அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

24.10.24

டீக்கடை

 டீக்கடை அனுபவம் என்பது தனி அனுபவம்.  அந்த டீயை இடது கையில் வைத்துக் கொண்டு, அவ்வப்போது மெல்ல சுழற்றி ...  ஏதோ உலகமகா பிரச்னையை தீர்ப்பது எப்படி என்று யோசிப்பது போல் யோசித்துக் கொண்டு மெதுவாக வாயில் ஒரு 'சிப்' உறிஞ்சி...

8.8.24

18.7.24

எதிர் இருக்கை யுவதி

 

இதுவரை சாப்பிடாத புதிய உணவகம் ஏதும் கண்ணில் பட்டால் மனதில் குறித்துக் கொண்டு அடுத்த வாய்ப்பில் உள்ளே நுழையும் வழக்கம் எனக்கு.

11.7.24

நமக்கெதுக்கு வம்பு!

 காக்கைகளிடம்  எனக்கோர் அனுபவம் உண்டு.  அது கூடு கட்டி இருக்கும் மரத்தின் அருகே சென்றோமானால், 'இத்தனை நாள் இவன்தான் நமக்கு உணவு கொடுத்தான்' என்றும் பாராமல் கத்தி ஆர்ப்பாட்டம் செய்து நம் தலையில் வலிக்குமளவு லொட்டென்று ஒன்று போடும்.

27.6.24

இல்லாத பொக்கிஷம்

 டெல்லியிலிருந்து  நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்திருந்த என் ஒன்று விட்ட தங்கை எங்களைக் காண வந்திருந்தாள்.பேசி, சிரித்து, களித்திருந்தபின் 'மாமா வீட்டுக்கு போகலாம், நீங்களும் வாங்க' என்று அழைத்தாள்.  நானும் பாஸும்  தங்கையுடன் கிளம்பினோம்.

16.4.20

காவலரைக் கண்டால்...


பொறுக்கியும் போலீஸும் - சிறு அனுபவத் தொடர் 

திருமணமாகி வந்து குடித்தனம் வைத்த புதிதில் நான் இருந்த இடம் மெயின் ரோடிலிருந்து விலகி அது இருக்கும் இடமே மற்றவர்களுக்குத் தெரியாததாய் அமைந்த ஒரு இடம்.  அது ஒருவகையில் பாதுகாப்பு. ஒருவகையில் பாதுகாப்பில்லை! 

28.2.19

மொபைல் பையில், பை வண்டியில், வண்டி?



புதுமணத்தம்பதிகள் முன்னே புடவை, வேஷ்டி சரசரக்க நடக்க, மற்றவர்கள் குழுக்குழுவாக தங்களுக்குள் உரையாடியபடியே தொடர்ந்தார்கள்.

18.1.18

நெல்லை வியாழன் : உங்களிடம் சில வார்த்தைகள் – கேட்டால் கேளுங்கள் – கேட்கமாட்டோம்னு சந்தேகம் இருக்குல்ல. அப்புறம் எதுக்கு அட்வைஸ்?


அன்புள்ள ஸ்ரீராம்,

வியாழன் பதிவு ‘உங்களிடம் சில வார்த்தைகள் – கேட்டால் கேளுங்கள்”., நீங்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க அனுப்பியிருக்கிறேன்.. 

அன்புடன்
நெல்லைத்தமிழன்  

1.6.17

பாஹுபலி - ஒரு பாப்கார்ன் அனுபவம்



முதலில் உற்சாகமாக இருந்தாலும் நாள் செல்லச்செல்ல ஒரு தயக்கமும், பதட்டமும் ஏற்பட்டது உண்மை.    

23.3.17

ஒண்ணுக்குப் போகும் மரம்




     பொதுச் சாலைகளில் அடிக்கடி நாம் காணும் காட்சி ஆங்காங்கே சிலர் திடீரென இயற்கை உபாதையைக் கழிக்க ஒதுங்குவது.  


16.2.17

குடையாளி கொடையாளி ஆன கதை




குடையாளி கொடையாளி ஆன கதையும், 250 ரூபாய் மிச்சம் பிடித்த கதையும்!



     ஞாயிறு மாலை பாகடோக்ரா விலிருந்து சுமார் 8000 அடி உயரத்தில் இருக்கும் டார்ஜீலிங் வந்து சேரும் பொழுது மழை வந்து  வரவேற்றதால் புத்த மடத்துக்கு செல்லும் ஆசையை மூட்டை கட்டி வைத்துவிட்டு சூடு சூடாக கொடுக்கப் பட்ட தேநீர் பிஸ்கட் இவற்றை சாப்பிட்டுவிட்டு ஜன்னல் வழியே தெரிந்த காட்சிகளை ரசித்துக் கொண்டிருந்தோம்.  ஆகையால் ஒரே இடத்திலிருந்து வேறு வேறு நேரங்களில் எடுக்கப்பட்ட கூரை மீது சின்டெக்ஸ் டாங்க் மசூதி இவை திருமபத் திரும்ப வந்து எல்லோர் பொறுமையையும் சோதித்துக் கொண்டிருக்கும் நேரத்தில்..



     சென்னையிலிருந்து ஒரே நாளில் ஏற்பட்ட வெப்ப நிலை மாறுதல் காரணமாக தூக்கம் சற்று தாமதமாக  வந்தது.  இருப்பினும் தீபாவளி அன்று எழுப்புவது போல காலையில் 0345 க்கு டிரைவர் கபில் சர்மா ஆஜராகி சீக்கிரம் கிளம்பினால் மட்டும் முன்னே போய் இடம் பிடிக்க முடியும் என்று ஆசை வார்த்தைகள் சொல்லி எல்லோரையும் எழுப்பி விட்டார்.


     ஆனால் நண்பர் விங்ஸ் மட்டும் நான்  குளிரில் எங்கும் வருவதாக இல்லை என்று சொல்லிவிட்டுப் போர்வைக்குள் ஒளிந்து கொண்டதனால் நாங்கள் நால்வர் மட்டும் டைகர் ஹில் நோக்கிப் புறப்பட சாலை பராமரிப்புப் பணிகள் நடந்துகொண்டி ருந்தமையால்   பக்கத்தில் இருந்த இன்னொரு குன்றின்மேல் போய் நின்றவுடன் மழையும் 'நானும் வந்தேன் உங்களோடு' என்று வந்தே சேர்ந்தது.  


     மணி 0420. குன்றின் உச்சியில் நின்றதால் காற்றும் மழையும் கடும் குளிருடன் போட்டி போட "சாய் ...சாய் " என்ற குரலைக் கேட்டதும் கடவுள் நம்மிடம் பேசினால் இப்படித்தான் இருக்கும் என்று தோன்றியது..



     இதற்குள் ஒரு குரல் பக்கத்தில் இருக்கும் கடையில் குடை விற்கிறார்கள் என்று கூவ,  'அப்பா காசு வச்சிருக்கியா?'  என்று பெண் கேட்டதும் முதலில் 'இல்லை' என்று சொன்னாலும்,  பின்னர் நாம்தான் நம் ஃபோன் கவரில் ஒரு 500 ரூபாய் வைத்திருப்போமேன்னு கவரைக் கழற்றினால் ....  இருந்தது ஒரு 500.



     குடை வாங்கி குழந்தைகளுக்கு பிடித்துக் கொண்டு தலையில் ஒரு கைக்குட்டையை போட்டுக் கொண்டு முடிந்த வரை படங்கள் எடுத்து திருப்தி பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் ஒரு பலத்த காற்று கைக்குட்டையை கொண்டு  போய் பள்ளத்தில் போட்டதும் காமெராவை குடைக்குள் இருப்பவரிடம் கொடுத்து விட்டு மழையில் நனைந்தவாறே போன் காமெராவை மட்டும் உபயோகித்து  ஹில் விஜயத்தை ரெகார்ட் செய்தோம்.  






     இதோ நாலரைக்குத் தெரியும்  ஐந்தேகாலுக்கு ஆறு மணிக்கு என்று பொழுது போய் ஏழரை என்றதும் இங்கே வராத வெயிலா கஞ்சன் ஜங்கா மேல் வீசப்போகிறது என்ற ஏமாற்றத்துடன் காரில் வந்து உட்கார்ந்தால்.......


Image result for kanjan janga images



     முதலில் வந்தவர் கடைசியில் என்ற கூற்றுப்படி 30 நிமிடங்கள் தாமதத்துக்குப் பின் நகர்ந்து ஊர்ந்து ஒரு வழியாக கூம் ரயில்வே ஸ்டேஷன் வந்து  மழை பெய்து கொண்டிருந்தாலும் பரவாயில்லை யுனெஸ்கோ வின் உலக சரித்திரத்  தளங்களில் ஒன்று என்ற அறிவிப்புப்பலகை யை  மட்டும் ஒரு படம் எடுத்துக் கொண்டு வந்து விடுகிறேன் வண்டியை தண்டவாளம் அருகே நிறுத்துங்கள் என்று சொல்லி மழையில் காமெரா நனையாமல் இருக்க ஒரு சின்ன டவல் போட்டுப் போர்த்திக் கொண்டு மழையில் இறங்கி ஓடிப்போய் நிலையத்துக்குள் அடைக்கலம் புகுந்து எடுத்த காட்சிகள் தான் ஞாயிறு படங்களில் நீங்கள்  பார்த்தது.



Image result for ghum railway station images



     பின்னர் வண்டியில் ஏறி 3 அல்லது 4 நிமிடங்கள் பயணித்த பின்னரே போன் இல்லாதது தெரியவர வண்டியைத் திருப்பிக் கொண்டு வர ஒரு 5 அல்லது 6 நிமிடங்கள்.  தொலைந்தது தொலைந்ததுதான் . கிடைக்கவில்லை.


     அஜாக்கிரதையாய் இருந்ததன் பலாபலன்கள் :


     15000 பெறுமான கைபேசி நஷ்டம் 


     சென்னையில் கிளம்பி டார்ஜீலிங் டைகர் ஹில் வரை எடுத்த படங்கள் அவ்வளவும் கிடைக்காமல் போனது [எங்கள் நஷ்டம் ..உங்கள் நஷ்டமும் தான்]


     103 வயது பாட்டி கீபோர்டில் வாசித்த பாட்டுக்கள்  போயே போயிந்தி.[இருந்தால் வெள்ளிக்கிழமை போடலாமோ ?]


     தொலைந்த போனுக்குப் பதில் வாங்கிய 1+3 லாபம்.


     குடை வாங்கியதால் ஒரு குடையும் 250 சில்லரையும் மிச்சம்.


     குடையை அங்கு உபயோகப் படுத்திய பின் ஹோட்டல் காவலரின் பெண்ணுக்கு கொடுத்ததுதான் நாங்கள் டார்ஜீலிங்கில் செய்த நல்ல காரியங்களில் உயர்வானது என்று ஒரு எண்ணம்.







 இரண்டு படங்கள் நன்றியுடன் இணையத்திலிருந்து...