திங்கள், 5 மே, 2014

திங்க கிழமை 140505:: க ப ச

   
கடலைப் பருப்புச் சட்னி. 
             


கடலைப் பருப்பு: கால் கிலோ.
நல்லெண்ணெய்  நாலு தேக்கரண்டி. 
மிளகாய் வற்றல் : ஏழு அல்லது எட்டு.
எலுமிச்சம்பழம் : ஒன்று.
தேங்காய் மூடி ஒன்று.
கடுகு: ஒரு தேக்கரண்டி.
பெருங்காயம் சுண்டைக்காய்  அளவு.
உப்பு: தேவையான அளவு.
            
 
 வாணலியில் எண்ணெய் விட்டு, கடலைப் பருப்பை வறுத்து எடுத்துக் கொள்ளவும். 
         
வேண்டிய அளவு சுத்தமான தண்ணீரில், வறுத்த கடலைப் பருப்பை போட்டு ஊற விடவும். 
          
ஊறிய கடலைப் பருப்பை, தண்ணீரை வடித்துவிட்டு, காம்பு நீக்கிய மிளகாய் வற்றல், உப்பு, பெருங்காயம், தேங்காய்த் துருவலுடன் சேர்த்து, மிக்சியில் அரைத்துக்கொள்ளவும். 
             
பிறகு இந்தக் கலவையில், கடுகு தாளிக்கவேண்டும். 
             
பிறகு எலுமிச்சம்பழச் சாறு பிழியவேண்டும். ஒரு கலக்குக் கலக்குங்க. 
                 
சுவையான க ப ச தயார். 
            
இட்லி / தோசைக்கு இந்தச் சட்னி நல்ல காம்பினேஷன். 
   

14 கருத்துகள்:

 1. கடலைப்பருப்புனதும் வேர்க்கடலையோனு நினைச்சுட்டேன். கடலைப்பருப்புன்னாலே அலர்ஜி. வேண்டாம் இது. :)

  துவரம்பருப்பிலே இதே போல் செய்யலாம். ஆனால் வறுத்துட்டுத் தண்ணீரில் போடுவதில்லை. கொஞ்சம் மிளகு, ஒரு சுண்டைக்காய் அளவு புளி ஊற வைத்துச் சேர்ப்போம். மிளகு குழம்பு சாதத்தோடு சேர்த்துச் சாப்பிட அருமையான துணை.

  பதிலளிநீக்கு
 2. கீதா அம்மா சொன்னதையும் செய்து பார்க்கிறோம்...

  பதிலளிநீக்கு
 3. நீங்கள் சொன்னது போல் எலுமிச்சைக்கு பதிலாக புளி சேர்த்து செய்து இருக்கிறேன். நீங்கள் சொல்லும் முறையில் ஒருமுறை செய்து பார்க்கிறேன். பகிர்வுக்கு நன்றி.

  கடலை பருப்பை ஊற வைப்பது இல்லை அந்த காலத்தில் அம்மியில் அரைப்பதால் கஷ்டமாய் இருக்கும் என்பதால் ஊறவைப்பர்கள் போலும். இப்போது மிக்ஸியில் மிளகாய், கடலைப்பருப்பு,உப்புமுதலியவற்றை போட்டு ஒரு சுற்று சுற்றிக் கொண்டு பின் தேங்காய் பெருங்காயம் போட்டு மிக்சியில் அரைத்துக் கொள்ளலாம்.

  பதிலளிநீக்கு
 4. நான் கூட எ. பழம் இல்லாமல் புளி வைத்து அரைப்பேன்.

  இதையே தேங்காய் இல்லாமல் என் மாமியார் செய்வார். கொஞ்சம் தளர இருக்கும். பச்சைமிளகாயையும் (சிவப்பு மிளகாய் போடுவதில்லை) சேர்த்து வதக்கி (பருப்பு வறுபட்டவுடன்)விடுவார். வெறும் ப.மி. சாப்பிட்டால் வயிற்றுவலி வரும் என்று.
  இட்லி தோசை என்றால் மிளகாய்பொடிதான். சட்னி செய்வது கொஞ்சம் அபூர்வம்.


  பதிலளிநீக்கு
 5. இட்லி தோசை என்றால் மிளகாய்பொடிதான். //

  பரவாயில்லையே, நமக்கெல்லாம் நாக்கு நீளமா! ஏதானும் சட்னி இல்லாமல் இறங்காது. தக்காளிச் சட்னி, கொத்துமல்லிச் சட்னி, தக்காளி+கொ.மல்லிச் சட்னி, வெங்காயம்+தக்காளி+ கொ.மல்லி+புதினா வைத்துனு தினுசு தினுசா வேண்டும். பச்சைக் கொத்துமல்லிச் சட்னி, பச்சைப் புதினாச் சட்னியும் பிடிக்கும். :)))))

  பதிலளிநீக்கு
 6. வறுத்த கடலைப்பருப்பை அம்மியில் அரைக்கிறச்சே கொஞ்சம் ஒட்டிக்கும். அதனால் ஊற வைச்சிருக்கலாம். :)என் மாமியார் வீட்டில் ஊற வைத்த பின்னர் வறுப்பார்கள்.

  பதிலளிநீக்கு
 7. இல்லறத் துணையிடம் உங்கள் செய்முறையைச்சொன்னேன் ,'உங்கள் நண்பர் சொன்னதுபோல் எனக்கொருமுறை செய்து கொடுங்களேன் 'என்று பதில் வந்ததால்' ஜூட் 'ஆகிவிட்டேன் !

  பதிலளிநீக்கு
 8. கீதா அம்மா சொன்ன முறைதான் நான் செய்வதும்.. அதிலும் துவரம்பருப்பில்தான்

  பதிலளிநீக்கு
 9. நல்ல முறை தான். செய்து பார்த்திடலாம்!

  பதிலளிநீக்கு
 10. அருமையான குறிப்பு. செய்து பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!