18.4.26

வாரம் ஒரு பாசுரம் - பகுதி 16 - நான் படிச்ச கதை

 

 நாலாயிர திவ்யப் பிரபந்தம் – வாரம் ஒரு பாசுரம் தொடர்

நெல்லைத் தமிழன்

குரு பரம்பரை மற்றும் பாசுரம் – பகுதி 16


மழலை மங்கலத்தில் தனக்கு கங்கைக் கரையில் கிடைத்த பாணலிங்கத்தை பிரதிஷ்டை செய்தார் உள்ளங்கை கொணர்ந்த நாயனார் (கோவிந்த பட்டர், இளையாழ்வாரின் சித்தியின் குமாரன்) என்று பார்த்தோம். அதைத் தொடர்ந்து காளஹஸ்தி நாதரின் ஆணைக்கு இணங்க, காளஹஸ்தி கோயிலுக்குச் சென்று கோயில் பொறுப்பை ஏற்றுக்கொண்டார் கோவிந்த பட்டர். 

காளஹஸ்தி என்பதால், அந்தத் தலத்தின் புராணத்தையும் சென்ற வாரம் கண்ணப்பநாயனார் வரலாறு மூலம் சுருக்கமாகக் கண்டோம். 

பாபஹரீஸ்வரர் கோயில் தரட்சி என்ற ஊரில், திருவள்ளூர் மாவட்டத்தில் ஊத்துக்கோட்டை அருகில் உள்ளது. அம்பாள் திருநாமம் மரகதாம்பிகை. இந்தக் கோயிலின் இறைவனை வழிபடுவது சிதம்பரம் நடராஜனை வழிபடுவதற்குச் சமம் என்று நம்பப்படுகிறது. நம் பாபத்தை எல்லாம் அழிக்கும் ஈஸ்வரன் என்பது பொருள். கோயிலின் அருகில் ஆரணி ஆறு ஓடுகிறது. இந்த ஆறு ஆந்திரப் பிரதேசத்தில் உற்பத்தி ஆகி திருவள்ளூர் மாவட்டம் வழியாக பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது. 

சந்திரகிரி மன்னன் கட்டித்தேவன் யாதவராயன், இராமானுசரின் வழிகாட்டுதலின்படி வடதில்லை என்று அழைக்கப்படும் இந்த இடத்தில் கோயில் கட்டினான். உள்ளங்கை கொணர்ந்த நாயனார் கொண்டுவந்த பாணலிங்கம், பிறகு அவர் வைணவ மதத்திற்கு மாறிய பிறகு, அவர் நினைவாக, இராமானுஜர் இந்தக் கோயிலை எழுப்ப வழிகாட்டினார் என்று கொள்ளலாம். இங்கு மூலவர் பாபஹரீஸ்வரர் முன்பு உள்ளங்கை நாயனார் கொண்டுவந்த பாணலிங்கம் இருக்கிறது. இதனைப் படித்தவுடன் அந்தக் கோயிலைப் பற்றி சில படங்களுடன் இங்கு எழுதவேண்டும் என்று எழுதுகிறேன். படங்கள் இணையம். 

பாபஹரீச்வரர் சன்னிதி. மூலவரின் முன்னால் ஆவுடையாரின் மேல் பாகத்தில் சிறிய பாணலிங்கம் தெரிகிறதா?

இனி நம் கதையைத் தொடர்வோம். கோவிந்த பட்டர் காளஹஸ்தி கோயிலுக்கு பொறுப்பாளர் ஆகிவிட்டார். இதற்கிடையில் யாதவப்பிரகாசர் தன் சீடர்களுடன் காஞ்சிக்கு வந்துவிட்டார். அங்கு அவர் இளையாழ்வாரைக் கண்டு ஆச்சர்யப்பட்டு, விந்தியக் காடுகளில் உங்களுக்கு என்னானதோ என்று ரொம்பவே வருதினோம் இங்கு உம்மைக் கண்டு ரொம்பவே சந்தோஷம் என்றார். இளையாழ்வாரும் என்ன நடந்தது என்று (அதாவது வேடுவ தம்பதி வேடத்தில் திசை தெரியாது காட்டில் திரிந்த தன்னை காஞ்சி சாலைக்கிணறுக்குக் கொண்டுவந்த கதையை விஸ்தாரமாகச்) சொன்னார். அது கேட்டு, யாதவப் பிரகாசரும் ஆச்சர்யமடைந்து பிறகு தம்முடைய கோஷ்டிக்குத் திரும்ப வந்து வேதாந்த பாடங்களைத் தொடர்ந்து கேட்கச் சொன்னார்.

இந்தச் செய்திகளெல்லாம் காஞ்சீபுரத்திலிருந்து திருவரங்கத்திற்குச் சென்ற ஸ்ரீவைணவர்கள், அங்கு எழுந்தருளியிருந்த ஆளவந்தாரிடம் சொன்னார்கள். இதனைக் கேட்டு, நெருப்பு கொழுந்துவிட்டு எரியும் இரும்பு அடுப்பில் தாமரை பூத்ததுபோல அபூர்வமாக இப்படி ஒருவர் உண்டாகப் பெற்றோம் என்று மகிழ்ந்து, அவரைப் பார்க்கவேண்டும் என்று எண்ணி, தன் சீடர்களுடன், காஞ்சீபுரம் நோக்கிப் போனார்.

ஆளவந்தார் காஞ்சீபுரம் வந்ததும், தம்முடைய ஆச்சார்யார் எழுந்தருளிய செய்தியைக் கேட்டு, திருக்கச்சி நம்பி அவரை எதிர்கொண்டு அவர் திருவடிகளில் விழுந்தார். பிறகு திருக்கச்சி நம்பியுடன் ஆளவந்தார் கோஷ்டியுடன், காஞ்சீபுரம் பேரருளாளனைச் சேவிப்பதற்காக வரதராஜப் பெருமாள் கோயிலுக்குச் சென்றார்.    

காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலை உங்களில் பலர் தரிசித்திருக்கலாம். கோயிலின் க்ஷேத்திரபாலர் என்று சொல்லப்படுபவர் நரசிம்மர். அவர் சிறிய குன்றின் கீழ் எழுந்தருளியிருக்கிறார். அவருக்கு முன்னால் இடது பக்கத்தில் உள்ள சிறிய கோயிலில் (அதற்கும் கொஞ்சம் படிகள் ஏறவேண்டும்) பெருந்தேவித் தாயார் சன்னிதி உள்ளது. வேண்டுபவர்களுக்கு வேண்டுவதைத் தருபவர் இந்த பெருந்தேவித் தாயார். தாயாரைச் சேவித்த பிறகு பிரதட்சணமாக வந்தால், திருப்புற்றும் அதற்குக் கிழக்காக கரியமாணிக்கப் பெருமாள் சன்னிதி உண்டு. அதையும் சேவித்து பிரதட்சணமாக வந்து பேரருளாளன் சன்னிதிக்குச் செல்லும் படிகள் வரும். பேருளாளன் அஸ்திகிரி என்று சொல்லப்படும் மிகச் சிறிய குன்றின் மீது இருக்கிறார். குன்று சுமார் 10 மீட்டர் உயரமுடையது. 24 படிகள் கொண்டது.

இந்தக் கோயில் சோழர்களால் 11ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட து. சுமார் 23 ஏக்கர் அளவு பரப்பளவுடையது. 1053ல் கட்டப்பட்டிருந்தாலும் முதலாம் குலோத்துங்கச் சோழன் மற்றும் விக்கிரம சோழன் காலத்தில் விரிவுபடுத்தப்பட்டது. 17ம் நூற்றாண்டு முஸ்லீம்கள் படையெடுப்பின் காரணமாக உற்சவர், திருச்சிக்கு அருகிலுள்ள உடையார் பாளையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு பிறகு கடும் முயற்சியால் பின்பு இந்தக் கோயிலை வந்தடைந்தது. இந்தக் கோயிலைப் பற்றி கோயில் தரிசனப் பகுதியில் காண்போம்.

காஞ்சீபுரம் பேரருளாளப் பெருமாள் (தேவப் பெருமாள்)

ஆளவந்தார், திருக்கச்சி நம்பியுடனும் தன் கோஷ்டியுடனும் பெருந்தேவித் தாயாரைச் சேவித்துவிட்டு, பிறகு கரியமாணிக்கப் பெருமாள் சன்னிதியில் சேவித்துத் திரும்பும்போது, யாதவப் பிரகாசரும் அவருடன் கல்வி கற்பவர்களும் பெருமாளைச் சேவித்துவிட்டு பிரதட்சணமாக வந்துகொண்டிருந்தனர். தூரத்தே அந்தக் கூட்டத்தைப் பார்த்துவிட்டு ஆளவந்தார், திருக்கச்சி நம்பியிடம், இவர்களில் இளையாழ்வார் யார் என்று கேட்க, அதற்கு திருக்கச்சி நம்பி, சிவந்து நெடிய, அகன்ற மார்புடன் ஒளியுடன் கூடிய முகத்துடன் நடுவே வருகிற உயரமானவர்தாம் இளையாழ்வார் என்றார். 

அவரைத் தான் இருந்த இடத்திலிருந்தே கண்ணால் கண்டு, ஆம் முதல்வன் இவன் என்ற திருவாய்மொழி பாசுர வார்த்தைகளைச் சொன்னார். அப்போது நின்று இளையாழ்வாரைக் கூப்பிட்டுப் பேசுவதற்கு அவகாசமில்லாமல் (அதாவது இது தகுந்த சந்தர்ப்பம் அல்ல என்று அவர் உள்ளத்தே தோன்றியிருக்கவேண்டும்) ஹஸ்திகிரியின் மேல் நின்று சேவை சாதிக்கும் தேவப்பெருமாளிடம், இளையாழ்வாரை நம்முடைய தரிசனத்திற்குத் தந்தருளவேண்டுமென்று ப்ரார்த்தித்தார். பிறகு திருக்கச்சி நம்பியை பெருமாள் சன்னிதியிலேயே விட்டுவிட்டு, தாமும் தம் மற்ற சீடர்களுடன் திருவரங்கம் நோக்கிச் சென்றார்.  இன்றைக்குப் பொருத்தமான பாசுரம் ஒன்றைப் பார்க்கலாம். 

ஆம் முதல்வன் இவனென்று* தன்(த்) தேற்றி,* என்

நாமுதல் வந்து புகுந்து* நல் இன்கவி,*

தூமுதல் பத்தர்க்குத்* தான் தன்னைச் சொன்ன,* என்

வாய்முதல் அப்பனை* என்று மறப்பனோ?     

பொருள்: தன்னைப் பற்றிக் கவி பாடுவதற்கு முதல்வன் இவன் என்று தன்னை நான் புரிந்துகொள்ளும்படிச் செய்து , முதலில் என் நாவில் புகுந்து நல்ல இனிய கவிகளை முதன்மையான தன்னுடைய அடியார்களுக்கு தானே தன்னைச் சொன்ன, என்னுடைய வாக்சாதுர்யத்துகுக் காரணமான அப்பனை நான் மறக்க இயலுமா? என்கிறார் நம்மாழ்வார். 

விளக்கம்:  ஆமுதல்வன் – குருகூர்ச் சடகோபனாகிய நம்மாழ்வாரே முதன்மையான கவிஞன் என்று. தன் தேற்றி – தன் சொரூபம் குணம் முதலானவற்றைத் தெளிவித்து, அதாவது உலகத்தைத் திருத்தத்தக்க ஞானம் உண்டாகும்படி மயர்வற மதிநலம் அருளி.  வாய் முதல் அப்பன் – என் வாக்குக்குக் காரணகர்த்தாவான பெரும் உபகாரம் செய்தவன். 

இதன் மூலம் நம்மாழ்வார் சொல்வது இந்தப் பாசுரங்களை நான் பாடவில்லை. என்னை ஒரு மூலமாகக் கொண்டு என் நாவில் அந்த இறைவனே அமர்ந்து, அவனுடைய அடியார்களுக்குப் பயன்படுமாறு தன்னையே பாடிக்கொண்டான் என்கிறார். 

சரி… இளையாழ்வாரை, ஆளவந்தார் காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலில் முதன் முதலில் பார்த்த இடம் எது?

இங்குதான் யாதவப் பிரகாசருடைய கோஷ்டியுடன் இளையாழ்வார் வந்துகொண்டிருந்தார். இதன் எதிரே இருக்கும் கரியமாணிக்கப் பெருமாள் சன்னிதி அடுத்த படத்தில்.

நடுவில் மண்டபம் போன்று தெரிவது கரியமாணிக்கப் பெருமாள் சன்னிதி. இங்கு தரிசனம் முடித்துக் கீழே இறங்கும்போதுதான் யாதவப் பிரகாசர் கோஷ்டியில் இளையாழ்வாரை ஆளவந்தார் கண்டு, ‘ஆம் முதல்வன்’ என்று சொன்னது.

இனி அடுத்த வாரம் தொடர்வோம்...

-----------------------------------------------------------------------------------------------------------------------------


நான் படிச்ச கதை

வந்தவளை – எங்கள் சவடால் 2K+11

கதையாசிரியர்: அப்பாதுரை

முன்னுரை

சாதாரணமாக ஒரு ஆசிரியரின் ஒரு கதைக்கு மேல் இப்பகுதியில் இடம் பெறாமல் தவிர்த்து வந்தேன் - அவர் எத்தனை புகழ் பெற்றவராக இருந்தாலும். அனால் விதிவிலக்காக அப்பாதுரை சார் எழுதிய ஒரு அம்புலி மாமா கதையை இங்கு தருகிறேன். இந்த மாற்றத்திற்கு காரணம் செவ்வாய் சிறுகதையில் விக்ரமாதித்தன் கதை இடம் பெற்றதிற்கு பதிலாக என்றால் மிகையாகாது.

அப்பாதுரை சாருக்கே உரிய வடிவேலு பாணி நக்கல் நகைச்சுவை ததும்பும் ஒரு கிளி/அரக்கன் (அம்புலிமாமா டைப்) கதை. ஆரம்பமே நக்கல் தான். ஆனால் கதை என்ற ஒன்றை தேடாதீர்கள். எப்படி பலாச்சுளையை தின்று கொட்டையை ஒதுக்கி வைக்கிறோமோ அது போல் நகைச்சுவையை ரசித்து கதையை ஒதுக்கி விடுங்கள்.  கதைக் கருத்து என்று ஆங்கில fairy tales மற்றும் இந்திய மன்னர் கதை என இரண்டு கதை அம்சம்களையும் இணைக்கிறார் ஆசிரியர். அதாவது ரீமிக்ஸ் என்பார்களே அதுதான்.

கதை sirukathaigal.com இல் இருந்து பெறப்பட்டது.

=======>கதையின் சுட்டி <=========

வந்தவளை – எங்கள் சவடால் 2K+11

வேகமாக நடந்த புங்கவர்மனைத் தொடர்ந்தாள்.

“மன்னா.. மன்னா”

“என்னா?”

“நான் சொல்வது காதில் விழாதது போலச் செல்கிறீர்களே? என் கணவருக்கு உறவோ என்று நினைத்துவிட்டேன்.. எனக்கு உதவி செய்வீர்களா?”

“பெண்ணே.. அரக்கன் கணவன் காப்பாற்று போன்ற வசனங்களெல்லாம் கூத்துக்குப் பொருந்தும், சோத்துக்குப் பொருந்தாது. ஆளை விடம்மா”

“உங்களால் மட்டுமே முடியும் மன்னா, மறுக்காதீர்கள்”

“இது போல் எத்தனை பேரிடம் சொல்லியிருக்கிறாய் பெண்ணே?”

“ஆறு பேரிடம் மன்னா”

“பிறகென்ன வசனம் வேண்டிக் கிடக்கிறது? உங்களால் மட்டுமே முடியும்..” என்று அவள் சொன்னது போலவே புங்கவர்மன் இழுத்தான். “ஆளை விடம்மா.. வசனம் பேச வேறு ஆளைப்பார்”

(படம் இணையத்திலிருந்து. ஆனால் கதைக்கேற்றது என்பது பொருந்தாது. தவறு உண்டு.)

“கூத்துக்குப் பொருந்தும், சோத்துக்குப் பொருந்தாது என்று சொன்னீர்களே? கேட்டதேயில்லை மன்னா. அதற்கு என்ன பொருள்?”

இதற்குள் அவனுடன் வேட்டைக்கு வந்தவர்கள் சூழ்ந்து கொண்டனர். “மன்னா, இங்கே ஒரு பெரிய தவளை போனதே பார்த்தீர்களா?” என்றான் ஒரு காவலன். பதில் சொல்லாது எரிச்சலுடன் பார்த்த புங்கவர்மனிடம் காவலன் புலம்பினான். “அதற்குள் அடித்துச் சாப்பிட்டு விட்டீர்களா மன்னா? எங்களுக்கு ஒரு காலாவது மிச்சம் வைக்கக் கூடாதா?”

“புரிந்தது மன்னா.. சோற்றுச் சிக்கலா?” என்றாள் தவளைப்பெண்.

“ஆமாம் தவளையே.. பெண்ணே… சாப்பிட்டுப் பல நாட்களாயின. அரசன் என்பதால் செடி கொடி காய் என்று ஏதாவது பறித்துக் கொடுக்கிறார்கள். அரிசிச்சோறு தின்று அரை வருடமாகிறது. செலவுக்குச் சில்லறையில்லை. கடனும் தரமறுக்கிறார்கள். கஜானா காலி. இதோ இருக்கிறார்களே, ஏதோ வேலையில்லா திண்டாட்டம் இருப்பதால் சம்பளம் கேட்காமல் என்னிடம் வேலை பார்க்கிறார்கள். இப்படியே இருந்தால் இன்னும் கொஞ்ச நாளில் நான் தனியாகப் பிச்சை எடுக்க வேண்டியதுதான்” என்றான்.

“அந்தக் கவலை உங்களுக்கு வேண்டாம் மன்னா”

“ஏன், நீ பிச்சை எடுக்கிறாயா?”

“அதில்லை மன்னா..”

“எதுவாக இருந்தால் என்ன? பெரிய தவளையாகத் தென்பட்டதே, தனியாகச் சென்று அடித்துச் சாப்பிடலாம் என்று பின் தொடர்ந்தால் பெண்ணாக மாறிவிட்டாய்.. நீ யாரோ நாங்கள் யாரோ? உன் கணவரை மீட்டுக் கொடுக்க நல்ல ஆளைப் பார்த்தாய். வேறே யாராவது எட்டாவது ஆள் வருவான், அவனிடம் வசனம் பேசு, போ..”

“மன்னா.. நான் இளவரசி. என் கணவரை மீட்டுக் கொடுங்கள். உங்கள் கடனையெல்லாம் அடைக்க..”

“பொன்னும் மணியும் தருவாயா?”

“இல்லை. குறைந்த வட்டிக்கு நானே கடன் தருகிறேன் என்று சொல்ல வந்தேன். அதற்கு மேல், இப்பொழுதே உங்கள் அனைவருக்கும் மாமிசச்சோறு வரவழைக்கிறேன்.. என்னிடம் மந்திரசக்தி இருக்கிறது”

“பார்த்தால் தேரை போல் இருக்கிறாய்.. நீ இளவரசி என்று எப்படி நம்புவது? அடையாளம் ஏதாவது இருக்கிறதா? பேன் உண்டா? இருந்தால் எடுத்துக் காட்டு. ஐயா, மந்திரியாரே.. இந்தப் பெண்ணின் அரசுப் பேன் அடையாளத்தை சரி பாருங்கள்”

 “இதோ” என்றபடி கூந்தலைப் பிரித்துக் காட்டினாள் இளவரசி. எட்டிப் பார்த்த மந்திரி தலையாட்டினார். “ஆமாம் மன்னா. அரசுப்பேன் தான். நன்றாகக் கொழுத்துத் திரிகின்றன. இளவரசி கூந்தலை வேகமாக அசைத்தால் பத்துப் பதினைந்தாவது விழும், வறுத்துச் சாப்பிடலாம்” என்றார்.

“உமது புத்தி உம்மை விடுமா?” என்று புங்கவர்மன் கடிந்தான். பிறகு பெண்ணைப் பார்த்து, “இளவரசி, எங்களுக்கு மாமிசச்சோறு போடுவதாகச் சொன்னாயே?” என்றான்.

“முதலில் என் கணவரை மீட்டு என்னை அரக்கனிடமிருந்து காப்பாற்றுவதாக வாக்குறுதி அளியுங்கள்”

“உயிர்தானே மன்னா, போனால் போகிறது, வாக்கு கொடுங்கள்” என்று அனைவரும் பிடுங்கி எடுக்க, மன்னன் தலையசைத்தான். “சரி, பெண்ணே. உன்னை அரக்கனிடமிருந்து காப்பாற்றுகிறேன். முதலில் சோற்றைக் கண்ணில் காட்டு” என்றான்.

இளவரசி பாடத் தொடங்கினாள். மரணப் பிடியில் சிக்கியத் தவளையின் குரலில் அவள் பாடத் தொடங்கியதும், கூட்டம் அதிர்ந்தது.

“நிறுத்தம்மா.. உன்னை யாரும் இங்கே துன்புறுத்தவில்லை.. சாப்பாடு கேட்டோம்.. தர விருப்பம் இல்லை என்றால் நேரடியாகச் சொல்லிவிடு, பாடத் தேவையில்லை” என்றான் புங்கவர்மன்.

இளவரசி அவனை மறித்து, “பொறுங்கள் மன்னா” என்றாள். ஒரு மணி நேரம் போல் பாடித் தீர்த்தாள். உடனே அங்கே ஒரு பெரிய விருந்து தோன்றியது. உப்பு குறைவு, காரம் அதிகம், வேகவில்லை, குழைந்துவிட்டது, கோழியும் ஆடும் உயிரோடு இருப்பது போலவே தோன்றுகிறது என்று ஆளுக்கொரு குறை சொன்னாலும், விருந்துப் பண்டங்கள் நொடிகளில் மறைந்தன. எல்லோரும் சாப்பிட்டு முடித்ததும் பாடத் தொடங்கினார்கள்.

“சரி.. இப்போது நீங்கள் ஏன் பாடுகிறீர்கள்?” என்றாள் இளவரசி.

“பாடவில்லை.. அது.. எங்கள் ஏப்பம்” என்றான் புங்கவர்மன். “சரி, அரக்கனைப் பிடிக்கப் போகலாம், வா”.

“பொறுங்கள் மன்னா. ஒரு நிபந்தனை இருக்கிறது”

“என்ன?”

இளவரசி சரேலென்று ஒரு மரத்தின் பின்னே சென்றாள்.

“பாவம், அவசரம் போல” என்றான் காவலன்.

“நிறுத்தய்யா..” என்று புங்கவர்மன் சொல்லி முடிக்குமுன் இளவரசி திரும்பி வந்தாள். அவள் கையில் ஒரு கிளி இருந்தது.

“மன்னா, இந்த கிளி அரக்கனுடைய கிளி. கிளியுடன் வராவிட்டால் அரக்கன் நிச்சயம் என் கணவனைக் கொன்றுவிடுவான். கிளியைப் பாதுகாப்பது உங்கள் பொறுப்பு” என்றாள்.

“அவ்வளவு தானே? போகலாம் வா” என்று புங்கவர்மன் நடந்தான்.

“அவ்வளவு சீக்கிரம் போக முடியாது. சில சட்டங்கள், விதிகள் எல்லாம் உண்டு” என்ற குரல் கேட்டுத் திரும்பினான் புங்கவர்மன். இளவரசியைப் பார்த்தான். “பேசுவது கிளியா, பெண்ணரசி மொழியா?” என்றான்.

“கிளி தான்” என்றது கிளி.

“ஆம் மன்னா.. இது சட்டக்கிளி”

“சட்டையே காணோம்?” என்றார் மந்திரி.

“சட்டக்கிளி மந்திரியாரே” என்றது கிளி. “நான் வச்சது தான் சட்டம். அரக்கனைப் பிடிக்கப் போகிறவர்கள் சில விதி முறைகளைக் கடைபிடிக்க வேண்டும். ஒரு நாளைக்கு ஐநூறிலிருந்து ஆயிரம் மூச்சு வரை இழுக்கலாம். ஆபாச பேச்சு ஜாடை எதுவும் கூடாது. ஏழு கடல் ஏழு மலை கடந்து அரக்கனைப் பிடிக்கும் வரை தொடர்ந்து போக வேண்டும், விட்டுப் பிறகு பிடிக்கலாம் என்று நிறுத்தித் தொடரக்கூடாது.”

 “இன்னும் வேறு ஏதாவது உண்டா?”

“ஒன்றை மறந்து விட்டேன்”

“என்ன?”

“தோன்றும் நேரத்தில் திடீரென்று புது விதி ஏதாவது புனைவேன்..” என்ற கிளி, கிளிகிளி என்று சிரித்தது.

“இதென்ன புது வம்பு? சட்டக்கிளியா?” என்றான் புங்கன்.

“ஆம் மன்னா! தலைவிதி. என் கணவரைத் தூக்கிச் செல்லும் பொழுது அரக்கன், ‘கிளி உயிரோடு இருக்கும் வரை உன் கணவனும் உயிரோடு இருப்பான்’ என்று இந்தக் கிளியை என்னிடம் கொடுத்துவிட்டு மாயமாக மறைந்து விட்டான். தினம் ஒரு விதி என்று புதுப்புது சட்டம் போட்டுக் கழுத்தறுத்தாலும் கிளியை ஒன்றும் செய்ய முடியாது” என்றாள் இளவரசி.

“கிளிக்..” என்று புங்கன் தொடங்கும் போதே கிளி கத்தியது. “ஆபாசம்! ஆபாசம்!”

புங்கன் அமைதியானான். கூட்டத்துடன் நடந்தான். தொலைவில் தெரிந்த மலை மெள்ள அருகில் வந்ததும் திடீரென்று கிளி கத்தியது. “நீங்கள் எல்லோரும் படுத்து உருண்டு மலையேற வேண்டும்”

“என்ன, இதை முதலில் சொல்லவில்லையே?” என்றான் புங்கன் எரிச்சலுடன்.

“புது விதி” என்றது கிளி.

“மன்னிக்க வேண்டும் மன்னா.. கிளி சொன்னபடி செய்யவேண்டும்” என்றாள் இளவரசி.

“இந்தக் கிளியை யாராவது கொஞ்சம் அழுத்திப் பிடித்துக் கொள்ளுங்கள்.. கழுத்துப் பக்கமாக” என்றான் புங்கவர்மன்.

வேறு வழியில்லாமல் அனைவரும் படுத்து உருண்டு மலையைக் கடந்தனர். அடுத்து வந்த இரண்டு மலைகளை ஓடிக் கடக்க வேண்டும் என்றது கிளி. சோர்ந்து போன கூட்டம் புங்கவர்மனை விட்டு விலகுவதாகச் சொன்னது. “ஒரு கடல் கூட இன்னும் வரவில்லையே மன்னா?” என்றான் ஒருவன். “என்றைக்குக் கடந்து என்றைக்கு அரக்கனைப் பிடித்து என்றைக்கு எங்கள் சோற்றுச் சிக்கல் தீர்வது?” என்றான் இன்னொரு காவலன். “என்னைக் கேட்டால் இங்கேயே கிளி பிரியாணி செய்து சாப்பிடுவதே மேலென்று தோன்றுகிறது” என்றான் சமையல்காரன். கிளி அஞ்சி ஒதுங்கி இளவரசியின் தோள் மீது அமர்ந்தது.

தன் கூட்டத்தின் அமைதியின்மையைக் கவனித்த புங்கன், அனைவரையும் அடக்கினான். “எல்லோரும் களைப்பாக இருக்கிறோம். இன்றிரவு இங்கே உறங்கிவிட்டு காலையில் தீர்மானிப்போம்” என்றான்.

“நல்ல யோசனை. ஏதாவது புது விதி புனையுமுன் உறங்குவோம்” என்றார் மந்திரி.

“தூங்குமுன் எனக்கு யாராவது கதை சொன்னால் தான் தூக்கம் வரும்” என்றான் புங்கன்.

“கஷ்டம்! இவனெல்லாம் நமக்கு அரசன்” என்றான் காவலன்.

“என்ன?” என்றான் புங்கவர்மன் சினத்துடன்.

“ஐயோ, நானில்லை.. இந்தக் கிளி தான் சொன்னது. விடாதீர்கள் மன்னா” என்றான் காவலன். கிளி படபடத்து இளவரசியின் பின்னே பதுங்கியது.

“சரி, நானே கதை சொல்கிறேன். என்னுடைய கதை” என்றாள் இளவரசி.

“கதை சொல்வதாக இருந்தால், ஒரு ஊர்ல என்று தொடங்கிச் சொல்ல வேண்டும்” என்றான் புங்கன்.

 “ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தானாம். அவனுக்கு ஒரு ராணியாம். ராஜா என்றாலும் அவன் ஊருக்கு மருத்துவனாம். எந்த வியாதியாக இருந்தாலும் பச்சை, மஞ்சள், சிகப்பு என்ற நிறங்களில் ஒரு மூலிகையைக் கொடுத்து சில சமயம் குணப்படுத்துவானாம். மக்களும் வண்ண மூலிகைகளுக்கு ஆசைப்பட்டு இல்லாத வியாதிகளைச் சொல்லிக் கொண்டு வருவார்களாம். ஒரு நாள் ஒரு கொடிய அரக்கன் அரசனைத் தேடி வந்தானாம். ‘மன்னா.. எனக்கு நரம்புவலி, முதுகுவலி, சுளுக்கு என்று பல வலிகள்.. நீங்கள் தான் குணப்படுத்த வேண்டும்’ என்றானாம். மன்னனும் வண்ண மூலிகைகளைக் கொடுத்தானாம். எல்லாவற்றையும் சாப்பிட்ட அரக்கனுக்கு வலி அதிகமாகி விட்டதாம். வந்த கோபத்தில் அரசனைக் கடலில் எறிவதாகச் சொன்னானாம். ராஜாவை மன்னித்து விடும்படி ராணி அரக்கனிடம் மன்றாடினாளாம். அரக்கனோ மனமிறங்கி, ‘சரி, ஒன்று செய்கிறேன். இதோ இருக்கிறதே கிளி.. இதை உன்னிடம் விட்டுச் செல்கிறேன். மன்னனோடு கிளியையும் சேர்த்துத் தூக்க முடியவில்லை. முதுகுவலி அதிகமாகிறது. நீ கிளியோடு ஏழு கடல் ஏழு மலை தாண்டி உன் கணவனைக் கண்டுபிடிக்க வா. இல்லையெனில் உன் கணவனையும் கொன்று உன்னையும் கொல்ல வருவேன்’ என்று கூறி ராஜாவோடு மறைந்து விட்டானாம்” என்றாள் இளவரசி.

“யார் அந்த ஏழுமலை?” என்று எழுந்து உட்கார்ந்தான் ஒரு காவலன்.

“ஏழுமலையில்லை. ஏழு கடல் ஏழு மலை” என்றாள் இளவரசி.

“என்ன? ஏழு கடல், ஏழு மலையா?” என்று எழுந்து உட்கார்ந்தார் மந்திரி.

“ஆம்”

“அப்படியெனில் நாம் வீணாகச் சுற்றிக் கொண்டிருக்கிறோம்.. அரக்கன் இருக்குமிடம் எனக்குத் தெரிந்துவிட்டது” என்றார் மந்திரி. “அரசனை எழுப்புங்கள்”.

எல்லோரும் புங்கவர்மனை எழுப்பினார்கள். “அரசே, அரக்கன் இருக்குமிடம் எனக்குத் தெரியும்” என்றார் மந்திரி.

“யார் அரக்கன்.. என்ன இடம்?” என்ற புங்கவர்மன் சுதாரித்து, “சொல்லுங்கள்” என்றான்.

“மன்னா… ஏழு கடல் ஏழு மலைகள் கடந்தால் வருவது நம் உலகின் எதிர்முனையில் இருக்கும் அமாரிகோ எனும் நாடு. அதைத்தான் அரக்கன் சூட்சுமமாகச் சொல்லியிருக்கிறான்” என்றார் மந்திரி.

 “மந்திரியாரே.. அப்படியே சென்றாலும் அரக்கனுடைய முதுகுவலியைக் குணப்படுத்தி என் கணவரை எப்படி மீட்பது?” என்று கலங்கினாள் இளவரசி.

மந்திரி புன்னகைத்தார்.

“அதிகம் புன்னகைக்காதீர்கள். அரையிருட்டில் பயமாக இருக்கிறது” என்றான் புங்கன்.

“கவலைப்படாதீர்கள் இளவரசி.. அமாரிகோ நாட்டில் வலி நிவாரண நிபுணர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஒன்று குணப்படுத்துவார்கள் அல்லது மருந்து கொடுத்தே கொன்றுவிடுவார்கள். எப்படியும் நமக்கு நன்மையே.. உங்கள் கணவரை மீட்டுவிடலாம். அமாரிகோ போகும் கழுகு விமானத்திலேறி நாம் நாளையே பயணம் செய்வோம்” என்ற மந்திரியை நன்றியோடுத் தழுவிப் பாராட்டினான் புங்கன். அடுத்து இளவரசியை மகிழ்ச்சியோடு தழுவலாம் என்று முனைந்த போது சட்டக்கிளி அலறியது.

இரண்டு நாட்களுக்குப் பின் அமாரிகோவில் முழு வேர்க்கடலை உரித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்த அரக்கனைப் பிடித்தார்கள். புங்கன் அரக்கனிடம் இளவரசியின் கணவனை விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டான். அரக்கன் “என் உடல்வலி மிகவும் மோசமாகி விட்டது. தலையிலிருந்து கால் வரை வலிக்கிறது. எல்லாவற்றுக்கும் இந்த ஆள் கொடுத்த மூலிகையே காரணம். குணமாகாமல் இவனை விடுதலை செய்ய மாட்டேன். இன்னும் ஒரு வாரத்தில் குணமாகவில்லையெனில் இவனையும் கொன்று உங்கள் அனைவரையும் கொன்று விடுவேன்” என்று பலமாகச் சிரித்தான். பிறகு முகத்தைப் பிடித்துக் கொண்டு வருந்தினான். “சிரித்தால் வாய் வலிக்கிறது”.

“அரக்கனாரே, முதலில் இந்தக் கிளியைப் பிடியுங்கள்” என்றான் புங்கன்.

அரக்கன் அலறினான். “ஐயோ, சட்டக்கிளியா? மறுபடியுமா? இங்கே வரமாட்டீர்கள் என்று நம்பி சட்டக்கிளியைக் கொடுப்பது போல் கொடுத்துவிட்டு வந்தால், அதை இங்கேயும் எடுத்து வந்தீர்களா? வரும் வழியில் பசித்தப் பூனை ஒன்றைக் கூடவா பார்க்கவில்லை? கருணையில்லாத கூட்டமாக இருக்கிறதே!” என்று நடுங்கினான்.

“நான் பார்த்துக் கொள்கிறேன்” என்ற காவலன், சரேலென்று கிளியைப் பிடித்து ஒரு பைக்குள் திணித்தான். வயிற்றை எதிர்பார்ப்புடன் தடவிக் கொண்டான்.

“அரக்கனாரே.. உங்கள் வலிகளைப் போக்கும் வழியைச் சொல்கிறேன். என்னைத் தொடர்ந்து வாருங்கள்” என்றார் மந்திரி.

புங்கவர்மன் தலைமையில் எல்லோரும் மந்திரியைப் பின் தொடர்ந்தார்கள். அரக்கனும் புலம்பிக் கொண்டே நடந்தான். நெடுந்தூரம் சென்றபின் நின்றார்கள். மாலை மயங்கி இரவு தொடங்கியிருந்தது. “அதோ பாருங்கள்.. சிவப்புச் சட்டை அணிந்த அந்தக் கூட்டத் தலைவனை கவனியுங்கள்..”

முழு நிலவின் ஒளியில் அங்கே ஒரு கூட்டம் நேராகவும் தலைகீழாகவும் ஆடிப்பாடிக் கொண்டிருந்தது. அரக்கன் அவர்களையே கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். “இவர்கள் என்னைப் போலவே இருக்கிறார்களே!” என்றான். சிவப்பு சட்டை அணிந்த ஒருவர் தலைகீழாக நடந்து அவர்களை நோக்கி வந்தார். அரக்கனை இழுத்துக் கொண்டு ஆடத் தொடங்கினார்.

ஆடி முடித்ததும் அரக்கனுக்கு மகிழ்ச்சி. “ஆகா! மூலிகையை நம்பி இப்படி ஆடிப்பாடி மகிழ்வதை மறந்தேனே! என்ன ஆட்டம்! என்ன ஆட்டம்! என் வலியெல்லாம் போய்விட்டது!” என்றபடி இளவரசியின் கணவனை விடுதலை செய்தான்.

வாக்களித்தபடியே புங்கவர்மனுக்குக் குறைந்த வட்டியில் நிறைந்த கடன் கொடுத்த இளவரசி, கணவனை இழுத்துக் கொண்டு ஓடினாள்.

“வாருங்கள் மன்னா, கிளி பிரியாணி காத்திருக்கிறது” என்று புங்கவர்மனை இழுத்துக் கொண்டு ஓடினார் மந்திரி.

சிவப்புச் சட்டைக்காரர் பேந்த விழித்துக் கொண்டிருந்தார். “இனி நீயே என் மருத்துவன்” என்றபடி அரக்கன் இழுத்துக் கொண்டு ஓடினான் அவரை.

– 2011/12/09

61 கருத்துகள்:

  1. பாபஹரீஸ்வரர் கோயில் தரட்சி//

    பாபஹரீஸ்வரர் கோயில், தரட்சி என்ற ஊரில் என்று வந்திருக்க வேண்டுமோ? , நெல்லை? சேர்த்து வாசித்த போது டக்கென்று குழம்பிவிட்டேன். ஊத்துக்கோட்டைக்குப் போயிருக்கிறேன் அங்கு தரட்சி / தராட்சி (இப்படியும் அங்கு எழுதப்பட்டிருந்தது) ஊத்துக்கோட்டை பள்ளிகொண்டீஸ்வரர் கோயிலுக்குப் போனப்ப இக்கோயிலுக்கும் போயிருக்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா ரங்கன். இந்தக் கோயிலுக்கும் சென்றிருக்கிறீர்களா? அருமை. பள்ளிகொண்டீஸ்வர்ர் கோயிலுக்கும் போகணும். பார்க்கலாம் வாய்ப்பு கிடைக்கிறதா என்று.

      நீக்கு
    2. காலையில் வந்து பார்த்தப்போ இந்தப்புங்க வர்மன்னு பெயரைப் பார்த்ததும் எங்கள் ப்ளாகில் முன்ன்னாஅடி வைச்ச போட்டி தான் நினைவில் வந்தது. அதுக்குத் தான் அப்பாதுரை இதை எழுதினார்னு நினைவு. நானும் எழுதி இருக்கேன். பரிசும் கிடைச்சது. காலை வேலை இருந்ததால் உடனே ஓடிட்டேன்.

      நீக்கு
  2. நான் இக்கோயிலுக்குப் போனப்ப கிட்டத்தட்ட 15-16 வருஷங்கள் முன்னர் படங்கள் எடுக்கவில்லை....அப்ப விவரங்கள் கொஞ்சம்தான் தெரியும் இப்ப உங்க மூலம் இப்படியான விவரங்கள் அறிய முடிகிறது. கோவிந்தபட்டர் நினைவாக என்பதெல்லாம்.

    அப்ப ஊத்துக்கோட்டை கோவிலுக்குப் போய்ட்டு அங்கு இப்படி ஒரு கோயில் அருகில் இருக்கு என்றதும் இதுக்கும் போனதோடு சரி.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஊத்துக்கோட்டைக்கு என்ன வேலையாகப் போனீர்கள்? அப்படியே இந்தக் கோயில்களுக்குச் செல்வோம் என எப்படித் தோன்றியது?

      நீக்கு
    2. ஊத்துக்கோட்டைக்குப் போனது குறித்து எங்கள் தளத்தில் எழுதியிருக்கிறேனே!!!! ஒரே நாளில் இந்த ரூட்டில் எந்தெந்தக் கோயில்கள் தரிசிக்கலாம்னு என்றும்.

      நாங்கள் நாராயணவனம் அப்ப அடிக்கடி - எங்கள் வீட்டு ஃபிகோ மாமியின் சாரதி நான் தானே அப்ப - போவோம். அப்பப்ப வீட்டுக்கு வரவங்கள கூட்டிக் கொண்டு. அப்ப திருவள்ளூர், ஊத்துக்கோட்டை -சுருட்டப்பள்ளி - வழியாகத்தான் போவோம். அப்படி பள்ளிகொண்டீஸ்வரர் கோயிலுக்கு - சுருட்டப்பள்ளியில்தானே சாலையிலிஏயே இருக்கு அங்கு போயிருக்கிறோம். அதன் பின் என் தங்கை ஏதோ பரிகாரம் என்று இக்கோயில், வாலீஸ்வரர் கோயில் (ஊத்துக்கோட்டை தாண்டி தோராயமாக 17 கிமீ தூரத்தில் இருக்கும் இக்கோயில்) நடுவில் இருக்கும் வேதநாராயணபுரீஸ்வரர் என்று போய்வந்ததுண்டு. தங்கை பரிகாரம் என்று செய்த போது இக்கோயிலைப் பற்றிச் சொல்லிட போனது.

      கீதா

      நீக்கு
    3. ஊத்துக்கோட்டை, சுருட்டப்பள்ளி எல்லாம் மாமா வேலையில் இருக்கும்போது ஒரு தரம் பிரதோஷத்திற்குப் போனோம். இது பற்றி பதிவு கூட எழுதினேன்.

      நீக்கு
    4. பதிவு சுட்டி தாங்க கீசா மேடம். உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்திருந்திருக்கின்றன. எல்லாம் இறைவன் அருள்.

      நீக்கு
  3. சிறிய பாணலிங்கம் தெரிகிறது நெல்லை, ஆனால் எனக்கு ஒரு டவுட்டு! இங்க இப்ப அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் கோயிலில் சிவன் சன்னதியிலும் சரி மற்றொரு சிவன் கோவிலிலும் சரி, ஆவுடையாரின் மேல் சிறிய லிங்கம் இப்படி இருப்பதைப் பார்க்கிறேன். அப்ப அதுவும் பாணலிங்கமா?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படிச் சொல்ல இயலாது. ஒருவேளை இந்தக் கோயிலைப் பார்த்துவிட்டு அதேபோல் அமைக்கிறார்களோ?

      நீக்கு
    2. நீங்கள் சொன்னதன் பின் எனக்கும் தோன்றியதுஇட்தேதான்... ஓ அப்படியும் இருக்குமோ என்று தோன்றுகிறது.

      கீதா

      நீக்கு
    3. அம்பத்தூருக்கு அருகே இருக்கும் வடதிருமுல்லைவாயில் கோயிலின் ஸ்வாமி சந்நிதியில் ஒரு ஸ்ரீவைணவரே பாதரச லிங்கம் கூட்டி அதை ஊரெல்லாம் ஊர்வலமாக எடுத்து வந்து வடதிருமுல்லை வாயில் ஸ்வாமி சந்நிதியில் 83/84 ஆம் ஆண்டுகளில் பிரதிஷ்டை செய்தார். அவர் பெயர் மறந்து போச்சு. ஆனால் பரமாசாரியாரின் வேண்டுகோளின்படியே அவர் அந்தப் பாதரச லிங்கத்தைக் கூட்டினார் என்பது மட்டும் நிச்சயமாய்த் தெரியும். அதைக் கூட்டுவதற்கென நியம, நிஷ்டைகள் தனியாய் உண்டு எனவும் சொன்னார்கள். அம்பத்தூரில் எங்க காலனியின் பிள்ளையார் கோயிலுக்கும் அந்த லிங்கத்தை எடுத்துக் கொண்டு வந்து ஒன்றரை நாட்கள் பிள்ளையார் சந்நிதியில் வைச்சிருந்தாங்க.

      நீக்கு
    4. பாளையங்கோட்டையில் நாங்கள் இருந்தபோது, என் அப்பாவிற்குத் தெரிந்த சித்த மருத்துவர், பாதரச லிங்கம் செய்து, அதனை வீட்டிற்குக் கொண்டுவந்து காட்டினார். பாதரச லிங்க தரிசனம் மிகவும் விசேஷமானது என்று சொல்வர்.

      நீக்கு
  4. வரதராஜப் பெருமாள்கோயிலுக்கு எப்போதோ போயிருக்கிறேனே தவிர

    //ஆளவந்தார் காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலில் முதன் முதலில் பார்த்த இடம் எது?//

    இந்தப் படங்களில் உள்ளவை எல்லாம் இப்படித் தொடர்புடையவை என்பதை இப்பதான் அறிகிறேன், நெல்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் பல முறை அந்தக் கோயிலுக்குச் சென்றிருந்தாலும் கடந்த சில முறைகளில் இந்த இடத்தையெல்லாம் கவனிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. படங்களும் எடுத்தேன்.

      நீக்கு
    2. பலமுறை போயிருந்தாலும் இந்தக் கதை எல்லாம் இப்போ நெல்லை எழுதியதன் மூலமே தெரிந்தது. ஏனோ தெரியலை அத்தி வரதரை மட்டும் பார்க்கக் கிடைக்கலை. முதல் முறை எனக்குத்தெரிந்து எழுபதுகளின் ஆரம்பத்தில் அத்தி வரதர் தரிசனம். அந்த ஊரைச் சேர்ந்த கனகவல்லி என்னும் பெண் என்னோடு வேலை பார்த்துட்டு இருந்தவர் பலமுறை எங்களைக் கூப்பிட்டார். ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் எல்லாம் போனாலும் அதுக்கப்புறமா நிகழ்ந்த இந்த அத்திவரத தரிசனத்துக்குப் போக முடியலை. இப்போ சமீபகாலங்களில் அவர் எனக்குத் தெரிந்து இரண்டாம் முறையாகக் காட்சி கொடுத்தார். இப்போவும் போக முடியலை. அ-பார்ட்மென்டில் எதிரே இருந்த மாமி, மாமா எல்லாம் போனாங்க.

      நீக்கு
    3. அத்திவரதர் தரிசனத்திற்குப் போக முடியவில்லையா கீசா மேடம்? நான் பல முறை தரிசனம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. தனியாக, பெண்ணுடன் பிறகு மனைவியுடன் மற்றும் இன்னொரு தடவை.

      நீக்கு
  5. /உள்ளங்கை கொணர்ந்த நாயனார் கொண்டுவந்த பாணலிங்கம், பிறகு அவர் வைணவ மதத்திற்கு மாறிய பிறகு, /
    கோவிந்த பட்டரோ இளையாழ்வாரோ பிறப்பால் வைணவர் இல்லையா? அது எவ்வாறு? இந்த இருவருடைய தாய் மாமனான பெரிய திருமலை நம்பி வைணவர்தானே! குழப்பமாக இருக்கிறதே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்போது பிராமணர்கள் என்ற சமூகம். அதில் த்வைதம் பின்பற்றியவர்கள் சிவனை முழுமுதல் தெய்வமாக்க் கொண்டனர். திருமாலை முழுமுதல்்தெய்வமாக்க் கொண்டவர் வைணவர்கள் எனப்பட்டனர். ஒரு குடும்பத்திலேயே சிலர் வைணவர்கள், சிலர் த்வைதிகள். வாங்க சூர்யா சார்.

      நீக்கு
    2. இராமானுஜர் காலத்தில் (அதற்கு முன்பும்) நால்வகை வர்ணத்தினரிலும் சைவர், வைணவர் என்று வணங்கும் கடவுளைப் பொறுத்து இந்தப் பிரிவு இருந்தது. இத்தகைய வரலாறு பின்பு வரும்.

      நீக்கு
    3. //அப்போது பிராமணர்கள் என்ற சமூகம். அதில் த்வைதம் பின்பற்றியவர்கள் சிவனை முழுமுதல் தெய்வமாக்க் கொண்டனர்.// இந்த ஸ்டேட்மெண்ட் சரியா? தவறா? என்பதை கீதா அக்கா வந்து தெளிவுபடுத்துவார். சிவனை முழுமுதல் தெய்வமாக கொண்டவர்கள் அத்வைதிகள் இல்லையா? சிவன்(ஸைவம்), விஷ்ணு(வைஷ்ணவம்), விநாயகர்(காணபத்யம்), முருகன்(கௌமாரம்), அம்பிகை(சாக்தம்), சூரியன்(ஸௌமாரம்) என்னும் ஆறு தெய்வ வழிபாடு செய்தவர்கள் ஸ்மார்த்தர்கள். ஸ்மார்த்தர்கள் இந்த ஆறில் ஏதோ ஒரு தெய்வத்தை உபாசனை செய்தாலும், மற்ற தெய்வ ரூபங்களையும் வணங்குவார்கள். வைஷ்ணவர்கள் நாராயணனே கடவுள் என்று அவனை மட்டுமே வழிபட்டவர்கள்.
      அத்வைதம், த்வைதம், விசிஷ்டாத்வைதம் இவைகள் தத்துவங்கள். ஜீவாத்மா வேறு, பரமாத்மா வேறு, எந்த காலத்திலும் ஜீவாத்மா பரமாத்மாவோடு இணைய முடியாது என்பது த்வைதர்களின் கொள்கை. அவர்களைப் பொறுத்தவரை மஹாலட்சுமியே ஜீவாத்மாதான்.

      நீக்கு
    4. நாம் பொதுவாக வைஷ்ணவர்கள் என்றால் ஐயங்கார்கள் என்று நினைத்துக் கொள்வோம், ஆனால் வைஷ்ணவர்கள் வேறு, ஐயங்கார்கள் வேறு. ஐயங்கார்கள் எல்லோரும் வைஷ்ணவர்களாக இருக்கலாம், ஆனால் வைஷ்ணவர்கள் எல்லோரும் ஐயங்கார்கள் இல்லை. ஸ்மார்த்தரான என் அப்பா, என் கணவர் இருவரும் வைஷ்ணவர்கள். எனக்குமே வைஷ்ணவத்தில் ஈடுபாடு அதிகம்.

      நீக்கு
    5. ஸ்மார்த்தர்கள் அறுவகை சமய தேவதைகளில் ஒன்றை உபாசனை செய்தனர் என்பது சரிதான். ஐயங்கார்கள் என்பதே பிற்பாடு தோன்றிய ஜாதி என்பது என் அபிப்ராயம் (ஐயர் என்பதுபோல. இரண்டும் நாராயணன் சிவன் வழிபாட்டைக் கொண்டவர்களைப் பிரிப்பதற்காக). பிற்பாடுதான் எதற்காக ஐயங்கார்கள் (அதாவது நாங்கள்) ஏன் ஐயர் வீடுகளில் சாப்பிடக் கூடாது என நியம்ம் வைத்தார்கள் என்பது புரிந்தது (மாறிவிட்ட கடந்த நூறு ஆண்டுகளில் இதற்கு அர்த்தம் குறைவு)

      நீக்கு
    6. மூன்று த்த்துவங்களைப் பற்றியும் ஒரு பதிவில் எழுதியிருக்கிறேன், வரும். மூன்று த்த்துவங்களுமே ஒன்றுதான், ஆனால் அதை எப்படிப் பார்க்கிறோம் என்பதில் வேறுபாடு. (காரணம் மூன்றிர்க்கும் அடிப்படை வேத உபநிஷத்துகள் என்பர்). வேதாத்ரி மஹரிஷி இதனைப் பற்றிச் சொன்னதும் அந்தப் பதிவில் வரும்.

      மகாலக்ஷ்மி உயர் ஜீவாத்மா என்பது தென்னாச்சார்ய சம்பிரதாயம். ஶ்ரீமந் நாராயணன் என்பது வடகலை சம்ப்ரதாயம்

      உங்கள் கருத்து பல விளக்கங்களைப் பிறர் அறிய உபயோகமாக இருக்கும் பானுமதி வெங்கடேஸ்வரன் மேடம்..

      நீக்கு
    7. பானுமதி எழுதி இருப்பது சரியே. த்வைதிகள் ஒருகாலும் சிவனை முழுமுதல் கடவுளாகக் கொண்டவர்கள் இல்லை. அத்வைதிகள் அதாவது ஆதிசங்கரரின் ஷண்மதக் கோட்பாடுகளை அனுசரிப்பவர்களும் கூட வைணவர்கள் எனச் சொல்லிக்க மாட்டார்கள். பெரும்பாலும் இவர்களைத் தான் ஸ்மார்த்தர்கள் என்போம். இவங்களில் பலரும் ஷண்மத வழிபாடுகள் செய்பவர்களே. ஆனாலும் ஸ்ரீமந்நாராயணனை முழுமுதல் கடவுளாக நினைப்பவர்கள் இவர்களில் அதிகம். எல்லோரும் ஒன்றே என்றாலும் பெரும்பாலானவர்கள் நாராயணா, நாராயணா என்றோ கிருஷ்ண் கிருஷ்ண கிருஷ்ணா என்றோ தான் சொல்லுவார்கள். ஸ்மார்த்தர்கள் மட்டுமே பெருபாலும் பஞ்சாயதன பூஜை பண்ணுவர்கள். இதிலும் சிலர் மஹாவிஷ்ணுவை மூலமாக வைத்து மற்ற மூர்த்திகளைச் சுற்றி வைத்துப் பண்ணுவது உண்டு. சிவனை/ ஸ்கந்தனை மூலமாக வைத்தும் பண்ணுவார்கள். அம்பிகையை வைத்தும், சூரியநாராயணனை வைத்தும், கணபதியை வைத்தும் பஞ்சாயதன பூஜை பண்ணுவார்கள். மூல தேவதையின் பெயரே பூஜை முறையாகவும் ஆனது. அந்த அந்த மூர்த்திகளை வைத்தே பூஜை முறையின் பெயரானது.

      நீக்கு
    8. வெகு காலம் நீடித்த இந்தப் பூஜா முறையில் ஒரு சிலர் ஸ்ரீமந்நாராயணனை மட்டுமே வணங்கி வந்தனர். பொன்னியின் செல்வனில் இதைப் பற்றி திரு கல்கி தெளிவாக எழுதி இருப்பார்.. ஒரே குடும்பத்தில் பிறந்த அண்ணன், தம்பிக்குள் ஒருத்தர் சிவனை ஆராதிப்பவராகவும், இன்னொருவர் விஷ்ணு பக்தராகவும் இருப்பது உண்டு. ஆழ்வார்க்கடியானும், அவர் அண்ணன் ஈசான பட்டரும் போல். இந்நிலை ஸ்ரீராமானுஜரின் காலத்திலே தான் மாற ஆரம்பித்தது என்னலாம். வட மாநிலங்களிலே இப்போதும் அந்தணர்களைப் பொதுவாக வைஷ்ணவர்கள் என்றே சொல்லும் வழக்கம் உண்டு. அதே போல் பஞ்சாபில் ஒரே குடும்பத்தில் அப்பா இந்துவாகவும் மகன்கள் சீக்கியராகவும் இருப்பார்கள். அண்ணன், தம்பிகளிலும் ஒருத்தர் சீக்கியராகவும் இன்னொருத்தர் இந்துவாகவும் இருப்பார்கள்.

      தமிழகத்தில் ஸ்ரீராமானுஜர் காலத்திலேயே வைணவர்கள் என்னும் பக்தர்கள் கூட்டம் தனியாக ஆரம்பித்து விட்டது. த்வைதத்தை மட்டும் பின்பற்றியதால் எனச் சொல்ல முடியாது. அவங்களுக்கு எல்லாம் நாராயணன் ஒருத்தனே தெய்வம். ஸ்ரீராமானுஜர் தன் காலத்தில் அத்வைதத்தைக் கடைப்பிடித்து வந்த குடும்பத்தில் அத்வைதியாக அதுவும் வடமன் என்னும் பிராமணனாகப் பிறந்து பின்னரே ஞானம் பெற்று முற்றிலும் ஸ்ரீவைணவராக ஆனார். அதனாலேயே "வடமன் முத்தினால் வைணவன்" என்ற சொற்றொடரும் ஏற்பட்டது என என் அப்பா அடிக்கடி சொல்லுவார். ம/ர்ரபடி சாத்தாத வைணவர்கள், சாத்திய வைணவர்கள், வடகலை, தென்கலை, ஐயர், ஐயங்கார்கள், வைணவர்கள், சைவர்கள் என்ற பேதமெல்லாம் ராமானுஜர் காலத்துக்குப் பின்னர் வந்திருக்கலாமோ என நினைக்கிறேன். ஏனெனில் ராமானுஜர் காலத்தில் சிவ நிந்தனை இருந்ததாகத் தெரியலை. என்றாலும் சோழ அரசர்கள் தவிர்த்தப் பல அரசர்கள் வைணவத்துக்கு மாறினார்கள் என்பதையும் சரித்திரங்கள் சொல்லுகின்றன.

      நீக்கு
    9. சைவர்கள், ஆதி சைவர்கள் தனி. இவர்களே பெரும்பாலான சிவன் கோயில்களில் அர்ச்சகர், குருக்கள் என்றெல்லாம் அழைக்கப்படுகின்றனர். ஆகமம் மட்டுமில்லாமல் சிவ பூஜை செய்த பின்னரே தீக்ஷை பெற்ற பின்னரே இவர்கள் கோயிலின் கர்பகிஹத்துக்குள் நுழைய முடியும். இவர்களில் பிரமசாரியாக இருக்கக் கூடாது. கட்டாயமாய்த் திருமணம் ஆனவராக இருக்கணும் என்றெல்லாம் நிபந்தனைகள் உண்டு. இவங்க பின்னால் வந்தவர்கள்னு சொல்ல முடியாது. ஆதிகாலம் தொட்டே இருந்து வந்திருக்கிறார்கள். தெய்வத்தின் குரலில் இது பற்றிப் பரமாசாரியார் தெளிவாகச் சொல்லி இருப்பார். எத்தனாவது புத்தகம்னு நினைவில் இல்லை. பார்த்துட்டுத் தான் சொல்லணும்.

      நீக்கு
    10. ராமானுஜர் காலத்திலும் அதன் பின்னரும் வைணவர்கள்னு தனியாய் இருந்தவர்களே பின்னாட்களில் வந்த பாகுபாடு, சிவ துவேஷம் போன்றவற்றிற்கெல்லாம் காரணம். இவர்களில் எல்லா இனத்தவரும் உண்டு. பல அரசர்கள் வைணவத்தைப் பின்பற்றியதால் இந்தப் பாகுபாடுகளைக் காட்டியே வந்திருக்கிறார்கள். இதை இன்றளவும் தில்லை கோவிந்தராஜர் சந்நிதியில் கண்கூடாகப் பார்க்கலாம். இப்போ மாறி இருக்கோனு தெரியலை. எங்க தீக்ஷிதர் மாறலைனு கடைசியாப் பார்த்தப்போ சொன்னார். நாங்க சிதம்பரம் போயே ஐந்தாண்டுகள் ஆகிவிட்டன.

      நீக்கு
    11. இன்னொரு விஷயம். நாங்க ஸ்மார்த்தர்களே ஆனாலும் என் அப்பா வீட்டில் எல்லாம் விபூதிப்பட்டை இல்லை. சந்தனக் கீற்றுத் தான். நாமம் போலச் சந்தனத்தை மேலே இழுத்திருப்பாங்க. கீழே சின்னதாகக் குங்குமப் பொட்டு. அதே என் அம்மாவின் அப்பா வீட்டில் தாத்தா பட்டை பட்டையாக விபூதிப் பட்டை. என் மாமனார் வீட்டிலும் விபூதிப் பட்டை. மாமனார் வீட்டில் பஞ்சாயதன பூஜை அவர் அப்பா காலம் வரை பண்ணி இருக்காங்க. ஆனால் என் மாமனாரெல்லாம் அதை எடுத்துக்கலை. ஆனால் பூர்விக விக்ரஹங்கள் இப்போ எங்க கிட்டே இருக்கின்றன. நடுவில் இருந்த அல்லது கூடவே இருக்க வேண்டிய சூரிய பகவான் விக்ரஹம் இல்லை. தொலைந்து போயிருக்கு. எல்லா விக்ரஹங்களும் பஞ்ச உலோகம்.

      நீக்கு
    12. //த்வைதிகள் ஒருகாலும் சிவனை முழுமுதல் கடவுளாகக் கொண்டவர்கள் இல்லை. // இந்தப் பகுதி முழுமையாகப் படித்தேன். எனக்குத் தெரியாத தகவல்களைப் பகிர்ந்ததற்கு மிக்க நன்றி கீசா மேடம்.

      நீக்கு
    13. //சாத்தாத வைணவர்கள், சாத்திய வைணவர்கள், வடகலை, தென்கலை// நல்ல பாயிண்டை இந்தப் பகுதில சொல்லியிருக்கீங்க. சாத்தாத வைணவர்கள், சாத்திய வைணவர்கள் இராமானுஜர் காலத்திற்கு முன்பும் உண்டு. அதுபோல ஒரு ஆச்சார்யாரின் சீடர்களில் சாத்தாத வைணவர்களும் முக்கிய சீடராக உண்டு (மாறநேர் நம்பி-இவர் இராமானுஜருக்கு சிறிது முற்பட்டவர், ஆனால் சம காலத்தவர்,விளாஞ்சோலைப் பிள்ளை, போன்றவர்கள்). மாறநேர் நம்பி குடும்பத்தில் அவர் மாத்திரமே வைணவர்.

      சோழ அரசர்களில் விதிவிலக்காக ஓரிருவர், தங்களின் சிவ பக்தி, சைவ சமய பக்தி காரணமாக வைணவத்திற்கு எதிராக நடந்துகொண்டனர். ஒரு உதாரணம் இரண்டாம் குலோத்துங்கச் சோழன்.

      வடகலை, தென் கலை பிரிவு, பிள்ளைலோகாச்சார்யார் காலத்தில் (14ம் நூற்றாண்டு) வந்தது என்பர். அவர் காலத்தில் சிறு பிள்ளையான, ஆனால் கலாப சமயத்தில் திருவரங்கம் கோயிலில் இருந்த வேதாந்த தேசிகர், வடகலை சம்ப்ரதாய ஆச்சார்யர். அப்போது பிள்ளைலோகாச்சார்யார், அழகிய மணவாள விக்ரஹத்தை எடுத்துக்கொண்டு மதுரை பக்கம் சென்றது எல்லாம் உங்களுக்கு மிக நன்றாகத் தெரியும் (அந்த வரலாறு அப்படியே பாதில நிறுத்தியிருக்கீங்க)

      ஐயர், ஐயங்கார்...மிகப் பிற்பாடு வந்திருக்கும் என்று தோன்றுகிறது. இராமானுஜர் காலத்தில் இது இல்லை.

      நீக்கு
    14. //சைவர்கள், ஆதி சைவர்கள் தனி. // இந்தப் பகுதி எனக்கு நல்ல தகவல். இவர்கள் பிராமணர்களாக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்று நினைக்கிறேன். கொஞ்சம் தெளிவுபடுத்துங்கள், இதனைப் படிக்க நேரிட்டால்.

      நீக்கு
    15. //பல அரசர்கள் வைணவத்தைப் பின்பற்றியதால் இந்தப் பாகுபாடுகளைக் காட்டியே வந்திருக்கிறார்கள். இதை இன்றளவும் தில்லை கோவிந்தராஜர் சந்நிதியில் கண்கூடாகப் பார்க்கலாம்.// இதுல உங்கள் கருத்து தவறு என்று நான் நினைக்கிறேன்.

      வைணவத்தில் என்ன சொல்லியிருக்கிறார் என்றால், நாராயணன் ஒருவனே முழுமுதற் கடவுள், பிற தேவதைகளை வழிபடக்கூடாது என்று. ஆனால் மற்ற தெய்வங்களை நிந்தனை செய்யக் கூடாது என்பதே வைணவம்.

      ஆனால் அதனைக் கடைபிடிப்பவர்கள், அதீதமாக நடந்துகொள்கிறார்கள் என்பது என் கருத்து. அதாவது ஆச்சாரம், சுத்தம் என்பதை எப்படி தீண்டாமை அளவுக்கு கொண்டு போனார்களோ அது போல. இப்போதும், தில்லை கோவிந்தராஜரைச் சேவித்து மறுபுறம் திரும்பாமல் கோயிலை விட்டு வெளிவரும் வைணவர்கள் உண்டு. ஏகாம்பரேஸ்வரர் கோயில் (வைணவ திவ்யதேசம் நிலாத்திங்கள் துண்டப் பெருமாள்), காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் உள்ள கள்வர் சன்னிதி போன்றவற்றிலும் இந்தப் பாகுபாடு காட்டும் வைணவர்கள் உண்டு. அதாவது கள்வர் பெருமானைச் சேவிக்க (திவ்யதேசம், ஆனால் காமாட்சியம்மன் கோயிலில் சன்னிதி) வரும் வைணவர்கள் காமாட்சியம்மனைத் தரிசிக்காமல் பின்புறமாகச் சென்று கள்வர் பெருமானைச் சேவிக்க கோயில் மேடை ஏறாமல் அப்படியே சேவிக்கும்படியாக கண்ணாடி வைத்திருக்கிறார்கள்.

      என் தனிப்பட்ட எண்ணம், இதெல்லாம் அதீதம். நான் ஒருவரை மிக விரும்புகிறேன் என்பதற்கு அர்த்தம் மற்ற எல்லோரையும் வெறுக்கிறேன் என்பதல்ல.

      நீக்கு
    16. //என் மாமனார் வீட்டிலும் விபூதிப் பட்டை. // இந்தப் பகுதியும் எனக்கு புதிய தகவல். நான் எல்லா ஸ்மார்த்தர்களும் விபூதிப்பட்டை தரித்திருப்பார்கள் (கை, வயிறு..), மாடர்னாக இருப்பவர்கள் மாத்திரம் சிறிய அளவில் நெற்றியில் மாத்திரம் பூசியிருப்பர் என்று நினைத்தேன் (நாங்களும் மாடர்ன் ஆட்கள் ஸ்ரீசூர்ணம் மாத்திரம் இட்டுக்கொண்டு இருப்பது போல)

      இங்கு கர்நாடகாவில், லிங்காயத்து சமூகத்தில் பெண்களும் முழு அளவில் நெற்றியில் விபூதிப்பட்டை அணிந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கும் விஷயம்.

      நீக்கு
    17. இல்லை நெல்லை. என் அப்பாவின் முன்னோர்கள் நர்மதை நதி தீரத்திலிருந்து வந்தவர்கள் என்பதை முன்னரும் பல முறை சொல்லி இருக்கேன். சுவடிகளெல்லாம் இருந்தது என்றும் அப்பா மதுரையை விட்டு வரும்போது எல்லாவற்றையும் மதுரை டவுன் ஹால் ரோடு கடைசியிலிருந்து விக்டோரியா எட்வர்ட் ஹால் நூலகத்தில் (மாலை வேளைகளில் ரீகல் தியேட்டர் எனச் செயல்படும்) கொடுத்துட்டார். நாங்க அப்போ செகந்திராபாதில் இருந்தோம். இந்த விஷயமே தெரியாமல் போச்சு.

      நீக்கு
    18. சந்தனக் கீற்றையே நீளமாக இழுத்துக் கைகளில், தோள்பட்டையில், மார்பில் எனத் தடவிப்பாங்க. என் பெரியப்பா நல்ல சிவந்த நிறம். அவர் உடலில் இந்தக் கீற்றுத் தனியாய்த் தெரியும். அதை இட்டுக்கொள்ளாமல் கோர்ட்டுக்குப் போகமாட்டார். செட்டிநாட்டில் பெண்மணிகள் குறிப்பாய் நடுவயதுப் பெண்கள் நெற்றியில் விபூதிப்பட்டை இட்டுக்கொண்டு குங்குமம் வைச்சுக்கறதை நிறையப் பார்த்திருக்கேன். இப்போல்லாம் இல்லைனு நினைக்கிறேன்.

      நீக்கு
    19. //பெருமானைச் சேவிக்க (திவ்யதேசம், ஆனால் காமாட்சியம்மன் கோயிலில் சன்னிதி) வரும் வைணவர்கள் காமாட்சியம்மனைத் தரிசிக்காமல் பின்புறமாகச் சென்று கள்வர் பெருமானைச் சேவிக்க கோயில் மேடை ஏறாமல் அப்படியே சேவிக்கும்படியாக கண்ணாடி வைத்திருக்கிறார்கள். இது தான் கோவிந்தராஜர் சந்நிதியில் நடக்கிறது என நானும் சொல்லி இருக்கேன். அதோடு திருவாலி, திருநகரியில் சொந்த அனுபவமே ஊன்டு. :(

      நீக்கு
    20. //சைவர்கள், ஆதி சைவர்கள் தனி. // இந்தப் பகுதி எனக்கு நல்ல தகவல். இவர்கள் பிராமணர்களாக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்று நினைக்கிறேன். கொஞ்சம் தெளிவுபடுத்துங்கள், இதனைப் படிக்க நேரிட்டால்.//
      உபநயனம் எல்லாம் ஆதிசைவர்களுக்கும் உண்டு. கருவிலியில் சற்குணேஸ்வரர் கோயில் குருக்கள் ஆதி சைவர் தான். அவருக்குப் பின்னர் அவர் மகன் அந்தக் கோயில் பொறுப்பை எடுத்துக் கொண்டாலும் பின்னால் பரம்பரை அறங்காவலர்கள் கைக்குக் கோயில் போனதும் வேறே ஒருத்தரைப் போட்டு விட்டார்கள்.

      இந்த ஆதி சைவர்கள் திருநெல்வேலி சைவப் பிள்ளைமாரில் இருந்து வேறுபட்டவர்கள். சைவப் பிள்ளைமாரிலும் பூஜாக்கிரமங்களைப் பின்பற்றுவோர் நிறைய உண்டு. கோமதி அரசு இதைப் பற்றிச் சொன்னால் நன்றாக இருக்கும். இவங்களில் பூஜாக்கிரமங்களைப் பின்பற்றுவோரைத் தான் தேசிகர் எனச் சொல்லுவார்கள் என நம்புகிறேன். எதுக்கும் என்னிடம் உள்ள தகவல்களையும் சரி பார்க்கணும்.

      நீக்கு
    21. //உபநயனம் எல்லாம் ஆதிசைவர்களுக்கும் உண்டு.// ஆகம அறிவு இல்லாமல் கோயில் கருவறையில் நுழைய முடியாது. நியம, நிஷ்டைகளும் கடுமையாக இருக்கும். இவங்க எங்களோடு திருமண சம்பந்தம் வைச்சுக்க மாட்டாங்க. நாங்களும் வைச்சுக்க மாட்டோம். சிதம்பரம் தீக்ஷிதர்கள் போல் இவங்க தனியானவர்கள். இப்போ இவங்களோட எண்ணிக்கை மிகக்குறைந்து விட்டது. இவர்களைப் பெரும்பாலும் சிவாசாரியார்கள் என்றே அழைப்பார்கள். மற்ற விபரங்கள் பார்த்துத் தான் சொல்லணும்.

      நீக்கு
  6. அப்பாதுரை அவர்களின் கதை என்ற முத்திரை! பல இடங்களில் சிரித்துவிட்டேன்! Fantasy கதை! நல்ல கற்பனை!

    கீதா

    பதிலளிநீக்கு
  7. கதையில் அமெரிக்காவையும் இணைத்து அங்குள்ள மருத்துவர்கள் என்று சிலவற்றையும் கலாய்த்து சேர்த்திருப்பதும் ரசனை!

    //அமாரிகோ நாட்டில் வலி நிவாரண நிபுணர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஒன்று குணப்படுத்துவார்கள் அல்லது மருந்து கொடுத்தே கொன்றுவிடுவார்கள்.//

    கீதா

    பதிலளிநீக்கு
  8. 2K + 11 என்பது 2011 ல் எழுதியது என்றா?

    அவருடைய தளத்தில் போய் பார்த்தால் தெரியும்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தி/கீதா, இந்தக் கதை அநேகமாக அப்பாதுரை 2011 இல் ஒன்பதாவது மாதத்தில் எழுதி இருக்கணும். அப்போத் தான் இந்தத் தவளைப் பெண்ணை வைத்துப் போட்டி ஒன்றை திரு கௌதமன் அறிவித்திருந்தார். நானுமே பங்கெடுத்திருக்கேன். அந்தத் தேதியைத் தான் குறிப்பிட்டிருக்கார் அப்பாதுரை. கடைசி வார்த்தை "தவளை" நு முடியணும்னு இருந்ததோனு நினைக்கிறேன். அதான் அப்பாதுரை "வந்தவளை" என எழுதி இருக்கார். ரேவதியெல்லாம் பாட்டுப் போட்டியில் எல்லாம் பங்கெடுத்துட்டிருந்தாங்க. பாடி ரெகார்ட் செய்து இங்கே வலைப்பக்கத்தில் போடுவாங்க. அதில் அவங்க பரிசு வாங்கின நினைவு. இணைய உலகே ஜாலியா இருந்த ஒரு காலம் அது.

      நீக்கு
  9. ஆற்றொழுக்குப் போன்ற அழகான நடையில் குரு பரம்பரை கதைகளைச் சொல்லிச் செல்கிறீர்கல் நெல்லை. இதை கண்டிப்பாக புத்தகமாக கொண்டுவர வேண்டும். அப்படியே ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்து விட்டால் அடுத்த தலைமுறைக்கும் உதவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பானுமதி வெங்கடேஸ்வரன் மேடம். பழைய பதிவுகளைத் திரும்பப் படிக்கும்போது தவறுகள் இருப்பதையும், இன்னும் நல்லா எழுதியிருக்கலாம் என்றும் தோன்றும். ஜீவி சார் சொன்ன மாதிரி அவுட்லைன் வைத்துக்கொண்டு எழுதினால் இன்னும் மேம்படும்.

      நீக்கு
    2. புத்தகப் பதிப்புக்குப் போவதற்கு முன்பு தவறுகள் என்று பின்னால் நீங்கள் உணர்வதையெல்லாம் திருத்தி விட்டாலால் மனம் திருப்திப் பட்டு விடும் நெல்லை. அதனால் நீங்கள் எழுதுகிறபடி இப்பொழுது எழுதுங்கள். பின்னால் பார்த்துக் கொள்ளலாம்.

      நீக்கு
  10. எ பி யின் சனிக்கிழமைகள்
    நெல்லை அவர்களால்
    சிறப்புறுகின்றன.

    பதிலளிநீக்கு
  11. வாரம் ஒரு பாசுரம் - விரிவான விளக்கம். படங்களும் நன்று. தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  12. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  13. பாபஹரீஸ்வரர் கோயில் தரிசனம் கிடைத்தது நன்றி.படங்கள் அருமை.
    //பாபஹரீச்வரர் சன்னிதி. மூலவரின் முன்னால் ஆவுடையாரின் மேல் பாகத்தில் சிறிய பாணலிங்கம் தெரிகிறதா?//

    நன்றாக தெரிகிறது தரிசனம் செய்து கொண்டேன்.

    //காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலை உங்களில் பலர் தரிசித்திருக்கலாம்//

    20 வருஷங்களுக்கு மேல் ஆகிறது வரதராஜரை தரிசனம் செய்து.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அத்திவரதருக்குப் பிறகு அடிக்கடி அவன் அருளால் வரதராஜருடைய தரிசனம் கிடைக்கிறது எனக்கு.

      நீக்கு
  14. காஞ்சீபுரம் பேரருளாளப் பெருமாள் (தேவப் பெருமாள்) தரிசனம் கிடைத்தது இந்த சனிக்கிழமையில் பாசுரமும் விளக்கமும் அருமை.
    ஆமுதல்வன் பேர் காரணம் விவரமும் அருமை.

    //உலகத்தைத் திருத்தத்தக்க ஞானம் உண்டாகும்படி மயர்வற மதிநலம் அருளி. வாய் முதல் அப்பன் – என் வாக்குக்குக் காரணகர்த்தாவான பெரும் உபகாரம் செய்தவன். //

    நம்மாழ்வார் சொல்வது சரிதான், பாடவைப்பவர் இறைவன் தானே!

    அருமையாக இருக்கிறது பதிவு .

    பதிலளிநீக்கு
  15. அப்பாதுரை அவர்கள் கதை நன்றாக இருக்கிறது, நகைச்சுவையாக இருக்கிறது.

    ஆடி முடித்ததும் அரக்கனுக்கு மகிழ்ச்சி. “ஆகா! மூலிகையை நம்பி இப்படி ஆடிப்பாடி மகிழ்வதை மறந்தேனே! என்ன ஆட்டம்! என்ன ஆட்டம்! என் வலியெல்லாம் போய்விட்டது!” என்றபடி இளவரசியின் கணவனை விடுதலை செய்தான்.//

    மகிழ்ச்சியாக இருந்தால் நோய் போய் விடும் என்ற செய்தியை சொல்லி விட்டார் அப்பாதுரை சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கட்டுப்பாடெல்லாம் இல்லாமல் இஷ்டத்துக்குக் கதையை நீட்டிக் கொண்டு போகலாமே. என்றாலும் இது சுருக்கம் தான்.

      நீக்கு
  16. ​அப்பாதுரை சாரின் கதை இப்பகுதியில் இரண்டாவது கதை ஆகிவிட்டது என்று கூறியிருந்தேன். கடைசியில் அது எ பி யில் இரண்டாம் பதிப்பு என்றாகி விட்டது. இரண்டாவது கதை இரண்டாம் பதிப்பு.. இதுதான் தற்செயல் என்பதோ.

    Jayakumar

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!