காத்திருந்ததுதான் மிச்சம். அன்று எதுவும் நடக்கவில்லை. யாரும் வரவில்லை. நடுவில் சென்ற வாரம் படித்து விட்டு என் அக்கா சொன்னது :
"இதில் குடும்பத்தினர்தான் அமர்வார்கள். ஆரம்பிக்கும்போது ஸ்வாமி படமும், அவர்கள் குலதெய்வம் படமும் வைத்து, தீபம் ஏற்றிதான் ஆரம்பிப்பார்களாம். யாரை அழைக்கிறோமோ அவருக்கு மிகவும் பிடித்த நபர் அந்தக் குழுவில் இருக்க வேண்டும். பயம் இருப்பவர்களை பக்கத்தில் வைத்துக் கொள்ள மாட்டார்களாம். ஒருமுறை அவர்கள் வீட்டில் டியூஷனுக்கு வந்த பையன் ஒருவன் வந்து ஆர்வத்தில் உடன் அமர, அவனுக்குத் தெரிந்த ஆவி வந்து விட்டதாம்! அது, தான் எப்படி கொலையுண்டோம் என்றெல்லாம் சொல்ல ஆரம்பித்ததும் பேஸ்தடித்துப் போன பையனை தகுந்த துணையுடன் வீட்டுக்கனுப்பி வைத்தார்களாம். அமாவாசையில்தான் பாட்டி இதில் உட்காருவாராம். தாத்தாவைதான் அழைப்பார்களாம். அதாவது எங்கள் தாத்தாவை. அவரும் வந்து லாஜிக்களாக பதில் சொல்லி இருக்கிறார் என்று சொல்கிறாள் என் அக்கா. கையில் ஒரு பாட்டில் மூடி போல வைத்துதான் முயற்சி செய்வார்களாம். ஆங்கிலத்தில்தான் பதில்கள் இருக்குமாம். அதுவும் ஓரிரு வார்த்தைகளில், ஆமாம் இல்லை என்பது போல. சர்க்கரை போட்டு ஒரு காஃபி சர்க்கரை இல்லாத ஒரு காஃபி அங்கே வைத்திருப்பாராம் பாட்டி. அந்தப் பையன் சம்பவத்துக்குப் பின் ஒருமுறை மட்டும் அழைத்துப் பேசிவிட்டு அப்புறம் முயற்சிக்கவில்லையாம். பாட்டி, அத்தை, என் அக்கா போர்டில் அமர்வார்களாம். என் அக்கா அப்போது பள்ளி மாணவி.
சரி இங்கு வருகிறேன். நீண்ட நேரம் முயற்சித்தும் ஒன்றும் நடக்கவில்லை என்றதும் போர்டை எடுத்து ஓரமாக வைத்து விட்டு, கிண்டலும் கேலியாக பேசிக்கொண்டு படுக்க ஆயத்தமாகி இருக்கிறார்கள். சத்தமில்லாமல் ஏதாவது ஆவி இங்கு வந்து திரும்பிச் செல்லாமல் தங்கி இருக்கும் என்றெல்லாம் பேசிக்கொண்டு விளக்கணைத்து படுத்திருக்கிறார்கள்.
விளக்கணைத்தும் மெல்லிய குரலில் தூங்கும் மற்றவகர்களுக்கு இடைஞ்சலில்லாமல் பேசிக்கொண்டிருந்திருக்கிறார்கள்.
"அப்படி ஏதாவது ஆவி இங்கே இருந்தால் கூட நமக்கு லாபம்தான்"
"ஏன்?"
"அந்தத் திருடர்கள் வந்தால் இது கவனித்துக் கொள்ளவுமில்லை?"
"ஆவியே அவங்களைக் கண்டு பயந்து ஓடிவிடுமப்பா"
இன்னொருவரிடம் அதட்டல் வந்தது. "ஏய்.. சும்மா படுங்கப்பா.. தூங்குங்க.. சும்மா பயமுறுத்திகிட்டு..."
பேசியவர்கள் சிரித்தபடி மௌனமாக, அறை நிசப்தமானது. மெல்ல தூக்கம் வந்து எல்லோரையும் அனைக்கத்தொடங்கியது.
நடு இரவு நெருங்கும் நேரம்..ஒரு வினோதமான சப்தம். கொஞ்ச நேரம் கழித்து ஏதோ தரையில் உருளும் சத்தம். கண்திறந்து பார்த்தாலும் எதுவும் தெரியாத அமாவாசை இருட்டு. எல்லோரும் விழித்துக் கொண்டார்கள்.
ஆனால்...
============================================================================================
மனசாட்சியம் - 8
KGY Raman
தற்பொழுது கிட்டத்தட்ட மறக்கப் பட்டுவிட்ட " திண்ணைப் பள்ளிக்கூட " த்திற்கு நான் போய் வந்திருக்கிறேன் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா ?
நான் போய் வந்தது உண்மைதான். அப்போது எனக்கு வயது நான்குக்கு மேல் ஐந்துக்குக் கம்மி. என்ன ஒரு விஷயம், அந்தப் பள்ளிக் கட்டடத்தில் திண்ணையே இல்லை. திண்ணை இல்லாத திண்ணைப் பள்ளிக்கூடம். ஆக்ஸிமோரான்.
இந்தப் பள்ளிக்கூடத்திற்கு கணவன் மனைவியாக இருந்த இரண்டு பேர் ஆசிரியர்கள். அவர்களுக்கு 8 மாதக் கைக்குழந்தை ஒன்று.
சுமார் முப்பது சிறுவர் சிறுமியர் அங்கே இருந்தோம். இரண்டே இரண்டு ஆசிரியர்கள் என்பதால் மாணவர்களைப் பாதியாகப் பிரித்து வைத்துக் கொண்டு பாடம் சொல்லிக் கொடுப்பார்கள். ஒரு பாதி மற்ற பாதியை விட கொஞ்சம் சீனியர் என்பதால் பாடங்களும் வேறு மாதிரியாக இருக்கும். அரிச்சுவடி வகுப்பு மாணவர்களுக்கு ஸ்லேட்டில் எழுதும் வேலை கிடையாது. காதால் கேட்டதை வாயால் சொல்ல வேண்டும். அது மட்டுமே பயிற்சி.
சீனியர் வகுப்புக்கு ஆனா ஆவன்னா சிலேட்டில் எழுதும் மகத்தான வேலை. மாணவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு மிகவும் மெதுவாக தமிழ் உயிர் எழுத்துக்களை எழுதுவதைப் பார்க்கும்போது சற்று மன சங்கடம் ஏற்படும் என்று இப்பொழுது தோன்றுகிறது.
நான் சொல்ல வந்த திண்ணைப் பள்ளி சுவாரஸ்யம் அந்தப் பாடத்திட்டத்தைப் பற்றியது அல்ல.
பள்ளிக் கட்டடத்தின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்ததுமே ஒரு 25*15 அடி அளவிலான கூடம். அதன் பின்னே சிறு முற்றம். ஒருபுறம் சமையலறை. எதிர்ப்புறம் படுக்கைக் கூடம். (அதுவும் ஒரு திறந்த வெளிக்கூடம் தான்). இந்தக் கூடத்தில் ஒரு ஏணைஅல்லது தூளி என்று அறியப்படும் குழந்தைகள் தூங்கும் வசதி செய்யப்பட்டு இருக்கும்.
ஆசிரியர் ஆசிரியை இருவரும் கணவன் மனைவியர் என்பதால் அவர்கள் அங்கேயே குடித்தனம் இருந்தார்கள்.
கல்வி கற்பித்தலும் வீட்டு வேலைகளைகா கவனித்துக் கொள்வதும் ஏக காலத்தில் நடக்கும். தூளியில் இருக்கும் குழந்தை அழுதால் சற்று வயது வந்த பெரிய மாணவனைப் பார்த்து "நீ போய் குழந்தை ஏணையை ஆட்டு" என்று டீச்சர் உத்தரவு போடுவார். பையனும் பரமசிரத்தையாக அந்தப் பக்கம் போய் குழந்தையை சாந்தப் படுத்தித் தூங்க வைத்து விட்டு வர வேண்டும். இது மட்டுமில்லாமல் அடுப்பிலே வெந்து கொண்டிருக்கும் சாதத்தைக் கிளறுவது சாம்பார் என்ன ஆயிற்று என்று பார்ப்பது போன்ற சிறு வேலைகளும் இந்த பெரிய பையனுக்கு அவ்வப்போது தரப்படும்.
இந்த மாதிரி வேலைகளில் என்னை மிகவும் கவர்ந்தது பற்றி இங்கே சொல்ல விழைகிறேன்.
ஆசிரியை உள்ளே போய் ஒரு சிறு கூடையில் வெங்காயத்தை எடுத்து வந்து ஒவ்வொரு மாணவனிடம் ஒவ்வொரு வெங்காயத்தை கொடுத்து உரிக்கச் சொல்கிறார். சற்று நேரமான பின் காலிக் கூடையை அந்தப் பெரிய பையன் கையில் கொடுத்து ஒவ்வொருவரிடமும் இருக்கும் வெங்காயத்தை வாங்கிக் கூடையில் போட்டு எடுத்துக் கொண்டு வரச் சொல்லுகிறார் ! இது கிட்டத்தட்ட அன்றாடம் நடக்கும் திருப்பணி.
அந்தக் காலத்தில் ஸ்கூல் இன்ஸ்பெக்ஷன் என்று ஒன்று இருந்ததில்லை போலும். இந்த ஸ்கூல் கம் வீடு வெற்றிகரமாக நடந்து கொண்டு தான் இருந்தது.
திண்ணைப் பள்ளிக்கூடத்தை அடுத்து, வேறு ஒரு ஊரில் ஆரம்பப் பள்ளியில் ஒண்ணாம்ப்பு என்று அறியப்படும் ஒண்ணாங்கிளாஸ்-ல் சேர்க்கப்பட்டேன். அங்கே இரண்டு ஆசிரியர்கள். ஒருவர் சோமசுந்தரம் பிள்ளை. மற்றவர் சௌந்தரராஜ முதலியார். அந்தக் காலத்தில் ஜாதிப் பெயர்கள் தடை செய்யப்படவில்லை. மாறாக செட்டியாரே முதலியாரே கவுண்டரே என்று எல்லாரையும் அன்பாகவும் மரியாதையாகவும் அழைக்கும் வழக்கம் இருந்தது. அதில் ஏதும் சாதிப் பாகுபாடு அல்லது வெறுப்பு இன்றும் கூட எதுவும் என் கண்ணுக்குப் படவில்லை. நமது அபிமான நடிகர் சிவாஜி கணேசன் கூட தன் நண்பர்களை செட்டியாரே முதலியாரே என்று அன்பாக அழைப்பார் என்பதைப் பார்த்திருக்கிறோம். சரி இதை விட்டு விட்டு விஷயத்துக்கு வருவோம்.
சோமசுந்தரம் பிள்ளை அவர்கள் வகுப்புக்கு வந்தால் உயிர் எழுத்துக்களை சொல்லிக் கொடுக்கும் போது அ, ஆ, இ, ஈ என்று சொல்லாமல் " ஆனா, ஆவன்னா, ஈனா ஈயன்னா " என்று சொல்லிக் கொடுப்பார். முதலியார் அவர்கள் பக்கத்திலேயே இருக்கும் தமது வகுப்பில் இதற்கு பலமான ஆட்சேபங்களைச் சொல்லுவார். பலகையில்
அ
ஆனா
ஆ
ஆவன்னா
என்று எழுதிவிட்டு இது எப்படி இரண்டும் ஒன்றாகும் என்று பலமாக விவாதிப்பார்.
இதற்கு பதிலடியாக பிள்ளைவாள் , "சின்னப் பசங்களுக்கு எப்படிச் சொல்லித் தரணும்கிறது எங்களுக்கு யாரும் சொல்லித் தர வேண்டிய அவசியம் இல்லை ! விக்கல் வந்த மாதிரி இந்த அ ஆ எல்லாம் நமக்கு உதவாது" என்று எதிர்ப் பிரச்சாரம் செய்வார்.
அங்கு ஒரு ஹெட் மாஸ்டர் இருந்து இதை சமரசம் செய்து தீர்த்து வைத்திருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது. ஆனால் அந்த வயதில் ஹெட் மாஸ்டர் என்று ஒருவர் இருந்தாரா என்பதே தெரியவில்லை.
========================================================================================
மலையாளப்படமான போஸ்ட்மார்ட்டம் படத்தை தமிழில் வெள்ளை ரோஜா என்று எடுத்து வெற்றி பெறறார்கள் 1983 ல். ஜெகந்நாதன் இயக்கத்தில் சிவாஜி நடித்த படம். இளையராஜா இசை. நா காமராசன் பாடல். SPB ஜானகியம்மா குரலில் ஓ மானே மானே மானே
======================================================================================
நிர்வாண நகரம் கதையில் சுஜாதா....
ராணி படிக்கறதும் புஸ்தகம் பைண்டு பண்றதும் அவ்வளவு குத்தமா? சுஜாதா இப்படி சொல்லிட்டாரே.... நிறைய புத்தகங்கள் பைண்டு பண்ணி வச்சிருக்கறதாலதான் என்னால இதெல்லாம் போட முடியறது!
சரி, விடுங்க.. கதைலதான சொல்லி இருக்கார்? அது அவரோட கருத்து அல்ல,
வனஜாவோட கருத்துன்னு வச்சுப்போம்!
வனஜா யாரு? நாயகனுக்கு காதலி, மனைவியாகப்போகிறவள்னாலும் அவள் கதையின் நாயகி அல்ல.
இதெப்படி இருக்கு?!
கதைப்போக்குல சுஜாதாவே ஒரு இடத்துல கன்பியூஸ் ஆகி வனஜாவை விமலா ஆக்கி இருப்பார்!
****************************** ***********************
"என்ன சொல்றே வனஜா.. என்னைப்பத்தி உனக்கு...."
"முழுக்கத்தெரியும். அதனாலதான்..."
தலையாட்டினான். "இல்லை வனஜா. என்னை உனக்குத் தெரியாது. நான்... நானில்லை"
"இத பாருங்க.. அப்பா எனக்கு தீவிரமா மாப்பிள்ளை தேடிண்டிருக்கார். அன்னிக்கி அமெரிக்கா அக்கா வந்து பாத்து உயரம் ஜாஸ்தின்னுட்டு போயிட்டாளா? அப்புறம் ஒத்தனை புடிச்சு வச்சிருக்கார். ராஞ்சியில் ஏதோ இன்ஜினியராம். வந்து பார்த்தான். மீசை வச்சுண்டு ஆடு திருடின கள்ளன் மாதிரி முழிச்சான். என்னைப் பார்க்க வந்திருக்கானா, என் தங்கையைப் பார்க்க வந்திருக்கானான்னு அடிக்கடி சந்தேகம் வந்தது. 'உன் ஹாபி என்னன்னான். 'புஸ்தகங்கள்'னேன்.
"நீங்க என்ன படிப்பீங்க'ன்னேன். 'ராணி'யாம். அப்புறம் பத்திரிகையில் வர்ற தொடர்கதை எல்லாம் பைண்டு பண்ணி வெக்கிறதுதான் பொழுது போக்காம்.
மெட்றாஸுக்கு வந்து தினம் ஓரு தமிழ்ப்படமா பாத்துத் தீர்த்துட்டான்.
"இளமை ஊஞ்சலாடுகிறதுல ஸ்ரீப்ரியா ஆக்டிங் எப்படி?"
"லட்சுமி மோகனை கல்யாணம் பண்ணிண்டுட்டாளாமே?"
"ஸ்ரீவித்யா, சுஜாதா எல்லாரும் கல்யாணம் ஆனப்புறமும் நடிக்கிறாளாமே, எப்படி?"
இவனோட நான் ராஞ்சியில் போய் தொடர்கதை பைண்டு பண்ணிண்டு எந்தெந்த நடிகை 'பிள்ளையாண்டிருக்கா'ன்னு தகவல் சேர்த்துண்டு இருக்கணும். வரதட்சிணை வேற......."
========================================================================================
இயக்குநர் மகேந்திரன் சொல்கிறார் :
அழகப்பா கல்லூரியில் நான் படித்துக் கொண்டிருந்த வருடம். கல்லூரியின் கலை விழாவிற்கு தலைமை தாங்கிய மக்கள் திலகத்தின் முன்னால் ஒரு மாணவன் என்ற முறையில் தமிழ் திரைப்படங்கள் பற்றி ஒரு திறனாய்வு சொற்பொழிவு நடத்தும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
என் பேச்சைக் கைதட்டி ரசித்த அவர் மேடையை விட்டு இறங்கும் முன் என்னைப் பாராட்டி ஒரு பாராட்டுக்கடிதம் எழுதிக் கொடுத்தார்கள். அதை இன்று வரை ஒரு பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறேன்.
பின்னர் சென்னை வந்து சட்டக் கல்லூரியில் படிக்கத் தொடங்கினேன். பொருளாதார நெருக்கடி என்னை படிக்க விடவில்லை.'இன முழக்கம்' என்ற பத்திரிக்கையில் உதவி ஆசிரியராக கொஞ்ச நாட்கள் வேலை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அந்தச் சமயம் எம்.,ஜி.ஆரை அவரது தோட்டத்தில் பத்திரிக்கையாளன் என்ற முறையில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
"நம்மை எங்கே அவருக்கு நினைப்பிருக்கப் போகிறது?" என்று நினைத்துக் கொண்டு மற்ற பத்திரிக்கையாளர்களை மத்தியில் அமர்ந்திருந்தேன். அந்த அபூர்வ மனிதரின் அன்புள்ளம் என்னைக் கண்ட மாத்திரத்தில், "நீங்கள் அழகப்பா கல்லூரி மாணவர்தானே?" என்றாரே பார்க்கலாம்.
நான் என்னை மறந்தேன். என் எதிர்காலம் அங்கே தொடங்கியது. என் நிலைமையைக் கேட்ட அவர் தாயுள்ளத்தோடு எனக்கு உதவி செய்ய முன்வந்தார். மறுநாளே என்னை ஸ்டூடியோவிற்கு வரச் சொல்லி டைரக்டர் காசிலிங்கத்திடம் உதவி டைரக்டராகச் சேர்த்து விட்டார்கள். பிறகு இந்த அநாதையை தங்கள் வீட்டு மாடியில் தங்கச் சொல்லி கதை திரைக்கதை எழுதும்படி ஊக்குவித்தார்கள்.
நானும் உற்சாகத்தோடு எழுதத் தொடங்கினேன். ஒரு நாள் எனக்கு எம்.ஜி.ஆரிடம் இருந்து அழைப்பு வந்தது. என்னைப் பார்த்ததும், "ஆமாம்,நான் எழுதச் சொன்னேன் என்று எழுதிக் கொண்டிருக்கிறீர்கள், வருமானம் என்ன உங்களுக்கு?" என்று கேட்டார்
நான் "இல்லை" என்று சொன்ன மாத்திரத்திலேயே ஒரு தாய் போல என்னைக் கடிந்து கொண்ட அவர், "இதை என்னிடம் முன்னாலேயே சொல்வதெற்கென்ன ?" என்றார். அடுத்த நிமிஷம் என் கை நிறைய பணம் தந்து அனுப்பினார்.
இப்படித் தொடங்கிய அவரது கருணை உதவிகள் போகப்போக என்னை ஒரு மனிதனாக கலைஞனாக மாற்றத் தொடங்கின.
(சினிமா எக்ஸ்பிரஸ் 01.01.82 இதழ்)
- தினமணியிலிருந்து -
=======================================================================================
அதே வெள்ளை ரோஜா படத்திலிருந்து அதே குரல்களில் இன்னொரு பாடல், முத்துலிங்கம் எழுதிய பாடல். 'சோலைப்பூவில் மாலைத்தென்றல்'.. இந்த இரண்டு பாடல்களில் எது முதலிடம் எது இரண்டாமிடம் என்று சொல்ல முடியாது. எது கேட்கிறோமோ கேட்கும்போது அது முதலிடம்.
======================================================================================
நிலா கவிதைகள்!
விடிந்தபின்னும்
விட்டுப் பிரிய மனமில்லாமல்
வீதியிலே நிற்கிறது
நிலா
******
ஜன்னலில் தோன்றும்
ஒரு
மின்னல் முகத்தின்மேல்
காதல் கொண்டு
வேலை நேரம் முடிந்தும்
திரும்பிச் செல்லாமல்
வெளியே காத்திருக்கிறது
வட்ட வான்நிலா
********
உன் முகம் ஜன்னலில்
கண்டதும்
நகர மனமின்றி
நின்று போனதடி
நிலவும்.
********
பித்தனைப் போல்
சித்தம் கலங்கி
நிற்கிறது நிலவு -
ஜன்னலில் உன் முகம்
==========================================================================================
சிவசங்கரி பேட்டி....
=========================================================================================
தினமணி கதிரில் அக்கரை சிரிப்பு என்று தொடர்ந்து வந்து கொண்டிருந்ததது. பாதி எனக்குப் புரியாது!






காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா... வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம்.
நீக்குசில நேரங்களில் பதிவு நீளம்னு தோணுது. இன்று பதிவு சட்னு முடிந்ததுபோல் இருக்கிறது. இதெல்லாம் அன்றைய மனநிலையைப் பொறுத்ததுன்னு நினைக்கிறேன்.
பதிலளிநீக்குஅக்கரை சிரிப்புகள் கவர்ந்தன
வாங்க நெல்லை.. வரவர இன்ட்ரஸ்ட் குறைந்துகொண்டே வருகிறது!
நீக்குஅப்படிச் சில நேரங்கள் தோன்றத்தான் செய்யும், மற்ற முக்கிய வேலைகள் நம்மைச் சூழ்ந்துகொள்ளும்போது. இருந்தாலும் தொடரவேண்டியதுதான்.
நீக்குபகிர்வதே வீண் என்று தோன்றுகிறது. தினசரி காலை குட்மார்னிங் போட்டு விட்டு விட்டு விடலாம்!
நீக்குஎன்ன ஆச்சு ஸ்ரீராம்? பேத்தி பிறந்திருக்கா. உங்க குடும்பத்தில் முதல் முதலாகப் பெண் வாரிசு. ஆகவே ஆடணும், பாடணும், கொண்டாடணும்.
நீக்குஎன்ன ஆச்சு ஸ்ரீராம்? பேத்தி பிறந்திருக்கா. உங்க குடும்பத்தில் முதல் முதலாகப் பெண் வாரிசு. ஆகவே ஆடணும், பாடணும், கொண்டாடணும்.
நீக்கு:))
நீக்கு//ஆகவே ஆடணும், பாடணும், கொண்டாடணும்.// என்னா சொல்றாங்க இந்த கீசா மேடம்? இதைப் பண்ணிக்கொண்டிருப்பதால்தானே எழுதுவது சோர்வாக இருக்கிறது என்று சொல்கிறார் ஹா ஹா ஹா
நீக்குஒய்ஜா... மொத்தமாகவே ஒரே வாரத்தில் எழுதியிருக்கலாம்.
பதிலளிநீக்குஅப்புறம் மற்ற வாரங்களில் எதை எழுதுவது? சுருக்கமாக எழுதினால் சுவாரஸ்யம் இல்லையே...
நீக்குதிண்ணைப் பள்ளிக்கூடம் சுவாரசியம்.
பதிலளிநீக்கு(Y)
நீக்குஎம் ஜி ஆர் எத்தனை மனிதர்களுக்கு உதவியிருக்கிறார்... எதையும் எதிர்பாராமல். மிக ஆச்சர்யமான மனிதர்.
பதிலளிநீக்குசும்மாவா அவரை கொடுத்துச் சிவந்த கரம், பொன்மனச் செம்மல்னுலாம் சொல்றாங்க.
உண்மைதான். MGR பாணியில் வேறு சில நடிகர்களும் உதவி இருக்கிறார்கள். வெளியே தெரியவில்லை.
நீக்குஇன்றைக்கு என்ன... சிவசங்கரி சொன்னதைத் தட்டச்சு செய்யவில்லை?
பதிலளிநீக்குபார்க்க முடியுமே, கேட்க முடியுமேன்னுதான்.
நீக்குஅன்பின் அனைவருக்கும் இந்த நாள் இனியதாகட்டும்.
பதிலளிநீக்குவாங்க அம்மா.வணக்கம். நன்றி.
நீக்கு''ஒருமுறை அவர்கள் வீட்டில் டியூஷனுக்கு வந்த பையன் ஒருவன் வந்து ஆர்வத்தில் உடன் அமர, அவனுக்குத் தெரிந்த ஆவி வந்து விட்டதாம்! அது, தான் எப்படி கொலையுண்டோம் என்றெல்லாம் சொல்ல ஆரம்பித்ததும் பேஸ்தடித்துப் போன பையனை தகுந்த துணையுடன் வீட்டுக்கனுப்பி வைத்தார்களாம். '' ஸாமீ.:( அதி பயங்கரம். இந்த வேலை நாங்களும் செய்திருக்கிறோம்.
பதிலளிநீக்குஹா.. ஹா.. ஹா... பயங்கர அனுபவங்கள்!
நீக்குஅக்கரைச் சிரிப்பு வெகு ஜோர்.
பதிலளிநீக்குஎனக்கு அவை பாதி புரியவில்லை அம்மா.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை. வொய்ஜா போர்டு திகில் கதையாக சுவாரஸ்யமாக உள்ளது. உவ்கள் அக்கா அவர்கள் சொன்னது அதற்கு மெருகேற்றுகிறது. தொடர்கிறேன்.
நிலவு கவிதைகள் நன்றாக உள்ளது. நிலவு கவிதைகளை படித்து விட்டு நான் ஜன்னல் வழியாக பார்த்த போது, பிறைநிலவு வெள்ளியை வரவேற்க கட்டியம் கூறியபடி காத்துக் கொண்டிருந்தது. இன்று மேக மூட்டங்கள் தடையேதும் கூறாததால் அதற்கு சந்தோஷமாம். நகர மனமின்றி நானும் ரசித்தபடி நின்றேன். பகிர்வுக்கு மிக்க நன்றி
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஆஹா கவிதை ரசிக்க வைக்கிறது நிலாவை...
நீக்குசிவசங்கரி பேட்டி வெகு சுவாரஸ்யம்.. என்ன ஒரு புத்திசாலித்தனம் பேச்சில்!!! அதுவும் ஜி டி நாயுடு பற்றி அவர் விவரித்திருப்பது மிக மிக ரியாலிஸ்டிக். இவரும் அபூர்வ மனுஷி. அவரும் யுக புருஷர். மிக நன்றி மா. இந்த இண்டர்வியூ வெகு சுவாரஸ்யம்.
பதிலளிநீக்குநன்றி அம்மா.
நீக்கு''இவனோட நான் ராஞ்சியில் போய் தொடர்கதை பைண்டு பண்ணிண்டு எந்தெந்த நடிகை 'பிள்ளையாண்டிருக்கா'ன்னு தகவல் சேர்த்துண்டு இருக்கணும். வரதட்சிணை வேற......." ஹைய்யோ ஹைய்யோ. சிரித்துக் கொன்றுவிடுகிறார் சுஜாதா. என்ன ஒரு லாவகம் எழுத்தில்!!! சூப்பர் மேன்.
பதிலளிநீக்குஆமாம். தகுந்த இடங்களில் கிண்டல் கேலி நையாண்டி...
நீக்குஉங்கள் கவிதைகள் மிக அழகு.
பதிலளிநீக்குபழைய பாடல் சீர்காழியின் ''வானமீதில் நீந்தியோடும் வெண்ணிலாவே// நீதான் வந்ததேனோ ஜன்னலுக்குள் வெண்ணிலாவே!!!!!!!!!!!
நிலா நம் வாழ்வின் ஆதாரம்.
நன்றிம்மா.. சீர்காழி பாடலா? கேட்ட நினைவில்லை. தேடி கேட்டுப் பார்க்கிறேன்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய மனசாட்சியம் பகுதியான திண்ணைப்பள்ளிக்கூடத்தை ரசித்தேன். திரு ராமன் அவர்கள் அவரது அனுபவங்களை சுவைபட சொல்லியிருக்கிறார். காலங்கள்தாம் எப்படியெல்லாம் மாறியிருக்கிறது. அப்போதைய ஆரம்ப குருகுலவாசம் திண்ணைப்பள்ளிகளாக பரிமளித்தது இல்லையா? அங்கும் குருவிற்கு பணிவிடைகள் செய்தபடி மாணாக்கர்கள் கல்வி கற்றனர் என்பதை பல இடங்களில், படித்தும், பார்த்தும் அறிந்திருக்கிறோம். சுவாரஸ்யமான பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
(Y)
நீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குவாங்க செல்வாண்ணா வணக்கம்.
நீக்குநலம் வாழ்க..
பதிலளிநீக்குநலமே விளைக
நீக்குஇரண்டு நாட்களாக சற்றே உடல் நலக் குறைவு...
நீக்குசென்று வந்த நீண்ட பயணம் காரணமாக இருக்கும்.
நீக்குவிரைவில் பூரண நலம் பெற பிரார்த்தனைகள்.
நீக்குஉடல்நிலையில் கவனம் வைக்கவும்.
நீக்குதிரு ராமன் அவர்கள் பள்ளிக்கூடம் போலவே ஒரு இடத்தில் நானும் படித்தேன். அதே கூடம் அதே முற்றம். அதே தூளி. வெங்காயத்துக்குப் பதில் ஒரு கோழி.
பதிலளிநீக்குஎங்கள் தலைமுறை பார்க்காதது.
நீக்குகடவுளே! கோழியை உரிக்கச் சொல்லலை தானே? !!!!!!!!!!!!!!!
நீக்குஇல்லம்மா கீதா. அதுக்கு என்று பெரிய பெண்கள் பசங்கள் இருந்தார்கள்.
நீக்குமீதி பதில்கள் காலைதான்.எல்லோருக்கும் இனிய நாளுக்கான வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநன்றிம்மா.
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாங்க கோமதி அக்கா.. வணக்கம்.
நீக்குவொய்ஜா போர்டு, ஆவியின் வருகை, அமாவாசை இருட்டு என்று திகில் படம் பார்ப்பது போல நன்றாக சொல்லி இருக்கிறீர்கள். நள்ளிரவில் வினோதமான சப்தம் எதனால் என்பதை கேட்க ஆவல்.
பதிலளிநீக்குதொடர்ந்து விடலாம் அக்கா!
நீக்குமனசாட்சியம் - 8 அந்த கால திண்ணை பள்ளிகூடம் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது.
பதிலளிநீக்குபழைய காலத்தில் திண்ணை பள்ளிக்கூடம் குருகுலத்தில் குருவுக்கு சேவை செய்து கொண்டே படிக்க வேண்டும் அது போல இருந்து இருக்கிறது.
என் கணவர் சிறு வயதில் பாட்டு கத்துக் கொள்ள போன போது பாட்டு வாத்தியார் மனைவி இப்படி குழந்தைகளை பார்த்து கொள்ளும் பொறுப்பை கொடுத்தார்கள் என்று சொல்லி இருக்கிறார்கள்.
கிட்டத்தட்ட குருகுலம் மாதிரி!
நீக்குஅநேகமாக ட்யூஷன் போனாலும் கூட இப்படித் தான். எங்க பெண்ணைக் கணக்குக்காக ஒரு ஆசிரியையிடம் சேர்த்திருந்தோம். அவங்க இப்படித் தான் தூளியில் இருக்கும் குழந்தைக்குப் பணிவிடைகள் செய்ய எங்க பெண்ணைப் பயன்படுத்திக் கொண்டிருக்காங்க. ஒரு நாள் தற்செயலாகப் பார்த்தோம். பாடமே நடத்தவில்லை. ஹோம் வொர்க் எல்லாம் செய்யச் சொல்லலை. அப்போத் தான் தினம் அவள் ஏன் ஹோம் வொர்க்கே செய்யாமல் வருகிறாள் என்பது புரிந்தது. அப்புறமா நிறுத்திட்டோம்.
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்குநல்ல வேளை.. சின்ன வயதிலேயே உங்கள் பெண்ணுக்கு சமைக்கக் கற்றுக்கொடுத்திருக்கவில்லை. அல்லது கற்றுக்கொடுத்திருந்து அந்த ஆசிரியைக்குத் தெரிவித்திருக்கவில்லை.
நீக்கு:)
நீக்குவெள்ளை ரோஜா படத்து இரண்டு பாடல்களும் அடிக்கடி கேட்ட பாடல்கள்.
பதிலளிநீக்குசுஜாதா கதை பகிர்வு,இயக்குநர் மகேந்திரன் எம்.ஜி.ஆரை பற்றி சொன்னதை படித்தேன்.
உங்கள் நிலா கவிதைகள் நன்றாக இருக்கிறது.கோமதியின் காதலன் படத்தில் ஜன்னலில் தெரியும் காதலியை பற்றி பாடும் சீர்காழி கோவிந்த ராஜன் பாடல் நினைவுக்கு வருகிறது.
ஜன்னலில் தோன்றும்
ஒரு மின்னல் முகத்தின்மேல் காதல் கொண்டு
வான் நிலா நகரமனமின்றி நின்று போனது நல்ல கற்பனை.
வல்லிம்மா சொன்ன பாடலையே நீங்களும் சொல்லி இருக்கிறீர்கள். கவிதையை ரசித்திருப்பதற்கு நன்றி.
நீக்கு//கோமதியின் காதலன் படத்தில் ஜன்னலில் தெரியும் காதலியை பற்றி பாடும் சீர்காழி கோவிந்த ராஜன் பாடல் நினைவுக்கு வருகிறது.//
நீக்குஓகோ! அப்படியா? நான் சினிமாவெல்லாம் பார்த்தது இல்லை. ஆனால் நாவலைப் பல தரம் படிச்சிருப்பேன். என் குழந்தைகளுக்குப் படிச்சும் நிறையத்தரம் சொல்லி இருக்கேன். ஆனால் இது படமாக வந்தப்போ டி.ஆர்.மஹாலிங்கம் தான் கதாநாயகன் எனக் கேள்வி. அவரே நல்ல பாடகர். அவருக்குப் பின்னணியா சீர்காழி? பாடலைக் கேட்கணும்.
இன்றைய சினிமாவோ பாடல்களோ கேட்டதில்லை. மானே, மானே பாட்டு மட்டும் கொஞ்சம் கொஞ்சம் நினைவில் இருக்கு.
திரு ராமன் அவர்களின் திண்ணைப்பள்ளிக்கூட நினைவுகள் அருமை. என் அப்பா, பெரியப்பாக்கள், தாத்தாக்கள், ஒரு மாமா ஆகியோர் திண்ணைப் பள்ளிக்கூடம் என்பார்கள். அப்பாவோட தமிழாசிரியர் வேப்பத்தூர் கிருஷ்ண ஐயரோ ஏன்னமோ பெயர், பின்னாட்களில் நாங்கள் குடி இருந்த வீட்டில் தான் தன் பெண், மாப்பிள்ளையோடு குடி இருந்தார். அவருக்குச் சென்ற/செல்லும் இடமெல்லாம் பயங்கரமாக மதிப்பும், மரியாதையும். பஞ்சகச்சம், குடுமி, மேல் வேஷ்டி தான். சட்டை எல்லாம் இல்லை. எளிமையின் உருவம்.
இப்பல்லாம் திண்ணைப் பள்ளிக்கூடம் இருந்தால் அப்ரூவ் பண்ணவே மாட்டாங்க...
நீக்குஇப்போல்லாம் வெங்காயம் காய்கறி திருத்த கணவர் இருக்கும்போது திண்ணைப் பள்ளிக்கூடம் எதற்கு?
நீக்குஇந்தக்காலத்து ட்யூஷன் எல்லாம் திண்ணைப் பள்ளி போலத் தானே! அதில் வேதம் கற்கும் முறையில் வாய் மூலமாகவே பாடங்கள் நடத்தி மனப்பாடம் செய்ய வைச்சிருக்காங்க. பின்னர் தான் எழுத்து எல்லாம் சொல்லிக் கொடுத்திருக்காங்க. நம் நாட்டுப்பழைய குருகுல முறைக் கல்வி சிறந்தது என்பதே என் தனிப்பட்ட கருத்து.
நீக்குவெங்கட் தன் தளத்தில் இந்த பாடலை பகிர்ந்து இருந்தார் அதில் சாவித்திரி டி.ஆர் ராமசந்திரன் கதாநாயகன். பாட்டுக்காக அந்த படத்தை யூடியூப்பில் பார்த்தேன் நல்ல சிரிப்பு படம்.
நீக்குசிவசங்கரி பேட்டி கேட்டேன் நன்றாக சொல்லி இருக்கிறார்.
பதிலளிநீக்குதினமணி அக்கரை சிரிப்பு கடைசி படம் இரண்டு தடவை வந்து இருக்கிறது.
ஒன்றை நீக்கி விட்டேன். நன்றி.
நீக்கு"Stand up, be bold, be strong. Take the whole responsibility on your shoulders" - Swamy Vivekananda.
பதிலளிநீக்குGood morning!. மேற்படி வாக்கியம் ஸ்ரீராமுக்கு சொல்லப்படதல்ல, ஏதாவது பொன்மொழியோடு தொடங்கலாம் என்று தோன்றியது. கண்ணில்பட்ட வாக்கியத்தை பகிர்ந்தேன்.
ஏதோ காரணங்களால் வெங்கட் நாகராஜ் அவர்கள் இப்போதெல்லாம் பதிவு எழுதுவதில்லை. அதனால் அவர் பேடன்ட் ஆன, இன்றைய வாசகம், பொன்மொழியை நீங்கள் எடுத்துக்கொண்டு விட்டீர்களா?
நீக்கு// மேற்படி வாக்கியம் ஸ்ரீராமுக்கு சொல்லப்படதல்ல, //
நீக்குஹா.. ஹா.. ஹா.. நல்லாயிருக்கு. நன்னா சொன்னேள் போங்கோ...
ஆமாம். நாமே முயன்றுதான் மாற்றிக்கொள்ள வேண்டும்.
நீக்குமறுக்கிறேன் யுவர் ஆனர்!, வெங்கட் அவர் தளத்தில்தான் பொன்மொழிகள் எழுதுவார்,எ.பி.யில் அல்ல, மேலும் விவேகானந்தர் பொன்மொழிக்கு நாம் எப்படி பேடன்ட் கேட்க முடியும்?
நீக்குஅதானே!
நீக்குஇன்றைய பதிவு சற்று சோர்வாக இருந்தாலும், நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குபாடல்களில் " ஓ மானே மானே மானே உன்னைத்தானே.." ஞாபகம் இருக்கிறது. இன்னொரு பாட்டு கேட்டது போல இருக்கிறது.
அந்த சமயத்தில் சுரேஷ் ரேவதியோடும், நதியாவோடும் நிறைய நடித்தார். ராதாவோடும் நடித்திருக்கிறாரா?
பாடல் காட்சிகளில் ஹீரோவும், ஹீரோயினும் கைகளைப் பற்றிக்கொண்டு ஸ்லோமோஷனில் ஒடுவது போல எத்தனை படங்களில் பார்த்திருக்கிறோம்.
சோர்வாகவா? ஏன்? என்ன காரணம்?
நீக்குஅதை நீங்கள்தான் ப்ரோ சொல்ல வேண்டும்.
நீக்குஇல்லை ஸிஸ்... எதை வைத்து சோர்வு என்று சொல்கிறீர்கள் என்று கேட்கிறேன்!
நீக்குஅக்கரை சிரிப்பு சின்ன வயதில் பார்த்தது, பெரும்பாலும் புரியாது, இப்போது புரிந்தது. Good! :))
பதிலளிநீக்குஎனக்கு இப்போதும் புரிவதில்லை!
நீக்குதிண்ணை பள்ளிக்கூட அனுபவம் சிறப்பு!. நாலு, ஐந்து வயதில் பார்த்ததை இத்தனை துல்லியமாக நினைவு வைத்துக் கொண்டிருக்கிறாரே..!!
பதிலளிநீக்குவயது ஆக ஆக, நேற்று என்ன சாப்பிட்டோம், இப்போ இந்த அறைக்கு எதற்கு வந்தோம் போன்ற நடப்பு விஷயங்கள்தாம் மறந்துபோகுமே தவிர, அறுபது எழுபது வருடங்களுக்கு முன்னால் நடந்தவை நன்றாக நினைவுல் இருக்கும் எனப் படித்திருக்கிறேனே
நீக்குநேற்று இரவு தூக்கம் வரவில்லை, சில்வியா ப்ரௌனின் 'Life on the other side' புத்தகம் படித்துக் கொண்டிருந்தேன். கண் விழித்து எ.பி.யைத் திறந்தால் ஆவி உலக சமாசாரம்.. interesting though!
பதிலளிநீக்குஅட, பார்றா...
நீக்கு//வரவர இன்ட்ரஸ்ட் குறைந்துகொண்டே வருகிறது!// ஸ்ரீராம் உங்களுக்கு வந்திருப்பது writer's block என்று நினைக்கிறேன். You will overcome this!
பதிலளிநீக்கு__/\__
நீக்குஇவ்வளவு நேரமாக ப்ளாகர் அரபு ப்ளாகுகளையே காட்டிட்டு இருந்தது. என்னத்தைச் செய்யறது? கருத்துப் போட்டேன். போயிடுத்தானு கூடப் பார்க்க முடியலை. ஒரு வழியாக இப்போத் தான் மறுபடி சரியாக வந்திருக்கு. :(
பதிலளிநீக்குகொஞ்ச நேரமா பிளாக்கர் எனக்கும் படுத்தியது.
நீக்குநிலவைக் குறித்த கவிதைகள் எல்லாமுமே அருமை.
பதிலளிநீக்குமகேந்திரன் சொல்லி இருப்பதை இன்று வரை யார் மூலமோ, எதன் மூலமோ படிச்சதில்லை. உண்மையில் மகேந்திரனுக்கு எம்ஜிஆரோடு பழக்கம் என்பதே இன்னிக்குத் தான் தெரியும். வெள்ளை ரோஜானு படம் வந்ததும் இப்போத் தான் தெரியும். சிவசங்கரியை மத்தியானமாப் படிக்கிறேன். அக்கரைச் சிரிப்புச் சிலது புரியுது. சிலது புரியலை.
கவிதைப் பாராட்டுக்கு நன்றி.
நீக்குமகேந்திரன் சொல்லி இருந்தது ரொம்ப முன்னரே படிச்சிருக்கேன். வெள்ளை ரோஜா படம் கேள்விப்பட்டதில்லை எண்பதும் வியப்புதான்!
//ராணி படிக்கறதும் புஸ்தகம் பைண்டு பண்றதும் அவ்வளவு குத்தமா?// புத்தகங்கள் பைன்ட் செய்வதோ அல்லது படிப்பதோ குற்றமே இல்லை. ஆனால் ராணி படிப்பது கிட்டத்தட்டக் கொலைக்குற்றம் அந்த நாட்களில். அறுபதுகளில் தொடங்கிக் கிட்டத்தட்ட எண்பது வரையிலும் ராணி ஒதுக்கப்பட்ட ஒரு புத்தகமாகவே ஒரு சாரார் மட்டும் படிக்கும் புத்தகமாகவே இருந்தது. தினத்தந்தி பேப்பர் படிக்கவும் தடை இருந்திருக்கு. குழந்தைகளைப் படிக்க விட மாட்டார்கள். நான் அறுபதுகளில் 66 அல்லது 67 இருக்கலாம், பிரபல நாவலாசிரியர் (ஷைலஜாவின் அப்பானு நினைவு. அப்போ ஷைலஜாவை எல்லாம் தெரியாது. ஆனால் நல்ல நாவலாசிரியர்) எழுதின தொடர் ஒண்ணு ராணியில் வந்து கொண்டிருந்தது. அதை வீட்டில் ராணி புத்தகத்தை வைத்துக் கொண்டு படிக்க முடியாது என்பதால் டைப்ரைடிங் இன்ஸ்டிட்யூடில் வைச்சுப் படிச்சுட்டு இருந்தேன். வாத்தியார் பார்த்துட்டார். ஒரே வார்த்தை தான் சொன்னார். "கீதா! நீயா? நீயுமா?" என்று. புத்தகத்தை அப்படியே வாங்கினவங்க கிட்டேத் திருப்பிக்கொடுத்துட்டேன்.
பதிலளிநீக்குஎழுத்தாளர் ராகவனை சொல்கிறீர்களா? அப்பவே ராணி படிச்சு இருக்கீங்களா?/ லைப்ரரியில் சும்மாதான் கிடக்கும் பெரும்பாலும். யாரும் தொட மாட்டார்கள். ஆனால் நன்றாக விற்பனையாகும் கடைகளில்! அதுதான் நகைமுரண்.
நீக்குராணி பத்திரிகை ஆசிரியர் எழுபதுகளின் நடுவில் ஆரம்பித்துப் பல காலம் பிரபலமான நாவலாசிரியர்களின் பிரபலமான நாவல்களைச் சுருக்கி "ராணி முத்து" என்னும் பெயரில் வெளியிட ஆரம்பிச்சதும் பலரும் ராணி புத்தகத்தையும் வாங்க ஆரம்பிச்சாங்க. வித்யா சுப்ரமணியம். ஏ.எஸ்.ராகவன், (ஷைலஜா அப்பா), லக்ஷ்மி போன்றோரெல்லாம் ராணியில் தொடர்கள் எழுதவும் ஆரம்பிச்சாங்க.
பதிலளிநீக்குநான் ராணிமுத்துவில் முதலில் படித்தது தூக்கு மேடை. C A பாலன். அதன் பிறகு கான்ஸ்டபிள் கந்தசாமி ,சமுதாய வீதி என்று பல புத்தகங்கள் படித்திருக்கிறேன்.
நீக்குதிண்ணைப் பள்ளிக் கூடக் காலம் நன்றாக இருந்தது.
பதிலளிநீக்குநிலாக் கவிதைகள் நன்றாக உள்ளது.
அக்கரைப் சிரிப்பு ரசனையாக இருந்தது.
நன்றி மாதேவி
நீக்குஅ
பதிலளிநீக்குஆனா
ஆ
ஆவன்னா '' இப்படித்தான் நாங்கள் கற்றோம். எங்களுக்கும் ரெட்டியார் சார் தான்.
அன்று ஊமை பெண்ணல்லோ இன்று பேசும் பெண்ணல்லோ பாடலின் ஆரம்பத்தில் ஆனா ஆவன்னா பாடம் இருக்கும்
நீக்குவெள்ளை ரோஜா படப்பாடல்கள் 1985 ஆம் வருடமேடைகளில் ஏ வி ரமணன் மியூசியானோ குழுவால் அதிகம் பாடப் பட்டன.
பதிலளிநீக்குஅப்படியா? அவர் இசை நிகழ்ச்சி நான் கேட்டதே இல்லை. ஒரே ஒரு வருடம் தூர்தர்ஷனில் டிசம்பர் 31ஆம் தேதி இரவு அவர் ட்ரூப் இசை நிகழ்ச்சி நடந்தது. அது மட்டும் கேட்டேன்.
நீக்குஇப்போது உமா ரமணன் இல்லை.அந்த ''ஆனந்த ராகம்'' சிலிர்க்க வைக்கும் குரல்.
நீக்குநிலாக் கவிதைகளில் முதலாவதும், கடைசியிலிருப்பதும் ஆல்ரைட்!
பதிலளிநீக்குமனசாட்சியம் 7- நேற்று வந்தது- நன்றாக உள்ளது.
நேற்றைய மனசாட்சியம்க்கு இன்று பாராட்டா? நன்றி ஏகாந்தன் சார்.
நீக்குஅவை அடிக்கடி நான் மிக விரும்பிக் கேட்ட பாடல்கள். நன்றி மா.
பதிலளிநீக்குநன்றி அம்மா.
நீக்குடைரக்டர் மஹேந்திரன் பற்றிய குறிப்பு மிகச் சிறப்பு. உணர்ச்சிக் குவியல். அதை எழுதத் தெரிந்த வல்லமையாளர். புரட்சித்தலைவர் வள்ளல் என்று அறிய இன்னோரு நிகழ்வு. இறந்தவர்களைப் பற்றி எழுதும்போது கௌரவத்தைக் காற்றில் விடும் சிலர் மத்தியில் இந்தப் பதிவு சிறப்பு.
பதிலளிநீக்குஇறந்தவர்களின் சிறப்பை மட்டும் பேசினால் போதும் என்று நான் நினைப்பேன். நெகட்டிவாகப் பேசி யாருக்கு லாபம். எதைக் கேட்டும் பதில் சொல்ல முடியாத தூரத்தில் அவர்கள் இருக்கும் போது நம் எழுத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். #மஹாலயசிந்தனைகள்.
பதிலளிநீக்குவல்லி அக்காவும் இந்த பாடலை சொல்லி இருக்கிறார்களே! இப்போதுதான் பார்த்தேன்.
பதிலளிநீக்கு