Monday, September 30, 2013

ஏழ்மையில் தவிக்கும் தி ஜ ர குடும்பம்.சமீபத்தில் சலூனுக்குச் சென்றிருந்தபோது ஜூலை மாதத்து 'தினகரன் வசந்தம்' வாரமலர் கண்ணில் பட்டது. அதில் கே. என் சிவராமன், மற்றும் ப்ரியா எழுதியிருக்கும் கட்டுரை கண்ணில் நீரை வரவழைத்தது.
                                                  
                                                     

தி ஜ ர.  தி ஜ. ரங்கநாதன். தமிழின் ரீடர்ஸ் டைஜஸ்ட் என்று அறியப்படும் மஞ்சரியின் ஆசிரியர். 5 சிறுகதைத் தொகுதிகள், எண்ணற்றக் கட்டுரைத் தொகுதிகள், 20 மொழிபெயர்ப்பு நூல்கள், கணக்கற்ற குழந்தை இலக்கிய நூல்கள் என  படைத்தவர்.  

                                      
                                                   
"இந்திய சுதந்திரத்துக்காக பாடுபட்ட பத்திரிகையாளர்களில் இவரும் ஒருவர். அதற்காக சிறைவாசமும் அனுபவித்திருக்கிறார். ஆனால், இந்தியா சுதந்திரமடைந்ததும், தியாகிகளுக்கான 5 ஏக்கர் நிலத்தையோ, மாதாந்திர கவுரவ ஊதியத்தையோ பெற மறுத்து விட்டார். 'நாட்டு சுதந்திரத்துக்காகப் போராட வேண்டியது என் கடமை. அதற்கு எந்தப் பிரதிபலனும் வேண்டாம்' என்று சொல்லி விட்டார்."


இப்படிப் பட்டவருடைய வாரிசுகள்தான் இன்று அடுத்தவேளைச் சாப்பாட்டுக்குக் கஷ்டப்படுகிறார்கள்.

                                             72 வயது வரையிலும் மஞ்சரியில் வேலை பார்த்திருக்கிறார்.

பேத்தி சொல்வது :

"அவரோட கடைசி காலத்துல மந்தவெளி குடிசை மாற்று வாரியத்துல அவருக்கு வீடு ஒதுக்கினாங்க. அங்க நாங்க போறப்ப எங்க எல்லாரையும் நிக்கவச்சு படம் எடுத்தாங்க. தாத்தா கைல ஒரு சிலேட்டைக் கொடுத்து அதைத் தூக்கிப் பிடிக்கச் சொன்னாங்க. அதுல அவருக்குன்னு ஒதுக்கப்பட்டிருந்த வீட்டோட விலாசம் சாக்பீஸ்ல எழுதியிருந்தது. இப்ப அந்த ஃபோட்டோவைப் பார்த்தாலும் கண்ணுலேருந்து ரத்தமா வரும். எப்பேர்ப்பட்ட மனுஷன்... கைல சிலேட்டைத் தூக்கிப் பிடிச்சுகிட்டு..."

"ஒரு கட்டத்துக்குப் பிறகு தாத்தாவால முடியலை. அதனால வேலைக்குப் போகலை. இந்த நேரத்துல பாட்டிக்கு ரொம்ப முடியாமப் போச்சு. அதனால எங்க பெரிய மாமா வீட்டுக்கு சிகிச்சைக்காகப் போனாங்க...கூடவே தாத்தாவும் போனாரு. ஆனா, அவர் திரும்பி வரவேயில்லை"

அவர் மகன்களைப் பற்றி மகள் சொல்லும்போது,

"அண்ணனும் தம்பியும் எங்களைப் பத்திக் கவலைப் பட்டதில்லை. அவங்க வீட்டுக்கு நாங்க வர்றோம்னு தெரிஞ்சாலே, வீட்டைப் பூட்டிக்கிட்டுப் போயிடுவாங்க.அவ்வளவு, ஏன், தங்களோட வீட்டு நல்லது கெட்டதுக்குக் கூட எங்களைக் கூப்பிட்டதில்லை"
சமீபத்தில் மறைந்த எழுத்தாளர், தி ஜ ரவின் சிஷ்யர் மலர்மன்னன் இவர்களுக்கு அவ்வப்போது உதவியிருக்கிறார்.

அந்தக் கட்டுரையின் கடைசி பாரா அப்படியே கீழே...

"சுதந்திரப் போராட்ட வீரரும், தமிழ்மொழியை வளர்த்தவரும், சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு எழுத்தாளரும், தமிழ்ப் பத்திரிகையுலகின் பிதாமகரும் தி.ஜ.ர.வின் குடும்பத்துக்கு உதவ நினைப்பவர்கள், தங்களால் இயன்றதைக் கொடுத்து உதவலாம். அவர் பேத்தி சத்யபாமாவின் வங்கிக் கணக்கு விவரம் : R. Sathyabama, SB A/c No. 37950100001010, IFSC code BARBOTHICHE,[NOTE 0 NOT o] Micr code 600012047 Bank of Baroda, Thiruvanmiyur Branch, Chennai-41 

திண்ணையில் இது சம்பந்தமாக வெளிவந்துள்ள பதிவு.
திரு வெங்கட் சாமிநாதன் எழுதியுள்ளது.


தினகரன் வசந்தம் இதழில் கட்டுரையை முழுமையாக வாசிக்க...[இந்த இதழை இணையத்தில் தேடிப் பார்த்தபோது குறிப்பிடப்பட்டுள்ள  கட்டுரை வெளிவந்திருக்கும் 5 முதல் 8 வரையினாலான பக்கங்கள் மட்டும் அந்த இதழில் மிஸ்ஸிங்!]


20 comments:

வெங்கட் நாகராஜ் said...

அடடா....

எத்தனை பெரிய எழுத்தாளர்....

அவர் குடும்பம் படும் கஷ்டம் நினைத்தால் பரிதாபமாகத் தான் இருக்கிறது......

Ranjani Narayanan said...

படிக்கவே வருத்தமாக இருக்கிறது.

திண்டுக்கல் தனபாலன் said...

அடக் கொடுமையே...!

T.N.MURALIDHARAN said...

பகிர்வுக்கு நன்றி.உண்மையில் வருத்தம் தருகிறது. எழுத்தை பிழைப்பாகக் கொள்ள நினைப்பவரல் சிந்திக்க வேண்டிய விஷயம்.

சீனு said...

சில மாதங்களுக்கு முன் இந்த தினகரனை படித்துவிட்டு என்னுடைய மாமா தென்காசியில் இருந்து அழைத்துப் பேசினார் மேலும் அதில் பண உதவி செய்ய விரும்புபவர்கள் உதவி செய்யலாம் என்று ஒரு வங்கி எண் கொடுத்திருந்ததாகவும் அவர் அவர்களுக்கு ஒரு சிறிய தொகையை வழங்கியதாகவும் என்னிடம் கூறினார்....

எழுத்தாளர்களின் மறுபக்கம் எப்போதுமே கவலைக்கிடம் தான்

சே. குமார் said...

எப்பேர்ப்பட்ட எழுத்தாளர்...
அவரின் குடும்பத்துக்கா இந்த நிலை...
வேதனையாக இருக்கிறது.

கவியாழி கண்ணதாசன் said...

வருத்தமாய் உள்ளது எழுத்தாளனுக்கு ஏழ்மை மட்டுமே மிஞ்சும் என்பதுதான் உண்மை

வல்லிசிம்ஹன் said...

மஞ்சரியால எங்கள் சிறுவயதில் நாங்கள் பெற்றுச் சேகரித்த செய்திகள் அநேகம். கலைமகள் நிர்வாகத்தில்தானே மஞ்சரி வந்தது.?
அவர்களுக்கே இந்த நிலமை என்றால் என்ன செய்வது.

Geetha Sambasivam said...

மின் தமிழில் இது குறித்த அறிவிப்பு இரண்டு வருடங்களாக அவ்வப்போது தொடர்ந்து வருகிறது. மலர்மன்னனே நேரடியாக எழுதி இருந்தார். :( அரசாங்கம் பார்த்து ஏதானும் செய்யலாமோ என்னமோ!

Ramani S said...

மன வேதனை அளிக்கும் பதிவு
கணக்கு விவர்ங்கள் கொடுத்தது மிகச் சரி
விளம்பரமற்று கொடுக்க நினைப்பவர்களுக்கு
இது உதவியாக இருக்கும்

rajalakshmi paramasivam said...

வருத்தமாக இருக்கிறது.
இதே போல வ.உ.சி அவர்களின் குடும்பத்தாரைப் பற்றியும் படித்ததாக நினைவு.......

rajalakshmi paramasivam said...

படிக்க வருத்தமாக இருக்கிறது.
வ.உ.சி குடும்பத்தாரைப் பற்றியும் இதே மாதிரி படித்த நினைவு.

Sasi Kala said...

எழுத்தாளரை மட்டுமல்ல அவர்களின் சந்ததிகளையும் தொடரும் போல.. வறுமை கலங்க வைக்கிறது.

கோவை2தில்லி said...

எழுத்தாளரின் சந்ததிகளுக்கு இப்படிப்பட்ட நிலைமையா....:((

கீத மஞ்சரி said...

வேதனையான செய்தி.

ஜீவி said...

லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் (லா.ச.ரா.)அவர்களின் குரு தி.ஜ.ர.
சொல்லப் போனால் லா.ச.ரா.வின் எழுத்துக்களை மிகவும் ரசித்த, அவற்றின் மேல் மோகம் கொண்ட, இவரைக் கண்டெடுத்ததில் பெருமைப்பட்ட குரு அவர். இப்படிப் பட்ட ஒரு குருவும் அதற்கேற்பவான சிஷ்யனும் அமைவது அரிதான விஷயம்.

இதை லா.ச.ரா. குறித்த எனது எழுத்தாளர்கள் பதிவில் சொல்லியிருக் கிறேன்.

ராமலக்ஷ்மி said...

திரு. வெங்கட் சாமிநாதன் எழுதிய கட்டுரையை வாசித்திருக்கிறேன். இன்னும் தீர்வு ஏற்படவில்லை என்பது வருத்தமான செய்தி.

s suresh said...

சிறந்த எழுத்தாளருக்கு நேர்ந்த அவலம் மனதை வருத்துகிறது! ஆவண செய்ய வேண்டியவர்கள் கண்ணில் இந்த விசயம் பட்டு நல்லது நடக்கட்டும்!

மாதேவி said...

எழுத்தாளர்களின் வாழ்க்கை :( வருத்தமாக இருக்கின்றது.

கோமதி அரசு said...

எழுத்தாளர் குடும்பத்தினர்கள்
வாழ்க்கை நடத்த கஷ்டப்படுவது மனதுக்கு வருத்தமாய் உள்ளது.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!