எழுத்தும் ஏழ்மையும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எழுத்தும் ஏழ்மையும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

30.9.13

ஏழ்மையில் தவிக்கும் தி ஜ ர குடும்பம்.



சமீபத்தில் சலூனுக்குச் சென்றிருந்தபோது ஜூலை மாதத்து 'தினகரன் வசந்தம்' வாரமலர் கண்ணில் பட்டது. அதில் கே. என் சிவராமன், மற்றும் ப்ரியா எழுதியிருக்கும் கட்டுரை கண்ணில் நீரை வரவழைத்தது.
                                                  
                                                     

தி ஜ ர.  தி ஜ. ரங்கநாதன். தமிழின் ரீடர்ஸ் டைஜஸ்ட் என்று அறியப்படும் மஞ்சரியின் ஆசிரியர். 5 சிறுகதைத் தொகுதிகள், எண்ணற்றக் கட்டுரைத் தொகுதிகள், 20 மொழிபெயர்ப்பு நூல்கள், கணக்கற்ற குழந்தை இலக்கிய நூல்கள் என  படைத்தவர்.  

                                      
                                                   
"இந்திய சுதந்திரத்துக்காக பாடுபட்ட பத்திரிகையாளர்களில் இவரும் ஒருவர். அதற்காக சிறைவாசமும் அனுபவித்திருக்கிறார். ஆனால், இந்தியா சுதந்திரமடைந்ததும், தியாகிகளுக்கான 5 ஏக்கர் நிலத்தையோ, மாதாந்திர கவுரவ ஊதியத்தையோ பெற மறுத்து விட்டார். 'நாட்டு சுதந்திரத்துக்காகப் போராட வேண்டியது என் கடமை. அதற்கு எந்தப் பிரதிபலனும் வேண்டாம்' என்று சொல்லி விட்டார்."


இப்படிப் பட்டவருடைய வாரிசுகள்தான் இன்று அடுத்தவேளைச் சாப்பாட்டுக்குக் கஷ்டப்படுகிறார்கள்.

                                             



72 வயது வரையிலும் மஞ்சரியில் வேலை பார்த்திருக்கிறார்.

பேத்தி சொல்வது :

"அவரோட கடைசி காலத்துல மந்தவெளி குடிசை மாற்று வாரியத்துல அவருக்கு வீடு ஒதுக்கினாங்க. அங்க நாங்க போறப்ப எங்க எல்லாரையும் நிக்கவச்சு படம் எடுத்தாங்க. தாத்தா கைல ஒரு சிலேட்டைக் கொடுத்து அதைத் தூக்கிப் பிடிக்கச் சொன்னாங்க. அதுல அவருக்குன்னு ஒதுக்கப்பட்டிருந்த வீட்டோட விலாசம் சாக்பீஸ்ல எழுதியிருந்தது. இப்ப அந்த ஃபோட்டோவைப் பார்த்தாலும் கண்ணுலேருந்து ரத்தமா வரும். எப்பேர்ப்பட்ட மனுஷன்... கைல சிலேட்டைத் தூக்கிப் பிடிச்சுகிட்டு..."

"ஒரு கட்டத்துக்குப் பிறகு தாத்தாவால முடியலை. அதனால வேலைக்குப் போகலை. இந்த நேரத்துல பாட்டிக்கு ரொம்ப முடியாமப் போச்சு. அதனால எங்க பெரிய மாமா வீட்டுக்கு சிகிச்சைக்காகப் போனாங்க...கூடவே தாத்தாவும் போனாரு. ஆனா, அவர் திரும்பி வரவேயில்லை"

அவர் மகன்களைப் பற்றி மகள் சொல்லும்போது,

"அண்ணனும் தம்பியும் எங்களைப் பத்திக் கவலைப் பட்டதில்லை. அவங்க வீட்டுக்கு நாங்க வர்றோம்னு தெரிஞ்சாலே, வீட்டைப் பூட்டிக்கிட்டுப் போயிடுவாங்க.அவ்வளவு, ஏன், தங்களோட வீட்டு நல்லது கெட்டதுக்குக் கூட எங்களைக் கூப்பிட்டதில்லை"
சமீபத்தில் மறைந்த எழுத்தாளர், தி ஜ ரவின் சிஷ்யர் மலர்மன்னன் இவர்களுக்கு அவ்வப்போது உதவியிருக்கிறார்.

அந்தக் கட்டுரையின் கடைசி பாரா அப்படியே கீழே...

"சுதந்திரப் போராட்ட வீரரும், தமிழ்மொழியை வளர்த்தவரும், சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு எழுத்தாளரும், தமிழ்ப் பத்திரிகையுலகின் பிதாமகரும் தி.ஜ.ர.வின் குடும்பத்துக்கு உதவ நினைப்பவர்கள், தங்களால் இயன்றதைக் கொடுத்து உதவலாம். அவர் பேத்தி சத்யபாமாவின் வங்கிக் கணக்கு விவரம் : R. Sathyabama, SB A/c No. 37950100001010, IFSC code BARBOTHICHE,[NOTE 0 NOT o] Micr code 600012047 Bank of Baroda, Thiruvanmiyur Branch, Chennai-41 

திண்ணையில் இது சம்பந்தமாக வெளிவந்துள்ள பதிவு.
திரு வெங்கட் சாமிநாதன் எழுதியுள்ளது.


தினகரன் வசந்தம் இதழில் கட்டுரையை முழுமையாக வாசிக்க...[இந்த இதழை இணையத்தில் தேடிப் பார்த்தபோது குறிப்பிடப்பட்டுள்ள  கட்டுரை வெளிவந்திருக்கும் 5 முதல் 8 வரையினாலான பக்கங்கள் மட்டும் அந்த இதழில் மிஸ்ஸிங்!]