14.4.26

பொக்கிஷம் : சர்க்கஸ் கோமாளி - தென் ஆப்பிரிக்க சினிகதை - எஸ். குரு

 

தென் ஆப்பிரிக்க சினிகதை

சர்க்கஸ் கோமாளி  -  எஸ். குரு

ஒரு அத்துவானக் காட்டில் அந்த ரயில்வே ஸ்டேஷன் இருந்தது? ஸ்டேஷன் மாஸ்டர் ஹென்றி சலித்துப் போன வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தார். அவர் மனைவி காதரினுக்கு அந்த இல்வாழ்க்கை யில் பூரணத் திருப்தி இல்லாமல் இருந்தது! அவர்களது ஒரே மகள் எம்மாவும் சகஜமான மனோ நிலையில் இல்லை. நன்றாகப் பியானோ வாசிக்கத் தெரிந்த அவளுக்கு, ஏனோ இங்கு வந்த பிறகு பியானோ வாசிப்பதில் லயிப்பு ஏற்படவில்லை!

வரும் வருமானம் வாய்க்கும், கைக்கும் சரியாக இருந்தது! அதுவும் வாழ்க்கையில் சலிப்பு ஏற்பட ஒரு காரணம் என்று சொல்லி விடலாம்.
ஹென்றி வீட்டுக்கு 'ஜோ' என்ற இளைஞன் அடிக்கடி வருவான். அவன் அந்தப் புதிய பிரதேசத்தில் ஹென்றி தம்பதியருக்குப் பழக்கமான இளைஞன்.

அவனுக்கு எம்மா மீது ஒரு கண்.  ஆனால் அவன் ஆசை ஆசையாகப் பேச வரும்போது எம்மா விலகி விலகிப் போய்விடுவாள். அவளுக்கு வயது 19. 'ஜோ' எப்போதும் தன் ஸ்போர்ட்ஸ் சைக்கிளை வைத்துக் கொண்டு சுற்றிக் கொண்டிருப்பான். கடைத் தெருவுக்குப் போகும் போது காதரினுக்கு வேண்டிய மளிகைச் சாமான்களை வாங்கி வந்து தருவான்.

ஃபிராங் என்ற நடுத்தர வயது மனிதரும் ஹென்றியின் குடும்ப நண்பர். அவருக்கும் வயதாகி விட்டது என்றாலும் வயதான காதரினிடம் காதல் வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டே இருந்தார்.

ஹென்றி, கேதரின் தம்பதிகளின் ஒரே மகனான 'வில்லம்' பேசும் திறனை இழந்திருந்தான். மருத்துவப் பரிசோதனைகள் அவனுக்கு உடல் கோளாறு இல்லை என்று சொல்லின. ஆனால் ஏனோ, ஒன்பது வயதாகியும் அந்தச் சிறுவனுக்கு பேசும் சக்தி இல்லை!

ஒருநாள் ஹென்றி படுக்கை அறையில் இருக்கும்போது, ஒரு சிங்கத்தின் உறுமல் கேட்டுத் திடுக்கிட்டுக் கண் விழித்தான். காதரினுக்கும், எம்மாவுக்கும்கூட விழிப்பு வந்துவிட்டது!

"எங்கிருந்தோ, ஒரு சிங்கம் மோப்பம் பிடித்துக் கொண்டு வந்துவிட்டது!  இரு! இரட்டைக் குழல் நுப்பாக்கியை எடுத்துக் கொள்கிறேன்!" என்று திகிலு டன் சொன்னார் ஹென்றி. துப்பாக்கியுடன் இருட்டில் தட்டுத் தடுமாறி டார்ச் விளக்கின் ஒளியுடன் நடந்து சென்றார்.

ஆம்! அது ஒரு சிங்கத்தின் உறுமல்தான்! ஆனால் அந்த சிங்கத்தைத் துப்பாக்கியால் சுட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. ஏனென்றால் அந்தச் சிங்கம் கூண்டில் அடைபட் டிருந்தது. தண்டவாளத்தின் மீது நின்ற வேகன்களில் ஒரு சர்க்கஸ் கம்பெனியின் தளவாடங்களும், கம்பெனிக்குரிய மிருகங்களும் இருந்தன. தன் சின்ன ரயில்வே ஸ்டேஷனின் அமைதியைக் குலைக்கும் வண்ணம் ஒரு சர்க்கஸ் கம் பெனி அங்கு வந்தது ஹென்றிக்கு மஹா எரிச்சலை ஏற்படுத்தியது. கூண்டில் இருக் கும் சிங்கத்தை எம்மா கிட்ட நெருங்கி ஆவலுடன் பார்த்தாள்.

மறுநாள் காலை எம்மா ரயில்வே டிராக் அருகில் வந்து சர்க்கஸ் கூட்டத்தினரை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தபோது, ரிங் மாஸ்டர் ஒருவன் அவளைக் கண்டுவிட்டான். ஒரு வேகன் அருகில் அவள் வந்தபோது அவள் வாயைப் பொத்தி பலாத்காரம் செய்ய முயன்றான். எம்மா திமிறினாள்.
மகளைத் தேடிக் கொண்டு அங்கே வந்த ஹென்றி முனகல் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந் தார். 

எம்மாவின் தோழன் 'ஜோ' காதிலும் இந்த முனகல் கேட்டது. ஹென்றி, 'ஜோ' இருவரும் உரிய நேரத்தில் அந்தக் கிராதகனிடமிருந்து அவளை மீட்டார்கள். காதரின் இரண்டு பேர் காயங்களுக்கும் மருந்திட்டாள். 'ஜோ'வுக்கு உதடு கிழிந்து ரத்தம் கசிந்து கொண்டிருந்தது.

மானுவேல் என்ற சர்க்கஸ் கோமாளி சிறுவன் வில்லத்திற்கு நண்பனானான். முக்கால்வாசி நேரம் மானுவேல், கோமாளி முக மேக்கப்பைக் கலைக்காமலே இருந்தான். அவனது விரிய எழுதப்பட்ட கண்களும், அகன்ற சித்திர உதடுகளும் சிறுவன் வில்லத்திற்கு வினோதமாகத் தெரிந்தன.  வண்ண மயமான அவளது கோமாளி உடையை அதிசயத்துடன் பார்த்தான்.  

ஹென்றி தம்பதிகளின் வீட் டுக்குஅருகில் பாழடைந்த ஒரு தானியக் களஞ்சிய அறை இருந்தது. சிறுவன் தன் சர்க்கஸ் கோமாளி நண்பனை அதில் குடியேற்றினான்.  சர்க்கஸ் கூட்டத்தைக் கொஞ்ச காலம் புறக்கணித்து விட்டு, கோமாளி மானுவேல் அந்தக் களஞ்சிய அறையிலேயே வாசம் செய்தான். சிறுவன் வில்லம் அந்தக் கோமாளியை அங்குக் குடியேற்றி இருப்பது ஹென்றி தம்பதியருக்கோ, அக்கா எம்மாவுக்கோ தெரியாது.

பல செப்பிடு வித்தைகளை மானுவேல், சிறுவனுக்குக் கற்றுக் கொடுத்தான்.  பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் களஞ்சிய அறையே கதி என்று கிடந்தான் வில்லம். கையில் நாணயத்தை வைத்துக் கொண்டு, அதை மறைய வைப்பது, துண்டாக்கிய முழு நீளக் கயிறை மீண்டும் இணைப்பது, பாக்கெட்டிலிருந்து இழுக்க இழுக்கக் கைக்குட்டைத் துணிகள் தொடர்ச்சியாக வந்து கொண்டே இருப்பது என்று பல வித்தைக ளைச் சிறுவன் கற்றுக் கொண்டான்.

சில மாஜிக் வேலைகளைத் தன் குடும்பத்தினரின் முன் செய்துகாட்டி அவர்களை வியப்பில் ஆழ்த்தினான். சிறுவனுக்குள் ஒளித்திருந்த ஓவியனும் இப்போது வெளிப்பட்டான். விதம் விதமான கோமாளி உருவங்களை அவன் சித்திரமாகத் தீட்டிக் காட்டினான்...

ஒருநாள் மானுவேலுடன் தனித்து இருத்தபோது சிறுவன் துக்கம் மேலோங்க அழத் தொடங்கினான்... கோமாளி மானுவேல் பச்சாதாபம் கொண்டு சிறுவனின் கண்ணீரைத் துடைத்தான்....

"சிரித்த முகத்துடன் இருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டுத் தன் மேக்கப் பெட் டியை எடுத்தான்...

சிறுவனுக்கு கோமாளி மேக்கப் போட ஆரம்பித்தான்... சிறுவன் முகத்தில் அவன் எழுதிய அகன்ற வாய் சதா இளித்துக் கொண்டே இருந்தது.

கோமாளி மேக்கப் போடப்பட்ட வில்லம் தன் அம்மா கேதரினைத் தொந்தரவு செய்து ஒரு வண்ண மயமான கோமாளி உடையையும் தைத்துக் கொண்டான்! சிறுவனின் கண்முன் விதவிதமான கோமாளி உருவங்கள் தோன்றத் தொடங்கின. தன் டிராயிங் நோட்டுப் புத்தகத்தில் அந்தக் கோமாளி உருவங்களை வில்லம் பதிவு செய்து வைத்தான்...

ஒருநாள் எம்மா, ஒரு குளியல் தொட்டியில் ஆடையின்றிக் குளித்துக் கொண்டிருந் தாள்.  தூரத்தில் 'ஜோ' சைக்கிளில் வருவதைப் பார்த்ததும் தொட்டியைத் தலைகீழா கக் கவிழ்த்து அதற்குள் மறைந்துகொண்டாள். 'ஜோ' கவிழ்ந்து கிடந்த குளியல் தொட்டியைப் பார்த்தான். அருகே மெல்ல நடந்து வந்தான்...

"உள்ளே யார் இருப்பது? காதரினா? வில்லமா? இல்லை... இல்லை.... எம்மாநீதான் இருக்கிறாய்!"என்று சொல்லிவிட்டுச் சட்டமாக அந்தத் தொட்டி மீது அமர்ந்து கொண்டான்.

"என்னை வெளியே வரவிடு!" என்று எம்மா பரிதாபமாகக் கத்தினாள்...

"நான் உன்னை நெருங்கி, நெருங்கி வருகிறேன். நீ விலகி, விலகிப் போகிறாய்! இந்தத் தடவை நீ என்னிடம் வசமாக மாட்டிக் கொண்டாய்! நீ எனக்கு ஒரு வாக்குக் கொடுக்க வேண்டும்!  இன்று மாலை அருகில் நடக்க இருக்கும் நடன நிகழ்ச்சிக்கு என்னுடன் நீ ஜோடியாக வரவேண்டும். கட்டாயம் நடன நிகழ்ச்சிக்கு வருகிறேன்' என்று வாக்குக் கொடுத்தால்தான் குளியல் தொட்டியை விட்டு எழுவேன்.  இல்லை என்றால் நீ மூச்சுவிட முடியாமல் தொட்டிக்குள்ளேயே மயங்கிக் கிடக்க வேண்டியதுதான்!" என் றான்.
வேறு வழியின்றி எம்மா வாக்குக் கொடுத்தாள்.

ஒருநாள், இரவு நெடு நேரமாகியும் சிறுவனைக் காணவில்லை. ஹென்றிக்கு பயம் வந்துவிட்டது.

"பையன் எங்காவது வழி தவறிப் போய் விட்டானா? எனக்குக் கவலையாக இருக்கிறது! நான் போய்ப் போலீசில் புகார் செய்து விட்டு வருகிறேன்!" என்று அவர் டார்ச் லைட்டை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டார்.

களஞ்சிய அறையில் கோமாளி மானுவேலுடன் சிறுவன் வில்லம் பேசிக் கொண்டிருந் தான்.

"நள்ளிரவு வந்துவிட்டது!  நீ கிளம்பு!  உனக்கு பயமாக இருந்தால் நான் கூட வருகிறேன். வீடு வரை வந்து உன்னை விட்டு விட்டு வருகிறேன்."

"இல்லை. துணை அவசியமில்லை. நானே தனியாக வீடு செல்வேன்" - சொல்லிவிட்டு வில்லம் புறப்பட்டான்.

அவனைப் பார்த்த பிறகுதான் ஹென்றிக்கும் காதரினுக்கும் உயிர் வந்தது!
இதற்குள் இரண்டு படகுக்கார்கள் அவர்கள் வீட்டு எல்லைக்குள் வந்துவிட்டன. நீலச் சீருடை அணிந்த நாலைந்து போலீஸார் அந்தக் கார்களில் இருந்து இறங்கினார்கள். இரண்டு பெரிய அல்சேஷன் நாய்களும் வந்தன.. டார்ச் லைட்டை அடித்துக் கொண்டு அவர்கள் அக்கம்பக்கத்தில் தேடத் தொடங்கினார்கள்.... சார்ஜெண்ட் ஹென்றியிடம் வந்து விசாரிக்கத் தொடங்கினார்...

"ஐயா! மன்னிக்க வேண்டும்! போலீஸில் புகார் செய்து உங்களுக்கெல்லாம் தொல்லை கொடுத்து விட்டேன். என் பையன் பத்திரமாக வந்து சேர்ந்து விட்டான்."

ஒருநாள் துண்டித்த முழக்கயிறைப் பிசிறு இன்றி முழுசாகக் காண்பிக்கும் வித்தையை தன் தாய், தந்தை முன் வில்லம் செய்து காட்டினான்...

"எங்கேடா அப்பா இதைக் கற்றுக் கொண்டாய்?" என்று காதரின் பூரித்தாள்.

"என்னோடு வாருங்கள்" என்று சைகைகள் செய்து ஹென்றி, காதரின், எம்மா - மூவ ரையும் வில்லம் சிதிலமடைந்த களஞ்சிய அறைக்கு அழைத்துச் சென்றான்...

அங்கே கோமாளி மானுவேல் வழக்கமாகத் தங்கி இருக்கும் மறைவிடத்தில் அவனைச் சிறு வன் தேடினான். கோமாளியைக் காணவில்லை.!

"மானுவேல்/... மானுவேல்!" என்று சிறுவன் கூவியழைக்கத் துவங்கினான்.
ஹென்றி, காதரின், எம்மா மூவருமே சிலிர்த்துப் போனார்கள்.

இதுகாறும் பேசும் சக்தியை இழந்திருந்த பயல் இப்போது பேசுகிறானே! 'மானுவேல்' என்று கூவுகிறானே என்று அதிசயித்தார்கள். ஆனால் கோமாளியைக் காணவில்லை.

அந்த ஊர் மாதா கோயிலின் தலைமைப் பாதிரியார் ஹென்றியின் வீட்டுக்கு வந்திருந்தார். அவர் கடுப்புடன் பேசினார்...

"அந்நியர்களோடு உறவு கொண்டாடுவதைத் தவிர்த்து விடுங்கள். அந்தக் கோமாளியோடு உங்கள் பையன் பழக வேண்டாம்...

சில முரடர்கள் துப்பாக்கியோடு மானுவலைத் தேடிக் கொண்டு வந்தார்கள்.
காதரின், ஹென்றி, எம்மா-மூவருமே மிகுந்த கவலைக்கு ஆளானார்கள். இந்த மூடர்களின் துப்பாக்கிக்கு இரையாகாமல் மானுவல் தப்பிக்க வேண்டுமே என்று நினைத்தார்கள்.

அப்போது கோமாளி மேக்கப் புடன் வில்லமும் அங்கு வந்தான். மானுவல், வில்லம்- இருவருமே எச்சரிக்கப்பட்டார்கள்.

ரயில்வே டிராக் அருகில் மானுவல் சென்றுகொண்டிருந்தபோது, ஒருவன் குறி பார்த்துச் சுட்டான். விலாவில் குண்டுபாய்ந்து மானுவல் தண்டவாளத்தின் மீது விழுந்தான்... காதரின் வாய் விட்டு அலறினாள். ஹென்றி தண்டவாளத்தின் அருகே ஓடோடியும் வந்தார்...

துப்பாக்கியால் சுட்டவன் அருகில் நின்று கொண்டிருந்தான். அவனைப் பார்த்துச் சீறி னார்.

"என்ன மடத்தனம் இது?  ஒரு அப்பாவியைச் சுட்டிருக்கிறீர்கள்..."

மார்பருகே காதை வைத்துக் கேட்டார். இதயம் இயங்கிக் கொண்டிருந்தது. மானுவலை அப்படியே ஹென்றி அள்ளிக் கொண்டு சென்றார்... உரிய நேரத்தில் தீவிர மருத்துவ சிகிச்சைஅளிக்கப்பட்டு மானுவல் உயி ர் பிழைத்தான்.
மானுவல், ஹென்றியின் வீட்டில் படுக்கையில் படுத்திருந்தான்.  சிறுவன் வில்லம் அருகே இருந்தான். தன் வாழ்வில் நடந்த கசப்பான சம்பவங்களை அசை போட்ட மானுவலுக்கு அழுகை வந்தது.

தாரை தாரையாகக் கண்ணீர் சொரிந்தான்... வில்லம் இதைப் பார்த்து மிகவும் சங்கடப்பட்டான்...

முன்னொரு நாள், தான் கண்ணீர் சிந்தியபோது, தன் கண்ணீரைத் துடைத்து. சிரிக்கும் முகமாகத் தன் முகத்தைக் கோமாளி மேக்கப் போட்டு மானுவல் ஆக்கியதை இப்போது அவன் நினைவு கூர்ந்தான்...

மானுவலின் கண்ணீர்த் துளிகளை வில்லம் கண்டி எறிந்து,  அவனைத் தேற்றினான்.  மேக்கப் சாதனங்களை எடுத்து வந்து மானுவலின் முகத்தில் கோமாளி மேக்கப் போட்டான்.  பெரிய சிரிக்கும் உதடுகளை எழுதினான். மானுவல் மனக் கவலைகளை மறந்து சிரிக்கத் தொடங்கினான்...

சர்க்கஸ் குழுவினர் அங்கிருந்து நிலை பெயர்த்து, வேறு ஊருக்குச் செல்லும் நாள் வந்தது! மானுவல் ஹென்றி குடும்பத்தினரிடம் இருந்து பிரியா விடை பெற்றான். ரயில்வே ஸ்டேஷனுக்குச் சென்ற வில்லம், மானுவலின் உருவம் மறையும்வரை ரயில் பெட்டியைப் பார்த்துக் கையை ஆட்டிக் கொண்டு நின்றான்.

ஹென்றி குடும்பத்தில் இறுக்கம் தளர்ந்திருந்தது. பேசும் சக்தியை இழந்து விட்ட வில்லம் பேசத் தொடங்கிவிட் டது குடும்பத்தில் ஒரு மகிழ்ச்சியான குழலை உருவாக்கி இருந்தது. ஜோ-எம்மாவின் ஸ்நேகம் புத்துயிர் பெற்றிருந்தது. ஹென்றியும், காதரினும் மனம்விட்டுப்பேசி பல மகிழ்ச்சியான தருணங்களை அனுபவித்துத் தங்கள் அன்பைப் புதுப்பித்துக் கொண்டனர்.

அன்று அவர்கள் ஒரு பொது விருத்தில் கலந்துகொள்வதற்காகச் சென்றார்கள். ஹென்றி. காதரின். எம்மா, ஜோ, வில்லம் அனைவருமே காரில் புறப்பட்டுச் சென்றார்கள். விருந்துக்கு வந்திருந்த பாதிரியாரின் ஆட்கள் ஹென்றி குடும்பத்தி னரை வலுச்சண்டைக்கு இழுத்தார்கள். நிலைமை மோசமாகிவிடவே, ஹென்றி குடும்பத்தினர் அந்த இடத்தை விட்டுப் புறப்பட்டுச் செல்ல நேரிட்டது.

வீட்டுக்கு வந்து அவர்கள் ஆசுவாசப்படுத்திக் கொண்டார்கள். கொஞ்ச நேரம் கழித்து இரண்டு மூன்று கார் கள் நெருங்கி வரும் ஓசை கேட்டது.
பாதிரியாரின் ஆட்கள்காரிலிருந்து இறங்கி வந்தார்கள்.

"நடந்ததற்காக வருந்துகிறோம். மன்னிப்புக் கேட்கவே வந்தோம்" என்றான் ஒருவன். ஹென்றி குடும் பத்தினரும், வந்தவர்களும் கைகுலுக்கிக் கொண்டார்கள்.

(இது ஒரு 'சிம்பாலிக் கதை. அத்துவானக் காடுகளைக் கூட புதிய சிந் தனை அலைகள், புது சித்தாந்தங்கள் ஊடுருவிவிடும். முதலில் புதிய அணுகுமுறைகளுக்கு எதிர்ப்பு இருக்கும். எதிர்ப்புகளை மீறி, புதிய சிந்தனைககள் சமுதாயத்தில் வேரூன்றிவிடும். புது வாழ்வு மலரும். மறு மலர்ச்சி உண்டாகும்... என்று இந்தக் கதை சொல்கிறது. 

படத்தின் இயக்குனர்: காடிங்கா ஹெய்ன்ஸ்)

மஞ்சரி டிசம்பர் 2004 

=============================================================================

நண்பர்களுக்கும் உறவுகளுக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.



=========================================================================================




தமிழ் சினிமாவை பொற்காலமாக மாற்றிய இயக்குநர்களில் ஒருவர் ஸ்ரீதர். சினிமாவை நேசிப்பவர்கள் இவரைத் தவிர்க்கவே முடியாது. 1961ம் ஆண்டில் தனது சொந்தப் பட நிறுவனம் ‘சித்ராலயா’வைத் தொடங்கிய இயக்குநர் ஸ்ரீதர் 30 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தினார்.

கல்யாண பரிசு, தேன் நிலவு, நெஞ்சில் ஓர் ஆலயம், நெஞ்சம் மறப்பதில்லை, காதலிக்க நேரமில்லை என அவர் தந்த சூப்பர் ஹிட் திரைப்படங்கள் நிறைய உண்டு. ஸ்ரீதர் என்ற பெயருக்காகவே ஒரு திரைப்படத்துக்கு மக்கள் பெரும் வரவேற்பைத் தந்தனர் என்றால் அது மிகையில்லை. ஆனால், விதியின் விளையாட்டிலிருந்து இவரும் தப்பவில்லை. ஆம், இத்தனை சூப்பர் ஹிட் திரைப்படங்களைக் தந்து புகழின் உச்சத்திலிருந்த ஸ்ரீதரை திடீரென்று ஒரு நாள் சுருட்டிப் போட்டது பக்கவாதம் என்ற மோசமான பாதிப்பு. சுறுசுறுப்பானவரை முடக்கி படுக்கையில் போட, வீட்டுக்குள்ளேயே அடங்கிப் போனார்.

அந்த மாபெரும் திரைக் கலைஞருக்கு மனைவியான தேவசேனா எனும் அற்புதப் பெண்மணி அவருக்கு அருகிலேயே இருந்து கண்ணுக்குக் கண்ணாக கவனித்துக் கொண்டார். தாய் போல அனைத்தையும் முகம் கோணாமல் செய்து அன்பு காட்டியதன் பலன் நோய் தாக்குதலுக்குப் பிறகு ஸ்ரீதர் 14 வருடங்கள் வாழ்ந்து மறைந்தார்.

மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும்போது சில நேரம் திடீரென யாரையாவது பார்க்க வேண்டும் என்று விரும்பும் ஸ்ரீதரின் ஆசையை சம்பந்தப்பட்டவருக்கு பணிவுடன் தெரிவித்து சந்திப்புக்கு ஏற்பாடு செய்து மகிழ்விப்பார் என அவர்களைப் பற்றி அறிந்தவர்கள் சொல்லி வியக்கின்றனர்.

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவராக இருந்தாலும் கணவரின் அன்புக்குரிய நண்பர்களை வரவழைத்து, அவர்களோடு கணவர் பேச முயற்சி செய்தவற்றை தான் பேசி அவர்களுக்குப் புரிய வைத்து கணவரின் கடைசி நிமிட எதிர்பார்ப்புகளையும் சிறப்பாகவே பூர்த்தி செய்தவர் ஸ்ரீதரின் மனைவி தேவசேனா.

14 ஆண்டுகள் படுக்கையிலேயே ஸ்ரீதர் இருந்தபோதும் கண்ணீர் விடாமல் கணவருக்கு நம்பிக்கை தந்த தேவசேனாவின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது 2008 அக்டோபரில் அன்புக்குரிய கணவர் மறைந்தபோதுதான்.

சிறு கருத்து வேறுபாடுகளைக் கூட பொறுத்துக்கொள்ள முடியாமல் விவாகரத்து கேட்டு கோர்ட்டுக்கு செல்லும் தம்பதியர் இடையே தேவசேனா போன்ற பெண்மணிகள் போற்றத் தகுந்தவர்கள்தான்.

கல்கி ஆன்லைன் 22/10/24


சமீபத்தில் ஒரு யு டியூப் பத்திரிகைக்கு மறைந்த இயக்குனர் ஸ்ரீதர் மனைவி தேவசேனா கொடுத்த பேட்டியிலிருந்து..


ஸ்ரீதர் திருமணம் காதல் திருமணம் என்று நிறைய பேர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  ஆனால் அது பெரியவர்கள் பேசி முடித்த திருமணம்.  க்வீன் மேரிஸ் கல்லூரியில் கல்லூரியில் தேவசேனா படித்துக் கொண்டிருந்தபோது திருமணம் நிச்சயமானது.  தேவசேனாவைப் பொறுத்தவரை ஸ்ரீதர் யாரென்றோ, அவர் புகழோ அவருக்கு முன்னதாகத் தெரியாது.  அவரே அறியாமல் அவர் கல்லூரி ஹாஸ்டல் தலைவியாக இருந்தபோது மாதம் ஒரு படம் அழைத்துச் செல்லும் பொறுப்பின்போது ஒருமுறை நெஞ்சம் மறப்பதில்லை படத்துக்கு வோட்டு அதிகம் விழ,  அதற்கு ஏற்பாடு செய்து அழைத்துப் போனாராம்.  இவர் சாய்ஸில் கொடுத்திருந்த இன்னொரு ஆங்கிலப் படத்துக்கு ஐவரும் இன்னொருவரும் மட்டுமே வோட்டு போட்டிருந்தார்களாம்.  நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் நம்பியார் வரும் காட்சியில் எல்லாம் சீட்டுக்கு அடியில் குனிந்து  கொள்வார்களாம்!

ஆந்திராவில் புகழ்பெற்ற ரெட்டியார் குடும்பம் தேவசேனாவின் குடும்பம்.  ஸ்ரீதர் பயங்கர கூச்ச சுபாவம்.  உட்லாண்ட்ஸ் ஹோட்டலில் வைத்து பெண் பார்த்தபோது வந்து ஒரு நொடி பார்த்து சம்மதம் சொல்லி விட்டு இவரிடம் பேசாமலேயே கிளம்பி விட்டாராம்.  அதற்குள் சர்வர் கூட்டம் கூடி விட்டது.  திருமணத்துக்குமுன் ஒருமுறை மாமனார் வீட்டுக்கு திருமண வேலை சம்பந்தமாக ஏதோ பேச போயிருக்கிறார் ஸ்ரீதர்.   சரி, மாப்பிள்ளை வந்திருக்கிறாரே..  பெண்ணைப் பார்க்க, பேச பிரியப்படலாம் என்று அவர் அம்மா சொன்னதில் இவர் அலங்காரம் செய்து கொண்டு காத்திருக்க சில வார்த்தைகள் வருங்கால மாமனாரிடம் பேசிவிட்டு கிளம்பி விட்டாராம் ஸ்ரீதர்.  பரபரப்பாக இருப்பார்.  ரொம்ப ஃபாஸ்ட் எல்லாவற்றிலும்.
தமிழ்நாட்டில் அப்போது இரண்டு பெரிய திருமணங்கள்தான் சொல்வார்கள்.  

ஒன்று சிவாஜி தம்பி ஷண்முகம் திருமணம்.  இன்னொன்று ஸ்ரீதர்-தேவசேனா திருமணம்.  

ஹிந்தி, தெலுங்கு தமிழ் என்று எல்லா மொழிகளிலிருந்தும் பிரபலங்கள் வருகை.  எல்லா திரைப்பட கம்பெனிகளும் இவர் திருமணத்துக்கு உதவியாய் ஆளுக்கொரு கார் அனுப்பி இருந்தார்கள்.  சென்னையே ஸ்தம்பித்துப் போனது.  தேவசேனாவின் கல்லூரி முதல்வர் மண்டபம் வரை வந்து, உள்ளே வரமுடியாமல் திரும்பிச் சென்று, பின்னர் நிலைமையைச் சொல்லி ஃபோன் செய்தாராம்.  இவர்களுடைய கல்யாணப்பத்திரிகை ஒன்று 10 ரூபாய் என்று விற்பனை ஆனதாம்.  உள்ளே வந்து பார்க்கலாமே..!!   திருமணம் நிச்சயமாகி, விஷயம் கிசுகிசு போல கல்லூரியில் பரவியதும் கல்லூரி முதல்வர் அழைத்து  காதல் கல்யாணமா என்று விசாரித்தாராம்.  

நிறையபேர் எங்கள் திருமணத்தை காதல் கல்யாணம் என்றுதான் நினைக்கிறார்கள், ஆனால் அது தவறு என்கிறார் திருமதி ஸ்ரீதர்.  சுத்தமாக சமையல் தெரியாது.  அம்மா வீட்டில் தினசரி 100 பேருக்கு சமையல் நடக்கும் வீடு.  எங்களை சமயலறைக்குள் விடவே மாட்டார்கள். 

சாம்பார், ரசம் எல்லாம் வைக்கத் தெரியாது.  சமையல்காரர் இருப்பார்.  பெரும்பாலும் அவருடன் மோகன், ஜெமினி என்று யாராவது கூட வருவார்கள் சாப்பிடவும் செய்வார்கள். 

ஸ்ரீதர் கலர் ட்ரெஸ் போட்டுப் பார்த்ததே கிடையாது.  ஏன் போடவேண்டும்?.  அவர் வெள்ளை ட்ரெஸ்ஸே நல்லா இருக்கும்.  அந்த சிகரெட் பிடிக்கற ஸ்டைல்..  குளிர் கண்ணாடி....     வெரி ஸ்டைலிஷ் பெர்சன்.

ஏதாவது படம் முடிந்தால் அவர்களை உடனே வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுத்து விடுவார் ஸ்ரீதர்.  எவ்வளவோ பிரபலங்கள் அப்படி வீட்டுக்கு வருவார்கள்.  திணறிப்போவார் தேவசேனா.  அதனால் படிப்பை பாதியிலேயே - இரண்டாவது வருடத்துடனேயே - நிறுத்தி விட்டார்.  உணவு இப்போது போல வெளியிலிருந்து வரவழைக்கும் காலம் இல்லையே..  வீட்டிலேயே தயார் செய்ய வேண்டும்.
ஏன் புது முகங்களை போட்டு ரிஸ்க் எடுக்கறார்னு நான் கேட்க முடியாது.  உதாரணமா இப்போ காஞ்சனாவை அறிமுகப்படுத்துகிறார்னா அவரை ரசிகர்களுக்குப் பிடித்து ஏற்றுக் கொண்டு படம் ஓடினால் ஓகே..  இல்லா விட்டால் இவருக்குத்தானே நஷ்டம். 

சிலபேர்கிட்ட என்னன்னா..  அவங்க சொல்லலை..  அவர்தான் Introduce  பண்ணினார்னு சொல்லலை.    என்ன அவர் பண்ணின படம் ஒண்ணு நல்லா ஓடிடுச்சுன்னு அந்த படத்து டைரக்டர் சொன்னாரே தவிர, இவர் பேரை சொல்லவே இல்லை.  அது பண்ணக் கூடாது..  See..  That is what I don't Like...  You know..  ஒரு நன்றியே இல்லாம...  அந்த மாதிரி சொல்லக் கூடாது இல்லையா?  அந்த மாதிரி ரகம் ரகமா இருக்காங்க மனுஷங்க...  என்ன பண்ண முடியும்?

 

திருமணம் நிச்சயாமானதும் அவர் நண்பர்களில் என்னை முதன்முதலில் வந்து பார்த்தவர் ஜெமினி.  "யாரது?  நான் பார்த்தே ஆகணும்" என்று சொல்லி வந்து பார்த்துச் சென்றார்.

நகைச்சுவை வசனங்கள் எழுதும்போது சிரிச்சுகிட்டே எழுதுவார்.  சமயங்களில் அவர் அழுதுகொண்டே உணர்ச்சிகரமான டயலாக்ஸ் எழுதி பார்த்திருக்கிறேன்.  எப்பப் பார்த்தாலும் எழுத மாட்டார். ஷூட்டிங் போறதுக்கு முன்னாடிதான் எழுதுவார். 

50 கருத்துகள்:

  1. இனிய புத்தாண்டு வாழ்த்துகள் எல்லோருக்கும்,

    ஓ! இன்று கதையுடன் இன்னொரு பகுதியும் இருக்கிறதே....வருகிறேன் வாசித்துவிட்டு! இன்று கொஞ்சம் வேலைகள் உண்டே!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா... வாழ்த்துகளுக்கு நன்றி, வாழ்த்துகள்.

      நீக்கு
  2. தேவசேனா அவர்களின் பேட்டியைக் கொஞ்சம் கேட்டேன் இன்னும் முழுவதும் கேட்கவில்லை இடையில் காதின் பிரச்சனை வந்ததால்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேட்டீர்களா, படித்தீர்களா?

      நீக்கு
    2. சொல்லியிருக்கிறேனே....முன்பு கேட்கத் தொடங்கி பாதியில் இருக்கு எடுத்து வைத்திருந்த வீடியோ. காது சரியாக இல்லாமல் இருந்ததால் ...இங்கு நீங்க இப்ப பகிந்திருக்கீங்க!!! ஸோ மீதியை இனிதான் கேட்க வேண்டும் ஸ்‌ரீராம்..நீங்கள் கொடுத்திருப்பதை வாசிக்கவும் வேண்டும்

      கீதா

      நீக்கு
    3. மூன்றுக்கும் மேற்பட்ட பகுதிகள் வந்திருப்பதாக நினைவு.

      நீக்கு
    4. ஆமாம் மூன்று.....அல்லது மூன்றுக்கும் மேல்!!!!!!

      கீதா

      நீக்கு
  3. கதை கொஞ்சம் கோர்வையாக இல்லாதது போலத் தோன்றியது. கடைசியில் அடைப்புக்குறிக்குள் சொல்லியிருப்பது, கதையை வாசிக்கும் போதே புரிந்துவிட்டது கதை என்ன சொல்ல வருகிறது என்று.

    காட்சிகளாகப் பார்த்தால் கோர்வை புரியுமாக இருக்கலாம்..திரைக்கதையின் அமைப்பைப் பொருத்து...எடிட்டிங் பொருத்து.

    ஆனால் ஒரிஜினல் தென்னாப்பிரிக்க சினி கதையை ஆங்கிலத்தில் வாசிக்கக் கிடைத்தால் கோர்வையாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

    கதை ஜஸ்ட் ஒரு சினிக்கதையைச் சொல்வது போல் இருக்கிறது தலைப்பும் அதைத்தான் சொல்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதை புரிகிறது. ஆனால் சம்பவங்கள் வலுவாக இல்லை! அது அந்த ஊர் வழக்கமாக இருக்கலாம்!

      நீக்கு
    2. ஆமாம். ஆனால் எனக்குத் தெரிந்து மொழிபெயர்ப்பு என்பதால் ப்ளஸ் படத்தின் கதை என்பதால் அப்படி நமக்குத் தோன்றுகிறதோ என்று தோன்றியது ஸ்ரீராம்.

      கதை நல்லாவே புரிகிறது.

      கீதா

      நீக்கு
  4. அனைவருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  6. தூக்கம் வருகிறது, அதனால் பிறகு வந்து கருத்திடுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புத்தாண்டு வாழ்த்து சொன்ன கையோட தூங்கப் போயிட்டாங்களே.

      நீக்கு
    2. ஹா..  ஹா..  ஹா.. 

      நான் வேற சாய்ஸ்ல விடறாங்கன்னுல்லாம் சொல்வேனேன்னு வந்துட்டு போறாங்க!

      நீக்கு
  7. அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  8. தேவசேனா பற்றி வாசித்த நினைவு நிழலாடிய போது...கல்கி ஆன்லைன் என்பதைப் பார்த்ததும்... நினைவுக்கு வந்துவிட்டது!

    நிஜமாகவே சிறந்த பெண்மணி. மனைவி! இயக்குநர் ஸ்ரீதர் அவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கல்கி ஆன்லைன் தொடர்ந்து பார்க்கிறீர்களா என்ன!

      நீக்கு
    2. ம்ஹூம் அவ்வப்போது....அப்ப கண்ணில் பட்டதுதான்!!! பெரும்பாலும் கதைகள் ஏதாச்சும் நல்லா இருக்கானு பார்க்கப் போவதுண்டு.

      கீதா

      நீக்கு
  9. அவள் விகடன் பேட்டி இங்குச் சுட்டி கொடுக்கலையோ ஸ்ரீராம்? எழுத்தாகவே எழுதிட்டீங்க! நிஜமாகவே பொறுமை உங்களுக்கு, ஸ்ரீராம்.

    பேட்டி நான் இங்கு வாசித்துக் கொள்கிறேன் அப்புறம் எடுத்து வைத்திருக்கும் யுட்யூப் கேட்டுக் கொள்கிறேன்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது இருக்கு மூன்று நான்கு பாகங்கள்.. முக்கியமானவற்றை மட்டும் எடுத்துக் கொடுத்திருக்கிறேன். சுவாரஸ்யமாக இருந்தது என்று நான் நினைத்தது மட்டும்!

      நீக்கு
  10. சுவாரசியமான தகவல்கள்! காதல் கல்யாணம் இல்லைன்றதும் வாசித்த நினைவு. கல்லூரி விஷயங்களும் உட்பட.

    ஸ்ரீதர் நல்ல இயக்குநர். சில சீன்கள் மட்டுமே பார்த்திருக்கிறேன். டிவியில். முழுப்படங்கள் பார்த்த நினைவில்லை. இணையத்தில்தான் காதலிக்க நேரமில்லை பார்த்தேன். கல்யாணப் பரிசு காமெடி காட்சிகள் பார்த்திருக்கிறேன். டணால் தங்கவேலு, சரோஜா கூட்டணி மன்னார் அண்ட் கம்பெனி...

    பாடல்கள் கேட்டிருக்கிறேன். நல்லாருக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  ஸ்ரீதர் படங்கள் என்றால் இளமை, புதுமை.  பாடல்களோ இனிமை.

      நீக்கு
  11. நகைச்சுவை துணுக்குகளில் வெண்டைக்காய் ஓகே. கப்சிப், இட்லி வாசித்த போது என் உதடுகள் விரிந்து லேசான புன்னகையை படரவிட்டன!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  12. கதை ரொம்பவே சுமார் ரகம் தான். கதை நல்ல விஷயத்தைச் சொன்னாலும் கூட அழுத்தமாக மனதில் பதியவில்லை. ஏதோ அம்புலி மாமா கதையை, இல்லை, இல்லை அது கூடத் தப்பு. சின்னக் குழந்தை வகுப்பில் கொடுத்த வீட்டுப்பாடத்தில் கதை எழுதும் விதம் பற்றித் தன்னோட பங்காக எழுதி இருப்பது போல் இருக்கிறது. சின்னக் குழந்தை முதல் முதலாய்க் கதை எழுதி இருக்குனு சொல்லலாம். ஓகே, இந்தச் செவ்வாயும் ஓடிப் போயாச்சு.

    அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தென் ஆப்பிரிக்காவில் எல்லாம் அப்படிதானாம்.

      நீக்கு
  13. ஹார்லிக்ஸ் ஜோக்கில் சிரிக்க என்ன இருக்குனு தெரியலையே? அநியாயமா ஒரு பாட்டில் ஹார்லிக்ஸோடக் கீழே விழுந்து வீணாய்ப் போனதுக்குச் சிரிக்கவா முடியும்? தெரியலை போங்க. எனக்கு நகைச்சுவை உணர்வே இல்லையோ சந்தேகம். :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொண்டாட்டியை ஏமாத்திட்டாராமாம்!

      நீக்கு
    2. ஓஹோ, ம.ம.வுக்குப் புரியலை போங்க. மறுபடி போய்ப்பார்க்கிறேன். நன்றி தெளிவு படுத்தியதுக்கு.

      நீக்கு
  14. தேவசேனா பற்றிச் சிலவற்றைக் காலச்சக்கரம் நரசிம்மாவும் சொல்லி இருந்த நினைவு. இப்போக் கொஞ்ச நாட்களாக அவங்க தான் லைம் லைட்டில் இருக்காங்க போல. அநேகமா அவங்க பேட்டியில் சொல்லி இருப்பதை எல்லாம் படிச்சிருக்கேன். என்றாலும் யூ ட்யூபெல்லாம் பார்க்கவில்லை. யூ ட்யூபை விடாமல் பார்ப்பது நம்ம ரங்க்ஸ் தான். அவர் இருந்திருந்தால் பார்த்திருப்பார். முழுசும் என்னனு எனக்கும் புரிஞ்சிருக்கும். ஸ்ரீதர் கல்யாணம் ஆனதுமே தேனிலவுக்குக் கொடைக்கானல் போகறச்சே மதுரை வந்து மேலாவணி மூல வீதி சித்ராலயா அலுவலகத்தில் ஒரு நாள் தங்கிட்டுத் தான் போனார். திரும்பும்போதும் அதே போல் மதுரை வந்துட்டுத் தான் போனார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே...  அதையும் பதிவில் சேர்த்திருக்கலாமே...  அப்போ நீங்க தம்பதியரை அப்பவே பார்த்திருக்கீங்க...  ஒரு நிருபர் "
      கைல வெண்ணெயை வச்சுக்கிட்டு என்ன சார் வெளில ஹீரோயின் தேடறீங்க..  உங்க மனைவியையே நடிக்க வைக்கலாமேன்னு கேட்டாராம்!

      நீக்கு
  15. இந்த ஹார்லிக்ஸ் கெடுபிடியாய் இருந்தப்ப்போத் தான் என்னோட அண்ணா டைஃபாயிடில் படுத்திருந்தார். சிந்தாமணி தியேட்டர் எதிரே இருந்த மருத்துவர் ஸ்ரீநிவாசன் மருத்துவமனையில் சேர்த்திருந்தது. ஹார்லிக்ஸ் கிடைக்காமல் பக்கத்தில் ஆறாம் நம்பரில் இருந்த பாரி&கம்பெனிக் காரங்க கிட்டே சொல்லி வைச்சு அப்பா இரண்டு அட்டைப்பெட்டிகள் வாங்கி வைச்சுப்பார். இப்போ எப்படினு தெரியலை. அப்போல்லாம் டைஃபாய்ட் ஜூரம் என்றால் ஹார்லிக்ஸ் தான் வெந்நீரில் நீர்க்கக் கரைத்துக்கொடுப்பார்கள். அதோடு கூட சாத்துக்குடி ஜூஸ், க்ளூகோஸ் தண்ணீர். 74இல் எனக்கு டைஃபாய்ட் வந்தப்போவும் இதான் ஆகாரம். சுமார் 3 மாதங்கள் கிடந்தேன். திரும்பத் திரும்ப இரு முறை வந்து பின்னர் 3 ஆம் முறையில் சரியானது. கையில் சின்னக் குழந்தை வேறே. அம்மா இருந்தார் என்பதால் பிரச்னை இல்லை. :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த ஹார்லிக்ஸ் கிடைக்காத கெடுபிடியை இப்போது யோசித்துப் பார்த்தால் அதுவும் விளம்பர யுக்தியாக இருக்கலாம்!  அப்படி என்ன ஹார்லிக்ஸில்!

      நீக்கு
    2. தெரியலை. ஆனால் இப்போ வர ஹார்லிக்ஸை விட அப்போ இன்னும் நல்லா இருக்கும் என்பதோடு ஒரு ஸ்பூன் போட்டுச் சாப்பிடாலே போதும். பசி அடங்கிடும். அதனால் நானும் எப்போவுமே ஹார்லிக்ஸைத் தான் விரும்புவேன். போட்டிக்கு விவா வந்தாலும் அது என்னமோ அவ்வளவா ஜெயிக்கலை.

      நீக்கு
    3. எனக்கு இப்பவும் ஹார்லிக்ஸ் சாப்பிட்டால் உடம்பு சரியில்லாத உணர்வு வரும்!  ஹார்லிக்ஸை விட விவா பிடிக்கும்.

      நீக்கு
    4. அட? ந்ம்ம ரங்க்ஸுக்கும் விவா தான் பிடிக்கும். ஏனெனில் உள்ளூர்த் தயாரிப்பு. அப்போல்லாம் ஹார்லிக்ஸ் வெளிநாட்டுத் தயாரிப்புத் தானே. இப்போத் தான் முழுக்க முழுக்க இந்தியத் தயாரிப்பில் ஹார்லிக்ஸ் வருது. விவா பஞ்சாபில் ஜகஜீத் லாபரடரீஸ் என்னும் பெயரில் வரும்.

      நீக்கு
    5. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    6. ஆமாம்.  இப்பவும் இரவுகளில் விவா குடித்தே படுக்கிறேன்!  ரொம்பப் பிடிச்சு போச்!  நடுவில் அது கிடைப்பதிலும் டிமாண்ட் ஏற்பட்டு முகநூலில் இங்கு வலைதளத்தில் எல்லாம்  சொல்லி இருந்தேன்.  விவாவும் சுவை மாறிக்கொண்டே வருகிறது!

      நீக்கு
    7. நான் ஹார்லிக்ஸ் பவுடரை அவ்வப்போது ஒரு ஸ்பூன் சாப்பிடும் ஆர்வத்தில் வாங்குவேன். இப்போ என் மேசையில் ஹார்லிக்ஸுக்குப் பதில் ஜன் ஔஷாதியின் போஷாண்.

      நீக்கு
  16. அதே போல் குழந்தைகளுக்குக் கொடுக்கும் பால் பவுடர் க்ளாக்ஸோவும் அப்போ வெளிச் சந்தையில் கிடைக்காது. எங்க பெண்ணுக்குப் பசும்பால் இல்லாத சமயங்களில் க்ளாக்ஸோ தான் கொடுக்கும்படி ஆச்சு. அது கிடைக்காமல் ரொம்பக் கஷ்டமாய் இருக்கும். 50 ரூ டின் (இத்தனைக்கும் சின்னது தான்) 100 ரூ சொல்லிக் கடைசியில் 75 ரூக்குத் தருவாங்க. அதையும் மளிகைக்கடையில் சொல்லி வைச்சு வாங்கணும். கடைக்குப் போனால் எல்லோருக்கும் நேரே கேட்கக் கூடாது. திருட்டுச் சந்தை வியாபாரம் எனக் கண்குத்திப்பாம்பாகப் பார்ப்பாங்க. அதே போல் அப்போவெல்லாம் அரிசிக்கும் கஷ்டம். நெல்லூரில் இருந்து கடத்தி வருவாங்க ரயிலில். அம்பத்தூர் வழியாகத் தான் கொண்டு போவாங்க. அம்பத்தூர், வில்லிவாக்கத்தில் மூட்டைகள் சத்தமின்றி அவுட்டரிலேயே வண்டி மெதுவாய்ப் போகும்போது கீழே தள்ளிடுவாங்க. பின்னர் சம்பந்தப்பட்டவங்க வந்து எடுத்துப் போவாங்க போல. இது எல்லாம் பின்னர் ஜனதா அரசு ஆட்சியில் மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்தப்போத் தான் சரியாச்சு. எச்.எம். படேல் என்னும் அருமையான நிதி மந்திரி இருந்தார். சாமானியர்களுக்குப் பல உதவிகள் செய்தார். இவங்க ஆட்சியின் போது தான் அமுல் பால் பவுடரைக் குழந்தைகளுக்கு எனக் குறைந்த விலையில் அறிமுகம் செய்தார்கள்.ஏழைகளும் வாங்கும்படியான விலையில் இருந்தது.

    பதிலளிநீக்கு
  17. மறந்து போன தகவல்கள்.  அப்போல்லாம் அப்படி இருந்தது இல்லை?

    பதிலளிநீக்கு
  18. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  19. மஞ்சரியில் வந்த கதை பகிர்வு படித்தேன்.
    இனிய புத்தாண்டு வாழ்த்துகள் அனைவருக்கும்.

    தேவசேனா பேட்டி யூ ட்யூப்பில் கேட்டேன், இங்கு படித்தேன்.

    சிரிப்புகள் படித்தேன்.ஹார்லிக்ஸ் வாங்க மணி கணக்கில் வரிசையில் நின்று போட்டு உடைத்து விட்டாரே !
    வெண்டைக்காய் ஒன்று தான் மிஞ்சியதா?

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!