Head Lines Today லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Head Lines Today லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

20.3.10

தலைப்புச் செய்திகள் - கலகலப்பு கமெண்ட்டுகள்..

மதுரையில் ஒரு அண்ணா பல்கலைக் கழகம்....
திருக்குவளைத்தம்பி அறிவிப்பு..!

விமானத்தைக் கடத்தினால் மரண தண்டனை..
ரெயிலைக் கடத்தினால் ஆயுள் தண்டனையா...

கொசு கடித்தால் மலேரியா வராது..விஞ்ஞானிகள் புதுத் தகவல்..
அப்போ மலேரியா வந்தால் கடித்தது கொசுவாக இருக்காது...கொசுவெல்லாம் பசுவாகிவிட்டதாம்...அது சரி அவர் விஞ்ஞானியா மேற்கு மாம்பல ரியல் எஸ்டேட் விற்பனையாளரா?

மத்திய அரசு ஊழியர்களுக்கு டீ ஏ 8% அதிகரிப்பு
டீயே எட்டு சதவிகிதமா? அப்போ காஃபி?

தாசில்தார் மகன் திருமணம்..தாசில்தார் அலுவல்கள் காலி...
ஏங்க..மண்டபம் கிடைக்கலையா? அலுவலகத்திலேயே திருமணம் வச்சிட்டாங்களா?

பிரபல ரௌடி "பாம்" கணேசன் கைது!
-------------------------------------------------------------------------(வாசகர் கமெண்ட்டுக்காக இந்த இடம் வாடகைக்கு விடப் பட்டுள்ளது)

பிள்ளைகள் முன்னிலையில் தாய்க்கு தாலி கட்டினார் தந்தை.
முன்னிலையில் கட்டியவர்...முன்பே கட்டியிருக்கலாம்.

கேரளாவில் மீன் மழை...
சென்னை வெயிலுக்கு கருவாடு மழைதான்..

விஷம் குடித்த பத்தாம் வகுப்பு மாணவியின் காதலன் தற்கொலை முயற்சி...
பிஞ்சுக் காதல்...நஞ்சுக் காதல்.

ஹைடன் அதிரடி...சென்னை வெற்றி...
சின்ன பேட்.... பெரிய ரன்...

காவலர் பிறந்தநாள்..வாழ்த்துடன் அரை நாள் ஓய்வு...
மாமூல் வாழ்க்கைக்கு(ம்) அரை நாள் ஓய்வு..!