நுணுக்கமாக, ஏராளமாக சட்ட சம்பந்தமான விவரங்கள் தருவார்.
எங்கிருந்து பிடிப்பாரோ? உதாரணமாக அப்பீலுக்கும், ரிவிஷனுக்கும் என்ன
வித்தியாசம், ரெஃபரன்ஸ் வழக்குகள் போன்ற விவரங்கள்.
பெரிய
வார்த்தைகளைப் போட்டு பயமுறுத்துவார், விளையாடுவார். உதாரணமாக ரெஸ்
ஜூடிகாட்டா, Raskolnikov Syndrome. சில சமயம் கதையின் முடிச்சு கதையின்
ஆரம்பத்திலேயே அல்லது நடுவில் ஒரு வரியாக மட்டும் வரும் இது போன்ற
வார்த்தைகளில் இருக்கும்!
முதலிலேயே சில விநோதக்
குறிப்புகளில் குற்றவாளியை அடையாளம் காட்டி விடுவார் என்பது அவர் கதைகளை
வாசிப்பவர்கள் அறிந்திருப்பார்கள். ஆரம்பத்தில் அறிமுகமாகும் ஒரு
சாமன்யனின் இடத்தில் நம்ப முடியாத அறிவு ஜீவித் தனமான புத்தகங்கள், அல்லது
அந்த கேரக்டருக்குச் சம்பந்தமில்லாத விஷயங்களைச் சொல்வார். சொல்லி
வேகமாகக் கடந்து விடுவார். உதாரணமாக அந்த கேரக்டர் தன் இயல்பு, பணிக்குச்
சம்பந்தமில்லாமல் Biology of Death புத்தகம் வைத்திருப்பார். தன்னுடைய
உரையாடலில் நீட்ஷே கோட் செய்வார்!
குற்றவாளியே
லாயர் கணேஷைத் தேடி வந்து ஸ்ட்ராங் அலிபை வைத்துக் கொள்வது போல இரண்டு
மூன்று கதைகள் எழுதி இருக்கிறார். புகார்... புகார்...புகார்.., அம்மன்
பதக்கம், மீண்டும் ஒரு குற்றம்...
மேலும் ஒரு குற்றம் என்ற
தலைப்பிலொரு கதையில் இதையே அவர் யோசித்து கதையை மாற்றி யோசித்து திருப்பம்
தந்திருப்பார். மேற்கே ஒரு குற்றம், மீண்டும் ஒரு குற்றம், மேலும் ஒரு
குற்றம் என்று குழப்பும் தலைப்புகளில் மூன்று கதைகள்!
சில
கதைகளைப் படிக்கும்போது 'இதை எந்த காலகட்டத்தில் எழுதியிருப்பார்?' என்று
யோசனை வந்தால் ஏதாவது ஒரு வரியில் காலம் சொல்லும் வரி இருக்கும். "வாஜ்பாய்
அரசு நிலைக்குமா?"
ஒரு கதையில் கணேஷ் கையாளும் ஒரு
முறையை - தொலைபேசி எண் அறியும் முறை - வசந்த் இன்னொரு கதையில் புதுசு போல
உபயோகித்து கணேஷுக்கு புது ஐடியா போலச் சொல்வது! சுஜாதாவே மறந்து
விட்டாரோ, அல்லது வாசகர்கள் நினைவு வைத்திருக்க மாட்டார்கள் என்று நினைத்தாரோ! (அம்மன் பதக்கம் - ஐந்தாவது அத்தியாயம்)
ஜான்
லென்னன் பற்றி சுஜாதா எழுத்து மூலம்தான் அறிந்தேன். அதே போல சில புதுக்
கவிதைகள். உதாரணமாக 'காதலிக்கலாமா, கற்பழிக்கலாமா என்று முடிவு
செய்வதற்குள் லிஃப்ட் குறிப்பிட்ட தளத்தை அடைந்து விடுதல், 'மனக்கதவம்
தட்டி மாணிக்கம் பரப்பும் என்றும் இளையவள்' என்னும் சிற்பியின் கவிதை...
வசந்த் கோட் செய்வதாகப் படித்த பாரதியாரின் கவிதை வரி ஒன்றும் அப்படியே இன்னும் மனதில் நிற்கிறது! 'மெல்லிய மேகத்திரைக்குள் மறைந்திடும் வெண்ணிலாவே.. நின்றன் மேனியழகு மிகைபடக் காணுது வெண்ணிலாவே..."
சிலது தொடரே வேண்டும்...
பதிலளிநீக்குஎன் மனதும் அப்படியே...!
சிலது தொடரவே வேண்டும்...
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குஐயா
தொடருகிறேன்....த.ம 4
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நைலான் கயிறு
பதிலளிநீக்குகணேஷ் முதன் முதலில் அறிமுகமான கதை
பின்னர் வசந்தை இணைத்துக் கொண்டார்
கணேஷ் வசந்த தொடருக்காகவே
வாரா வாரம் புத்தகம் வாங்கி
தொடை மட்டும் கிழித்து வைத்து
பின்னர் பைண்டு செய்து மகிழ்ந்த நினைவுகள்
மனதில் வலம் வருகின்றன நண்பரே
நன்றி
நல்ல அலசல் நண்பரே...
பதிலளிநீக்குகாலம் சொல்லும் வரி.. கவனிக்க பல விஷயங்கள் அவர் கதைகளில்..
பதிலளிநீக்கு# நீட்ஷே கோட் செய்வார்!#இதற்கு உதாரணம் ....தேடாதே ,தேடினால் காணாமல் போவாய் :)
பதிலளிநீக்குஆஹா! ஆஹா! நம்ம சுஜாதா....கணேஷ் வசந்த் அலசல்...இரண்டுமே சுஜதாதான் அதே அதே.....நிறைய வாசித்ததுண்டு...மிகப் பிடித்தமான எழுத்தாளர். மிகமிக வியந்த எழுத்தாளர். அவர் தொடாத சப்ஜெக்ட் என்ன என்று தேடிப்பார்த்து என் மூளைக்கு எட்டவில்லை எதுவும். ரசித்தேன் தங்கள் அலசலை...
பதிலளிநீக்குகீதா
மிகச் சிறப்பான பகிர்வு அண்ணா...
பதிலளிநீக்குஅருமையாக அலசி இருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குரசித்தேன்.
இவ்வாறான பல்துறை அறிவு சில எழுத்தாளர்களிடமே அதிகமாக இருந்தது என்பது உண்மையே.
பதிலளிநீக்குஸ்ரீராம்,
பதிலளிநீக்குகணேஷ் வசந்த் இணை படிக்க சுவாரஸ்யமாக இருக்கும். மேலும் ஒரு குற்றம் எனக்கு அதிகம் விருப்பம். அதில் இறுதியில் வரும் அந்த திடீர் திருப்பம் யாரும் எதிர்பார்க்காத ஒன்று. (ஆனால் எங்கிருந்து அதை அவர் எடுத்தாரோ என்று தெரியவில்லை) சுஜாதாவிடம் இருக்கும் எளிமையான ஆனால் மின்சார வார்த்தைகளே அவரது பலம். தான் படித்த, படிக்கும் புத்தகங்களை கதையில் வரும் கதாபாத்திரங்கள் மூலம் நமக்குச் சொல்வது அவரது யுக்திகளில் ஒன்று.
மிக்க நன்றி அய்யா....என் ஆதர்ஸம் சுஜாதாவை பகிந்ததற்கு...
பதிலளிநீக்குநேற்றுதான் கொலையுதிர்காலம் படித்தேன்! இன்று உங்களின் இந்த அலசல்! சிறப்பான அலசல்! நான் வியக்கும் எழுத்தாளர்களில் சுஜாதாவும் ஒருவர்!
பதிலளிநீக்குவணக்கம்.
பதிலளிநீக்குசுஜாதாவின் கதைகளைப் படித்தவன் என்பதனால் சொல்கிறேன்.......இது போன்றெல்லாம் சிறதளவு கூட ஒப்பிட்டுப் பார்த்ததில்லை.
இப்பதிவினையே இன்னும் சற்று நீட்டி முழக்கி இயல்பிரித்து எழுதியிருந்தால், தமிழில் முனைவர்ப்பட்டம் “highly commended'' என்ற குறிப்புரையுடன் தாராளாமாய்க் கிடைத்திருக்கும்.
இதையும் கடந்த சில ஆண்டுகளின் தமிழ் முனைவர் பட்ட ஆய்வேடுகளைப் பார்ப்பவன் கூற்றெனவே நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
தொடர்கிறேன்.
நன்றி
சிறிதளவு எனத் திருத்திப்படிக்க வேண்டுகிறேன்.
பதிலளிநீக்குபிழைக்கு வருந்துகிறேன்.
முனைவர்ப்பட்டம்/ முனைவர் பட்டம் இரு ஆட்சியும் இருக்கிறது என்பதால் அதனைத் திருத்தவில்லை.
நன்றி
நமக்குப் பிடித்த ஒருவரை இன்னொருவர் பார்வையில் பார்த்த நிறைவு. உங்களைப் போலவே சுஜாதாவை மிகவும் பிடித்த ஆனால் ரசனையில் வேறுபடுகிற யாராவது வந்தால் தான் இந்தப் பார்வையில் இன்னும் இன்னும் சுவாரஸ்யம் கூடும் என்பதும் தெரிகிறது.
பதிலளிநீக்கு(உ-ம்) கணேஷ்-- வசந்த் எல்லாம் ஊறுகாய் மாதிரி தான். ஊறுகாயே முழுச்சாப்பாடாகி விடுமா?..
சுஜாதாவின் எல்லாக் கதைகளையும் அநேகமாய்ப் படித்திருந்தாலும் சில படிக்காததும் இருக்கின்றன. அவற்றில் நீங்கள் கொடுத்திருக்கும் மூன்று குற்றங்களும்! படிச்ச நினைவே இல்லை! இந்தக் கொலையுதிர்காலம் தொலைக்காட்சியில் (பொதிகையில்) தொடராக வந்து பார்த்திருக்கேன். கணேஷ் பாத்திரத்துக்கு யார்னு நினைவில் இல்லை. வசந்தாக அப்போது பிரபலமான நடிகர் ஒருத்தர். விஜய்னோ என்னமோ ஆரம்பிக்கும். இப்போதெல்லாம் அவரைப் பார்க்க முடியவில்லை. :) நெடுந்தொடர்களை ஆரம்பித்து வைத்ததே பொதிகை தான். அப்போதெல்லாம் வாரிசு என்ற தொடர் ஒன்று வந்தது. :) சுஜாதாவிலிருந்து நெடுந்தொடருக்குப் போயிட்டேனோ! :)
பதிலளிநீக்குகணேஷ், வசந்த் இல்லாமலும் சுஜாதாவின் கதைகள் படிக்கலாம்.
பதிலளிநீக்குநான் கதைகள் படிப்பதில்லை!
பதிலளிநீக்குசிறந்த பதிவு
பதிலளிநீக்குசிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்
நல்லதொரு அலசல்.... இன்னுமொரு முறை சுஜாதா கதைகளை படிக்கும் ஆவல் வருகிறது......
பதிலளிநீக்கு