ஆதாரமான சந்தேகங்கள். தினமணிக் கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆதாரமான சந்தேகங்கள். தினமணிக் கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

3.7.13

ஆதார் கார்ட் - ஒரு ஆதார சந்தேகம்!


                                              
                                                       
இரண்டு வருடங்களுக்கு முன்னாலா, அதற்கு அப்புறமா என்று சரியாக ஞாபகமில்லை. ஆதார் கார்ட் இல்லாமல் உயிர் வாழவே முடியாது, இந்தியனாகவே இருக்க முடியாது, (பாகிஸ்தானுக்குத் துரத்தி விடுவோம்) என்று சொல்லாத குறையாக விளம்பரப் 'படுத்தி' மக்களை ஆதார் அட்டை வாங்கச் சொன்னபோதே பலபேர் வாங்கவில்லை. அல்லது வாங்க முடியவில்லை. ஏகப்பட்ட நடைமுறைச் சிக்கல்கள். 

                                                 

நடுவில் ஆதார் கார்ட் வழங்கிக் கொண்டிருந்த நிறுவனத்துக்கு மத்திய அரசு கொடுக்க வேண்டிய பணத்தைத் தரவில்லை, அந்நிறுவனம் முறையான அனுமதி வாங்கவில்லை என்ற வதந்திகளுக்கு நடுவே அந்த வேலை நடுவழியில் நிறுத்தப் பட்டது. இந்நிறுவனம் திரட்டிய விவரங்களை வெளிநாடுகளுக்கோ (என்ன செய்வார்களோ இதை வாங்கி!) வேறு வணிக ஜாம்பவான்களுக்கோ கொடுக்கக் கூடும் என்ற பேச்சும் இருந்தது. தமிழ்நாட்டில் அம்மா தமிழக மக்களுக்கு ரேஷன் குடும்ப அட்டைகளே ஆதார் கார்ட் அடிப்படையில் வழங்கப் படும் என்று அறிவித்திருந்தார். வழக்கம்போல அறிவிப்போடு சரி! இந்நிலையில், சுமார் இரண்டு மாதங்களுக்கு முன் மத்திய அரசு 'எதைச் சொன்னால் மக்கள் விரைந்து செயல்படுவார்கள்' என்ற சிதம்பர ரகசியத்தைக் கண்டறிந்து,  மக்களுக்கு ஒரு மிரட்டல் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

                                                           

ஜீவி அவர்கள் கேட்கும் சந்தேகம் நிறையப் பேருக்கு இருக்கிறது என்று தெரிகிறது. ஏற்கெனவே வாங்கியவர்கள் 'அதுதான் வாங்கி விட்டோமே' என்று சும்மா இருப்பதா,  இல்லை இப்போது புதிதாக ஒன்று வாங்க வேண்டுமா என்ற சந்தேகங்கள் வந்தவண்ணம் இருக்கின்றன.

கீழே உள்ள கட்டுரை தினமணியில் செய்திக் கட்டுரையாக வெளிவந்தது. (முகநூலில் கூடப் பகிர்ந்திருந்தேன். யாரும் படித்ததாகவே தெரியவில்லை!)
இதுவும் ஒரு பார்வை. முந்தைய எங்கள் ஆதார் கார்ட் பதிவில் வினோத் குமார் ஏகப்பட்ட விவரங்கள் கொடுத்திருந்தார். கூட இப்போது இது!

                                                         

 
முதல் இல்லாமலே மூலதனம் - தினமணி 10/6/2013

மக்களின் அன்றாடத் தேவையாக சமையல் கேஸ் சிலிண்டர் ஆகி விட்டது. இதன் வி
லையும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே அல்லது உயர்த்தப்பட்டுக் கொண்டே வருகிறது. இந்த நிலையில்தான் அக்டோபர் மாதம் முதல் சமையல் கேஸ் சிலிண்டருக்கு 'நேரடி மான்யம்' வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

மேலோட்டமாகப் பார்க்கும்போது மத்திய அரசு ஏதோ நன்மையைச் செய்வதுபோலத் தோன்றும் இந்தத் திட்டம் முதல் இல்லாமலே அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கும் பிற நிறுவனங்களுக்கும் கோடிக் கணக்கில் மூலதனத்தைத் திரட்டித் தரும் திட்டமாகும். 'மக்களைச் சுரண்டி மற்றவர்களை வாழவைக்கும்' கற்பகத் திட்டமாகும்.


ஆதார் எண் அடிப்படையில், அதிகாரிகள் கொடுத்த கணக்கின்படி 14 கோடிப்பேர் மா
னியப்பயன் பெறுவதாகவும் 32 கோடிப் பேர் ஆதார் எண் பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதாவது 46 கோடிப் பேர் ஆதார் அட்டை பெற்றுள்ளனர்.ஆண்டுக்கு ரூபாய் 4,000 வரை ஒருவர் கணக்கில் வங்கியில் மானியம் செலுத்தப்படும். ஒரு வருடத்துக்கு மொத்தம் 9 சிலிண்டர்கள் மானிய விலையில் வழங்கப்படும். அதற்கும் மேல் போனால் முழுத் தொகையையும் செலுத்த வேண்டும்.

ஆதார் எண் பெற வங்கியில் கணக்குத் துவக்கப் பட வேண்டும். அந்த வங்கிக் கணக்குக்குத் தொடர்புள்ள ஆதார் எண்படி மானியம் செலுத்தப்படும். சென்னையில் 14.2 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயுச் சிலிண்டரின் விற்பனை விலை ரூபாய் 894.50. இப்படி 9 சிலிண்டருக்குத் தோராயமாக ரூ.
8050.50 செலுத்தப்பட வேண்டும். இப்படி 46 கோடிப்பேர் செலுத்துவர். இந்தத் தொகை நாடு முழுவதும் சுமார் 3,70,323 கோடி. (ஸ்பெக்ட்ரம் வருவாய் இழப்பு அளவை விட இரு மடங்கு!).  இந்தத் தொகை முழுவதும் எண்ணெய் நிறுவனங்களின் கணக்குக்குச் செல்கிறது.

100 ரூபாய்க்கு 50 பைசா வட்டி என்று கணக்கிட்டால் கூட, 3,70,323 கோடிக்கு சுமார் ரூ. 1.851.6 கோடியாகிறது. இதில் பாதிய
வுதான் நமக்கு மானியமாகக் கிடைக்கும். 'மக்களுடைய தலையைத் தடவி மக்களுக்கு திரும்பத் தரும் மகத்தான திட்டம்' இது! அத்துடன் எண்ணெய் நிறுவனங்களுக்குக் கோடிக் கணக்கான ரூபாய் மூலதனம் தன்னைப்போல வந்து கொட்டப் போகிறது. எந்த வட்டியும் பெறாமல் மக்களிடம் பணம் பெறப்பட்டு எண்ணெய் நிறுவனங்களுக்குத் தரப்படப் போகிறது.

'அதிக மக்களுக்கு நன்மை தரும் கொள்கைகளை வகுப்பதுதான் அரசு' என்றார் அரிஸ்டாட்டில். 'அதிக மக்களிடம் பணம் பறித்து சிலரை மட்டும் வாழ வைப்பதுதான் சிறந்த அரசு' என்கிறது "ஐக்கிய முற்போக்குக் கூட்டணி-2" அரசு!


இது போக, ஆதார் எண் பெற, வங்கிகளில் கணக்கு இல்லாதவர்கள் புதிதாகத் தொடங்க வேண்டும். வங்கிக் கணக்குத் தொடங்க குறைந்தபட்சம் ரூ. 500 தரவேண்டும். வங்கிக் கணக்கில் எப்போதும் இந்த இருப்பு இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். 46 கோடிப் பேரில் கணிசமானவர்கள் வங்கிக் கணக்கு இல்லாதவர்கள்தான். வங்கிகள் வாடிக்கையாளர்களைத் தேடி அலையாமல் வாடிக்கையாளர்களே வங்கிகளைத் தேடிச் செல்ல உதவும் நல்ல திட்டம் இது!
 
இதைப் படிக்கும் வாசகர்கள் தங்களுக்குத் தெரிந்த விவரங்களைப் பகிர்ந்து கொண்டால் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம்.