கில்லர்ஜி
தொடங்கி வைத்த தொடர்பதிவு. முதல் சுற்றில் நான் மாட்டாவிட்டாலும்,
எப்படியும் மூன்றாம், நான்காம், ஐந்தாம் சுற்றில் மாட்டி விடுவேன் என்று
நினைத்தேன். திரு துளசிதரன் மாட்டி விட்டு விட்டார்!
சொன்ன
நாள் முதல் எங்கள் ப்ளாக்கில் வீடியோ, பாசிட்டிவ், சமையல் என்று
தொடர்பதிவுகள் தினமாக இருந்ததால் இன்றுதான் பதிவை வெளியிட முடிந்தது!
1. நீ மறு பிறவியில் எங்கு பிறக்க வேண்டுமென்று நினைக்கின்றாய்?
இந்தியாவில்தான்
2. ஒருவேளை நீ இந்தியாவின் ஆட்சியாளனாக வந்துவிட்டால் சிறப்பாக ஆட்சி செய்யும் திட்டம் உன்னிடம் இருக்கின்றதா?
இருக்கிறது
3. இதற்கு வெளி நாட்டில் வாழும் இந்தியர்கள் எதிர்ப்புத் தெரிவித்தால் என்ன செய்வாய்?
வெளி நாடு வாழ் இந்தியரை 'இது உங்களை எவ்விதம் பாதிக்கிறது என்று சொல்லுங்கள்' என்று கேட்பேன்.
4. முதியோர்களுக்கென்று ஏதாவது திட்டம் வைத்திருக்கின்றாயா?
வைத்திருக்கிறோம்
5. அரசியல்வாதிகளுக்கென்று புதிய திட்டம் ஏதாவது?
இருக்கே!!
6. மதிப்பெண்கள் தவறென மேல் நீதிமன்றங்களுக்குப் போனால்?
எங்கள் பரிக்ஷை முறையில் அது நேராது.
7. விஞ்ஞானிகளுக்கென்று....ஏதும் இருக்கின்றதா?
அதுவும் உண்டு.
8. இதை உனக்குப் பிறகு வரும் ஆட்சியாளர்கள் செய்வார்களா?
செய்தால் பிழைப்பார்கள்.
9 மற்ற நாடுகளில் இல்லாத ஏதாவது புதுமையாக?
ஒருமுறை
விவாகரத்து செய்தவர் குறிப்பிட்ட காலத்துக்கு மீண்டும் திருமணம் செய்ய
முடியாது. விவாகங்களுக்கு முன் வருமானம், தாம்பத்யத் தகுதி, மருத்துவ
சான்றிதழ் இவை அனைத்தும் அவசியம்.
10. எல்லாமே
நீ சரியாக சொல்வது போல் இருக்கு, ஆனால் நீ மானிடனாகப் பிறந்து நிறைய
பாவங்களைச் செய்துவிட்டாய் உனக்கு மீண்டும் மானிடப்பிறவி கொடுக்க முடியாது
ஆகவே வேறு என்ன பிறவி வேண்டுமென்று இறைவன் கேட்டால்?
தேவனாகப் பிறந்து அவருக்கு உதவியாளனாகி விடுவேன்.
கிட்டத்தட்ட எனக்குத் தெரிந்த எல்லோரும் 'தொடர்ந்து' விட்டார்கள். எனவே தொடர நினைப்பவர்கள் தொடரலாம்....!!