10.9.26

இந்த ரணகளத்திலும்..

 

எல்லா மருத்துவமனைகளும் அப்படித்தானா, இல்லை ராமச்சந்திரா மட்டும்தான் இப்படியா என்று தெரியாது.  உடல்நிலை சரியில்லை என்று போனாலோ. ரெவியூ என்று போனாலோ முக்கால் நாள் அதிலேயே சென்று விடுகிறது.

மாமியாருக்கு ஒரு ஈ ஸி ஜி,  ஸ்க்ரீனிங் எக்கோ எடுக்கச் சொல்லி ரெவியூவில் டாக்டர் சொல்லி விட்டார். ஈ சி ஜி சுலபமாக எடுத்தாயிற்று.  உபகரணங்கள் தட்டுப்பாடா, அல்லது ஆட்கள் தட்டுப்பாடா தெரியவில்லை, எக்கோவுக்கு  மூன்றரை மணி நேரம் காத்துக் கொண்டிருக்க வேண்டியதாயிற்று.  கதவைத் திறந்து பார்த்தால் அங்கு நான்கைந்து பெண் ஊழியர்கள் அரட்டை அடித்துக் கொண்டு, ஒரு பெண் தோளில் இன்னொரு பெண் முகம் வைத்து பேசிக் கொண்டிருந்தது எரிச்சலை ஊட்டியது.

டாக்டரும் பாவம்தான்.   மேலே அறுவை சிகிச்சையை கவனித்துக் கொண்டே,  உள்நோயாளிகளை விசாரித்துக் கொண்டு, கீழே வந்து புதிய நோயாளிகளை, மற்றும்  ரெவியூ காரர்களையும் கவனிக்க வேண்டும்.  நாங்கள் பார்த்த டாக்டரிடம்தான் கூட்டம் இருந்தது.

இப்படி காத்திருந்தபோது எதிரே இருந்த பெரிய மேஜையை கவனித்தேன்.  அங்கு Reception என்ற ஆங்கில வார்த்தைக்கு கீழே "வரவேற்ப்பு" என்று எழுதி இருந்தது. "ஆஹா...  FaceBook க்கு ஒரு கன்டென்ட் கிடைத்தது என்று போட்டோ எடுத்துத் தயாரானேன்.  



கொஞ்ச நேரம் கழித்து யாரும் இல்லாத வேளையில் அங்கு அமர்ந்திருந்த பெண்ணிடம் சென்று "Reception ங்கற ஆங்கில வார்த்தைக்கு கீழே தமிழ்ல எழுதி இருக்கீங்களே.." ன்னு தொடங்கினேன்.

"ஆமாம்.  தப்பா இருக்கு? என்றார் அவர்.

"தெரிஞ்சுமா அப்படியே விட்டுருக்கீங்க...  போன தடவையே பார்த்தேன்.  இந்த தடவை சரியாயிருக்கும்னு நினச்சேன்" னு ஒரு பொய்யைச் சேர்த்துச் சொன்னேன்.

"சரி செய்யணும் ஸார்..   போர்டே மாற்றணும்னு எழுதி கொடுத்திருக்கோம்" என்றார்.

"அதுவரைக்கும் வரவேற்ப்புதானா?  பாவம் தமிழ்" என்று சிரித்தபடி சொல்லி விட்டு வந்து அமர்ந்து கொண்டேன்.

அவருக்கு இருப்பு கொள்ளவில்லை போலும்.  எழுந்து வந்து பார்த்தார்.  அப்புறம் ஒரு பிளாஸ்டர் எடுத்து வந்து அளவு பார்த்து, வெட்டி, ஒட்டி முதலில் 'ப்' பை மறைத்தார்.  அப்புறம் யாரிடமோ சொன்னார்.  ஒரு இன்சார்ஜ் பெண்மணி வந்து பார்த்தார்.  இரண்டு செக்யூரிட்டிகளும் கூட நின்றார்கள்.  "இப்பவே போர்டை மாத்துன்னா எப்படி முடியும்?" என்று அலுத்துக் கொண்டார் வந்திருந்த பெண்மணி.

"எழுதும்போது யாரும் வாட்ச் பண்ண மாட்டீர்களா?" என்று எ தீ எ ஊற்றினேன்,  உட்கார்ந்திருந்த இடத்திலிருந்தே.  ஒரு செக்யூரிட்டி என்னைத் திரும்பிப் பார்த்து சோகையாக புன்னகைத்தார்.
அப்புறம் கொஞ்ச நேரம் கழித்துப் பார்த்தபோது' பு' வை பேப்பர் ஒட்டி மறைத்து 'ப்' பை கீழே நீட்டி 'பு' வாக்க முயற்சித்திருந்தார்கள். 




மறுபடியும் கூட்டமில்லாத ஒரு தருணத்தில் அந்தப் பெண்மணியிடம் சென்று "என்னை திட்டலையே? " என்று கேட்டேன்.

"சேச்சே...  உண்மையில் உங்களுக்கு நன்றிதான் சொல்லணும்" என்றார்.
அடுத்த வெள்ளி மறுபடி  செல்ல வேண்டும்.  பார்த்துச் சொல்கிறேன்!

=====================================================================================

1978 ல் வெளியான 'உறவுகள் என்றும் வாழ்க' படத்தில் முத்துராமன் ஸ்ரீவித்யா நடித்திருந்தனர்.  படத்தில் மூன்றே பாடல்கள்.  இரண்டு SPB.  ஒரு பாடல் முன்னரே பகிர்ந்திருக்கிறேன்.  இன்று இன்னொரு பாடல்.  "நானூறு பூக்கள்  மெருகேற்றும் மங்கை'.  பாடல் வாலி.  இசை சங்கர் கணேஷ்.  பாடல் SPB.  பாடல் முழுவதும் அவர் குரல் ஜாலம்தான்.

ஹிப்பி முத்துராமன்.


=======================================================================================

வாலியின் பாடல்.  சங்கர் கணேஷ்இசை.  SPB again!  கமல் ஸ்ரீப்ரியா.  பட்டிக்காட்டு ராஜா 1975 ல் வந்த திரைப்படம்.


======================================================================================

எம்.ஆர். ராதா பேசுகிறார்!


இதற்கு முன் இங்கும்இங்கும் வந்த பகுதிகளின் தொடச்சி.


மக்கள் என்னைக் கல்லால் அடித்தார்கள்; அதே மக்கள் இன்னொரு காலத்தில் மலர் மாலைகளால் என்னை வரவேற்று என் நாடகக் கருத்துக்களையெல்லாம் ஏற்றார்கள். இடையில் மாறுபட்டது காலம் தான்; நானோ, என் கருத்தோ அல்ல."

"சிறையில் இருந்தபோது நீங்கள் சிந்தித்தவற்றைப் பற்றி...."

"எத்தனையோ சொல்ல வேண்டும். இந்த வாரம் தானே ஆரம்பிச்சிருக்கோம். வாராவாரம் சொல்றப்போ அதெல்லாம் தானாவே வரும்." 

 உங்க 'ஹிஸ்டரி'யை எழுதணும்னு ஆரம்பிச்சோம்;  அது     கலை   உலக ஹிஸ்ட்ரியாயில்லே   பொதுவா போய்க்கிட்டிருக்கு?"

"ரெண்டும் ஒண்ணுதான்; என் ஹிஸ்ட்ரி கலை உலக ஹிஸ்ட்ரி; கலை உலக ஹிஸ்ட்ரி என் ஹிஸ்ட்ரி!" 

என்று முடிந்திருந்தது கடைசியில்.  அதன் தொடர்ச்சி...
==============

"எல்லாக் கலைஞர்களுக்கும் பிறந்த ஊர் என்று ஒன்று தனியாக இருக்குமே, அந்த மாதிரி உங்களுக்கு எந்த ஊரும் கிடையாதா?"

"இல்லை; நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே 'மெட்ராஸில்தான். 'எம்.ஆர்.ராதா'ன்னா 'மெட்ராஸ் ராஜகோபால் நாயுடு மகன் ராதா'ன்னு அர்த்தம். 'அப்பா மட்டுமில்லே, என் தாத்தாவும் இங்கேயேதான் பிறந்து வளர்ந்தார். அவர் மூர் மார்க்கெட்டில் 'ஆக்கர் கடை' வைத்திருந்தார். மூர் மார்க்கெட்டுன்னா இப்போ இருக்கிற மூர் மார்க்கெட்டைச் சொல்லலே, பழைய மூர் மார்க்கெட்டைச் சொல்றேன். அது பத்தி எரிஞ்சிப் போச்சு.
இப்போ இருக்கிறது புதுசாக் கட்டியது."

"ஆக்கர் கடை யென்றால்....?"

"பழைய சாமான்களை வாங்கி விற்கிறது... அப்போ மெட்ராஸிலே எங்கே பார்த்தாலும் வெள்ளைக்காரனுக இருப்பானுக, அவனுக புதுசு புதுசா ஏதாவது வாங்கிக்கிட்டே இருப்பானுக. அப்படி வாங்கறப்போல்லாம்
பழைய சாமான்களை வந்த விலைக்குக் கொடுத்துடுவானுக. அதை வாங்கி விற்கிறது.... தமிழனா, வீடே குப்பைத் தொட்டியானாலும் சரி, எந்த சாமானையும் வெளியே விட மாட்டேன்னு வெச்சிக்கிட்டிருக்க?"

"உங்கள் தகப்பனார் என்ன வேலை செய்து கொண்டிருந்தார்?"

"கௌரவமாச் சொல்றதாயிருந்தா யுத்த சேவை செஞ்சிக்கிட்டிருந்தார்னு சொல்லணும்.... நான் அப்படிச் சொல்ல மாட்டேன். மனுஷனுக்கு வேறே வேலை கெடைக்கலை; பட்டாளத்திலே சேர்ந்துட்டார். அதுதான் பேக்ட்!"

"அதற்கும் ஒரு வீரம் இருக்க வேண்டுமே?"

"தமிழனைப் பொறுத்த வரையிலே எந்த வீரமும் சோறில்லாமப் போனாத்தான் வரும்!"

"கரெக்டாச் சொன்னீங்க, அப்புறம்?"

"அப்புறம் என்ன? ரஷ்ய எல்லையிலே, பஸ்ஸோவியா என்ற இடத்திலே அவர் வீர மரணம் அடைஞ்சிட்டார்னு எங்களுக்குச் சேதி வந்தது. அதோடு அவர் சேப்டர் க்ளோஸ். அவர் 'வார்' சமயத்திலே வாங்கிய மெடல்களை மட்டும் நான் இன்னும் பத்திரமா வெச்சிக்கிட்டிருக்கேன்."

"அவர் இறந்த பிறகு தான் உங்களைக் கொண்டு போய் நாடகக் கம்பெனியிலே விட்டார்களா?"

"இல்லை; முதல்லே என்னை யாரும் கொண்டு போய் விடலே, நானாத்தான் போனேன். போனேன்னா, நேரா நாடகக் கம்பெனிக்குப் போயிடலே...."

"வேறு எங்கே போனீர்கள்?"

வீட்டிலே படிக்கிறவனுக்கும் படிக்காதவனுக்கும் வித்தியாசம் காட்டினாக...." 

"அது என்ன வித்தியாசம்?"

"சொல்றேன்; என் அண்ணன ஜானகிராமன நல்லாப் படிப்பான; அவனுக்கு எங்க அம்மா ரெண்டு மீன் வைப்பாக. நானும் என் தம்பி பாப்பாவும் படிக்க மாட்டோம். அதுக்காக எங்களுக்கு ஒரே ஒரு மீன் வைப்பாக. இந்த வித்தியாசத்தை ஒரு நாள் என்னாலே பொறுக்க முடியாமப் போச்சு; 'எனக்கும் ரெண்டு மீன் வச்சாத்தான் ஆச்சு'ன்னு அடம் பிடிச்சேன். 'ஊரைச் சுத்தற பயலுக்கு ஒண்ணு போதாதா?'ன்னு அம்மா என் தட்டிலே ரெண்டு வைக்கிறதுக்குப் பதிலா முதுகிலே ரெண்டு வெச்சாக. அவ்வளவு தான்; எழுந்து நடந்துட்டேன்."

"எங்கே?"

"எழும்பூர் ஸ்டேஷனுக்கு. அப்போ எனக்கு ஏழெட்டு வயசுதான் இருக்கும்; அங்கே போனப் புறம்தான் ஏங்கே போறதுன்னு எனக்கு ஒண்ணும் புரியலே. பிளாட்பாரத்தைச் சுத்திச் சுத்தி வந்துக்கிட்டிருந்தேன். 'ஏலே பயலே, இங்கே வாடான்'னு ஒரு குரல் கேட்டது; திரும்பிப் பார்த்தேன். கனத்த பெட்டியுடன் என்னை நோக்கி வந்துகிட்டிருந்த ஒருவர், 'இதை எடுத்துக்கிட்டு வா'ன்னு என்கிட்டே பெட்டியைக் கொடுத்தார். அப்போல்லாம் 'போர்ட்டர்'னு யாரும் தனியா கிடையாது; என் மாதிரி பொடிப் பயலுகதான் அந்த வேலையையும் செய்துக்கிட்டிருந்தானுக. 

நான் பெட்டியைத் தூக்கிக்கிட்டுப் போய் அவர் வைக்கச் சொன்ன இடத்திலே வெச்சேன். அவர் காலணாவை எடுத்து என் கையிலே கொடுத்துட்டு, 'உன் பேரு என்னடா?'ன்னு கேட்டார்; 'ராதா'ன்னேன். 'அப்பா, அம்மால்லாம் இருக்காங்களா?'ன்னார்; 'ஒருத்தரும் இல்லே'ன்னு சொல்லி வெச்சேன். 'அப்படின்னா என் டிராமா கம்பெனியிலே சேர்ந்துடறியா ? நான் தான் ஆலந்தூர் டப்பி ரங்கசாமி நாயுடு எங்கிறவரு; கேள்விப்பட்டிருப்பியே?'ன்னார்; 'நல்லாக் கேள்விப்பட்டிருக்கேன்; சேர்ந்துடறேன்'னேன். 'சரி, ஏறு வண்டியிலே'ன்னார்; 'டிக்கெட் வாங்கலையான் ?'னேன். 'அதெல்லாம் ஒண்ணும் வாணாம்; 'சும்மா ஏறு 'ன்னு அவர் என்னை வண்டியிலே ஏத்திவிட்டு, ஒரு பெஞ்சுக்குக் கீழே பதுங்கி உட்கார்ந்துக்கச் சொன்னார். நான் அப்படியே உட்கார்ந்துக்கிட்டேன். அவர் ஒரு படுக்கை விரிப்பை எடுத்து பெஞ்சியின் மேல் போட்டு, என்னை மறைக்கும் அளவுக்கு அதைக் கீழே தொங்கவிட்டு, அதுக்கு மேலே அவர் உட்கார்ந்துட்டார்..."

"அதாவது, டிராமாவிலே எப்படி நடிக்கவேண்டும் என்று சொல்லிக் கொடுப்பதற்கு முன்னால் ரயிலில் டிக்கெட் இல்லாமல் எப்படிப் பிரயாணம் செய்வது என்பதை அவர் உங்களுக்குச் சொல்லிக் கொடுத்துவிட்டார்!"

"இவருடைய கண்ணியம் தான் இப்படி இருந்ததுன்னா, அந்த நாள் ஸ்டேஷன் மாஸ்டர்கள் கடமை எப்படி இருந்தது, தெரியுமா? இதை விட வேடிக்கையாயிருந்தது. சிதம்பரம் ஸ்டேஷன்லே பெட்டியோடு பெட்டியா நாயுடு என்னையும் இறக்கி விட்டார். பெட்டியைத் தூக்கி என் தலையிலே வெச்சுட்டு அவர் முன்னால் நடந்தார். ஒரு பய டிக்கெட் கேட்கணுமே? மூச்! எல்லாரும் 'சல்யூட்' அடிச்சி எங்களை வெளியே விடறானுக. விஷயம் என்னடான்னா, நாயுடு வசூலாகாத நாடகமாப் பார்த்து அவனுகளுக்கெல்லாம் 'ஓசிப் பாஸ்' கொடுப்பாராம்."

"இந்த உலகமே ஒரு திறந்த புத்தகம் என்று சொல்வார்கள். அதை நீங்கள் அப்போதுதான் படிக்க ஆரம்பித்தீர்கள் போல் இருக்கிறது!"

"ஆமாம், அதைவிட நல்ல புத்தகம் இல்லேங்கிறது இப்போ என் கருத்து."

"டிராமாவிலே உங்களுக்கு என்ன வேஷம் கிடைத்தது?"

"அரிச்சந்திரனிலே லோகிதாசனா வந்து 'அம்மா பசிக்குது, அப்பா பசிக்குது'ன்னு. அழற வேஷம்; நல்லதங்காளிலே ஏழு பிள்ளைகளிலே ஒருத்தனா வந்து கிணத்திலே விழுந்து சாகற வேஷம்; கிருஷ்ண லீலாவிலே நச்சுப் பால் கொடுக்க வரும் பூதகியைக் கொல்ற பாலகிருஷ்ணன் வேஷம். இந்த வேஷங்களோடு அப்பப்போ ஸ்டேஜுக்கு வந்து சர்க்கஸ் டான்ஸும் ஆடணும்..."

"அது என்ன சர்க்கஸ் டான்ஸ்?"

"அந்த நாள் நாடக மேடையிலே சதிராட்டமோ, ஓரியண்டல் டான்ஸுகளோ கிடையாது. என் வயசுப் பையன்களை வரிசையா ஒருத்தன் மேலே ஒருத்தனா கோபுரம் மாதிரி காலை அகட்டி நிற்க வைப்பானுக. இங்கிலீஷ் பாண்டு மியூசிக்குக்கு ஏத்தாப்போல நாங்க காலையும் கையையும் அசைச்சி ஆடணும். அதுதான் சர்க்கஸ் டான்ஸ்!"

'தவறி விழுந்தால் முட்டி உடைந்து விடும் போலிருக்கிறதே?"
"அப்படியும் உடையலேன்னா கம்பெனிக்காரனுக உடைச்சிடுவானுக!"

"ரொம்ப மோசமான வாழ்க்கையாக இருந்திருக்கும் போலிருக்கிறதே...?"

"எங்கேயோ அடிமை வாழ்க்கை இருந்ததாச் சொல்றாகளே, அந்த வாழ்க்கை அங்கே இருந்தது!"

"அப்புறம்?"

"ராஜா வேஷம், மந்திரி வேஷம் போடறவனுக வீட்டு வேலையிலிருந்து கம்பெனி வேலை வரையிலே நாங்கதான் செய்யணும். பொழுது விடிஞ்சதும் வீட்டிலே இவனுக உடம்பைப் பிடிச்சி, எண்ணெய் தேய்ச்சிக் குளிப்பாட்டி விடுவாக; சூப் வெச்சிக் கொடுப்பாக. ராத்திரி டிராமாவிலே அத்தனை கஷ்டப்பட்டு இவனுக நடிச்சிட்டு வந்திருக்கானுகளாம். 'என்ன கஷ்டம்?'னு கேட்கிறீங்களா? சொல்றேன்: ‘மந்திரி, மாதம் மும்மாரி பெய்ததா?'ம்பான் ராஜா; 'பெய்தது, அரசே 'ம்பான் மந்திரி. 'ஆகம விதிப்படி ஆலயங்களிலெல்லாம் ஆறு கால பூஜை நடக்கிறதா?'ம்பான் ராஜா; 'நடக்கிறது அரசே 'ம்பான் மந்திரி. இதுதான் இவனுக நடிச்சிக் கிழிக்கிற நடிப்பு. இதுக்குப் பொழுது விடிஞ்சதும் இவனுகளுக்கு உடம்புப்பிடி, எண்ணெய்க் குளிப்பு, சூப்பு எல்லாம். எங்களுக்கு?-இவனுக தின்னு மீந்தாத்தான் சோறு. இல்லேன்னா, காலையிலே இவனுக கொடுக்கிற காலணாவிலே ரெண்டு தம்பிடிக்கு ஆப்பம், ஒரு தம்பிடிக்குக் காப்பி வாங்கிக் குடிக்கிறோமே, அதோடு சரி!"

"கைச்செலவுக்கு ஏதாவது வேண்டுமானால்....?"

"கடவுள் கொடுப்பார்!"

"கடவுளா?"

"ஆமாம், ராத்திரி, டிராமா முடிஞ்சதும் பெரிய நடிகனுக எல்லாம் நல்லாக் குடிச்சிட்டு நாடகக் கொட்டாவுக்குப் பின்னாலே இருக்கிற மணல் தரையிலே படுத்துப் புரளுவானுக. பொழுது விடிஞ்சப்புறம்தான் எழுந்து வீட்டுக்குப் போவானுக.  இவனுக போனதும் நாங்க மணல்லே கையை விட்டுத் துழாவிப் பாப்போம்.  காலணா, அரையணா, ஓரணா, ரெண்டணாக்கூடக் கிடைக்கும். குடி வெறியிலே இவனுங்களுக்குத் தெரியாம மணல்லே விழுந்து புதையற காசுதான் அத்தனையும்!"..........................  தொடரும்.

==============================================================================

நம்மைப்பற்றி நாலுபேர் 
நல்லவிதமாகத்தான்
நினைக்கிறார்கள் என்பது 
ஒரு 
பாதுகாப்பான நம்பிக்கை 
பாதுகாப்பு 
நம் மனதுக்கு 

********************

மற்றவர்கள் வேலையாக 
இருக்கும்போது 
நான் பேசுவதைக் 
கேட்பதில்லை 
என் மனம் வேலையாக இருக்கும்போது 
நானும் 
மற்றவர்களுடன் பேசுவதில்லை 
போட்டிக்கு போட்டி! 
விளைவு ?
மௌனம்தான் எப்போதும் 

===============================================================================

செய்தித்துளி!!


========================================================================================



குமுதமா?
ஓவியம் என்றால் ராமு தெரியும். ஜெ.. தெரியும். வர்ணம் தெரியும். லதா தெரியும். மாருதி தெரியும். மணியம் செல்வன் கூட குமுதத்தில் வரைந்திருக்கிறாரோ... அதே போல கோபுலு குமுதத்தில் படம் வரைந்திருக்கிறாரா என்று நினைவில்லை. சில புதிய ஓவியர்கள் அரஸ், மனோ, திலகா என்று விகடனில் அறிமுகம் ஆவார்கள்.
இதோ.. 77 ஆம் வருஷத்து குமுதத்தில் மோகன் என்றொரு ஓவியர்..
எனக்கு நினைவில்லை.
புதுசு.
உங்களுக்கு?
- ஓவியர் நினைவில்லை. ஆனால் ஒன்றுக்குள் ஒன்றாக 3 படங்கள் என்பது அப்போது எனக்கு புதுசு. அதனால் இந்தப் படம் நினைவிருக்கிறது.  டாக்டர் வாசுதேவன் திருமூர்த்தி 

================================================================================================




===============================






==========================================================================================

சிவாஜியிடம் பேசும் ராதா சுஹாசினி சுபாஷினி...


==========================================================================================

இது பார்த்திருக்கிறீர்களா?  கேட்டிருக்கிறீர்களா?

Before judging another civilisation, confront your own history. An Indian speaker delivered a powerful reminder to a US audience: America and Europe, too, have difficult chapters in their history - including conquest, colonialism, violence, and the displacement and destruction suffered by Indigenous communities.

32 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா அக்கா... . வாங்க... பிரார்த்திப்போம்.

      நீக்கு
  2. ரண களத்திலும் கிளுகிளுப்பு எல்லாருக்கும் வாய்ப்பது இல்லை...

    பதிலளிநீக்கு
  3. சிவாஜி கணேசனின் உண்மையான நல்ல குணம் அவரது அடக்கமான பேச்சில் நன்கு வெளிப்படுகிறது. சுவாரசியமாக இருந்தது. நல்ல மனிதர்.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    என்ன இது.? இன்று 7.53 வரை "வரவேற்ப்பு" பலமாக இருந்தும் யாரையும் காணோமே என நினைத்தபடி வந்தேன்.(நானே தாமதந்தான்.) "வரவேற்ப்பு" சுவாரஸ்யமாக இருந்தது சில சமயங்களில் இப்படி சறுக்கல்கள் நிகழ்வது இயல்புதான். . ஆனால், எல்லோரும் பார்க்கும்படியான பொது இடத்தில், அதிலும் தமிழ் நாட்டில் உறுத்தலாகத்தான் இருக்கும்.

    தங்கள் மாமியார் உடல்நலம் இப்போது எப்படி உள்ளது.? சில மதிவுகளில் வந்த உங்கள் கருத்துக்களின் மூலமாக அவருக்கு உடல் நலமில்லை என தெரிந்து கொண்டேன். இன்று நீங்களும் குறிப்பிட்டிருக்கிறீர்கள். இப்போது நலமாகி உள்ளாரா? அவர் பூரணமாக உடல்நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்.🙏 பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வரவேற்பை வைத்தே வார்த்தைகளில் விளையாடி விட்டீர்களே...  இப்போதெல்லாம் அப்படிதான் கமலா அக்கா..  கீதா ரெங்கன் வேறு வேளையில் பிஸி.  கீதா அக்கா இந்திய நேரம் பத்து மணிக்கு மேல்தான் வருவார்.  JKC மறைந்து விட்டார்.  ஜீவி ஸார் எப்போதாவது வந்து மாறுதல் மாறுதல் என்பார்.நெல்லை காலையே பார்த்து விட்டாலும் புதன் பதிவுகள் அளவு ஆர்வம் காட்ட மாட்டார்.  கோமதி அக்கா இந்திய நேரம் இரவில்தான் வருவார்.  எனவே பறவைகள் பரந்த மரமாய் காத்திருக்கிறேன் நானும்.

      நீக்கு
    2. மாமியார் படிப்படியாக தேறி வருகிறார்.

      நீக்கு
    3. பா.வெ. என்று ஒருவர் உண்டு என்பதை எப்போதும் மறந்து விடுகிறீர்கள். ஹூம்!

      நீக்கு
    4. கிளைகளில் இலைகள் அடர்ந்து பரந்த மரமா? பறவைகள் உற்சாகமாக அமர்ந்திருந்து இப்போது அவைகள் பறந்த மரமா.? தங்களுடையது நல்ல சிலேடையான கருத்து.

      நீக்கு
    5. // பா.வெ. என்று ஒருவர் உண்டு என்பதை எப்போதும் மறந்து விடுகிறீர்கள். ஹூம்!//

      உங்களை நேரத்துக்கு வருபவர்கள் லிஸ்ட்டில் வைத்தேன். தப்பா?

      நீக்கு
    6. கமலா அக்கா..  கூகுளின் எழுத்துப்பிழை மற்றும் என் அஜாக்கிரதை சிலேடையாகி விட்டது!!

      நீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    இன்றைய கவிதை நன்றாக உள்ளது. முதல் கவிதைக்கு ஜோக்கில், சட்டையில் இங்க் உள்ளதை கவனியாமல் வரும் அந்த கணவரே ஒரு உதாரணம். (மொ. த. மு. கா. உள்ள முடிச்சு போல இருக்கிறதோ.?) இரண்டாவதில் போட்டியானாலும் மெளனம் சிறந்ததுதான். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி.  எப்படியோ முடிச்சு போட்டு விட்டீர்கள்!

      நீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    தொடர்ந்து இடம் பெற்ற பாடல்கள் அருமையாகத்தான் இருக்கும். கேட்டு விட்டு, பிற செய்திகளையும் படித்து விட்டு பிறகு வருகிறேன்.

    பீர் பாட்டில் அசிங்கத்தை சகிக்க இயலவில்லை.

    ஓவியம் இதுபோல் ஒன்றிரண்டு முன்பு எப்போதோ வாங்கி படித்த வாராந்திர இதழ்களில் பார்த்துள்ளேன். வரைந்தவரின் பெயர்கள் நினைவில் இல்லை. இந்த ஓவியம் சிறப்பு.

    சிவாஜி அவர்களின் பேட்டி வீடியோ எனக்கு வரவில்லை. (ஒரு வேளை கைப்பேசியில் என்பதாலோ .?) பிறகு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனால் சிவாஜி வீடியோ பார்த்து விட்டு திரு ராமன் கமெண்ட் செய்திருக்கிறார்!

      நீக்கு
  7. உன்னை நான் பார்த்தது...

    பாடல் அப்போது மிகப் பிரபலம்....

    பதிலளிநீக்கு
  8. ராமசந்திரா மட்டும் அல்ல, பல் ஆஸ்பத்திரிகளின் நிலை இதுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஸ்பத்திரி என்றில்லாமல் பொது இடங்கள் என்று கூட சொல்லலாம். வாங்க பானு அக்கா.

      நீக்கு
  9. திலகா என்று ஒரு ஓவியர் விகடன் அறிமுகம் என்று எழுதியிருக்கிறீர்கள், அவர் குமுதம் இணை ஆசிரியர்களில் ஒருவரான புனிதன் அவர்களின் மகல் இல்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  நீங்கள் சொன்ன உடன் ஞாபகம் வருகிறது.  நம்ம மனோசாமிநாதன் அக்கா கூட பத்திரிகைகளில் படங்கள் வரைந்திருக்கிறார், தெரியுமோ?

      நீக்கு
  10. சர்ச்சிலின் கனவு இப்போது உண்மையாகிவருகிறதோ?

    பதிலளிநீக்கு
  11. எம்.ஆர். ராதா வித்தியாசமான மனிதர். மெட்ராஸ் என்பதை தன் பெயரில் இனிஷியலாக வைத்திருந்தவர்கள் இரண்டு பேர்கள்தான் ஒருவர் எம்.ஆர். ராதா, இன்னொருவர் எம்.எல்.வி(மெட்ராஸ் லலிதாங்கி வசந்தகுமாரி)

    பதிலளிநீக்கு

பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!