Monday, August 5, 2013

தொடரவா, வேண்டாமா... வாக்கெடுப்பு.


வரும் ஆகஸ்ட் 11ம் தேதியோடு 'பாசிட்டிவ் செய்திகள்' பகிர ஆரம்பித்து  ஒரு வருடமாகிறது.
                                      

முதலில்  செய்திகளைப் பகிர்ந்து, அதற்கு 'எங்கள்' கிண்டல் கமெண்ட்ஸ் போட்டுக் கொண்டிருந்தோம். ஒரு நிலையில் எங்கு பார்த்தாலும் திருட்டு, ஒருவரை ஒருவர் ஏமாற்றும் செய்திகள், கற்பழிப்பு, தற்கொலைச் செய்திகளாகக் கண்ணில் பட்டன. மனதுக்கு இதம் தரும் செய்தி கண்ணில் படும்போது லேசான சந்தோஷம் வர, கண்ணில் பட்ட நல்ல செய்திகளை ஒரு நாள் பதிவிட்டபோது, இதை வாராவாரம் செய்தால் என்ன? என்று தோன்றியது.

சனிக்கிழமைகளில் தொடரத் தொடங்கினோம்.

                                                 

முதலில் எல்லாம் நிறைய ரீடர்ஸ் இருந்ததை எங்களால் பார்க்க முடிந்தது. பின்னூட்டங்கள் எப்போதுமே ரீடர்ஸ் கவுண்ட்டோடு (யாருக்குமே) ஒத்துப் போகாதுதான். சமீப காலங்களில் இதற்கான ரீடர்ஸ் குறைந்துகொண்டே வருகிறார்கள்.
                                          

எனவே இதைத் தொடர்வதா நிறுத்தி விடலாமா என்ற யோசனை சில நாட்களாகவே இருந்து வருகிறது.

நீங்கள் சொல்லுங்களேன்.... என்ன செய்ய?

23 comments:

அமைதிச்சாரல் said...

பாசிட்டிவ் செய்திகளைத்தொடருங்கள்.. உங்களால் நிறைய நல்லவர்களையும் நல்ல செய்திகளையும் தெரிஞ்சுக்கறோம்.

Ananya Mahadevan said...

Please continue writing postive news.

சீனு said...

தொடர்வதை விட்டு விட வேண்டாம் சார்... பல புதிய செய்திகள் பாசிடிவ் செய்திகள் படித்து தான் தெரிந்து கொண்டேன்...

முதலில் பாஸிடிவ் செய்திகளை வெட்டி ஒட்டி கொடுத்துக் கொண்டிருந்தீர்கள், பின்பு என் போன்ற வாசகர் விருப்பத்திற்காக தகவலை அப்படியே பகிர ஆரம்பித்தீர்கள், ஒருவேளை சிலரால் அதிகமான தகவலை படிக்க முடியாமல் போனது கூட ஹிட்ஸ் குறைய காரணமாக இருக்கலாம்.

வேண்டுமானால் உங்கள் மனம் கவர்ந்த ஒரு பாசிடிவை மொத்தமாகவும், மற்றவற்றை வெட்டியும் ஒட்டியும் வழங்கலாம்...

பாஸிடிவ் செய்திகள் உ(எ)ங்களிடம் இருந்து வரும் நல்லதொரு பகுதி....

ஒருவேளை தலைப்பு போரடித்துவிட்டால், இதே தகவல்களை வேறு தலைப்பில் வேறு மாதிரி பகிரவும்...

Geetha Sambasivam said...

நீங்க வேறே, நம்ம ஹிட் லிஸ்ட் ஓரோரு நாளைக்கு எகிறும்போது பார்த்தால் ஆஹானு இருக்கும். ஆனால் பின்னூட்டம்னு 7 அல்லது 8 வந்தால் ஜாஸ்தி. அதுக்காக விட்டுடுவோமா என்ன! ஒரு கை பார்த்துட மாட்டோம்!!!! தொடர்ந்து எழுதுங்க.

Geetha Sambasivam said...

ஹிஹிஹி, நானுமே படிச்சாலும் சில பாசிடிவ் செய்திகளுக்குப் பின்னூட்டம் கொடுக்க முடியாமல் இருந்திருக்கு. பொதுவா மொக்கைகளுக்குத் தான் பின்னூட்டமே வருதோனு தோணும் எனக்கு! :)))))))

ராஜி said...

தொடருங்கள்

s suresh said...

இது ஒரு நல்ல பகுதி! நிறுத்த வேண்டாம்! சீனு சொல்வது போல முழுவதையும் தராமல் உங்கள் பாணியில் சுவையாக பகிர்ந்தால் சிறப்பாக இருக்கும்! வேலைப்பளுவினால் சிலசமயம் படிக்க முடியாமல் போவதுண்டு! ஆனால் நல்லதொரு பகிர்வுப்பதிவான இதை தொடருங்கள் நிறுத்திவிடாதீர்கள்!

Ranjani Narayanan said...

வாரம் முழுவதும் ஏதேதோ செய்திகள் படித்துவிட்டு மனசு நொந்து போகும்போது, உங்கள் பாசிடிவ் செய்திகள் அதற்கு ஒரு பூஸ்ட் தருவது போல இருக்கிறது.

உங்களுக்கு அவற்றை எழுதும்போது கிடைக்கும் மனத் திருப்திக்காக எழுதுங்கள். இன்றைக்கு ஒரு ரீடர் வருவார். நாளை இன்னொருவர் போவார். அவர்களுக்காகவா எழுதுகிறீர்கள்?

பதிவு எழுதுவது நமக்காக. தொடருங்கள், ப்ளீஸ்!

மொத்தமாக இல்லாமல் வேறு வேறு தலைப்புகளில் வேறு வேறு நாட்களில் எழுதுங்கள்.

பாசிடிவ் செய்திகள் கொடுப்பதற்காக உங்களை மிகவும் பாராட்ட வேண்டும்.

திண்டுக்கல் தனபாலன் said...

தொடர வேண்டும்...

இரவின் புன்னகை said...

தொடருங்கள்...

சே. குமார் said...

தொடருங்கள்... நாங்களும் தொடர்கிறோம்...

பின்னூட்டங்களை வைத்து நல்ல பதிவுகளை நிறுத்தாதீர்கள்....

ராமலக்ஷ்மி said...

அவசியம் தொடருங்கள். தலைப்பு மாற்றம் நல்ல ஆலோசனை. ஏதேனும் ஒருசெய்தியை தலைப்பில் ஹைலைட் செய்யலாம். ஒரே சமயத்தில் அதிக செய்திகள் இருக்கும்போது ஒரே வாரத்திலேயே இரண்டு பதிவுகளாகத் தருவது குறித்தும் சிந்தியுங்கள். நம் பதிவுகள் நம் ஆத்ம திருப்திக்கு.

கோவை2தில்லி said...

கட்டாயம் தொடருங்கள். பாசிட்டிவ் செய்திகளை படிக்கும் போது மனதுக்கு ஒரு சந்தோஷம் கிடைக்கிறது.

வெங்கட் நாகராஜ் said...

ஹிட்ஸ் பற்றிய கவலை வேண்டாம்...

தொடர்ந்து பாசிட்டிவ் செய்திகளை தரவும்.

Ramani S said...

அவசியம் தொடருங்கள்
கொஞ்சமாவது நல்ல காற்றை சுவாசிக்கிற
சுகத்தை தடுத்துவிடாதீர்கள்

கோமதி அரசு said...

என் கணவர் மயிலாடுதுறை பெரிய கோவிலில் அறுபத்து மூவர்களைப்பற்றி தொடர் சொற்பொழிவு செய்தார்கள். நல்ல விஷயங்களை கேட்க ஆட்கள் குறைவாய் தான் இருப்பார்கள். ஒரு பெரியவர் மட்டும் தொடர்ந்து கேட்டு வந்தார் அவர் வரும் வரை காத்து இருந்து பேசுவார்கள். எல்லோரும் பேசியவர்களுக்கு பொன்னாடை அணிவித்தால் என் கணவர் தொடர்ந்து வந்து கேட்ட 90 வயது பெரியவருக்கு பொன்னாடை அணிவித்து மகிழ்ந்தார்கள். ஆர்வத்தோடு ஒருவர் கேட்டாலும் போதும். அது போல் நல்ல விஷயங்களை சொல்லும் போது யாரும் வாசிக்கவில்லையே என நினைக்க வேண்டாம். குறைந்த அன்பர்கள் படித்தாலும் அது உங்கள் நோக்கம் வெற்றி பெற்றதாய் தான் நினைத்துக் கொள்ள வேண்டும்.
நல்லவைகளை தொடருங்கள். நிறுத்த வேண்டாம்.
உடலுக்கு நல்ல மருந்தை இனிப்புக்குள் வைத்து குழந்தைகளுக்கு கொடுப்பது போல் நல்ல விஷயங்களை வேறு ஏதாவது பாடல்கள், கதைகள் இவற்றுடன் தொடர்ந்து கொடுக்கலாம். நிறைய நல்லவைகளை ஓரே நேரத்தில் கொடுக்காமல் இரண்டு மூன்றை வேறு விதமாய் கொடுக்க பாருங்கள்.
எப்போது போல் கொடுத்தாலும் படிக்க தயாராய் இருக்கிறோம்.
நல்லவை தொடர வாழ்த்துக்கள்.

Manickam sattanathan said...


நிறுத்தவேண்டும் என ஏன் தோன்றியது ?

நான் சுமார் ஏழு மாதகாலமாக வலை பக்கமே வர இயலாமல் போனது. நெட் இணைப்பு இல்லை. வாசகர்கள் நிச்சயம் குறைந்துதான் போவார்கள் அது இயல்பு . எனக்கும் சற்று கவலை தான் நம் வாசக நண்பர்களை இழக்கிறோமே என்று.
ஆனால் மறுபடியும் நெட் இணைப்பு கிடைக்க மீண்டும் தொடர்கிறேன். எனக்கு தெரிந்த அத்தனை பேரும் மீண்டும் மகிழ்ச்சியுடன் வர ஆரம்பித்துள்ளனர்.
வாசகர்கள் இல்லை என்று நினைத்து உங்கள் தளத்தை மூடாதீர்கள். இருக்கிறார்கள்
நாமெல்லாம் ஹிட் அடித்து முன்னணியில் இருக்கவேண்டும் என்ற நிர்பந்தமும் இல்லை.
ஹிட் அடிப்பதே ஒரு மாயை தானே. அதனால் யாருக்காவது பயன் உண்டா? வீண் பெருமையை தவிர?
சரிதானே!

middleclassmadhavi said...

பாஸிடிவ் செய்திகளைப் பார்த்தால், வாழ்க்கையையே பாஸிடிவாகப் பார்க்கத் தோன்றும். எனக்கு உங்கள் பாஸிடிவ் பதிவுகளைப் பற்றித் தோன்றியவற்றைச் சொல்கிறேன் - சில சமயம் செய்திகள் நிறைய இருக்கும் போது, வேகமாய் நோட்டமிடத் தோன்றும் - சுருக்கி வெளியிடலாம். 4 அல்லது 5 செய்திகளுக்குள் ஷார்ட் அண்ட் ஸ்வீட் உத்தமம்.
தொடருங்கள் ப்ளீஸ்!

வல்லிசிம்ஹன் said...

தொடரவும் ப்ளீஸ்.
ஒரு நாளாவது நல்லதைப் படிக்கிறோம்.

mathsmagicmahadevan2k said...

தொடருங்கள் நல்ல சேவை நன்றி மஹாதேவன் பெங்களூர்

mathsmagicmahadevan2k said...

தொடருங்கள் நல்ல சேவை மஹாதேவன் பெங்களூர்

ஹுஸைனம்மா said...

பாஸிடிவ் செய்திகளைப் பகிரும் உங்களுக்கே நெகடிவ் எண்ணம்!! :-))

Anonymous said...

கடமையை செய்யுங்கள், பலனை எதிர்பாராதீர்கள், அது தானாய் வரும். உங்கள் மனதுக்கு விருப்பம் எனில் எதையும் குறித்து கவலைப்படாமல் தொடருங்கள். :)

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!