புதன், 11 ஜனவரி, 2023

விநாயகருக்கும் மூன்று கண்கள் உண்டா? + சு நா மீ 07 : சுனாமி தாண்டவம்

 

பானுமதி வெங்கடேஸ்வரன் : 

புத்தாண்டு கொண்டாட்டங்களில்கலந்து கொள்வதுண்டா? இந்த வருடம் புத்தாண்டை எப்படி வரவேற்றீர்கள்?

# புத்தாண்டு நிகழ்ச்சிகள் என்று எதிலும் இதுவரை கலந்துகொண்டதில்லை.  பல ஆண்டுகளுக்கு முன்னால் டிசம்பர் 31 அன்று புல்லாங்குழல் மேதை மாலி கச்சேரி நடந்தது .  அன்று அவரை இரவு வரை வாசித்து புத்தாண்டு வாழ்த்து சொல்லச்  சொல்லி  கிருஷ்ண கான சபா காரியதரிசி கேட்டுக் கொண்டார்.  என் துரதிருஷ்டம் அன்று டபக் என்று மாலி ஒன்றரை மணி நேரத்தில்  "எனக்கு இன்று வாசிக்க வரவில்லை " என்று சொல்லி முடித்துவிட்டார்.  அதுவே அவரது கடைசி கச்சேரி.

& இந்த ஜனவரி 1 2023 - வீட்டில் இருந்தபடி அமைதியாக வரவேற்றேன். பயந்தபடி வரவேற்றது ஜனவரி 1 2000 ஆம் ஆண்டு. அப்போது மிலினியம் பயமுறுத்தல்கள் நிறைய இருந்தன. அப்போ குரோம்பேட்டையில் இருந்ததால் அருகிலிருந்த மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து திசை தவறிய விமானம் ஏதாவது எங்கள் வீட்டு மாடியில் வந்து இறங்கிவிடுமோ என்ற பயம்! 

விநாயகர் அகவலில் "மூன்று கண்ணும் மும்மத சுவடும்.." என்று வருகிறது விநாயகருக்கும் மூன்று கண்கள் உண்டா?

# சித்தி ரித்தி என்ற இரண்டு தேவிமார்களுடன் விநாயகரை வட இந்தியாவில் பார்க்கலாம்.  அந்த விநாயகருக்கு மூன்று கண்கள் உண்டு என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.

& உண்டு என்றுதான் நானும் படித்த ஞாபகம் 

சிவபெருமானுக்கு சூர்யனும், சந்திரனும் இரண்டு கண்களாகவும், அக்னி மூன்றாவது கண்ணாக அவரது நெற்றியில் உள்ளதாகவும் புராணங்கள் தெரிவிக்கின்றன. சிவபெருமானின் புதல்வரான விநாயகப் பெருமானுக்கும் மூன்று கண்கள் உண்டு என்றாலும் விநாயகர் விக்கிரகங்களில் இரண்டு கண்களே காட்டப்படுவது மரபு. விநாயகர் மூன்று கண்களோடு, ‘த்ரிநேத்ர கணபதியாக’ எழுந்தருளியிருக்கும் அரிய தலம் ராஜஸ்தான் மாநிலம் ரந்தாம்பூரில் உள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிரபலமான மாவட்டம் சவாய் மாதோப்பூர். 1763ம் ஆண்டு சவாய் மாதோசிங் என்ற ராஜபுத்திர மன்னரால் உருவாக்கப்பட்ட இந்த நகரம் அவர் பெயரால் சவாய் மாதோப்பூர் என்று அழைக்கப்படுகிறது. இந்நகரம் அமைந்த 252வது ஆண்டாக இவ்வாண்டு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. சவாய், மாதோப்பூர் மாவட்டத்தில்  அமைந்துள்ளது ரந்தாம்பூர் காட்டுப் பகுதி. ராஜஸ்தான் பிராந்தியத்தை ஆண்டு வந்த மன்னர்களில் மிகப் பிரபலமானவர் ப்ருத்விராஜ் சௌஹான் (1149-1192). இந்த மன்னர் பரம்பரையில் வந்தவர் விநாயகரின் பரம பக்தரான ஹமீர் தேவ் சௌஹான்.  ரந்தாம்பூர் பிராந்தியத்தை தலைநகராகக் கொண்டு 1282 முதல் 1301 வரை ஆட்சி புரிந்த இம்மன்னர் விநாயகப் பெருமான் அருளால் தன் 13 ஆண்டு ஆட்சிக் காலத்தில் 17 போர்களில் ஈடுபட்டு அவற்றில் 13ல் வெற்றி பெற்றார் என்று கூறப்படுகிறது.  இந்த மன்னர் ஆட்சியின் போது  டெல்லி சுல்தானாக இருந்த அலாவுதீன் கில்ஜி 1299ல் ரந்தாம்பூர் மீது படை எடுத்து வந்து, கோட்டையை சுற்றி வளைத்துக் கொண்டான்.

போர் துவங்குவதற்கு முன்பாக மன்னன் ஹமீர் தேவ் சௌஹான் கோட்டைக்குள்ளிருந்த சேமிப்புக் கிடங்குகளில் உணவுப் பொருட்களையும், தானியங்களையும் ஏராளமாக சேர்த்து வைத்திருந்தனர். ஆனால், போர் பல ஆண்டுகளுக்கு நீடிக்கவே உணவு தானிய இருப்பு குறைந்து கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. செய்வதறியாது திகைத்து நின்ற மன்னரின் கனவில் விநாயகர் தோன்றி மன்னன் சந்தித்த அனைத்து பிரச்னைகளும் உடனடியாக தீர்ந்து, போர் முடிவிற்கு வரும் என்று கூறி மறைந்தார். மறுநாள் காலை கோட்டைச் சுவரின் ஒரு பகுதியில் மூன்று கண்களுடன் கூடிய ஒரு விநாயகரின் புடைப்புச் சிற்பத்தை மன்னரும் பிறரும் கண்டு அதிசயித்தனர். மேலும் தானியக் கிடங்குகள் அனைத்தும் தானியங்களால் நிரம்பி வழிந்தன.  விநாயகரின் அருளால் நிகழ்ந்த இந்த அற்புதங்களைக் கண்டு மனம் நெகிழ்ந்த மன்னன், 1300ம் ஆண்டு கோட்டைக்குள் ஒரு ஆலயத்தை எழுப்பி த்ரிநேத்ர கணபதியைப் பிரதிஷ்டை செய்தான். ரந்தாம்பூர் கோட்டையின் மேற்குப்புறம் கோயில் கொண்டுள்ள காளி மாதாவிற்கும் மூன்று நேத்திரங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. தான் ஈடுபட்ட போர்களுக்கு முன்பாக ஹமீர் மன்னர் இந்தக் காளியை வந்து வழிபட்டு தேவியின் ஆசி பெற்று, பிறகுதான் போரில் ஈடுபட்டாராம்.

ராஜஸ்தான் ஆலயங்கள் பாணியில் முன்புறம் சிறிய விமானத்துடன் கூடிய நுழைவாயிலும் தொடர்ந்து பெரிய மண்டபத்தையும் கொண்டு இந்த ஆலயம் திகழ்கிறது. ஸ்ரீ த்ரிநேத்ர கணபதி ஆலயத்தின் கருவறையில் விநாயகப் பெருமான் எப்போதும் சிந்தூரப் பூச்சில், மூன்று கண்களுடன் எழுந்தருளியிருக்கிறார். அவருக்கு இரு புறங்களிலும் தேவியரான ரித்தியும் சித்தியும் காட்சி தருவதோடு, விநாயகரின் புத்திரர்களான சுப் மற்றும் லாப் ஆகியோரும் உள்ளனர். விநாயகர் முன்பாக அவர் வாகனமாக மூஷிகம் உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள விநாயகர் ஆலயங்களில் மிகப் பழமையானதாகக் கருதப்படும் இந்த த்ரிநேத்ர கணபதியை  பக்தர்கள் பிரதம கணேஷ் என்று போற்றுகிறார்கள். மேலும் இவரை மனதார வழிபட்டால் வாழ்வில் ஐஸ்வர்யங்கள் பெருகும் என்பதால் இவர் ஐஸ்வர்ய கணபதி என்றும் அழைக்கப்படுகிறார்.

விநாயகர் சதுர்த்தியை ஒட்டி மூன்று நாட்கள் நடைபெறும் மேளாவில் சுமார் 10 லட்சம் பக்தர்கள் இந்த ஆலயத்தில் கூடுகின்றனர்.  அப்படி வரும் பக்தர்கள் தாங்கள் கொண்டு வரும் பல்வேறு தானியங்களை ஆலய வளாகத்தில் இறைத்து, மீண்டும் அவற்றை வாரிச் செல்கின்றனர். இவ்வாறு கொண்டு செல்லும் தானியங்களை தங்கள் நிலங்களில் விதைத்தால் விளைச்சல் அமோகமாக இருக்கும் என்று நம்புகின்றனர்.
இதே போன்று ஆலயத்தைச் சுற்றிலுமுள்ள ஒரு சில கற்களை எடுத்து வந்து புதிய வீடு கட்டும்போது அவற்றைப் பயன்படுத்தினால் வீடு சீக்கிரம் கட்டப்பட்டு மகிழ்ச்சி ஏற்படும் என்றும் நம்புகின்றனர்.

பக்தர்கள் விநாயகர் அருளால் தங்கள் வாழ்வில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடந்த போதும், கோரிக்கைகள் நிறைவேறினபோதும் இந்த விநாயகருக்கு நன்றி தெரிவித்துக் கடிதங்கள் எழுதுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அன்றாடம் சுமார் 10 கிலோ எடை கொண்ட
கடிதங்கள், திருமண அழைப்பிதழ்கள் போன்றவை ஆலயத்திற்கு வருவதாகவும், அவற்றை பிரசாத தட்டுகளாக மாற்றுவதாகவும் ஆலய நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். பக்தர்கள், குறிப்பாக மார்வாரி இன மக்கள் தங்கள் இல்லங்களில் நடைபெறும் திருமண அழைப்பிதழை முதலில் இந்த விநாயகர் ஆலயத்திற்கு அனுப்பி வைக்கின்றனர். ஆலய அர்ச்சகர் அழைப்பிதழை விநாயகர் திரு முன்பாக படிப்பதோடு, ஓராண்டிற்கு அதை ஆலயத்தில் பத்திரப்படுத்தி வைக்கிறார்.

ஸ்ரீ த்ரிநேத்ர கணபதி ஆலயம் காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை திறந்திருக்கிறது. ஆலய முகவரி:  ரந்தாம்பூர் த்ரிநேத்ர கணேஷ் ஆலயம், சவாய் மாதோபூர், ராஜஸ்தான்-322 021. ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரிலிருந்து சுமார் 150 கி.மீ. தொலைவிலும், மாவட்டத் தலைநகரான சவாய் மாதோப்பூரிலிருந்து 15 கி.மீ. தொலைவிலும் ரந்தாம்பூர் உள்ளது.

தொலைகாட்சியில் சமையல் நிகழ்ச்சிகளை பார்ப்பதுண்டா? யெஸ் என்றால் எந்த செஃப் நடத்தும் நிகழ்ச்சியை விரும்பி பார்ப்பீர்கள்?

# எந்தக்  காலத்திலோ மல்லிகா பத்ரிநாத் நிகழ்ச்சி பார்த்தது லேசாக நினைவு இருக்கிறது.  எங்கள் நெருங்கிய உறவினர் வீட்டில் குஜராத்தி தெலுங்கு சமையல் நிகழ்ச்சிகளை நாள் தவறாமல் பார்ப்பார்கள்.  நான் அங்கு இருக்கும்போது அவர்களுடன் நானும் சுவாரஸ்யமாகப் பார்ப்பதுண்டு.

சமையல் நிகழ்ச்சிகள் நிறைய பார்த்தாலும் ஒன்று கூட செய்து பார்த்ததில்லை, நினைவில் நின்றதில்லை, குறிப்பு எடுத்து சேமித்ததும் இல்லை.

& நான் பார்ப்பது இல்லை. 

= ==    = = =

சு நா மீ 07 - சுனாமி தாண்டவம் 

முந்தைய பகுதி சுட்டி : பகுதி 06 

டிசம்பர் 26, 2004. 

சுருக்கமாகச் சொன்னால் .. 

நாகையிலும் நாகூரிலும் அன்று காலை வந்த பேரலையில்  இந்த  சம்பவங்கள் நிகழ்ந்தன 

நாகை கடற்கரையில் பௌர்ணமி குளியல் செய்யச் சென்ற சுப்பா ராவ் பேரலைக்கு பலியானார். 

மீனாக்ஷி மாமி மெஸ் மற்றும் மீகாம் கம்பெனியின் தரைத் தளம் எல்லாவற்றிலும் கடல் நீர் புகுந்ததால், பெருத்த சேதம். ஆனால் காலை நேரம் என்பதால், அலுவலகத்தில் மற்றும் கேண்டீனில் யாரும் இல்லாததால், ஆள் சேதம் எதுவும் இல்லை.  

= = = = = =

நாகூர் கடற்கரையில் தள்ளுவண்டியில் பட்டாணி விற்கும் பக்கிரிசாமி  கடற்கரையில் நிறுத்தி வைத்திருந்த தன்னுடைய தள்ளுவண்டி, பேரலையில் எங்கோ அடித்துச் செல்லப்பட்டிருந்ததால், அதைத் தேடி அலைந்தார். 

தனியே நின்றிருந்த ஒரு ரயில் பெட்டியின் அருகில், தன்னுடைய தள்ளுவண்டியின் ஒரு பகுதி கிடப்பதைப் பார்த்து, அதனருகே ஓடிச் சென்று பார்த்தார். 

= = = = 

சுப்பா ராவ் சட்டைப் பையில் இருந்த அவருடைய பர்ஸில் இருந்த விலாசத்தை வைத்து, போலீஸ், திருவாரூருக்குச் சென்று, அவரை அடையாளம் காட்ட, காந்தாமணியையும், தயாளனையும் ஜீப்பில் அழைத்து வந்தனர். 

இருபத்தைந்தாம் தேதி காலையில் கண் விழித்த காந்தாமணியும், தயாளனும், வீட்டின் கதவு தாளிடப்படாமல் இருந்ததையும், குழந்தைகளையும், தாங்கள் தயார் செய்து வைத்த குழந்தைகளின் பெட்டியும் காணாமல் போயிருப்பதைக் கண்டு என்ன ஆகியிருக்கும் என்று குழம்பியவண்ணம் இருந்தனர். 

போலீஸ் வந்து சுப்பா ராவ் உடலை அடையாளம் காண அழைத்ததும், இருவரும், சுப்பா ராவின் சகோதரரின் விலாசத்தை அவருடைய பெட்டியைக் குடைந்து எடுத்துக்கொண்டு, கிளம்பினர். 

போலீசுடன் சென்று சுப்பா ராவ் உடலை அடையாளம் காட்டிய இருவரும், நாகூரில் இருக்கும் சுப்பா ராவின் சகோதரர் வீட்டுக்குச் சென்று, சுப்பா ராவ் பற்றி தகவல் சொல்லி, சுப்பா ராவ் வந்தபோது அவருடன் குழந்தைகள் யாரும் வந்தனரா என்று விஜாரித்தார்கள். இல்லை என்று தெரிந்ததும், ஏமாற்றத்துடன் திரும்பி வந்தனர். 

போலீசாரிடம், ஒரு ஐந்து வயது பையன், இரண்டு வயது பெண் மற்றும் பெட்டி ஏதாவது கிடைத்ததா என்று கேட்டார்கள். 

போலீசார், எவ்வளவோ பேர், பொருட்கள் எல்லாம் கடலில் பேரலையால் இழுக்கப்பட்டு காணாமல் போய்விட்டார்கள். இப்போதைக்கு கிடைக்கின்ற உடல்களை அடையாளம் கண்டு உரியவர்களிடம் சேர்த்து வருகின்றோம். 

நீங்கள் சொன்னது போல குழந்தைகள், பெட்டி ஏதாவது கிடைத்தால், உங்களுக்கு தகவல் சொல்கிறோம் என்று கூறி அனுப்பினர். 

= = = = =

வீட்டுக்குத் திரும்பிய தயாளனும், காந்தாமணியும், ஒரு திட்டம் போட்டனர். குழந்தைகள் இருவரும், சுப்பா ராவுடன் விடுமுறை சுற்றுலாவாக நாகூர் சென்றதாகவும், எல்லோரும் பேரலைக்கு பலியாகிவிட்டதாகவும் ஒரு கதை தயார் செய்தனர். உள்ளூர் போலீஸ் அதிகாரிக்கும் தாராளமாக பணத்தைக் கொடுத்து, தாங்கள் கூறியதை உறுதிப்படுத்தச் சொல்லிவிட்டனர். 

தஞ்சாவூரிலிருந்து மூன்று நாட்கள் கழித்துத் திரும்பி வந்த தியாகராஜனிடம் இதைக் கூறி, கண்ணீர் விட்டனர். 

= = = =  

(தொடரும்) 

48 கருத்துகள்:

 1. நேற்றைய செவ்வாய் சிறுகதைக்குப் பின்னூட்டம்
  போட்டவர்களுக்கான கதாசிரியரின் மறுமொழிகள் தயார் நிலையில் இருக்கின்றன
  விருப்பம் கொண்டோர் வாசித்துக் கொள்ளலாம்.

  அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இருக்கும் கால நேர வித்தியாசம் இந்த பின்னூட்ட பதில்களுக்கான தாமதம் என்று கொள்ள வேண்டுகிறேன்.
  அன்புடன்,
  ஜீவி

  பதிலளிநீக்கு
 2. ஆஹா. வெல்டன், ஸ்ரீராம். தகவலுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 3. பானுமதி மேடம் வீட்டில், மொட்டை மாடியில் விமானம் இறங்கும் அளவுக்கு ரன்வே இருக்கிறதா ?

  சித்தி, புத்தி விநாயகருக்கு இரண்டு துணைவிகள் உண்டு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எங்கள் வீட்டு மாடியில் விமானம் இறங்கி விடுமோ என்று பயந்தது நான் இல்லை கில்லர்ஜி. & அவர்கள்.

   நீக்கு
 4. இன்று கூடாரவல்லி..

  நாளும் நல்ல நாள்..
  நல்லோர் நலம் பெருகவே..

  அன்பின் வணக்கங்கள்..

  பதிலளிநீக்கு
 5. // விநாயகர் அகவலில் "மூன்று கண்ணும் மும்மத சுவடும்.." என்று வருகிறது விநாயகருக்கும் மூன்று கண்கள் உண்டா?.. //

  ஔவையார் வாக்கிலும் சந்தேகமா?..

  முதலிரண்டு பதில்களும் சொதப்பல்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பிள்ளையார்!?..

   யாரது?... என்று கேட்காமல் விட்ட வரைக்கும் நல்லது..

   நீக்கு
  2. பானுக்கா கேட்டது அவங்க சந்தேகத்தில் அல்ல. விளக்கம் தெரியாத ஒன்றைக் கேட்டுத் தெரிந்து கொள்ளத்தான் கேட்டிருப்பாங்க. கேள்விகள் கேட்டால்தானே அண்ணா பதில்கள் கிடைக்கும், நல்ல கலந்துரையாடல் மற்றும் அதிலிருந்து தெளிவு பிறக்கும். மனதில் எழும் கேள்விகளுக்கான விடை தேடல்தானே ஆன்மீகம்..சிலருக்கு அவர்களுக்குள்ளேயே அகத்திலேயே விடை கிடைக்கும் சிலருக்குப் புறத்திலிருந்து,

   கீதா

   நீக்கு
  3. நன்றி கீதா. நான் சொல்ல விரும்பியதை நீங்கள் சொல்லி விட்டீர்கள்.

   நீக்கு
  4. //பிள்ளையார்!?..

   யாரது?... என்று கேட்காமல் விட்ட வரைக்கும் நல்லது..// 
   கேள்வி கேட்கும் உரிமையை நம் மதம் அளிக்கிறது துரை  சார். ஹிந்து மதத்தின் முக்கியமான நூல்களான உபநிஷதம் மாணவன் கேள்வி கேட்க, ஆசிரியர் அதற்கு அளித்த விடைதான். 
   பகவத் கீதையிலும் அர்ச்சுனன், கண்ணன் சொன்னதை அப்படியே ஏற்றுக் கொண்டு விடவில்லை. நிறைய கேள்விகள் கேட்கிறான். விஷ்ணு சகஸ்ரநாமம், மகாபாரதம் எல்லாமே கேள்விக்கு அளிக்கப்பட்ட பதில்கள்தான். கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும், தேடுங்கள் கிடைக்கும் என்பது ஏசுநாதரின் வாக்கு. இறைவனைப் பற்றிய கேள்விகள் இறை மறுப்பு அல்ல, தேடல்கள். 

   நீக்கு
 6. திரிநேத்ர கணபதி கோயில் பற்றிய தகவல் புதிது..

  மகிழ்ச்சி..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //திரிநேத்ர கணபதி கோயில் பற்றிய தகவல் புதிது..// இந்த தகவலை பெற்றுத் தந்தது என்னுடைய கேள்விதானே? அந்த வகையில் நீங்கள் எநக்கும் நன்றி சொல்லலாம். :))

   நீக்கு
  2. த்ரிநேத்ர கணபதி பற்றிய அரிய, அருமையான தவகல்களை புகைப்படத்தோடு பகிர்ந்தமைக்கு நன்றி கௌதமன் சார். 

   நீக்கு
 7. புதிய ஒரு கோயில் பற்றிய தகவல். நன்றி

  கதை ஃப்ளாஷ்பேக் சஸ்பென்ஸாகப் போகிறது!!

  கீதா

  பதிலளிநீக்கு
 8. ரத்தம்பூர் விநாயகர் படித்து அறிந்தோம்.
  சுனாமி தாண்டவம் தொடர்கிறோம்.

  பதிலளிநீக்கு
 9. //https://freetamilebooks.com/ebooks/pilliyar// பிள்ளையார் பற்றிய அனைத்து சந்தேகங்களுக்கும் விடை கிடைக்கும். நன்றி.

  பதிலளிநீக்கு
 10. கதையைப் படிச்சேன். அடுத்து என்ன? குழந்தைகள் எங்கே?

  பதிலளிநீக்கு
 11. உடம்பு சரியில்லாமல் மருத்துவரிடம் காட்டி மருந்து சாப்பிடும்போதே நடுவில் நுழைந்து அவங்க வைத்தியத்தையும் சொல்லுபவர்கள் பற்றி உங்கள் கருத்து என்ன? அதிலும் சிலர் பிடிவாதமாகத் தாங்கள் சொல்லுவதை வாங்கிச் சாப்பிட்டே ஆகணும் என வற்புறுத்துவது சரியா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //அதிலும் சிலர் பிடிவாதமாகத் தாங்கள் சொல்லுவதை// - நல்ல எண்ணத்திலும், கீசா மேடம் விரைவில் குணமாகணும் என்ற ஆசையிலும் சொல்லியிருக்கலாம் அல்லவா? இது டப்பா?

   நீக்கு
  2. கீதாக்கா எப்படி இருக்கீங்க? கொஞ்ச நாளாகக் காணவில்லையே கு குவோடு பிசியா? உங்க உடம்பு நலன் ஓகேவா?

   கீதா

   நீக்கு
  3. நல்ல எண்ணத்தில் சொல்வது எனில் மருத்துவரிடம் காட்டி மருந்து சாப்பிட்டு வரும்போதா தங்களோட சுய வைத்தியத்தையும் செய்யச் சொல்லி வற்புறுத்தணும்? அதிலும் கூகிளில் பார்த்துக் கண்டு பிடிச்சதும் கூட! கூகிளில் பார்த்து வைத்தியம் பார்ப்பது நல்லதா?

   நீக்கு
 12. எ.பி.வாசகர்கள், அல்லது ஆசிரியர்கள் அனைவருமே கொஞ்சம் சுரத்துக் குறைவாக இருப்பது ஏன்?
  பதிவுகள் சமீப காலத்தில் சரியாக போணி ஆகாமல் இருப்பதன் காரணம் என்ன?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்தக் கேள்வியை நானோ, கீதா ரங்கன்(க்கா)வோ இல்லை துரை செல்வராஜு சாரோ கேட்டால் நியாயம். இவங்களை இந்தத் தளத்தில் பார்த்தே பல வருஷங்களாகிறதே... அவங்களோட தி.பதிவுக்குக்கூட வந்த மாதிரித் தெரியலையே, பதிலும் சொன்னமாதிரித் தெரியலை. அப்புறம் ஏன் போணி, சுரத்து என்றெல்லாம் சொல்றாங்க? இவங்களுக்கு ஒரு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் போட்டுடவேண்டியதுதான். என்ன சொல்றீங்க கௌதமன் சார்?

   நீக்கு
  2. ஹாஹாஹா நெல்லை....பாவம் கீதாக்கா....

   கீதாக்கா எபி ஆசிரியர்களில் ஸ்ரீராமுக்கு உடம்பு படுத்தல், மனமும் கொஞ்சம் டல்னுதான் தெரிகிறது.

   கீதா

   நீக்கு
  3. கீதா ரங்கன்(க்கா)வோ//

   சின்னக்குழந்தை ங்கா ங்கா ன்னு சொல்ற மாதிரி இந்த நெல்லை க்கா வை விட மாட்டார் போல!!!!

   கீதா

   நீக்கு
  4. //எ.பி.வாசகர்கள், அல்லது ஆசிரியர்கள் அனைவருமே கொஞ்சம் சுரத்துக் குறைவாக இருப்பது ஏன்?//நான் கேட்க நினைத்த கேள்வி.

   நீக்கு
 13. //குறிப்பு எடுத்து சேமித்ததும் இல்லை.// - நான் இதே வேலையாக ஓரிரு வருடங்களுக்கு முன்பு இருந்தேன். சரியாக வராத சிலவற்றின் தலைப்பிலும் நான் என் கருத்தைப் போட்டிருக்கிறேன் (என்னுடைய நோட்டில்). அதிலிருந்து செய்துபார்க்கவேண்டியவைகள் சில இன்னும் இருக்கின்றன. ஆனால் செய்வதில் ஏனோ ஆசை போய்விட்டது. கிச்சன் என் வசம் வரும்போது ஒரு வேளை மாத்திரம் நன்றாகச் செய்துவிட்டு, அடுத்த வேளை எப்படியோ ஒப்பேற்றிவிடுகிறேன்.

  பதிலளிநீக்கு


 14. கேள்விகளும் , பதில்களும் அருமை.
  ரத்தம்பூர் விநாயகர் தகவல் அருமை.

  //பக்தர்கள் விநாயகர் அருளால் தங்கள் வாழ்வில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடந்த போதும், கோரிக்கைகள் நிறைவேறினபோதும் இந்த விநாயகருக்கு நன்றி தெரிவித்துக் கடிதங்கள் எழுதுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.//
  நன்றி தெரிவித்தல் சிறந்த செயல்.

  பதிலளிநீக்கு
 15. சு நா மீ 07 - சுனாமி தாண்டவம் படம் மனதை கலங்க வைக்கிறது.


  கதை நன்றாக போகிறது, தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு

 16. @ பானுமதி வெங்கடேஸ்வரன்

  // இறைவனைப் பற்றிய கேள்விகள் இறை மறுப்பு அல்ல, தேடல்கள்!..//

  நான் நினைத்த அர்த்தமே வேறு..

  இன்னும் சரியாகச் சொல்லி இருக்கலாம்..

  சோற்றுக்குள் பூசணிக்காய் மறைத்ததை எல்லாம் அழகாக விளக்கிய தங்களுக்கும் சந்தேகமா.. என்று தான்..

  ஔவையாரது திருவாக்கினை சிரமேற்கொண்டு
  விநாயகரிடம் நம் மனதை ஒப்புவித்து விட்டால் தக்க சமயத்தில் அவரே தன்னுடைய திருவுருவைக் காட்டி விடுவார்..

  அது நம் மனதின் பிரதிபலிப்பாக இருக்கலாம்..
  அதற்கு மேம்பட்டதாகவும் இருக்கலாம்...

  இந்த மாதிரியில் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரியின் திருவுருவை தரிசித்து இருக்கின்றேன்...

  ஸ்ரீ பாலாவின் திருவுருவம் அச்சு ஊடகங்களில் பிரபலமாகாத காலம் அது..

  தங்கள் விளக்கத்துக்கு மகிழ்ச்சி.. நன்றி..

  பதிலளிநீக்கு
 17. சில புதிய தகவல்களை அறிந்து கொண்டேன்...

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!