சிட்டி பிட்டி என்றெல்லாம் இல்லாமல் அந்தக் காலத்தில் நல்ல பெரிதாகவே கத்தரிக்காய் கிடைக்கும். சிறுசிறு வயலட் கத்தரிக்காயும் கிடைக்கும். பார்த்தாலே வாங்கத் தூண்டும்! அப்படிப் பட்ட தானாய் விளைந்த கத்தரியை வாங்கிதான் அம்மா கொத்சு செய்வார். அப்போது நாங்கள் தஞ்சாவூரில் இருந்தோம். தலைமை தபால் நிலையம் தாண்டி சாந்தப்பிள்ளை கேட் செல்லும் வழியில் 'ஈவ்னிங் பஜார்' தினசரி மாலை களைகட்டும்.