கடலைப் பருப்புச் சட்னி.
கடலைப் பருப்பு: கால் கிலோ.
நல்லெண்ணெய் நாலு தேக்கரண்டி.
மிளகாய் வற்றல் : ஏழு அல்லது எட்டு.
எலுமிச்சம்பழம் : ஒன்று.
தேங்காய் மூடி ஒன்று.
கடுகு: ஒரு தேக்கரண்டி.
பெருங்காயம் சுண்டைக்காய் அளவு.
உப்பு: தேவையான அளவு.


வாணலியில் எண்ணெய் விட்டு, கடலைப் பருப்பை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
வேண்டிய அளவு சுத்தமான தண்ணீரில், வறுத்த கடலைப் பருப்பை போட்டு ஊற விடவும்.
ஊறிய கடலைப் பருப்பை, தண்ணீரை வடித்துவிட்டு, காம்பு நீக்கிய மிளகாய் வற்றல், உப்பு, பெருங்காயம், தேங்காய்த் துருவலுடன் சேர்த்து, மிக்சியில் அரைத்துக்கொள்ளவும்.
பிறகு இந்தக் கலவையில், கடுகு தாளிக்கவேண்டும்.
பிறகு எலுமிச்சம்பழச் சாறு பிழியவேண்டும். ஒரு கலக்குக் கலக்குங்க.
சுவையான க ப ச தயார்.
இட்லி / தோசைக்கு இந்தச் சட்னி நல்ல காம்பினேஷன்.

