வெள்ளி, 13 ஜனவரி, 2023

வெள்ளி வீடியோ : காதலுக்கு மார்கழி ரொம்ப நல்ல மாசம்

 சூலமங்கலம் சகோதரிகள் குரலில் ஒரு பாடல் மறுபடி...   திருநீற்றின் பெருமை உரைக்கும் பாடல்.  யார் எழுதியது என்று தெரியவில்லை.  இசை சூலமங்கலம் சகோதரிகளாகவே இருக்கலாம்.


திருநீறில் மருந்திருக்கு தெரியுமா - அதை 
தினமணிந்தால் புகழிருக்கு புரியுமா - முருகன் 
திருநீறில் மருந்திருக்கு தெரியுமா 

அருள் மணக்கும் ஐயனின் திருமருந்து - நல்ல 
அறிவுக்கண்ணை திறந்து வாய்க்கு அருமருந்து 
அன்பு வழியில் வாழவைக்கும் பெருமருந்து - நல்ல 
ஆசியெல்லாம் நமக்கென்றும் தரும் மருந்து - வேலன் 

கன்னியை கற்பு வழியில் நடத்தும் மருந்து - இளங் 
காளையரை காலமெல்லாம் காக்கும் மருந்து 
மங்கையர்க்கு மழலைச்செல்வம் கொடுக்கும் மருந்து -திரு 
மங்கலமாய் குங்குமமும் வழங்கும் மருந்து - குமரன் 

கற்பனையில் கவிதைப் பாடச் செய்யும் மருந்து - பெரும் 
கள்வரையும் திருந்தி வாழச் செய்யும் மருந்து 
முன்வினை தந்த நோயெல்லாம் தீர்க்கும் மருந்து - நம் 
வாழ்வில் நல்ல செல்வமெல்லாம் சேர்க்கும் மருந்து - கந்தன் 


=============================================================================================

கோகுலகிருஷ்ணா இயக்கத்தில் 1982 ல் வெளியான திரைப்படம் 'அர்ச்சனைப்பூக்கள்'.  சந்திரசேகர் ஹீரோ என்று நினைக்கிறேன்.  மோகன் கௌரவ நடிகராக நடித்திருக்கக்கூடும்.  மோகனும் சங்கராபரணம் ராஜலக்ஷ்மியும் காட்சியில் தோன்றி வாயசைக்கும்,

எஸ் பி பாலசுப்ரமணியமும், எஸ். ஜானகியும் பாடும் கங்கை அமரன் பாடல் இன்றைய பகிர்வில்.    இசை இளையராஜா.

க்தி பாடலை மட்டும் கேட்டு விட்டு கம்பி நீட்டுபவர்களுக்கு நல்ல பாடல் ஒன்றைக் கேட்காத நஷ்டம்!

காவிரியே…காவிரியே
காதலி போல் விளையாடுறியே
காவியம் ஆயிரம் பாடுறியே
இந்த காதலன் நெஞ்சத்தைக் கூடுறியே
ஏங்கும் நெஞ்சம் இங்கே வாடுது

காவிரியே…  காவிரியே
காதலன் போல் விளையாடுறியே
காவியம் ஆயிரம் பாடுறியே
இந்த காதலி நெஞ்சத்தைக் கூடுறியே
ஏங்கும் நெஞ்சம் இங்கே வாடுது

காவிரியே  காவிரியே…
காதலி போல் விளையாடுறியே

பொன்னை அள்ளித் தூவுதே மஞ்சள் நிற மேகம்
என்னை அள்ளிப் போகுதே கொஞ்சுகிற ராகம்

என்னமோ…
ம்ம்
பண்ணுதே…
ம்ம்
இந்த மன வேகம்

அள்ளிக்கொள்ள வந்தேனம்மா
அன்பை அள்ளித் தந்தேனம்மா
இனிமேல் யாவும் நீதானம்மா

ஆசை வச்சேன் ஆசை வச்சேன்
அம்மன் கோவிலு பூஜை வச்சேன்
ஒன்ன பார்த்த ஒரு பாசம் வச்சேன்
உன் உள்ளம் பார்த்ததும் நேசம் வச்சேன்
காலம் நேரம் ஒண்ணாச் சேர்ந்தது

காவிரியே…காவிரியே
காதலி போல் விளையாடுறியே

காதலுக்கு மார்கழி ரொம்ப நல்ல மாசம்
ஹோய் கண்டபடி வீசுதே மல்லியப்பூ வாசம்

கையிலே…
ஹா
கையிலே…
ம்ம்
கன்னிப்பொண்ணு பேசும்

புதுசா பாடம் சொல்லி
மெதுவாய் என்னை அள்ளி
சுகமா தாங்க வாழ் நாளெல்லாம்

காவிரியே…காவிரியே
காதலி போல் விளையாடுறியே
காவியம் ஆயிரம் பாடுறியே
இந்த காதலன் நெஞ்சத்தைக் கூடுறியே
ஏங்கும் நெஞ்சம் இங்கே வாடுது

லால்லல் லா லால்லல் லா
லாலா லல லா லால்லல் லா

45 கருத்துகள்:

 1. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவருக்கும் இந்த நாளை நல்லதொரு நாளாக இறைவன் அமைத்து தருவார். நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கமலா அக்கா. வணக்கம். பிரார்த்திப்போம்.

   நீக்கு
 2. வணக்கம் சகோதரரே

  முதல் பக்திப்பாடல் அடிக்கடி கேட்டுள்ளேன். கருத்துள்ள வரிகளுடன் அருமையான பாடல். நன்றாக இருக்கும். இதுபோல் திருநீற்றின் மகிமை சொல்லும் பாடலான "கந்தன் திருநீறணிந்தால் கண்ட பிணி ஓடி விடும்."என்ற டி. எம். எஸ்ஸின் பாடலும் அடிக்கடி கேட்டுள்ளேன். அதுவும் நன்றாக இருக்கும்.அதையும் ஒருநாள் பகிர வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். . இல்லை ஏற்கனவே பதிந்து விட்டீர்களா? பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கும் அந்தப் பாடலும் நினைவுக்கு வந்தது! பகிர்கிறேன்.

   நீக்கு
 3. வணக்கம் சகோதரரே

  இரண்டாவது பாடலைப் பார்த்த மாத்திரத்தில் இது கேட்காத பாடலாக தோன்றுகிறது. மோகன் திரைப்படபாடல்கள் ஆடியோ கேசட்களில் கேட்டு ரசித்த காலங்கள் மறக்க இயலாதவை. இந்தப்படம் பெயர் கேள்விப்பட்டதில்லை. ஒருவேளை பாடல் கேட்டால் நினைவுக்கு வருமென நினைக்கிறேன்.

  /பக்தி பாடலை மட்டும் கேட்டு விட்டு கம்பி நீட்டுபவர்களுக்கு நல்ல பாடல் ஒன்றைக் கேட்காத நஷ்டம்!/

  ஹா ஹா ஹா. இது நம் எஸ்பிபி என்பதால் கண்டிப்பாக கேட்கிறேன். பிறகு இரண்டு பாடல்களையும் சேர்ந்தாற் போல கண்டிப்பாக கேட்டு விட்டு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 4. மோகன் என்று மொட்டையாகச் சொல்வதை விட மைக் மோகன் எனலாம்.
  எத்தனை படங்கள்?
  அந்நாளைய கனவுக் கண்ணன். அவருக்கென்றே பாடல்கள், அவருக்கென்றே இசை,
  அவருக்கென்றே காட்சி அமைப்புகள் என்று கொடிக்கட்டிப் பறந்த காலம். மேக்-அப்பிற்கும் ரொம்ப சிரமப்பட வேண்டாம். டக் பண்ணின பேண்ட்- முழுக்கை சட்டை. அவ்வளவு தான். மோகன்
  ஷாட்டிற்கு ரெடி.

  பதிலளிநீக்கு
 5. திருநீர் பாட்டில், ஆரம்பத்தில்
  புகுத்திருக்கு என்பதை
  புகழிருக்கு என்று திருத்தி விடுங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சரி ஸார். மாலை திருத்துகிறேன். அல்லது கேஜிஜி திருத்தி விடுவார்.

   நீக்கு
  2. ஓ.. ஆபிஸ் கிளம்பியாச்சா?
   ஸாரி..

   நீக்கு
 6. //கோகனும் சங்கராபரணம் ராஜலக்ஷ்மியும் காதையில் தோன்றி வாயசைக்கும்,//?????????????????????

  பதிலளிநீக்கு
 7. ஆனாலும் குறும்பு உங்களுக்கு.
  மோகனும் ராஜலெஷ்மியும்
  காட்சியில் தோன்றி வாயசைக்குமா?..
  மற்றவர்களெல்லாம்
  பாடல் காட்சியில் என்ன செய்கிறார்களாம்?
  எங்க மோகனா இருக்கக் கண்டு ரொம்ப டீஸண்ட்
  கூட.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காட்சியில் யார் தோன்றுகிறார்கள் என்று சொல்ல வேண்டாமா பின்னே?

   நீக்கு
 8. லல்லல்லா-க்கெல்லாம் இத்தனை லால் இத்தனை லல், இத்தனை லா - என்று எண்ணிப் போடுவீர்களாக்கும்?
  ஹி..ஹி..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நானே பாடல் வரிகளை டைப்பினால் கண்டிப்பாய் எண்ணிப் போடுவேன்.

   நீக்கு
 9. திருநீரில் மருந்திருக்கு தெரியுமா.... இந்தப் பாடலுக்கு காணொளி பார்க்கவே வேண்டாம். பாடல் வரிகளும் அவர்கள் குரலும் மனதில் ஓடி மயங்கச் செய்யும். டி எம் எஸ்ஸின், கந்தன் திருநீறணிந்தால் பாடலும்.

  பதிலளிநீக்கு
 10. மைக் மோகன் பயங்கர லக்கி ஃபெல்லோ. அவருக்கு நடிக்க வேலையே கிடையாது. இளையராஜா, சில பல படங்களில் கவுண்டமணி போன்றவர்கள் படத்தை ஓட்டிவிடுவார்கள்.

  பதிலளிநீக்கு
 11. இரண்டாவது படம் காணொளியைக் கேட்டால் பாடல் கேட்ட நினைவு வருகிறது

  பதிலளிநீக்கு
 12. முதல் பாடல் பல்லாயிரம் முறைகள் கேட்டு ரசித்தது.

  இரண்டாவது பாடலும் கேட்டு இருக்கிறேன் ஜி

  பதிலளிநீக்கு
 13. இந்த நாள் இனிய நாள்..

  எல்லாருக்கும் இறைவன் அருளட்டும்..

  நலம் வாழ்க..

  பதிலளிநீக்கு
 14. முதல் பாடல் அறவுரை.. அறிவுரை..

  நாம் திருநீறு தரித்து இருக்கின்றோம்... தவறு செய்யக் கூடாது என்ற எண்ணம் மனதில் வேரூன்றி விட்டால் அதுவே மேல்நிலைக்கு இட்டுச் சென்று விடும்..

  இந்தப் பாடலைப் பதிவு செய்ததில் மகிழ்ச்சி.. நன்றி..

  பதிலளிநீக்கு
 15. அர்ச்சனைப் பூக்கள்..
  1982 ல் சிங்கப்பூரில் இருந்தேன்.. அப்போதைய பாடல்களில் மனதுக்கு மிகவும் நெருக்கமான பாடல் இது..

  பொன்னை அள்ளித் தூவுதே மஞ்சள் நிற மேகம்
  என்னை அள்ளிப் போகுதே கொஞ்சுகிற ராகம்..

  மனதை மயங்குகின்ற வரிகள்..

  சிறப்பான பாடல்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ.. நீங்களும் கேட்டிருக்கிறீர்கள் என்பதும், பிடிக்கும் என்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது.

   நீக்கு
 16. ரொம்ப நாட்கள் கழித்து இரண்டாவது பாடலை ரசித்தேன்...

  பதிலளிநீக்கு
 17. முதலாவது பாடல் அடிக்கடி கேட்ட பாடல் பக்தி ரசம் கொட்டும்.

  இரண்டாவது ஓரிரு தடவைதான் கேட்டிருக்கிறேன். இன்று முழுமையாக கேட்டு ரசித்தேன். இனிமை கொஞ்சுகிறது.

  வெள்ளி பாடல் பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 18. மோகனின் சிரிப்பு மனதை கொள்ளை கொள்ளும் மோஹன சிரிப்பு. காவிரி நதிக் கரையோரத்தை அழகாகாக் காட்சிப்படுத்தப்பட்ட இனிமையான பாடல்.

  பதிலளிநீக்கு
 19. முதல் பாடல் நிறையக் கேட்டதுண்டு. அருமையான பாடல். வேறொரு பாடலும் இதைப் போன்று வரிகள்..டி எம் எஸ் பாடியது உண்டே....டக்கென்று நினைவுக்கு வர மாட்டேங்குதே

  இரண்டாவது பாடல் ரசித்த பாடல். மோகன் நடித்த சீன் பாடல் ராகம் மோஹனம்!!!! இதே ராகம், கொஞ்சம் ட்யூன் வேறொரு பாடல் மனதில் ஓடுகிறது.....வரிகள் ...ம்ம்ம்...வரிகள்....ம்ஹூம் டக்குன்னு வரலை....ஹூம் இங்கு ஹம் பண்ணிப் போடும் வசதியை ப்ளாகர் வைத்து இருக்கக் கூடாதோ!!!

  ஆஹா வந்திருச்சே பாட்டு....நிலவு தூங்கும் நேரம்.....அதுவும் மோகனம்.....

  கீதா

  பதிலளிநீக்கு
 20. வணக்கம் சகோதரரே

  இரண்டாவது பாடலும் நன்றாக உள்ளது. இதையும் அடிக்கடி கேட்டிருக்கிறேன் என்பது பாடலை கேட்டதும் நினைவுக்கு வந்தது.எஸ். பி. பி, ஜானகி அவர்களின், அதுவும் இருவரும் சேர்ந்து பாடும் பாடலின் குரலினிமைக்கு கேட்கவா வேண்டும்...! அருமையாக உள்ளது. "கண்மணியே காதல் என்பது கற்பனையோ காவியமோ" என்ற பாடலையும் இதன் ஆரம்ப வரிகள் நினைவுபடுத்துகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 21. முன்வினை தந்த நோயெல்லாம் தீர்க்கும் மருந்து - நம்
  வாழ்வில் நல்ல செல்வமெல்லாம் சேர்க்கும் மருந்து - கந்தன் //
  அருமையான பாடல் அடிக்கடி கேட்கும் பாடல்.
  "கந்தன் திருநீறு அணிந்தால் கண்டபிணி ஓடிவிடும்" பாடலும் பிடிக்கும்.

  அடுத்த பாட்டை கேட்ட நினைவே இல்லை, படமும் பார்க்கவில்லை.

  இப்போது கேட்டேன் இனிமையாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 22. சீர்காழி அவர்களுக்கு உளுந்தூர்பேட்டை சண்முகம்,

  டி எம் எஸ் அவர்களுக்குத் தமிழ்நம்பி

  சூலமங்கலம் சகோதரிகளுக்கு
  பூவை செங்குட்டுவன்..

  - பாடல்களை எழுதுவர்..

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!