வாசகர்களிடம் வாக்கெடுப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாசகர்களிடம் வாக்கெடுப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

5.8.13

தொடரவா, வேண்டாமா... வாக்கெடுப்பு.


வரும் ஆகஸ்ட் 11ம் தேதியோடு 'பாசிட்டிவ் செய்திகள்' பகிர ஆரம்பித்து  ஒரு வருடமாகிறது.
                                      

முதலில்  செய்திகளைப் பகிர்ந்து, அதற்கு 'எங்கள்' கிண்டல் கமெண்ட்ஸ் போட்டுக் கொண்டிருந்தோம். ஒரு நிலையில் எங்கு பார்த்தாலும் திருட்டு, ஒருவரை ஒருவர் ஏமாற்றும் செய்திகள், கற்பழிப்பு, தற்கொலைச் செய்திகளாகக் கண்ணில் பட்டன. மனதுக்கு இதம் தரும் செய்தி கண்ணில் படும்போது லேசான சந்தோஷம் வர, கண்ணில் பட்ட நல்ல செய்திகளை ஒரு நாள் பதிவிட்டபோது, இதை வாராவாரம் செய்தால் என்ன? என்று தோன்றியது.

சனிக்கிழமைகளில் தொடரத் தொடங்கினோம்.

                                                 

முதலில் எல்லாம் நிறைய ரீடர்ஸ் இருந்ததை எங்களால் பார்க்க முடிந்தது. பின்னூட்டங்கள் எப்போதுமே ரீடர்ஸ் கவுண்ட்டோடு (யாருக்குமே) ஒத்துப் போகாதுதான். சமீப காலங்களில் இதற்கான ரீடர்ஸ் குறைந்துகொண்டே வருகிறார்கள்.
                                          

எனவே இதைத் தொடர்வதா நிறுத்தி விடலாமா என்ற யோசனை சில நாட்களாகவே இருந்து வருகிறது.

நீங்கள் சொல்லுங்களேன்.... என்ன செய்ய?