கேள்வி பதில்கள் :
பானுமதி வெங்கடேஸ்வரன்:
பள்ளியில் படிக்கும்பொழுது அவ்வளவு சுவாரஸ்யமாக தோன்றாத சரித்திரம் பற்றி ஓரளவு வயதான பிறகு விரும்பி படிக்கிறோம், கேட்கிறோம். ஆனால் பள்ளிக்கூட காலத்தில் சுவாரஸ்யமாக இருந்த விஞ்ஞானம், கணிதம் சம்பந்தப்பட்ட தகவல்களை பின்னாளில் படிக்க முடியவில்லையே? அது ஏன்?
# வாழ்வாதாரத்துக்கு வேண்டியிருந்தால் நிச்சயம் எதையும் படிப்போம்.
பிற்காலத்திலும் வரலாறு படிக்க ஆர்வம் இருப்பது நமது பாரம்பரியத்தை அறிந்து கொள்ளும் திசையில் நமது ஊக்கம். ( எல்லாரும் அப்படி நினைப்பதில்லை. )
Platonic love என்பது சாத்தியமா?
# ஃப்ராய்டின் கருத்துப்படி அறிவின் தாக்கத்தால் அடக்கி வைக்கப்படும் இனக்கவர்ச்சிதான் Platonic love. இதன் உண்மைத்தன்மையை அவரவர் ஆத்ம பரிசோதனை செய்து கொண்டுதான் கண்டு பிடிக்கவேண்டும்.
& எனக்குத் தெரிந்து, துவாபர யுகத்திற்குப் பிறகு, ( ராதா & கிருஷ்ணர் + கோபியர்கள் & கிருஷ்ணர் ) காலத்துக்குப் பிறகு Platonic love எனப்படும் ஆன்மீகக் காதல் எங்கும் காணப்படாதது.
நீங்கள் வேண்டுமானால் குணா (கமல்) & அபிராமி (கற்பனைப் பாத்திரம் ) platonic love க்கு உதாரணம் என்று நினைக்கலாம். ( மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல அதையும் தாண்டி புனிதமானது!)
நெல்லைத்தமிழன் :
நெல்லைத்தமிழன் :
1. இப்போவும் பெரியவங்க அதாவது 40+ தியேட்டர் போய் படம் பாக்கறாங்களா?
# 1. பார்க்காமலா இருப்பார்கள் ? நான் " பொன்னியின் செல்வன் " பார்த்தேனே !
2. குழந்தைகளுக்கு சின்ன வயசிலேயே மனசுல பதியவைக்க மூன்று முக்கிய அறிவுரைகள் என்னென்ன?
# முதலாவது பணிவு, பெரியவர்களிடம் மரியாதை. இரண்டாவது பிறர்க்கின்னா செய்யாமை. மூன்று கல்வி கற்பதில் கவனம்+ஆர்வம்.
3. என்னத்த சாப்பிட்டு.. என்று எந்த வயதில் தோன்றும்?
# 90ஆக இருக்கலாம். ஏனென்றால் எனக்கு இன்னும் தோன்றவில்லையே!
4. இப்போவும் ஹோட்டல் போய் சாப்பிடும் ஆசை இருக்கா? என்ன என்ன சாப்பிட ஆசை?
# ஹோட்டல்களில் காண இயலாத கத்தரிக்காய் பஜ்ஜி.
5. என்னைக் கேட்காமல் மனைவி இதை இதை செய்யக்கூடாது என நீங்கள் நினைத்தவை என்னென்ன?
# என்னைக் கேட்டும் செய்ய இயலாத அந்த விஷயம்தான் - என்னை மட்டம் தட்டி உண்மையை உரைப்பது.
= = = = = = = = =
படமும் பதமும் :
நெல்லைத்தமிழன் :
என் மனைவி ஒரு தடவை எனக்குச் செய்துகொடுத்த லட்டு, பூந்தி மற்றும் முறுக்கு. எனக்கு பூந்தி ரொம்பவே பிடிக்கும். ஆனால் சிறிய வயதில் திருமணங்களில் சாப்பிட்ட பூந்திபோல தற்காலங்களில் வருவதில்லை. அது நல்லா பூத்து வரும், ரொம்பவே சாஃப்டா இருக்கும். இப்போல்லாம் முந்திரி நெய் போன்றவற்றிர்க்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை பூந்திக்கு கடைகள் கொடுப்பதில்லையோ (முந்திரி நெய் போன்றவை வாசனை அலங்காரப் பொருட்கள்) என்று சம்சயம்.
சமீபத்தில் நான் சென்றிருந்த ஹோட்டல் ஒன்றில் விளக்கை ஒரு குரங்கு கையில் பிடித்துக்கொண்டிருப்பதுபோல அமைத்திருந்தது மிக வித்தியாசமாக இருந்தது.
இந்தோநேஷியா பாலித் தீவுக்குச் சென்றிருந்தபோது (ஒரு கான்ஃபரன்ஸுக்கு), கடலுக்குள் இறங்கி நடக்கும் வாய்ப்பு (சிறிய பகுதிலதான்) கிடைத்தது. அங்கு இருந்த பிள்ளையார் சிலை.
பூங்கா விசிட் முடித்து, தங்கும் இடத்திற்கு வந்த பின் எனக்குக் கிடைத்த இலவச , மாதாந்திர காலண்டர் இது.
அனைவருக்கும் வணக்கம். பிளாடானிக் லவ் பற்றிய கேள்விக்கு உங்கள் பதில் சூப்பர்.!
பதிலளிநீக்குநெல்லையின் இரண்டாவது கேள்விக்கு சரியான பதிலைத் தந்திருக்கிறீர்கள். ஐந்தாவது கேள்விக்கான பதிலை ரசித்தேன்.
வானரூவின் மன்னிக்கவும், குரங்கின் (எஸ்.ரா.வின் கதை ஒன்றை படித்த பாதிப்பு) படம் தத்ரூபம்.
பதிலளிநீக்குகிளாம்பாக்கம் படங்களில் சிலவற்றை ஏற்கனவே பகிர்ந்து விட்டீர்கள். அல்லது அவை ட்ரைலர், இவைதான் ஒரிஜினல் படங்களோ?
//இப்போவும் பெரியவங்க அதாவது 40+ தியேட்டர் போய் படம் பாக்கறாங்களா? // இதென்ன கேள்வி நெல்லை? நீங்கள் தியேட்டருக்குச் செல்ல மாட்டீர்களா? சில படங்களை தியேட்டரில் பார்த்தால்தான் ரசிக்க முடியும். துரந்தர் 1 ஐ தியேட்டரில் பார்க்க முடியாதது கொஞ்சம் வருத்தம்தான். அதுவும் எனக்கு வெள்ளித்திரை டு வெள்ளித்திரை பார்க்க வேண்டும். படம் முடிந்ததும் எல்லோரும் கிளம்பி விடுவார்கள். டப்பிங்க் ஆர்ட்ஸ்டுகள் யார் என்பதெல்லாம் கூட தெரிந்து கொள்ள இருந்து பெயர்களை படித்து விட்டுதான் வருவேன்.
பதிலளிநீக்கு