புதன், 26 செப்டம்பர், 2018

புதன் 180926 அ, த, பா எங்கே?

                               
சென்ற வார எங்கள் கேள்விக்கு, முதல், முழு பதில் கூறிய திண்டுக்கல் தனபாலனுக்கு, பாராட்டுகள். 

பிறகு நெல்லைத்தமிழன் மாணவர்களுக்கு மார்க் கொடுத்திருந்தாலும், என்ன புத்திமதி கூறுவார் என்று சொல்லவில்லை. 

கீதா சாம்பசிவம் யாருக்கு, எவ்வளவு  மார்க் என்று குறிப்பிட்டுச் சொல்லவில்லை. 'நிறைய' என்பது எவ்வளவு என்று சொல்லமுடியாது. எல்லோருடைய விடைத்தாளிலும், முதலாக அவர்கள் எழுதியுள்ள ஏழு விடைகளில்,  மூன்று தவறான விடைகள். எல்லோரும் கடைசி மூன்று விடைகள் சரியாக எழுதியிருந்தனர். அப்போ ஒருவருக்கு மட்டும் அதிக மதிப்பெண் கொடுப்பது லாஜிக்கலி சரி என்று தோன்றவில்லை. முயற்சிக்குப் பாராட்டுகள். 

பானுமதி வெங்கடேஸ்வரன் ஆசிரியையாக, நிறைய assumptions செய்துள்ளார். மாணவர்கள் காபி அடிக்கவில்லை என்பது எங்கள் கேள்விகளின் விவரங்களிலேயே ஓரளவு கூறப்பட்டுள்ளது. எப்படி என்று நிதானமாக கேள்வியை ஆராய்ந்தால் தெரியும். முதல் ரேங்க் வாங்கும் மாணவனின் பெற்றோரை மட்டும் அழைத்து பேசுவேன் என்கிறார்! என்ன பேசுவார் என்று சொல்லவில்லை! அவர் பிரம்பைத் தேடி எடுப்பதற்குள், நான் நிறுத்தி, ஓடிவிடுகிறேன்! 
   
DD, NT, - இந்த இருவருக்கும், பரிசு கொடுக்க முடிவு செய்துள்ளோம். அவர்களின் அலைபேசி எண்களுக்கு, ஒரு தொகையை, ரீ சார்ஜ் செய்வதன் மூலம், பரிசின் பயன், இந்தப் பதிவு வெளியாகும், புதன் அன்று அல்லது அதற்கு முன்பு அவர்களுக்குக் கிடைக்கும். 
               
எங்கள் கேள்விக்கு, குரோம்பேட்டை குறும்பன் வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ள பதில்:  
                                 
மூன்று மாணவர்களுக்கும் மதிப்பெண் எதுவும் கொடுக்கமாட்டேன். வகுப்பில், மற்ற மாணவர்களின் திருத்தப்பட்ட விடைத்தாள்களைக் கொடுத்த பின், இந்த மூன்று மாணவர்களின் பெயர்களைக் கூறி, அவர்களின் முயற்சியை, எல்லோரையும் கைதட்டிப் பாராட்டச்
சொல்வேன். 
                    
பிறகு, அந்தந்த மாணவர்களிடம், அவரவர்களின் விடைத்தாளைக் கொடுத்து, "நீங்கள் எழுதிய பத்து விடைகளில், ஏதோ மூன்று விடைகள் தவறு. ஒருவர் லைப்ரரிக்கும், வேறு ஒருவர் ஆபீஸ் ரூமுக்கும், மற்றவர் சயன்ஸ் லேபுக்கும் சென்று, உங்கள் விடைகளில், ஏதேனும் மூன்று விடைகளை, குறுக்குக் கோடு போட்டு, அடித்து, எடுத்து வந்து, என்னிடம் கொடுங்கள்" என்று சொல்வேன். அவர்களின் திருத்தத்திற்குப் பின்பு, என்ன மதிப்பெண் வருகின்றதோ அதுதான் அவர்களின் மதிப்பெண். 
               
அவர்களுக்கு, என்னுடைய புத்திமதி : 
       
"பொதுத் தேர்வில், இந்த மாதிரி எல்லாவற்றுக்கும் விடைகள் எழுதாதீர்கள். சாய்ஸ் கொடுத்துள்ளபடி மட்டும் விடை அளியுங்கள், பதில் நன்றாக, சரியாகத்  தெரியும் என்ற கேள்விகளுக்கு  மட்டும் விடை எழுதுங்கள்" 
                            
(யோவ் கு. கு  நீர் ரொம்ப தாராளம்தான்! மார்க்தானே ! காசா பணமா! அள்ளி விடுங்க! ஆனால், உங்களுக்குப் பரிசு எதுவும் கிடையாது!) 

ரேவதி சிம்ஹன் : 
                              
பதில் சொல்லப்படாத கேள்விகள் எந்த நரகத்துக்குப் போகும்?
    
பதில் தராத ஆசிரியர் எந்த நரகத்துக்குப் போவார் என்று நேரடியாகக் கேட்கலாமே ! 

  
மௌனம் சர்வார்த்த சாதகம்! பதில் சொல்லப்படாத கேள்விகள் சொர்க்கத்திற்குத்தான் போகும். 
                 

கீதா ரெங்கன் :
                    
அம்மா என்று பொதுவாகச் சொல்லி குழந்தைகளின் அம்மா நுதான் சொன்னேன் என்று வீட்டம்மாவிடம் தப்பித்துவிடலாமே?

பதில்: அம்மா என்று சொன்னவுடனேயே கொழுக்கட்டையடிகள் வாங்கிவிட்டேன். அப்புறம் ஒவ்வொரு அடிக்கும், 'அம்மா, அம்மா, அம்மா, அம்ம அம்ம அம்மா!' என்று ஏ ஆர் ரஹ்மான் போல சொல்லிக்கொண்டிருந்தேன்! 
                      
ஏஞ்சல்: 
                  
1,உங்கள் பார்வையில் தப்பு /தவறு என்பது எது ?

தெரிந்து செய்வது தவறு.


என் பார்வையில், எதுவுமே தப்பு இல்லை என்று சொன்னால், அது தவறு!


2,லோன் வொர்ட்ஸ் என்கிறார்களே இரு மொழியில் ஒரே வார்த்தை யூஸ் பண்ணுவாங்க ..kaputt ஆங்கிலத்திலும் ஜேர்மனிலும் இருக்கு இரண்டுக்கும் ஒரே அர்த்தம்தான் . அப்படி தமிழை வேறு மொழியினர் கடன் வாங்கி இருக்காங்களா பிற மொழியில் தமிழ் சொற்கள் இருக்கா ?        
மிளகுத்தண்ணி கட்டமரம் போன்ற தமிழ்ச் சொற்கள் ஆங்கிலத்தில் வழங்குகின்றன. 
   
"காசை நீட்டு" cashew nut ஆயிற்று என்று சமத்காரம் செய்வதும் உண்டு! 
             

                              
3,Child prodigies பலர் வாழ்க்கையில் இளவயதிலேயே அஸ்தமிப்பது ஏன் ? இன்னும் சிலர் பாதை மாறியும் போறாங்க அதன் காரணமென்ன ? 
         
அதீத பிராபல்யம் அதிக சம்பாத்தியம் இரண்டுமே இளவயதுக்கு ஆகாது. அகம்பாவம் திமிர் உல்லாசத்தில் ஆர்வம் எளிதில் உண்டாகும்.

           
4,சினிமா சீரியல்களில் சிறு பிள்ளைகளை நடிக்க வைக்க வயது வரம்பு உண்டா ? 
                
சினிமாவில் குழந்தைகள் நடிக்க வயது வரம்பு இருப்பதாகத் தெரியவில்லை. கார்டியன் அல்லது பெற்றோர் உடனிருக்க வேண்டும் என்ற விதி இருப்பதாக நினைவு. ஆனால் பெற்றோரின் பேராசை குழந்தைக் கலைஞர்களை பாதித்திருக்கிறது.
              
5,நம்ம நாட்டில் ஹோம் ஸ்கூலிங் இருக்கா ? 

              
நிறைய சப்ஜெக்டுகள் வீட்டிலிருந்தபடி படித்து பரிட்சை எழுதலாம். இது ஹோம் ஸ்கூலிங்தானே !

ஓ, இருக்கே! ஹோம் ஸ்கூலில்தான் நான் சமையல் கற்றுக்கொண்டேன்! 
         
கீதா சாம்பசிவம் : 
                 
ஶ்ரீராமனையும் ஶ்ரீகிருஷ்ணனையும் எல்லோரும் எல்லாத்தரப்பினரும் வணங்கினார்களா? அல்லது பிராமணர்களால் மட்டும் ஆராதிக்கப்பட்டனரா?  (ஆழ்வார்கள், நாயன்மார்கள் தவிர்த்து ) (Forwarded question) 
           
ராமனையும் கிருஷ்ணனையும் சிலப்பதிகாரமும்  வாழ்த்தி வணங்குகிறது. அவர்கள் எல்லாருக்கும் பொதுதான். 


எல்லாத் தரப்பினரும் வணங்கினார்கள் என்றுதான் தெரிகிறது. கடவுள் நம்பிக்கைக்கு, ஜாதி வித்தியாசங்கள் கிடையாது. 
            
முந்தைய கேள்வியைப் போன்று, இதுவும் ஒரு Forwarded question. 
கேட்டது யார் என்று கேட்டவருக்குத் தெரியும். எங்களுக்குக் கேள்விதான் முக்கியம்; யார் கேட்கிறார்கள் என்பது அல்ல! 

எனக்கு ஒரு கேள்வி சில வருஷமாகவே இருக்கு தவறுன்னா மன்னிச்சிடுங்க ஆனா கேட்பேன். 
அது, நான் சின்ன பிள்ளையா இருந்தப்போ மார்க்கெட் போவோம் அழகான களி மண்ணில் செய்த  குட்டி பிள்ளையார்கள் இருப்பாங்க அதே கடையில் எருக்கம்பூ மற்றும் தேவையான பொருட்களை வாங்கி பிள்ளையார் சதுர்த்தி கொண்டாடுவாங்க சிலர் மெரினா பீச்சுக்கு போய்  அந்த களிமண் பிள்ளையாரை  கரைப்பாங்க,எங்க பின் வீட்டம்மா அவங்க கிணத்தில் பக்கெட் வச்சி இறக்குவாங்க .இதனால் நம் சூழல் ஏதும் பாதிக்கப்படப்போவதில்லை ,ஆனால் இப்போ பெயிண்ட் அடிச்ச பெரிய பிள்ளையார்களை கடலில் இறங்குவதை பார்த்தேன் அது நீர்நிலையை பாதிக்காதா ?அதோடு அதில் பிளாஸ்டிக் போன்ற பொருட்களும் கலந்திருக்குமே ? இது சரியா ..எதற்காக அந்த அழகான டெகரேட் செஞ்ச  குட்டி  பிள்ளையாரை நீரில் இறக்கணும் ? வீட்டில் ஒரு மூலையில் அழகா வைக்க கூடாதா ?


ஆடி மாதம் விதைப்புக்கு நிலத்தைத் தயார் செய்யும்போது களைச்செடிகளை வெட்டி, புல் பூண்டு இவற்றை அப்புறப் படுத்தி வரப்பை சீர் செய்வார்கள்.

களி மண் குவித்து ஒரே இடத்தில் கிடப்பதற்குப் பதில் ஊர் முழுவதும் சின்னதும் பெரியதுமாகப் பிள்ளையார், எலி, குடைக்கு சப்போர்ட் இப்படி கொடுத்து விடுவார்கள்   பூஜைக்குப் பின் நீர்நிலைகளில் அல்லது ஆறுகளில் கலந்து வண்டலாகிவிடும்.

எருக்கு முதலிய களைகளும் அகலும். இப்போது show வுக்காக வர்ணம் பிளாஸ்டிக் எல்லாம் கூடிவிட்டது. 

நீரில் கரைக்காது வீட்டில் வைத்திருந்தால் தூசி ஒட்டடை இவற்றிலிருந்து பாதுகாப்பது கஷ்டம். சில நாட்கள் கழித்து எறியவும் மனசு வராது. வைத்திருந்து விரிசல்களுடன் பார்க்க மனதுக்கும் கஷ்டமாக இருக்கும். விநாயகருக்கு உரிய மரியாதை கொடுக்கவில்லை என்று அவர் கோபித்துக் கொள்ளாவிட்டாலும் நம் மனச்சங்கடம் தவிர்க்க முடியாது.  நாம் சற்று ஆலோசித்து நீர்நிலைகளைத் தூய்மைப் படுத்தும் பொருள்களைத் தேர்ந்தெடுத்து உபயோகிக்கலாம்.


The Underlying Message Of Ganesh Visarjan

The Sanskrit word 'Visarjan' has many meanings. In the context of worship and pooja, it refers to the act of respectfully laying the idol used for worship to rest. During Ganesh Chaturthi, the idol used for worship is seen as a temporary vessel that holds the spiritual form of Lord Ganesha. Once the period of worship is over, the idol submerged in a water body.
             
Teaches Us To Respect Each Other
The creation of an idol requires efforts from people from different walks of life. A fisherman may dig up the clay required for the idol from the river bed, a potter or an artist creates beautiful idols and a priest performs the worship. It teaches us teamwork and mutual respect.
Reminds Us That Life Is But Momentary
Ganesha is created with a lot of love. The idol is only an inanimate object. It is the love and devotion of the masses that transforms mere clay into something that possesses spiritual powers. And then when the time comes, it is returned to the nature. Similarly, we are made up of only flesh and bones, animated by the power of our soul. This body too, will one day, return to the nature.

Tells Us That God Does Not Have A Physical Form
During Ganesh Chaturthi, we invite the spiritual form of Lord Ganesha into the idol and when the period of worship is over, we respectfully ask him to vacate the idol and then submerge it in water. This shows us that God does not have a form and is 'Niraakar'. We give it a form or 'Aakar' only to be able to enjoy the various aspects of pooja such as- Darshan (sight of the Lord), Shravan (listening to the praise of the Lord), Sparsha (to touch the Lord), Gandha.

The Cycle Of Life
The ceremony of Visarjan is symbolic of the cycle of life and death we go through. The murtis of Ganesha is created, worshiped and then returned to the nature only to be reanimated next year. We too take birth, perform the duties of life and die only to be born again in a new form.

Teaches Us Detachment
Visarjan teaches us to be detached from the world around us. Everything we love and cherish is only Maya of the Lord or an illusion. At one point or other, we will be separated from it and need to understand that all that never belonged to us. No matter how much we love Ganpati Bappa, when the time comes, we have to submerge the idol and let it go.

Teaches Us Not To Be Attached To Material Wealth

The Visarjan teaches us that material wealth and worldly pleasures are only for the body and not for the soul.

வாட்ஸ் அப் :

பானுமதி வெங்கடேஸ்வரன் :

பேருந்தில் ஜன்னலோர சீட், ரயிலில் ஜன்னலோர சீட், விமானத்தில் ஜன்னலோர சீட். உங்கள் விருப்பம், அனுபவம் எது,எப்படி?
                               
பேருந்தில் காட்சிகள் பகலில் நன்றாக இருந்தன..பக்கத்து சீட்டுக்காரருக்கு குமட்டும் வரை! 
இரவுப் பயணத்தில் ஒரு பக்கம் குளிர்ந்து காது வலி
நாம் ஜன்னல் கண்ணாடியில் தலை சாய்த்ததும் பின்னிருக்கைக்காரர் நகர்த்துவார்.
விமான ஜன்னல் ஒரு நல்ல அனுபவம்.  ஒரு பருமனான ஆள் அடுத்த சீட்டில் அமரும் வரை! 
                    
அந்தக்கால(50 வருடம் முந்திய) ரயில் பயணங்களில் ஜன்னலோரக் காட்சிகள் + பத்திரிகை தின்பண்டம் இவை வாங்க முடிந்தது +ve 
         
 நம் முன் கையைத் தொட்டு பிச்சை கேட்பவர்கள், அடுத்த ஜன்னலிலிருந்து வெற்றிலை துப்புவோர் இவை -ve.
              
ஜன்னலோரம் சீட்  இருந்தால் அடுத்தவரால் சங்கடம் ஒருபக்கத்தில் மட்டுமே.1940~50 களில் ரயில் ஜன்னலோர சீட்டில் பயணித்து கண்ணில் கரித்தூள் விழுந்து கஷ்டப் பட்டதும் உண்டு.
டாய்லெட் செல்ல,  தூங்கும் பக்கத்துப் பயணிகளை சங்கடப்  படுத்தவேண்டியிருப்பது ஒரு மைனஸ். 

சென்னை மின்தொடர் வண்டியில் பயணித்த முப்பது வருடங்களும், பெரும்பாலும் ஜன்னலோர இருக்கைதான் என்னுடைய தேர்வு. கிட்டத்தட்ட தாம்பரம் டு பீச், பீச் டு தாம்பரம் பயணம் என்பதால், காலியாக இருக்கும் வண்டியில், மூன்றாவது பெட்டியில் ஏறி, ஸ்டேஷன் சைட் அல்லாத மறு பக்கத்தில், டிரைவர் பக்கம் முதுகு இருக்கும் வகையில் உள்ள ஜன்னலோர சீட்தான் என் அரியாசனம்! புத்தகம் படித்துக்கொண்டே பயணம் செய்வேன்.

ஜன்னலோரத்தில் / ஜன்னலில் சில சமயங்களில், காணப்பட்ட அசுத்தங்கள் மைனஸ் பாயிண்ட். மழை காலத்தில், உள்ளே தாராளமாக ஒழுகுகின்ற தண்ணீர் மைனஸ் பாயிண்ட். 
                
 ஃபுட் பாலில் அடுத்தடுத்து மூன்று கோல்கள் போடுவதையும், கிரிக்கெட்டில் ஒரே பௌலரே அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகள் எடுப்பதையும் hat trick என்கிறார்கள். தொப்பிக்கும் இந்த சாதனைகளுக்கும் என்ன சம்பந்தம்?
                
Ian fleming wrote in goldfinger
Once is happenstance
Twice is coincidence
Thrice is enemy action
Football cricket  இவற்றில்  hat trick like a magician pulling rabbits out of a hat.
                 
இங்கிலாந்தில் 1870 ல் ஒரு பவுலர் மூன்று விக்கெட்களை மூன்று பந்து வீச்சில் தொடர்ச்சியாக வீழ்த்த அதைக் கொண்டாடும் வகையில் பணவசூல் செய்து ஒரு  hat வழங்கிப் பாராட்டினார்களாம். The trick that earned a hat, so hat trick. இது பின் மற்ற ஆட்டங்களுக்கும் பற்றிக்கொண்டது என்கிறார்கள்.
               
(தகவல் இணையத்திலிருந்து)
                  
இந்த வாரக் கேள்வி:

உங்களுக்கு,  அசையா சொத்து வாங்க, அவசரமாக ஒரு பெரிய தொகை உடனடியாகத் தேவைப்படுகிறது. அந்தத் தொகையை, உங்களால் உடனே திரட்ட முடியாது. ஆனால், ஆறு மாத காலத்துக்குள், உங்களால் அதை திரட்ட முடியும். 

வேறு ஊரில் வசிக்கும் ஒரு நண்பரிடம் சென்று, அந்தத் தொகையைக் கடனாகக் கேட்கிறீர்கள். அவரிடம் பணம் இல்லை. ஆனால், அவர், தன்னுடைய தூரத்து உறவினராகிய, பணக்காரர் ஒருவரிடம், உங்களையும் அழைத்துச் சென்று, அவரிடம் பேசி, குறைந்த வட்டிக்கு  ஏற்பாடு செய்து, பணத்தை வாங்கிக் கொடுக்கிறார். 

வீட்டுக்கு வந்த பிறகு, உங்கள் நண்பர் உங்களிடம், பணத்தை சிறுதவணைகளில் அவ்வப்போது எனக்கு அனுப்பு. அதை நானே என் கையால், அந்தப் பணக்கார உறவினரிடம் கொடுத்துவிடுகிறேன் என்கிறார். 

இதற்கு, நீங்கள் ஒப்புக்கொள்வீர்களா? பணம், கடன் கொடுத்தவரிடம் சரியாகப் போய் சேர்கிறதா என்று எப்படி உறுதிசெய்துகொள்வீர்கள்?  
               
உங்களுக்கு, கடன் கொடுத்தவரை முன்னே பின்னே தெரியாது. அவரிடம் நீங்கள் நேரடியாகப் பணத்தைக் திருப்பிக் கொடுக்க எண்ணினால், உங்கள் நண்பர் மனவருத்தம் அடைவார். இந்த நிலைமையை எப்படிச் சமாளிப்பீர்கள்? 
                     
( ஊசிக் குறிப்பு : அ, த, பா எல்லோரும் நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் பற்றி மய்யமாக ஆலோசனை செய்துவருவதால், இந்த  வாரம் இங்கே தலைகாட்டவில்லை!) 
                           

98 கருத்துகள்:

  1. அன்பின் ஸ்ரீராம், கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...

    பதிலளிநீக்கு
  2. காஃபி ( டிகிரி?..) எல்லாம் சாவகாசமா ஆத்திக் குடிச்சிட்டு பொறுமையா வரவும்..

    கேள்வியும் இங்கே இருக்கும்..
    பதிலும் இங்கேயே இருக்கும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ துரை! ம்ம்ம்ம் இன்னிக்குக் காலம்பர கணினியைத் திறக்கலாமானு யோசிச்சேன். நவராத்திரிக்குள்ளே வீட்டில் சில அலமாரிகளைச் சுத்தம் செய்யணும்! :)))) உட்கார்ந்தால் படிக்க ஆரம்பிச்சுடறேன்! அதான் பயம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா இருக்கு! :) ரங்க்ஸ் இதை வேடிக்கை பார்த்துட்டு இருக்கார்! ஏனெனில் அவருக்குத் தடை செய்யப்பட்ட பகுதி! :) நான் தான் செய்யணும்! அதனால் காலம்பர வரதுன்னா கொஞ்சம் கஷ்டம் தான்!

      நீக்கு
  3. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், கேஜி அண்ணா, துரை அண்ணா, எல்லோருக்கும்

    கீதா

    பதிலளிநீக்கு
  4. பதில்: அம்மா என்று சொன்னவுடனேயே கொழுக்கட்டையடிகள் வாங்கிவிட்டேன். அப்புறம் ஒவ்வொரு அடிக்கும், 'அம்மா, அம்மா, அம்மா, அம்ம அம்ம அம்மா!' என்று ஏ ஆர் ரஹ்மான் போல சொல்லிக்கொண்டிருந்தேன்! //

    சிரித்துவிட்டேன்...

    அது போல ஹோம் ஸ்கூலில் தான் சமையல் கற்றுக் கொண்டேன் என்பதும்..ஹா ஹா ..அப்படிப் பார்த்தா எல்லோருமே ஹோம் ஸ்கூலில்தான் சமையல் கத்துக்கறாங்கனு சொல்லலாம்...ஹிஹிஹி..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேஜிஜி சார்... இப்படிச் சொன்னால் பத்தாது. தி பதிவு நீங்க ஒண்ணு எழுதணும்.

      நீக்கு
    2. திங்கள் slot இன்னும் பல வாரங்களுக்கு முன் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹவுஸ் ஃபுல். No vacancy.

      நீக்கு
    3. அப்படீல்லாம் சும்மாச் சொல்லாதீங்க கேஜிஜி சார்.. நம் கடன் பணி செய்து கிடப்பதே என்பதுபோல், அனுப்புங்க, அது வரும்போது வரட்டும்.

      தானும் அனுப்பாம ஹவுஸ்ஃபுல் என்று சொல்வது சரியா? எல்லோரும், பிறகு அனுப்பிக்கலாம்னு நினைச்சுடப் போறாங்க.. உங்களை சினிமா டிக்கட் புக் பண்ணிட்டு வரச் சொன்னால், ஹவுஸ்ஃபுல் என்று சொல்லியே சினிமாக்கு கூட்டிக்கிட்டு போகமாட்டீங்க போலிருக்கே.

      நீக்கு
    4. அதானே... மனசிருந்தா மசாலா தோசை!

      நீக்கு
    5. ஹி ஹி எனக்கு மசாலா தோசை எல்லாம் செய்யத் தெரியாது. மனசிருந்தாலும் தி பதிவா அதை எழுத இயலாது!

      நீக்கு
    6. மேலும் நான் வார்க்கின்ற தோசை மனிஷா கொய்ராலா மூஞ்சி மாதிரி கோணலா இருக்கும். மசாலாதோசை ஹே, மனிஷா கொய்ராலா முக் ஹைன்.

      நீக்கு
  5. ஏற்கனவே ,கர்மா, மஹாலய பக்ஷம், தினப்படி,தர்ப்பணம், இரவு பலகாரம், அணையா விளக்கேற்றுதல் என்று
    அதாவது நாள் முழுவதும் எரிந்து கொண்டிருக்க வேண்டும் என்றெல்லாம்

    கேட்டுக் குழம்பிக்கொண்டிருக்கும் போது,
    நல்ல வார்த்த்தை சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன்.
    யாரும் நரகத்துக்குப் போக வேண்டாம்.

    சொர்க்கத்துக்குப் போனவர்களை வழிபடும் வேளை
    மௌனமாக இருப்பதும் நல்லதுதான்.
    வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா... நன்றி. காலை வணக்கம்.

      நீக்கு
    2. நாம் யார்க்கும் குடி அல்லோம் நமனை அஞ்சோம்
      நரகத்தில் இடர்ப்படோம், நடலை அல்லோம்
      ஏமாப்போம், பிணி அறியோம், பணியோம் அல்லோம்
      இன்பமே எந் நாளும், துன்பம் இல்லை

      என்று நாவுக்கரசர் போல் நாமும் நினைக்கும்படியான பக்தியை அவன் நமக்கு அருளவேண்டும். இந்த மஹாளயம் அதற்கு வழி செய்யட்டும் வல்லிம்மா.

      நீக்கு
    3. அன்பு முரளி, இங்கே மாப்பிள்ளையும் கடைப் பிடிக்கிறார். நோ இங்க்லிஷ் காய்கறிகள். ராத்திரி பலகாரம் மட்டுமே.
      முடிந்தவரை வெளி சாப்பாடு தவிர்ப்பது.எல்லாம் தான்.
      ப்ரெட் என்கிற நாமதேயமே 15 நாட்களுக்குக் கிடையாது.
      சின்னவனும் ஒத்துக் கொண்டுவிட்டான்.

      நீக்கு
  6. ம்ம்ம்ம், அசையாச் சொத்து வாங்க இப்படி எல்லாம் பணம் திரட்ட மாட்டேன்/மாட்டோம், இருவரும் கலந்து பேசிக்கொண்டு கையிருப்பில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பணத்தை வீட்டை வாங்க முன்பணமாகக் கொடுத்துட்டு ஆறு மாசத்துக்குள் மீதிப் பணத்தைக் கொடுப்பதாக அக்ரிமென்ட் போட்டுக் கொள்வோம். ஆறு மாசத்துக்குப் பின்னர் நம்ம கைக்குப் பணம் வந்ததும் வீட்டைச் சொந்தமாக்கிக்கலாம். அதை விட்டுட்டுக் கடன் வாங்குவது! அதுவும் நண்பரின் நண்பரிடம்! அந்தத் தொகையையும் நாம் நேரிடையாகக் கொடுக்க முடியாது. சிறு தவணைகளில் அவ்வளவு பெரிய தொகைக்கு வாங்கிய கடனை அடைக்க முடியுமானால் அந்தத் தொகைகளைச் சேமித்து வைத்துக் கொண்டு ஆறு மாசம் முன்னாடியே வீட்டை/அல்லது அசையாச்சொத்து எதுவோ அதை முழுப்பணமும் கொடுத்து வாங்கிடுவேன்

    பதிலளிநீக்கு
  7. அப்படி நண்பரின் நண்பர் மூலம் தான் வாங்கித் திருப்பிக் கொடுக்கணும்னா வாங்கினதுக்கும் ஒரு ரசீது வாங்கிக் கொண்டு திருப்பும் ஒவ்வொரு தொகைக்கும் ஒவ்வொரு ரசீது நண்பர், நண்பரின் நண்பர் இருவரின் கையெழுத்தோடு வாங்கிக்கணும். பண விஷயம். என்னதான் நெருங்கிய நண்பர் என்றாலும் நாம் முன் ஜாக்கிரதையாக இருப்பது தப்பில்லை என்பது என் கருத்து.

    பதிலளிநீக்கு
  8. அப்படி முடியாதுனு தோணினால் அந்தச் சொத்து வாங்கும் எண்ணத்தையே கைவிட்டு விடுவேன். இது சொந்த அனுபவம். இரு வருடங்கள் முன்னர் நடந்தது! :) என்னைப் பொறுத்தவரை அதனால் நஷ்டம் ஏதும் இல்லையே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீசாக்கா உதெல்லாம் இருக்கட்டும்:) முதல்ல என் பக்கம் ஓடுங்கோ:)) இங்கு போடவிருந்த கொமெண்ட்டை முக்கித்தக்கிக் காவிச்சென்று என் பக்கத்தில போட்டு விட்டீங்கபோல ஹா ஹா ஹா:))... அதெல்லாம் ஒன்றுமில்லை வயசானாலே இப்பிரச்சனை தானா வந்துதுடூஊஊஊஊஊ:))..

      ஹையோ கீசாக்கா எதுக்கு இப்போ கலைக்கிறாஆஆஆ.. வாங்கோ நாங்க உண்ணவிரதம் ஆரம்பிப்போம்.. இது ஜின்ன புரொப்பிலம்:) இல்லை:)) மானப்பிரச்சனை:)).. எம் பாலாருக்கும் பரிசு வேணும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்:))..

      நீக்கு
    2. அதிரடி, காலம்பர உங்களுக்குப் போட்ட நீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈண்ட கமென்ட் சரியா காபி ஆகாமல் இங்கே போட்டது மட்டும் கையிலே ஒட்டிக்கொண்டு அங்கே வந்திருக்கு! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், கூகிளாரின் சதி. இப்போ நினைவா அங்கே போய் முதலே அதை எடுத்துட்டுத் தான் இங்கே வந்திருக்கேன்.

      நீக்கு
  9. இப்படி கடன் வாங்கி மூன்று முடிச்சில் விழுவதைவிட நண்பரிடம் கடன் வேண்டாமென சொல்லி விட்டு,

    வட்டிப் பணத்துக்கு ஆசைப்படாத எங்கள் சிங்கம் கௌதமன் சாரிடம் வட்டி இல்லாத கடன் வாங்கி கொள்வேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// கௌதமன் சாரிடம்...///

      ஏன்....
      எங்கிட்ட கேட்டா தர மாட்டேனா!..

      இந்த சின்ன விசயத்துக்கெல்லாம்
      அவங்கள தொந்தரவு பண்ணிக்கிட்டு....

      அப்படியே..
      நமக்கு ஒரு அஞ்சு லட்சம் புரட்டிக் கொடுங்க!!!.....

      நீக்கு
    2. எங்கள் சிங்கமா! கொழுக்கட்டை வீங்கல் கௌதமன் ஐயா!

      நீக்கு
    3. இந்தக் கடன் வாங்கி அசையாச் சொத்து வாங்கறதை விடக் கடன் வாங்க அசையாமல் அப்படியே இருந்துடலாம். கடனெல்லாம் எதுக்கு? நாங்க க்ரெடிட் கார்டே இப்போ 2,3 மாசமாத் தான் ஹெச்டிஎஃப்சி வங்கியின் பிடுங்கல் தாங்காம வாங்கி இருக்கோம். அதுக்கும் ப்ரீபெய்ட் தான்! இல்லைனா அவங்களைத் தொலைபேசியில் அழைத்து ஒரு வழி பண்ணிடுவோம். எங்க பிடுங்கல் தாங்காம இப்போ மாசாமாசம் அக்கவுன்டிலிருந்து தொகை போயிடும். ஆக இதுவும் ஒரு வகையில் டெபிட் கார்ட் போலத் தான்! :))))

      நீக்கு
  10. நன்றி...

    சகோதரி ஏஞ்சல் அவர்களின் கேள்விகளுக்கு பதில்கள் அருமை...

    கீதா சாம்பசிவம் அம்மாவிற்கு Forwarded question-க்கு உண்டான பதிலை அவர்களே விளக்கமாக கூறுவார்கள் என்று எதிர்ப்பார்க்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் சொல்லும் பதிலை எல்லாம் அவங்க ஏற்கலை! எத்தனையோ பேர் இருக்காங்க! இன்னும் ராமாயணமும், மஹாபாரதமும் சங்க காலத்துக்கு முன்னிருந்தே இருந்து வருது! ராமனையும் கிருஷ்ணனையும் பிராமணர்கள் மட்டுமே ஆராதிக்கவில்லை. வாய்வழிப் பாடலாகவும் ராமாயணம், மஹாபாரதம் பாடப்பட்டிருக்கிறது. தெருக்கூத்துகளில் இடம் பெற்றிருக்கிறது! கிருஷ்ணன் மாயன் என்னும் பெயரில் பல இடங்களில் வழிபடப்பட்டிருக்கான். இப்போதைக்கு இது! இதை விவரித்து எழுதக் கொஞ்சம் நேரம் எடுக்கும். ஆனால் சிலப்பதிகாரத்தில் கம்சனைக் கிருஷ்ணன் கொன்றதைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. அதே சமயம் பாவை நோன்பு பத்தி ஆண்டாளுக்கு முன்னரே பரிபாடலில் கீழ்க்கண்டவாறு சொல்லப்பட்டிருக்கிறது.

      ஞாயிறு காயா நளி மாரிப் பின் குளத்து,
      மா இருந் திங்கள் மறு நிறை ஆதிரை விரிநூல்
      அந்தணர் விழவு தொடங்க, புரி நூல் அந்தணர் பொலம் கலம் ஏற்ப,
      ‘வெம்பாதாக, வியல் நில வரைப்பு!’ என
      அம்பா ஆடலின் ஆய் தொடிக் கன்னியர்,
      முனித் துறை முதல்வியர் முறைமை காட்ட,

      பனிப் புலர்பு ஆடி, பரு மணல் அருவியின் ஊதை ஊர்தர,
      உறை சிறை வேதியர் நெறி நிமிர்
      நுடங்கு அழல் பேணிய சிறப்பின்,

      தையல் மகளிர் ஈர் அணி புலர்த்தர,
      வையை! நினக்கு மடை வாய்த்தன்று. ஆக ராமனோ, கிருஷ்ணனோ தமிழகத்துக்கோ, தமிழ் மக்களுக்கோ திடீரென உதித்தவன் அல்ல! ராமன் பற்றியும் சொல்லும் போது உ.வே.சா. அவர்கள் சங்ககாலத்துக்கு முன்னரே ஒரு ராமாயணம் இருந்ததாய்ச் சொல்லி இருக்கிறார். அது குறித்துச் சரியான தகவல்கள் கிட்டவில்லை. கிட்டினால் பகிர்கிறேன்.

      நீக்கு
    2. சேரமன்னன் பெருஞ்சோற்று உதியன் மஹாபாரதப் போரின் போது உணவளிக்கும் வேலையை ஏற்றிருந்ததாகத் தெரியவருகிறது, இதற்கான பாடலும் உண்டு. இவனின் மகன்கள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும், பல்யானைச் செல்கெழு குட்டுவனும் ஆவார்கள். பேரப்பிள்ளைகள் இருவர் நாம் நன்கறிந்தவர்கள். ஒருவர் சேரன் செங்குட்டுவன் இன்னொருவர் இளங்கோவடிகள்.

      நீக்கு
  11. // அசையா சொத்து வாங்க //

    என்ன இது தீடீரென்று பேராசை...?

    // அவசரமாக ஒரு பெரிய தொகை உடனடியாகத் தேவைப்படுகிறது... //

    நேரம் கடத்தினால் அந்த 'அசையா சொத்து' கை மாறி விடும் என்பது புரிகிறது...

    // ஆனால், ஆறு மாத காலத்துக்குள், உங்களால் அதை திரட்ட முடியும்... //

    அதனால் இப்போது பேராசை மாறி, அசையா சொத்தை ஆசையாக வாங்க வேண்டும் என்று முடிவாகி விட்டது...! ரைட்டு...

    இதுவரை கேள்வியில் உள்ளது முக்கியமில்லை... இனி - என்னடா இது, நட்புக்கு வந்த சோதனை...!

    பதிலளிநீக்கு
  12. // ஒரு நண்பரிடம் சென்று, அந்தத் தொகையைக் கடனாகக் கேட்கிறீர்கள்... அவரிடம் பணம் இல்லை... //

    நண்பரிடம் பணம் இல்லை என்று தெரியாத அளவிற்கு நட்பா...? சரி இது இங்கு தேவையில்லை... பணம் இருக்கும் நண்பரோ, பணம் இல்லாத நண்பரோ, முதலில் தேவைப்படும் தொகையைச் சொல்லி, 'உதவி செய்ய முடியுமா...?' என்று கேட்பேன்...

    // தன்னுடைய தூரத்து உறவினராகிய, //

    ஆகா..! நண்பரின் நண்பர் இல்லையா...? (நண்பனின் நண்பன் எனக்கும் நண்பனே...! - நன்றி : இயக்குனர் சசிகுமார்) நண்பரின் உறவினர் என்றால் ரொம்ப வசதியாப் போச்சி...! எளிதில் நட்பாக்கிக் கொள்ளலாம்...(?!)

    // பணக்காரர் ஒருவரிடம், உங்களையும் அழைத்துச் சென்று //

    இங்கே கவனிக்க வேண்டியது : கடன் கேட்ட நண்பரையும் அழைத்துச் சென்றது... ஏனென்றால், பல நேரங்களில் நட்பிற்காக அவசரமாக உதவி செய்து விட்டு, அவஸ்தையும் ஏற்படுவதுண்டு... அற்ப பணத்தால் அரிய நட்பும் அழிவதுண்டு...!

    // அவரிடம் பேசி //

    நண்பரும் அவர்களின் 'தூரத்து' உறவினர்களும் என்ன வேண்டுமென்றாலும் பேசிக் கொள்ளலாம்... அங்கே கடன் கேட்கும் நண்பர் பேச வேண்டியது முக்கியம்... அது என்னவென்றால்...

    சிறிது 'பெரிது வேலை' வந்து விட்டது... அதனால்...

    ---இடைவேளை---

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போண்டா, டீ, காபி, 🤣 இடைவேளையில் விற்கிறேன்!

      நீக்கு
    2. கேஜிஜி சார்... 'பொண்டாட்டீக்கு காபி இடைவேளையில் (அவங்க சீரியலில் ஆழ்ந்திருக்கும்போது) விற்கிறேன்' என்று படித்தேன்... வாழ்த்துக்கள்/

      நீக்கு
  13. 'அசையாச் சொத்து வாங்குவது'

    என்னுடைய பாலிசி சின்ன வயதிலிருந்தே என்னன்னா, கடன் வாங்கக்கூடாது, கடன் அட்டை வச்சுக்கக்கூடாது. சொன்னா நம்ப மாட்டீங்க... அங்க இருக்கும்போது என்னிடம் கடன் அட்டை கிடையாது. டெபிட் கார்டு மட்டும்தான் உண்டு. வெளி தேசம் பிரயாணிக்கும்போது கேஷ் எடுத்துச்செல்வேன் (ஹோட்டல்ல பொதுவா கிரெடிட் கார்டு, ஒருவேளை நாம ஏதேனும் அடிஷனல் செர்வீஸ் உபயோகப்படுத்தினால், என்று கேட்பான். நான் கேஷ் டெபாசிட் கொடுத்துடுவேன்). கம்பெனி இதுக்காகவே எனக்கு கிரெடிட் கார்டு கொடுத்தது, அதையும் உபயோகப்படுத்தியதில்லை. என் கம்பெனி பிராஞ்சில் எனக்கு ஒரு கார் அங்கு வாங்கினேன். அவர்கள், 6 மாதத்தில் ரீபே பண்ணினால் போதும் என்றார்கள். நான் முழுப் பணமும் கட்டித்தான் வண்டியை எடுத்தேன்.

    2000ல் இடம் வாங்க என் மாமனார் எனக்காக முயற்சித்தபோது, அவர், வங்கிக் கடன் வாங்கி பெரிய இடமாக வாங்கச் சொன்னார். நான், என்னிடம் இவ்வளவு இருக்கு, இதுக்கு இடம் வாங்கினால் போதும் என்று சொல்லி, 1/2 கிரவுண்டு ஜெயநகர் 9ம் பிளாக்கில் வாங்கினேன் (வீடும் கட்டினேன்). அப்புறம் தோன்றியது, தைரியமாக கடன் வாங்கி 1 1/2 கிரவுண்ட் பிடிஏ சைட் வாங்கியிருக்கலாம், இல்லைனா வீடா, 50 லட்சத்துக்கு வாங்கியிருக்கலாம் என்று. By God's grace இன்றளவும் கிரெடிட் கார்டும் இல்லை கடன் வாங்கியதும் இல்லை.

    சரி... உங்க கேள்விக்கு வருவோம்.

    பண விஷயத்தில் யாரையும் கண்ணைமூடிக்கொண்டு நம்பக்கூடாது என்பது என் பாலபாடம். என் அப்பா இந்த விஷயத்தில் சொன்னதை டிட்டோவாகக் கடைபிடிப்பேன். என் மனைவியிடமோ அல்லது குழந்தைகளிடமோ பாக்கி இவ்வளவு ரூபாய் என்று கொடுக்கும்போது, கண்டிப்பாக எண்ணிப்பார்த்து உடனே அக்னாலட்ஜ் பண்ணனும் என்று சொல்வேன். எண்ணிப்பார்க்காமல் வாங்கினா எனக்குப் பிடிக்காது. நானும், அது யாராக இருந்தாலும் சரி, பணம் கொடுத்தால் எண்ணிப்பார்க்காமல் வாங்கமாட்டேன்.

    அதனால், பண விஷயத்தில் ரொம்ப வெளிப்படையாத்தான் நடந்துகொள்ளவேண்டும். நண்பரிடம் என் பாலிசியைச் சொல்லி, அவரை வைத்துக்கொண்டே பண தவணையை செட்டில் செய்கிறேன் (வேறு ஒருவரிடம் பணம் கடன் வாங்கியமாதிரி டாக்குமெண்ட்ஸ் இருந்தால்), ஒவ்வொன்றுக்கும் ரெசிப்ட் பெற்றுக்கொள்கிறேன் என்று சொல்லிடுவேன். இதுதான் சரியான முறை, பண விஷயத்தில்.

    பதிலளிநீக்கு
  14. நேற்று, 'யாரைக் கேட்டு அவள் டாப் அப் என் மொபைலுக்குப் பண்ணினாள்' என்று கர்ர்ர்ர்ர்ர் என்றிருந்தேன் (கேட்கலை... கொஞ்சம் கோபம் எனக்கு.. இது சில நாட்களுக்குப் போகும்..ஹாஹாஹா). எனக்கு 3 மாசத்துக்கு ஒரு தடவை ஜியோ டாப் அப் செய்தால் போதும். பொதுவா நான் போனில் ஆழ்ந்திருப்பதில்லை. அதிகமாக போன் பேசுவதோ, கால் ரிசீவ் பண்ணுவதோ எனக்குப் பிடிப்பதில்லை.

    இந்த வேலையைச் செய்தது கேஜிஜி சாரா.... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமன்னா என்று நினச்சீங்களா! அது கௌதமன்னா... !

      நீக்கு
    2. ஹா ஹா ஹா கெள அண்ணன் என் மொபைல் நெம்ம்ம்ம்ம்பரையும் அனுப்பி விடட்டோ?:) பவுண்ட்ஸ்ல ரொப்பப் பண்ணி விடுங்கோ:))

      நீக்கு
    3. ஹா பவுண்டா! அரை ஸ்டெர்லிங் கூட இல்லியே என்னிடம்!

      நீக்கு
    4. ஓ அது ஷில்லிங்கோ! அதுவும் என்னிடம் இல்லிங்கோ!

      நீக்கு
    5. என்னோட மொபைல் எண்ணும் இருக்கே! தெரிஞ்சால் போனவாரம் ரீசார்ஜ் செய்திருக்க மாட்டேன்! :)

      நீக்கு
    6. ஹா ஹா ஹா விடாதீங்கோ கீசாக்கா.. ரீசார்ஜ் பண்ணியதை வெளிநாட்டுக் கோல் போட்டு முடிச்சிடுங்கோ:)).. கெள அண்ணன் பண்ணி விடுவார்ர்:))

      நீக்கு
    7. கெள அண்ணன் இங்கும் ஒரே மணிதான் அதாவது பவுண்ட்ஸ்தான்.. ஆனா ஸ்பெஷலா ஸ்கொட்டிஸ் மணியை ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் என்பார்கள்.. ஏனெனில் முன்பு தனி நாடாகத்தானே இருந்தது.

      நீக்கு
  15. பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    கேள்விகள், பதில்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  16. மீ வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்:))

    ///DD, NT, - இந்த இருவருக்கும், பரிசு கொடுக்க முடிவு செய்துள்ளோம். ///

    நோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ நான் இதை ஒத்துக்கவே மாய்ட்டேன்ன்ன்ன் இது திட்டமிடப்பட்ட ஜதீஈஈஈஈஈ..:)) எதிர்ப்பாலாரை மட்டுமே தெரிவு செய்திருக்கினம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. கீசாக்கா பானுமதி அக்கா எல்லாம் நல்லாத்தானே சொல்லியிருக்கிறாங்க...

    இது சரிப்பட்டு வராதூஊஊஊஊஊ.. கீசாக்கா ஓடிக்கமோன்.. இப்போ அடையா முக்கியம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. கிச்சினைக் குளோஸ் பண்ணி, மாமாவை ஆரியபவானுக்கு:)) போகச்சொல்லிப்போட்டு ஓடி வாங்கோ தேம்ஸ் கரைக்கு:)).. உண்ணாவிரதம் ஆரம்பம்ம்ம்ம்ம்ம்ம்ம்:)..[[இந்தச் சாட்டிலயாவது என் எடையில ஒரு ரெண்டுகிலோவைக் குறைச்சிடோணும்:))]] ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஆரியபவானுக்கு:)) போகச்சொல்லிப்போட்டு // - அப்படி இருந்தாலும் கீசா மேடம் தான் போய் வாங்கி வரணும்..ஹாஹா.

      நீக்கு
    2. நீங்க ஓவராத்தான் கீசாக்காவுக்கு சப்போர்ட் பண்றீங்க.. பாவம் மாமா அவர்தானே டெய்லி மார்கட்டுக்குப் போய் வீட்டில் இருப்பதும் இல்லாததுமா செரெர்த்து சாமான் வாங்கி வாறார்ர்:) அந்த சைக்கிள் ஹப்ல கீசாக்கா புளொக்ஸ் ஐ ஒரு ரவுண்டு அடிச்சுப் போட்டு:)).. மாமா திரும்பி வரும்போது வேர்க்க வேர்க்க வீடு தூசு தட்டிக்கொண்டிருப்பா ஹா ஹா ஹா:)..

      நீக்கு
    3. ஓஹோ அதிரா கொஞ்சநாள் வலையில் அந்தப் பக்கம் இந்தப்பக்கம் ஓடாததால் வெயிட் போட்டுட்டீங்களோ!!! ஹா ஹா ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
    4. அல்லோ கீத்ஸ்ஸ் ச்சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னதும் முடிவே பண்ணிட்டீங்களோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. இதைப் படிச்சால் என் செக்குக்கு சாப்பாடே இறங்காது ரெண்டு நாளைக்கு சந்தோசத்தில:).. ஹா ஹா ஹா..

      நீக்கு
  17. //புதன் 180926 அ, த, பா எங்கே?//

    ஓ மக்கள்ஸ்ஸ் இதைப் பார்த்துக் குழம்பிடப்போகினமே:)) கடவுளே ஆருமே வியக்கம் குடுக்கேல்லையே இதுக்கு:))..

    அது என்னவெனில் .. அதிரா தமிழ்ப் பாடம் எங்கே நடத்துறீங்க என கெள அண்ணன் கேய்க்கிறார்ர்ர்:)).. ஒரு வேளை என்னிடம் டமில் படிக்க வரப்போறாரோ என்னமோ.. கொஞ்சம் பொறுங்கோ முதலில் என் சுவிஸ் எக்கவுண்ட்டைக் குடுத்திட்டு வாறேன்.. ஏன்னெனில்.. முதல்ல பீஸூ பிறகுதேன்ன் படிப்பிப்பூஊஊ இது என் பயமொயி:)) ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா இங்கினதானே இருந்தார்ர்:) ஆளைக் காணமே:)

      http://www.theage.com.au/ffximage/2007/11/01/cat_lead_narrowweb__300x450,0.jpg

      நீக்கு
  18. சொத்து வாங்கும் கிளவி:)) ஹையோ கேள்விக்கு என்னிடம் இதேபோல ஒரு சொந்த அனுபவம் இருக்கு.. கொஞ்சத்தால வருகிறேன்ன்:)..

    பதிலளிநீக்கு
  19. இதோ மீண்டு(ம்) வந்துட்டேன்... கடன் கேட்கும் நண்பர் பேச வேண்டியது என்னவென்றால்...

    "6 மாதம் வரை மாதாமாதம் தவணை தொகையை கொடுத்து "முடித்து" விடுகிறேன்... அதுவே எனது நட்பிற்கு கொடுக்கும் மரியாதை... நீங்கள் எனக்கு மாதாமாதம் அதற்கான தகவலை தெரிவித்தால் போதும்..."

    ஆனால் கொடுத்துள்ள கேள்வியில் அவ்வாறு இல்லை :-

    // அதை நானே என் கையால், அந்தப் பணக்கார உறவினரிடம் கொடுத்துவிடுகிறேன்... //

    மேலே உள்ளது போல் நண்பரின் உறவினரிடம் பேசவில்லையென்றாலும், நண்பர் சொன்னதுக்கு ஏற்ப, அவரிடமே தவணை தொகையை கொடுக்க வேண்டியது தான்...

    // இதற்கு, நீங்கள் ஒப்புக்கொள்வீர்களா? //

    ஒப்புக்கொள்ளவில்லை என்றால் நட்பு எதற்கு...?

    // பணம், கடன் கொடுத்தவரிடம் சரியாகப் போய் சேர்கிறதா என்று எப்படி உறுதிசெய்துகொள்வீர்கள்? //

    "பணக்கார உறவினரிடம் கொடுத்துவிடுகிறேன்" என்று சொல்லும் நண்பரிடம் சொல்ல வேண்டியது, "நீங்கள் உங்கள் உறவினருக்கு தவணை தொகை கொடுத்ததை, மாதாமாதம் அவர்கள் எனக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்... அது மட்டும் செய்தால் போதும்...!"

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நோஓஓஓஓஓஓஓ இம்முறை பரிசு அதிராவுக்கே:)) அதனால நீங்க கொஞ்சம் ஓய்வெடுங்கோ:)) ஹா ஹா ஹா:))

      நீக்கு
  20. // உங்களுக்கு, கடன் கொடுத்தவரை முன்னே பின்னே தெரியாது... //

    // ஆனால், அவர், தன்னுடைய தூரத்து உறவினராகிய, பணக்காரர் ஒருவரிடம், உங்களையும் அழைத்துச் சென்று, அவரிடம் பேசி, குறைந்த வட்டிக்கு ஏற்பாடு செய்து, பணத்தை வாங்கிக் கொடுக்கிறார்... //

    இது என்ன கேள்வியில் முரண்...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹையோ டிடி அது அந்த உறவினரின் சின்னவீட்டம்மாவின் பெரியப்பாவின் தம்பியின் மூத்த மகனின் மூணாவது பேத்தியின் ரெண்டாவது மகளின் மாமனாரின் சித்தப்பாவாக இருக்க வாய்ப்பிருக்கெல்லோ ஹா ஹா ஹா ஹையோ மீ எஸ்கேப்ப்ப்:))..

      நீக்கு
    2. எனக்கு தனபாலன் நண்பர். பல உதவிகள் செய்துள்ளார். ஆனால் தனபாலனின் உறவினர்கள் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. இதில் ஏதும் முரண் உள்ளதா?

      நீக்கு
    3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    4. அதூஊஊஊஊஊஊ.. நான் தான் பிழையாப் புரிஞ்சு மின்னி முழக்கிட்டேன்ன் அதனால நீக்கிட்டேன்ன் பூஸோ கொக்கோ:))... ஹா ஹா ஹா..

      நீக்கு
  21. சரி முரணை விட்டு விடுவோம்... நண்பர் ஒன்றே தெரியும் வைத்துக் கொள்வோம்... அவர் எங்காவது ஏற்பாடு செய்து வாங்கிக் கொடுத்தால் என்ன...?

    // அவரிடம் நீங்கள் நேரடியாகப் பணத்தைக் திருப்பிக் கொடுக்க எண்ணினால், உங்கள் நண்பர் மனவருத்தம் அடைவார். இந்த நிலைமையை எப்படிச் சமாளிப்பீர்கள்? //

    ஏதேனும் ஒரு மாதம், கடன் வாங்கிய நண்பரால் அனுப்பப்பட்ட தொகையை, அவரின் நண்பரால் உறவினருக்கு கொடுக்க முடியவில்லை என்று வைத்துக் கொள்வோம்... "மாதாமாதம் அவர்கள் எனக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்" என்று சொன்ன கடன் வாங்கிய நண்பருக்கு தெரிய வரும்... அப்போது தான் // உங்கள் நண்பர் மனவருத்தம் அடைவார்... // கடன் வாங்கிய நண்பரும் மனவருத்தம் அடைவார்...

    அதன்பின் நண்பர்களின் உரையாடல்கள் தொடரும்... நட்பு தொடர்வதற்கு இருவரின் நேர்மையும் இங்கே முக்கியம்... அதற்கேற்ப பணப்பட்டு'வாடா' நடக்கலாம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. DD...

      இதற்கு குறள் கிடையாதா? நட்புக்கு அல்ல, கடன் வாங்க!

      நீக்கு
  22. ///ரேவதி சிம்ஹன் :

    பதில் சொல்லப்படாத கேள்விகள் எந்த நரகத்துக்குப் போகும்?

    பதில் தராத ஆசிரியர் எந்த நரகத்துக்குப் போவார் என்று நேரடியாகக் கேட்கலாமே ! ///

    ஹா ஹா ஹா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அல்ரெடி ஏதாவது நரகத்தில் இருப்பவர்களுக்கு இந்த சிரிப்பு பொருந்தாது!

      நீக்கு
    2. ஏன் இப்பூடிப் புகையுதூஊஊஊஊ ஹா ஹா ஹா நீலப் பதிலை இன்று காணல்லியே.. அப்போ ஆல்ரெடி//ஓல்ரெடி... ஹையோ எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:).

      நீக்கு
  23. //இந்த வாரக் கேள்வி://

    பிக்கி பொஸ்ல:)) குப்புறக்கிடந்து நிமிர்ந்து அண்ணாந்து பார்த்தெல்லாம் ஓசிச்சு, ராஸ்க் குடுப்பதைப்போல:)).. நீங்களும் வர வர.. ஒவ்வொரு படியா மாற்றங்களைக் கொண்டு வாறீங்க புதன் கிழமைகளில்:)).. ஹா ஹா ஹா வாழ்த்துக்கள்.

    இந்த வீடு வாங்கும் கடனில ஒரு உண்மைச் சம்பவம்.

    எங்களுக்கு ஒரு தமிழ்க்குடும்பம் நண்பர்கள் ஏ என பெயர் வைப்போம்.

    இந்த ஏ க்கு ஒரு மலையாளிக்குடும்ப நண்பர்கள் பி என வைப்போம்... எமக்கு பி குடும்பத்தைத் தெரியும்.. ஏ யின் நண்பர்கள் எனும் முறையில், ஆனா நேரில் சந்தித்ததோ பேசியதோ இல்லை. இப்படி இருக்க பி குடும்பம் வீடு வாங்கினார்கள்.. உடனடியாக அவர்களுக்கு கொஞ்சம் பணம் தேவைப்பட்டது.. அப்போ ஏ குடும்பத்திடம் பணம் இல்லை.. அதனால ஏ குடும்பம் சொன்னார்கள் அதிரா குடும்பத்தைக் கேட்டுப் பார்க்கிறோம் என..

    எம்மிடம் ஏ குடும்பம் கேட்டார்கள்.. ஆக பெரும் தொகை அல்ல சிறு தொகைதான்.. பி குடும்பம் உங்களிடம் கேட்கச் சொன்னார்கள் என.. ஆனா இந்த ஏ குடும்பம் தாம் பணத்துக்கு பொறுப்பெனச் சொல்லவில்லை... உதவ முடியுமோ எனக் கேட்டார்கள்.. சரி எனச் சொன்னொம்..

    ஏ குடும்பம் இதில் தலையிடாமல் நேரடியாக பி குடும்பத்திடம் நம் போன் நம்பரைக் குடுக்க, பி குடும்பம் பேசவில்லை மெசேஜ்ஜில் எக்கவுண்ட் நம்பரை அனுப்ப நாமும் நேரடியாக பாங் மூலம் ட்ரான்சர் பண்ணி விட்ட்டோம்ம்...

    ஆனா சொன்னபடி 2 மாதத்தில் திரும்ப எக்கவுண்டில் போட்டு விட்டார்கள்..

    ஆனா இப்போ உங்கள் கேள்வியின் பின்புதான் யோசிக்கிறேன். இப்படி தெரியாதோருக்கு நேரடியாக பணம் கொடுப்பதும் தப்புத்தானே.. உண்மையில் ஏ குடும்பம் பொறுப்பாக நின்று தாம் வாங்கி குடுத்திருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  24. //வீட்டுக்கு வந்த பிறகு, உங்கள் நண்பர் உங்களிடம், பணத்தை சிறுதவணைகளில் அவ்வப்போது எனக்கு அனுப்பு. அதை நானே என் கையால், அந்தப் பணக்கார உறவினரிடம் கொடுத்துவிடுகிறேன் என்கிறார்.

    இதற்கு, நீங்கள் ஒப்புக்கொள்வீர்களா? பணம், கடன் கொடுத்தவரிடம் சரியாகப் போய் சேர்கிறதா என்று எப்படி உறுதிசெய்துகொள்வீர்கள்?

    உங்களுக்கு, கடன் கொடுத்தவரை முன்னே பின்னே தெரியாது. அவரிடம் நீங்கள் நேரடியாகப் பணத்தைக் திருப்பிக் கொடுக்க எண்ணினால், உங்கள் நண்பர் மனவருத்தம் அடைவார். இந்த நிலைமையை எப்படிச் சமாளிப்பீர்கள்? //

    இதுக்கு ஒரே வழி... அந்த வட்டிக்காரரையும் என் உறவினரையும் வச்சே நேரடியகப் பேசி விடுவேன்.. பணத்தை எப்படித் திருப்புவேன் என. அங்கு மூவருமாகச் சேர்ந்தே ஒரு முடிவுக்கு வர வேண்டும்.

    அல்லது என் உறவினர் கேட்கிறார் என்பதனால் முகம் முறிக்க முடியாது ஏனெனில் அவர்தானே அவசரத்துக்கு இந்த ஏற்பாட்டைச் செய்தார் என்பதனால்.. வட்டிக்காரரிடம் திடமாகச் சொல்லி .. பணத்தை ஒழுங்காக என் உறவினரிடம் குடுப்பேன் என்று... சொல்லி விட்டு பின்பு பணத்தை அனுப்பும்போது அதை ஸ்கிரீன் சொட் எடுத்து வட்டிக்காரருக்கு ஒரு கொப்பி அனுப்பி விடுவேன் வட்ஸப்பில்:)).. இப்படி ஒருமாதிரி கத்திக் கூர் மேல நடப்பதைப்போல 6 மாதத்தை கடத்திப்போட்டு, என்னிடம் பணம் வந்துவிட்டது, நேரடியாகக் குடுத்து முடிக்கப்போறேன் என உறவிடம் சொல்லிப்போட்டு நேரே குடுத்து விட வேண்டியதுதான்... ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடாஆஆஅ எப்பூடியெல்லாம் ஒரு சுவீட் 16 கிட்னியைப் போட்டுக் கசக்குறீங்க:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆவ்வ்வ்வ்வ்வ் அப்போ பரிசு எனக்கேஏஏஏஏஏஏ:)) ஆண்டவா வைரவா:) அடுத்த புதன்கிழமை வரை கெள அண்ணனின் மைண்ட்டை இதே மூட் ல வச்சிரப்பா:).. மூட் மாறி வேறு ஆருக்காவது தூக்கிக் குடுத்திடப்போறாரே:)) ஹா ஹா ஹா..

      நீக்கு
    2. பரிசா? பதிவுல அப்படி ஏதாவது சொல்லியிருக்கோமா?

      நீக்கு
  25. கேள்விகளும் பதில்களும் அருமை. நம் நட்புகள் கேள்விகள் நன்றாகவே கேட்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  26. எனக்கு முதலில் கடன் வாங்குவது, க்ரெடிட் கார்ட் விஷயம் போன்றவை பிடிப்பதில்லை. ஆனால் கேள்வி அதுவல்ல என்பதால் கேள்விக்கு வருகிறேன்.

    நண்பரையும் வைத்துக் கொண்டு அவரது உறவினரிடம் பேசிவிடுவேன். பணத்தை விட நட்பு முக்கியம். எனவே அதை விளக்கி நண்பரிடம் மனம் நோகாதவாறு பேசி எல்லாமே அக்கவுண்டட் என்று சொல்லிவிடுவேன். நண்பரின் உறவினர் கொடுக்கும் பணத்திற்கான வட்டி குறித்து கணக்கிட்டு பத்திரம் போலச் செய்து போட்டுக் கொண்டுவிட்டு தவணையில் எவ்வளவு கட்ட வேண்டும் என்பதையும் கேல்குலேட் செய்து கொண்டு நண்பரின் உறவினரிடமிருந்து பெறும் பணத்தை வங்கி மூலமாக என் அக்கவுண்டிற்கு அனுப்பச் சொல்லிவிட்டு (இதுவும் வங்கி ரூல்ஸ் உட்படுத்தி) லோன் கட்டுவதற்கு தனியாக ஒரு
    (லோன்) அக்கவுன்ட் தொடங்கி (கூடியவரை ஜாயின்ட் கடன் கொடுத்தவர் மற்றும் என் பெயர்) அதில் கட்டுவேன். எல்லாமும் அக்கவுண்ட் ஆகிவிடும். அதிலிருந்து இருவருமே வித்ட்ரா செய்யக் கூடாது. இது பணம் வரும் வரைதான். பணம் வந்ததும் கொடுத்து க்ளோஸ் பண்ணிவிடுவேன். பண்ணியதும் கொடுத்து முடித்தற்கு எழுதி வாங்கிக் கொண்டுவிடுவேன். ஒரு வேளை நண்பரையும் உட்படுத்த வேண்டும் அவர் ஏற்பாடு செய்ததால் என்றால் அவர் பெயர் என் பெயர் ஜாயின்ட் அக்கவுன்ட் தொடங்கி அதில் போட்டு வருவேன். ஒவ்வொரு முறை அடைக்கும் போதும் அடைக்கும் விவரங்களை கடன் கொடுத்தவருக்கும் அனுப்பிவிடுவேன். எல்லாமே லீகலாக இருக்கும் என்பதால். முடிந்ததும் எழுத்துப்பூர்வமாக சைன் போட்டு வாங்கிக் கொண்டு விடுவேன்.

    இப்படித்தான் என் நெருங்கிய உறவினர் ஒருவர் எனக்குத் தெரிந்த யாரிடமேனும் கடன் வாங்கிக் கொடுக்க முடியுமா என்று கேட்டார். (என்னால் கொடுக்க இயலாது என்று அவருக்குத் தெரியும் என்பதால் என்னிடம் கேட்கவில்லை!!!!) நான் மிக நெருங்கிய மற்றொரு உறவினரிடம் பேசி இப்படித்தான் அக்கவுன்ட் ஓபன் செய்யப்பட்டு கேட்டவர் அடைத்தார். பணம் வந்ததும் மீதம் எவ்வளவு கட்ட வேண்டும் என்று கேல்குலேட் செய்து முழுதும் அடைத்துவிட்டு அக்கவுண்டை க்ளோஸ் செய்துவிட்டார்கள். இந்த அக்கவுன்ட் சஜஷன் கொடுத்தது மீ...கையில் கேஷ் கொடுக்க வேண்டாம் என்று இருவரிடம் பேசி...

    எப்போதுமே உறவினரிடமோ, நண்பரிடமோ கடன் வாங்கினால் அதைத் திருப்பித் தர அவரது அக்கவுண்டிற்கு அனுப்புவதை விட தனியே ஒரு அக்கவுன்ட் தொடங்கி அதில் போடுவது நல்லது. அதிலிருந்து யாரும் வித்ட்ரா செய்யக் கூடாது.

    கீதா

    பதிலளிநீக்கு
  27. ஏன் அவரது அக்கவுண்டிற்கே அனுப்பக் கூடாது என்றால்....இதற்கும் ஓர் சம்பவம் உண்டு. ஒருவர் தன் உறவினர் மூவருக்கு (மிக நெருங்கிய உறவினர்) கடன் கொடுத்தார். இது நடந்து 15 வருடங்கள் ஆகிறது.

    மூவரும் அவரது அகக்வுண்டிற்குப் பணம் அடைத்து வந்தார்கள். பேங்க் வீட்டு லோனுக்கு என்ன வட்டி கொடுக்குமோ அந்த வட்டி ரேட்டில் என்று கேல்குலேட் செய்து அடைத்து வந்தார்கள். கடன் கொடுத்தவரின் அக்கவுன்ட் மேற்பார்வை அவரது மாமனாரின் கீழ். அவரும் வங்கியாளர். மூவரில் ஒருவருக்கு சந்தேகம் வந்தது. என்ன வட்டி என்று. அப்போது அவர் சொன்னது நீங்கள் அடைக்கும் வட்டி போதாது என்று. ஏன் என்பதற்கு விடை இல்லை. அந்த அக்கவுன்ட் என் ஆர் ஐ அக்கவுன்ட். அதிலிருந்து மேலும் சில பிஸினஸ் நண்பர்களுக்கு கடன் கொடுக்கப்பட்டிருந்தது. எல்லாமே ஓவர் ட்ராஃப்ட். அந்த பிஸினஸ் வாங்கியவரள் சரியாகக் கடனை அடைக்கவில்லை. இறுதியில் இந்த மூவரும் பாதிக்கப்பட, அதுவும் ஓவர் ட்ராஃப்ட் வட்டி அதிகம் வேறு....அதில் இருவர் மற்றொரு வங்கியில் கடன் வாங்கி இந்த அக்கவுண்டிற்குக் கட்டி விட்டு கழண்டுகொண்டார்கள். மற்றொருவர் அவ்வாறு செய்ய இயலாமல், இறுதியில் வாங்கிய கடனை விட மும்மடங்கு அடைக்க வேண்டியதாகிப் போனதால் வாங்கிய வீட்டையும் விற்று அடைத்தார்.

    கீதா

    பதிலளிநீக்கு
  28. கடன் கதைகள் ஒவ்வொன்றாக உடன் வெளிவரும்படி கேள்வி கேட்டு வைத்திருக்கிறீர்களே.. உங்களை என்ன செய்வது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வங்கதேசம் இதுவரை மெச்சூர்டாக விளையாடறாங்களே. அதைப் பார்க்கலையா ஏகாந்தன் சார்? டெஸ்ட் மேச் மாதிரி இருக்குன்னு தோணிடுத்தோ?

      நீக்கு
    2. Neither lend nor borrow old இது பழைய நாள் வாழ்க்கை.
      நாங்கள் பட்ட அவஸ்தை காரண்டார் கையெழுத்துப் போட்டு, பணமிழந்ததே.

      இந்த ஊரில் க்ரெடிட் கார்ட் தான் மெயின்.
      கையில் பணம் வைத்திருப்போர் வெகு குறைவு.

      நீக்கு
  29. // DD...

    இதற்கு குறள் கிடையாதா? நட்புக்கு அல்ல, கடன் வாங்க! //

    ஸ்ரீராம் சார்... மனதில் நினைத்து வைத்ததை சொல்லி விட்டீர்கள்...

    நட்பிற்கு உறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு
    உப்பாதல் சான்றோர் கடன் (802)

    ஆமாம்... கடன் என்றால் என்ன...? கடமை என்றால் என்ன...?

    ஹைய்யா... நானும் இந்த வாரம் கேள்வி கேட்டுட்டேன்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஈன்று புறம் தருதல் என் தலைக் கடனே
      சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே. (நோட் பண்ணிக்கோங்க பெண் இனமே)
      வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லர்க்குக் கடனே
      நன்னடை பழகுதல் வேந்தற்குக் கடனே

      நீக்கு
    2. எப்படி பொன்முடியார் பாடலை எல்லாம் நினைவு வைத்திருக்கிறீர்கள் நெல்லை? நான் கூகிள் செய்துதான் கண்டுபிடித்தேன்!

      நீக்கு
    3. நெல்லைத் தமிழன் ஐயா அசத்துகிறார்...

      அப்புறம்...

      இன்னொரு கடன் "அரசியல்" பதிவில் வரும்...!

      நீக்கு
    4. திண்டுக்கல் தனபாலன், நீங்கள் நினைத்தது,

      என் கடன் பணி செய்து கிடப்பதே

      சரியா? இது தேவாரத்தில் வருவது. தென் கடம்பை என்ற திருகர கோவிலில் குடியிருக்கும் சிவன் என் நலத்தைப் பார்த்துக் கொள்வான். அது அவன் கடன். ஆனால் என் கடன் அவனுக்கு அவன் அடியாரகளுக்குப் பணி செய்து கிடப்பதே என்பது பாடல்.
      நம் கடம்பனை பெற்றவள் பங்கினன்
      தென் கடம்பை திருக் கர கோயிலான்
      தன் கடன் அடியேனையும் தாங்குதல்
      என் கடன் பணி செய்து கிடப்பதே

      நீக்கு
    5. இந்தப் பாடலில் நாம் கவனிக்கவேண்டியது,

      நம் கடம்பனைப் பெற்றவள் - கடம்பன் - முருகன். அவனைப் பெற்றவள் பார்வதி. பங்கினன் - அந்தப் பார்வதியின் ஒரு பாகத்தைத் தனதாக்கிக்கொண்டவன். யார்? சிவன். அவன், 'தென் கடம்பை திரு கர' என்ற கோவிலில் வீற்றிருப்பவன். அவனுடைய கடன், 'அடியேனையும்' - இதுல ,'யும்' என்றதன் மூலம், மற்றவர்களையும் அவன் ரட்சிக்கிறான். என்னையும் தாங்குவது அவனுடைய கடன் என்று சொல்கிறார்.

      நீங்கள் சொன்னதால் இந்தப் பாடலை முழுமையாகப் படித்து அர்த்தம் புரிந்து அனுபவிக்க நேரிட்டது தி.த. நன்றி.

      நீக்கு
  30. @ நெல்லை தமிழன்:
    மேட்ச் பாத்துக்கிட்டேதான் கமெண்ட் போடறேன். ரஹீம் 99-ல் காலி. ஆனால் பாக்-இற்கு தலைவலி பாக்கி இருக்கிறது- மகமதுல்லா, மெஹ்தி ஹாசன்! 250-260 வரை போய்விடும் போலிருக்கு. போனால் பாக் ஆபத்தில் சிக்கும்..

    பதிலளிநீக்கு
  31. ஶ்ரீராம்.. முதலிரண்டு வரிகள் ஞாபகத்தில் இருந்தது. சரிபார்க்க கூகிளிட்டேன். பொதுவா எனக்கு பாடல் அர்த்தம் தெளிவா புரியலைனா quote பண்ண மாட்டேன்.

    பதிலளிநீக்கு
  32. அனைத்து பதிவுகளும் நன்று பாராட்டுகள்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!