புதன், 22 ஏப்ரல், 2020

புதன் 200422 : ஊரடங்கினால் பொது மக்களுக்குக் கிடைத்த நன்மை என்ன? தீமை என்ன?



கீதா சாம்பசிவம்: 

1. நடை, உடை, பாவனைகள் ஒழுங்காக இருந்தாலும் மனதளவில் பலரும் வேறே முகத்தைக் கொண்டிருக்கிறார்களே? அது ஏன்?


# மன இயல்பு நடை உடை பாவனைகளில் வெளிப்பட்டு விடுமானால் இந்த உலகில் வாழ்வது சிரமமாகிவிடும்.

& அஞ்சு விரலும் ஒரே பெயர் கொண்டிருந்தாலும், ஒரே மாதிரியாவா இருக்கு (என்று கேட்டு, மனதை சமாதானப்படுத்திக்கொள்ளலாம். )

2. ஒருவர் மேல் பகைமை 50 வருடங்கள் ஆனாலும் நீடிக்குமா என்ன? தொலைக்காட்சித் தொடர்கள், திரைப்படங்களில் வருகிறாப்போல்! அப்படி ஒருத்தர் இருக்கார். அவர் தன் எதிரியின் பெயரை எப்படியானும் நாசமாக்கவேண்டும் என்றே செயல்படுபவர்!

 # விரோதபாவம் எவ்வளவு நாட்களுக்கு தீவிரமாக நீடிக்கும் என்பது அது உண்டான சூழலின் கடுமை, பாதிக்கப்பட்டவரது மனப்பக்குவம் ஆகியவற்றைச் சார்ந்திருக்கும்.

& மனிதர்கள் மாறலாம் என்று தெரிந்துகொண்டோம் என்றால், பகைமை உணர்ச்சி எல்லாம் காலத்தால் மாறிவிடும். 

என்னுடைய சின்ன அண்ணனின் நண்பர்களில் இருவர். ஒருவருக்கொருவர் கீரியும் பாம்புமாக எஸ் எஸ் எல் சி வகுப்பு வரையிலும் இருந்து வந்தனர். ஒருவரோடு ஒருவர் பேசமாட்டார்கள். அப்புறம் கல்லூரி நாட்களில் இருவரும், வெவ்வேறு ஊர்களில், வெவ்வேறு படிப்பு படித்தார்கள். வேலை பார்த்ததும் அப்படியே. கிட்டத்தட்ட நாற்பது வருடங்கள் கழித்து, அண்ணனின் நாகை நண்பர்கள் எல்லோரும் அயோத்யா மண்டபம் பக்கத்தில், ஒரு நண்பரின் வீட்டில் சந்தித்தார்கள். நானும் அங்கே இருந்தேன். குறிப்பிட்ட அந்த இரண்டு பேரும் சொன்னது - " ஏதோ சில்லி காரணங்களால் நாங்க சண்டை போட்டு ஒருவருக்கொருவர் பேசாமல் இருந்தோம். இப்போ நினைத்துப் பார்த்தால்தான் அவை எவ்வளவு சில்லி காரணங்கள் என்று தெரிகிறது. " (ஒரு சில்லி காரணம் - யார் நல்ல நடிகர் - சிவாஜியா அல்லது ஜெமினியா !) 

3. ஒரு நிகழ்வில் கலந்து கொள்ள நம்மை அழைத்தவர்கள், நமக்கு முன்னுரிமை எனச் சொன்னவர்கள், நாம் அங்கே போய்ச் சேர்வதற்குள்ளாக அதை நடத்தி முடிப்பது பற்றி? கடைசியில் நாம் வந்திருக்கிறவங்க கிட்டே கெட்ட பெயர் வாங்கிப்போம், முன்னாடியே வரமாட்டியானு! ஆனால் நமக்குச் சொன்ன நேரமும் அவங்க நடத்தி முடிச்ச நேரமும் வேறேயாக இருக்கும்!

 # இந்த மாதிரி மனக்குறைகள் சரியல்ல.  நமக்குச் சொல்லப் பட்ட நேரம் தான் காரணம் என்றால் அதை தெளிவாக சொல்லிவிட வேண்டியதுதான். 

& இந்த மாதிரி நிகழ்வுகள் எப்பவும் நடைபெற சாத்தியம் இல்லை. Communication gap தான் இந்த வகை ஏமாற்றங்களுக்கு முதல் காரணம். சொல்பவர், சரியாக உறுதியாக சொல்லி, அதை கேட்டவர் சரியாகப் புரிந்துகொண்டாரா என்று உறுதிப் படுத்திக்கொண்டால் எல்லாம் சரியாக இருந்திருக்கும். அழைப்பு விடுப்பவர், எல்லோருக்குமே சம்பிரதாயமாக உபச்சார வார்த்தைகள் சேர்த்துத்தான் அழைப்பார்கள். அழைப்பை ஏற்பவர், எந்த நாள், எந்த இடம், எந்த நேரம் என்பதை ஒன்றுக்கு இரண்டுமுறை கேட்டு, நிச்சயப்படுத்திக்கொண்டு, " நிச்சயம் வருவேன் " என்று உறுதி அளித்திருந்தால், அழைத்தவர் அதை மீறி எதுவும் செய்ய வாய்ப்பில்லை. அதையும் மீறி செய்தார் என்றால், மன்னிப்போம், மறப்போம் என்று விட்டுவிடுதல் நலம். 


4. இன்னும் சிலர் இருக்கிறார்கள். தாய், தந்தையிடமிருந்தே சகோதர, சகோதரிகளைப் பிரித்துவிடுவார்கள். அப்படிப் பிரிக்கிறார்கள் என்பதை சம்பந்தப் பட்டவர் உணரும் முன்னரே இது நடந்து முடிந்து விடும். கடைசியில் பாதிக்கப்பட்டவர் வார்த்தைகள் சபையில் ஏறாது! இப்படியான மனிதர்களைக் கையாளுவது எப்படி?

# அடுத்தவர் நம்மைப் பற்றிச் சொல்வது அல்லது நினைப்பது பற்றிய கவலைகள் வீணான சஞ்சலம் தவிர வேறு அல்ல.

& தாய் தந்தையரிடமிருந்து சகோதர சகோதரிகளைப் பிரிக்கிறவர் யார்? சகோதர சகோதரிகளில் ஒருவரா? வேறு சொந்தமா? வேறு பந்துக்களா? தாய் தந்தையரிடமிருந்து பிள்ளைகளை பிரிக்க ஒருவரால் முடிகிறது என்றால், அந்தத் தாய் தந்தையோ அல்லது பிள்ளைகளோ உடன்படாமல் யாரும் பிரிக்கமுடியாது. 

5. உள்ளுணர்ச்சி சொல்லுவதை நீங்கள் நம்புவீர்களா? எனில் அப்படி நம்பி நடந்த ஏதேனும் நிகழ்ச்சி?

# மிகச்சரியான உள்ளுணர்வுகள் எல்லாருக்கும் வருபவைதான்.  சொல்லக்கூடிய அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த எதுவும் அண்மையில் இல்லை. 

& ஒருநாள் மொபைல் ஃபோனில், ஸ்க்ரீன் லாக் வேண்டாம், அதை அகற்றிவிடலாம் என்று ஓர் உள்ளுணர்வு தோன்றியது. உடனே செயல்படுத்தி, ஸ்க்ரீன் லாக்கை அகற்றினேன். 

அதற்கு சில நாட்கள் கழித்து ஒரு நாள் ( 26-06-2017) மாலை நேரம் - தன்னந்தனியனாக ஷாப்பிங் முடித்து திரும்பிக் கொண்டிருந்த என்னை அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதி, ரோடின் ஓரத்தில் தூக்கிப்போட்டது. அப்பொழுது நினைவிழந்து இரத்த வெள்ளத்தில் கிடந்த என்னைக் காப்பாற்றியது என் சட்டைப் பையில் நான் வைத்திருந்த மொபைல் ஃபோன். அதை எடுத்துப் பார்த்த ஆட்டோக்காரர்(?) ஒருவர், அதில் எனக்கு சமீபத்தில் வந்திருந்த அழைப்பு எண்களைப் பார்த்து, அவர்களுக்கு விபத்து பற்றி அறிவித்ததால், மின்னல் வேகத்தில், உறவினர்களும் நட்புக்களும் அந்த இடத்திற்கு விரைந்து வந்து என் உயிரைக் காப்பாற்றினார்கள். 

நான் முன்பு மொபைல் ஸ்க்ரீன் லாக் அகற்றாமல் இருந்திருந்தால் - விபத்து பற்றிய செய்தி யாருக்குமே சென்றிருக்காது, நானும் பிழைத்திருக்கமாட்டேன். உள்ளுணர்வு என்னைக் காப்பாற்றியது. 

6. மனித குணங்களை உள்ளுணர்ச்சியால் கண்டு பிடிக்கலாம் என்பதை நான் நம்புகிறேன். நீங்கள்?

 # நான் நம்ப மாட்டேன்.

& சில சமயங்களில். ஆம். 

7. திட்டம் போட்டுப் பழி வாங்குபவர்கள் தொலைக்காட்சிகளில் மட்டுமில்லாமல் நிஜ வாழ்க்கையிலும் இருக்கிறார்களே! அவங்களுக்குக் குற்ற உணர்வே வராதா?

 # பழி வாங்குவது என்றால் அவர்களுக்கு நாம் ஏதோ பாதகம் செய்தால்தானே பழி வாங்க வேண்டி வரும் ? அப்படியானால் குற்ற உணர்வு வர நியாயமில்லை.

& திட்டம் போட்டுப் பழி வாங்குபவர்கள் என்று பன்மையில் சொல்லியிருப்பது ஆச்சரியமாக உள்ளது. ஏதேனும் உதாரணம் கொடுக்கவும். பொதுவில் சொல்ல இயலவில்லை என்றால் வாட்ஸ் அப் மூலமாக விவரங்கள் அனுப்புங்கள். பதில் அனுப்புகிறேன்.                 

8. காரணமே இல்லாமல் ஒருவரை அவர் ரொம்பவே பெர்ஃபெக்டா இருக்கார் என்பதாலும் எல்லாவேலைகளையும் திறம்படக் கையாளுகிறார் என்பதாலும் வெறுப்பது சரியா?

# சரியல்ல.

& நீங்க சொல்றது வேடிக்கையா இருக்கு. நான் ரொம்ப பெர்ஃபெக்டாக இருந்துகொண்டு,  வேலை எல்லாவற்றையும் திறம்படக் கையாளுகிறேன் என்றால், என்னைப் பார்த்துப் பொறாமை கொள்ளுபவர்கள் இருக்கலாம். ஆனால், அதற்காக என்னை வெறுப்பவர்கள் இருக்கமுடியுமா? அப்படி வெறுப்பவர்கள் காரணமே இல்லாமல் என்னை வெறுக்கிறார்கள் என்று எப்படி சொல்லமுடியும். அவர்கள் வெறுப்பதற்கான காரணம், நம்முடைய திறமைகள் என்று தெரிந்துவிட்டதே! அப்படியே யாராவது இருந்தாலும், அவர்களின் வெறுப்பு நம்மை என்ன செய்துவிடும்! 

9. பலருக்கும் ஸ்ட்ரெயிட் ஃபார்வர்ட் என்றால் பிடிக்கவில்லை. ஏன்? அப்படி இருப்பவர்களைப் பின்னால் கேலி செய்கின்றனரே! ஏன்?

# ஸ்ட்ரெய்ட் ஃபார்வர்ட் நபர்கள் பலரும் ஏதோ அகில உலகமும் தம்மை மதிக்க வில்லை என்று தவறாக நினைக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். 


10.இந்தக் கொரோனா ஊரடங்கினால் பொது மக்களுக்குக் கிடைத்த நன்மை என்ன? தீமை என்ன?

 # இது பற்றி ஒரு கட்டுரையே எழுதலாம். 

& நன்மை : self introspection செய்துகொள்ள நிறைய நேரம் கிடைத்தது. புத்தகங்கள் படிக்க, வீட்டுச் சொந்தங்களுடன் நிறைய பேச, பழக. எவை எல்லாம் நம்முடைய அத்தியாவஸ்யத் தேவைகள் என்பதைத் தெரிந்துகொள்ள. குறுக்கீடுகள் எதுவும் இன்றி, வீட்டுக்குள் நாம் நினைத்த வேலைகளை செய்ய நேரம் கிடைத்தது. வாகனங்கள் எதுவும் இயங்காததால், சுவாசிக்க சுத்தமான காற்று. 

தீமை : மக்களின் சுயநல போக்கு அதிகரித்தது. நெருக்கடி தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்துகொள்ளுதலில் சட்டக் குறுக்கீடுகள், சிக்கல்கள். வறிய மக்களும், நோயாளிகளும் நிறைய சிரமப்பட்டு காலம் தள்ளவேண்டிய சூழ்நிலை. 

11. குடும்பத்தில் எல்லோரும் சேர்ந்து இருந்தாலும் கணவன் இருப்பதால் மனைவிக்கும், மனைவியுடன் வீட்டில் தங்கி இருப்பதால் கணவனுக்கும் அவரவர் தனிப்பட்ட உரிமைகள் போய்விட்டன எனச் சண்டை வருவதாகப் பத்திரிகைகள் சொல்கின்றன. அப்படியா?

# எந்தப் பத்திரிகை இப்படிச் சொல்கிறது ? இதில் உண்மை இருப்பதும் இல்லாததும் தனி நபர் அனுபவம் சார்ந்தது. 

& நிச்சயம் அப்படி இல்லை. வீட்டு வேலைகளை குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் பகிர்ந்துகொண்டால் எல்லோரும் சந்தோஷமாக இருக்கலாம். 

12. கணவன்மார்கள் மனைவிக்கு உதவலாம், ஆனால் இந்தப் பாத்திரம் தேய்ப்பது, துணி தோய்ப்பது போன்ற நகைச்சுவைத் துணுக்குகள் அனைத்தும் பொய் தானே? உண்மையிலேயே செய்வாங்களா?

# லாக் டவுனில் நான் தினசரி பாத்திரம் தேய்க்கிறேன். மெஷின் வந்தபின் துணி துவைப்பது யாவரும் செய்வதுதான்.

& இந்த எந்திர உலகத்தில் எல்லாவற்றுக்கும் எந்திரம் வந்துவிட்டது. உண்மையில் இந்த வேலைகளை செய்கின்ற ஆண்கள் யாரும் இது பற்றி நகைச்சுவை துணுக்குகள் எழுதமாட்டார்கள். அப்படி எழுதுபவர்கள் அந்த வேலைகளை செய்துகொண்டிருக்கமாட்டார்கள். 


============================================



201 கருத்துகள்:

  1. பணியுமாம் என்றும் பெருமை சிறுமை அணியுமாம் தன்னை வியந்து...

    நலம் வாழ்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்க நலம். வணக்கம் துரை செல்வராஜு ஸார்.

      நீக்கு
    2. இந்தக் குறளின் கடைசி இரண்டு வார்த்தையில் .. கொன்னுட்டான் மனுஷன்!

      நீக்கு
  2. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. இனிய காலை வணக்கம் அனைவருக்கும். கேள்விகள் அனைத்தும் குடும்ப உறவுகளும், நட்புகளும் பற்றிய அனேகரின் சந்தேகங்களே.நல்ல யோசனைகள் கலந்துரையாடலில் வெளிப்பட்டது.

    பதிலளிநீக்கு
  4. காலை வணக்கம் அனைவருக்கும். சுதர்ஸன் க்ரியா பண்ணிக்கொண்டே இடுகையைப் படிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுதர்ஷன் க்ரியா செய்துகொண்டே ஃபோனை உருட்டிக்கொண்டிருக்கிறீர்களா? ஆற்றிலே ஒரு கால், சேற்றிலே ஒரு காலா! (இடுகை சேறு என அர்த்தமல்ல!)

      நீக்கு
    2. மூச்சுப் பயிற்சி... இது மனதுக்கு வேலை. சரியில்லைதான்.. இருந்தாலும் இன்று லென்ந்தி சுதர்ஸன் க்ரியா... அதனால் கிடைத்த நேரத்தில் இது.

      பிறகுதான் குளித்துவிட்டு அமாவாசை தர்ப்பணம்.

      நீக்கு
    3. தெரிந்துதான் கேட்டேன்!
      2003-ல் டோக்கியோவில் சுதர்ஷன் க்ரியாவுக்கு அறிமுகமானேன். அதற்கடுத்த வருஷம் ஸ்ரீஸ்ரீ வந்திருந்தார் அங்கே. ஒரு மாலையில், ஒரு பிரபல ஆடிட்டோரியத்தில் சந்தித்தோம். அவரது ‘பேச்சு’ முடிந்து, ஆடுவதுபோல அவர் அசைந்து அசைந்து ஆடியன்ஸ் பகுதியில் வந்தபோது, என் கூட வேலை பார்த்த அருகில் உட்கார்ந்திருந்த சர்தார் இளைஞன் தடால் என எழுந்து அவரது காலைத் தொட்டான். அவரது கையைப் பிடித்துக்கொண்டு ஆட ஆரம்பித்துவிட்டான்.. கரீனா, கட்ரீனா நினைவு வந்திருக்கும்!

      நீக்கு
    4. எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனாலும் எல்லோருக்கும் நன்றி!

      நீக்கு
    5. ஏகாந்தன் சார்... என்னிடம் ஒரு செல்ஃபிஷ் குணம் உண்டு (ஒன்று மட்டுமா என்று மனைவி கேட்பாரோ? ஹி ஹி). சுதர்ஷன் கிரியா போன்ற நல்லவைகளை எடுத்துக்கொண்டு நான் அதைத் தொடர்வேனே தவிர, சொல்லிக்கொடுக்கும் குருவை அல்ல. அப்படிச் செய்தால் அவங்க சொல்வது எல்லாமும் நமக்கு ஏற்கும்படி இருக்கணும். அப்புறம் அவங்களை (ஸ்ரீஸ்ரீ போன்றவர்களை) கடவுள் ரேஞ்சுக்கு கூட இருப்பவர்கள் துதிக்கவும் புகழவும் சொல்வாங்க. அது எனக்குப் பிடிப்பதில்லை. இன்னும் நான் சரியான குருவை அடையவில்லை)

      எல்லாரும், சொல்லிக்கொடுத்தவைகளை அம்போன்னு விட்டுவிட்டு, சொல்லுபவரை கடவுள் ரேஞ்சுக்கு ஆராதிக்க ஆரம்பித்துவிடுவார்கள். அதில் என்ன பயன் என்று எனக்குப் புரிவதில்லை.

      உங்களுக்கு இது புரியும்னு தோணுது.

      நீக்கு
    6. //..சொல்லிக்கொடுத்தவைகளை அம்போன்னு விட்டுவிட்டு, சொல்லுபவரை கடவுள் ரேஞ்சுக்கு ஆராதிக்க ஆரம்பித்துவிடுவார்கள்//

      சரியாக கவனித்திருக்கிறீர்கள். இதுதான் சிஷ்யகோடிகளிடம் உள்ள குறைபாடு. அதாவது சீரியசான குறைபாடென நான் கருதுகிறேன்.’ஓவர் உயர்த்துதல்’ ஞானத்துக்கு ஆகாது - அதாவது ஞானம் நோக்கி சிஷ்யன், பக்தன் செல்ல முனைந்தால்.. ஆகாது. ஷிர்டி பாபா, மஹாபெரியவா போன்ற ஞானிகளின் விஷயங்களிலும் சிஷ்யகோடிகளின் செயல்பாடு இப்படித்தான் பெரும்பாலும்.

      வெவ்வேறு வித பாபாக்களின் பக்தர்களோடு பழகியிருக்கிறேன். வெகுகாலமாக அவதானித்துவருகிறேன். அவர்களில் சிலர் நல்ல நண்பர்கள் - எனவே கூப்பிட்டதால் போயிருக்கிறேன். அத்தகைய பஜன்களில் கலந்துகொண்டிருக்கிறேன். சில பாடல்கள் நல்ல ராகத்தில் அழகாக வந்து விழுகையில், சேர்ந்தும் பாடியிருக்கிறேன். இருந்தாலும், ‘அங்கே இருந்தேன், ஆனால் இல்லை’ என்பதான ஒரு aloofness.
      என் உறவுவட்டாரத்தில் ’இப்பேர்ப்பட்ட பரவச பக்தர்கள்’ உண்டு. இந்தவகை மிகைப்படுத்துதல்களை சில நேரங்களில் மென்மையாக விமரிசித்திருக்கிறேன், முக்கியமான விஷயத்தை விட்டுவிட்டு ஏதேதோ பேசி, பரவசமடைகிறார்களே என்கிற சிந்தனையில். ஆனால் புத்திமதி சொல்வதில்லை. யாருக்கு வேண்டும் புத்தியும், மதியும்? ஒரு விஷயம் ஒருவருக்குப் ’புரிகிறது’. அல்லது..’புரியவில்லை’. It is not in them to understand. As simple as that. இரண்டு நிலைகள்தான். இடையிலே வேறேதுமில்லை. எதுவும் செய்வதற்கில்லை. நிறைய எழுதலாம். நீண்டுவிடுகிறதே..!

      நீக்கு
    7. மிகவும் சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறீர்கள். நன்றி. சரியாக அறியாத சிஷ்யர்கள், தங்கள் செயலை 'குருபக்தி' என்று நினைத்து செயல் படுகின்ற விநோதமும் உண்டு.

      நீக்கு
    8. எங்க பையரின் வற்புறுத்தலால் நாங்களும் கொஞ்ச நாட்கள் (சுமார் பதினைந்து வருடங்கள் முன்னர்) இந்த ஸ்ரீஸ்ரீரவிசங்கரின் வகுப்புகளுக்குப் போயிருக்கோம். அவங்க ஃப்ளெக்ஸ் பானரை எங்க காம்பவுண்டிலேயே கட்டி வைச்சிருந்தாங்க! அப்புறமாப் போகலை. ஆனால் அதற்கும் முன்னாலேயே நானும் அவரும் யோகா கற்றுக்கொண்டு தியானம், மூச்சுப் பயிற்சி எல்லாம் செய்து வந்ததால் இதில் புதுசாக எதுவும் தெரியவில்லை. சில நாட்களில் விட்டுவிட்டோம். அது நடந்தது 2005 ஏப்ரல், மே மாதங்களில். அந்தச் சமயங்களில் ஒரு காலத்தில் "பெண்"களூரில் உள்ள ஸ்ரீஸ்ரீயின் ஆசிரமத்தில் போய் முதியோர் விடுதியில் நிரந்தரமாகத் தங்கலாம் என்னும் எண்ணமும் பலமாக இருந்தது. இப்போது சில விஷயங்கள் தெளிவானதில் அதெல்லாம் இல்லை.

      நீக்கு
    9. வாவ்வ்வ் மீயும் மூச்சுப்பயிற்சி, யோகா எல்லாம் வீட்டில் செய்கிறேன் தெரியுமோ?:)

      நீக்கு
  5. உறவுச் சிக்கல்களைப் பற்றியே பெரும்பான்மையான கேள்விகள்.

    சிக்கல்களில்லாத உறவு இருக்கிறதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உறவு சொல்ல ஒருவரின்றி வாழ்பவன் - அவன்
      உலக வாழ்க்கைப் பள்ளியிலே மாணவன்..’
      -சுசீலாவின் அருமையான பாடல்களில் ஒன்று!

      நீக்கு
    2. ஆனா ஏகாந்தன் சார்... நாம் ஒவ்வொருவரும் தனித் தனி ஆன்மாக்கள் இல்லையா? எப்படி இருந்தாலும் நம் fateஐ நொக்கி, நம் அடுத்த ரோலை நோக்கி நாம் செல்ல வேண்டுமல்லவா? அதற்கான முன்னெடுப்புகளை நாம்தானே நமக்குச் செய்துகொள்ள வேண்டும்.

      நீக்கு
    3. உண்மைதான். நமக்காக, மற்றவர் பயணிக்கமுடியாது!

      நீக்கு
    4. இப்பவும் ஒன்றும் புரியவில்லை. நாம் எல்லோரும் ஜீவாத்மாக்கள்தானே! எப்படி தனித்தனி?

      நீக்கு
    5. கேஜிஜி சார்..தெரிந்துகொண்டே கேட்கறீங்களே... உங்க நல்ல செய்கைகள், கெட்டவை எப்படி மத்தவங்க கணக்குல சேரும்? அவங்க அவங்கதானே அவரவர்களின் கர்ம பலனை அனுபவிக்கணும்?

      பொதுவா சொல்வாங்க... கணவனின் நற்பலன்களில் 50% மனைவிக்கு ஆட்டமேட்டிக்கா வந்துவிடும் (கெட்ட பலன்கள் அவரை அடையாது). ஆனால் மனைவியின் நற்பலன்கள் கணவனைச் சேராது. இது ஒரு வேளை ஆணாதிக்க மனப்பான்மையில் சொல்லியிருக்கலாம் (கணவன் பூஜையில் உட்கார்ந்தார்னு, அந்தப் பெண்ணும் உட்கார்ந்தா சோறு யாரு பொங்கறது? கணவன் மாதிரி அவளும் பூஜை புனஸ்காரம் கோவில்னு கிளம்பினா, வீட்டுவேலைகளை யார் பார்ப்பது என்று யோசித்து மனைவிக்கு ஆட்டமேட்டிக்கா பலன் வரும், அதுனால வீட்டுலயே கம்முனு கிட வீட்டு வேலையைப் பார் என்னைப் பார்த்துக்கோ, நான் என்னைப் பார்த்துக்கறேன் என்ற எண்ணமா இருக்குமோ? கீசா மேடம் வந்து இதற்கு பதில் சொல்வாங்களா?)

      நீக்கு
    6. பதில் சொல்லலாம் நெல்லை. ஆனால் இது உண்மையான ஆன்மிகம் பற்றியது! நானோ ஆன்மிகம் அறியாதவள். பெண்ணுக்குக் கணவன் சொல்படி தான் விரதமே மேற்கொள்ளணும் என்றெல்லாம் இருக்கு. கணவன் உத்தரவு கொடுக்கவில்லை எனில் அவள் வெறும் சனிக்கிழமை விரதம் கூட இருக்கக் கூடாது/முடியாது என்றெல்லாம் உண்டு. அதுக்கெல்லாம் பின்னால் ஒரு நாள் வைச்சுக்கலாம்.

      நீக்கு
  6. பாத்திரம் தேய்ப்பது, துணி துவைப்பது - நகைச்சுவை எழுத்தாளர்களை விடுங்கள். இது அனேகமாக பெண்களின் கஷ்டங்களை உணர்ந்தவர்கள், உணர வேண்டியவர்கள் செய்வதுதான். மனைவி, செய்யக்கூடாது என்று ணொன்னாலும் நான் செய்கிறேன். எந்த ஒரு வீட்டு வேலையையும் (அது ஹால் குப்பையாக இருந்தாலும் சரி, வாட்டர் மெலன், மஸ்க் மெலன் தோல் குப்பைகளானாலும் சரி, நான் நினைப்பது, வீட்டில் யாரேனும் ஒருவர் இதனைச் சரி பண்ணணும் இல்லையா, அது ஏன் நாமாக இருக்கக்கூடாது என்றுதான் நினைப்பேன். சோம்பேறித்தனமாக இருக்கும்போது மட்டும் மனைவியிடம் சொல்லிவிடுவேன்.

    கீதா சாம்பசிவம் மேடத்துக்கு எதுக்கு, "உண்மையிலே செய்வாங்களா" என்ற சந்தேகம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்க வீட்டில் இல்லை என்பதால் சந்தேகம் வருதோ என்னமோ! ஆனால் சில வீடுகளில் செய்கிறதாய்ச் சொல்கின்றனர்.

      நீக்கு
  7. 11. //அவரவர் தனிப்பட்ட உரிமைகள் // - நீங்க எதைச் சொல்றீங்கன்னு தெரியலை. ஒவ்வொருத்தருக்கும் பெர்சனல் ஸ்பேஸ் உண்டு. மனைவிக்கு ப்ரவசனம் கேட்பது, எனக்கு நெட் மேய்வது என்பது போல. அதனை மதித்தால் இந்தப் பிரச்சனை வராது.

    நான் பெரும்பாலும் மெனுவைச் சொல்லிவிடுவதால்.... (எனக்குப் பிடித்தமானதாக இல்லைனா சாப்பிடுவது கஷ்டம். நான் ருசிக்குச் சாப்பிடுபவன், பசிக்கு அல்ல) அது சில சமயம் பிரச்சனையை உண்டாக்கும். (எப்போப் பாத்தாலும் இதே காம்பினேஷனா? இந்த வாரம் ஒருமுறை செய்தாச்சு..மறுபடியும் பீட்ரூட்டா? என்னைக்கு உப்புச்சார் பண்ணச் சொல்லியிருக்கீங்க? இன்னைக்கு சூப்பர்னு சொல்லிச் சாப்பிடறீங்களே.. மெனுவை என்னிடம் விட்டால் வித விதமா பண்ணலாம்.. அது எனக்குச் சரிப்படாது. வேணும்னா ஒரு காயோ கூட்டோ சொல்லிடறேன். அதை ஒட்டி மற்றதைப் பண்ணிக்கோ.. என்ற ரீதியில் போகும் எங்கள் பேச்சு)

    மற்றபடி அவரவர் விருப்பத்தில் நான் குறுக்கிடுவதே இல்லை, என்னைப் பாதிக்காத வரையில். இதைத்தான் மற்றவர்களும் செய்வார்கள் என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் வீட்டில் மன்னரும் நானே, மக்களும் நானே, மரம் செடி கொடியும் நானே!

      நீக்கு
    2. கேஜிஜி சார்.... ஒரு நாள் ப்ராப்தம் இருந்தால் சந்திப்போம். 'மன்னரும் நானே....' என்று இருந்தால் போரடிக்காதோ? நாம செய்யும் தவறை யாரு சுட்டிக்காட்டுவது? அல்லது நல்லவைகளை யார் குறித்துக் காட்டி இன்னும் உத்வேகமாக செயல்படவைப்பது?

      நல்லவேளை... நாந்தான் 'கண்ணன்' என்று சொல்லாமல் விட்டீர்களே...ஹா ஹா.

      நீக்கு
    3. சில வீடுகளில் (எல்லாரும் அல்ல) கணவனுக்குத் தெரியாமல் திரைப்படம் பார்ப்பது என்பதில் இருந்து சில, பல வேலைகளைக் கணவன் அறியாமல் மனைவிமார் செய்கின்றனர் என்கிறார்கள். அப்படிப் பட்டவர்களுக்கு இப்போக் கணவன் வீட்டில் இருப்பது சிரமமாக இருக்கிறதாயும் சொல்கின்றனர். அதே போல் மனைவிக்குத் தெரியாமல் திரைப்படம், ஓட்டல், குடி எனப் பழகிய கணவன்மார்களுக்கு இப்போ அதை வீட்டில் செய்யமுடியவில்லையாம். அதான் தனிப்பட்ட உரிமைகள். மற்றபடி எங்க வீட்டில் நான் கணினியோடும் அவர் ஐபாடோடும் ஐக்கியம் ஆவோம். அவரவர் கருத்துகளை அவ்வப்போது சொல்லிக் கொள்வோம்.

      நீக்கு
    4. கீசா மேடம் - இதை முன்னாலேயே சொல்லியிருக்கேனான்னு தெரியலை. வெளிநாட்டில் (கல்ஃப்) பல வருடங்கள் கணவன் வேலை பார்த்துவிட்டு, திரும்ப சென்னைக்கு வந்தபோது மனைவிக்கும் கணவனுக்கும் ஒத்துக்கொள்ளலை (அவன் இல்லாதபோது வீட்டை தனியாக நிர்வாகம் செய்து ராணியாக இருந்தவளால், கணவனோடு இருக்க முடியாததுதான் காரணமாய் இருந்திருக்கும்). அப்புறம் இருவரும் தனித் தனி வீடுகளில் வசித்தார்கள் (வசிக்கிறார்களா என்று தெரியவில்லை).

      ஆபீசிலும், டெம்பொரரி இன் சார்ஜ் ஆக இருந்துவிட்டு, அந்த பொசிஷனுக்கு உரியவர் திரும்ப வந்தால், டெம்பொரரியாக இருந்தவரால் கொஞ்சம் தாங்க முடியாது இல்லையா? அதுபோல்தான் இது. ஆனால் இதில் வாழ்க்கை பாதிக்கப்படும்.

      நீக்கு
  8. //ஒருவர் பெர்ஃபெக்டா இருக்கார், திறம்படக் கையாளுகிறார் என்பதால் வெறுப்பு// ஆபீசில் வீட்டில் இது சகஜம். பொதுவா நமக்கு அந்த மாதிரி பெர்ஃபெக்‌ஷன் இல்லையே என்ற தன்னிரக்கத்தாலும், அவங்களோட இந்தத் தனித் திறமையினால் நாம் அதிகமாக ஏச்சு கேட்கவேண்டியிருக்கே என்ற கோபத்தாலும் ஏற்படுவது இது. இந்த வெறுப்பால் பயன் ஏதுமில்லை. ஹா ஹா ஹா. (By the by nobody likes perfect person except sometime bosses)

    பதிலளிநீக்கு
  9. கேள்வி பதில்கள் அருமை...

    உணர்ச்சி வேறு... உணர்வு வேறு...

    உணர்ச்சி : உயிர் சக்தி விரையம் / குறைவு ஏற்படும்... உடனே தண்டனை கிடைக்கலாம்...

    உணர்வு : உயிர்களின் உள் முகமான விசயம்... உள்ளுணர்வு ஒவ்வொருத்தருக்கும் சரியாகவே உணர்த்தும்... மீறினால், தண்டனை தாமதமாக இருமடங்கு கிடைக்கலாம்...!

    (இவை அடுத்தவர்களுக்கு அல்ல...)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி திரு தனபாலன். நான் உணர்ச்சிகளை அவ்வளவு எளிதில் வெளியே சொல்ல மாட்டேன் என்றாலும் சிலவற்றை முகம் காட்டிக் கொடுத்துவிடும். அதே சமயம் உள்ளுணர்வு சொல்லுவதையும் தட்டாமல் இருப்பேன். பல சமயங்களில் அது சரியாகவே சொல்லும்.

      நீக்கு
  10. நீண்ட நாட்களுக்கு அப்புறம் நேரம் கிடைத்ததால் இந்த பகுதியை எட்டி பார்த்தேன்

    கீதா அவர்களின் இந்த கேள்விக்கு ஒருவர் மேல் பகைமை 50 வருடங்கள் ஆனாலும் நீடிக்குமா என்ன?

    என் பதில் நிச்சயம் இல்லை சிறிது நாள் இருவரும் சற்று பேசாமல் இருந்தாலே தன்னால் சரியாகிவிடும் ஆனால் என்ன சுற்றி உள்ளவர்கள் ஊதி பெரிசாக்காமல் இருக்க வேண்டும் அவ்வளவுதான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாகச் சொன்னீர்கள்.

      நீக்கு
    2. //என் பதில் நிச்சயம் இல்லை// - ஒருவர் செய்த செயல் நம் மனதில் ஆழப் பதிந்து அதன் விளைவுகள் 50 என்ன 500 வருட காலமானாலும் மனதில் பசுமரத்தாணிபோல் பதிந்துவிட்டால், பகைமை எத்தனை வருடங்கள் ஆனாலும் நீடிக்கும். ஆனால் பெரும்பாலும் பகைமை வருவது சல்லி விஷயங்களில் என்பதால் (சல்லி-டைப்போ தவறு அல்ல) பகைமை நீடிக்காது. ஆனால் கூட இருப்பவர்கள் ஓதிக்கொண்டே இருந்தால், அப்படி நடக்கும்வரை பகைமை நீடிக்கும்.

      நீக்கு
    3. If people know how to empathize, then there won't be permanent enmity.

      நீக்கு
    4. புரிந்து கொள்ளும்படிக் கடுமையான மனஸ்தாபமெல்லாம் இருக்காது நெல்லை சொல்கிறாப்போல் ஆனால் ஆழமான காரணம் எனில் பெண் எனில் தன் பிள்ளையோ, அண்ணனோ தனக்குப் பிடிக்காத இடத்தில் திருமணம் செய்து கொண்டால் அந்தப் பெண்ணை வாழ்நாள் முழுவதும் வெறுப்பது சரியா? இத்தனைக்கும் அந்த மருமகள் குடும்பத்துக்கு உதவியாகவே இருப்பாள்/இருக்கிறாள்.

      நீக்கு
    5. பேசாமல் இருந்தால்/இருப்பதால் எல்லாம் தீரும் பிரச்னை இல்லை மதுரைத் தமிழரே! ஈகோ பிரச்னை எனலாம். எனக்குச் சில விஷயங்களை வெளிப்படையாகச் சொல்லுவதில் தயக்கம்! அதனால் கேள்விகளில் குழப்புகிறேன் போல!

      நீக்கு
  11. ஒரு நிகழ்வில் கலந்து கொள்ள நம்மை அழைத்தவர்கள், நமக்கு முன்னுரிமை எனச் சொல்லி இருந்தால் அந்த நிகழ்விற்கு நாம் எல்லோருக்கும் முன்னதாகவே போய் சிறப்பிப்பதுதான் அழகு

    ஆனால் நமக்குச் சொன்ன நேரமும் அவங்க நடத்தி முடிச்ச நேரமும் வேறேயாக இருந்தால் அவர்கள் அவர்கள் பெயரளவிற்குதான் முன்னுரிமை கொடுத்து இருப்பார்கள்.... ஆனால் நமக்கு சொன்ன நேரத்தைதானே எல்லோருக்கும் அவர்கள் சொல்லி இருப்பார்கள் அப்படி இல்லையென்றால் நம்மை அவர்கள் அவாய்ட் பண்ணத்தான் அப்படி செய்து இருப்பார்கள் அதனால் வருங்காலத்தில் அவர்களையும் நாம் சைல்ண்டாக ஆவ்ய்ட் பண்ணிவிட வேண்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெயரளவுக்குத் தான் முன்னுரிமை என்பது புரிந்து விட்டது. என்றாலும் யார் மேல் தப்பு எனத் தெரிந்து கொள்ளக் கேட்டேன். அவங்களைத் தவிர்க்கவும் ஆரம்பிச்சாச்சு.

      நீக்கு
  12. கணவன்மார்கள் மனைவிக்கு உதவலாம், ஆனால் இந்தப் பாத்திரம் தேய்ப்பது, துணி தோய்ப்பது போன்ற நகைச்சுவைத் துணுக்குகள் அனைத்தும் பொய் தானே? உண்மையிலேயே செய்வாங்களா?

    என்வீட்டில் நான் வேலைக்கும் போய்விட்டு வீட்டிற்கு வந்து அனைத்து வேலைகளையும் நான் தான்செய்கிறேன் இன்னும் சொல்லப் போனால் பெண்கள் மாதாந்திர விலக்கு நேரத்தில் உபயோகப்படுத்து நாப்கிங்களை கூட வீட்டில் தேவையான அலவு இருக்கிறதா இல்லையா என்று பார்த்து அவர்களுக்கு தேவையான அளவு வாங்கி ஸ்டாக வைப்பதும் நாந்தான்

    என் குடும்பம் அதன் நலனுக்காக நான் செய்கிறேன் அதே நேரத்தில் பூரிக்கட்டை நகைச்சுவைகளையும் எழுதி வருகிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதுரைத் தமிழன் - உங்க ஊர்ல வேற ஆப்ஷன் கிடையாது. வேறு ஆப்ஷன் இருந்தும், வேலையைப் பகிர்ந்துகொள்பவர்கள், அதிலும் இந்தியாவில் சரி சமமாக வேலையைப் பகிர்ந்துகொள்பவர்கள் மிகக் குறைவு என்றே நான் நினைக்கிறேன். அதிலும் மனைவி வேலைக்கும் செல்வதாக இருந்தால் இன்னும் கஷ்டம்.

      செய்யணும் என்ற மனம் இருப்பவர்கள் செய்வார்கள்.

      நீக்கு
    2. இங்கே இரண்டும் உண்டு. மனைவிக்கு உதவிகள் செய்யும் ஆண்களையும் பார்க்கலாம். தாய் பேச்சைக் கேட்டுக்கொண்டோ அல்லது ஆண் என்னும் அகம்பாவத்திலோ எதுவும் செய்யாமல் இருக்கும் ஆண்களும் உண்டு. செய்யத் தெரியாதவங்களும் உண்டு. அதே சமயம் பெண் வீட்டில் இருந்தாலும் இந்த சமையல் எல்லாம் எனக்கு ஒத்துவராது, ஆள் போடுங்க, அல்லது சாப்பாடு வாங்குங்க என்று சொல்லும் பெண்களையும் வாய் பேசாமல் அதற்கு அடங்கும் ஆண்களையும் பார்த்தாச்சு.

      நீக்கு
  13. பல பாடங்களை இந்த உள்ளிருப்பு நமக்கு உணர்த்தியுள்ளது. ஆனா, இனிவரும் காலங்களில் அவற்றை கடைப்பிடிப்போமா என்பதுதான் சந்தேகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். உண்மைதான். காலத்திற்கு ஏற்ப மாற்றங்கள் வரும்.

      நீக்கு
    2. ஊரடங்கினாலும்
      உள்ளம் அடங்காது....

      தாய் சொல்லைத் தட்டாதே - படப்பாடல்..

      பூ உறங்குது பொழுதும் உறங்குது
      நீ உறங்கவில்லை நிலவே..
      கானுறங்குது.. காற்றும் உறங்குது
      நான் உறங்கவில்லை...
      நான் உறங்கவில்லை...

      இந்தப் பாடல் தான் பிற்காலத்தில் -
      ஊரு சனம் தூங்கிடுச்சி..
      என்று திருப்பிப் போடப்பட்டது...

      நீக்கு
  14. துரோகம் செய்து விட்டு அதனை துளியும் உணராமல் பல வருடங்களாக இருப்பவர்களை எளிதாக மறந்து விடமுடியுமா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த புதன் கிழமைக்கான கேள்வியா?

      நீக்கு
    2. அதேதான் கில்லர்ஜி, தான் துரோகம் செய்தோம், முதுகுக்குக் கீழ் குழி பறித்தோம் என்பது தெரிந்தும் தெரியாத பாவனையாய் சகஜமாகப் பேசிக்கொண்டே அதே சமயம் மீண்டும் முதுகுக்குக் கீழ் குழி பறிக்கிறார்கள். ஏற்கெனவே ஏமாந்திருந்தாலும் இம்முறையும் குழிக்குள் விழுந்ததும் தான் தெரியவே வருகிறது! அப்படி ஒரு சமத்து! :( இதைத் தான் நானும் மனதில் நினைத்துச் சொன்னேன்.

      நீக்கு
  15. என்ன வழக்கமாக இந்நேரத்திற்கு வந்து விடும் வல்லி அக்கா, கீதா அக்கா, கமலா ஹரிஹரன் போன்றவர்களை காணவில்லை? அமாவாசை எல்லோரையும் இழுத்து பிடித்துக் கொண்டிருக்கிறதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மூன்று பேரில் இருவர் ஏற்கெனவே கருத்துரை இட்டாச்சு. மூன்றாவது அக்கா மட்டும்தான் அமாவாசைப் பிடியில் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

      நீக்கு
    2. ஃபோனில் பார்ப்பதால் scroll பண்ணும் பொழுது தாண்டிச் சென்று விட்டேன் என்று நினைக்கிறேன்.

      நீக்கு
  16. வழக்கமான கிண்டல், குறும்புகளுக்கு இடம் கொடுக்காத சீரியஸ் கேள்வி பதில்களாக அமைந்து விட்டது. ஆனால் சுவாரஸ்யம்தான். நிறைய விவாதங்களுக்கு இடமளித்திருக்கிறது. இன்றைய பின்னூட்டங்கள் இருநூறை தொட்டு விடுமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ பானுமதி, இன்னும் யாரும் வரவில்லையே! வந்தவர்களில் வல்லி, கமலா இருவரும் தொட்டுவிட்டுப் போய்விட்டார்கள். நீங்கள் தான் கொஞ்சமானும் கருத்துப் பகிர்வு செய்திருக்கிறீர்கள்.

      நீக்கு
  17. தற்கால ஆண்கள் வீட்டு வேலைகளில் நிறைய உதவிகள் செய்கிறார்கள். சில வீடுகளில் இப்படி மகன் மருமகளுக்கு உதவுவதை தடுப்பது மகனின் தாய்மார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதாவது நீங்க சொல்றது, பெண்ணுக்கு ஆண் எப்போதும் எதிரியில்லை. பெண்ணுக்கு இன்னொரு பெண்ணே எதிரி என்று. இந்தக் கருத்து நல்லா இருக்கே...

      நீக்கு
    2. ஆமாம், நெல்லைத்தமிழரே, நான் அறிந்து 3, 4 பெண் குழந்தைகளுக்கு மேல் பெற்ற ஒரு மாமியார் தன் மருமகளுக்கு முதலில் பெண் குழந்தை பிறந்ததை அறிந்ததும் அந்தப் பெண்ணைத் தள்ளி வைக்கச் சொல்லித் தன் மகனிடம் அறிவுறுத்துகிறாள்/அறிவுறுத்தினாள். பிள்ளை ஒத்துக்கலை என்றதும் கோபத்தில் மருமகளையும், குழந்தையையும் மாமனார் வீட்டுக்கே அழைக்க மாட்டேன் எனச் சொல்லி விட்டார். பிள்ளை எப்படியோ சமாளித்து சமாதானம் செய்து தன் மனைவியையும், குழந்தையையும் வரச் செய்தார். ஆனாலும் அவங்களுக்கு அதன் பிறகு அந்த மருமகளையும், பேத்தியையும் பிடிக்கவில்லை. இது தொடர்ந்தது பல வருடங்களுக்கு! :( அதான் கேட்டேன். 50 வருஷம் ஆனாலும் பகை நீடிக்குமா என?

      நீக்கு
    3. எங்க பையரும் சரி, மருமகனும் சரி வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்வார்கள். மருமகனுக்கு சமையல் அவ்வளவாக வராது. ஆனால் எங்க பையர் பிரமாதமாகச் சமைப்பார். தனியாகப் பத்து இருபது நபர்கள் வந்தாலும் சமைத்துப் போடுவார். பெண்ணும் நன்றாகச் சமைப்பாள். ஆனால் அது அவள் இயல்பு என்றாகி விடுகிறது. ஆண்கள் செய்தால் அது என்னமோ ரொம்பவே அதிசயமாகத் தோன்றுகிறது.

      நீக்கு
    4. //அந்த மருமகளையும், பேத்தியையும் பிடிக்கவில்லை. இது தொடர்ந்தது பல வருடங்களுக்கு! // - இதுமாதிரி நிறைய கேள்விப்பட்டிருக்கேன். ஆனா பாருங்க... ஒவ்வொரு இரவுக்கும் ஒரு பகல் உண்டு. ஒவ்வொரு பகலுக்கும் ஒரு இரவு உண்டு. அந்த 'புத்தி' இருந்ததுன்னா, தனக்கு ரத்தம் சூடா இருக்கும்போது மருமகளைப் படுத்த மாட்டாங்க, பிறகு மருமகள் தயவை எதிர்பார்க்கும்போது காலம் அவங்களுக்குப் புரிய வைக்கும். (சிலர் அதிசயமா அந்த நிலைக்கு வரும் வரை இருக்க மாட்டாங்க).

      என்னுடைய உறவினர், அவருடைய இரு பசங்களுக்கும் 6ம் வகுப்பு படிக்கும்போதே சமையல் டிரெயினிங் கொடுக்க ஆரம்பித்தார். அதுனால அந்தப் பசங்க எப்போதும் சமைக்கத் தெரியும். இது ரொம்ப முக்கியமான குவாலிஃபிகேஷனா நான் நினைக்கிறேன். நமக்கு ஒரு தொழில் தெரியும்போதுதான் அதன் கஷ்ட நஷ்டம் தெரியும்.

      நீக்கு
  18. perfection என்று ஒன்று கிடையவே கிடையாது. எல்லா விஷயங்களுமே அவரவருக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவுதான். என்னுடைய 100% அடுத்தவரின் 30% ஆக இருக்கலாம். பறவையால் பறக்க முடியும், புலியால் பாய முடியும். பறவை பாய வேண்டும், புலி பறக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எவ்வளவு அபத்தம் அவ்வளவு அபத்தம் எல்லோரும் ஒரே மாதிரி எல்லா செயல்களையும் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பதும். மெக்காலே கல்வித்திட்டம் அதைத்தான் செய்கிறது(நான் ட்ராக் மாறுகிரேனோ?)
    Perfectionist என்று தங்களை நினைத்துக் கொள்பவர்கள் தாங்கள் செய்வதுதான் இலக்கு என்று நினைத்துக் கொண்டு,அப்படி செய்ய முடியாதவர்களை தங்கள் பேச்சாலும், செய்கையாலும் நோக அடிக்கும் பொழுது வெறுப்புக்கு ஆளாகிறார்கள். சாமான்யர்களால் விரும்பப்படும் perfectionistகள் உண்டே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையில் நோக அடிப்பது அப்படிச் செய்ய முடியாதவர்கள் செய்பவர்களைப் பார்த்துச் செய்யும் கேலி, கிண்டல்களால் தான். எல்லாவற்றையும் நன்றாகச் செய்துவிட்டு வாங்கிக் கட்டிக் கொள்ளுபவர்கள் நிறைய உண்டு. புலி பாய்வது அதன் இயல்பு. பறவை பறப்பது அதன் இயல்பு! அதை மாற்ற முடியாது. ஆனால் இந்த பெர்ஃபெக்ஷன் என்பது இயல்பு அல்ல. செய்யச் செய்யப் பழகிக் கொண்டு இப்படித் தான் செய்யணும் என்ற எண்ணத்தில் திருந்தச் செய்வது. இதை எல்லோருமே செய்ய மாட்டார்கள். எங்க வீட்டில் 3 குளியலறைகள். மூன்றையும் கழுவிட்டுத் தான் நான் குளிக்கப் போவேன் அன்றாடம். ஆனால் இதை இன்னொருத்தர் அவங்க வீட்டில் கடைப்பிடிக்க முடியுமா? அவங்களால் முடியாது. வாரம் ஒருமுறையே பெரிய விஷயம்! அவங்க என்னைப் பார்த்து நீ ரொம்ப ஒழுங்குனு நினைச்சுட்டுச் செய்யறியோனு சொன்னால்? இது இன்னொரு உதாரணம் நம் வேலை, நாம் ஒழுங்காய்ச் செய்யணும் என நினைப்பது வேறே. மனிதனைப் பார்த்துப் பறவையைப் போல் பறனு சொல்லவா முடியும்? வீட்டைச் சுத்தமா வைச்சுக்கோனு சொல்ல முடியுமே! அதைத் தான் நான் சொல்கிறேன். நீங்கள் சொல்வது இயற்கையை வெல்வது! அதில் யாருக்கும் பெர்ஃபெக்ஷன் வராது.

      நீக்கு
    2. //இந்த பெர்ஃபெக்ஷன் என்பது இயல்பு அல்ல. செய்யச் செய்யப் பழகிக் கொண்டு இப்படித் தான் செய்யணும் என்ற எண்ணத்தில் திருந்தச் செய்வது.// எத்தனை பழக்கினாலும் எல்லோருக்கும் எல்லாம் வசப்பட்டு விடாது. நல்ல குரல் வளம் உள்ள ஒருவ பெண், பத்து வருடம் சங்கீதம் கற்றுக் கொண்டாலும் எம்.எஸ். போல பாடி விட முடியுமா? அவளால் எவ்வளவு முடியுமோ அவ்வளவுதான். கிளியைத்தானே பழக்க முடியும், காக்கையை பழக்க முடியுமா?(மீண்டும் விலங்குகளையே உதாரணத்திற்கு இழுக்கிறேன்)  

      நீக்கு
  19. சராசரி மனிதர்களால் விரும்பப்படும் திறமைசாலிகள் உண்டே என்று திருத்திக் கொள்ளவும்.

    பதிலளிநீக்கு
  20. அனைவருக்கும் மதிய வணக்கம். கொரோனா பாதிப்புகளால் தினசரிகளில் வரும் செய்திகளைப் படிக்கக் கூடப் பிடிப்பதில்லை. இன்று அமாவாசை என்பதால் காலையில் வரமுடியவில்லை. ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் கூட 2018 செப்டெம்பர் வரை கூட நான் தான் எல்லா வேலைகளையும் செய்து கொண்டிருந்தேன். ஆனால் இப்போது உதவிக்கு ஆள் வைத்ததும் என்னோட வழக்கமான சுறுசுறுப்புப் போய்க் கொஞ்சம் மெதுவாகத் தான் செய்கிறேனோ எனத் தோன்றுகிறது. அமாவாசைக்குச் செய்ய வேண்டிய சில வேலைகளை நேற்றே செய்து கொண்டிருக்கலாம். உதாரணமாகத் தர்ப்பணத்தட்டு, பஞ்சபாத்திரம் தேய்ப்பது எல்லாம். ஆனால் இன்றைக்குனு போட்டு வைச்சாச்சு. சும்மாவானும் குழப்ப மனம் இடம் கொடுக்காது. நன்றாகவே தேய்த்து வைக்கணும்! :) ஆக ஒவ்வொன்றையும் செய்துவிட்டுக் குளிக்கும்போதே ஒன்பது மணி ஆகிவிட்டது. இடையில் பையரின் அழைப்பு! எல்லாம் முடிந்து சமையல், சாப்பாடு முடிந்து துணி உலர்த்தி விட்டு உட்காரும்போது பதினொன்றரைக்கு மேல் ஆகிவிட்டது. அப்படியும் இன்னும் அரைக்கவில்லை. மத்தியானமா அரைக்கலாம்னு வைச்சுட்டேன். :))))) ஒரு வேளை எனக்கும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் வயசு ஆயிடுச்சோ? ம்ம்ம்ம்ம்ம்ம்ம்? :))))))))

    பதிலளிநீக்கு
  21. இன்னிக்கு என்னோட கேள்விகளுக்கு மட்டும் பதில்கள். நான் இந்த பெர்ஃபெக்ஷனிஸ்ட் பத்திச் சொல்கையில் சரியாகச் சொல்லலைனு நினைக்கிறேன். ஆகவே ஒவ்வொருத்தர் ஒவ்வொரு அர்த்தம் எடுத்துக் கொண்டிருக்கின்றனர். வீட்டு வேலைகளிலும் சிலருக்கு பெர்ஃபெக்ஷன் இருக்கும். சமையல் முடிஞ்சு சாப்பாடு ஆனதுமே பாத்திரங்களை ஒழித்துப் போட்டுத் தேய்த்து அடுப்பையும் துடைத்துவிட்டு வருபவர்கள் உண்டு. சாப்பிட்டதும் அப்படியே போட்டுவிட்டு வந்து படுப்பவர்கள் உண்டு. என்னைப் பொறுத்தவரை முதலாமவர் பெர்ஃபெக்ஷனிஸ்ட் எனில் இரண்டாமவர் சோம்பேறி எனச் சொல்லலாமா? ஆனால் அவருக்கு முதலாமவரைப் பார்த்து இளக்காரம், கேலி, கிண்டல் இருக்கும். அவதான் எல்லாம் ஒழுங்காச் செய்யறாளாம். என்று முடுமுடுப்பார். இது ஒரு உதாரணம் தான் இம்மாதிரி நிறைய உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சமையல் முடிஞ்சு சாப்பாடு ஆனதுமே பாத்திரங்களை ஒழித்துப் போட்டுத் தேய்த்து அடுப்பையும் துடைத்துவிட்டு வருபவர்கள் உண்டு.//நான் அப்படித்தான். சமையல் முடித்ததும், அடுப்பை துடைத்து, கிச்சனையும் பெருக்கி விடுவேன். என் மருமகள் முன்பெல்லாம் சமைத்து விட்டு அப்படியே வைத்து விடுவாள். அவளிடம் 'ஆக்கிட்டு துடைத்தால் ஐஸ்வரியம் பொங்கும், தின்னுட்டு துடைத்தால் தரித்தரம் புடுங்கும்' என்று சொல்லி அதற்கு பழக்கி விட்டேன்.  எங்கள் வீட்டு வேலைக்காரி,"நம்ம வீட்டில் வேலை செய்யறது ஈஸிமா, நான் பத்து வீட்டில் வேலை செய்கிறேன், ஆனால் நம்ம வீட்டிலேயும், இன்னொரு வீட்டிலும்தான் குக்கர் பளிச்சுனு இருக்கும். மற்ற  வீடுகளிலெல்லாம் புடிச்சுக் கிடக்கும், எண்ணெய் பாத்திரங்களில் கையே வைக்க முடியாது" என்று பாராட்டியிருக்கிறாள். பெங்களூர் வந்து புதிதில் ஒரு வேலைக்காரியால் என்னுடைய வாணலியை முப்பது வருடங்களுக்கும் மேலாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன் என்பதை நம்ப முடியவில்லை. "நிறைய வீடுகளில் அடியில் பொறுக்கு தட்டி போயிருக்கும், எங்களால் அதை தேய்க்க முடியாது, சும்மா கழுவி வைப்போம்" என்றாள்.  நான் அப்படி இருப்பதற்காக, மற்றவர்களை குறை சொல்ல  மாட்டேன்.   

      நீக்கு
    2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    3. பால் கரண்டியை சாம்பாரில் போடுவது, சாம்பார் வைக்கும் பாத்திரத்தில் ரசம் வைப்பது, பாத்திரங்களுக்கான மூடியை மாற்றி மூடுவது போன்றவை எனக்குப் பிடிக்காது.  எல்லா  ஸ்பூன்களையும் எச்சில் பண்ணுவது பிடிக்காது.  தோசை வார்க்க ஃபிளாட்டாக இருக்கும் கரண்டியை தனியாக வைத்திருக்கிறேன்.  அதே போல குளிக்கும் பக்கெட் தனி, துணி துவைக்கும் பக்கெட் தனி. வாசல் துடைக்க தனி மாப், வீடு துடைக்க தனி மாப். துணிகளை வாஷிங் மிஷினில் போடும் பொழுது வெள்ளைத்  துணிகள்கள் தனியாக, கலர் துணிகள் தனியாக, டவல்கள் தனியாக என்று பிரித்துதான் போடுவேன். நச்சு வேலை என்று சொல்வார்கள். இதனாலெல்லாம் என்னை perfectionist என்று நான் சொல்லிக் கொள்ள விரும்பவில்லை. This is my way of doing work. 


      நீக்கு
    4. //வீட்டு வேலைகளிலும் சிலருக்கு பெர்ஃபெக்ஷன் இருக்கும். சமையல் முடிஞ்சு சாப்பாடு ஆனதுமே பாத்திரங்களை ஒழித்துப் போட்டுத் தேய்த்து அடுப்பையும் துடைத்துவிட்டு வருபவர்கள் உண்டு. //

      கீசாக்கா, நீங்கள் சொல்லுவது, நமக்கு, நாமே பேர்ஃபெக்ட் ஆனவர்கள் எனச் சொல்வதுபோல இருக்கு... அடுத்தவர்கள் நமக்குச் சொல்ல வேண்டும் .. இவர் மிகவும் பேர்ஃபெக்ட் ஆனவர் என... அதில்தானே பெருமை..

      நாம் பேர்ஃபெக்ட் என நினைக்கும் பல விசயங்கள், மற்றவருக்கு பேர்ஃபெக்ட் இல்லாததுபோலத் தோணவும் வாய்ப்பிருக்குதெல்லோ...

      நீக்கு
    5. கிட்டத்தட்ட நீங்கள் என்னுடைய கருத்தை/மனதைப் புரிந்து கொண்டு விட்டீர்கள் பானுமதி. இதையே தான் நான் சொல்வதும். இப்படி இருப்பவர்கள் வீட்டுக்குச் சொந்த, பந்தங்கள் வரும்போது உதவி என்னும் பெயரில் அவங்க பால் பாத்திரத்தில் சாம்பாரை வைப்பதும், சாம்பார்ப் பாத்திரத்தில் பாலை வாங்குவதும், மூடிகளை மாற்றி மூடுவதும், அடுப்பைப் பெரிதாக எரிய வைத்துச் சமைக்க உதவுவதும்! இஃகி,இஃகி,இதைச் சொல்லும்போது தான் பிரச்னையே வரும். நீ ரொம்பவே ஒழுங்கோ? இதனால் என்ன கெட்டுவிடும் என்பார்கள்! பாத்திரத்தைத் தேய்த்துவிட்டு மறுபடி அதில் பால் வாங்கேன்,என்ன ஆயிடும் என்பார்கள்! இன்னும் சிலர் அடுப்பு மேடையைத் துடைப்பதையே பெரும் குறையாகச் சொல்லிக் காட்டுவார்கள். சரி, விடுங்க! பொதுவாக எல்லோரும் சரியாகப் புரிந்து கொண்டே பதில் அளித்திருக்கிறீர்கள் என்றாலும் இத்தனை பதில்கள் நான் எதிர்பாராதது.

      நீக்கு
  22. எல்லோருக்கும் காலை வணக்கங்கள். கீதாவின் 4வது கேள்விக்கு என் பதில் : என் மிக நெருங்கிய உறவினர் (யார் என்று கேட்டால் அசந்து விடுவீர்கள்) என் தாய் தந்தையிடம் என்னை பற்றி தவறாக சொல்லவில்லை. நல்ல மதிப்பெண் பெற்று கிண்டி பொறியியல் கல்லூரியில் நேர்காணலையும் வெற்றிகரமாக முடித்து சேர வேண்டிய நிலையில் தனக்கு கிடைக்கவில்லை என்ற ஒரே காரணத்தினால் என் தாய் தந்தையிடம் என் பெண்மையை பயன் படுத்தி என்னை அக்கல்லூரியில் சேர்க்க விடாமல் செய்தார். இன்றும் அவர் என் உறவினர்தான். ஆயின் மின் இருந்த கோபம், வெறுப்பு எனக்கவரிடம் இல்லை. அவருக்கு தெரிந்தது அவ்வளவுதான் என்று விட்டு விட்டேன். ஆனால், இன்று முட்டும் என் பெண்களின் வாழ்க்கை முடிவுகளை எடுக்கும் போது அவரை கிட்ட நெருங்க விடவில்லை. சிலருடைய சுபாவம் அது என்று விலகிச் செல்வது நல்லது என்று எனக்கு தோன்றும். "குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை".
    அவருடைய 8ஆம் கேள்வி : எனக்கே இந்த கஷ்டம் உண்டு. ஏனெனில், நான் ஒரு பெர்ஃபெக்ஷனிஸ்ட். என் வீட்டு பொருட்களை எல்லாம் ஒவ்வொரு சனிக் கிழமையும் சுத்தம் செய்து, ஒரு நேரத்தில் எனக்கு டெனிஸ் எல்போ வந்து விட்டது. எனவே நான் புரிந்து கொண்டேன் எதிலுமே ஒரு நிதானம் தேவை என்பதை. ஆனால், நீங்கள் சொல்வது போல் நிறைய வெறுப்புகளையும், பொறாமைகளையும், கோபங்களையும் இதனால் வீட்டிலும், அலுவலகத்திலும் சந்தித்தாலும், என் கடமை பணி செய்து கிடப்பதே என்று என் வேலையை என் திறம்பட செய்து முடிப்பேன்.
    9வது கேள்வி : நேர்மை, ஸ்ட்ரைய்ட் ஃபார்வர்ட் இவை யாவும் தொல்லை தரும் பண்புகளானாலும் நாம் நெஞ்சை நிமிர்த்தி நடக்க இவை வேண்டும் என்று தீர்மானித்தப் பின் யார் என்ன சொன்னாலும் காதில் வாங்குவதில்லை. முதலில் சிறிது கஷ்டம். பிறகு பழகி விடும்.
    10ஆம் கேள்வி : கொரோனா ஊரடங்கின் நன்மைகள் : நம் குடும்பத்துடன் நேரம் கழிக்க முடிகின்றது. மேலும் நம் உறவினர் கூறும் நம் தவறான அனுகுமுறைகளை மாற்றி கொள்ளும் வாய்ப்புகள் கிடைக்கின்றன. நாம் உயிர் வாழ்வதும் நம்மை சுற்றி இருப்பவர் சுகமாக இருப்பதும் எவ்வளவு பெரிய வரம் என்பதை தினம் தினம் அறிகிரோம்.
    தீமைகள் : முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதை கண் கூடாகக் கண்டு கொண்டிருக்கின்றோம். பணம், பொருள், பதவி, உயர்ந்த நிலைமை, ஏற்றம், தாழ்வு யாவையும் மாயைகள் என்னும் உண்மை நம்மை முகத்தில் அரைந்தார்போல் உணர வைக்கின்றது. உயிரைத் தவிர எதுவுமே வேண்டாம் என்ற ஒரு நிலைக்கு நம்மை தள்ளி விட்டது இக்கொடிய நோய்.

    பதிலளிநீக்கு

  23. /& அஞ்சு விரலும் ஒரே பெயர் கொண்டிருந்தாலும், ஒரே மாதிரியாவா இருக்கு (என்று கேட்டு, மனதை சமாதானப்படுத்திக்கொள்ளலாம். ) // 

    பேர்கள் அவற்றுக்கு வெவேறுதானே :) கட்டை விரல் ஆள்காட்டி நடு மோதிர சுண்டு .ஆனால் அத்தனையும் ஒன்று சேர கூடினால் ல்தான் எதையும் செய்ய முடியும் 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லா விரல்களும் சேர்ந்தால் தானே கை என்றாகின்றது...

      அதிலும் பாருங்கள்...
      (பந்தி முடிகின்ற நேரத்துக்கு வந்துவிட்டு அதைப் பாருங்கள்.. இதைப் பாருங்கள்!.. என்று)

      உள்ளங்கை, புறங்கை - என இரு பெயர்கள்..

      உள்ளம் கை = உள்ளங்கை - என்று சொல்லிப் பாருங்கள்... இதயம் வரை தித்திக்கும்...
      கை புறம் என்றாலோ கை உள்ளம் என்றாலோ காற்று வாக்கில் போய் விடும்..

      கொடுப்பதும் கொள்வதும் உள்ளங்கையில் தான்..

      புறம் அது ஒரு புறம் இருக்கட்டும்...

      அகமும் புறமும் அகத்தில் ஆகி விட்டால்
      அந்த அகம் தான் மனிதம் வாழும் இடம்..
      இறைவனின் அருள் கூடுகின்ற தலம்!...

      நீக்கு
    2. // அகமும் புறமும் அகத்தில் ஆகி விட்டால்
      அந்த அகம் தான் மனிதம் வாழும் இடம்..
      இறைவனின் அருள் கூடுகின்ற தலம்!..// சூப்பர்.

      நீக்கு
    3. சூப்பர்ப் துரை அண்ணா

      நீக்கு
  24. கேள்விகளும் பதில்களும் , பின்னூட்டங்களும் படித்தேன்.

    கேள்விகளுக்கு பதில்கள் அருமை.

    எல்லோருக்கும் நல்லவராக ஆண்டவனால் கூட இருக்க முடியாது.
    நம்மால் என்ன முடியுமோ செய்ய முடியுமோ செய்து கொண்டு போக வேண்டியதுதான்.
    உறவுகள் எல்லோரிடமும் நல்ல பெயர் வாங்க முடியாது. ஒருவருக்கு காரணமே இல்லாமல் ஒருவரை பிடிக்கும், காரணமே இல்லாமல் ஒருவரை வெறுப்பர்கள். அவர்களிடம் மனம் விட்டு பேசிபார்க்கலாம் உங்கள் வெறுப்புக்கு என்ன காரணம் என்று. முடியவில்லை என்றால் சகித்துக் கொண்டு , நம் வேலையைபார்த்துக் கொண்டு இருக்க வேண்டும் இறைவனை வணங்கி கொண்டு.
    கவலை பட்டால், சினம் கொண்டால் நம் உடம்புதான் கெட்டு போகும்.



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமையான கருத்து. பாராட்டுகள்.

      நீக்கு
    2. உண்மை கோமதி அக்கா. ஒரே சமயத்தில் எல்லோருக்கும் நல்லவராக இருக்க முடியாது.

      நீக்கு
    3. சிறப்பாக சொல்லியிருக்கிறீர்கள். 

      நீக்கு
  25. //உண்மையில் இந்த வேலைகளை செய்கின்ற ஆண்கள் யாரும் இது பற்றி நகைச்சுவை துணுக்குகள் எழுதமாட்டார்கள். அப்படி எழுதுபவர்கள் அந்த வேலைகளை செய்துகொண்டிருக்கமாட்டார்கள். //

    ஆண்கள் வீட்டு வேலை யில் முழு  பங்கை இப்போதெல்லாம் செய்கிறார்கள் என்பது உண்மை .நான் பார்த்திருக்கிறேன் எங்க அப்பா முதல் என் கணவர் மைத்துனர்கள் எல்லாரும் செய்வாங்க .பாத்திரம் கழுவுதல் பற்றி சொல்லனும்னா திருமணமான புதிதில் என் கைகள் தோல் உரிந்து சிவப்பாகிடுச்சி (அதுவரை பாத்திரத்தை கழுவிய வழக்கமேயில்லை )) அப்போ ஸ்கின் ஸ்பெஷலிஸ்ட் சிரிச்சிட்டே சொன்னார் ஜெர்மனியில் இவர்கிட்ட நீதான் பாத்திரங்களை கழுவனும் இனிமேன்னு :) நானும் பார்க்கிறேன் இங்கே வெளிநாட்டு பெண்களுக்கே கையில் தோல் உரிகிறது  என்றும் சொன்னார் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாக சொல்லியிருக்கிறீர்கள். எங்கள் குடும்பத்திலும் ஆண்கள் & குழந்தைகள் வீட்டு வேலைகள் செய்கிறார்கள்.

      நீக்கு
  26. /10.இந்தக் கொரோனா ஊரடங்கினால் பொது மக்களுக்குக் கிடைத்த நன்மை என்ன? தீமை என்ன?//
    எங்கள் ஐவருக்கும் ரொம்ப மகிழ்ச்சி ..நான் இரண்டு நாள் மட்டும் வேலைக்கு போறேன் .front லைன் என்பதால் தவிர்க்க முடியாது ..பிறகு 5 நாட்கள் தோட்டம் வற்றல் வடாம் வீட்டிற்கு வருகைதரும் ஜீவங்களை ரசிப்பது என பொழுது போகுது .ஒன்றாய் இருப்பதே சந்தோஷம்தான் .எல்லாருக்கும் அவங்க வீட்டில் என்ன நடக்குதுன்னு தெரிஞ்சிக்க மெஷின் வாழ்க்கையில் இருந்து விடுபட்டு இருக்க இது நல்ல சந்தர்ப்பம் .அதோட  பிளேன் ட்ரெயின் கார் பஸ் ஏதும் போகாததால் சூழல் க்ளீனா இருக்கு :)
    தீமை அன்றாடம் வேலைக்குபோகுபவர்களுக்கு குறிப்பா ஏழை நாடுகளில் கஷ்டமே .அப்புறம் தனித்திருக்கும் முதியோர் பாவம் ஷாப்பிங் செய்ய கடினம் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், உண்மைதான். வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ப்ளாக் எழுதுதல் / படித்தல் இல்லாவிட்டால் எல்லோருக்குமே தனிமை கொடுமையாக இருந்திருக்கும்.

      நீக்கு
  27. //6. மனித குணங்களை உள்ளுணர்ச்சியால் கண்டு பிடிக்கலாம் என்பதை நான் நம்புகிறேன். நீங்கள்?//

    இந்த விஷயத்தில் நான் இன்னும் பூஜ்யம் :)
    ஒரு உறவினர் எப்பவும் அன்பா பேசறதுபோல் நக்கல் அடிப்பார் அது போகப்போக அதிகரிக்க பல வருடம் கழித்து கோபத்தை காட்டினேன் :) இப்போல்லாம் அவருக்கு என்னை கண்டால் பயம் மரியாதையுடன் பேசுகிறார் உள்ளுணர்வு சொல்லியிருந்தா ஆரம்பத்திலேயே தூக்கி அடிச்சிருக்கலாம் .மனசுக்குள் வலியுடன் இருந்திருக்க வேண்டாம் 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொஞ்சம் ஏறவிட்டு அடித்ததுதான் சரி. ஆரம்பத்திலேயே கண்டித்திருந்தால் நாம் எதிர்பார்த்த பலன் கிடைத்திருக்காது. அவர் வேறு ஏதாவது சொல்லி சமாளித்திருப்பார்.

      நீக்கு
    2. KGG சொல்வதை ஆமோதிக்கிறேன்

      நீக்கு
    3. ஹா ஹா ஹா ஓடுமீன் ஓடி உறுமீன் வரும்வரை காத்திருக்குமாம் கொக்கு:) என்பதைப்போல, வெயிட் பண்ணி, ரைம் பார்த்து அடிக்கச் சொல்றீங்க:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)..

      நீக்கு
  28. //11. குடும்பத்தில் எல்லோரும் சேர்ந்து இருந்தாலும் கணவன் இருப்பதால் மனைவிக்கும், மனைவியுடன் வீட்டில் தங்கி இருப்பதால் கணவனுக்கும் அவரவர் தனிப்பட்ட உரிமைகள் போய்விட்டன எனச் சண்டை வருவதாகப் பத்திரிகைகள் சொல்கின்றன. அப்படியா?//

    ஒருவேளை சலூனுக்கு போக முடியாததால் மனைவிகிட்ட தலையை கொடுத்து அவர் அழகான கேசத்தை கொந்திவிட்டிருக்கலாம் :)மற்றபடி பிரச்சினைகள் ஏதும் வரவில்லை இங்கே வெளிநாட்டில் .btw நாங்க மெஷின் யூஸ் பண்றதால தலைமுடி சலூன் ப்ராப்லம் வரல :))

    பதிலளிநீக்கு
  29. //8. காரணமே இல்லாமல் ஒருவரை அவர் ரொம்பவே பெர்ஃபெக்டா இருக்கார் என்பதாலும் எல்லாவேலைகளையும் திறம்படக் கையாளுகிறார் என்பதாலும் வெறுப்பது சரியா?//

    அது வெறுப்பவர்கள் அசிங்க குணம்னு விட்டுத்தள்ளனும் :) அதனூடே பொறாமை ஒளிந்திருக்கும் அதுதான் எல்லாவற்றுக்கும் பிரதான காரணம் .
    எடுத்துக்காட்டுடன்  நான் பார்த்த பொறாமைக்குணமுள்ளோரை ஆனால் பிஞ்சு ஞானி எல்லாவற்றையும்  மறக்கணும்னு சொன்னதால் அழிரப்பர் வைத்து அழிக்க முயற்சித்துக்கொண்டிருக்கின்றேன் :)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ///8. காரணமே இல்லாமல் ஒருவரை அவர் ரொம்பவே பெர்ஃபெக்டா இருக்கார் என்பதாலும் எல்லாவேலைகளையும் திறம்படக் கையாளுகிறார் என்பதாலும் வெறுப்பது சரியா?////

      இதுக்கு என் பதில், ஒருவரை நமக்குப் பிடிப்பதென்பது, அவர் பேஃபெக்ட்டாக இருக்கிறார், வேலைகளைத் திறம்படச் செய்கிறார் என்பதால வந்துவிடாது... ஒருவர் சோம்பேறியாக எந்த வேலையையும் செய்யாமல், இருந்தாலும் சிலரை நமக்கு ரொம்பப் பிடிக்கும்... அதுக்குக் காரணம் அவரின் வெளித் தோற்ரமோ, நடை உடை பாவனையோ அல்ல, சிலரின் புன்னகை, பேச்சு, இப்படி பல விசயங்கள் இருக்குது ஒருவரை நமக்குப் பிடிப்பதற்கும் பிடிக்காமல் போவதற்கும்...

      அதனால ஒருவர் பார்க்க அனைத்திலும் திறமையாக பேஃபெக்ட்டாக இருக்கிறார் என்பதற்காக அவரை நமக்குப் பிடிக்கவேண்டும் என்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்... வெறுப்பதற்கு வேறு காரணங்கள் இருக்கக்கூடும்...

      எங்கள் பக்கத்து வீட்டுக் குடும்பம், இரு பிள்ளைகள் 30 வருட திருமண வாழ்க்கை.. எல்லோரும் பார்த்து வியக்கும் அளவுக்கு இருவரும் நல்ல அந்நியோன்னியமாக இருப்பார்கள் தம்பதிகள். நம்மோடும் இருவரும் நன்கு பேசிப்பழகுவார்கள், நன்கு ஓடிவந்து உதவுவார்கள்.. இருவருமே நல்லவர்கள். கோடை வெயிலில் மனைவி சுவிமிங் உடையுடன் சன்பேத் எடுப்பா, அவர் வைன் ஊத்திக் கொண்டு வந்து கொடுப்பார் பார்பகியூ போட்டுக் குடுப்பார், வேலைகளையும் பங்கெடுத்துச் செய்வதுபோலவே இருக்கும்...

      ஆனால் இப்போ கணவர் மட்டும் தனியாக இருந்தார், விசாரித்த இடத்தில்.. நாங்கள் பிரிந்துவிட்டோம் என சொன்னார்.. கேட்கவே மனதுக்கு கஸ்டமாகி விட்டது... இருவருமே நல்லவர்கள், ஆனால் அவர்களுக்குள் என்ன பிரச்சனையோ.. இதில் ஆரைக் குற்றம் சொல்வது..

      நீக்கு
    2. // அதனால ஒருவர் பார்க்க அனைத்திலும் திறமையாக பேஃபெக்ட்டாக இருக்கிறார் என்பதற்காக அவரை நமக்குப் பிடிக்கவேண்டும் என்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்... வெறுப்பதற்கு வேறு காரணங்கள் இருக்கக்கூடும்...//

      ஸூப்பர். ஸூப்பர் அதிரா. நன்றாகச் சொன்னீர்கள்

      நீக்கு
    3. என்னுடைய பாராட்டையும் ஏற்றுக் கொள்ளுங்கள் அதிரா. 

      நீக்கு
    4. ஹா ஹா ஹா நன்றி பானு அக்கா.

      நீக்கு
    5. வெறுப்பதற்கு வேறு காரணங்கள் இருக்கக்கூடும்...//
      எதுக்கு? காரணம் இல்லாமலேயே வெறுக்கலாம். ஈஸியாச்சே !

      நீக்கு
  30. sஊப்பர் வெயில் இங்கு கண் கூசுது, அதனால எழுந்தவுடன் கார்டினுக்குள் ஓடினேன், பின்பு வடகம் ஆரம்பிச்சேன், இன்னும் தட்டிப் போடவில்லை, அதில் கை வச்சால் நேரமாகிடும் என இங்கு ஓடி வந்தேன்.. பார்த்தீங்களோ அதிரா இஸ் எ குட் கேள்:)).. என் வேலைதான் எனக்குப் பெரிசென நினைக்காமல் கொமெண்ட் போட ஓடி வந்திருக்கிறேன்.. மசமசவெனப் பார்த்துக் கொண்டிருக்காமல் கை தட்டுங்கோ.. ஆங்ங்ங்ங்:)).. ஹையோ ஊரே முறைப்பதுக்குள் சொல்லுவதைச் சொல்லிப்போட்டு ஒடிடுறேன்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கும் வெயில் நல்லா அடிக்குது பிஞ்சு!!! நானும் இன்னும் அடுத்த பேச் வற்றல் போடலாம் என்று ப்ளான்...ஆனால் நாளை மழை வரும் என்று வெதர் சொல்லுது..யோசனையா இருக்கு

      கீதா

      நீக்கு
    2. ஆஆஆ நான் இன்று வெஜிடபிள் வத்தல் போடப்போறேன் கீதா..

      நீக்கு
    3. ஆஹா. சுவையான பொழுதுபோக்கு. வாழ்க.

      நீக்கு
  31. //ஊரடங்கினால் பொது மக்களுக்குக் கிடைத்த நன்மை என்ன? தீமை என்ன?//

    தலைப்பிற்கான பதில்களோடு என் பதில்களும்.. நியூஸில பார்த்தவை..

    பிக்பொக்கெட் 200 இலிருந்து 75 ஆக குறைஞ்சிருக்குது:)

    களவு பாதிக்கும் கீழே குறைஞ்சிருக்கு...

    மயானத்துக்கு வரும் உடல்கள் இப்போ கால்வாசி ஆகியிருக்கின்றனவாம்[மரணம் குறைஞ்சிருக்குது]..

    குடிப்போரின் குடி குறைஞ்சிருக்குது, இதனால் பல குடும்பங்கள் நிம்மதியாக இருக்குமென நினைக்கிறேன்....

    வீடுகளில் எல்லோரும் ஒன்று சேர்ந்திருந்து சிரித்துப் பேசி மகிழ்ந்து சாப்பிட்டு.. அளவளாவுவது அதிகரிச்சிருக்கு.
    ---------------------------------------------

    கஸ்டப்பட்ட மக்கள் பாவம், அன்றாடம் கைவேலை செய்து உழைப்போர், பிச்சை எடுப்போர்... இவர்கள் பாடு கஸ்டம்தானே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீடுகளில் எல்லோரும் ஒன்று சேர்ந்திருந்து சிரித்துப் பேசி மகிழ்ந்து சாப்பிட்டு.. அளவளாவுவது அதிகரிச்சிருக்கு.

      அப்பாவி கணவர், குழந்தைகள், ஒரு வேளை மட்டும் அம்மா கையால் சாப்பிட்டு சிட்டாக கேண்டீனில் நல்ல சாப்பாடு சாப்பிட்ட காலம் போய், அம்மா முயற்சி செய்யும் புது வித ஒரு விதமான உணவுகளையெல்லாம் கினி பிக் போல டிரையல் பார்க்கும் கஷ்டம் அதிகரித்திருக்கிறது.

      ஆபீஸ் வேலை மட்டும் செய்தது போக, இப்போ 'வர்க் ஃப்ரம் ஹோம்' என்பதை 'வர்க் ஃபார் ஹோம்' என்று புரிந்துகொண்டு, அடுப்பு வேலைகளையும் மனைவி, கணவனிடம் தள்ளிவிடுவது அதிகரித்திருக்கிறது.

      பியூட்டி பார்லர் செலவு 80% க்கு மேல் குறைந்திருப்பது கணவருக்கு ஆறுதல் தரும் செய்தி.

      ஹா ஹா ஹா

      நீக்கு
    2. //அப்பாவி கணவர், குழந்தைகள், ஒரு வேளை மட்டும் அம்மா கையால் சாப்பிட்டு சிட்டாக கேண்டீனில் நல்ல சாப்பாடு சாப்பிட்ட காலம் போய், அம்மா முயற்சி செய்யும் புது வித ஒரு விதமான உணவுகளையெல்லாம் கினி பிக் போல டிரையல் பார்க்கும் கஷ்டம் அதிகரித்திருக்கிறது.//

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்*1345678940 ஹா ஹா ஹா... பத்து நாளைக்குச் சமைக்காமல் ஸ்ரைக் பண்ணினால் புரியும்:))..

      //பியூட்டி பார்லர் செலவு 80% க்கு மேல் குறைந்திருப்பது கணவருக்கு ஆறுதல் தரும் செய்தி//

      இதில புறுணம்:) என்னவெனில், இப்போ நடிகர்கள் எல்லோரும் வீட்டுக்குள் இருந்து யூ ரியூப் போடுகின்றனர், மேக்கப் இல்லாமல் அவர்களைப் பார்க்க சகிக்கவில்லை ஹா ஹா ஹா

      நீக்கு
    3. // மேக்கப் இல்லாமல் அவர்களைப் பார்க்க சகிக்கவில்லை ஹா ஹா ஹா// அடையாளம் தெரிந்ததா!

      நீக்கு
  32. ஹப்பா வந்துவிட்டேன்...வரும் போதே நினைத்துக் கொண்டுதான் வந்தேன் ஹையோ பெட்டி நிரம்பியிருக்குமே...அதுவும் நம்ம பிஞ்சு தத்தி தத்தி வந்திருப்பாங்களே..செக் முதலில் வந்து மணி அடித்துவிட்டுப் போயிருப்பாங்களே பூனைக்கு என்று ஹா ஹா ஹா ஹா...சரி சரி வந்த வேலையை முடிக்கிறேன் முதலில்...

    கீதாக்காவின் இரண்டாவது கேள்விக்கு...

    அக்கா நடக்கிறது...ஆனால் இன்னும் 50 வருடங்கள் ஆகவில்லை...இதில் என்னவென்றால் சரி ஒரு 30 வயதில், 35 வயதில் மன முதிர்ச்சி இல்லை ஒகே ஆனால் வயதாகும் போதுமா மனம் முதிராமல் இருக்கும்? இருக்கிறதே....25 வயதில் நடந்ததையே அதுவும் சில்லி சில்லி விஷயங்கள் அதையே சொல்லி சொல்லி அதுவும் 50 வயதிலும் சொல்லிக் கொண்டு இருந்தால் பஞ்சாயத்து கூட இல்லாமல் போகும் சூழலையும் பார்க்க நேரிடுகிறது. இப்படியும் மனிதர்கள். நான் சிறுவயதில் கற்ற ஒன்று நாம் எதையும் ரொம்ப சீரியஸாக எடுத்துக் கொண்டால் ஈசி கோயிங்காக இல்லை என்றால் நம் மனதை சந்தோஷமாக வைத்துக் கொள்ளவில்லை என்றால் உறவு பலப்படாது என்பது...

    கீதா

    பதிலளிநீக்கு
  33. //3, 4 பெண் குழந்தைகளுக்கு மேல் பெற்ற ஒரு மாமியார் தன் மருமகளுக்கு முதலில் பெண் குழந்தை பிறந்ததை அறிந்ததும் அந்தப் பெண்ணைத் தள்ளி வைக்கச் சொல்லித் தன் மகனிடம் அறிவுறுத்துகிறாள்/அறிவுறுத்தினாள்.//

    இது என்ன நியாயம் அவர் மூன்று நாலு பெண் குழந்தை பெற்றவர் இப்படி சொல்லலாமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த மாமியார் தன் மருமகள் திருமணம் ஆகி வீட்டுக்கு வந்ததுமே அவளைக் குழந்தைகள் பெற்றுக்கொள்ளக் கூடாது, என் பெண்களைத் தான் உன் பெண்களாக நினைக்கணும் எனச்சொல்லிக் கொண்டிருந்தார். அந்த மருமகளும் கணவனிடம் சொல்லியும் அவர் அதைப் பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளவில்லை. வாய்வார்த்தையாகத் தான் சொல்வதாக எடுத்துக் கொண்டு விட்டார். பின்னால் அவருக்குக் குழந்தை பிறந்ததும் தான் அவருக்கே புரிந்தது. நம் வீட்டில் 3 பெண்கள் இருக்கையில் வீட்டுக்கு வந்த மருமகளைத் தள்ளி வைப்பது சரியல்ல என்பது அவர் கருத்து. அம்மாவுக்குப் பிள்ளை மாறிவிட்டானே என மன வருத்தம். அது தீரவே இல்லை. :(

      நீக்கு
    2. திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம் என்று பாடத் தோன்றுகிறது.

      நீக்கு
    3. சொல்ல மறந்துட்டேனே, அவங்களுக்குக் குழந்தைகள் பிறந்ததே பகவான் கொடுத்த பிச்சைனு சொல்வாங்க. :))))))))

      நீக்கு
    4. இந்தக் கதையை கீசாக்கா பல இடங்களில், பல தடவைகள் சொல்லிவிட்டா:)), ஆனாலும் அவவின் மனம் இன்னும் ஆறுதல் அடையவில்லை என்பது புரியுது... சில விசயங்களை நம்மால் ஜீரணிக்கவோ மறக்கவோ முடியாமல் இருக்கும், அதனால்தான் இன்னர் எஞ்சினியரிங்.. இல் சொல்கின்றனர், உங்கள் மனதில் ஒரு விசயம் ஆளமாகப் பதிந்து விட்டால்.. அதைத் திரும்பத்திரும்ப பேசுங்கள்... மனதில்கூட சொல்லிச் சொல்லி நினைச்சு... மீண்டும் மீண்டும் இப்படிப் பண்ணப் பண்ண.. நாளடைவில் அது நம் மனதை விட்டு அகலும் என..

      சிலர் இப்படியான விசயங்களை ஆரும் பேசுவதற்கு வாயைத் திறந்தாலே... பேசுவார்கள், பேசாதே.. அதனை மறந்துவிடு என, அது தப்பு, பேச விட வேண்டும், பேசிப்பேசி அழ விட வேண்டும்.. திரும்பத் திரும்ப இப்படிச் செய்வதன் மூலம்தான் நம் அடி மனதை விட்டு சில சம்பவங்கள் மறையும்.. இல்லை எனில் நீறு பூத்த நெருப்பாகவே இருக்கும்..

      ஒருவருடனான பகைகூட அப்படித்தான், போனால்போகட்டும் என பேசாமல் விட்டால், அது மனதுள் கொழுந்து விட்டெரியும், ஆனா அந்த இடத்திலேயே பேசி, பேச்சு வாங்கி தீர்த்து விட்டால்.. பின்பு அதை மறந்துவிடவும் வாய்ப்புண்டு...

      இவை, எனக்குச் சரியெனப் படும் கருத்து மட்டுமே:))

      நீக்கு
    5. அஞ்சு, உங்கள் உளவியல் மருத்துவத்துக்குப் பிஞ்சுவைத் துணைக்கு அழைத்துக்கொள்ளக் கூடாதோ! நல்ல கவனிப்புப் பிஞ்சு! இன்னும் என் மனம் ஆறவில்லை என்றால் சம்பந்தப்பட்ட பெண்ணிற்கு எப்படி இருக்கும்? :(

      நீக்கு
  34. //2. ஒருவர் மேல் பகைமை 50 வருடங்கள் ஆனாலும் நீடிக்குமா என்ன?//

    இதுக்கு இல்லை என்றுதான் பதில் சொல்லுவேன், ஆனா அது சந்தர்ப்பட்தைப் பொறுத்தது, இருவரும் கிட்ட இருந்தால், சேரும் வாய்ப்பு அதிகம், ஒதுங்கித் தூரப் போயிட்டால் அப்படியே மறந்ததுபோலாகிடும்..

    பதிலளிநீக்கு
  35. //. ஒரு நிகழ்வில் கலந்து கொள்ள நம்மை அழைத்தவர்கள், நமக்கு முன்னுரிமை எனச் சொன்னவர்கள், நாம் அங்கே போய்ச் சேர்வதற்குள்ளாக அதை நடத்தி முடிப்பது பற்றி? கடைசியில் நாம் வந்திருக்கிறவங்க கிட்டே கெட்ட பெயர் வாங்கிப்போம், முன்னாடியே வரமாட்டியானு! ஆனால் நமக்குச் சொன்ன நேரமும் அவங்க நடத்தி முடிச்ச நேரமும் வேறேயாக இருக்கும்!///

    இதில் தப்பு நம்மில்தான் என நினைக்கிறேன், ஏனெனில் அவர்களை நாம் புரிஞ்சுகொள்ளத் தவறிவிட்டோம்.. ஒருநாளில் இப்படி தடாலென வேணுமென்றே செய்ய மனம் வராது, அவர்கள் ஏற்கனவே கொஞ்சம் கொஞ்சமாக நம்மீது பகைமையுடன் இருந்திருப்பார்கள், நாம் அது புரியாமல் அனைத்தையும் நம்பி அவமானப் பட்டிருப்போம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிஞ்சு ஞானி இல்லையம்மா நீங்க. முக்காலமும் அறிந்த ஞானி.

      நீக்கு
    2. //பிஞ்சு ஞானி இல்லையம்மா நீங்க. முக்காலமும் அறிந்த ஞானி./// ஹா ஹா ஹா...நன்றி:-..
      நன்றி ஸ்ரீராம்..
      எனக்கு இதைப் பார்த்ததும், பாண்டவர்களையும் குந்தியையும் ஒரு பெரிய மாளிகையில் தங்கச் சொல்லிவிட்டு, அதற்கு நெருப்பு வைக்க ஏற்பாடு பண்ணியது நினைவுக்கு வந்துது.... ஹா ஹா ஹா

      நீக்கு
  36. (ஒரு சில்லி காரணம் - யார் நல்ல நடிகர் - சிவாஜியா அல்லது ஜெமினியா !) //

    அதே அதே இப்படித்தான் குடும்பத்தில் கூட சில்லி சில்லி விஷயங்களுக்கு ச்சில்லி ச்சில்லி ஆகிடறாங்க!!!!!!!

    பதில்களை ரசித்தேன்

    & மனிதர்கள் மாறலாம் என்று தெரிந்துகொண்டோம் என்றால், பகைமை உணர்ச்சி எல்லாம் காலத்தால் மாறிவிடும். //

    அந்தப் பக்குவம் இருந்துவிட்டால் எவ்வளவு நல்லது ஆனால் அப்படி இல்லையே...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹையோ, இந்த சினிமா, அரசியல் எல்லாம் குடும்பத்துக்குள் பேசலாம், தப்பில்லை. ஆனால் வெளியே பேசக்கூடாது. என் தம்பிகளில் ஒருத்தர் (சித்தி பையர்) தீவிர கம்யூனிஸ்ட். அவரை நாங்கள் அனைவரும் சேர்ந்து கிண்டல், கேலி செய்வோம். அதுவே வெளி மனிதர் எனில், சண்டையாகி ரணகளம் ஆகிவிடும்.

      நீக்கு
  37. ///11. குடும்பத்தில் எல்லோரும் சேர்ந்து இருந்தாலும் கணவன் இருப்பதால் மனைவிக்கும், மனைவியுடன் வீட்டில் தங்கி இருப்பதால் கணவனுக்கும் அவரவர் தனிப்பட்ட உரிமைகள் போய்விட்டன எனச் சண்டை வருவதாகப் பத்திரிகைகள் சொல்கின்றன. அப்படியா?//

    ஹா ஹா ஹா நிறைய மீம்ஸ் களும் சுற்றிக் கொண்டிருக்கின்றன...நம்மை வைத்து உலகைக் கணக்கெடுக்கக்கூடாது[இதுக்காகத்தான் சொ.எ.உண்மை பார்க்கோணுமாக்கும்:)]. என்னைப் பொறுத்து இதில் பொய் இல்லை, ஏனெனில் இங்கு நாம் புளொக்கில் பேசுவோர் எல்லோரும் நல்ல/ஓரளவு சுகந்திரமாகவும் குடும்பத்தில் மகிழ்ச்சியாகவும் இருப்பதனாலதான் இது சாத்தியப்படுகிறது, ஆனா எத்தனையோ குடும்பங்களில், மனைவி பண்ணுவது கணவருக்கு தெரியாது, கணவன் பண்ணுவது மனைவிக்குத் தெரியாது.. ஒரு ஃபோன் பேசுவதுகூட, ஒருவர் வீட்டில் இருக்கும்போது, மற்றவர் பேச மாட்டார்ர்.. இப்படியான குடும்பங்கள்தானே அதிகம் உள்ளன..

    அப்போ இப்படி ஏதோ ஓடும் புளியம்பழமும்போல, குடும்பத்துக் கெளரவத்துக்காகவும், குழந்தைகளுக்காகவும் வாழ்க்கையை ஓட்டுவோரை, ஒரு வீட்டுக்குள் உள்ளே இரு என்றால், அங்கு அவர்களின் சுகந்திரம் பறிபோய் விட்டதைப்போலத்தானே உணர்வார்கள்... இது கிட்டத்தட்ட பிக்பொஸ் மாதிரி:)).. அப்போ சண்டைதானே வரும் ஹா ஹா ஹா..

    இப்படிப் பிரச்சனை வெளிநாடுகளில் இருப்பது மிகமிகக் குறைவு, ஏனெனில் இங்கு பிடிக்கவில்லை எனில் பிரிந்துவிடுகிறார்கள்[நம்மவர்கள்கூட].. நம் நாட்டில் அது முடியாத விசயமாக இருப்பதனால்.. பிரச்சனைகள் அதிகமாகும் தான்.

    ஏன் நீயாநானாவில்கூட ஒருவர் சொன்னார், மக்ஸிமம் வீட்டில் தங்கும் நேரத்தைக் குறைப்பேன், 10 மணிவரை ஒபிஷில் இருந்துவிட்டு, வீட்டுக்குப் போனதும் டக்கென நித்திரையாகி விடுவேன், இல்லை எனில் சண்டை வரும் எனும் பயமாகவே இருக்கும்.. என.. இப்படியானொரை வீட்டில் அடைச்சால் என்னாகும் நிலைமை.. மெண்டல் ஆகிவிடவும் வாய்ப்புக்கள் அதிகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சண்டைகள் போடலாம் - ஆனால் எல்லாவற்றுக்கும் ஓர் எல்லை கணவன் , மனைவி இருவருமே ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

      நீக்கு
    2. எல்லை? கஷ்டம்தான். பொதுவாக வார்த்தைகளை வளரவினாமல் தவிர்ப்பதே நல்லது. பெரும்பாலான இல்லங்களில் புரிதல் மிகவும் கம்மி்

      நீக்கு
    3. கணவன் : " என்னுடைய அம்மாவை ஏன் கடிச்சே?"
      மனைவி : " நீங்கதானே என் கிட்ட, என் அம்மாவோடு சண்டைபோடுவதாக இருந்தா எல்லாவற்றையும் வாயோடு வெச்சிக்க. கையை எல்லாம் நீட்டாதே என்று சொன்னீர்கள்!"

      நீக்கு
    4. ஹா.... ஹா... ஹா... வாய்வார்த்தையோடு என்று தெளிவாகச் சொல்லி இருக்க வேண்டும்!

      நீக்கு
    5. ஹா ஹா ஹா அம்மாமார் உள்ளே நுழைவதனாலதான் பல குடும்பங்களில் “கடி” படுகிறார்கள்:)))...

      நண்பி 1: அவர் ஒரு போலி டொக்டர் எனத் தெரிஞ்சும், ஏன் அங்கு போகிறாய்?

      நண்பி 2: மருந்து எடுக்கப்போவது எனக்கல்ல, என் மாமியாருக்கு:))

      நீக்கு
    6. நான் இந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எதையும் எப்போவுமே பார்த்ததில்லை, பட்டிமன்றம் உள்பட! பிடிக்கவில்லை.

      நீக்கு
    7. // மருந்து எடுக்கப்போவது எனக்கல்ல, என் மாமியாருக்கு:))// நல்ல ஐடியா !

      நீக்கு
  38. அய்ய்ய் மீதேன் 100:)

    //
    12. கணவன்மார்கள் மனைவிக்கு உதவலாம், ஆனால் இந்தப் பாத்திரம் தேய்ப்பது, துணி தோய்ப்பது போன்ற நகைச்சுவைத் துணுக்குகள் அனைத்தும் பொய் தானே? உண்மையிலேயே செய்வாங்களா?//

    இதில் என்ன பொய் இருக்கிறது, மனைவிக்கு உதவுவதென்பதில் அனைத்து வேலைகளும் அடங்கும்தானே, ஆனா சில ஆண்களுக்கு சில வேலைகள் பிடிப்பதில்லை எனச் சொல்லலாம்...பிடித்த வேலையைத்தானே செய்வார்கள். முக்கியமாக ஆண்கள் செய்கிறார்கள், உதவும் மனப்பாங்குடன் இருக்கிறார்கள், ஆனால் அவர்களைக் கெடுப்பது பெண்ணாகிய ஆணின் அம்மா தான் ஹா ஹா ஹா...

    இதில என் கருத்து, எனக்கு கிச்சின் வேலைகளை நானே செய்வதே பிடிக்கும், அதுபோல வெளி வேலைகளைக் கணவர் செய்வதே பிடிக்கும்.. எப்போதாவது முடியாத பட்சத்தில் மாறிச் செய்வதில் தப்பில்லை.. இதை விடுத்து சில வீடுகளில் மனைவி, ஓடி ஓடி வெளி வேலை செய்வா அல்லது படுத்திருப்பா, கணவன் கிச்சினுக்குள்ளேயே இருப்பார்.. எனக்கப்படி ஆண்களைப் பார்த்தாலே பிடிக்காது, சில ஆண்களுக்கும் கிச்சின் வேலை செய்வதே அதிகம் பிடிக்கிறது...

    என் கேரள நண்பி ஒருவரின் கணவன், அவரும் ஒரு டொக்டர்தான்.. அவருக்கு அவர் சமைப்பதே பிடிக்குமாம், ஆனா கிளீன் பண்ண மாட்டாராம், இதனால மனைவி சொல்லுவா, சமைக்கிறார்தான் ஆனா எனக்கு அதனால உபத்திரவம்தான் அதிகம் என.... இதில், என் கணவர் சமைப்பார் எனக்கு வேலை இல்லை எனச் சொல்லிப் பெருமைப்பட என்ன இருக்கிறது என நினைப்பேன்.

    எந்த வேலை எனினும் கட்டாயத்தின் பேரில் செய்யக்கூடாது, தாமாக விரும்பிச் செய்ய வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // எந்த வேலை எனினும் கட்டாயத்தின் பேரில் செய்யக்கூடாது, தாமாக விரும்பிச் செய்ய வேண்டும். //

      ஸூப்பர்.

      நீக்கு
    2. சுவாரஸ்யமான மனிதர்கள்!

      நீக்கு
  39. //..சில ஆண்களுக்கும் கிச்சின் வேலை செய்வதே அதிகம் பிடிக்கிறது...

    காரணம், வெளியே போய் வேலை பார்க்க, அவர்களிடம் சரக்கு இல்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா. நான் அப்படி நினைக்கவில்லை. வேலை தெரிந்தவர்கள் எங்கும் எந்த வேலையையும் தயக்கமின்றி செய்வார்கள்.

      நீக்கு
  40. இயக்குனர் திலகம் K.S.G. அவர்களின் திரைப்படம் பார்க்கின்ற மாதிரி இருக்கிறது...

    எல்லாம் அறிவார்ந்த கேள்விகளை எழுப்பிய அக்கா அவர்களால் தான்!...

    பதிலளிநீக்கு
  41. 3 ற்கான இரு பதில்களும் அருமை

    5, & ஹையோ இல்லையேல் என்ன ஆகியிருக்கும்...உள்ளுணர்வு எச்சரிக்கையை ஏற்றுக் கொண்டு ஸ்க்ரீன் லாக் நீக்கியது வாவ்...

    6 & பதில்.// அதே

    தொற்றினால் ஊரடங்குச் சட்டத்தின் நன்மைகள் பல அதில் தீமைகள் கஷ்டங்கள் என்று பல சொல்லலாம்.

    வாட்சப்பில் வந்தது...ஆக்சிடென்ட்ஸ் குறைந்துள்ளது, எமர்ஜென்சி கேஸஸ் குறைந்துள்ளது, வீட்டில் குடும்ப உறவுகள் எல்லோரும் சேர்ந்து இருக்கவும் உதவுகிறது (இதில் கொஞ்சம் னையாண்டியும் கலந்து வந்தது..கணவ்ன் வீட்டில் இருப்பதால் மனைவி புலம்பல்....வேலைக்குச் செல்ல்லும் இருவரும் வீட்டில் இருப்பதால் மனப்பூஸல்கள் என்றும்...) குழந்தைகளுடன் அதிக நேரம் செலவழித்தல்

    குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் சுதாரகுநாதன் போன்றோர் வீட்டில் எந்தவித மேக்கப்பும் இல்லாமல் எளிய உடையில் கிச்சனில் கரண்டி பிடித்து சமைத்துக் கொண்டே ராகங்கள் சொல்லி ஆலாபனை செய்து பாடல்கள் பாடி வீடியோக்கள் ஆஹா பொட வைத்து...(ஆனால் என்ன வேலை செய்து கொன்டே பாடுவதாலோ என்னவோ சில இடங்களில் கொஞ்சம் ஸ்ருதி அப்படியும் இப்படியும்...போனால் போகிறது)

    சில இசைக்கலைஞர்கள் பக்க வாத்தியம் இல்லாமல் வீட்டில் பாடி (ப்ராக்டிஸ் செய்ய அவர்களுக்கு உதவிவது) அதையும் வெளியிடல் என்று அருமையான வெளியீடுகள்...கடம் கார்த்திக் அவர் மகள் டம்ளரில் லயம் என்று இருவரும் வாசித்தது அருமையான வீடியோ..இப்படி பல விஐபிக்கள் தங்கள் லாக்டவுனை பயனுள்ளதாக ஆக்கி... நமக்கு நல்ல விருந்து...!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓஹோ - லாக் டவுன் காலத்தை வீணாக்காமல் கழிக்கிறார்கள்!

      நீக்கு
  42. சொல்ல விட்டுப் போச்சே..லாக்டவுன் புதிர்கள் என்று மூளைக்கு வேலை...அதுவும் ரவுண்ட் வருது கூட நல்லாத்தான் இருக்கு..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். பல புதிர்கள் பார்த்துப் பார்த்து, கொஞ்ச நஞ்ச முடியையும் பிய்த்துக்கொண்டு முழித்துக்கொண்டிருக்கேன்.

      நீக்கு
  43. 12. பொய் இல்லை..

    எனக்குத் தெரிந்தே பலரும் செய்கிறார்கள். இதுவரை செய்யவில்லை என்றாலும் கூட இப்போது செய்கிறார்கள். என் கசின் வீட்டில் எல்லோரும் எல்லா வேலைகளையும் பகிர்ந்து செய்கிறார்கள். எங்கள் புகுந்த வீட்டில், பிறந்த வீட்டிலும் கூட ஆண்கள் எல்லோருமே வேலை செய்வார்கள். பாத்திரம் தேய்த்தல் சமையல், உதவுதல் எல்லாம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிறிய வயதிலேயே குழந்தைகளை வீட்டு வேலை செய்யப் பழக்கிவிட்டோம் என்றால் நல்லதுதான்.

      நீக்கு
    2. என் அம்மா செய்தது ; என் பாஸ் செய்யாதது!

      நீக்கு
    3. ஹாஹா :) என் அம்மா செய்யாதது :) ஆனால் இப்போ நான் செய்வது 

      நீக்கு
    4. ஹா ஹா ஹா [கவனிக்கவும் 3 ஹா க்கள்:)] என் அம்மா செய்தது, இப்போ நானும் செய்வது:)).. ஆருக்கும் கஸ்டம் கொடுப்பதில்லை, மகிழ்ச்சியாக நானே செய்வது:))

      நீக்கு
  44. என்வீட்டில் நான் வேலைக்கும் போய்விட்டு வீட்டிற்கு வந்து அனைத்து வேலைகளையும் நான் தான்செய்கிறேன் இன்னும் சொல்லப் போனால் பெண்கள் மாதாந்திர விலக்கு நேரத்தில் உபயோகப்படுத்து நாப்கிங்களை கூட வீட்டில் தேவையான அலவு இருக்கிறதா இல்லையா என்று பார்த்து அவர்களுக்கு தேவையான அளவு வாங்கி ஸ்டாக வைப்பதும் நாந்தான்//////மனம் நிறை பாராட்டுகள் துரை.
    எங்கள் சின்ன மகனும், மாப்பிள்ளையும் இப்படித்தான். மாப்பிள்ளைக்கு சமையல் அவ்வளாவாக வராது. மகன் நன்றாகச் சமைப்பான். பெரியவனுக்கு வீட்டோடு உதவி ஆள் இருப்பதால் அவன் வரை வேலைகள் வருவதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீட்டு வேலைகள் செய்யத் தெரிந்துகொண்டுவிட்டோம் என்றால், நல்ல பொழுதுபோக்கு, சிக்கனமும் கூட.

      நீக்கு
    2. உண்மை கேஜிஜி். நல்ல ரிலாக்ஸேஷனும் கூட...

      நீக்கு
    3. //கௌதமன் 22 ஏப்ரல், 2020 ’அன்று’ பிற்பகல் 6:01
      வீட்டு வேலைகள் செய்யத் தெரிந்துகொண்டுவிட்டோம் என்றால்,//

      இதில் தெரியாது எனச் சொல்லி எஸ்கேப் ஆகவெல்லாம் விடமாட்டேன்ன்:)).. மனமிருந்தால் மார்க்கமுண்டு:)... ஒண்ணும் பண்ண வேண்டாம், மனைவி கிச்சினில் நிற்கும்போது, கூடவே நின்று பேசிக்கொண்டே பார்த்துக் கொண்டிருந்தால்.. கொஞ்ச நாளில் ஓட்டமெட்டிக்காக எல்லாம் புரியும்.. ஹா ஹா ஹா

      நீக்கு
  45. அன்பு கீதாமா. பதிவு வருகிற நேரம் சாப்பாட்டு நேரம்.
    பிறகு பாத்திரங்கள் ஒழித்துப் போட்டு, இரவுக்கு மாத்திரைகள் எடுத்து ,சிறிது நடந்து நேரம் பூர்த்தியாகிறது. இன்று அமாவாசை.
    வீட்டைச் சுத்தம் செய்து முடித்தேன். நம்மாலான சிறு வேலைகள் செய்யத்தானே
    வேண்டி இருக்கிறது.

    மனதளவில் அத்தனை கேள்விகளுக்கும் பதில் இருக்கிறது. அனேகமாக எல்லோர் வாழ்க்கையிலும் ஏதாவது நிலைமையில்
    இவை நடந்து கொண்டிருக்கின்றன.

    கோபம் ,தாபம்,அவமானம்,ஏளனம் எல்லாம் தாண்டிதான்
    இந்த நிலைமைக்கு வருகிறோம்.

    நமக்கு நன்மை நினைக்காதவர்களைப் புரிந்து கொண்டு
    விலகி இருக்கவே இப்போதுதான் தைரியம் வந்திருக்கிறது.
    இதற்கு மேல் தணிந்து போய் என்ன கிடைக்கப் போகிறது.

    சக்தி இருப்பவர்கள் பேசட்டும். நான் வேலைக்குப் போகவில்லை
    என்று சொல்லிக் கேலி காட்டியவர்கள்,
    இப்போது அவர்களே ஓய்ந்துவிட்டார்கள்.
    தன் முதுகு கதைதான்.
    இவர்கள் வேலைக்குப் போகும்போது அவர்களுக்குப் பலகாரம் அனுப்பியதும் இதே கைகள் தான்.
    குறை சொல்லிப் பகை பாராட்டுபவர்களைத் தாண்டுவதற்கு மிக மன உறுதி வேண்டும்.
    இனியும் இறைவன் எனக்கு நல்ல புத்தி கொடுக்க வேண்டும் என்றே வேண்டுகிறேன்.
    மிச்சமுள்ள நாட்களோ வருடங்களோ,
    நான் அறிந்தவர்கள் ,மற்றவர்கள் ஆரோக்கியமுடன் இருக்கவும்
    என் பிரார்த்தனைகள். உலகம் நல் நிலைமை அடையட்டும்.
    வாழ்துகள் கீதாமா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // குறை சொல்லிப் பகை பாராட்டுபவர்களைத் தாண்டுவதற்கு மிக மன உறுதி வேண்டும் //

      "பகை கொண்ட உள்ளம்.. துயரத்தின் இல்லம். தீராத கோபம்... யாருக்கு லாபம்?"

      நீக்கு
    2. //"பகை கொண்ட உள்ளம்.. துயரத்தின் இல்லம். தீராத கோபம்... யாருக்கு லாபம்?"// ஆஹா! அருமையான பாட்டு. நேயர் விருப்பமாக கேட்க நினைத்த பாட்டு. இப்போது கேட்டால் எப்போது போடுவீர்கள்?

      நீக்கு
  46. இதில் என்ன பொய் இருக்கிறது, மனைவிக்கு உதவுவதென்பதில் அனைத்து வேலைகளும் அடங்கும்தானே, ஆனா சில ஆண்களுக்கு சில வேலைகள் பிடிப்பதில்லை எனச் சொல்லலாம்...பிடித்த வேலையைத்தானே செய்வார்கள். முக்கியமாக ஆண்கள் செய்கிறார்கள், உதவும் மனப்பாங்குடன் இருக்கிறார்கள், ஆனால் அவர்களைக் கெடுப்பது பெண்ணாகிய ஆணின் அம்மா தான் ஹா ஹா ஹா...///////அன்பு அதிரா,
    என் கணவர் வீட்டு வேலைகளில்
    பங்கெடுக்க மாட்டார். எங்கள் மகன் அத்தனை வேலைகளையும் செய்வான்.
    எனக்கு முதலில் அதிசயமாக இருந்தது.
    ஆனால் இதுதான் குடும்ப ஒற்றுமைக்குக் காரணம்.
    அனைவரும் புரிதலுடன் விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் சுகமே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைவரும் புரிதலுடன் விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் சுகமே. ஆம்.

      நீக்கு
  47. பதிவைப் பார்த்து விட்டு கருத்து சொல்வதை விட -

    பதிவுக்கு வந்த கருத்துகளைப் பார்த்துக் கருத்து சொல்வது தான்

    சுவையாக இருக்கிற்து....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சமயங்களில் எளிதாகவும் இருக்கிறது!

      நீக்கு
    2. ஆம். அதே, அதே! சுவையான அரட்டை அரங்கம்.

      நீக்கு
    3. //
      துரை செல்வராஜூ22 ஏப்ரல், 2020 ’அன்று’ பிற்பகல் 6:42
      பதிவைப் பார்த்து விட்டு கருத்து சொல்வதை விட -

      பதிவுக்கு வந்த கருத்துகளைப் பார்த்துக் கருத்து சொல்வது தான்

      சுவையாக இருக்கிற்து....//

      ம்ஹூம்ம்.. நோகாமல் நொங்கெடுக்கப் பார்க்கிறார்:))

      நீக்கு
  48. ////2. ஒருவர் மேல் பகைமை 50 வருடங்கள் ஆனாலும் நீடிக்குமா என்ன?//
    பொறாமை/பகைமை வெறுப்பு கோபம் பாவ வாழ்க்கை  தீ இருக்கும் இடத்தில எதுவும் சாத்தியமே 

    பதிலளிநீக்கு
  49. //8. காரணமே இல்லாமல் ஒருவரை அவர் ரொம்பவே பெர்ஃபெக்டா இருக்கார் என்பதாலும் எல்லாவேலைகளையும் திறம்படக் கையாளுகிறார் என்பதாலும் வெறுப்பது சரியா?//
    வெறுப்பு கோபம் எல்லாம்  PERFECTIONIST என்ற ஒரு காரணத்தினால் மட்டும் வருபவையல்ல ..பல காரணங்கள் அதில் மறைந்த இரகசியங்களும் உண்டு .எல்லாத்துக்கும் அடிப்படை காரணம் ஒருவரால் இயலாததை தன்னிலும் எளியவர் சிறியவர் செய்யும்போது துளிர்க்கும் பற்றும்  குட்டி பொறாமை தீ ..அது காடு வீடு எல்லாவற்றையும் அழிக்கும் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை. அதிரா சொல்லி இருப்பது போல வேறு காரணங்களும் இருக்கும்!

      நீக்கு
  50. இந்த தனிமனித உரிமை என்பது திருமண பந்தத்தில் எப்படி வரும்னு புரியலை ?? திருமணமே இருவரும் விட்டுக்கொடுத்து வாழ்வது தானே ? எனக்கு ஒரு சில காய் பிடிக்காது அதனால் அதை செய்யக் கூடாதுனு சொல்ல முடியுமா ?? நான் போட்டு கொள்ள மாட்டேன் அவ்வளவே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருமணம் என்பது இருவரும் விட்டுக்கொடுத்து வாழ்வதுதானே. எப்படி?

      நீக்கு
    2. //கௌதமன் 22 ஏப்ரல், 2020 ’அன்று’ பிற்பகல் 8:16
      திருமணம் என்பது இருவரும் விட்டுக்கொடுத்து வாழ்வதுதானே. எப்படி?//

      யேஸ் யேஸ்.. விட்டுகொடுப்பதில் என் கணவர் எனக்கு 200 வீதம் விட்டுத்தருவார்ர்.. அதனால நான் 100 வீதமும் விட்டுக் குடுப்பேனாக்கும் ஹா ஹா ஹா...

      நீக்கு
    3. எதுக்கு பாதி எடுக்கணும்னு 200 % அவரை விட்டுக்கொடுக்க வச்சிட்டு நான் ஒண்ணும் பெர்செண்டேஜ் எடுத்துக்கலையே ஹாஹு ஹீ :))

      நீக்கு
    4. ஹா ஹா ஹா கர்ர்ர்:))
      எல்லோரும் நல்லாக் கேட்டுக்கோங்க:)).. ஒரு நல்ல குடும்பத்தை உருவாக்க, ஒரு நல்ல கணவன், நல்ல மனைவி ஆக இருக்கும் வாழ்க்கைக்கு எது முகியம் தெரியுமோ?.. விட்டுக் கொடுப்பதுதாங்க:)).. எப்பூடித் தெரியுமோ?..
      இப்போ...

      மனைவிக்கு கோபம் வந்து சத்தம்போடும்போது, அல்லது மனைவி ஒரு தப்புச் செஞ்சாலோ... ஒரு நல்ல கணவர் என்ன பண்ணோனும் எனில்... விட்டுக் கொடுத்து.. அமைதியாகிப் போயிடோணும்...

      அதேபோல கணவனுக்கு கோபம் வந்தாலோ இல்ல கணவர் ஒரு தப்புப் பண்ணிட்டாலோ... அந்நேரம்...
      அந்நேரம்.....

      அந்நேரம்....
      கணவனே விட்டுக் குடுத்து, அமைதியாகிப் போயிடோணும்...
      ஹா ஹா ஹா...

      நீக்கு
    5. ஹாஹாஆ :) விட்டுக்கொடுப்போர் கெட்டுப்போவதில்லை ரைட்டு ரைட்டிட்டு 

      நீக்கு
    6. எல்கே, எனக்கும் இந்தத் தனி மனித உரிமை என்பது கொஞ்சம் ஆச்சரியமான ஒன்றாகவே இருந்தது. ஆனால் பல பெண்களும் சொல்லுவது என்னவெனில் திருமண வாழ்வில் தங்கள் சுயத்தை இழந்துவிடுவதால் தங்கள் தனிப்பட்ட விருப்பங்களைத் தீர்த்துக்கொள்ளவெனத் தனியான நேரம் ஒதுக்கிக் கொண்டு அந்த நேரம் தங்கள் நேரம் எனச் செலவு செய்கின்றனர். உதாரணமாக ஒருவருக்கு ஓவியம் பிடிக்குமெனில் அதற்கென நேரத்தை ஒதுக்கிக் கொள்வதைச் சொல்லலாம். இன்னொருவருக்குத் திரைப்படம் பார்க்கப் பிடிக்கும் எனில் அதற்கென வீட்டு வேலைகள் இல்லாத நேரம்! இப்படி!

      நீக்கு
  51. வணக்கம் சகோதரரே

    இங்கு இன்று அனைவருக்குமே வணக்கம் என சொல்ல வேண்டும். ஏனென்றால் அனைவரும் ஓரே இடத்தில் கூடி தங்கள் மனதின் பதில்களை சொல்லி, மனநிறைவான சந்தோஷம் அடைந்திருக்கிறார்கள். கேள்வி பதில்கள் மிக அருமையாக சிந்திக்கும் வண்ணம் உள்ளது. அதிலும் அனைவரும் கருத்துக்களும் சூப்பராக இருக்கிறது. இப்போதுதான் அத்தனையையும் படித்தேன்.

    இதில் என்னையும் தேடிய எ. பி குடும்ப (எ. பி என்ற சுருக்கத்திற்கு எனக்குப் பிடித்த பதிவுலகம் எனவும் கூறலாம்.) அன்பு உள்ளங்களுக்கு என் மனம் நிறைவான நன்றி. இன்று உண்மையிலேயே இது வரை அமாவாசையின் பிடியில் மாட்டிக் கொண்டேன். இரவு டிபனை பண்ணி வைத்து விட்டு பதிவை படிக்க ஆரம்பித்தேன்.

    இங்கு அவரவர் மனதில் தோன்றும் எண்ணங்களை சொல்லும் போது ஒவ்வொரு கேள்விகளுக்கும் அருமையான பதில்கள் சிறந்த வடிகால் மாதிரி கிடைத்திருப்பதாக உணர்கிறேன்.

    அனைவருமே அனைத்தையும் நன்றாக அலசியாகி விட்டது. இனி அலச அழுக்குகள் ஏதுமில்லா புத்தம் புது துணியாக இன்றைய பதிவு மிளிர்கிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  52. என்ன இன்றைக்கு ஸ்ரீராமும் கும்மியில் கலந்து கொண்டிருக்கிறார்? ஆனால் பெரும்பாலும் சூப்பர் , பிரமாதம் என்று டபாய்த்து விட்டார். நான் காலையில் வேலையை கொஞ்சம் முடித்து விட்டு வந்தேன். பிறகு, மீண்டும் வேலைகள், சாப்பாடு, யூ டியூபில் பாமா விஜயம் பாதி, குட்டி தூக்கம், மாலை ஸஹஸ்ரநாம பாராயணம், பெண்ணோடு பேச்சு எல்லாம் முடித்து விட்டு விட்ட இடத்தில தொடர்கிறேன்(அப்பா மூச்சு விட்டுக்கலாம்).

    பதிலளிநீக்கு
  53. சுவாரசியமான கேள்வி பதில்கள் . ரசித்தேன் அனைத்தும் அருமை :)

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!