7.4.26

பொக்கிஷம் சிறுகதை : துப்பறியும் சுப்பம்மாள் -- ராஜா

 

துப்பறியும் சுப்பம்மாள்

ராஜா



பேப்பரில் வந்த அந்தச் செய்தி எங்களுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை.

ஜவுளிக் கடை ஒன்றில், ஆயிரக் கணக்கான ரூபாய் பெறுமான ஜவுளிகளை கடத்திச் செல்ல முயன்ற பிரபல பகல்  கொள்ளைக்காரன் ஒருவனை எங்கள் வீட்டு வேலைக்காரியான சுப்பம்மா  கொடுத்த தகவலின் பேரில் போலீஸ் அதிகாரிகள் கண்டுபிடித்து கைது செய்திருக்கிறார்களாம். துப்பு கொடுத்த சுப்பம்மாளுக்கு ஒரே பாராட்டு! 

எங்களால் நம்பவே முடியவில்லை! கப்பம்மாவாவது, திருடனைக் காட்டிக் கொடுப்பதாவது! அவளுக்கு அப்படியொரு புத்தி சாதுரியமும் கிடையாது; தைரியமும் கிடையாது. இவள் எப்படி போலீசுக்குத் தகவல் கொடுத்திருக்க முடியும்?

நேற்று என்னவோ அவள் ஊரிலிருந்து வந்திருக்கும் தன் மகளுக்கு  துணி  எடுக்கப்போவதாகச் சொல்லிக் கொண்டிருந்தது உண்மைதான். ஆனால் அங்கே போய் இந்த வீர சாகசம் புரிந்ததுதான் ஒரே ஆச்சரியம்! 

அவளிடம் விசாரித்துப் பார்க்கலாம் என்றால் காலையிலேயே வேலைக்கு வர வேண்டியவள், இன்னும் வரவில்லை.  பிரமுகர் அந்தஸ்தினால் பத்துத் தேய்க்கிற உத்தியோகத்தை ராஜினாமா செய்து விட்டாளா?

விசாரிப்பதற்காக அவள் குடிசையை நோக்கிக் கிளம்பினோம். 

அவள் குடிசையைச் சுற்றி ஏக அமர்க்களம். அக்கம் பக்கத்திலுள்ள இளைஞர்கள், யுவதிகள் எல்லாரும் அவள் குடிசையைச் சூழ்ந்து கொண்டு 'எங்கள் குப்பத்து பெருமையை உயர்த்திய அன்னை சுப்பம்மாள் வாழ்க' என்று கோஷம் போட்டுக் கொண்டிருந்தார்கள்.   'அன்னை சுப்பம்மாளின் சேவை நாட்டுக்குத் தேவை' என்பதை வலியுறுத்த ஒரு சர்வகட்சிக் கூட்டம் நடத்தப்போவதாக ஓர்  'அறிவிப்புத் தட்டி'  அவள்  வீட்டு வாசலில் வைக்கப் பட்டிருந்தது.

எங்களைக் கண்டதும் சுப்பம்மாள் என் மனைவியிடம் ஓடி வந்து "பார்த்தியாம்மா. என் பேரை பேப்பர்லல்லாம் போட்டுக் கண்டபடி எழுதியிருக்காங்களாம்.  போலீஸ்காரங்க வேறே என்னைத் தேடி வந்து "பரிசு  தர்றோம், பணம் தர்றோம்'னு ஆசை காட்டிட்டுப் போறாங்க.  எதுக்கோ, என்ன ஆகுமோ, ஒண்ணும் புரியலே!!! என்று 'ஓ. 'வென்று புலம்ப ஆரம்பித்து விட்டாள்.

என் மனைவி அவளை அமைதிப்படுத்தி "பயப்படாதே, சுப்பம்மா! ஜவுளிக்கடையில் கொள்ளைக்காரர்கள் புகுந்து கொள்ளையடிப்பதைப் பற்றி நீ தகவல் கொடுத்தாயாமே. அதற்காகப் பாராட்டுகிறார்கள்! ஆமாம்! நீ எப்படி கொள்ளைக்காரர்களைப் பற்றித் துப்புத் துலக்கிச் சொன்னாய்?" என்று கேட்டாள்.

"ஐயய்யோ! நான் எங்கே துப்புத் துலக்கிச் சொன்னேன்?  என் பெண்ணுக்கு நான் துணி எடுக்கப் போயிருந்தேனா.  அந்தக் கடையில் ஒன்றுக்கு இரண்டாக கொள்ளை விலை சொன்னார்கள். எனக்கு ஆத்திரமா வந்தது.  கடைக்கு வெளியே வந்து, அங்கே நிற்கிறவங்க கிட்டே, போகிற போக்கில் 'இந்தக் கடையில் அநியாயக் கொள்ளை நடக்குது... . ஒருத்தரும் கவனிக்க- மாட்டீங்கறீங்களே!' ன்னு வயித்தெரிச்சல்லே கத்திக்கிட்டு போனேன்.  அதைக் கேட்டுட்டு அங்கே நின்ன ஜனங்களும், போலீஸ்காரங்களும் உள்ளே ஓடினாங்க.  அந்த நேரம் பார்த்து உள்ளே, கூட்டத்தோட கூட்டமா நிஜமாவே கொள்ளைக்காரன் இருந்திருக்கான்!" என்றாள், துப்பறியும் திலகமான சுப்பம்மாள்.


விகடன் - 1971

===============================================================================================


அதோ,என் காதலர் அழைக்கிறார்!"

'கல்கியின்"  தியாக பூமி கதையை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.  அதில் இடம்பெற்றுள்ள சில அம்சங்கள் தமிழுக்கு முற்றிலும் புதியவையாய் இருந்தன.   அதில் ஒன்றுகதாநாயகனின் தகப்பனார் கல்கத்தா ராஜமய்யர்  என்ற கதாபாத்திரத்துக்கு ஆவியுலகத்துடன் தொடர்பு கொள்வதில் ஆர்வம் இருந்ததாகச் சித்திரித்து இருந்தார் பேராசிரியர் கல்கி.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலே பல மேல் தாடுகளில்ஆவி பற்றிய  தீவிர ஆராய்ச்சிகளும் சர்ச்சைகளும் கிளம்பின. சூட்சம உலகம் என்று ஒன்றிருக்கிறது:  இறந்தவர்கள் கிட்ட தட்ட பூமியில் வாழ்ந்த போது கொண்டிருந்த உருவுடன், ஆனால் சாதாரண மனிதப் பார்வைக்குத் தென்படாமல் இ;உலவி வருவார்கள்  சில விசேஷ முயற்சிகளால் அந்த ஆவிகளுடன் தொடர்பு கொள்ளலாம்" என்றெல்லாம் வாதப் பிரதிவாதங்கள் எழுந்தன. 

பேசாப் படங்கள் மூலம் நீன் பெண் குலத்தையே பரவசத்தில் ஆழ்த்திய மாபெரும் காதலன் ருடால்ஃப்  வாலண்டினோ அந்த ஆவியுலகில் நம்பிக்கை கொண்டவர்களில் முக்கியமானவர்:

வாலண்டினா ஓரளவு வெற்றிகரமான நடிகராக வேண்டுமென்று ஆசைப்பட்டார்.  அவரடைந்த வெற்றி சூறாவளியைப்போல திரைப்பட உலகில்  அவரோடிருந்த பலரை இவ்லாதது போலத் தவிடு பொடியாக்கியது.



அவர் நீண்ட காலம் வாழ்ந்து நடிப்புத் துறையை விட்டு நல்ல கதையம்சம் மிகுந்த திரைப்படங்களை  டைரக்ட் செய்யத் திட்டமிட்டிருந்தார்   ஆனால்  அவர் திரைப்பட நடிகராகி  ஐந்து வருடங்கள் முடிவதற்குள் அற்பாயுளில் தமது முப்பத்தொன்றாவதுவயதில் இறக்க நேர்ந்தது.   

வாலண்டினோ இறந்ததும் அமெரிக்காவே ஓர் ஆவியுலக  ஆராய்ச்சிக் கூடமாக மாறியது.    காரணம், வாலன்டினோ தம் வாழ்நாளில் 'ஆவியுலக நிபுனர்' என கூறிக்கொண்டு பலரோடு நட்பு கொண்டிருந்தார்.    அவருடைய இரண்டாம் மனைவியாகிய நடாஷா ராம்பவா ஆவியுலகப் பரிசோதனைகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தவர்.

வாலண்டினோவின் சமாதி கண்ணீரும் கம்பலையுமான ஆயிரக்கணக்கான பெண்களுக்கு புகலிடமாயிற்று..  எவ்வளவோ பேர்  வாலண்டினேன் ஆவியே  தங்களை அந்த இடத்திற்கு அழைத்து வந்ததாகச் சத்தியம் செய்தனர்.   

ஒரு பெண்மணி தான் வாலண்டினோவால் கர்ப்பமுற்றிருப்பதாகவும், தான் பிரசவிக்கும் வரை வாலண்டினோ சமாதி அருகே ஒரு கட்டில் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகளை மன்றாடிக் கொண்டார்.  (இது வாலண்டினோ இறந்து ஒன்றரை ஆண்டுகள் கழித்து) அவரை அங்கிருந்து பலவந்தமாக வெளியேற்ற முயன்றபோது, "அதோ! அதோ! என் காதலர் வாலண்டினோ அழைக்கிறார்!" என்று கூவினார்: 

அங்கே நின்றவர்களுக்கு மயிர்க்கூச்சலெடுத்தது.  அபப்டியே முழந்தாளிட்டுப் பணிந்தார்கள்.   சமாதிக் கட்டடத்திலிருந்து யார் யாரோ தட்டுவது போல சப்தம் கேட்டது!  - வாலண்டினோதான் ஆவியுருவில் சமாதி வாசற்படியைத் தட்டுகிறார் என்று கூட எண்ணினார்கள்.   சமாதிக் காப்பாளர் அரை மணி நேரம் எங்கெல்லாமோ தேடிப் பார்த்தார்.   சமாதியின் ஒரு சிறு துவாரத்தில் குருவியொன்று எப்படியோ போய்ச் சிக்கிக் கொண்டிருந்தது! அதை விடுதலை செய்தார்.  சப்தழும் நின்றது!

இப்படிச் சில ஏமாற்றங்கள் நேர்த்தாலும் வாலண்டினோவின் ஆவியுடன் தொடர்பு கொள்ளுவதும், அந்த ஆவி கூறியதாகச் செய்திகளும் தொடர்ந்து வெளி வந்து கொண்டிருந்தன.

வாலண்டினோ மறைந்து இரு தலை முறைகள் முடிந்து விட்டன.  அவரால் நாகரிகச் சின்னங்களாக அன்று உலகெங்கும் ஆவேசத்துடன் பின்பற்றப்பட்ட தலைமுடி பாணி, உடுப்புக்கள், பாவங்கள் இவையெல்லாம் இன்றையப் பள்ளிச் சிறுவனுக்குக் கூடச் சிரிப்பு மூட்டவாம். ஆனால் ஒன்று-

வாலண்டினோவின் ஆவி, அலரது ஆத்மா இன்று உண்மையாகவே சாந்தி அடைந்திருக்கக் கூடும்.

சித்தலிங்கம் - தினமணி கதிர் 1971

(தினமணி கதிரில் வெளிவந்திருக்கும் இதைக்கதைக் கட்டுரை சொல்லும் நிகழ்வுகள் பற்றி அந்த நடிகரின் விக்கி பக்கத்தில் ஒரு விவரமும் இல்லை!)

10 கருத்துகள்:

  1. முதல் சிறுகதை.... முடிவுப் பகுதிவரை நல்லா இருந்தது. என்ன? எப்படி? எனத் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தைத் தந்தது.

    குமுதம் ஒரு பக்கச் சிறுகதைக்கு முன்னோடியோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை.  ஆனந்த விகடன்தான் முன்னோடி என்பதற்கு சில ஆதாரங்கள் முன்னர் நான் கொடுத்திருந்த நினைவு வருகிறது.  வாங்க நெல்லை.

      நீக்கு
  2. ஆவிகள் உலகம் விக்ரவாண்டி இரவிச்சந்திரன்? நினைவுக்கு வருகிறார்.

    இந்த சப்ஜெக்ட், நாடி ஜோதிடம் போன்றவை... எப்போதுமே ஆர்வத்தைத் தூண்டுபவை. நிச்சயமாக நடக்கும், நடக்கிறது எனச் சொல்ல முடியாதவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆவி அமுதா நினைவுக்கு வரவில்லையா?  இங்கு யாரோ புகழ்பெற்றவர் ஜெ யை தொடர்பு கொண்டு பேசியதாக படித்த நினைவு.

      நீக்கு
  3. ஸ்ரீராம் முதல் கதை நல்லா எழுதியிருக்காங்க சிரிப்பு வந்துவிட்டது. துப்பறியும் சாம்பு பாணிக் கதை...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதேதான்..  அத்....தேதான்...  கரெக்ட்டா பிடிசீங்க...  தலைப்பைக் கூட கவனியுங்க...

      வாங்க கீதா.. 

      நீக்கு
  4. விறு விறுன்னு போய் கடைசில சிரிப்பு

    கீதா

    பதிலளிநீக்கு
  5. மற்றதுக்கு அப்புறம் வருகிறேன், ஸ்ரீராம்

    கீதா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!