Sunday 178 Picture - What to call an elephant? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Sunday 178 Picture - What to call an elephant? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

2.12.12

ஞாயிறு 178:: ஆனை 65

     
     

யானையின் தமிழ்ப்பெயர்கள்: 
1  யானை/ஏனை (கரியது)
2  வேழம் (வெள்ளை யானை)
3  களிறு
4  களபம்
5  மாதங்கம்
6  கைம்மா (துதிக்கையுடைய விலங்கு)
7  உம்பர்
8  உம்பல் (உயர்ந்தது)
9  அஞ்சனாவதி
10 அரசுவா
11 அல்லியன்
12 அறுபடை
13 ஆம்பல்
14 ஆனை
15  இபம்
16 இரதி
17 குஞ்சரம்
18 இருள்
19 தும்பு
20 வல்விலங்கு
21 தூங்கல்
22 தோல்
23 கறையடி (உரல் போன்ற பாதத்தை உடையது)
24 எறும்பி
25 பெருமா (பெரிய விலங்கு)
26 வாரணம் (சங்கு போன்ற தலையை உடையது அல்லது புல்லை 
வாரிப்போடுவது)
27 புழைக்கை/பூட்கை (துளையுள்ள கையை உடையது)
28 ஒருத்தல்
29 ஓங்கல் (மலைபோன்றது)
30 நாக
31 பொங்கடி (பெரிய பாதத்தை உடையது)
32 கும்பி
33 தும்பி (துளையுள்ள கையை உடையது)
34 நால்வாய் (தொங்குகின்ற வாயை உடையது)
35 குஞ்சரம் (திரண்டது)
36 கரேணு
37 உவா (திரண்டது)
38 கரி (கரியது)
39 கள்வன் (கரியது)
40 கயம்
41 சிந்துரம்
42 வயமா
43 புகர்முகம் (முகத்தில் புள்ளியுள்ளது)
44 தந்தி
45 மதாவளம்
46 தந்தாவளம்
47 கைம்மலை (கையை உடைய மலை போன்றது)
48 வழுவை (உருண்டு திரண்டது)
49 மந்தமா
50 மருண்மா
51 மதகயம்
52 போதகம்
53 யூதநாதன் (யானைக்கூட்டத்துத் தலையானையின் பெயர்)
54 மதோற்கடம்(மதகயத்தின் பெயர்)
55 கடகம் (யானைத்திரளின்/கூட்டத்தின் பெயர்)
           
பெண் யானையின் பெயர்கள்: 
01 பிடி (அடக்கடவுளே! 'பிடி இடை' என்றால் யானை இடையா?)  
02 அதவை
03 வடவை
04 கரிணி
05 அத்தினி
   
யானைக்கன்றின் பெயர்கள்(இளமைப் பெயர்கள்): 
01 கயந்தலை
02 போதகம்
03 துடியடி
04 களபம்
05 கயமுனி
    
           (தகவலுக்கு நன்றி: விக்கிப்பீடியா)