புதன், 18 நவம்பர், 2015

கடவுளைக் கண்டேன் - பித்துப் பிடிக்க வைக்கும் பத்து ஆசைகள்!


 
பத்துப் பத்தாய் ஆசைகளைச் சொல்லி அனைத்துப் பதிவர்களையும் பித்துப் பிடித்து அலைய வைத்திருக்கும் நண்பர் கில்லர்ஜீ வாழ்க!
 
 
இந்தத் தொடர்பதிவு ஜோதியில் எங்களையும் கலக்க வைத்து, ஒரு பதிவுக்கு வழி வகுத்த சகோதரி தேன்மதுரத்தமிழ் கிரேஸ்க்கு நன்றி!  அவரும் வாழ்க.


சகோதரி கிரேஸ் அழைத்தது தெரியாமல், எங்களை மறுபடி அழைத்த சகோதரி மைதிலி கஸ்தூரி ரெங்கன் க்கும் நன்றி!  அவரும் வாழ்க!


சென்னையின் பெருமழையும், அதன் பின்விளைவுகளும், எங்கள் உடல்நிலையும் இந்தப் பதிவைப் போடுவதில் தாமதமேற்படுத்தி விட்டன.  (நேற்று "திங்க'க்கிழமை கூட Draft லேயே வைத்திருந்தும் வெளியிட முடியாமல் போனதற்கு கடந்த ஞாயிறு மாலை முதல் செவ்வாய் மாலை வரை 'கட்' ஆன கரண்ட்டும் ஒரு காரணம்!)  மன்னிக்கவும்.
 
 
 
 
1)  நீரின் மட்டம் உயர உயர தாமரைத் தண்டின் நீளம் அதிகரிக்கும்.  மலர் மேலேயே இருக்கும்.  அதே தத்துவத்தை மனிதனின் கால்களுக்கும் கொடுத்து விட்டால் இந்த மழை என்ன, எந்த நீரின் அளவுக்கும் பயப்பட வேண்டாம்!

 
2)  வாகனப் போக்குவரத்தே வேண்டாம். நகரும் சாலைகள்.  அந்தந்தச் சாலைகளில் நின்றால் அந்தந்த இடத்துக்குப் போய்விடலாம்.  ஒன்றுக்கும் மேற்பட்ட வேக அளவுகளில்!  பெட்ரோல் செலவு இல்லை.  சாலை நெருக்கடி இல்லை!

 
3) தண்ணீர்த் தொட்டிகள் தண்ணீரால் நிறைய ஆட்டோமேடிக் லெவல் கண்ட்ரோல்கள் இருப்பது போல, பூமியின் நீர்த்தேவைக் குறையும்போது தானே மழை பொழிய வேண்டும்.  மழை அளவு அதிகமாகும்போது தானாகவே வெயில் வரவேண்டும்!

 
4) மரணங்கள் இருக்கட்டும்.  பூமிக்குச் சமநிலை வேண்டுமே.  ஆனால் மரணித்த அன்புக்குரியவரை மறுபடியும் நாம் விரும்பும் தருணங்களில் உடனிருக்குமாறு வைக்க வசதி.  அதற்கு இரண்டு முறை அனுமதி,  மூன்று முறை அனுமதி என்று கட்டுப்பாடு இருக்கலாம்.

 
5) இதயத்தை இரண்டு வையுங்களேன்.  சிந்தனை ஒருவழிச் சென்று என்ன பலன் கண்டோம்!  உறுப்பு தானம் சமயத்தில் ஒருவருக்கு பதில் இருவருக்கு உதவுமே!

 
6)  நல்ல விஷயங்களுக்காக பிறருக்கு உதவ நினைக்கும் போது மட்டும் நினைத்தது நடக்க வேண்டும்.  வேண்டுமானால் அதையும் ஒரு கட்டுக்குள்ளும், கிரிக்கெட் DRS போல இரண்டுமுறை, மூன்று முறை மட்டும் என்றும் அனுமதிக்கலாம்.

 
7) மனிதன் போடும் குப்பைகள் அனைத்தும் - அணுக்கழிவிலிருந்து அசிங்கக் கழிவுகள் வரை - பூமியைப் பாழ் படுத்தாமலிருக்க ஏதாவது ஒரு உடனடி வழி!

 
8) பிறந்தவர் அனைவரும் ஒருநாள் மறைந்துதானாக வேண்டும்.  அது விபத்து, பயங்கர நோய்கள் போன்ற பயங்கரக் காரணங்கள், வழிகளாயில்லாமல், 'நேரம்' வந்ததும் ஒரு வெளியூர்ப் பயணம் கிளம்புவது போல அமைதியாக நடக்க வேண்டும்.

 
9) கில்லர்ஜி ஆரம்பித்து பதிவர்கள் அனைவரும் கேட்டிருக்கும் ஆசைகளை தவணை முறையிலாவது நிறைவேற்ற வேண்டும்.

 
10) பத்தாவது ஆசையை உடனே கேட்காமல் இருப்பிலேயே வைத்துக் கொள்கிறேன்.  கடவுள் என்ற அந்தச் சக்தியை ஒரு கடன்காரன் போல நம் அருகிலேயே காத்திருக்க வைக்க வேண்டி!


31 கருத்துகள்:

  1. வணக்கம்
    ஐயா

    வித்தியாசமான சிந்தனை... இப்படியான தொடர் பதிவினால் வலையுலகம் மிக உச்சாகமாக உள்ளது...பகிர்வுக்கு வாழ்த்துக்கள் ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் நண்பரே பதிவுக்கு நன்றி
    01. அருமை நண்பரே தற்கால மழைச்சூழலுக்கு தகுந்தாற்போல கால்கள் நீளமாக...... ஹாஹ்ஹா ஸூப்பர்
    02. நகரும் சாலா அடடே.... அருமை
    03. எல்லாமே ஸ்விட்ச் போடுவது போல...
    04. சரிதான் ஆனால் அரசியல்வாதிகள் பணத்தைக்கொடுத்து தொண்டர்களின் உயிரை தக்க வைத்துக்கொண்டால்....
    05. இது காதலிப்பவர்களுக்கு உதவும் போலயே.....
    06. இதுகூட.... ஒரு மாதிரித்தான் இருக்கு...
    07. அருமை நாட்டில் மருத்துவர்களுக்கு வேலையில்லை.
    08. மரணம் அழகாய் இருத்தலா அவசியமே எதிரிகளுக்கும் கூட...
    09. மிக்க நன்றி எனது ஆசைகளை குறிப்பிட்டமைக்கு
    10. அப்ப எப்பதான் சொல்வீங்க,,,,,

    அருமையான தொகுப்பு வழங்கிய நண்பருக்கு மீண்டும் நன்றி

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்
    ஐயா
    முன்பு கருத்து எழுதும் போது பதிவை தமிழ் மணத்தில் சேர்க்க வில்லை.. அதனால் வாக்கு அளிக்க வில்லை இப்போது வாக்கு த.ம 3

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  4. மூன்றாவது ...சூப்பர் ஐடியா :)

    பதிலளிநீக்கு
  5. எல்லா ஆசைகளுமே நல்ல ஆசைகள்தான் கில்லர்ஜி மூலம் நிறைவேறினால் நல்லது.
    த ம 5

    பதிலளிநீக்கு
  6. ஆஹா ஆசைகள் நிறைவேறிட வாழ்த்துகள்...சார்

    பதிலளிநீக்கு
  7. அவசியமான ஆசைகள் தான். அதிலும் முதலாவது குள்ளமானவர்கள் தாம் விரும்பும் போது உயரமாக்கி காட்டவும் உதவும் என்பதால் ஒத்தைக்காலில் நின்றாவது அந்த ஆசையை நிறைவேத்தி விடுங்க!

    பதிலளிநீக்கு
  8. இந்த அழுகுண்ணி ஆட்டாம் எல்லாம் வேண்டாம் இந்த ஆசைகள் கிரேஸ் கேட்டு கொண்டதற்கிணங்க போடப்பட்டது அது போல இன்னும் 10 ஆசைகளை மைதிலி அவர்கள் கேட்டு கொண்டதற்கிணங்க போடவேண்டும் ..பெண் பாவம் பொல்லாதது சொல்லுறதை சொல்லிட்டேன் அதுக்கு அப்புறம் உங்கள் பாடு

    பதிலளிநீக்கு

  9. //நீரின் மட்டம் உயர உயர தாமரைத் தண்டின் நீளம் அதிகரிக்கும். மலர் மேலேயே இருக்கும். அதே தத்துவத்தை மனிதனின் கால்களுக்கும் கொடுத்து விட்டால் இந்த மழை என்ன, எந்த நீரின் அளவுக்கும் பயப்பட வேண்டாம்!///

    இந்த ஆசைமட்டும் நிறைவேறினால் நடுக்கடலுக்குள் தைரியமாக நடந்து செல்லலாம்... ஆஹா குட் ஐடியா

    பதிலளிநீக்கு
  10. அருமை நண்பரே
    வண்டி ஸ்பேர் பார்ட்ஸ் போல இரு இதயங்களைக்
    கேட்டிருக்கிறீர்கள் அருமை
    நன்றி நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
  11. கில்லர்ஜி என்னையும் அழைத்திருந்தார். பலர் கண்டுவிட்டீர்கள். என்னால் இதுவரை முடியவில்லை. அவரைக் காணவேண்டும் என்ற ஆசை நீடிக்கிறது. தங்களது ஆசைகள் அபாரம்.

    பதிலளிநீக்கு
  12. வாழ்த்துகள்! மாலை வந்து மீதியை சொல்கிறேன்:)

    பதிலளிநீக்கு
  13. பல ஆசைகள் ஹை-டெக் ஆசைகள்...

    வெளியூர்ப் பயணம் முன்பே தெரிந்து விட வேண்டும்... பிறகு எல்லாமே அமைதி தான்...! (?)

    பதிலளிநீக்கு
  14. காலத்தின் தேவைகளையும், மனதின் உணர்வுகளையும் பிரதிபலிக்கும் ஆசைகள்!

    பதிலளிநீக்கு
  15. விருப்பங்கள் (ஆசைகள்) இருக்க வேண்டும்
    அவை
    பெரும் விருப்பங்கள் (பேராசைகள்) ஆக இருக்க வேண்டாம்
    என்று பலருரைக்க
    பத்து விருப்பங்கள் (ஆசைகள்) பற்றிய தொடர்
    அருமையான தகவலைப் பகிர
    இடமளித்திருக்கிறது - அதிலும்
    சமகாலச் சூழலை ஒப்பிட்ட
    தங்கள் பதிவு சிறப்பு...
    அதாவது
    வெள்ளம் வந்து முட்ட
    கொடித் தாமரை நீள்வது போல
    மனிதக் கால் உயராதது ஏன்?

    பதிலளிநீக்கு
  16. கடவுள் என்ற அந்தச் சக்தியை ஒரு கடன்காரன் போல நம் அருகிலேயே காத்திருக்க வைக்க வேண்டி!///ரொம்ப பிடிச்சது...அருமையான ஆசைகள்...

    பதிலளிநீக்கு
  17. கடைசியாய் வந்த தகவல்கள் அடிப்படையில்

    இதுவரை கடவுளைக் கண்டேன் என்ற தலைப்பில் பதிவிட்ட
    அனைத்து பதிவர்களையும் சந்தித்து அவர்கள் ஆவல்களை, ஆசைகளை, பூர்த்தி செய்ய வந்த

    கடவுள் அலையஸ் ஆண்டவன் ஆல்சோ கால்டு இறைவன்

    மழை நீரால் சூழப்பட்டு வேளச்சேரி யில் தவிப்பதாக

    தெரிகிறது. ஆவலை சொன்ன பதிவர்கள் உடன் சென்று
    அவருக்கான பத்ரம், பலம் தோயம், ஆகியவை யுடன் வஸ்த்ரம்
    கொடுத்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  18. நீங்கள் ஏன் எப்படி இங்கு வந்து அகப்பட்டீர்கள் என்ற நிருபர்களின் கேள்விக்கு பதில் அளிக்கையில், God says,

    "நீங்கள் நேற்று விஜய் டி வி பார்க்கவில்லையா. அதில் அபிமன்யு உள்ளே புகுந்து வெளிலே வர முடியாமல் தவித்தது போல் தான் நானும்.

    தெரியாத்தனமா, ரமணன் சொல்லியும் கேட்காம வந்துட்டேன். எப்படி திரும்ப போறது ன்னு தெரியல்ல.

    வருணா, ஒரு வழி விடப்பா
    என்றார்.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  19. எட்டாவது ஆசை கட்டாயம் நிறைவேற்ற வேண்டும். நோயில் வாடி சிறுகச் சிறுகச் சாவது என்பது மிகக் கொடுமை. அதை அருகிலிருந்து பார்ப்பது இன்னும் கொடுமை.
    நான் எப்போதுமே என் அம்மாவிடம் சொல்வேன். அறுபது வயது ஆனவுடன் கடவுள் வரவேண்டும். 'அறுபது வயது ஆயிற்றா? பிள்ளை பெண்களுக்குத் திருமணம் ஆயிற்றா? பேரன் பேத்திகள் பார்த்தாயிற்றா? சரி வா போகலாம் என்று அழைத்துச் சென்று விடவேண்டும்' என்று.
    நேற்று ராமானுஜர் சீரியலில் ஒரு காட்சி: 'இந்தப் பூக்கூடை இக்கரையிலிருந்து அக்கறைக்கு மிதந்து வந்துவிட்டது. அதை நான் கரை சேர்த்தேன். அதேபோல, திருக்கச்சி நம்பி! காலம் வரும்போது உன்னையும் கரை சேர்ப்பேன்' என்று வரதராஜப் பெருமாள் சொல்லுவார். நமக்கும் அப்படிச் சொன்னால் நன்றாக இருக்குமே, சொல்லுவாயா? என்று அந்த வரதனை மனமுருக வேண்டிக் கொண்டேன்.
    ஸாரி! இந்த உங்களின் ஆசை என்னை ரொம்பவும் உணர்ச்சிவசப்பட வைத்துவிட்டது.

    பதிலளிநீக்கு
  20. நல்ல ஆசைகள்,,,,,,
    கடவுள் வந்தாரா???????

    பதிலளிநீக்கு
  21. மழையின் பாதிப்பு மனம் வெளிப்படுத்தும் ஆசைகளில் நன்றாகவே தெரிகிறது. :)))

    பதிலளிநீக்கு
  22. வித்தியாசமான ஆசைகள்! அனைத்தும் சிறப்பு! நன்றி!

    பதிலளிநீக்கு
  23. அந்த எட்டாவது ஆசை. எல்லோருக்கும் எட்டிப்பிடிக்கும் ஆசையாயிருந்து விட்டால் அதிலும் திருத்தம் கொண்டுவரத்தான் பார்ப்பார்கள். நல்லநல்ல ஆசைகள். நிறையமுறை படித்தேன். அன்புடன்

    பதிலளிநீக்கு
  24. ஹஹஹஹ்ஹ்ஹ் ஆசைகள் எல்லாம் ரொம்ப ஹைடெக்காக இருக்கின்றதே! சுஜாதாவை ரசிப்பவர் என்பதும் தெரிகின்றது கொஞ்சம்....ஹஹஹ ரசித்தோம் உங்கள் அத்தனை ஆசைகளையும்! ததாஸ்து!

    கில்லர்ஜி தான் இப்ப பிரதமர். தெரியுமில்லையோ. அவர் பார்த்திருப்பார். நோட் பண்ணியிருப்பார். ஸோ நோ கவலை! மோதிஜி இப்போ கில்லர்ஜி...ஜிக்கள் ஹைடெக்தான்...ஹஹ

    பதிலளிநீக்கு
  25. ஸ்ரீராம் சுப்புத்தாத்தா சொல்ல்லியிருப்பது போல் கடவுள் வேளச்சேரியில் மாட்டிக் கொண்டு தத்தளிக்கின்றாராம்.

    அடட்டா தாத்தா நாங்கள் தான் கடவுளை இங்கு வந்து செட்டில் ஆகச் சொன்னோம். பின்னே அவர் எங்களிடம் வந்து கில்லர்ஜி கொண்டு சென்ற மந்திரக்கோலை வாங்கித்தாருங்கள் என்றார். மவுசே போச்சுனு. மவுசு போச்சுனா தேடறது கஷ்டம் என்றோம். அதற்குக் கடவுள் ஐயோ மவுசு என்றால் பவர்..பவரே போச்சு என்றார்.

    அடடா...உங்க ஊர்ல பவரே இல்லையா...எங்க ஊர்ல பவர் போகவே போகாது ஸோ இங்கு வந்து பேசாமல் செட்டிலாகிவிடுங்கள் என்றோம்...ஏன்னா இந்தியா வல்லரசு...எங்கள் பதிவில்...கில்லர்ஜி பிரதமர்..

    அதான் கடவுள் வேளச்சேரியில மாட்டிக்கிட்டார் போல...சரி நாம எல்லாரும் சேர்ந்து அவரக் காப்பாத்திடலாமா தாத்தா. ஹஹஹ்

    கீதா

    பதிலளிநீக்கு
  26. தமிழ்மணத்தில் இணைக்கவும், வாக்கு அளிக்க நேரமாவதையும் admin@thamizmanam.com எனும் மின்னஞ்சலுக்கு தங்களின் மின்னஞ்சலிருந்து தகவல் அனுப்பவும்...

    முடிந்தால் செல்லும் தளங்களுக்கு எல்லாம் இதை (copy & paste) தெரிவிக்கவும்... செய்வீர்களா...? நன்றி...

    பதிலளிநீக்கு
  27. உடல்நலம், மின்சாரம் இரண்டும் தடைவிதித்தபோதும், தளராமல் பதிவிட்டதற்கு முதலில் பல நன்றிகள் ஶ்ரீராம்.
    ஒவ்வொன்றும் அருமையாய், "அட! இது நல்லாருக்குமே! "என்று நினைக்கவைத்த ஆசைகள்!
    இரண்டு இதயம் மட்டும் எனக்கு வேண்டாம், யாராவது மூணா எடுத்துக்கட்டும். ஒன்றை வைத்துக்க்கொண்டே 'அறிவு மனம்', 'அன்பு மனம்' இரண்டையும் சமாளிக்கமுடியல.. அது இரட்டிப்பானால்...?! :-)
    விரைவில் பூரண குணமடைய வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  28. கடைசி ஆசை - கலக்கல் ஆசை!

    உடல் நலம் முக்கியம்! பதிவுகள் காத்திருந்தால் தவறில்லை.....

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!