"திங்கக்கிழமை 151123 :: சேனையை வறுப்போம்!
முதலிலேயே சொல்லி விடுகிறேன். இது யாரும் செய்திராத பண்டம் அல்ல. இந்த வாரம் நாங்கள் இதைச் செய்தோம்! அவ்வளவுதான்!
ஹிஹிஹிஹி...
முக்கால் கிலோ அளவிருக்கும். உருண்டையாக, வெட்டாமல் முழு சேனைக் கிழங்கு வாங்கி வந்திருந்தோம்.
தோல் சீவிய பிறகு, அதை
ஒரே அளவினதாய் படல் படலாய் நறுக்கி எடுத்துக் கொண்டோம். இவ்வளவு பெரிதாக
இருந்தால் எங்களுக்குப் பிடிக்காது என்பவர்கள் சிறிது சிறிதாகவும் அரிந்து
கொள்ளலாம்!
சேனையின் அளவைப் பொறுத்து கொஞ்சம் புளி எடுத்து, கெட்டியாகக் கரைத்து எடுத்துக் கொண்டோம். அதில் தேவையான அளவு உப்பு, பெருங்காயம், காரப்பொடி சேர்த்து கெட்டியாகக் கரைத்து எடுத்துக் கொண்டோம்.
நறுக்கிய
சேனைத் துண்டுகளை அதில் ஊரப் போட்டு, தடவி, அரை மணி நேரம் வைத்திருந்தோம்.
பின்னர் மைக்ரோவேவ் அவனில் ஐந்து நிமிடம் வைத்து எடுத்தோம்.
சோளமாவு போன்றவை இல்லாததால் ரவா, அரிசி மாவு கொஞ்சமாய்த் தூவி,
தோசைக்கல்லில்
போட்டு எடுக்கலாமா என்று யோசித்து, வேண்டாம் என்று வாணலியில் எண்ணெய்
வைத்து, காய்ந்ததும் இதைப் போட்டுப் பொரித்து எடுத்துச்.........
சாப்பிட்டு விட்டோம்!
சேனைப்பொரியல் சுப்பர். நாங்கள் இதை கருணைக்கிழங்கு என்போம்.
பதிலளிநீக்குரொம்பப் பிடிக்கும்... ஆனால் உடம்பிற்கு பிடிக்காது...
பதிலளிநீக்குஇங்கே சேனைக்கிழங்கே நல்லா இருக்கிறதில்லை. பிடி கருணை வாங்கி ஒருதரம் எனக்கு ஒத்துக்காமல் போய் விட்டது. வறுவல் என்றால் வாழைக்காய் தான்! எப்போவானும் உ.கி.
பதிலளிநீக்குநன்றி நண்பரே
பதிலளிநீக்குதம =1
வறுவல் என்பது அனைவருக்கும் பிடித்ததே, என்னையும் சேர்த்து. ஆனால் உடல் நலனுக்குத் தொந்தரவே.
பதிலளிநீக்குஇந்த கிழங்கை நறுக்கும் போது கைகள் அரிக்கும் அதனால் எண்ணெயை சிறிது கைகளில் தடவிக் கொண்டு நறுக்க வேண்டும்
பதிலளிநீக்குஇந்த கிழங்கில் வடை செய்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்
பதிலளிநீக்குஅனைவரும் அறிந்ததாகவே இருந்தாலும் ஒவ்வொருவர் செய்யும் விதத்தில் வேறுபாடுகள் இருக்கதான் செய்கின்றன. ருசியான குறிப்பை present செய்த விதமும் ரசிக்க வைத்தது.
பதிலளிநீக்குடிவி நிகழ்ச்சி ஒன்றில் பார்த்த குறிப்புப்படி, சேனைக் கிழங்கை அரிசி கழுவிய நீரில் அலம்பி, பின்னர் சிறிது கழுநீரிலேயே ஐந்து நிமிடம் வேக வைத்து வடித்து ஃப்ரை செய்தால் அரிப்பதேயில்லை. நேற்று 'எங்கள் வீட்டிலும்' சேனை தான்!!
பதிலளிநீக்குசேனைக்கிழங்கு வறுவல் , இந்த மழைக்கு கூடுதல் சுவையோடு இருக்கும்.
பதிலளிநீக்குenakku ennavo senai enraal avialum eriseriyum chipsum thaan theriyum.
பதிலளிநீக்குசேனையின் விசேஷம் என்று சொல்ல வேண்டியது என்னவென்றால்,மேல் லேயரில் என்ன தான் வரட்சி இருந்தாலும் லேசாகக் கீறி விட்டால் freshness வந்து விடும். கிழங்கு வகைகளில் இதுவும் பிடி கருணையும் ராஜாக்கள் தாம்.
பதிலளிநீக்குசேனை வறுவல் ஜோர்!
பதிலளிநீக்குநல்ல காரம், நல்ல மணம். படங்களைப் பார்த்தாலே தெரிகிறது. உங்கள் செய்முறை எளிமையாகவே தெரிகிறது. சகோதரி நிஷா அவர்களே, உங்கள் பக்கம், சேனையைக் கருணை என்றால், கருணையை சேனை என்பார்களோ?
பதிலளிநீக்குநல்ல உணவுதான் ஆனால் உடல் அரிப்பு வரும்.
பதிலளிநீக்குஜோக்காளி தளத்திலும் நேற்று மன்னர் ருசிக்கும் சேனையே :)>>http://www.jokkaali.in/2015/11/blog-post_22.html
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குஐயா
பிடித்த உணவு..செய்து சாப்பிடுகிறோம்... த.ம 9
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி நிஷா. நிறைய பேர்கள் இதை அப்படித்தான் அழைக்கின்றனர்!
பதிலளிநீக்குநன்றி DD.
பதிலளிநீக்குநன்றி கீதா மேடம். நாங்கள் வாழைக்காய், உ.கி எல்லாமும் செய்வோமே...
பதிலளிநீக்குநன்றிக்கு ஒரு நன்றி, வாக்குக்கு ஒரு நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.
பதிலளிநீக்குநன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா..
பதிலளிநீக்குநன்றி மதுரைத் தமிழன். வாங்கிக் கொஞ்ச நாட்கள் கழித்து உபயோகித்தாலே இந்த 'அரிப்பு'ப் பிரச்னைகளை சமாளித்து விடலாம்!
பதிலளிநீக்குநன்றி ராமலக்ஷ்மி. உங்கள் பின்னூட்டம் உற்சாகத்தைத் தருகிறது.
பதிலளிநீக்குநன்றி மிடில்க்ளாஸ்மாதவி. அரிப்புப் போகவேண்டி புளித்தண்ணீரில் ஊறப்போடவில்லை. இலேசான புளிப்புச் சுவை வித்தியாசமாக இருக்குமே என்றுதான். வாழைக்காயை இதே போல புளிப்பு மோரில் காரம்,உப்புப் போட்டுச் செய்திருக்கிறோம்! வாங்கி வந்து சில நாட்கள் வைத்துச் செய்தாலே அரிப்பு இருப்பதில்லை. ஜீவி ஸார் சொல்லி இருப்பது போல மேலே காய்ந்து போயிருக்கும் லேயரைச் சீவினால், உள்ளே மஞ்சள் பசுமை லேயர் மிளிரும்!
பதிலளிநீக்குநன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் மேடம்.
பதிலளிநீக்குநன்றி JK ஸார். இது சிப்ஸ் போலத்தானே? எரிசேரி எனக்கும் ரொம்பப் பிடிக்குமாக்கும்!
பதிலளிநீக்குநன்றி ஜீவி ஸார். பிடி கருணை மூலநோய்க்கு நல்லது என்பார்கள்.
பதிலளிநீக்குநன்றி 'தளிர்' சுரேஷ்.
பதிலளிநீக்குநன்றி தமிழ் இளங்கோ ஸார். நிறைய பேர்கள் சேனையை கருணை என்றுதான் சொல்கிறார்கள்.ஆனால் அது வேறு!
பதிலளிநீக்குஎங்களுக்கு உடல் அரிப்பு இது வரை வந்ததில்லை கில்லர்ஜி! நன்றி.
பதிலளிநீக்குநன்றி பகவான்ஜி.
பதிலளிநீக்குநன்றி ரூபன்.
பதிலளிநீக்குஎங்கள் வீட்டில் காய் நறுக்குவதும் நான் தான்; மஞ்சள் பசுமைக் கலர் எல்லாம் பார்த்ததில்லை!! மஞ்சள் அல்லது சிவப்பு!! எங்கள் ஊர் பக்கம் அம்மாதிரி கிடைக்காதோ என்னவோ!! நான் புளிப்புக்கு ஆம்சூர் பவுடர் போடுவேன். அடுத்த முறை இப்படி செய்து பார்க்கிறேன். நன்றி
பதிலளிநீக்கு@மிடில்கிளாஸ்மாதவி.. பசுமை என்பதை நான் கலர் குறித்துச் சொல்லவில்லை! :)))
நீக்குசேனைக் கிழங்கு வறுவல் அமிர்தம்.. நறுக்கின விதம் சின்னதாக இருந்தால் இன்னும் சுவை.
பதிலளிநீக்குநன்றி வல்லிமா.. எப்பவும்தான் சின்ன துண்டங்களாக நறுக்கிச் செய்யறோமேன்னுதான் இப்படி மாறுதலாக முயற்சி செய்தோம்.
நீக்குசேனை ன்னதும் நமக்கு பிடிக்காத காய் ஆச்சே ன்னு நெனைச்சிட்டு தான் உள்ளே வந்தேன்.. சிப்ஸ் போட்டோ பார்த்ததும் ம்ம்ம்.. கோவாவிலிருந்து கோவை சென்றதும் அம்மாகிட்ட இதுபோல் செய்து தர சொல்லணும்.. :)
பதிலளிநீக்குஆவி! நன்றி. செய்து சாப்பிட்டுச் சொல்லுங்க...
நீக்கு(இந்த பதிவிற்கான கருத்து அல்ல - வங்கி பதிவு தொடர்பான கருத்து)
பதிலளிநீக்கு"திகிலான" வங்கி அனுபவம் படித்தேன். சி(ப)ல நேரங்களில் இதே அனுபவம் எனக்கும் நேர்ந்துள்ளது.
நன்றி கரகாட்டக்காரன்.
நீக்குசெய்து பார்க்க வேண்டும் ஒருமுறை. நிறையப் பேர்கள் சேனையைக் கருணை என்று சொல்லுகிறார்கள். பிடிகரணை என்பதைத் தான் கருணைக் கிழங்கு என்பார்கள், இல்லையா? ஒரு விளம்பரத்தில் வருவது போல
பதிலளிநீக்குபெயரா முக்கியம்?'
அதானே.. பெயரா முக்கியம்! நன்றி ரஞ்சனி மேடம்.
நீக்குகேரளத்தில் எங்கள் வீடுகளில் சேனையை ரொமப்வே உபயோகிப்போம். பெரும்பாலும் ஃபரை, இல்லை என்றால் எரிசேரி..மோர்குழம்பும் கூட செய்வதுண்டு. நாங்கள் மோரு என்போம் இல்லை என்றால் மோர்கூட்டான் என்று சிலர் சொல்லுவதுண்டு. புளிசேரியும் செய்வதுண்டு இதுவும் மோர்க்குழம்பு வகைதான்...
பதிலளிநீக்குஇதே இதே சேம் முறைதான்....ஆனால் தோசைக்கல்லில் போட்டு ஃப்ரை செய்து விடுவதுண்டு...சென்றவாரம் கூட வீட்டில் இதுதான்..
கீதா
தோசைக்கல்லில் புரட்டி எடுப்பதும் ஒரு சுவை! நன்றி கீதா.
நீக்குமிக நன்றாக இருக்கிறது சேனை வறுவல். நீங்கள் சொன்ன குறிப்பில் செய்து பார்க்கிறேன்.
பதிலளிநீக்குநல்ல வறுவல்.... சாயங்கால தேநீருடன் எடுத்துக் கொள்ள வசதியாக இருக்குமே! :)
பதிலளிநீக்கு