முந்தைய பகுதியின் சுட்டி : பகுதி 1
முனி உதவியாளர் எண்ணுக்கு செய்தி அனுப்பினார். " மோகினி யார்?"
பதில் வந்தது " நான்தான் "
அப்போதுதான் அமாவுக்கு உறைத்தது முனியின் உதவியாளர் ஒரு பெண் என்று!
" ஏன் உங்கள் பெயரில் அறை முன்பதிவு செய்தீர்கள்? "
" ஹோட்டலில் தங்குபவர் பெயர் என்ன என்று கேட்டபோது உங்கள் புனைபெயர் சொன்னால் சரியாக இருக்காது - ஆனால் உங்கள் நிஜப் பெயர் எனக்குத் தெரியாது. அதனால் அவசரத்திற்கு என் பெயரிலேயே அறை முன்பதிவு செய்தேன். அதனால் ஏதேனும் பிரச்சனையா? "
" பிரச்சனை எதுவும் இல்லை. ஆரம்பத்தில் என் பெயரில் அறை எதுவும் முன்பதிவு செய்யப்படவில்லை என்றதும் குழம்பிப் போய்விட்டேன். அப்புறம் விவரங்கள் கூறியதும் அவர்கள் என்னை இங்கே அறைக்கு அனுப்பிவிட்டார்கள். உங்களோடு வெறும் வாட்ஸ்அப் தொடர்பில் செய்தி பரிமாற்றங்கள் செய்து வந்ததால் - உங்கள் பெயர் தெரியாது. "
" ஓ - அதனால் என்ன - பரவாயில்லை. முனி சார் எப்பொழுதுமே அவருக்கோ அவருடைய உதவியாளர்களுக்கோ யாரும் வாய்ஸ் கால் செய்வதை விரும்பமாட்டார். ஸ்டோரி டிஸ்கஷன், படப்பிடிப்பு மற்றும் அதன் தொடர்பான வேலைகள் செய்துகொண்டிருக்கும்போது யாருக்காவது அலைபேசி அழைப்பு வந்தால் டைரக்டர் மூட் அவுட் ஆகிவிடுவார். அதனால் எங்களோடு யார் தொடர்புகொண்டாலும் அது எஸ் எம் எஸ் அல்லது வாட்ஸ் அப் மெஸென்ஜர் மூலமாக மட்டுமே இருக்கலாம் என்பது எழுதப்படாத விதி"
" அப்படியா ! நன்றி"
" நன்றி. நன்றாக ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள் - குட் நைட்"
சந்தேகத்தோடு தன் மொபைலில் true caller பயன்படுத்தி, உதவியாளர் எண்ணைப் பதிவு செய்து பார்த்தார். பெயர் "MOGI" என்று வந்தது.
= = = =
இரவு நேர உணவுக்காக அமா ரூமைப் பூட்டியபின் கீழ் தளத்திற்கு வந்தார். சுடச் சுட இரண்டு சப்பாத்திகள், அருமையான உருளைக்கிழங்கு ஸைட் டிஷ் சாப்பிட்டு, ஒரு கிளாஸ் பால் சாப்பிட்டுவிட்டு திரும்ப மேலே வந்தார். சற்று நேரம் அறையில் பொருத்தப்பட்டிருந்த டீ வி யில் வருகின்ற சானல்களை ஒவ்வொன்றாகத் திருப்பி ஆராய்ந்தார். எதுவும் அவருடைய அன்றைய மனநிலைக்குச் சரியானதாக அமையவில்லை.
தொலைக்காட்சிப் பெட்டியை ஆஃப் செய்துவிட்டு, அந்த அறையில் அவருக்காக ஏற்கெனவே வாங்கி வைக்கப்பட்டிருந்த வெள்ளைத்தாள்கள், அவர் கேட்டிருந்த கறுப்புநிற பால் பாயிண்ட் பேனா எல்லாவற்றையும் ஆசை தீர நோட்டம் விட்டார்.
பேனாவால் ஒரு தாளில் சில கதைத் தலைப்புகள் எழுதிப் பார்த்தார்.
சரி, சற்று நேரம் ஓய்வெடுத்து - பிறகு யோசிக்கலாம் என்று நினைத்தவாறு மெத்தையில் படுத்தார். 'என்ன கதை எழுதலாம்' என்று யோசித்தார். பிரயாணக் களைப்பும் அசதியும் சேர்த்து கண்களை வருடி, இமைகளைத் திறக்கவிடாமல் செய்து அப்படியே அவர் அயர்ந்து தூங்கிவிட்டார்.
= = = = =
திடீரென்று பெருத்த இடி ஓசை கேட்டு, திடுக்கிட்டு எழுந்தார் அமா. சற்று நேரம் அவருக்கு ஒன்றுமே புரியவில்லை - எங்கே இருக்கிறோம், என்ன ஏது என்ற விவரங்கள் நினைவு வந்தவுடன், சுற்றுமுற்றும் பார்த்தார்.
வெளியே பயங்கரமான மழை. ஜன்னல் திரை காற்றில் படபடத்தது. ஜன்னல் வழியே அறைக்குள் மழைத் தூறலும், குளிர் காற்றும் நுழைந்து ஆட்டம் போட்டன.
உடனே ஜன்னலருகே சென்று, அதன் கதவுகளை மூடுவதற்கு கையை வெளியே நீட்டினார்.
பௌர்ணமி நாளாக இருந்தபோதும், வானம் இருட்டிக்கொண்டு இருந்ததால், வெளியே எங்கும் பயங்கர இருட்டு.
அப்பொழுது வானில் தொடர்ந்து மூன்று நொடிகள் பளீரென மின்னல் மின்னியது. மின்னல் வெளிச்சத்தில் வெளியே பார்த்த அமா கண்ட காட்சி, அமாவை ஆச்சரியத்திலும் , திகிலிலும் ஆழ்த்திற்று.
அந்த மின்னல் மின்னியதுமே ஹோட்டல் முழுவதும் பவர் கட் - எல்லா மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுவிட்டது.
அப்பொழுதுதான் அமாவுக்கு, மாலையில் வரவேற்பாளர் செய்த எச்சரிக்கை ஞாபகம் வந்தது.
" .. நீங்க ரொம்ப எச்சரிக்கையாக இருக்கவேண்டும். உங்கள் அறையின் தெற்குப் பக்க ஜன்னல் கதவை மூடி வைத்திருங்கள். இரவில் அந்த ஜன்னல் அருகே செல்லவேண்டாம். "
' ஆ இதுதான் தெற்குப் பக்க ஜன்னலா ! இந்த ஜன்னல் கதவைத்தான் மூடி வைத்திருக்கச் சொன்னாரா - மறந்துவிட்டோமே ' - யார் அந்தப் பெண்? இந்தக் கொட்டும் மழையிலும் இடி மின்னலிலும் அவள் அங்கே என்ன செய்கிறாள்?' என்று எண்ணமிட்டவாறே வேகமாக ஜன்னல் கதவுகளை மூடிவிட்டு வந்து படுக்கையில் படுத்தார்.
மீண்டும் உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டார்.
அவருடைய கனவில், ஜன்னலுக்கு வெளியே அவர் பார்த்த நீல உடை அணிந்த பெண் அப்படியே மெல்ல மெல்ல பெரிய உருவம் எடுத்து, அவர் அருகே வந்து நின்று,
' நான்தான் மோகினி - இது என்னுடைய அறை. நீ இங்கே என்ன செய்கிறாய்? முதலில் இந்த இடத்தைவிட்டுப் போய்விடு' என்று கிசு கிசுத்தது. பிறகு அப்படியே கரைந்து போனது.
அதன் பிறகு வேறு ஒரு அழகிய பெண் உருவம் கனவில் வந்து, 'நான்தான் முனியின் உதவியாளர் மோகினி. நீங்க என்னைக் கல்யாணம் செய்துகொள்வீர்களா?' என்று கேட்டது.
(தொடரும்)
இனிய காலை வணக்கம் எல்லோருக்கும்.
பதிலளிநீக்குபடங்கள் செமையா இருக்கிறது.
கீதா
ஆம், நானும் சொல்ல நினைத்தேன். வரைந்தவருக்கு பாராட்டுகள்.
நீக்குஎன் யூக/சந்தேக!!!!!! லிஸ்டில் ஸ்ரீராம் இடம் பிடித்துள்ளார்!!!!!! (எழுதியது யார் என்பதில்தான்...ஹாஹாஹா வேற ஒன்னுமில்ல)
பதிலளிநீக்குகீதாக்கா, பானுக்கா, வல்லிம்மா, கமலாக்கா, கோமதிக்கா என்ன சொல்றீங்க?!!
கீதா
கௌ அண்ணாவும் லிஸ்டில் சேர்க்கப்பட்டிருக்கிறார்!!!!
நீக்குகீதா
பல வரிகள் கௌ அண்ணாவை நினைவுபடுத்துவதால் (வரிகளை வாசிக்கும் போதே ஒரு ஃபீல் வருமே அப்படி...) சந்தேகப் பட்டியலில்!!!!!!!! வாக்க்குகளின் அடிப்படையில் முந்திக் கொள்கிறார்!!!!
நீக்குஇந்த கௌ அண்ணா தான் நிறைய புனைப்பெயர் எல்லாம் வைத்துக் கொள்வார். அதுவும் சேர்ந்து...
கீதா
//பல வரிகள் கௌ அண்ணாவை நினைவுபடுத்துவதால்// அதே அதே.
நீக்குஎனக்கு என்னவோ, இந்தக் கதையை எழுதியவரே இங்கே வந்து கமெண்ட் போட்டு குழப்பிக்கொண்டிருக்கிறார் என்று தோன்றுகிறது. ஹா ஹா ! சந்தேக லிஸ்டில் என்னைச் சேரத்ததற்கு நன்றி. ஜீவி சார் சொன்னதுபோல - நீலகிரியில் பல வருடங்கள் வாழ்ந்தவராகத்தான் இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். நான் நாற்பத்தைந்து வருடங்கள் சென்னையிலேயே கழித்தவன்.
நீக்குஎனக்கு என்னவோ, இந்தக் கதையை எழுதியவரே இங்கே வந்து கமெண்ட் போட்டு குழப்பிக்கொண்டிருக்கிறார் என்று தோன்றுகிறது. ஹா ஹா !//
நீக்குஅதையேதான் நாங்களும் சொல்கிறோம் கௌ அண்ணா!!!!!
கதை எழுத நீலகிரியில் பல வருடங்கள் வாழ்ந்தவராக இருக்க வேண்டுமா என்ன? ஒரு ட்ரிப் போனாலே....அப்செர்வேஷன் கற்பனை இருந்தாலே போதும்.
மட்டுமல்ல ஓருஇடத்துக்குப் போகாமலேயே இப்பல்லாம் கூகுள் உதவியுடன் ஒரு இடத்தைப் பற்றி, ஏன் தெருவைப் பற்றிக் கூடத் தெரிந்துகொண்டு எழுதலாம்!!!
அத்தனையும் பப்ளிக்!!! தெரியாத விஷயத்தைக் கூட கூகுளில் நன்றாக வாசித்துத் தெரிந்துகொண்டு அத்தாரிட்டி போல எழுதலாம். இருக்கவே இருக்கு கேள்விகள் எழுந்தால் இருக்கவே இருக்கிறது இந்த விஷயம் தான் ஆதாரம் என்று சுட்டி கொடுக்க!!!! கதைக்கு மிகத் தேவையானது கற்பனைதான். அதுவும் அமானுஷ்யம் எழுத. அத்னால்தானே கதை என்று சொல்கிறோம்..
ஹப்பா! நம்ம யூகத்துக்கு என்னமா விளக்கம் கொடுக்க வேண்டியுள்ளது!!!!! ஹாஹாஹாஹா
கீதா
வணக்கம் கீதா ரெங்கன் சகோதரி
நீக்குவரைந்த படங்களில் பெயர் இல்லாமல் இருப்பதை பார்த்தும், வரைந்த விதங்களை கொண்டும், சென்ற வார கதைப் பதிவிலிருந்து நான் கெளதமன் சகோதரர்தான் கதாசிரியர் என சந்தேகப்பட்டு வருகிறேன். அதை இவ்வார படங்களும் உறுதி செய்கின்றன மாதிரி உள்ளது. பார்க்கலாம்.
ஒரு வேளை நீங்களும், சகோதரி பானுமதி அவர்களும் கதைக்கு போட்டிப் போட்டு முன்கூட்டியே வந்து கருத்துகள் தெரிவித்திருப்பதை பார்த்தால், இரண்டு பேரும் முன்பு சேர்ந்து ஒரு அருமையான கதை தந்தது போல், இந்த திரில் கதையையும் உங்கள் கை வண்ணத்தில் கலந்தடித்து, எங்களை வந்து மிரட்டுகிறீர்களோ என சந்தேகமும் வருகிறது.பார்க்கலாம். இன்னும் மூன்று வாரத்தில் தெரிந்து விடும்.
கதை நன்றாக செல்கிறது. படுத்தவுடன் நடு இரவில் இடி, மின்னல்,மழை என்பது சகோதரி கீதா சாம்பசிவம் அவர்களின், சென்னைக்கு அவர் தம்பி பையரின் திருமணத்திற்கு சென்ற அனுபவ பதிவை நினைவுபடுத்துகிறது. ஒரு வேளை எழுதியது அவராக கூட இருக்கலாம் என ஒரு சிறு சந்தேகம் உதிக்கிறது. எப்படியோ யார் என்பதை தெரிந்து கொள்ள காத்திருக்கத்தான் வேண்டும் போலிருக்கிறது. நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
// ஒரு வேளை நீங்களும், சகோதரி பானுமதி அவர்களும் கதைக்கு போட்டிப் போட்டு முன்கூட்டியே வந்து கருத்துகள் தெரிவித்திருப்பதை பார்த்தால், இரண்டு பேரும் முன்பு சேர்ந்து ஒரு அருமையான கதை தந்தது போல், இந்த திரில் கதையையும் உங்கள் கை வண்ணத்தில் கலந்தடித்து, எங்களை வந்து மிரட்டுகிறீர்களோ என சந்தேகமும் வருகிறது.பார்க்கலாம். இன்னும் மூன்று வாரத்தில் தெரிந்து விடும்.// கரெக்ட் , கரெக்ட். ஒருவேளை ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருவர் எழுதுவதாக இருக்குமோ என்றும் தோன்றுகிறது.
நீக்கு/ஒருவேளை ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருவர் எழுதுவதாக இருக்குமோ என்றும் தோன்றுகிறது./
நீக்குஓ.. அப்படியும் இருக்குமோ? ஆனால் நிச்சயமாக இந்த கூட்டணியில் நான் இருக்க முடியாது. அப்படியெல்லாம் ஐந்து வாரத்தில் கதையை முடிக்க கண்டிப்பாக என்னால் ஒத்துழைக்க முடியாது. ஹா.ஹா.ஹா. நன்றி.
கதையை நீங்க முடிக்கவேண்டாம்; நடுவில் ஒரு வாரம் மட்டும் எழுதியிருக்கலாம் அல்லவா!
நீக்கு/கதையை நீங்க முடிக்கவேண்டாம்; நடுவில் ஒரு வாரம் மட்டும் எழுதியிருக்கலாம் அல்லவா!/
நீக்குஅங்குதான் பிரச்சனையே.. அந்த ஒரு வாரத்துக்கான கதையை எழுதுவதற்கு பல வாரங்கள் நான் எடுத்துக் கொண்டால், பிறகு 1/5 என்ற இடத்தில் அடுத்தடுத்து எந்த எண்ணாமல் நிரப்புவதாம்...? ஹா.ஹா.ஹா. நன்றி.
"எண்ணால்"என வந்திருக்க வேண்டும். என் கை விரல்களின் தவற்றினால், "எண்ணாமல்" என தட்டச்சு வந்து விட்டது. அதனால் இந்த விளக்கம். எனினும், இன்றைய கருத்துரை எண்ணிக்கையை எண்ணிக்கையில் எண்ணும் போது, அதற்கு பயனுள்ளதாக இருக்குமென்ற எண்ணமும் என்னுள் எழுகிறது.:) (கதாசிரியர் யார் என்ற குழப்பத்தில் சற்று முத்தி விட்டதோ என எண்ண வேண்டாம்..:)))
நீக்குஇப்போ எங்களையும் குழப்பிவிட்டீர்கள்.
நீக்குஎல்லாமே நல்லதுக்குதான்..:) எப்போதுமே குழப்பத்தில்தான் ஒரு தெளிவு கிடைக்கும். அந்த குழப்பம் வந்து விட்டால், அடுத்த வாரமே நீங்களோ, சகோதரர் ஸ்ரீராமோ, எழுதியது நாங்கள்தான் என்ற உண்மையை ஒத்துக் கொண்டு விடுவீர்கள் அல்லவா? பிறகு மீதி இரு வாரங்கள் யாரும் இப்படி குழம்ப அவசியமில்லை. ஹா.ஹா.ஹா.
நீக்கு//ஓருஇடத்துக்குப் போகாமலேயே இப்பல்லாம் கூகுள் உதவியுடன் ஒரு இடத்தைப் பற்றி, ஏன் தெருவைப் பற்றிக் கூடத் தெரிந்துகொண்டு எழுதலாம்!!!// இதை இப்போத் தான் கவனிக்கிறேன். இந்த மாதிரிக் கற்பனை பண்ணித் தான் சாவி அவர்கள் வாஷிங்க்டன் போகாமலேயே "வாஷிங்க்டனில் திருமணம்" நகைச்சுவைத் தொடர் எழுதினார்.
நீக்குஒரு வேளை நீங்களும், சகோதரி பானுமதி அவர்களும் கதைக்கு போட்டிப் போட்டு முன்கூட்டியே வந்து கருத்துகள் தெரிவித்திருப்பதை பார்த்தால், இரண்டு பேரும் முன்பு சேர்ந்து ஒரு அருமையான கதை தந்தது போல், இந்த திரில் கதையையும் உங்கள் கை வண்ணத்தில் கலந்தடித்து, எங்களை வந்து மிரட்டுகிறீர்களோ என சந்தேகமும் வருகிறது.பார்க்கலாம்.//
நீக்குகமலாக்கா, எழுதியது நாங்கள் இல்லை உண்மையாகவே!
கீதா
கீதாக்கா அதே அதே. அப்ப ஸ்ட்ரைக் ஆகலை பாருங்க. கற்பனை செய்யும் திறன் இருந்தால் கற்பனையில் எவ்வளவோ புனையலாம்!
நீக்குகீதா
வணக்கம் கீதா ரெங்கன் சகோதரி
நீக்குநீங்கள் இல்லை என்ற உண்மையை சொன்னதற்கு மிக்க நன்றி சகோதரி.
ஒரு வேளை பானுமதி சகோதரியாக இருக்கலாம். கதையின் சுருக்கமான எழுத்துக்கள் அவரை குறிக்கிறதோ.. என்ற சந்தேகம் வருகிறது. நன்றி.
கதாசிரியர் யாராக இருக்குமென்று அறியும் ஆர்வம் என்னையும் இன்று இத்தனை கருத்துக்கள் இட வைத்து விட்டது.:)
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கருத்துரைகளுக்கு நன்றி.
நீக்கு//கதையை நீங்க முடிக்கவேண்டாம்; நடுவில் ஒரு வாரம் மட்டும் எழுதியிருக்கலாம் அல்லவா!// இது ஒரு க்ளூ இல்லையா?
நீக்குஅப்படியா!
நீக்குஅனைவருக்கும் காலை/மாலை வணக்கம்.
பதிலளிநீக்குகாலை வணக்கம்.
நீக்குகதை அமானுஷ்யமாகச் செல்கிறது! எதிர்பார்ப்பைக் கூட்டுகிறது.
பதிலளிநீக்குஒன்றே ஒன்று....நீல உடை என்று மின்னல் வெளிச்சத்தில் தெரிந்ததா?! தெரியுமா? மின்னல் வரும் போது தன்னிச்சையாகக் கண் மூடிக் கொண்டுவிடுமே...
கீதா
எதிர்பாராத மின்னல் போலிருக்கு. கண்ணை மூடிக்கொண்டாரா அல்லது அவர் கற்பனையா என்று அமானுஷ்தான் சொல்லவேண்டும்.
நீக்குசஸ்பென்ஸ் தாங்க முடியாமல் கீதா ரங்கன் சீக்கிரமே வந்து விட்டாரோ?
பதிலளிநீக்குஆமாம் பானுக்கா....மாலை வணக்கம்.
நீக்குஎனக்கு சஸ்பென்ஸ் திரில்லர் இன்வெஸ்டிகேஷன் ரொம்பப் பிடிக்கும்
கீதா
ஒவ்வொரு வாரமும், காசு சோபனா இந்தக் கதையை சரியாக திங்கக்கிழமை இரவு பன்னிரெண்டு மணிக்கு ஷெட்யூல் செய்கிறரர் என்பதால், மற்ற ஆசிரியர்களுக்கும் அதே சஸ்பென்ஸ் நிலவி வருகிறது. நாங்களும் செவ்வாய் காலையில்தான் படித்து வருகிறோம்.
நீக்குஎழுதியவர் இங்கு வந்துதான் படிக்க வேண்டுமா என்ன!!!!!!!! ஹாஹாஹா
நீக்குகீதா
அதானே !
நீக்குகமெண்ட்களை இங்கே வந்துதானே படித்தாகவேண்டும்!
நீக்குபடங்கள் பிரமாதம்! கதையில் இந்த வாரம். த்ரில்லிங் குறைவுதான்.
பதிலளிநீக்குஆமாம் பானுக்கா கொஞ்சம் குறைவுதான்...ஆனால் எதிர்பார்ப்பு (அதாவது இது எப்படிச் செல்லப்போகிறது என்ற எதிர்பார்ப்பு) கூடியிருக்கிறது. சப்பென்று முடிவு இருக்கக் கூடாதே என்றும்!!!!
நீக்குகீதா
எங்களுக்கும் எதிர்பார்ப்பு கூடிக்கொண்டே போகிறது.
நீக்குஎங்களுக்கும் எதிர்பார்ப்பு கூடிக்கொண்டே போகிறது.//
நீக்குஏழுதியவருக்கும் இருக்காதா பின்னே!!! வாசகர்கள் யார் சரியாகச் சொல்கிறார்கள்...என்னெல்லாம் யூகங்கள் வருகிறது, கருத்து எப்படி வருகிறது என்ற எதிர்பார்ப்பு!!!
கீதா
ஓ !! அப்படியா !!
நீக்குஅன்பு கீதாரங்கன், பானுமதி,
பதிலளிநீக்குமற்றும் வரப்போகும் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
எல்லோரும் என்றும் ஆரோக்கியமுடன் இருக்க
இறைவன் அருள வேண்டும்.
இறைவன் அருள் வேண்டுவோம்.
நீக்குமின்னல்,மழை மோகினி கதை நன்றாக
பதிலளிநீக்குஇருக்கிறது.
கீதா சொல்வதுபோல இந்த எழுத்தை ஏற்கனவே
பார்த்திருக்கிறோமோ.
படங்களும் திகில் கூட்டுகின்றன.
நான் திரும்பத் திரும்பப் படித்துப் பார்த்தேன். ஆனால் இந்த எழுத்தை ஏற்கெனவே எங்கும் பார்த்ததுபோலத் தெரியவில்லையே!
நீக்குஏன் சார், சுஜாதா மாதிரி இருக்குன்னால்,
நீக்குஅவரேயா.??????? இவர் எழுத்து சாயல்
முன்னயே படித்த மாதிரி இருக்குன்னு சொன்னேன்:)
ஓ ! அப்படி சொன்னீர்களா!
நீக்குஎழுதிய கதாசிரியருக்கு ஒரு யோசனை சொல்கிறேன். கதைத் தலைப்பு ஏணிமலை என்று இல்லாமல் 'மாயமோகினி' என்று வைத்தால், விட்டலாச்சார்யா படம் பார்ப்பதுபோல இன்னும் த்ரில் ஆக இருக்கும்.
பதிலளிநீக்கு😂💛😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
நீக்குDon't mislead. வரைந்தவரும் கதை எழுதுபவரும் கேஜிஜி சார்தான்.
நீக்குஅதே அதே நெல்லை. இங்கு சொல்ல வந்தேன் அதுக்குள்ள உங்க கருத்து வந்துவிட்டது!!!
நீக்குகீதா
நெல்லை கௌ அண்ணா அவருக்கே அவர் யோசனை சொல்லிக் கொள்கிறார்!!!
நீக்குகீதா
வணக்கம் கெளதமன் சகோதரரே
நீக்குஇந்த கதை தலைப்பு வித்தியாசமாக பேய் கதைகளை சாராததாகத்தான் இருக்கிறது. ஆனால், கதையை விட எழுதியவரை கண்டுபிடிக்க நாங்கள் "ஏணி" வைத்து "மலை" மேலே ஏறி வருவதை போல வந்துதான் ஆக வேண்டும் என எழுதியவர் (நீங்கள்) முடிவு செய்து விட்டதால், அச்சமயத்தில் இந்த பெயரையே கதைக்கு வைத்து விட்டார்(விட்டிர்கள்)கள் போலும்.:) நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அதிகம் இங்கே எட்டிப்பார்க்காமல் இருப்பவர்கள், ஸ்ரீராம், நெல்லைத்தமிழன் இருவரும்தான். அதனால் அவர்கள் பேரில்தான் என் சந்தேகம்.
நீக்குஅடுத்த வாரமும் யார் என்று சொல்லா விட்டால் நான்தான் எழுதினேன் என்று சொல்லப் போகிறேன்!
நீக்குஅதுதான் சரி!
நீக்குஹா ஹா. இதையேதான் பொய்யோ, மெய்யோ நானும் சொல்லலாம் என்றிருந்தேன். (ஏணி வைத்து மலை ஏறி தலை தெரிவதற்குள்:)) )
நீக்குஎவ்வளவு க்ளூ கொடுத்தாலும் கண்டு பிடிக்க ஏன் இவ்வளவு திணறுகிறார்கள் என்று தெரியவில்லை..
நீக்குஜீவி அண்ணா அப்ப இது நீங்களா?!!!!!!!
நீக்குகீதா
ஆ! ஓ மை! ஜீவி அண்ணானு லிஸ்ட்ல சேர்த்துக்கிட்டு (அண்ணா அமானுஷய கதை எழுதுவார் என்று யோசிக்காததால்) மீண்டும் வாசித்துப் பார்த்தால் இப்ப கதையின் முதல் தொடக்கப் பகுதி முடிந்து புள்ளிகளுக்குப் பிறகு வரும் இரண்டாவது வாசித்துவ வரும் போது ஜீவி அண்ணாவும் எட்டிப் பார்ப்பது தெரிவது போல இருக்கிறதே....
நீக்குகீதா
இதுக்குத்தான் சொல்வது.....அதாவது ஒரு கெஸ் வொர்க் செய்யும் போது மனதில் ஏற்கனவே ஒரு சிலரை வைத்துக் கொண்டு ப்ரிடிட்டெர்மின்டாக பார்க்கும் போது அந்த வட்டத்திற்குள்ளேயேதான் மனம் சுழன்று கொண்டிருக்கும்.
நீக்குஅதே சமயம் ஓப்பனாக கவனித்து ஆராய்ந்தால் சரியான விடை கிடைக்கும்.
இன்வெஸ்டிகேஷனில் சொல்லித் தரப்படும் பாடம் இது வாழ்க்கைக்கும் உதவும் ஒரு நல்ல விஷயம். பாடம்!!!
கீதா
எல்லோரும் இப்போ சரியான திசையில் பயணிக்க ஆரம்பித்துவிட்டீர்கள் என்று தெரிகிறது.
நீக்குஆமாம், தி/கீதா, சில இடங்களில் திரு ஜீவி அவர்களின் எழுத்தின் சாயல் இந்த வாரப் பகுதியில் நன்றாய்த் தெரிகிறது. நான் நினைக்கிறேன். ஒரு வாரம் ஒருத்தராக எழுதறாங்களோ? போன வாரம் எழுதினவரைத் தொடர்ந்து இந்த வாரம் வேறே ஒருத்தர், அடுத்த வாரம் இன்னொருவர் இப்படி!
நீக்குஅப்படித்தான் இருக்கும்.
நீக்குஎல்லாத்துக்கும் சரினு சொல்லி நல்லாவே குழப்பறீங்க! :)))))
நீக்குஇதுவும் சரி!
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி.
நீக்குஇன்னொருவரும் இது போல் எழுதுவார். அவராவும் இருக்கலாம்.
பதிலளிநீக்குஊட்டில இருந்தார்னு சொல்கிறீர்களே.
நம் கீதா சாம்பசிவம் குன்னூரில் இருந்தார் என்று நினைவு. கோத்தகிரியா????
ஹாஹாஹா வல்லிம்மா எனக்கும் கீதாக்கா நினைவு வந்தது. அக்காவுக்குப் பேய் பிடிக்கும் ஆனால் அமானுஷ்ய கதை எழுதுவாரா என்று தெரியவில்லை. அதனால் அவர் என் யூக லிஸ்டில் இல்லை!!!!
நீக்குகீதா
கீ சா மேடம் எழுதியிருந்தால், வித்தியாசமான, நல்ல முயற்சி என்று பாராட்டுகிறேன்.
நீக்கு//அக்காவுக்குப் பேய் பிடிக்கும்,//
நீக்குஇந்த வார்த்தை சரியாக இல்லையே...
ஓ கில்லர்ஜி நீங்கள் சுட்டிக் காட்டியதும்தான் தெரிந்தது....மிக்க நன்றி கில்லர்ஜி
நீக்குபேய் "என்றால்" அல்லது 'பேயார் என்றால்' என்று சொல்லிருக்க வேண்டும்...ஆனால் உண்மையில் அந்த அர்த்ததில் சொல்லவில்லை..(ந்ம்பிக்கை கிடையாது. ஆனால் மற்றவர்களைக் கருத்தில் கொள்ள வேண்டும்தான்.) அவசரகதியில் கருத்து சொல்லும் போது விட்டுவிட்டது.
கீதாக்கா ஸாரி கீதாக்கா. மன்னிச்சுக்கோங்க
கீதா
ஹிஹிஹிஹிஹிஹிஹிஹி, விவிசி,விவிசி,விவிசி!
நீக்குநான் "மூட்டி" விடலாம் என்று முயன்றேன்.
நீக்குஹூம் நமக்கு அவ்வளவு திறமை கிடையாது போலும்...
நீங்க வேறே கில்லர்ஜி, படிக்கறச்சேயே சிரிக்க ஆரம்பிச்சு நம்மவர் என்னை ஒரு மாதிரியாப் பார்த்து, எனக்கு இன்னமும் அதிகம் சிரிப்பு வந்து! இதோ இப்போவும் சிப்புச் சிப்பாய் வருது!
நீக்குகில்லர்ஜி!! ஹாஹாஹா....கீதாக்காவைப் பத்தி தெரியும் கில்லர்ஜி என்றாலும் நீங்கள் சொன்னதுக்கு மரியாதை கொடுக்கோனுமல்லோ!!
நீக்குகீதா
:)))
நீக்கு//Don't mislead. வரைந்தவரும் கதை எழுதுபவரும் கேஜிஜி சார்தான்.// நிச்சயமா இல்லை. இல்லவே இல்லை.
நீக்குஅப்பாடி. எல்லோரும் என்னை சந்தேகக் கேஸ்ல அரெஸ்ட் பண்ணி வைத்திருந்தார்கள். நீங்க எனக்கு ஜாமின் கொடுத்து வெளியே கொண்டு வந்துட்டீங்க. நன்றி.
நீக்குஒரு கதையைப் பகுதி பகுதியாகப் பிரித்துப் போடுவதில் ஜீவி அவர்கள் தான் முதலிடம். ஆகவே இந்த வார எழுத்தைப் பார்த்தால் அதாவது நடையைப் பார்த்தால் அவராக இருக்கும் சாத்தியங்கள் அதிகம்.
நீக்குகரெக்ட்.
நீக்கு@கௌதமன், க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! :)))))
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்..
பதிலளிநீக்குஇறையருள் சூழ்க எங்கெங்கும்..
வாழ்க வையகம்..
வாழ்க வளமுடன்..
வாழ்க வையகம். வாழ்க வளமுடன்!
நீக்குகீரிப்பாறைக்கு போனவர் தான் இந்த ஏணிமலை எழுதுகிறார் என்று தோன்றுகிறது.
பதிலளிநீக்குJayakumar
அப்படியும் இருக்குமோ!
நீக்குகதையே கீரிப்பாறைக்கு போகப் போகிறது. :))
நீக்குகேஜிஎஸ் ஏற்கெனவே ஆசிரியர் குழுவில் கேஜி என்னும் பெயரில் இருந்து வருகிறார். ஆகவே காசு சோபனா என்று ஏன் அவர் பெயர் வைச்சுக்கணும்? காசு சோபனா என்னும் குறியீடு எதைக்குறிக்கிறதுனு புரியலை. நானும் யோசிச்சு யோசிச்சுப் பார்க்கிறேன். பலமுறை ஶ்ரீராமிடம் ரகசியமாக் கூடக் கேட்டுப் பார்த்துட்டேன். அசைஞ்சே கொடுக்கலை.
நீக்குஸ்ரீராம் பல விஷயங்களில் மிகவும் கெட்டியான ஆள்.
நீக்கும்ம்ம்ம். அது ஏன் காசு. (கா.சு.?) சோபனா மட்டும் மறைபெயரில் ஒளிஞ்சுட்டு இருக்கார்?
நீக்குஏன்? எங்களுக்கும் தெரியவில்லை.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குகதை நன்றாக செல்கிறது. போன வார்த்தை விட திகில் சற்று குறைவுதான். ஆனாலும் படங்களுடன் படிக்கும் போது கற்பனையில் சற்று திகிலும் பறந்து வந்து ஒட்டிக் கொள்கிறது.
/தொலைக்காட்சிப் பெட்டியை ஆஃப் செய்துவிட்டு, அந்த அறையில் அவருக்காக ஏற்கெனவே வாங்கி வைக்கப்பட்டிருந்த வெள்ளைத்தாள்கள், அவர் கேட்டிருந்த கறுப்புநிற பால் பாயிண்ட் பேனா எல்லாவற்றையும் ஆசை தீர நோட்டம் விட்டார்./
"பார்த்தால் பசி தீரும்" மாதிரி பார்த்து கதைக்கருவை மனதுக்குள் கொண்டு வந்து விடுவார் போலும். ஆனால் இப்படி பார்த்து படுத்து உடனே தூங்கியும் விட்டால் எப்படி கதைக்கரு வரும். (என்னைப் போல் ஒரு கதையை சித்தரிக்க பல மாதங்கள் ஆகி விடாதோ ..? ஹா.ஹா.ஹா. ) அதனால்தான் எழுத நாட்கள் அதிகபடியாக பிடிக்கும் என்பதால் தங்கும் அறை வசதிகள் கூடுதலாக வேண்டுமென முன்கூட்டியே கேட்டிருக்கிறார். (நானாக இருந்திருந்தால் அரை வருடம் அவகாசம் கேட்டிருப்பேன். மோகினியும் அவதாரங்கள் பலவாக எடுத்து வந்திருப்பாள்.:) )
/பேனாவால் ஒரு தாளில் சில கதைத் தலைப்புகள் எழுதிப் பார்த்தார்./
அதில் ஒரு தலைப்புதான் இந்த "ஏணிமலையோ" ஹா.ஹா.ஹா.
கதையில் அந்த எழுத்தாளர் எப்படி எழுதப்போகிறார் என்ற ஆவலை விட அவரை எழுதிய கதாரிசிரியர் யாரென்பதை தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன். வேறு வழி? (அந்த மோகினி இங்கு வந்தாலாவது அவளிடமாவது கேட்கலாம்.:))) நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
// (நானாக இருந்திருந்தால் அரை வருடம் அவகாசம் கேட்டிருப்பேன். மோகினியும் அவதாரங்கள் பலவாக எடுத்து வந்திருப்பாள்.:) ) // அதே, அதே !!
நீக்குமுனியின் அஸிஸ்டெண்ட் கல்யாணம் செய்து கொள்ள சொல்கிறாரே...
பதிலளிநீக்குஅமாவைத்தானே கேட்கிறார்! நமக்கு என்ன!!
நீக்குஎன்ன இன்று சகோதரி கீதா சாம்பசிவம் அவர்களை இன்னமும் காணவில்லையே? பேயார் கதைகள் என்றால் அவருக்கு இஸ்டமாயிற்றே... ஒரு வேளை அவரும் ஒளிந்திருந்து நாம் எழுதிய கதைக்கு என்ன கருத்துரைகள் வந்திருக்கின்றன எனப் பார்க்கிறாரோ ?
பதிலளிநீக்குஎனக்கும் அந்த சந்தேகம் வந்துவிட்டது.
நீக்குஹிஹிஹி, அதெல்லாம் இல்லை. காலம்பரக் கொஞ்சம் உடம்பு முடியலை. நேற்று நின்று கொண்டே ஒரு சில வேலைகள் செய்ய வேண்டிய கட்டாயம். அது இடுப்புக்குக் கீழ் வலி மோசமாக இருந்தது. அதான் எழுந்து காஃபி போட்டுக் கொடுத்துட்டுப் போய்ப் படுத்துட்டேன். இன்னிக்குக் கஞ்சி கூட அவர் தான் போட்டார். ஏழு மணிக்கு மேல் தான் எழுந்தேன். அப்புறம் கணினியில் உட்கார்ந்தால் வீட்டு வேலைகள் ஆகாது! ஆகவே இப்போத் தான் எல்லாத்தையும் முடித்துக் கொண்டு வரேன்.
நீக்குகமலாக்கா, கீதா அக்கா எழுதவில்லை என்பது பளிச்!!
நீக்குகீதா
கமலா எழுதினால் தத்துவங்கள் ஆங்காங்கே கருத்துகளாகப் பரிமளிக்கும். நான் எழுதினால் இத்தனை அழகாய் எழுத வராது என்பது அனைவருக்கும் தெரியும்.
நீக்குஎன்னைப் பற்றி துல்லியமாக கணித்ததற்கு நன்றி சகோதரி. சகோதரர்கள் ஸ்ரீராம் அவர்கள், கௌதமன் அவர்கள், ஜீவி அவர்கள், நெல்லைத் தமிழர் அவர்கள் என சந்தேக பட்டியல் வளர்ந்து வருகிறது. சகோதரர் கில்லர்ஜி அவர்களை விட்டு விட்டோமே.. அவரும் மர்ம கதைகளை சுருக்கமாக இப்படி விவரிப்பார்.
நீக்கு// சகோதரர் கில்லர்ஜி அவர்களை விட்டு விட்டோமே.. அவரும் மர்ம கதைகளை சுருக்கமாக இப்படி விவரிப்பார்.// அட ஆமாம் இல்லே !!
நீக்குகில்லர்ஜி மர்மக் கதைகள் எழுதி இருக்காரா? நான் பார்த்ததே இல்லை.
நீக்குஅடுத்த வாரம் கொஞ்சம் அதிர்வு இருக்குமா...?
பதிலளிநீக்குபொறுத்திருந்து பார்ப்போம்!
நீக்குமின்னலும் இடியும்
பதிலளிநீக்குமழையும் காற்றும்
இரவும் திகிலும்
கொலுசும் ஒலியும்
மோகினியும் மோகினியும்!...
உம், உம், நல்லா இருக்கு!
நீக்குஇன்னிக்குச் செவ்வாய்க்கிழமை என்பது நினைவில் இருந்தது. (அதிசயமாக) ஆனால் பேய்க்கதையும் பேயார் வருகையும் இருக்குனு நினைவில் இல்லை. இப்போத் தான் வரேன். இன்னும் இன்னிக்குக் கதை படிக்கலை. அதுக்குள்ளே பின்னூட்டங்கள் சுவாரசியமாக இருந்தால் அவற்றைப் படித்தேன். இனிமேல் கதை படிக்கணும்.
பதிலளிநீக்கு!!!
நீக்குஎல்லோரும் பேசிக் கொண்டதைப் படித்துப் படங்களைப் போய் மீண்டும் மீண்டும் பார்த்து ஆராய்ச்சி செய்ததில் இவை கௌதமன் சார் வரைந்தது அல்ல என்றே தோன்றுகிறது. அதோடு நாங்க அரவங்காட்டில் இருந்திருக்கோம். 2வருடங்களோ என்னமோ! அங்கே மழை மேகம், பனி மேகம் என மெல்லிய திரை போட்டுப்பார்த்திருக்கேனே தவிர்த்து மலைகளில் பேய்கள் தெரிந்ததில்லை. ரொம்ப வருத்தமா இருக்கு. அதோடு எனக்கு இவ்வளவு கற்பனை வளமெல்லாம் இல்லை. இப்போப் போய்க் கதையைப் படிச்சுட்டு வரேன்.
பதிலளிநீக்கு// இவை கௌதமன் சார் வரைந்தது அல்ல என்றே தோன்றுகிறது. // சரியான கணிப்பு. நன்றி.
நீக்குஓட்டல் ஜன்னலுக்கு வெளியே மோகினிப் பேய் வந்திருக்கு சரி! ஆனால் அங்கே தெரியும் ஓட்டுக் கட்டிடம்? ஓட்டல் போனவாரம் படம் காட்டினப்போ மிக அழகாய் இருந்ததே! அதுக்குள்ளே இங்கே ஓட்டுக்கட்டிடம் எப்படி வந்தது? அது தான் பேயாருக்கு வாசஸ்தலமோ?
பதிலளிநீக்குதெற்குப் பக்க ஜன்னல் மூலமாகத் தெரிந்த காட்சி என்று நினைக்கிறேன். அடுத்த வாரம் சரியான விளக்கம் கிடைக்கலாம். பார்ப்போம்.
நீக்குதிகிலூட்டும் சம்பவங்கள் இல்லாமல், பேயாரின் நேரடி வர்ணனை/வருகை இல்லாமல் இந்த வாரம் சுவாரஸ்யப்படவில்லை.
பதிலளிநீக்குஅப்படியா!! அடுத்தடுத்த வாரங்களில் ஆவி, பேய், (சுரண்டுவதற்கு) பாய் எல்லாம் வரக் கூடும்!
நீக்குகாசு சோபனா யாருனு சொல்லுங்க ஶ்ரீராம்/கௌதமன் சார். கதை எழுதியவர் யாருனு தெரிஞ்சுடும். ஆனால் கௌதமன்/ஶ்ரீராம் இருவரும் இல்லைனு இந்த வாரத்தின் கதைப் பகுதியைப் படிக்கையில் தோன்றுகிறது.
பதிலளிநீக்குகாசு என்பது (K.S) இன்ஷியல். இப்போ கூடவா கண்டுபிடிக்க முடியாது?..
நீக்குகேஜிஎஸ்ஸின் பெண்ணாக இருக்கலாம் என்கிறீர்களா?
நீக்குநோ சான்ஸ் கீதாக்கா. நேற்றே சொல்லிருந்தாங்களோ அவங்க ஆங்கிலத்தில் எழுதியதை முழி பிதுங்க மொழி பெயர்த்து என்று...
நீக்குகீதா
எனக்கென்னவோ இந்தக் காசு சோபனாவும் கௌ அண்ணா என்றே தோன்றுகிறது குரோம்பேட்டைக் குறும்பன் என்று போட்டுக் கொள்வது போல!!!
நீக்குகீதா
காசு சோபனா கௌதமன் இல்லை. நிச்சயமாய் இல்லை. ஆனால் கௌதமன் சாரும் அமானுஷ்யம் எழுதி இருக்கார். ஆரம்ப காலங்களில். "பெண்"களூரில் பால் பாக்கெட் போடுபவர் பற்றிய அமானுஷ்ய நிகழ்வை அவர் எழுதி இருந்தது இன்னமும் நினைவில் இருக்கு.
நீக்குஆமாம் கீதாக்கா அதனால்தான் எனக்கு கௌ அண்ணா மீது சந்தேகம்!!!!
நீக்குகீதா
அப்பாடி - ஏதோ ஒரு காலத்தில் நான் எழுதிய ஒரே அமானுஷ்யக் கதையை ரெண்டு பேர் ஞாபகம் வைத்துள்ளார்கள்! நன்றி.
நீக்குயார் அந்த இன்னொருத்தர்?
நீக்கு2 கீதாக்களும்.
நீக்குஓஹோ!
நீக்குஆனால் இரண்டு பேருக்கும் முக்கியமாய் ஶ்ரீராமுக்கு யார் எழுதினதுனு தெரியும். எங்கேயானும் பேச்சு வாக்கில் க்ளூ கொடுத்துடப் போகிறோம்னு முன் ஜாக்கிரதையாக செவ்வாயன்று சரியா வரதில்லைனு நினைக்கிறேன். கௌதமன் சார் அவராக இருக்குமோ/இவராக இருக்குமோனு சொல்லிக் குழப்புகிறார். ஆனால் அவர் தெளிவாக யார்னு தெரிந்து கொண்டு இருக்கார். :)))))
பதிலளிநீக்குஅதே அதே கீதாக்கா
நீக்குகீதா
:))))
நீக்கு"அமா" இந்தச் செல்லப் பெயர் தான் ஶ்ரீராமாக இருக்குமோ யூகிக்கச் சொல்கிறது. அவரும் ஊட்டிக்குப் போயிருப்பாரே/அக்கா/மாமா வீட்டுக்கு.
பதிலளிநீக்குஅக்கா போகாமலும் கதை எழுதலாமே....படங்களில் பார்த்ததை வைத்து...கற்பனை இருந்தால் போதும்
நீக்குஸ்ரீராமும் எழுத சான்ஸ் இருக்கு. இந்தப் பகுதியைப் பொருத்தவரை கௌ அண்ணாவின் சாயல்!!!! நிறையத் தெரிகிறது
கீதா
யூகங்கள் மேகங்களாக வலம் வருகின்றனவே !!
நீக்குசென்ற வார மின்நிலாவில் கடைசிப் பக்கத்தில்..
பதிலளிநீக்குஒரு பெண் நிற்கிறாள். இதே போல் ஒரு விளம்பரம் கூட வந்திருப்பதால் இந்தப் படம் என்ன சொல்ல வருகிறது என்பது எனக்குப் புரியவில்லை.
நீக்குஇந்தப் படம் சென்ற வார பதிவுகள் ஒன்றிலும் இல்லை என்பது முதல் விஷயம்.
பதிலளிநீக்குஅதற்கு முந்திய வாரங்களிலும் கடைசிப் பக்கம் படங்கள், ஃபோட்டோக்கள் இடம் பெற்றிருக்கின்றன. இந்தக்குறிப்பிட்ட மின் நிலாவுக்கு முந்தைய வார மின் நிலாவில் கே.ஜி.ஒய்.ராமன் அவர்களின் ஃபோட்டோ இடம் பெற்றிருந்த நினைவு.
நீக்குஇல்லை. அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை இந்த பெண் படம் வெளியாகும் பாருங்கள்.
நீக்குஅடுத்த வாரமும் கடைசிப்பக்கம் ஏதேனும் படம் வரலாம்/வராமலும் இருக்கலாம். மற்றபடி அந்தப் படத்துக்கும் இந்தக் கதைக்கும் சம்பந்தம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.
நீக்குசெவ்வாய்க் கிழமை கதைக்கு சம்பந்தமில்லாதவைகளை எழுதுவது தானே நம் வழக்கம்? அந்த வழக்கம் தான் தொடர்கிறது. :))
நீக்குஅப்படிப் போடுங்க அரிவாளை !!!
நீக்குநான் ஆரம்பிக்கவில்லை. :)))))
நீக்கு:))
நீக்குகதையை எழுதியது நெல்லைத் தமிழன் என்று நினைக்கிறேன்.
பதிலளிநீக்குஅவர் இயற்கை சூழ்ந்த தாளவாடியில் வசித்து இருக்கிறார் முன்பு.
இடி , மின்னலில் தெரியும் மோகினி வேறு அவருக்கு பிடித்த நடிகையாக இருக்கிறார்.
படம் நன்றாக வரைய தெரியும் அவருக்கும். நம்மை குழப்ப கெளதமன் சார் பாணி ஓவியம் வரைந்து மேலும் நம்மை குழப்புவது போல இருக்கிறது.
கதை நன்றாக போகிறது.
தொடர்கிறேன்.
ஆமாம், நெல்லைக்கும் திகிலூட்டும்படி எழுத வரும். சில இடங்களில் அவரை நினைவூட்டுகிறது. அவரும் படம் வரைவார்தான். ஆனால் இது நிச்சயம் கௌதமன் சார் வரையவில்லை.
நீக்குஓஹோ அதான் நெல்லை இந்தக் கதை எழுதியதால் தான் ரொம்ப நாள் ப்ளாகிற்கு அட்டெண்டன்ஸ் கொடுக்காமல் இருந்தாரோ?!!!!
நீக்குகீதா
அவர்தான் (சகோதரர் நெல்லைத் தமிழர்) இந்த மாதிரி தொடர் கதையானால், முதலிலிருந்து படிக்க மாட்டேன். முற்றும் பகுதி வந்ததும்தான் முழுதாக படிப்பேன் எனச் சொல்லி விட்டாரே... எப்படி கருத்துகள் அளிக்க வருவார்.? ஒருவேளை அவரும் இந்த மறைந்திருக்கும் ஆசிரியர் கோதாவில் குதித்திருக்கிறாரோ என்னவோ?:)
நீக்கு/ஓஹோ அதான் நெல்லை இந்தக் கதை எழுதியதால் தான் ரொம்ப நாள் ப்ளாகிற்கு அட்டெண்டன்ஸ் கொடுக்காமல் இருந்தாரோ?!!!!/
நீக்குஉண்மைதான் கீதா ரெங்கன் சகோதரி. அன்று என் பதிவில் கூட ரொம்ப நாட்கள் இணையத்தில் வராமல் இருந்ததற்கு இன்று நீண்ட கருத்துரைகள் போடுகிறேன் என்று சொல்லியிருந்தார்.அவர்தான் கதை எழுதி,படம் வரைந்து அனுப்பி என பிஸியாக இருந்திருப்பார் போலும். உங்கள் கருத்தை பார்த்த பின்தான் லேசாக சந்தேகம் உதித்து வலுக்கிறது. அடுத்த வாரம் ஒரு உத்தேசமாக ஆசிரியர் யாரென வெளிப்பட்டு விடும். ஹா ஹா.
ஆஹா - நெல்லையின் வேடம் கலையத் தொடங்கிவிட்டது!!
நீக்குஜன்னல் வழியாக பார்த்த காட்சியில் மின்னல் வெட்டுகிறது, மழை பெய்கிறது, அந்த பெண் தண்ணீர் ஊற்றுவது போல தெரிகிறது. அப்புறம் அருவியாக ஓடி வருவது போல இருக்கிறது. இரண்டு மூன்று இடங்களில் சிவப்பு திட்டு தெரிகிறது. அது என்ன சிவப்பு?
பதிலளிநீக்குமலை விளிம்பில் வீடு இருக்கே! மின்னல் வெளிச்சத்தில் இவ்வளவு அழகாய் பசுமை தெரிகிறது!
நீங்க சொன்னப்புறமாத் தான் போய்க் கவனிச்சேன் சிவப்புத் திட்டை. ரொம்ப லேசாகத் தெரிகிறது. பசுமை தெரிவது எனக்கும் ஆச்சரியமாய் இருந்தது, அதுவும் மின்னல் வெளிச்சத்தில். ஏற்கெனவே தி/கீதா இதைக் கவனித்து நிறங்கள் தெரியுமா எனக் கேட்டுவிட்டதால் நான் எதுவும் சொல்லவில்லை.
நீக்குநீங்கள் சொன்னபிறகு கீதாரெங்கனின் பதிலை படித்தேன்.
நீக்குகலர் படத்தில் இப்போது காட்டுவது போல பசுமை தெரிகிறது போலும்!'முன்பு சினிமாவில் இருட்டு என்றால் இருட்டுதான் அதுவே நம்மை பயமுறுத்தும். இப்போது இருட்டை காட்டினால் பயமில்லை, அதுக்கு பதிலாக பயபடுத்தும் இசையை கொடுக்கிறார்கள்.
சுவையான கருத்துப் பரிமாற்றங்களுக்கு நன்றி.
நீக்குசீனாவில் ஒரு மலைக்கு ஏணியில் ஏறி போவார்கள் மக்கள் ! அதை பார்த்து விட்டு தூங்கி கனவு வந்து விட்டதோ ! அதுதான் இந்த தலைப்பு போல கதைக்கு.
பதிலளிநீக்குஅந்த மோகினியும் வெள்ளை சேலை அணிந்து இருக்கவில்லை, சீன உடைதான் அணிந்து இருக்கிறார். நீண்ட கவுன் போல !(மேக்ஸி)
பேயோட உடை போல!
நீக்கு'பேய்களுக்கு உடை தைக்கும் டெய்லர் யார்' என்று புதன் கேள்வி கேட்காமல் இருந்தால் சரிதான்!
நீக்குஅட? இது கூட நல்ல யோசனை தான். தோணவே இல்லையே! :)))))
நீக்கு:)))
நீக்குகதை சுவாரசியமாகத் தொடங்கி இந்த இரண்டாம் பகுதி கொஞ்சம் பதுங்கி இருக்கிறது போல் தெரிகிறது. ஒரு வேளை மோகினியின் பாய்ச்சல் அடுத்து பகுதியில் இருக்குமோ அதற்காக இப்போது பதுங்கி இருக்கிறதோ?
பதிலளிநீக்குதுளசிதரன்
நானும் அப்படித்தான் நினைக்கிறேன். பார்ப்போம்.
நீக்குமோகினி யாரிடம் பாயப்போகிறதோ ?
பதிலளிநீக்குயார் மோகினியை படைத்திருப்பார் என்பதில் சுவாரசியமான அலசல் . மோகினி வந்து படைத்தவரை பிடிக்காத பட்சத்தில்:) படைத்தவர் வெளியே வந்து விடுவார் வாசகர்கள் பிடித்து ஆட்டி விடுவார்கள் போல் தெரிகிறது. :))
:))))
நீக்கு