வெள்ளி, 27 ஜனவரி, 2023

வெள்ளி வீடியோ : ஒரு புறம் நான் அணைக்க தழுவி மறுபுறம் நீ அணைக்க

 குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் சூலமங்கலம் சகோதரிகள் பாடியுள்ள பாடல்களில் ஒன்று இன்று தனிப்பாடலாக...  எழுதியவர் தானு கோபால் என்கிறது காணொளியில் வரும் இசைத்தட்டு!  மேலும் தகவலாக பாடல் முதலில் வெளியான ஆண்டு 1966 என்றும் சொல்கிறது.


தெய்வத்தமிழ் தெய்வமய்யா..
தெய்வத்தமிழ் தெய்வமய்யா அருள் செய்யும் 
திருமுருகையா நீ 
தெய்வத்தமிழ் தெய்வமய்யா 

சிரிக்கின்ற சிரிப்பெல்லாம் சிரிப்பாகுமா 
சிரிக்கின்ற சிரிப்பெல்லாம் சிரிப்பாகுமா உன்னை 
தெரியாத உயிரெல்லாம் உயிராகுமா 
சிரிக்கின்ற சிரிப்பெல்லாம் சிரிப்பாகுமா 
சிரிக்கின்ற சிரிப்பெல்லாம் சிரிப்பாகுமா உன்னை 
தெரியாத உயிரெல்லாம் உயிராகுமா 
பறிக்கின்ற மலரெல்லாம் மணம் வீசுமா 
பறிக்கின்ற மலரெல்லாம் மணம் வீசுமா 
என்னை படைத்தபின் துணை செய்ய மனம் கூடுமா 

மயிலேறி விளையாடும் அழகோடு வா 
மயிலேறி விளையாடும் அழகோடு வா 
கண்மலராக அழகே நீ துணையோடு வா 
மயிலேறி விளையாடும் அழகோடு வா 
மயிலேறி விளையாடும் அழகோடு வா 
கண்மலராக வடிவே நீ துணையோடு வா 
படியாடும்   சிலையாக பழமாக வா 
படியாடும்   சிலையாக பழமாக வா 
தமிழ் பண்போடு உறவாடும் கலையாக வா 
தமிழ் பண்போடு உறவாடும் கலையாக வா 

====================================================

1987 ல் வெளியான பாலச்சந்தரின் 'மனதில் உறுதி வேண்டும்' கதை ஓரளவு அரங்கேற்றம், அவள் ஒரு தொடர்கதையின் தொடர்ச்சி.  தமிழ்ப் படங்களை பொறுத்தவரை எஸ் பி பாலசுப்ரமணியம் நடித்த முதல் படம்.ரொம்ப சுவாரஸ்யமான கேரக்டராக வருவார்.  டாக்டர் அர்த்தநாரி!  விவேக் அறிமுகமான படம்.

பாலச்சந்தரின் நாயகிகள் சந்தோஷமாக இருக்க அவர் விட்டதில்லை.  மனதில் உறுதி வேண்டும் நந்தினியையும் அவ்வாறே!

எனக்கு இரண்டு பாடல்கள் இந்தப் படத்தில் மிக மிகப் பிடிக்கும்.  அதில் ஒன்று இன்று.  கே ஜே யேசுதாஸ், கே எஸ் சித்ரா குரலில் சங்கத் தமிழ்க்கவியே பாடல்.

வாலியின் பாடல்களுக்கு இளையராஜா இசை.

சங்கத்தமிழ் கவியே
சந்தங்கள் சொல்லும் இசைக்குயிலே
தன்னந்தனியாக தவித்தால்

தாகம் அடங்கிடுமோ

சங்கத்தமிழ் கவியே
சந்தங்கள் சொல்லும் இசைக்குயிலே
தன்னந்தனியாக தவித்தால்

தாகம் அடங்கிடுமோ சங்கத்தமிழ் கவியே ஏ

மாதுளம் பூவிருக்க
அதற்குள் வாசனை தேனிருக்க
பாதியை நான் எடுக்க
மெதுவாய் மீதியை நீ கொடுக்க

காதலன் கண்ணுறங்க
தலைவி கூந்தலில் பாய் விரிக்க
ஒரு புறம் நான் அணைக்க ஆ
ஒரு புறம் நான் அணைக்க
தழுவி மறுபுறம் நீ அணைக்க

சாத்திரம் மீறிய கீர்த்தனம் பாட
சுகங்களில் லயிப்பவள் நான்
சங்கத்தமிழ் கவியே ஏ
சங்கத்தமிழ் கவியே

பூங்குயில் பேடைதனை
சேரத்தான் ஆண் குயில் பாடியதோ
ஓடத்தைப்போல் நானும்
ஆடதான் ஓடையும் வாடியதோ

காதலன் கை தொடத்தான்
காதலன் கை தொடத்தான்
இந்த கண்களும் தேடியதோ
நீ வரும் பாதையெல்லாம்
அங்கங்கே பார்வையை ஓடவிட்டேன்

நீ வரும் பாதையெல்லாம் அங்கங்கே
பார்வையை ஓடவிட்டேன்
தோழியர் யாவரும் கேலிகள் பேச
தினம் தினம் நான் தவித்தேன்

சங்கத்தமிழ் கவியே
சந்தங்கள் சொல்லும் இசைக்குயிலே
தன்னந்தனியாக தவித்தால்

தாகம் அடங்கிடுமோ



31 கருத்துகள்:

  1. இரண்டும் அருமையான பாடல்கள் ஜி

    பதிலளிநீக்கு
  2. அனைவருக்கும் காலை/மதியம்/மாலை வணக்கம். நல்வரவு. வாழ்த்துகள். பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா அக்கா.. வணக்கம். பிரார்த்திப்போம்.

      நீக்கு
  3. முதல் பாடல் கேட்டதே இல்லை. இரண்டாம் பாடல் கேட்டிருக்கேன். ஆனால் படம் பார்த்தது இல்லை. ஒரு நிலைக்கு அப்புறமா எழுத்தாளர்களில் பாலகுமாரன் அலுத்துப் போன மாதிரி திரைப்பட இயக்குநர்களில்பாலசந்தரும் அலுத்துப் போனார். ஆகவே அநேகமா நவகிரஹத்துக்கு அப்புறமா அவர் படம் "கண்ணா நலமா" மட்டும் பார்த்திருப்பேன் என நம்பறேன். பிடிக்காமல் போய்விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சூலமங்கலம் சகோதரிகள் பாடல் நீங்கள் கெட்டாதே இல்லை என்பது ஆச்சர்யம்.  பின்னாட்களில் வந்த கேபி படங்களில் சில படங்கள்தான் நானும் பார்த்திருக்கிறேன்.

      நீக்கு
  4. சங்கத் தமிழ் பாடல் எவ்வளவோ வருடங்களுக்குப் பிறகு கேட்கிறேன். ரொம்ப நல்ல பாடல்.

    சலங்கையொலி பாதிப்பில் கொரியோகிராபி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். அந்த நடிகரும் நன்றாகவே ஆடி இருப்பார். பாடல் இனிமையான பாடல்.

      நீக்கு
  5. முதல் பாடல் நிறையதடவை கேட்ட பாடல். நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  6. முதல் பாடல் மிகவும் பிடித்த பாடல் அடிக்கடி கேட்கும் பாடல்.
    அடுத்த பாடல் கேட்டு வெகு நாட்கள் ஆகி விட்டது,
    இனிமையான பாடல்.

    பதிலளிநீக்கு
  7. இந்த நாளும் இனிய நாளே..

    எல்லாருக்கும் இறைவன் அருளட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  8. முதல் பாடல் இனிமையான பாடல்...

    சூலமங்கலம் சகோதரிகளின்
    அழகிய பாடல்களில் இதுவும் ஒன்று..

    பதிலளிநீக்கு
  9. இரண்டாவது பாடலும் இனிய பாடல் தான்.. ஆனாலும்,

    மனதில் ஏனோ ஒட்டியதில்லை..

    இத்தனை ஆண்டுகள் ஆகியும் அந்தப் படத்தைப் பார்க்க மனம் விரும்பியதில்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படம் பிடிக்க வேண்டும் என்றில்லை, பார்க்க வேண்டும் என்றில்லை. பாடலை ரசிக்க முடிந்தால் போதும்/

      நீக்கு
  10. முதலாவது பாடல் எங்கள் அப்பா ஒலிக்கவிட்ட பாடல் கேட்டிருக்கிறேன்.

    இரண்டாவதும் கேட்டிருக்கிறேன் அண்மையில் கேட்டதில்லை.

    இரண்டுமே நல்ல பாடல்கள்.

    பதிலளிநீக்கு
  11. காலையிலிருந்து கருத்து போகவே மாட்டேங்குது...என்னாச்சுன்னு தெரியலை இது பரிசோதனைக்காக!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  12. ஹப்பா ஒரு வழியா வந்திடுச்சு..

    இரு பாடல்களுமே கேட்டு ரசித்த பாடல்கள் இப்பக் கூட முதல் பாடல் கேட்டுக் கொண்டேதான் கருத்து தட்டிங்க்!

    கீதா

    பதிலளிநீக்கு
  13. இரண்டாவது பாட்டு ரொம்பப் பிடித்த பாட்டு...அது ராகமாலிகா இங்க முன்ன ஒரு தடவை சொல்லியிருக்கேனோ....மூன்று ராகம்

    கீதா

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாடல் பகிர்வு இரண்டும் அருமையாக உள்ளது. முதல் பக்திப் பாடல் கேட்டதில்லை. இப்போதுதான் கேட்டு ரசித்தேன்.

    இரண்டாவது திரைப்படப் பாடல் அடிக்கடி கேட்டு ரசித்துள்ளேன். நல்ல இனிமையான பாடல். இந்தப்படத்திலலும் சிந்து பைரவி படத்திலும் சுஹாசினியின் நடிப்பு நன்றாக இருக்கும். இரண்டுமே தொலைக்காட்சியில் பார்த்து ரசித்த படங்கள்.

    /பாலச்சந்தரின் நாயகிகள் சந்தோஷமாக இருக்க அவர் விட்டதில்லை. மனதில் உறுதி வேண்டும் நந்தினியையும் அவ்வாறே!/

    ஆம். உண்மை. ஆனால் அந்த கதாநாயகியரின் மன தைரியங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். (எனக்கு மனதில் தைரியம் போதாது என்ற எண்ணத்தில்தானோ என்னவோ. :))) அதனால் அவரின் படங்களை ரசிப்பேன்.

    என் இளைய மகன் அலுவலக வேலையாக தீடிரென வந்திருப்பதால் என்னால் எல்லோரது பதிவுகளுக்கும் அவ்வளவாக வர இயலவில்லை. மன்னிக்கவும். அவ்வப்போது இப்படி வருகிறேன். அனைவருக்கும் என் அன்பான நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா.. கருத்துக்கு நன்றி. நேற்று உங்களை காணோமே என்று தேடி இருந்தேன்! மகனைக் கவனியுங்கள். சந்தோஷ தருணங்கள்.

      நீக்கு
    2. வணக்கம் சகோதரரே

      உங்கள் அன்பான பதில் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      ஆமாம். எங்கள் மகன் தீடிரென சென்ற வியாழனன்று காலையில் வந்ததில் மிகவும் சந்தோஷத்தில் திக்குமுக்காடி விட்டோம். "உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்ஸாக இருக்கட்டுமென இப்படி என" தீடிரென சொல்லாமல் கொள்ளாமல் வந்து திகைப்பில் ஆழ்த்தி விட்டார். அவருடன் ஒவ்வொரு நாளும் நேரமும் வேலைகளுடன் சரியாக செல்கிறது.

      நேற்று உஙகள் பதிவையும், கருத்துக்களில் என்னைப்பற்றி குறிப்பிட்டதையும் இரவு படுக்கும் முன் வாசித்தேன். இன்று காலையில் அதற்கும்சேர்த்து கருத்துரை தரவேண்டுமென நினைத்திருந்த போது, இன்று எதிர்பாராமல் குடும்பத்துடன் வெளியில் செல்லும் ஒரு பயணம் வந்து விட்டது.அதனால் உடனே தர முடியவில்லை.மன்னிக்கவும். இப்படியாவது எல்லோரின் பதிவுகளுக்கும் வருகிறேன். அனைவரும் பொறுத்துக் கொள்ள வேண்டும். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!