1.10.26

"யாராவது இருக்கிறீர்களா?" + மனசாட்சியம் - புதிய தொடர் அறிமுகம்

 

வொய்ஜாபோர்ட்  என்பது ஆங்கில எழுத்துகள் இருக்கும் ஒரு போர்ட்.  ஒரு பொருளை கையில் பிடித்துக் கொண்டு அதன் முன் உட்காருவார்கள்.  சுற்றிலும் மற்றவர்களும் உட்காருவார்கள்.  கையில் பொருள் பிடித்திருப்பவர் மீடியம் என்று அழைக்கபப்டுகிறார்.  எளிதாக அவர்மேல் ஆவி இறங்கக் கூடியவர்.

அங்கிருப்பவர்களின் செத்துப்போன உறவுகள் யாரிடமாவது கேள்வி கேட்கவேண்டும் என்றிருந்தால் அவர்களை, அதாவது அவர்களின் ஆவியை  அழைப்பார்கள்.  உதாரணமாக சமீபத்தில் செத்துப்போன ஏதோ ஒரு உறவின் தாத்தா தான் வைத்திருந்த பத்தாயிரம் ரூபாய் பணத்தை எங்கு மறைத்து வைத்திருக்கிறார் என்று சொல்லாமலேயே போய்விட்ட சோகத்திலிருப்பவர் அவரை அழைத்துக் கேட்க முயற்சிக்கலாம் வீட்டில் தேடித்தேடி அலுத்துப் போனவர்.

ஒரே ஒரு மெழுகுவர்த்தி மட்டும் ஏற்றி வைத்து விட்டு மின் விளக்குகளை அணைத்துவிட்டு போர்ட் முன் உட்கார்ந்து அழைக்க வேண்டும்.  பொறுமையாக காத்திருக்க வேண்டும்.  அப்படி ஆவி வந்தால் சில அறிகுறிகள் தென்படும்.  சினிமாவில் காட்டுவது போல திரைசீலை அசையலாம்.  மெழுகுவர்த்தி தீபம் பெரிதாக ஆடலாம்.  ஆனால் அணையாது.  அறையில் இருக்கும் ஏதாவது ஒரு பொருள் நழுவி கீழே விழுந்து திடுக்கிட வைக்கலாம்.  சமயத்தில் ஆவி வந்திருக்கிறதா என்று உறுதிப்படுத்திக்கொள்ள அந்த மீடியம் இப்படி ஏதாவது ஒரு செயலைச் செய்யச்சொல்லி வேண்டி நிரூபணம் கேட்கலாம்.

ஆமாம், இதற்கு ஏன், எப்படி எப்போது வொய்ஜா போர்ட் என்று பெயர் வந்ததது?  தேடுபொறியில் தெரியபோது கிடைத்த தகவல்கள்..

ஒய்ஜா" (Ouija) என்ற பெயர் அந்தப் பலகையே தனக்குத்தானே சூட்டிக்கொண்ட பெயர் என்று அதன் வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன. 1890 ஆம் ஆண்டில், அமெரிக்காவைச் சேர்ந்த எலியா பாண்ட் (Elijah Bond) மற்றும் சார்லஸ் கென்னார்ட் (Charles Kennard) ஆகியோர் இந்தத் தொடர்புப் பலகையை (Talking Board) வணிகரீதியாகத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 

ஆனால், அதற்கு ஒரு கவர்ச்சிகரமான பெயர் வைக்க வேண்டும் என்று அவர்கள் யோசித்தனர்.இதற்காக, ஆவிகளுடன் பேசும் ஆற்றல் கொண்டவராகக் கருதப்பட்ட எலியா பாண்டின் மைத்துனி ஹெலன் பீட்டர்ஸ் (Helen Peters) என்பவரை அவர்கள் அழைத்தனர். அவர்கள் மூவரும் அந்தப் பலகையிடம், "உனக்கு என்ன பெயர் வைக்கலாம்?" என்று கேள்வி எழுப்பினர்.அப்போது அந்தப் பலகையின் நகர்த்தி (Planchette), "O-U-I-J-A" என்ற எழுத்துக்களை நோக்கி நகர்ந்து அந்தப் பெயரை உருவாக்கியது. அதன்பிறகு, "அதன் பொருள் என்ன?" என்று கேட்டதற்கு, அது "நல்வாழ்த்துகள்" (Good Luck) என்று பொருள் தந்தது.

ஆக, கேரம்போர்ட் போல இந்த வொய்ஜாபோர்டையும் நாம் ரெடிமேடாக கடையில்தான் வாங்கவேண்டும் போல.  வீட்டில் தயார் செய்தால் அதற்கு அந்த சக்தி இருக்காது போல!!

Planchette  என்ற கருவியின் மேல் விரல்களை வைத்துக்கொண்டு கேள்விகளை கேட்க, வேண்டும் என்றாலும் சிலர் ஒரு நாணயத்தை வைத்துக் கொண்டே முயற்சி செய்வார்கள்.  இங்கும் அதுதான் நடந்தது.

தாயத்து காட்டியவர் கையில் ஒரு நாணயத்தை வைத்துக் கொண்டு விரலால் தொட, மற்றவர்களும் அந்த நாணயத்தை தொட்டுக் கொண்டார்கள்.

"யாராவது இருக்கிறீர்களா?" என்று மெதுவான குரலில் கேட்டார்.  பதில் இல்லை. எதிரே அமர்ந்திருந்தவர் சுற்றுமுற்றும் பார்க்க, இன்னொருவர் "டேய் முண்டம்..  பதில் குரலாக வராது..  இங்கே நாணயம் நகர்ந்து S எழுத்தைத் தொடும் -  'அது' வந்து இருந்தால்" என்று கிசுகிசுத்தார்.  உடனே மற்றவர்கள் "உஷ்" என்று மெல்லிய சத்தத்தில் பாம்பு போல சீறி அமைதியை நிலைநாட்ட வலியுறுத்தினார்கள்.  கேட்டவருக்கு சிலிர்த்தது.

ஜாடையில் 'தண்ணீர் குடிக்கலாமா?' என்று கேட்டார் ஒருவர்.  இன்னொருவர் 'நடுவில் எழுந்திரிக்கக் கூடாது' என்று சைகை செய்தார்.

தண்ணீர் விரும்பியவர் ஓரமாக அமர்ந்திருந்தவரை தலையை சற்றே சாய்த்து ஒரு பார்வை பார்த்தார்.  அர்த்தம் : "நீ போய் எடுத்து வாயேன்.."

ஓரமாக அமர்ந்திருந்தவர் திரும்பி இருளான சமயலறையைப் பார்த்தார்.  தலையை இடம் வலமாக ஆட்டினார்!

மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் போர்டைச் சுற்றியும், ஓரமாகவும் அவர்கள் காத்திருந்தார்கள்.  பொறுமையாகக் காத்திருந்தார்கள்.

=====================================================================================

புதிய தொடர் அறிமுகம் - மனசாட்சியம் 

மனசாட்சியம் என்கிற தலைப்பில் தன் எண்ணங்களை பகிர வருகிறார் எங்கள் ஆசிரியர்களில் மூத்த K G Y Raman.  எந்த நாட்களில் எப்போது வரும் என்று சொல்ல முடியாது.  ஆனால் வரவேண்டிய நேரத்தில் சரியாக வரும்!


மனசாட்சியம் - 1

K G Y Raman

மனசாட்சியம் -  இந்த தலைப்பில்  தொடர்ந்து எழுத எண்ணியிருக்கிறேன்.

மனம் சரி, சாட்சி சரி, சாட்சியம் கூட சரி -- அது என்ன மனசாட்சியம் ? 

காதில் விழுகிற, கண்ணில் படுகிற பலவும் நம் மனதுள் (சில சமயம்) பலமான எண்ணங்களைத் தூண்டுகின்றன.  அதை வெளியே நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வரை அந்த எண்ணங்கள் உள்ளே சுழன்று சுழன்று வந்து ஒரு சங்கடத்தை விளைவித்தவாறு இருக்கின்றன. சங்கடம் மட்டுமே தான் என்பதல்ல சில செய்திகள் சந்தோஷத்தையும் கொடுப்பது உண்மைதான். அதையும் கூட பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிற ஒரு உந்துதல் இருப்பதையும் காண்கிறேன்.

எனவே நல்ல ஒன்றோ பொல்லாத ஒன்றோ அதை பற்றி கொஞ்சம் சொல்லி அது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற எண்ணத்துடன் இதை ஆரம்பிக்கிறேன். 

முதலாவது என்னை சங்கடப்படுத்தும் ஒரு விஷயம் பொது வாழ்வில் நாணயத் தன்மை, நேர்மை குறைந்து போய் அதனால் ஏற்பட்டிருக்கிற பயங்கரமான பின் விளைவுகள். 

அந்த காலத்தில் அரசு வேலையில் இருப்பவர்கள் மேல் வரும்படி என்று ஒரு தலைப்பின் கீழே அற்ப சொற்பமாக சம்பளத்துக்கும் அதிகமாக ஏதோ கொஞ்சம் சம்பாதித்து வந்தார்கள். ஒரு ஆஸ்பத்திரியில் நோயாளிகளை பார்க்க அந்த குறிப்பிட்ட நேரம் தாண்டி யாரோ ஒருவர் போவதனால் காவல்காரராக உட்கார்ந்து இருக்கிற மனிதரிடம் ஒரு இரண்டணா (ரூபாய்க்கு பதினாறு அணா) கொடுத்தால் உள்ளே போ என்று சைகை காண்பிப்பார். இதை மீறி அரசு ஆஸ்பத்திரியில் லஞ்சம் இல்லாமல் தான் இருந்தது. 

பதிவுத்துறை தாலுகா ஆபிஸ் போன்ற இடங்களில் பியூன்களும் குமாஸ்தாக்களும் மட்டுமே அணாக் கணக்கிலும் ஒரு சில ரூபாய் கணக்கிலும் மேல் வரும்படி பார்த்து வந்தார்கள். அதற்கு மேலே இருப்பவர்கள் கைநீட்டி காசு வாங்குவது அகௌரவம் என்று நினைத்தார்கள். 

அரசியல் மட்டத்தில் பார்த்தால் இப்போது இருக்கிற மாதிரி இவ்வளவு பரவலாகவும் இவ்வளவு ஆழமாகவும் மேல் வரும்படி பார்க்கிற மனோபாவம் இல்லாமல் தான் இருந்தது. 

மாகாணத்தில் மிகப் பிரபலமாக நீண்ட நாள் ஆட்சியில் இருந்த ஒருவரை பற்றி அவர் பெயரோடு "10 லட்சம்" என்ற சொற்களை சேர்த்து அவரைக் குறிப்பிடுவது அவரை அதிகபட்ச இழிவு படுத்துவதாகப் பார்க்கப்பட்டது.   " *** அண்ணாச்சி, பருப்பு விலை என்னாச்சி " என்ற கோஷம் ரொம்ப பிரபலமாக இருந்தது. பத்து லட்சம் நாணயக் குறைவாக சம்பாதிப்பது அவ்வளவு பெரிய பஞ்சமா பாதகம் என்று பார்க்கப்பட்டது. 

இப்போது அப்படி இல்லை. 100 கோடி 500 கோடி ஏன் ஆயிரம் கோடி கூட ஏதோ சில்லறை போல பார்க்கப்படுகிறது. 

வெற்றிகரமான தொழில் முனைவர் ஓரிருவர் 25000 கோடி 50 ஆயிரம் கோடி என்ற சொத்துகளுக்கு அதிபதிகளாக இருக்கிறார்களாம். ஒரு குறுகிய காலகட்டத்தில் ஒரு குறிப்பிட்ட வியாபாரம் செய்து அதில் சில கள்ளத்தனங்களைப் புகுத்தி இவ்வளவு பெரிய தொகைகளை லாபமாக ஈட்ட முடிகிறது என்பது உண்மையானால் அந்த வியாபாரங்களுக்கு அதிக அளவில் வரி போட்டு அல்லது இடுகையின் விலையை நியாயமான அளவுக்கு உயர்த்தி நிர்ணயம் செய்து இந்த லாபத்தை சற்று கட்டுப்படுத்த வேண்டும் என்கிற யோசனை ஏன் நமது அரசினருக்கு இல்லாமலேயே போய்க் கொண்டிருக்கிறது? 

10 ஆண்டுகளுக்கு முன் நீ பரதேசி இன்று உன்னிடம் 500 கோடி இருக்கிறது என்றெல்லாம் பொது மேடைகளிலே குற்றம் சாட்டுகிறார்கள். என்ன வியாபாரம் செய்து இவ்வளவு பெரிய லாபம் வந்தது என்று தட்டி கேட்கிற அதிகாரம் அரசுக்கு இருக்க வேண்டுமா இல்லையா ? ஏற்கும் படியான விவரங்கள் கொடுக்காதவர்களை பிடித்து உள்ளே போடுகிற மாதிரி ஒரு சட்டம் இருக்க வேண்டுமா வேண்டாமா ?

வருகிற வருமானத்தை கணக்கில் காட்டி அதற்கான வரியை சந்தித்து விட்டால் அந்த நபரை எதிர்த்து அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்று சொல்லுகிறார்கள். இதில் எந்த அளவு நியாயம் இருக்கிறது ? 


இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?

========================================================================================


T S பாலையாவை படத்தில் சேர்க்காவிட்டால் நான் அந்தப் படத்தில் நடிக்க மாட்டேன் என்று சொல்லி விட்டாரா ம் MGR.  இது பற்றி தினமலரில் நான் படித்த கட்டுரை.


தமிழ் திரையுலகில் எம் ஜி ஆரை வைத்து திரைப்படங்கள் இயக்காத பிரபல இயக்குனர்களில் குறிப்பிடும்படியானவர்கள் இயக்குனர் ஏ பீம்சிங்கும், இயக்குனர் கே எஸ் கோபாலகிருஷ்ணனும். பெரும்பான்மையான இவ்விருவரின் திரைப்படங்கள் அழுத்தமான, உணர்வுப்பூர்வமிக்க, உறவுகளைச் சுற்றிச் சுழலும் குடும்பப் பின்னணி கொண்ட கதைகளை உள்ளடக்கியவையே.

அதனால் அதற்கேற்ற நடிகர்களையே தங்களது படங்களுக்கு தேர்வு செய்து, பல வெற்றித் திரைப்படங்களைத் தந்து கொண்டிருந்த இவ்விருவரில் இயக்குனர் கே எஸ் கோபாலகிருஷ்ணன், தான் எடுக்க இருந்த ஒரு திரைப்படத்திற்கு எம் ஜி ஆரை நாயகனாக ஒப்பந்தம் செய்ய விரும்பி, எம் ஜி ஆரிடம் கதை சொல்ல, கதையைக் கேட்ட எம் ஜி ஆர், அந்தக் கதையில் வரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்திற்கு நடிகர் டி எஸ் பாலையாவை பயன்படுத்துமாறு இயக்குனர் கே எஸ் கோபாலகிருஷ்ணனிடம் சொல்ல, அந்தக் கதாபாத்திரத்திற்கு நடிகர் எஸ் வி ரங்காராவை ஒப்பந்தம் செய்துவிட்டதாகவும், அவர்தான் அந்தக் கதாபாத்திரத்திற்கு சரியான தேர்வாக இருப்பார் என்று பதிலளிக்க, நடிகர் டி எஸ் பாலையாவை அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பதாக இருந்தால் இந்தப் படத்தில் நான் நடிக்கின்றேன்; இல்லை என்றால் நீங்கள் வேறு யாரையாவது வைத்து படத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்று இயக்குனர் கே எஸ் கோபாலகிருஷ்ணனிடம் கூறி, அந்தப் படத்தை நிராகரித்தார் எம்ஜிஆர்.

அவ்வாறு எம் ஜி ஆர் நடிக்க மறுத்த அந்தத் திரைப்படத்தில் அவருக்குப் பதிலாக நடிகர் ஜெமினிகணேசனை நாயகனாக நடிக்க வைத்து, படத்தை இயக்கி முடித்தார் இயக்குனர் கே எஸ் கோபாலகிருஷணன். அந்தத் திரைப்படம்தான் 1963ம் ஆண்டு வெளிவந்த "கற்பகம்". நடிகை கே ஆர் விஜயா நாயகியாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாக காரணமாய் அமைந்த இத்திரைப்படம், மிகப் பெரிய வெற்றியை அப்போது பெற்றிருந்தது.

எம் ஜி ஆரும், டி எஸ் பாலையாவும் இரண்டு கதாநாயகர்களாக இணைந்து நடித்து, 1948ம் ஆண்டு "ஜூபிடர் பிக்சர்ஸ்" தயாரிப்பில் வெளிவந்த "மோகினி" திரைப்படத்தில் நாயகன் யார்? என்ற ஒரு பிரச்னை எழுந்தபோது, எம் ஜி ஆர் கதாநாயகனாக இருக்கட்டும் நான் துணை நாயகனாக இருக்கின்றேன் என நடிகர் டி எஸ் பாலையா அப்போது விட்டுக் கொடுத்திருந்ததை மனதில் வைத்து, அந்த நன்றிக்காக எம் ஜி ஆர் தனக்கு வந்த "கற்பகம்" திரைப்படத்தில் அவரையும் நடிக்க வைக்க முயற்சித்து, அது நடக்காமல் போக, அந்த வாய்ப்பையே எம் ஜி ஆர் நிராகரித்திருக்கின்றார். கலையுலகில் டி எஸ் பாலையாவிற்கும், எம் ஜி ஆருக்கும் இருந்த நட்பின் ஆழம் எத்தகையது என்பதை தெளிவாகக் காட்டும் ஓர் நிகழ்வாகத்தான் நம்மால் காண முடிகின்றது.

எனக்கு உடனே ஆதாரமாக ஒரு சந்தேகம் வந்தது.  இருவரும் இணைந்து எத்தனை படத்தில் நடித்திருக்கிறார்கள்?  இருக்கவே இருக்கிறது சாட்ஜிபிடி..  கேட்டேன்.  அது சொன்ன பதில் :

மக்கள் திலகம் எம். ஜி. இராமச்சந்திரனும் (MGR), நடிப்புச் சக்கரவர்த்தி டி. எஸ். பாலையாவும் இணைந்து மொத்தம் 6 படங்களில் நடித்திருக்கிறார்கள். [1, 2, 3]
அவர்கள் இருவரும் இணைந்து நடித்த திரைப்படங்களின் பட்டியல் இதோ:
வ.எண்திரைப்படம்வெளியான ஆண்டு
1சதிலீலாவதி (இருவருக்குமே இதுதான் அறிமுகத் திரைப்படம்)1936
2ராஜகுமாரி1947
3மோகினி1948
4மதுரை வீரன்1956
5தாய்க்குப்பின் தாரம்1956
6பெற்றால்தான் பிள்ளையா1966
இவர்களில் 'சதிலீலாவதி' திரைப்படம் எம்.ஜி.ஆர், டி.எஸ். பாலையா மற்றும் என்.எஸ். கிருஷ்ணன் ஆகிய மூவருக்குமே திரையுலகில் முதல் படமாகும்.
============================================================================================

நாயகன் படத்தில் ஒரு ரசிக்கக் கூடிய காட்சி..


=================================================================================

வருடம் 1990.  படம் பொண்டாட்டி தேவை.  நடிகர்கள் பார்த்திபன் அஸ்வினி.  இயக்கம் பார்த்திபன்.  இசை இளையராஜா.  (இந்தப்) பாடல் கங்கை அமரன்.  பாடியவர்கள் அருண்மொழி சித்ரா.  இனிமையான பாடல்.  அருண்மொழிக்கு நல்ல இனிமையான குரல்.  ஏனோ அவர் பாடுவதைத் துறந்து புல்லாங்குழல் வாசிப்பதை மட்டுமே தொடர்கிறேன் என்று இருந்து விட்டார்.

ஆரீராராரோ பாட்டு பாட நானும்  தாய் இல்லை 


========================================================================================

படம் சூரசம்ஹாரம்.  கமல் நிரோஷா நடித்த படம்.   நம்ம 'சாய் வித் சித்ரா' புகழ் (!) சித்ரா லட்சுமணன் எழுதி இயக்கிய படம். இளையராஜா இசை.  அருண்மொழி குரலில் இன்னொரு பாடல்.  இன்னொரு பாடல் என்று இங்கு நான் சொன்னாலும் திரைப்படத்துக்கு அவர் பாடிய முதல் பாடல் இதுதான்.

நான் என்பது நீயல்லவோ தேவதேவி..  கங்கை அமரன் எழுதியிருக்கும் பாடல்.    சித்ராவுடன் இணைந்து பாடி இருக்கிறார்,


=====================================================================




()()()()()()()()()()()()()()()()()()

எதிரே வந்து நின்ற 
கடவுளை 
ஒதுக்கிக்கொண்டு
விரைகிறேன் கோவிலுக்கு

============================================================================

OTT யில் பார்த்த படம்  - அகதா - மூலம் தெலுங்கு - தமிழில் பார்க்க முடிந்தது 

த்ரில்லர், ஹாரர், மிஸ்ட்ரி என்றெல்லாம் போட்டு பார்க்க வைத்து விட்டார்கள்.  இப்போதெல்லாம் ஹாரர் என்று வரும் படங்களை பார்த்து பயமே வருவதில்லை.  அந்த வகையில் இதுவும்!  கிராமத்தில் ஒரு பெண் திடீரென அம்மன் அருள் பெற்று குறி சொல்வது, நன்மை செய்வது, பேய் பிடித்தவர்களைக் காப்பது என்று இருக்கிறாள்.  இளம்பெண்.  அவளை பேட்டி காண ஒரு யுவனும், யுவதியும் வருகிறார்கள்.  இமயமலையிலிருந்து ஒரு  முனிவர் திடீரென அங்கு தோன்றி, சக்திகளை உபதேசித்துச் செல்கிறார்.  அகதா என்று ஒரு கெட்ட சாத்தான்.  காளி தெரியாமல் அதற்கு சாகாவரம் கொடுத்து விட்டு,  அழிப்பது எப்படி என்று தெரியாமல் விழித்து, இந்தப் பெண்ணை உருவாக்கி கொஞ்சம் கொஞ்சமாக இவளுக்கு சக்திகள் கொடுத்து அழிக்க முயல்கிறாள்.  அகதாவை அழிக்க முடியாது, முடியவில்லை.  கடைசியில் கொஞ்சம் 'மாத்தி யோசிச்சு' காளி அகதாவை கட்டுப்படுத்துகிறாள்.  

இந்த மாத்தி யோசிச்ச டெக்னிக்கை மட்டும் ரசித்தேன்.  படத்தில் கதாநாயகன் என்று யாரும் இல்லை.  நாயகிதான், கதைதான்.

======================================================================================

இந்த ஓவியத்தில் புதுமை என்னவென்றால் மொபைலை அல்லது படத்தை எப்படித் திருப்புப் பார்த்தாலும் ஓவியம் மாறாது!



=======================================================================================







"அப்பா...  அவன் மூக்கு வேடிக்கையா இருக்குப்பா...

"ச்சீ அசடு..  அப்படி சொல்லக்கூடாது அவர் மூக்குன்னு சொல்லணும்"


56 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா.. வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம். 'அதிகாலை நேரமே... இனிதான ராகமே' என்று பாடி விடுவோம்!

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    இன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை இந்த வொய்ஜா போர்டு ஜீமாஞ்சி என்ற ஆங்கில படத்தை நினைவூட்டுகிறது. அதைதான் மனதில் வைத்து இந்தப்படங்களும் எடுக்கப்பட்டனவோ என்னவோ!!

    /ஒரே ஒரு மெழுகுவர்த்தி மட்டும் ஏற்றி வைத்து விட்டு மின் விளக்குகளை அணைத்துவிட்டு போர்ட் முன் உட்கார்ந்து அழைக்க வேண்டும். பொறுமையாக காத்திருக்க வேண்டும். அப்படி ஆவி வந்தால் சில அறிகுறிகள் தென்படும். சினிமாவில் காட்டுவது போல திரைசீலை அசையலாம். மெழுகுவர்த்தி தீபம் பெரிதாக ஆடலாம். ஆனால் அணையாது. அறையில் இருக்கும் ஏதாவது ஒரு பொருள் நழுவி கீழே விழுந்து திடுக்கிட வைக்கலாம்./

    இப்படி ஆவிகளின் உலகத்தை அங்கு கண்முன்னே காட்டும் சில காட்சிகளை பார்த்தால் அனைவரின் மனங்களும், அந்த இருளையும், அந்தப் பலகையில் வித்தைகள் காட்டுபவரையும் கண்டு பயங்கொள்ளத்தானே வைக்கும்.

    போர்டின் விபரங்கள் தெரிந்து கொண்டேன். அது பற்றி தொடரும் பகுதியும் சுவையாக உள்ளது அடுத்த வியாழன் வரை நாங்களும் பொறுமையாக காத்திருக்கிறோம். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கமலா அக்கா.  அங்கு அப்போது இருப்பவர்களின் மனசு திக்திக்கென்று இருந்திருக்கும் இல்லை?

      நீக்கு
  3. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    எபியின் மூத்த ஆசிரியர் திரு ராமன் அவர்கள் ஆரம்பித்த பகுதியும் சுவாரஸ்யமாக இருக்கிறது. மக்களுக்கு நேரம், காலம் உள்ள போதே பணம் ஈட்டிக் கொள்ள வேண்டுமென்ற ஒரு கால கட்(டத்தில்)டாயத்தில், நியாயம், நேர்மை என்பதெல்லாம், அர்த்தம் மாறி போய் விட்டன. எங்கும் பணம், எதிலும் பணம் என்பதே அனைவரின் மூலமந்திரமாகி விட்டது. ஒன்றும் சொல்வதற்கில்லை.

    கற்பகம் திரைப்படம் பற்றிய செய்தியை தெரிந்து கொண்டேன். மக்கள் திலகத்தின் நட்பு குறித்த செயல் அவர் நல்ல மனதை காட்டுகிறது. அவரும், டி. எஸ் பாலைய்யாவும் சேர்ந்து நடித்த திரைப்படங்களைப் பற்றி தெரிந்து கொண்டேன் பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. இன்று முதியோர் தினம், வொய்ஜாபோர்ட் தாத்தாவை நினைவு கூறுகிறது அவர் மறைத்து வைத்து விட்ட பணத்தைப்பற்றி அறிய தேடுகிறது.
    வெய்ஜாபோர்ட் பெயர் எப்படி வந்தது தெரிந்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்று முதியோர் தினம் மட்டுமல்ல, சர்வதேச காபி தினமும் கூட.  + சிவாஜி கணேசன் பிறந்த நாள்.

      நீக்கு
    2. ஆமாம், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பற்றி பள்ளியில் பேச்சு போட்டி எல்லாம் வைப்பதாய் படித்தேன்

      நீக்கு
  6. அனைவருக்கும் இனிய நாளுக்கான வாழ்த்துகள். சர்வதேச காப்பி தினம் கூடவா. !!! அடடே,. உயிர் கொடுக்கும் பானமாயிற்றே:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதைச் சொல்லுங்க... நல்ல காபிக்கு நம் நாக்கு அடிமை!

      நீக்கு
    2. காபி தினமா? பாட் காஸ்ட் தினம் என்று செய்தி பார்த்தேனே?

      நீக்கு
  7. கொஞ்சம் கொஞ்சமாகப் படிக்க வேண்டும். மிக நீண்ட பதிவு. திரு ராமன் அவர்களின் எண்ணங்கள் மனதை அசைக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்படியோ பொழுது போகட்டும்!!!!  மெதுவா படிங்க..

      நீக்கு
  8. எம் ஜி ஆர் பாலய்யா சினேகிதம் அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எம்.ஆர். ராதாவும், பாலையாவும் மிக நெருங்கிய நண்பர்கள் என்றும், ஸ்டுடியோவில் எல்லோரும் காத்திருக்க, அதைப் பற்றி கவலைப்படாமல் இவர்கள் இருவரும் குடிப்பது, சீட்டு விளையாடுவது என்று பொழுதை கழிப்பார்களாம்.
      பாலையாவின் இறுதி ஊர்வலத்தில், "டேய் பாலையா, என்னை விட்டுட்டு போயிட்டியேடா.." என்று வாய் விட்டு அரற்ரிக் கொண்டே சென்றாராம் ராதா.

      நீக்கு
    2. மேலதிகத் தகவல்கள். நன்றி பானு அக்கா.

      நீக்கு
  9. ஔஜா போரட் அருமை. நாங்களும் சோதனை செய்திருக்கிறோம்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லோருமே அந்தக் காலத்தில் விளையாடிப் பார்த்திருப்பார்கள்!

      நீக்கு
  10. ஆசிரியர்களில் மூத்த ராமன் அவர்கள் ஆரம்பித்த பகுதி நன்றாக இருக்கிறது.

    //முதலாவது என்னை சங்கடப்படுத்தும் ஒரு விஷயம் பொது வாழ்வில் நாணயத் தன்மை, நேர்மை குறைந்து போய் அதனால் ஏற்பட்டிருக்கிற பயங்கரமான பின் விளைவுகள். //

    எல்லாம் சரியாக நடக்க வேண்டும் என்று நினைப்பவர் அனைவரையும் சங்கடப்படுத்தும் ஒரு விஷயம் தான்.

    வருமான வரியை சரியாக கட்டுவதே பெரிய விஷயம்.

    பதிலளிநீக்கு
  11. டி எஸ் பாலையாவிற்கும், எம் ஜி ஆருக்கும் இடையில் உள்ள நட்பை தெரிந்து கொண்டேன்.
    நாயகன் காட்சி நெகிழ்ச்சி.
    கவிதை எதிரே வந்த கடவுளை ஒதுக்கி விட்டு கோயிலுக்கு போகும் கவிதை நன்றாக இருக்கிறது.
    எதிரே வரும் கடவுளை தெரிந்து கொள்வதே இல்லையோ நாம்.

    அகதா கதை நம் கடவுள்கள் கதை போலதான் போல, வரம் கொடுத்து விட்டு பின் அவதி படுவாரே கடவுள் அப்படி இருக்கிறது.

    நகைச்சுவை நன்றாக இருக்கிறது.




    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடவுளை விழுந்து விழுந்து கும்பிடும் பக்தன் கூட தனியாக எதிரில் கடவுள் வந்தால் பயந்து உளறிக்கொண்டு ஓடிவிடுவான்!

      நீக்கு
  12. //கடைசியில் கொஞ்சம் 'மாத்தி யோசிச்சு' காளி அகதாவை கட்டுப்படுத்துகிறாள். //

    என்ன முறையில் மாற்றி யோசித்தார் காளி நீங்கள் ரசிக்கும்படி.
    அழிக்கவில்லை, கட்டுப்படுத்துகிறாள் என தெரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  காளியேயாயினும் கொடுத்த வரத்தை எடுக்க முடியாது!

      நீக்கு
  13. பொது வாழ்வில் நாணயம்.... நாணயத்துக்கான அர்த்தமே கோடிகளைச் சுருட்டுவது என்றாகிவிட்டது. சமுதாயத்தில் எங்குமே நாணயமான நேர்மையானதன்மைக்கு மதிப்பில்லை என்றாகிவிட்டது. நல்லதைச் சொன்னால் சமுதாயத்துக்குத் தேவையில்லாத பூமர்கள் என்றாகிவிட்டது.

    இது எதனால் என்று யோசித்தால், மக்கள் சீரழிந்ததுதான் காரணம். குடிகார்ர்களாகப் போய், காசு கொடுத்தால் வாக்களிப்பேன், எனக்குப் பிடித்த கட்சி நேராக என் வீட்டில் திருடாதவரை, என் பெண் குழந்தைகளை ஒன்றும் செய்யாதவரை, எவ்வளவு அநியாயம் பண்ணினாலும் ஆதரிப்பேன், ஜாத மதம் பார்த்து வாக்களிப்பேன் என்ற சாக்கடை மனநிலைக்கு மக்கள் வந்தாகிவிட்ட பிறகு, பொதுவாழ்வுக்கு அயோக்கியர்கள்தாம் வருவர்.

    ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் நீதிபதிகள் கோடிக்கணக்காக சுருட்ட ஆரம்பித்தபின் நேர்மையாவது மண்ணாவது...

    பதிலளிநீக்கு
  14. ஒய்ஜா போர்ட் நாங்க சின்ன வயசில் அடிக்கடி உபயோகிப்போம். ஒரு அண்ணா அதில் உட்கார்ந்துப்பார். வீட்டில் உள்ளவங்களுக்கெல்லாம் கேட்போம். அதில் எனக்குப் படிப்பே வராது என்றும் மதுரையை விட்டு எங்கேயுமே போக மாட்டேன் என்றும் வந்தது. ஆனால் எல்லாம் உல்டாவாகவே நடந்தது. :)))) ஆகவே இதன் நம்பகத் தன்மை கேள்விக்குரியது.

    சொல்லுவதெல்லாம் உண்மை. மனசாட்சியத்தில் சொல்லுவது எல்லாமே உண்மை. எதை விடுவது? எதை மறுப்பது? திரு ராமன் சொல்லுவது போல் எனக்கும் சில சமயங்களில் பொதுவாழ்வில் நடப்பன சங்கடத்தையும், மன வருத்தத்தையும் தந்து கொண்டிருக்கு.

    ஸ்ரீராமுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விஷயம். கற்பகம் படம் எம்ஜிஆர் நடிக்க இருந்தது என்பது எனக்குத் தெரியாது. மேலும் அவர் பாலையாவுடன் நடிச்சிருக்கார் என்பதும் புது விஷயம். அந்தப் படங்களில் மதுரை வீரன் தவிர்த்து எதுவும் பார்க்கலைனு நினைக்கிறேன். மதுரை வீரன் பார்க்கையில் மீ த குழந்தை. ஆகவே ஒண்ணும் நினைவில் இல்லை. சுத்தம். பின்னால் தொலைக்காட்சியில் போட்டப்போப் பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம் சகோதரி

      தங்களின் கைபக்குவமாக வந்த திங்கள் பதிவில், என் பல் வலி குறித்து நீங்கள் தந்திருந்த கருத்தைப் படித்தேன். நான் எப்போதுமே மருத்துவரிடம் செல்ல தயங்கவேன் . ஆயுர்வேத மருந்துக்கள்தான் முடிந்தவரை எடுப்பேன். ஆயினும் ஒரு தடவை தாள முடியாத பல்வலிக்கு அலோபதி மருத்துவரிடம் சென்று அவரின் ஆலோசனைபடி ஆன்டிபயாடிக் மருந்துகள் எடுத்துக் கொண்டேன். இப்போதும் அப்படித்தான் செல்ல தூண்டின இப்போதைய பயங்கர வலிகள் எப்படியோ பொறுத்துக் கொண்டு வலிக்கு டோலோ (சென்ற தடவை சென்ற போதும் மருத்துவர் வலிக்கு அதைத்தான் பரிந்துரைத்தார்.) மாத்திரை எடுத்தபடி சமாளித்து விட்டேன். நேற்றிலிருந்து வலி இறைவன் அருளால் சற்று குறைந்துள்ளது. தங்கள் சொன்ன மருந்தையும் குறித்து வைத்துள்ளேன். தங்களின் அக்கறையான கருத்துக்கும், விசாரிப்புக்கும் மருந்து குறிப்புக்கும் மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    2. அதில் எனக்கு என்ன மகிழ்ச்சி கீதா அக்கா?!!    மதுரை வீரனில்தானே பாலையா ஒரு  கவுன் போட்டுக்கொண்டு வருவார்?

      நீக்கு
    3. கமலா ஹரிஹரன் வாழ்க வளமுடன்
      உங்கள் பல்வலி குறைந்து இருப்பது மகிழ்ச்சி.

      நீக்கு
    4. உங்கள் அக்கறையான கருத்துக்கு மிக்க நன்றி கோமதி அரசு சகோதரி. இப்போது குறைந்துள்ளது. ஆனால், இந்த வார இறுதி, , அடுத்த வார முடிவில் என ஒரு பயணங்கள் உள்ளது. அப்போது வலிகள் ஏதும் வராமல் இருக்க இறைவனிடம் பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன்.

      நீக்கு
  15. நாயகன் படமும் தொலைக்காட்சியில் பார்த்தது தான். நாங்க இரண்டாம் முறை நசிராபாத்/ராஜஸ்தான் போனப்போத் தொலைக்காட்சியில் போட்டாங்க. அப்போக் கேபிள் எல்லாம் இல்லை. ஆனால் மெட்ரோ உண்டு. மெட்ரோவில் நல்ல நல்ல சீரியல்கள் எல்லாம் வரும். ப்ரியா என்னும் பெண் மெட்ரோ ப்ரியா என்னும் பெயரில் நிகழ்ச்சி நடத்தி வந்தார். ரொம்பவே பிரபலம்.
    இரண்டு படங்களும் பார்த்ததும் இல்லை. பாடல்கள் கேட்டதும் இல்லை. அப்போவே பெரும்பாலான பத்திரிகைகள் சூர சம்ஹாரம் ஒரு மோசமான படம் என விமரிசனங்களில் எழுதி இருந்தன.
    உறவுக்கட்டு நிலைத்து நீடித்திருக்கப் பிரார்த்திப்போம். இப்போதைய சூழ்நிலையைப் பார்த்தால் குடும்ப அமைப்பே சிதறி வருகிறதே என்னும் கவலை வருது.
    ஆமாம், மனுஷங்க வந்தாலே கவனிக்க மாட்டோம். இதிலே கடவுளை எங்கேருந்து பார்க்கிறது?
    அகதா படம் அப்படி ஒண்ணும் பார்க்கணும்னு ஆவல் வரலை.
    மாறாத ஓவியம் நல்லா இருக்கு.

    நகைச்சுவைத் துணுக்குகள் ஓகே ரகம். ஆனால் அனுவின் கார்ட்டூனில் என்ன சொல்ல வருகிறார்னு புரியலியே.. வேர்க்க விறுவிறுக்க வந்தவங்க குளிர்பானம் சாப்பிடறாங்க. அப்புறமா? எனக்குப் புரிஞ்சுக்க முடியலைனு நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அகதா படம் பாருங்களேன்...   மொத ராத்திரியே பார்த்து விட்டீர்கள்!  அந்த ஜோக் என்னன்னு எனக்கும் புரியவில்லை!

      நீக்கு
    2. அதென்ன மொத ராத்திரியே பார்த்து விட்டீர்கள்?.. மொத ராத்திரி நல்ல படம்தான். நம் கிராமத்து மனிதர்கள் இன்னும் இப்படியே இருக்கிறார்களே என்பது கொஞ்சம் வருத்தம்தான்.

      நீக்கு
  16. வொய்ஜா போர்ட் பற்றி இங்கு முன்பும் பேசியது உண்டு என்ற நினைவு. என் அனுபவங்களையும் சொன்னதுண்டு. கருப்பு கலர் பத்தி புதிய விஷயம்.

    நாணயம், கே ஜி வொய் மாமா வின் பகுதி அவரது வருத்தம் போல் எனக்கும் உண்டு. நாணயம் என்பதில் அதன் பெயர் மதிப்பு மாறலாம் ஆனால் அப்போது அடித்தள பணியார்கள் வாங்கியதும் கிம்பளம் தான் சரியல்ல. இப்போது அதன் மதிப்பு கோடி அவ்வளவே. இப்போதும் அடித்தட்டு மனிதன் கோடிகளில் புரள்வதும் எல்லாம் ஒன்றுதன அக்காலம் இக்காலம் என்பதில் வேறுபாடு இல்லை. மக்களின் மனம்...ஆட்சியாளர்களின் சுயநலம். நேர்மை நாணயம் என்பது அடித்தட்டிலிருந்து வரவேண்டும். வீட்டிலேயே தொடங்குகிறது எனலாம் உளவியல் ரீதியாக.

    ஸ்ரீராம் வீடியோக்கள் பின்னர் வேலை செய்து கொண்டே கேட்கிறென். இப்போது கூட சாப்பிட்டுக் கொண்டேதான் இங்கு டைப்பிங். (ஸ்பூனால் சாப்பிடுவதால்!!)

    முதல் பாடல் கேட்டதில்லை. இரண்டாம் பாடல் கேட்டிருக்கிறேன் கல்யாணி ராகம். முதல் பாடலை பின்னர் கேட்கிறேன்.

    ஆரீராராரோ பாட்டு பாட நானும் தாய் இல்லை // பாடலின் வரி என்று தெரிகிறது...

    ஸ்ரீராம் நீங்க தாயாக இருக்க வேண்டும் என்றில்லை. தந்தையாகவும் (தாயுமானவனாக) பாடலாம், தாத்தாவாகவும் பாடலாம்!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா ரெங்கன்...   உங்கள் மீள்வரவு நல்வரவாகுக...   பெங்களுருவில் மோசமான கரண்ட் கட்டை சமாளிட்ர்ஹது வருகிறீர்கள்.

      // ஸ்ரீராம் நீங்க தாயாக இருக்க வேண்டும் என்றில்லை. தந்தையாகவும் (தாயுமானவனாக) பாடலாம், தாத்தாவாகவும் பாடலாம்!!!!!! //

      ஹா..  ஹா..  ஹா...  நன்றி.

      நீக்கு
  17. தொடர்ந்து வர இயலுமா என்பது சிரமம் என்றே தோன்றுகிறது, வாசித்துக் கருத்திடவே நிறைய நேரம் எடுக்கிறது.

    என் இயலாமைகள் - முன்பு போல் வேகமாக வேலைகள் செய்ய முடியவில்லை. இப்போது கடமையினால் எக்ஸ்ட்ரா வேலைகள் வேறு. வீட்டு வேலைக்கு உதவிக்கு ஆள் கிடையாது. நானேதானே..உதவிக்கான சூழலும் இல்லை. அடுத்த நாளைக்கான திட்டங்களும் இட வேண்டும். என்ன சமைப்பது என்பதிலிருந்து ..நான் ஸ்லோவாகிவிட்டதால். உடற்பயிற்சி மட்டுமே 1-1.15 மணி நேரம் + நடைப்பயிற்சி....ஃபிசியோ என்று செல்கிறது.

    இயலாமை 2- எனக்கு வாசிக்கவே நேரம் எடுக்கும் அதில் ஆழ்ந்துவிடுவதால்....ஸ்பீடாக வாசிக்க முடிவடில்லை. ஒரு வரி வாசிக்கும் போதே எண்ணங்கள் விரியும்...கருத்து இடுவதிலும் சும்மா என்னால் நகர்ந்து செல்ல இயலவில்லை. அதுவும் மனதில் எழும் கருத்துகள் எல்லாம் இட வேண்டும் என்று நினைப்பேன். இப்பவே பாருங்க வந்தா இப்படித்தான்....ஹிஹிஹி!!! இது ட்ரயல் என்னால் சமாளிக்க முடிகிறதா என்று பார்க்க....எனவே தொடர்ந்து வருவதில் சிரமம் இருக்கலாம். வந்தால் மற்ற பதிவுகளுக்கும் போக வேண்டும். எனக்கும் வர ஆசைதான்...எழுதவும் இருக்கின்றன ஆனால் முடிவதில்லை. முயற்சி செய்கிறேன் ஆனால் .....ப்ளீஸ் குறையாக எடுத்துக்காதீங்க யாரும்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன் சகோதரி

      நலமா.? தங்களின் உடல் உபாதைகள் பற்றி முழுதாக நான் அறியவில்லையெனினும், இப்போது கை வலி எப்படி உள்ளது.? கை வலிகளுக்கு பிஸியோதெரபி சிகிச்சை என கேள்விப்பட்டேன். இப்போது எப்படியிருக்கிறீர்கள்? தங்களின் இன்றைய வரவு கண்டு மகிழ்கிறேன் சகோதரி.தங்களால் தொடர்ந்து வர இயலவில்லையென்றாலும் , அவ்வப்போது வாருங்கள்.நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    2. கீ ரெ விரைவில் பூரண நலம் அடைய பிரார்த்தனைகள்.

      நீக்கு
    3. நலமாகி வருக, சீக்கிரம்!

      நீக்கு
    4. நாமே எல்லோருக்கும் சொல்லி இருக்கிறோம் கீதா..  வலைப்பக்கம் வந்து செல்வது கூட ஒரு மனமாறுதல்தான்.  முடிந்தபோதெல்லாம் வாங்க..

      நீக்கு
  18. இன்றைய பகிர்வு பல தகவல்களையும் தருகிறது.

    பாடல் முதலாவது கேட்டதில்லை இப்பொழுதுதான் கேட்டேன். இனிய குரல். இரண்டாவது பாடல் கேட்டிருக்கிறேன் இனிமை.

    திரு. ராமன் அவர்கள் பகுதி நன்று தொடர்கிறோம்.

    ஜோக்ஸ் ரசனையாக இருந்தது.
    ஏ.சி பூட்டியும் ...வெப்பம்...ஹா...ஹா.

    மொபைல் ஓவியம் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  19. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாடல்கள் இரண்டும் நன்றாக இருந்தன. முதல் பாடல் கேட்டதில்லை .இரண்டாவது அடிக்கடி கேட்டுள்ளேன்.

    மொபைலில் திருப்பும் (எந்த பக்கம் பார்த்தாலும் ஒரே மாதிரியாக வரும் ஓவியம்) ஓவியங்கள் நன்று.

    நாயகன் படம் தொலை காட்சியில் பார்த்துள்ளேன். இந்த ஸீன் நினைவில் இல்லை. பார்க்கிறேன். ஜோக்ஸ் அனைத்தும் நன்றாக இருந்தது. ரசித்தேன். டயலாக் எதுவும் இல்லாத அந்த ஜோக் எனக்கும் புரியவில்லை. அதில் இன்னமும் ஒரு பட காடசி விடுபட்டு இருக்கிறதோ.? பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் பாடலில் அருண்மொழி பாட வரும்போது மிக நன்றாய் இருக்கும்.

      // அதில் இன்னமும் ஒரு பட காடசி விடுபட்டு இருக்கிறதோ.?  //

      அப்படியா சொல்கிறீர்கள்?  இல்லையே..  பார்த்துதான் போட்டோ எடுத்தேன்..

      நீக்கு
  20. புதிய பகுதிக்கு ஒரு ‘வெல்கம்’! தொடர்ந்து எழுதுங்கள்.

    ’அந்தமாதிரியெல்லாம்’ சம்பாதிக்காவிட்டால், சொத்து ‘சேர்க்க’த் தெரியாவிட்டால், அதை, பதவியில்/போஸ்ட்டில் இருப்பவரின் தகுதிக் குறைவுபோல் பார்க்கிறது இன்றைய சமூகம். அந்தப் போஸ்ட்டிற்கே இவன் லாயக்கில்லை என வெளிப்படையாகப் பேசுகிறது.. ’ந லாயக்’ என்பார்கள் வடநாட்டில், கேலியாக.

    தற்போதைய சமூக அவலத்திற்கு, சீரழிவிற்கு இதைவிடவும் உதாரணங்கள் சொல்லிச் செல்லலாம்தான்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஏகாந்தன் ஸார்.. புதிய பகுதி தொடர்ந்து வரும் என்று சொல்லி இருக்கிறார்.

      நீக்கு
  21. வியாழன் கதம்பம் நல்ல வாசம்!.
    18 மாதங்கள் கனடாவில் இருந்து விட்டு தாயகம் திரும்பி விட்டேன். சென்ற வாரம் அதனால்தான் எ.பி. பக்கம் வர இயலவில்லை. அங்கிருக்கும் பொழுது, அந்த ஊரின் புதன் இரவே வியாழன் பதிவு வந்து விடும். அதனால் கொஞ்சம் சீக்கிரமாக கருத்திட முடிந்தது. இனிமேல் இயலாது.
    நேற்றிலிருந்து கடுமையான ஜலதோஷம், தலைவலி, லேசான காய்ச்சல். மாத்திரை போட்டுக் கொண்டு, ஓய்வு எடுத்துக் கொண்டு எ.பி.க்கு வந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பானு, வாழ்க வளமுடன்
      உடம்பை பார்த்து கொள்ளுங்கள். ஓய்வு எடுங்க

      நீக்கு
    2. நன்றி கோமதி அக்கா __/\__

      நீக்கு
  22. கீதாரெங்கன் வாழ்க வளமுடன்
    நீங்கள் விரைவில் நலம் பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.
    இன்று உங்களை இங்கு பார்த்தது மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  23. கடவுளை விழுந்து விழுந்து கும்பிடும் பக்தன் கூட தனியாக எதிரில் கடவுள் வந்தால் பயந்து உளறிக்கொண்டு ஓடிவிடுவான்!//

    பக்தன் பயப்படுவதை, உளறி, அலறி ஓடுவதை அவன் விரும்புவதில்லை. அதனால்தான் எதிரில் தென்படுவதில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸூப்பர் ஏகாந்தன் ஸார்...  உண்மைதான் போல..

      நீக்கு

பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!