திங்கள், 30 ஜனவரி, 2023

"திங்க"க்கிழமை  :   ராகி சேமியா உப்புமா - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி 

  ராகி சேமியா உப்புமா 




தேவையான பொருள்கள்:






ராகி சேமியா    -   200gm.
வெங்காயம்     -    1
பச்சை மிளகாய் அல்லது   -  2 அல்லது 3(காரத்திற்கு ஏற்ப)
வற்றல் மிளகாய் 
உப்பு  -  1 1/2 டீ ஸ்பூன் 
தாளிக்க:
எண்ணெய்  -  
கடுகு 
உளுத்தம் பருப்பு  - 1 1/2 டீஸ்பூன் 
கடலை பருப்பு  -  1 1/2 டீஸ்பூன்   
கறிவேப்பிலை  - சிறிதளவு 
உப்பு    - தேவையான அளவு 

செய்முறை:

முதலில் ராகி சேமியாவை குளிர்ந்த நீரில் கழுவி வடிகட்டிக் கொள்ளவும். நீர் நன்றாக வடியட்டும். 



பின்னர் வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, அது காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடித்ததும் உ.பருப்பு, க.பருப்பு, மிளகாய், கறிவேப்பிலை இவைகளை சேர்த்து சிவக்க வறுத்துக் கொண்ட பிறகு வெங்காயத்தை போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் வடிகட்டிய ராகி சேமியாவை சேர்த்து தேவையான உப்பையும் சேர்த்து உசிலிக்கவும். 



ராகி வெந்த பிறகு தட்டை போட்டு வாணலியை மூடி வைக்க வேண்டியது முக்கியம். 



சுவையான, சத்தான உப்புமா ரெடி. 

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் ராகியை குளிர்ந்த நீரில்தான் அலம்ப வேண்டும். தண்ணீர் நன்றாக வடிய வேண்டும். தவறுதலாகக் கூட வெந்நீரை சேர்த்து விடக்கூடாது, ராகி குழிந்து களி போல ஆகி விடும். 





30 கருத்துகள்:

  1. முதல் படத்தில் ராகி உப்புமா மட்டுமல்ல தவாவும் அருமையாக இருக்கிறது....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா..ங்! நன்றி. வடையை எண்ணச் சொன்னால், துளையை எண்ணுகிறாயே? என்பார்கள். நீங்கள் பரவாயில்லை, பதார்த்ததோடு பாத்திரத்தையும் பாராட்டியிருக்கிறீர்கள். மிக்க நன்றி :))

      நீக்கு
  2. ராகி சேமியா உப்புமா,  போஹா போன்று செய்ய வேண்டும். ரவை உப்புமா, சாதா சேமியா உப்புமா போல் செய்யக் கூடாது. 

    பதிலளிநீக்கு
  3. யாரையும் காணோம். ராகி என்பதற்கு பதில் ராக்கி (சாவந்த்) என்றிருந்தால் எட்டிப் பார்ப்பார்களோ?

    பதிலளிநீக்கு
  4. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  5. ராகி சேமியா நானும் செய்வேன். நீங்கள் எளிதாக செய்முறை சொல்லி இருக்கிறீர்கள். படங்கள் நன்றாக இருக்கிறது.

    நான் மூன்று நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து வடிகட்டி ஆவியில் வேக வைத்து பின் உதிர்த்து பாதியில் சர்க்கரைத்தூள் , தேங்காய் துருவல் போட்டும், வெங்காயம் பச்சை மிளகாய் இஞ்சி, தக்காளி போட்டு தாளித்து தேங்காய் துருவல் போட்டும் செய்வேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் செய்முறையிலும் ஒரு முறை செய்து பார்க்க வேண்டும். ராகி வெர்மிசிலி பாக்கெட்டில் நீங்கள் சொல்வது போலத்தான் போட்டிருக்கிறார்கள்.

      நீக்கு
  6. அருமை... இதே போல் வீட்டில் அடிக்கடி செய்வார்கள்...

    பதிலளிநீக்கு
  7. அருமை... இதே போல் வீட்டில் அடிக்கடி செய்வார்கள்...

    பதிலளிநீக்கு
  8. படங்களோடு சொன்ன விதம் அருமையாக உள்ளது

    பதிலளிநீக்கு
  9. இந்த நாளும் இனிய நாளே..

    எல்லாருக்கும் இறைவன் அருளட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  10. கேழ்வரகு சிறந்த உணவு..

    அதை விட்டு விட்டு வெகுதூரம் வந்த பிறகு அதன் பின்னால் ஓடிக்கொண்டிருக்கின்றோம்...

    பதிலளிநீக்கு
  11. குவைத்தில் இருந்தபோது அடிக்கடி இப்படி செய்திருக்கின்றேன்..

    கேழ்வரகு ஷெமாய் பால் பாயசமும் செய்யலாம்!...

    பதிலளிநீக்கு
  12. கேழ்வரகு ஷேமாய் உப்புமா செய்முறை படங்களுடன் அழகு!..

    பதிலளிநீக்கு
  13. பானுக்கா, நல்ல ரெசிப்பி. கேழ்வரகு சேமியா படங்கள் செமையா இருக்கு. அக்கா இதை அப்படியே வீடியோவா நீங்க எடுத்து (படங்கள்இல்லாமலோ அல்லது ஒன்றிரண்டு கொடுத்துட்டு) இங்கயும் பதிவோடு இணைத்துவிட்டால் பார்வையாளர்கள் கிடைப்பாங்க இல்லையா?

    நம் வீட்டிலும் ரொம்பப் பிடித்த டிஃபன். அடிக்கடி செய்வது நாங்கதான் ஸ்வீட்டாச்சே!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  14. முதல் படம் செமையா இருக்கு அப்படியே ஈர்க்கிறது,

    கீதா

    பதிலளிநீக்கு
  15. சகோ கமலா ஹரிஹரன் அவர்கள் வரவில்லையே... ஏன் ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஊரிலிருந்து மகன் வந்து இருப்பதாக சொன்னார்கள். நேரம் கிடைக்கும் போது வருவதாக சொன்னார்கள்.

      நீக்கு
  16. அம்மா செய்யும் சுவையான உணவுகளில் ஒன்று

    பதிலளிநீக்கு
  17. சத்தான உப்புமா. நன்று. படங்களும் நன்று.

    நாங்கள் பெரும்பாலும் புட்டு, ரொட்டி செய்வோம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!