புதன், 10 ஜூன், 2020

கோவிலுக்கு நாம் போவதன் முக்கியக் காரணம் என்ன?


நெல்லைத் தமிழன்: 

1. 'யார்கிட்டதான் குறை இல்லை' என்று பொறுத்துப்போகும் குணம் ஏன் பொதுவா நமக்கு வருவதில்லை?      



$ பார்த்தீங்களா, நமக்கு என்று உலகத்தையே சேர்த்துக்கொள்பவர் குறை என்று வரும்போது தனிக்கிறீர்களே?

# தன் குற்றம் காணும் தகைமை மிக அரிய விஷயம். ஏன் நம்மிடம் இல்லை என்பதை நம்மைத் தவிர வேறு யார் சொல்ல முடியும்? 
பெரும்பாலும் மக்கள் தாம் தவறேதும் செய்வதில்லை என்று (தவறாக) நம்புவதுதான் அசல் காரணம்.


ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.


அயலாருடைய குற்றத்தைக் காண்பது போல் தம் குற்றத்தையும் காண வல்லவரானால், நிலைபெற்ற உயிர் வாழ்க்கைக்குத் துன்பம் உண்ட‌ோ?.
2.  ஒருவர் இறந்த உடன் நமக்கு துக்கம் வருவதற்குக் காரணம் என்ன?    

$ இறப்பு என்றில்லை கல்யாணம் ஆகிப் போகும் பெண்ணும் பெற்றோரும் துக்கப் படுவதைப் பார்க்கவில்லையா. இனிக் காண முடியாது என்பதால் இருக்கலாம்.


# ஒருவர் இறந்தவுடன் அவர் தொடர்பாக நாம் செய்யத் தவறியவை, தவறாகச் செய்தவை, நாம் இனி இழக்கப் போகும் சந்தோஷங்கள் திருப்திகள் ஆகியவை நமக்கு துயர் தருவது இயல்பு. 

& அஞ்ஞானம்தான் காரணம் என்கிறார்கள் ஆன்மீக குரு எல்லோரும். 

3.  மறைந்துவிட்டார் என்பதனாலேயே ஒருவர் செய்த தவறுகளும் மறைந்துவிடுமா? சுட்டிக் காட்டுவது தவறா?   

$ தண்டிக்க வழியில்லை என்பதால் மக்கள் பணத்தில் செருப்பு வாங்கினார், பருப்பு சாப்பிட்டார் என்பது போன்ற விஷயங்களுடன் அன்னாரை மறுக்கலாம்.


# மறைந்து விட்டவரது குறைபாடுகள்மறையாதுதான் எனினும் அவற்றைச் சொல்லிக் காட்டுவது பயனற்றது. அநாகரிகமானது.

4.  கோவிலுக்கு நாம் போவதன் முக்கியக் காரணம் என்ன?    

$ கோவில் இயற்கை சீற்றங்களால் பெரும்பாலும் அழிவதில்லை ஆகையால் அடைக்கலம் அடைய சிறந்த இடம். நாளும் நடந்து பழகி விட்டோமானால் எவ்வளவு இருட்டு, காற்று மழை என்றாலும் சென்றடைந்து விடலாம்.

# அமைதியான சூழல், அற்ப எண்ணங்களைத் தற்காலிகமாகவேனும் தவிர்த்த அன்பர் கூட்டம், சில இடங்களில் பிரசாதத்தின் சுவை.

& ரொம்ப சிம்பிள் - 'கோவில் நம்மிடம் வராது' என்பதால்தான்! 

5.   தம்பி என்பவன் அண்ணனுக்கு எப்போது வரை கட்டுப்பட்டவன்?  

$ அன்பில் குறை இல்லாதவரை.

 # தம்பி தன் காலில் சுயமாக நிற்கும் நிலை வரும்வரை அண்ணனுக்குக் கட்டுப்பட்டவன். 

6.  கோவிலில் மூலஸ்தானத்தின் அருகில் இருந்தால் நமக்கு அதிக பலன், தூரவே நின்று கொண்டு ப்ரார்த்தித்தால் பலன் இல்லை என்பதிலெல்லாம் உங்களுக்கு நம்பிக்கை உண்டா? ஏன் எல்லோரும் மூர்த்தி அருகிலேயே போக விரைகிறார்கள்?

$ கண் பார்வை குறைந்தாலும் காணும்படி.

# நம்பிக்கை இல்லை தான். கிட்டச் சென்றால் சரியாகப் பார்க்கலாம்.

& அருகில் இருந்தால்தான் அதிக பலன் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. 

7.  நல்லா எழுதக்கூடியவங்கள்லாம் பிளாக்கைத் தொடராமல், முகநூல் லைக்கிங்ஸ்ல ஆசை வைத்து பிளாக் எழுதுவதை விட்டுடறாங்களே. இதன் காரணம் என்ன?


$ Entry, posting both are easy
Likes and comments go beyond linguistic preferences. 

# இரண்டு காரணங்கள் இருக்கக் கூடும்.
- பிளாகை விட முகநூல் வாசகர் அதிகம்.
- கருத்துப் பதிவோடு விரும்பியவர் எண்ணிக்கையும் காணக் கிடைக்கும் சந்தோஷம்.



வல்லிசிம்ஹன் :

கேள்வி இல்லாத புதனா.?
ஒருவருக்கும் சந்தேகமே இல்லையா.?
தொற்று வந்ததில் இவ்வளவு பாதிப்பா.?

ஒருவருடன் ஒருவர் உரையாடுவதில் தயக்கம் வருமா?

இது பல குழுமங்களில் பார்க்கிறேன்.
அவரவர் தன்னுள் உண்டான பயத்தில் ,வேதனையில்
ஒதுங்குகிறார்களா?

# கேள்வி கேட்பது எல்லாருக்கும் இயல்பல்ல. இங்கும் ஒரு சிலரே கேட்கிறார்கள். மனதைக் குடையும் விஷயம் இருந்தால் கேள்வி எழுகிறது. ஆனால் பலரும் " என்ன சொல்றாங்க பார்க்கலாம் " டைப் கேள்விதான் கேட்கிறார்கள். 

& சந்தேகங்கள் + ஆர்வம் இருக்கும். கேட்க நினைத்து பின் மறந்துவிடுபவர்கள்தான் அதிகம்! 
தொற்று பாதிப்பு, பயம், வேதனை எல்லாம் அதிகம் போனால் ஐந்து சதவிகிதம் இருக்கலாம்.  


கீதா சாம்பசிவம் :

1. ஆன்மிகம் வேறே பக்தி வேறே என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். உங்கள் நாட்டம் ஆன்மிகத்திலா, பக்தியிலா?


# நிச்சயம் பக்தி இல்லை.  ஆன்மீகம் பெரிய வார்த்தை. 
அறிந்து கொள்ள ஆர்வம் உண்டு. அதற்கு மேல் ஒன்றும் இல்லை. 

& ஆன்மிகம் தன்னை அறிவது, பக்தி கடவுளை அறிவது என்று நினைத்தால், என் நாட்டம் எனக்குள்ளே உள்ள கடவுளை அறிவது. 

2. உங்கள் ஆன்மிக குரு என யாரும் இருக்கிறார்களா?

# சிந்தனையைத் தூண்டும் விஷயங்களை எடுத்துரைத்த பலர் இருக்கிறார்கள். முக்கியமாக ஜேகே பரமஹம்சர், ஆதி சங்கரர். சமீப காலத்தில் ஜக்கி வாசுதேவ். அவர் பேச்சு குறைகாண முடியாத ஈர்ப்புடன் கூடியது. 

& ஓரளவுக்கு என் ஆன்மீக குரு என்று நான் நினைப்பது நொச்சூர் வெங்கட்ராமன் அவர்களை. 




3. நேற்று/இல்லை, இன்று இளையராஜா பிறந்த நாளாம்! முகநூலில் நிரம்பி வழிந்தது. இதை எல்லாம் படிக்கையில் மக்கள் இவ்வளவு பித்தாக இருப்பதைப் பார்த்து ஆச்சரியமாக இருக்கு! இது சரியா? தனியொருவனை வழிபடுவது சரியா?

# வழிபடவில்லை, கொண்டாடுகிறார்கள். அவர்களுக்கு ப் பிடிக்கிறது. அதில் நமக்கு என்ன ஆட்சேபம் ?

& நேற்று இல்லை, இன்று இல்லை எப்பவும் நான் ராஜா என்று அவரே சொல்லிவிட்டாரே! தனிமனித துதி தேவை இல்லை என்பதுதான் என் கருத்தும். 

4. இந்தத் தனிமனித வழிபாடு மனிதனுக்கு எப்போது வந்திருக்கும்? யாரேனும் ஒருவரைத் தன் தலைவனாக ஏற்றுக்கொண்டே தீர வேண்டும் என்பது மனிதனுக்குக் கட்டாயமா?


 # தனிமனித வழிபாடு அநாதிகாலமாக இருந்து வருகிறது. இது நமது கல்சர் என்று கூடச் சொல்லலாம். 
தலைவனாக இல்லை எனினும் வழிகாட்டியாக ஏற்பவர்கள் பலர். 

5. பஞ்சாங்கங்கள் இப்போது கொரோனா பற்றியும், வெட்டுக்கிளி தாக்குதல்கள் பற்றியும் முன் கூட்டியே கணித்திருப்பதாக அனைவரும் எடுத்துப் போடுகின்றனர். இது ஏன் நமக்கு முன்னரே தெரியவில்லை? தெரிந்தும் ஏன் சும்மா இருந்தோம்/இருக்கிறோம்?

# படித்தபோது நம்மைக் கவரவில்லை. அது பலிக்கும் போதுதான் அந்தஸ்து வருகிறது.

& வருடா வருடம் என்னென்னவோ பலன்கள் சொல்கிறார்கள். எப்பவாவது சில விஷயங்கள் மட்டும் அதுபோல நடந்துவிடுகின்றன. அவ்வளவுதான். 

6.கொரோனா தாக்குதலினால் ஏற்பட்ட ஊரடங்கினால் வீடுகளில் சண்டை, சச்சரவு அதிகம் ஆனதாகச் சிலரும், இல்லை எனச் சிலரும் சொல்கின்றனர். ஆனால் இதனால் பாதிக்கப்பட்டது ஆண்கள் அதிகமா, பெண்கள் அதிகமா?


# பாதிக்கப் படுவது வருத்தத்துற்குரியது. ஆணானால் பரவாயில்லை என்று சொல்ல முடியுமா ?
ஆணா / பெண்ணா யார் அதிகம் பாதிக்கப் பட்டார் என்று எதை வைத்துச் சொல்வது?. பொதுவாக அடுத்தவர் இருப்பதை சகித்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏன் ஏற்படுகிறது ? இருப்பவர் குறைபாடா சகிக்க வேண்டி உணர்பவர் குணதோஷமா ?

7. நோய்த்தொற்று அதிகமாக இருக்கும்போதே ஊரடங்கைத் தளர்த்தியதும், பேருந்துகள், ஆட்டோக்கள் ஓடவிட்டதும் சரியா?

# ஓரளவுக்கு மேல் எல்லாவற்றையும் கட்டிப் போட முடியாது. வேறு பெரிய பிரச்சனைகள் எழக்கூடும். 

8. உண்மையான புள்ளி விபரங்கள் சொல்லுவதில்லை எனப் பலரும் சொல்லுகின்றார்கள். இதில் உண்மை இருக்குமா?

# புள்ளி விவரங்கள் என்றாலே உண்மையல்ல; ஊகம் என்று சொல்லி விடலாம். 

& 'There are three kinds of lies: lies, damned lies, and statistics'? This quotation is often attributed to Benjamin Disraeli, the 19th century British Prime Minister.

(பொய்கள் மூன்று வகைப்படும் - அவை = பொய்கள், பச்சைப்பொய்கள் மற்றும் புள்ளிவிவரங்கள்!) 

9.சுகாதாரப் பணியாளர்களுக்குத் தேவையான உபகரணங்கள் சரியாகக் கொடுக்கப்படவில்லை என்கிறார்கள். ஆனால் தொலைக்காட்சியில் காட்டுபவர்கள் அனைவரும் உடலை முழுதும் மூடிக் காணப்படுகிறார்கள். இதில் எது உண்மையாக இருக்கும்?

# சரிவரக் கொடுக்காததைக் காட்சிப் படுத்தவில்லை என்பது உண்மையாக இருக்கும். 

10. மருத்துவர்கள் கொரோனா நோயாளிகளைக் கவனிப்பதில்லை என்று சிலரும் கவனிப்பதாகச் சிலரும் சொல்கின்றனர்! உண்மை எது? மருத்துவர்களும் மனிதர்கள் தாமே! அவர்களுக்கும் அலுப்பு வந்திருக்குமோ?

 # அலட்சியம் மருத்துவர்களிடையேயும் இருக்கும். 

11. பரிசோதனைக்கு வரப் பிடிவாதம் பிடிப்பவர்கள் பயத்தினால் அப்படிச் செய்கிறார்களா? மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் தப்பி ஓடுகிறார்களே ஏன்? மருத்துவம் அவ்வளவு கடினமானதாக இருக்கிறதா?

 # மருத்துவத்தில் கடினம் ஏதுமில்லை. தனிமைப் படுத்தப் படுவதை பலரும் விரும்புவதில்லை.
=================
ஊ . கு :  (திருமதி பானுமதி வெங்கடேஸ்வரன் அனுப்பியுள்ள ஆறு கேள்விகளும் + மற்றவர்கள் கேட்கும் கேள்விகளும், எங்கள் பதில்களும், அடுத்த புதன்கிழமை (ஜூன் 17) கேள்வி பதில் பகுதியில் வெளியாகும் ) 

==================================

நிலா மேடை 
மின்நிலா பற்றிய வாசகர்கள்  கருத்துகள்    எல்லாவற்றையும் படித்தேன். மிக மிக பயனுள்ள கருத்துக்களை சொல்லிய எல்லோருக்கும் என் நன்றி.
நான் ஏற்கனவே சொல்லியபடி ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு விஷயமாக மேம்படுத்தலாம் என்பதுதான் எங்களின் இன்றைய நிலைப்பாடு. 

கருத்துகளை 

1) பத்திரிக்கையின் பொதுத் தோற்றத்தில் மாறுதல்கள் 

2) இலக்கணப் பிழைகள் சரி செய்தல் (நன்றி ஏகாந்தன் சார்.) 

3) மின்நிலா உள்ளே வெளியிடப்படும் விஷயங்கள் (content) குறித்த யோசனைகள்

+ மின்நிலாவில் பலதரப்பட்ட முன்னேற்றங்கள் குறித்த யோசனைகள் என்று பிரிக்கலாம். 

மின்நிலா பற்றி engalblog மின்னஞ்சலுக்கு முதல் மெயில் அனுப்பிய ஏகாந்தன் சார் சொல்லியுள்ள பல ஆலோசனைகளை, மின்நிலா 004 இதழில் செய்துள்ளோம். 

வரும் ஞாயிறு அன்று வெளியிடப்படும் மின்நிலா ஜூன் 15 இதழைப் பார்த்து, படித்து உங்கள் கருத்துகளை எழுதி அனுப்புங்கள். 

=================

நிலா 1 (சுட்டி) 

நிலா 2 (சுட்டி) 

நிலா 3  (சுட்டி) 

என்ற மூன்று இதழ்களையும், Open Office (Apache) கொண்டு Doc தயார் செய்திருந்தேன். 

இந்த ஓபன் ஆபீஸ் மென்பொருளில் பெரிய குறைபாடு என்ன என்றால், அதில் உள்ள தமிழ் எழுத்து தட்டச்சு மிகப் பழங்காலத்தது. அப்புறம் அவர்கள் அதில் ஏதும் முன்னேற்றங்கள் (update) செய்யாமல் விட்டுவிட்டார்கள். அதனால் அதில் editing செய்வது பெரும்பாடு. 

நாகப்பட்டினத்திற்குப் பக்கத்தில் முற்றுப்புள்ளி வைத்தோம் என்றால் அது அந்தணப்பேட்டை அருகே கொண்டுபோய் புள்ளியை வைக்கும். 

அந்தணப்பேட்டையில் உள்ள 'டை'யை edit செய்ய backspace அமுக்கினால் அது ட் -> பே என்று தேவை இல்லாமல் முன்னேறி கண்டதையும் அழித்து, நம்மைப் பார்த்துச் சிரிக்கும். 

இவைகளுக்கு ஒரு முடிவு கட்ட, சென்ற வாரம் இலவச word program கள் எல்லாவற்றையும் தேடி, WPS Office என்ற ஒன்றைக் கண்டுபிடித்தேன். 

சில கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், இதில் தமிழ் தட்டச்சு நன்றாக உள்ளது. சுலபமாக edit செய்ய வருகிறது. 

இதைகொண்டுதான் மின்நிலா 004 தயாராகி வருகிறது. 

வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று, மி நி நான்கு பார்த்து, எப்படி உள்ளது என்று கருத்து சொல்லுங்கள். 

(MICROSOFT WORD / OFFICE போன்ற சமாச்சாரங்கள் ஒவ்வொரு மாதமும் நாம் பணம் கட்டவேண்டும் என்று சொல்கின்றன. அதனால் அவற்றின் பக்கம் நான் செல்வதாக இல்லை) 

==============================



133 கருத்துகள்:

  1. சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல்...

    நலம் வாழ்க...

    பதிலளிநீக்கு
  2. அனைவருக்கும் அன்பின் வணக்கம்...

    பதிலளிநீக்கு
  3. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். சட்டென்று என் மனதில் எழுந்த கேள்விகளுக்கு நீங்கள்
      கொடுத்திருக்கும் பதில் சரி.
      நோய் பாதிப்பைவிட ,அதைப் பற்றிய பேச்சுகள்
      இன்னும் பயமுறுத்துகின்றன.நன்றி.

      நீக்கு
    2. பொய்கள் மூன்று வகைப்படும் - அவை = பொய்கள், பச்சைப்பொய்கள் மற்றும் புள்ளிவிவரங்கள்!) 👌👌👌👌👌👌👌👌👌

      நீக்கு
    3. பிரார்த்தனைகளுக்கு நன்றி.

      நீக்கு
  4. அனைவருக்கும் காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  5. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு,வாழ்த்துகள், பிரார்த்தனைகள். கொரோனா தொற்று படிப்படியாய்க் குறையவேண்டும் என்பதே அனைவரின் எண்ணமும். எல்லாம் வல்ல இறைவன் அருளால் விரைவில் அனைவருக்கும் நலமே விளையப் பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  6. கேள்வி-பதில் படிச்சுட்டேன், விரிவான பதில்களுக்கு/கேள்விகளுக்கு மத்தியானம் தான்வரணும். இன்னிக்கு ஒரு ஸ்ரீமந்தம் போயிருக்கணும். கடைசி நிமிஷத்தில் கொரோனா பயத்தால் போகலை. குறைந்தது 50 நபர்களாவது வந்திருப்பார்கள்/வெளி ஊர்களில் இருந்து. அதனால் தான் போகலை. இது சரியா, தப்பா? என்று தெரியலைனாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை. பலரும் மாஸ்க் அணியவில்லை. :( என்றும் தெரிய வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி. மீண்டும் வருக!

      நீக்கு
    2. வணக்கம் கீசா மேடம். சீமந்தம் நடத்துபவர்கள் வாசலிலேயே வரும் விருந்தினர்களுக்கு (அல்லது மாஸ்க்கோட வராதவர்களுக்கு) மாஸ்க் கொடுத்துவிடலாம். மாஸ்க் அணியாதவர்கள் விசேஷத்துக்கு வருவார்கள் என்றால் அங்கு செல்லாமலிருப்பதே உத்தம்ம். தனக்கு மிஞ்சித்தான் தான தரும்ம் என்பதைப்போல நம் ஹெல்த்துக்கு மிஞ்சிதான் மற்ற சமாச்சாரங்கள்.

      நீக்கு
    3. நெல்லைத்தமிழரே, நாங்க போகவில்லை. மாஸ்க் அணியாததோடு மட்டுமில்லாமல் அனைவரும் நெருக்கி அடித்துக் கொண்டு உட்கார வேண்டி இருக்கும். அதோடு சானிடைசர் போன்ற எந்தவிதப் பாதுகாப்பும் இல்லை. நாங்க வரோம்னு சோன்னப்போவே சாப்பாடு சாப்பிட மாட்டோம்னு சொல்லித் தான் சம்மதிச்சோம். அப்புறம் பார்த்தால் நிறைய மனிதர்கள், பாதுகாப்பில்லாமல் உட்காரணும்! எல்லாவற்றையும் யோசிச்சுப் போகலை.

      நீக்கு
    4. ஆமாம், ஆமாம் - வயதானவர்கள் எல்லோரும் எச்சரிக்கையாகத்தான் இருக்கவேண்டும். (நாராயண, நாராயண!)

      நீக்கு
    5. ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கோபத்திலே "க்" ஐ வழக்கம் போல் முழுங்கிட்டேன். :)))))))

      நீக்கு
    6. கீசா மேடம் மாதிரி சின்னவங்களைப் பார்த்து, வயதானவர்கள் எல்லோரும் ஏன் எச்சரிக்கையா இருக்கணும் கேஜிஜி சார்? புரியலையே

      நீக்கு
    7. ஹா ஹா !! இது எப்புடி இருக்கு!

      நீக்கு
    8. ஒரு பச்சக் கொழந்தயப் பாத்து
      இப்புடிச் சொல்லலாமா..

      இது ஞாயமா!?....

      நீக்கு
    9. அதானே, அது சரி, இத்தனை பேரில் யாரு பச்சைக்குழந்தை? மீ? த ஒன் அன்ட் ஒன்லி குழந்தை! :)))))

      நீக்கு
  7. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. # மறைந்து விட்டவரது குறைபாடுகள்மறையாதுதான் எனினும் அவற்றைச் சொல்லிக் காட்டுவது பயனற்றது. அநாகரிகமானது.////////// மிகவும் மதிக்கிறேன்.
      அவர்கள் போன பிறகும், அவர்களை நிறுத்திவைத்து அடிப்பது
      போலக் குறை சொல்பவர்களை என்னால் அங்கீகரிக்க முடியவில்லை.

      நீக்கு
    2. ஆம், உண்மைதான். நன்றி.

      நீக்கு
    3. //மறைந்து விட்டவரது குறைபாடுகள்மறையாதுதான் எனினும் அவற்றைச் சொல்லிக் காட்டுவது பயனற்றது. அநாகரிகமானது.//  கீதா அக்கா நோட் தி பாயிண்ட் . மகாத்மா காந்தியையும், சிவாஜி கணேசனையும் பழிக்கக்கூடாது. ;))

      நீக்கு
    4. அது சரி, தொடர்ந்து மூன்றாவது வாரமாக கொரோனாவைப் பற்றி கேள்வி கேட்டு ஹாட் ட்ரிக் அடித்திருக்கிறீர்கள் , கொரோனா உங்களை அவ்வளவு பயமுறுத்தி விட்டதா? 

      நீக்கு
    5. பானுமதி, இருவரையும் விமரிசனம் தான் செய்கிறேன். பழிக்கவில்லை. அதிலும் ஜிவாஜியை மிகை நடிப்புக்காகத் தான் விமரிசனம் செய்யறேன்.

      நீக்கு
    6. யாரைக் கேட்டீங்கனு தெரியலை பானுமதி, என்னைக் கேட்டிருக்கிறீர்கள் எனில் ஆம், கொரோனா ஒரு வழி பண்ணிக் கொண்டிருக்கிறது. ரொம்பவே ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறது. எங்கேயும் போகவிடாமல், யாரையும் வரவிடாமல்! :(((((

      நீக்கு
    7. //அவற்றைச் சொல்லிக் காட்டுவது பயனற்றது.// - வல்லிம்மா..இது எப்படி சரியாகும்? இப்போ கீசா மேடம், அவங்க தலைவர் ஜிவாஜி நடிப்பை ஆஹா ஓஹோன்னு சொல்லும்போது, 'அப்புறம் ஏன் ஜிவாஜிக்கு ஒரு தேசிய விருதுகூட கிடைக்கலை..ஜில படங்களே நடிச்ச சாருஹாசனுக்குக்கூட கிடச்சுடுச்சே'ன்னு சொன்னா டப்பா?

      நீக்கு
    8. சாருஹாசனெல்லாம் எங்கே நடிச்சார்? ஒவ்வொரு ஃப்ரேமிலும் இந்தக் கதாநாயகன் நான் தான், நான் தான் எனக் காட்டிக்கொண்டு நடிக்க சாருஹாசனுக்குத் தெரியலை. :))))) அதான் அவருக்கு தேசிய விருது கிடைச்சதுக்குக் காரணம். நடிப்பது சாருஹாசன் என்னும் நினைப்போ அல்லது பார்ப்பது படம் என்னும் நினைப்போ நம்மிடம் வரக்கூடாது.

      நீக்கு
    9. சாருஹாசன் ஒரு திரைப்படத்தில் பணி ஓய்வு பெற்ற அரசு ஊழியராக வருவார். தன் பணி ஓய்வுக்குப் பின்னர் கிடைக்க வேண்டிய பணத்துக்காக அவர் அலையும் அலைச்சல்! நல்லவேளையா அந்தப் படத்தில் ஜிவாஜியைப் போடவில்லை. கன்னடப்படம் தான் என்றாலும் புருவத்தை நெளிச்சு, வாயைக் குவிச்சு, உடலைக்குறுக்கினு ஜிவாஜி கஷ்டப்பட்டு நடிச்சிருக்க வேண்டியது. சாருஹாசன் நாம் அக்கம்பக்கம் பார்க்கும் நபரைப் போல் இயல்பாக வந்துவிட்டுப் போவார்.

      நீக்கு
    10. // நாம் அக்கம்பக்கம் பார்க்கும் நபரைப் போல் இயல்பாக வந்துவிட்டுப் போவார்.// அதுதான் படமும் வந்துவிட்டு இயல்பாக பெட்டிக்குள்ளே போயிடுச்சு!

      நீக்கு
    11. படம் தபரண கதே மொழி - கன்னடம்.

      ஜிவாஜியைப் பார்த்தால் பண்ணையார் மாதிரி இருக்குமே தவிர, ஓய்வுபெற்ற அரசு ஊழியரா அவரைக் கற்பனைகூட பண்ணிப்பார்க்க முடியாதே.

      கேஜிஜி சார்... இயல்பா பெட்டிக்குள்ள படம் போனாலும், அந்தப் படத்துக்கு இரண்டு தேசிய விருதும், எட்டு, மாநில விருதுகளும் கிடைத்ததே.

      நீக்கு
  8. Open Office (Apache) - உடன் போராடி நீங்கள் ’மின்நிலா’ தயார் செய்ய முயன்றிருக்கிறீர்கள் என இப்போதுதான் தெரிகிறது. WPS Office-க்கு மாறிவிட்டீர்கள் என்பதில் மகிழ்ச்சி. என் மொபைலிலும் WPS Office இருக்கிறது. அவ்வப்போது பார்க்கில், ரெஸ்ட்டாரண்ட்டில் உட்கார்ந்திருக்கும்போது வினோத சிந்தனையாக, கவிதைபோல ஏதாவது தோன்றினால் அது தப்பித்துவிடாதிருக்க, குறித்துக்கொள்ள இந்த WPS Office உபயோகமாக இருந்திருக்கிறது.
    கொரோனா மேய்ந்துகொண்டிருக்கும் ஊரில் ’பார்க்’கெல்லாம் இருக்கிறதோ, இல்லையோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஏகாந்தன் சார். மொபைலில் clevnote என்னும் app நிறுவி வைத்துக்கொள்ளுங்கள். அவ்வப்போது தோன்றுபவைகளை அதில் டைப் செய்து சேமித்து வைத்துக்கொள்ளலாம்.

      நீக்கு
  9. // ரொம்ப சிம்பிள் // உண்மையான ரசனையான பதில்...!

    அதே போல் ரொம்ப சிம்பிள் :-

    https://freetamilebooks.com/contact-us/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி DD. freetamilebooks சேவையை பயன்படுத்திக்கொள்கிறோம்!

      நீக்கு
    2. freetamilebooks.com சென்று பார்த்தேன். நமது நண்பர்கள் சிலரது படைப்புகளும் அதில் இருக்கக் கண்டு மகிழ்ந்தேன்.
      இதனை நடத்துவது யார், யார்? இந்தியாவாழ் தமிழர்களா அல்லது அயலகத் தமிழர்களா - பெயர்கள் போன்ற விபரமேதும் தென்படவில்லை.

      நீக்கு
    3. லினக்ஸ் நண்பர்கள் திரு ஸ்ரீநிவாசன், அவர் மனைவி எல்லோருமே. நான் ஒரு காலத்தில் லினக்ஸுக்காக மொழி பெயர்ப்பு வேலையை ஒரு ஆறு மாதம் செய்தேன். பின்னால் அவங்களோட நிபந்தனைகள் எனக்குப் பொருந்தாததால் விட்டு விட்டேன். ஆனால் செய்யலையே என்னும் வருத்தம் இப்போவும் உண்டு. :( என்ன செய்ய முடியும்! அதிர்ஷ்டம் அவ்வளவு தான்.

      நீக்கு
  10. //'யார்கிட்டதான் குறை இல்லை' என்று பொறுத்துப்போகும் குணம் ஏன் பொதுவா நமக்கு வருவதில்லை?// நம்முடைய உறவினர்களும், நண்பர்களும் நம் குறைகளை பெரிது படுத்தாமல் இருப்பதால்தான் நம் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது. நாமும் நம்மையும் அறியாமல் அதை செய்து கொண்டுதான் இருக்கிறோம்.  

    பதிலளிநீக்கு
  11. //Entry posting both are easy//  என்ட்ரிக்கும்,போஸ்டிங்கிற்கும் இடையில் ஒரு கமா போட்டிருக்கலாமோ? அல்லது and. 

    பதிலளிநீக்கு
  12. ஊசிக்குறிப்பை ரசித்தேன். யூ ட்யூப் வைத்திருப்பவர்கள் தங்களுடைய ஒவ்வொரு பதிவின் இறுதியிலும் லைக், பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க, சப்ஸ்க்ரைப் பண்ணுங்க என்று சொல்லுவார்கள் அது போல நீங்களும் கேள்வி பதில் இறுதியில் படியுங்க, ரசிங்க, கேள்வி கேளுங்க என்று கூறலாம்.  

    பதிலளிநீக்கு
  13. சுவாரஸ்யமான கேள்வி - பதில் ரசித்தேன் ஜி

    ஜக்கி வாசுதேவ் மட்டுமல்ல ஆன்மிகவாதிகள் அனைவருமே பேச்சில் வல்லவர்கள் நித்தியின் பேச்சில் மயக்கமில்லையா ?

    கடந்த பத்து ஆண்டுகளில் ஜக்கியால் நூற்றுக்கும் மேலான யானைகள் கொல்லப்பட்டு இருக்கிறது அரசு ஒத்துழைப்புடன் இது துரோகம் இல்லையா ? குற்றவாளிகளுக்கு ஆதரவாய் இருப்பதுகூட குற்றமே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ! நூற்றுக்கும் மேலான யானைகள் !! யார் விட்ட கரடி இது!

      நீக்கு
    2. யார் விட்ட கரடியோ.. யானையோ!..

      இந்த இவரிடம் மட்டும் எனக்கு கொஞ்சம் கூட ஈர்ப்பு ஏற்படுவதில்லை...

      முற்றும் கடந்தவரா இவர்?...
      அப்புறம் என்ன குரு!...


      நீக்கு
    3. எனக்கும் ஜ வா விடம் ஈர்ப்பு கிடையாது. குருமார் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மருந்துக்கடை போன்றவர் என்றால் ஜ வா ஒருவகை நாட்டு மருந்துக் கடை.

      நீக்கு
  14. WPS - நல்லதொரு வழி. இன்னும் சில இலவச மென்பொருட்கள் உண்டு. சுலபமானதும் கூட. போலவே .pdf மட்டும் தராமல் .epub போன்றவற்றிலும் தரலாம்! அதைச் செய்வதற்கு Calibre எனும் மென்பொருள் இணையத்தில் உண்டு - இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். அதன் வழி .docs ஆக இருக்கும் உங்கள் கோப்பினை .epub ஆக மாற்றுவது சுலபம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தகவலுக்கு நன்றி. calibre இருக்கு - ஆனால் எப்படி பயன்படுத்துவது என்று தெரியாமல் முழிக்கிறேன். ஆராய்ச்சி & அபிவிருத்தி செய்கிறேன்.

      நீக்கு
  15. //இவைகளுக்கு ஒரு முடிவு கட்ட, சென்ற வாரம் இலவச word program கள் எல்லாவற்றையும் தேடி, WPS Office என்ற ஒன்றைக் கண்டுபிடித்தேன். // விழுந்து விழுந்து நமஸ்காரங்கள் பண்ணிக்கறேன். எனக்கெல்லாம் உட்கார்ந்து படித்து, கருத்துச் சொல்லினு நேரம் போயிடுது. நீங்க தேடிக் கண்டு பிடித்து அதைச் சோதனை செய்து, எல்லாவற்றையும் தொகுத்துப் போட்டு! நேரம் போதலைனு நினைக்கும் நானெல்லாம் உங்களிடம் நேரத்தைச் செலவு செய்யும் வித்தையைக் கற்றுக் கொள்ளணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆ ! ஐஸா !! (ஆனால் நிஜமாகவே நிலா 1 உருவாக்க ஆரம்பித்த நாளிலிருந்து, தொடர்ந்து பொழுது நன்றாகப் போகிறது. நேரம் போவதே தெரியாமல் நிறைய பரிசோதனைகள் நடத்தி சந்தோஷப்பட்டுக்கொண்டிருக்கிறேன். லாக் டவுன் ஆரம்பத்திலேயே இதை தொடங்கியிருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று இப்போது தோன்றுகிறது)

      நீக்கு
    2. ஐஸெல்லாம் இல்லை. நிஜம்மாகவே நீங்க, ஶ்ரீராம், வெங்கட் போன்றவர்கள் எல்லாருடைய பதிவுகளையும் படித்து பதில் சொல்லி, உங்க பதிவிலேயும் பதில்கள் சொல்லினு நிறையப் பாடுபடறப்போ நம்மால் முடியலையேனு கொஞ்சம் வருத்தம் கலந்த கோபம் கூட வருது! :)))))) கோவிச்சுண்டு என்ன செய்ய முடியும்? கையால் ஆகலை! :(

      நீக்கு
    3. எனக்கு வேறு வேலை கிடையாது. ஆனால் மற்ற இருவரும் வேலையும் பார்த்துக்கொண்டு பதிவுலகிலும் நிறைய நேரம் உலா வருவது போற்றுதலுக்கு உரியது.

      நீக்கு
    4. ஆம். தங்கள் வேலைப்பளுவையும் தாண்டி, ஸ்ரீராம், வெங்கட், DD போன்றோரின் முனைப்பு, ஆர்வம் சற்றே திகைக்கவைக்கிறது! பாராட்டுக்குரியது

      நீக்கு
    5. கீதாக்கா உங்கள் இரு கருத்துகளையும் அப்படியே டிட்டோ செய்கிறேன்.

      கீதா

      நீக்கு
  16. அது சரி! $ சார், நெல்லைக்கு மட்டும் பதில் சொல்லிட்டு எங்களைக் கண்டுக்கவே இல்லையே? என்ன காரணம்? பதில்கள் தெரியலையா? :))))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மின்நிலாவுக்கு படங்கள் எடுத்து அனுப்ப அவருடைய டெரஸ் கார்டனுக்குப் போய்விட்டார். அதனால், தொடர்ந்து பதில் சொல்லவில்லை.

      நீக்கு
  17. //நீங்க, ஶ்ரீராம், வெங்கட் போன்றவர்கள் எல்லாருடைய பதிவுகளையும் படித்து பதில் சொல்லி, உங்க பதிவிலேயும் பதில்கள் சொல்லினு நிறையப் பாடுபடறப்போ நம்மால் முடியலையேனு கொஞ்சம் வருத்தம் கலந்த கோபம் கூட வருது!//கையை குடுங்க கீதா அக்கா, எனக்கும் இதே ஆதங்கம் உண்டு. எல்லோர் பதிவுகளையும் படித்து, உடனே கருத்திட்டு, எங்கள் பிளாகிலும் குறை வராமல் பார்த்துக் கொண்டு... ரியலி க்ரேட்! நம்மால் முடியவில்லை என்று நான் மட்டுமல்ல தி.கீதாவும் வருந்துவார். 

    பதிலளிநீக்கு
  18. மின் நிலாவை கட்டணத்துக்காக வெளியிடும் எண்ணம் உண்டா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி எண்ணம் எதுவும் தற்போதைக்கு இல்லை.

      நீக்கு
  19. கேள்விகள், பதில்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
    தினம் பதிவு, அதற்கு வரும் பின்னூட்டங்களுக்கு பதில்கள் என்று போடுவது பெரிய சாதனைதான்.

    பதிலளிநீக்கு
  20. நெல்லைத் தமிழன்:

    1. 'யார்கிட்டதான் குறை இல்லை' என்று பொறுத்துப்போகும் குணம் ஏன் பொதுவா நமக்கு வருவதில்லை? //

    இதுக்குத்தான் இதுக்காகத்தான் எல்லோரையும் ஞானி ஆக்கிடலாம் என மீ துடியாத் துடிக்கிறேன்ன்:)) ஆனா ஆரும் வட்டத்துக்குள் வர மாட்டினமாமே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. ஞானி ஆகிட்டால் இதெல்லாம் ஈசியாக மனதில வருமாக்கும் அதிராவுக்கு வருவதைப்போல ஹா ஹா ஹா..

    இதில ஒரு விசயம் இருக்குது என்னவெனில், நமக்கு நன்கு பிடிச்ச ஒருவர் எனில், உடனே பொயிங்கினாலும், அடுத்த நிமிடம் பொறுத்துப் போவோமம்... மன்னிப்போம் மறந்துகூடப் போயிடுவோம்.. ஆனா பெரிதாக ஒருவரைப் பிடிக்காதபோதுதான், அவரின் சினக் குறைகள் கூட எரிச்சலைக்கொடுக்கும்..

    அதனால குறை என ஒருவரைப்பார்ர்க்கும்போது, முதலில் நம்மனதிடம் நாமே கொஸ்ஸன்:) கேட்கோணும்.. இவர் நமக்கு பிடிசவரா பிடிக்காதவரா என ஓகே ஹா ஹா ஹா:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா...   வழக்கம் போல என்னை நீங்கள் ஆச்சர்யப்படுத்துகிறீர்கள்.  தெளிவான சிந்தனை.

      நீக்கு
    2. ஆஆஆஆஆஆ நன்றி ஸ்ரீராம்.. என் கண்ணே கலங்கிப்போச்ச்ச்ச்!!!

      நீக்கு
    3. நான் கண்ணை மூடிக்கொண்டுவிட்டேன்!

      நீக்கு
  21. கேள்வி பதில்கள் அனைத்தும் சிறப்பு. ரசித்தேன்...

    குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை. நாம் மற்றவரைப் பார்த்து குற்றப்படுத்தி விரல் நீட்டிச் சுட்டினால் நம்மை நோக்கி மூன்று விரல் சுட்டும்!

    ஒருவர் இறந்தபின் துக்கம் வரும் தான் நாம் மனிதர்கள்தானே...நமக்குக் க்ளோஸானவர் என்றால் நிறையவே...என்றாலும் அதையும் காலம் மாற்றுத்தானே செய்கிறது...இல்லையா

    ஒருவர் மறைந்த பிறகு அவரைக் குற்றம் சொல்லுவது நிச்சயமாக அநாகரீகம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  22. //2. ஒருவர் இறந்த உடன் நமக்கு துக்கம் வருவதற்குக் காரணம் என்ன? //

    நாம் அந்த நேரத்தை மட்டும்தான் நினைக்கிறோம், வருங்காலத்தை அப்போ நினைக்குமளவுக்கு நமக்கு மனப் பக்குவம் இருப்பதில்லை..

    ஒரு இறப்பின்போது, சாகும் தறுவாய்க்குக்கூட போக நினைக்கிறோம், ஆனா அதிலிருந்து மீண்டு பல வருடங்களில்..மனதின் உள்ளே [துக்கம் இருக்கும் ஆனாலும்] சிரிக்கிறோம் நல்ல உடை அணிகிறோம் சாப்பிடுகிறோம்... ஆனா இன்று இப்படி செய்ய முடிவதை, அன்று ஏன் நம்மால் செய்யமுடியவில்லை என எண்ணும்போது, அப்போதுதான் புரிகிறது நாம் இன்னும் மனிதராகவே இருக்கிறோம், ஞானம் முழுதாகக் கிடைக்கவில்லை என.

    ,ஒரு மனிதன் என்பவர், தென்னை மரத்தின் கீழே இருப்பவரைப்போலவாம்.. ஆனா உண்மையான ஞானிகள் முனிவர்கள், தென்னையின் உச்சியில் இருப்பவர்களாம்..

    அதாவது தென்னை மர அடியில் இருக்கும் நமக்கு ஒரு குறிப்பிட்ட தூரம்தான் கண்ணுக்கு தெரியும்.. அதை விட அங்கால என்ன இருக்கிறது என தெரிவதில்லை, அதனால அப்போதைய சூழலுக்கு அழுது புரள்கிறோம்.. ஆனா தெனையின் உச்சியில் இருப்பவருக்கு, அடுத்த ஊர் வரை தெரியும்[எதிர்காலம்].. அதனால மனப் பக்குவம் வந்துவிடுகிறது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆ ! எனக்கு தென்னைமரம் ஏறத்தெரியாதே! வைரவா என்னைக் காப்பாற்று!

      நீக்கு
    2. ..உண்மையான ஞானிகள் முனிவர்கள், தென்னையின் உச்சியில் இருப்பவர்களாம்//

      கீழே விழுந்து அடிபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்!

      நீக்கு
    3. முதல்ல மரம் ஏறப் பழகோணும் அப்போதான் ஞானி ஆகலாம்:))

      நீக்கு
    4. அதுக்கு நான் அஞ்ஞானியாவே இருந்துடறேன்!

      நீக்கு
    5. ரத்த சம்பந்தம் உள்ள அல்லது நமக்குத் தொடர்புள்ள ஒருவர் இறக்கும்போது, நாம் உடனே, நம்மைப் பற்றி நினைத்து (அவரில்லாமல் இனி நாம் என்ன செய்யப்போகிறோம், ஐயோ அவர் போயிட்டாரா அவர் நமக்கு இவ்வளவு தரணுமே, அவரால இந்தக் காரியம் ஆகணுமே என்று) சுயநலமான எண்ணத்தால் திடுக்கிடுகிறோம். வேறு காரணம் இருக்க முடியாது. பிறகு அவரது இழப்பு நமக்கு மனதில் இருந்து மறைந்துவிடுகிறது.

      ஒரு தாயின் ஒரு குழந்தை இறந்த அன்று, உயிரோடிருக்கும் தன் இன்னொரு குழந்தைக்குப் பால்/உணவு கொடுப்பாள். அதனால் அவள் ஞானியாகிவிட்டாள் என்று அர்த்தமில்லை. She understands the reality.

      நீக்கு
    6. அப்படியில்லை நெல்லைத்தமிழன், நான் சொன்னது, தம் கடமையைச் செய்வினம்தான் ஆனால் அழுதுகொண்டுதானே, மகிழ்வாக இருக்க முடியாதே.. ஆனால் சில காலம் போனபின் சிரித்து மகிழ்கிறார்கள்தானே.. அதே நினைப்பில் சிரிக்காமலோ பேசாமலோ இருப்பதில்லைத்தானே.. அப்போ இப்போ செய்ய முடிவதை அன்று ஏன் செய்ய முடியாமல் போனது?... இதைத்தான் சொன்னேன்...

      நீக்கு
    7. கேள்வி கேட்கிறார்.. ஆனா அதுக்குப் பதில் சொன்னால் அடிக்க வாறாரே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

      நீக்கு
  23. நாம் குற்றம் கூறுவது கூட சில சமயம் பார்ஷியல் எனலாம். ஒரே தப்பை நமக்கு வேண்டப்பட்டவும் செய்கிறார் நாம் கொஞ்சம் இடைவெளி மெயின்டெய்ன் செய்பவரும் செய்கிறார் என்றால் வேண்டப்பட்டவரைக் கோபித்துக் கொண்டாலும் நம் மனது வருந்தினாலும் உடனே மறைந்துவிடும். அடுத்த நிமிடம் பொறுத்து மன்னித்து அன்பு காட்டுவோம் ஆனால் அதே இது அதே போல கொஞ்சம் இடைவெளி மெயின்டெய்ன் செய்பவர் செய்தால் கண்டிப்பாக அது ஊதிப் பெருக்கப்படும். இது எல்லார் வீட்டிலும் நடக்கும் ஒன்று. எல்லாரையும் ஒரே போல பாவிக்காததால் வரும் விளைவு..

    இதுக்குத்தான் அக்செப்ட் பீப்பிள் அஸ் தெ ஆர் நு சொல்லுறது...கீதாவும் கொஞ்சம் ஞானி ஆகிட்டார் ஓ பிஞ்சுவின் காதில் இது விழாமல் இருக்கட்டும்!!!!! ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஆஆஆஆஅ என் ஆச்சிரமத்துக்கு ஒரு ஆள் கிடைச்சிட்டார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. கெதியா தண்ணிக்கப்பலில வாங்கோ கீதா:)[ நீங்கள் வீட்டுக்குள்ளிருந்து குண்டாகிட்டமையால பிளேன் எல்லாம் எழும்பாதாக்கும்:)].
      அடுத்த லொக்டவுன் நியூஸ் றிலீஸ் ஆனதும் ஆச்சிரம் திறக்கப்படும்:))

      நீக்கு
    2. வானவல்லி என்றால் என்ன?

      நீக்கு
    3. வேற என்ன அர்த்தம் இருக்கப்போகிறது.. உலக அழகி, அதி புத்திசாலி இப்பூடி ஏதும் ஒரு அர்த்தம்தான் இருக்கும் வானவில்லிக்கு சே சே ஹையோ டங்கு ஸ்லிப்பாகுதே,கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)),.. வானவல்லிக்கு:)) ஹா ஹா ஹா

      நீக்கு
    4. ஞானவல்லி என்று வைத்துக்கொள்ளலாமே!

      நீக்கு
  24. & ரொம்ப சிம்பிள் - 'கோவில் நம்மிடம் வராது' என்பதால்தான்! //

    ஹா ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  25. & அருகில் இருந்தால்தான் அதிக பலன் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. //

    இதை கன்னா பின்னானு அப்படியே வழி மொழிகிறேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுதானே கீதா கரீட்டாத்தன் வழி மொழியிறீங்கள்:).. இப்போ அதிரா அருகிலா இருக்கிறேன் இலையே, ஆனா அதிராவின் நல்ல நல்ல சொற்பொழிவுகளாலும் சமையல் குறிப்புக்கஆளலும் நீங்கள் எல்லோரும் அதிக பலனைடைகிறீங்களெல்லோ:))..

      ஹையோ உண்மையைச் சொல்வது டப்பா கெள அண்ணன்?:) எல்லோரும் கலைக்கினம் என்னை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

      நீக்கு
    2. நல்ல நல்ல சொற்பொழிவுகளா! எல்லோரும் டிக்ஸ்னரி தேடி ஓடிப்போயிருப்பாங்க!

      நீக்கு
  26. //3. மறைந்துவிட்டார் என்பதனாலேயே ஒருவர் செய்த தவறுகளும் மறைந்துவிடுமா? சுட்டிக் காட்டுவது தவறா? //

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தவறுதான்... ஆளே போய் விட்டார் இனிச் சுட்டிக்காட்டி என்ன் ஆகப்பொகிறது.. செத்த பாம்பை அடிப்பதைப்போலாகுமே அது.. அப்படி நாம் செய்தால், அது அவர் செய்த தவறை விட பன்மடங்கு நாம் தவறு செய்கிறோம் என அர்த்தமாகும், அப்போ நாம் நாளைக்கு இறக்க மாட்டோமா? பின்னர் நம் இறைப்பின் பின்பு எப்படி எல்லாம் திட்டுவார்கள்..

    என்னைப்பொறுத்து அடுத்தவரைக் குறை கூறுவதே தப்பு.... அடுத்தவரைக் குறை கூறுமளவுக்கு நாம் யாருமே குறைவிடாதவர்கள் இல்லை, தெரியாமல்கூட குறைகள் தப்புக்கள் பண்ணியிருப்போம், அடுத்தவரை நோகடிச்சிருப்போம், ஆரும் அதை சுட்டிக்காட்டாவிட்டால் நமக்கு நாம் விட்ட குறைய தெரிய வாய்ப்பில்லாமலே போய் விடுகிறது...

    ஓவராக அலட்டுகிறேனோ ஹா ஹா ஹா அதனால இத்தோடு நிறுத்தி விடுகிறேன் ஹா ஹா ஹா:))

    பதிலளிநீக்கு
  27. //4. கோவிலுக்கு நாம் போவதன் முக்கியக் காரணம் என்ன? //
    நிம்மதி, மன அமைதி, அங்கிருக்கும் நல்ல வைபிரேசன் நம்மை உற்சாகப்படுத்தும், இவற்றுக்காகத்தான்.. பின்ன நெல்லைத்தமிழனையும் ஸ்ரீராமையும் கீசாக்காவையும்போல:), என்ன சாதம் தந்தார்கள்?, என்ன சுண்டல் தந்தார்கள்?,.. சே சே அந்தக் கோயிலில் அது சரியில்லை, இந்தக் கோயிலில் சாதம் தராமல் பிட்சா தந்து பேய்க்காட்டிப்போட்டினம் எனச் சொல்லுவதற்காக இல்லையாக்கும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா.. ஹையோ மீ எஸ்கேப்ப்ப்ப்ப்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல பதில்தான்னு சொல்றவங்க, உங்க இடுகைகளைப் படித்திருக்க மாட்டாங்க. கனடா கோவிலுக்குப் போனோமா, சாமி கும்பிட்டோமா, திரும்ப அக்கா வீட்டுக்கு வந்தோமா என்று இல்லாமல், யாரோ அங்கு கொடுத்த பிரசாதத்தைச் சாப்பிட்டுவிட்டுத்தான் திரும்பணும் என்று தட்டோடு காத்திருந்த மாதிரியும், அந்த உணவுப் படங்களைப் போட்டிருந்தமாதிரியும், பிறகு அங்கே இருந்த மரத்திலிருந்து பழங்களைப் பறித்து, ஊஞ்சலாடிவிட்டு வந்தமாதிரியும் எங்கேயோ படித்திருக்கிறேனே.

      நீக்கு
    2. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஒரு ஜிங்கம்:)) இன்னொரு ஜிங்கத்துடன் மோதுவதுதான் அழகாக்கும்:)) ஒரு பூஸுடன் மோதக்கூடாதாக்கும் ஹா ஹா ஹா...

      https://i.ytimg.com/vi/XKUN8cpII9Y/maxresdefault.jpg

      நீக்கு
  28. //6. கோவிலில் மூலஸ்தானத்தின் அருகில் இருந்தால் நமக்கு அதிக பலன், தூரவே நின்று கொண்டு ப்ரார்த்தித்தால் பலன் இல்லை என்பதிலெல்லாம் உங்களுக்கு நம்பிக்கை உண்டா? ஏன் எல்லோரும் மூர்த்தி அருகிலேயே போக விரைகிறார்கள்?///

    ஹா ஹா ஹா இங்கு என் ஆத்துக்காரர் அடிக்கடி சொல்லும் வசனம் நினைவுக்கு வருது..:)
    “சிலருக்குத், தாம் தான் கடவுளின் அஸிஸ்டண்ட் எனும் நினைப்பு:)” ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
  29. ///7. நல்லா எழுதக்கூடியவங்கள்லாம் பிளாக்கைத் தொடராமல், முகநூல் லைக்கிங்ஸ்ல ஆசை வைத்து பிளாக் எழுதுவதை விட்டுடறாங்களே. இதன் காரணம் என்ன?//

    அல்லோ நெல்லைத்தமிழன் அண்ணா.. நொட் அம்பி ஓகே:)). முதல்ல நீங்க ஒரு புளொக் திறங்கோ.. பின்பு அடுத்தவரைக் குறை கூறலாம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))...

    தான், எவ்ளோ நன்றாக எழுதக்கூடியவர் என்பதை மறந்து, இக்கொஸ்ஸனைக் கேட்டு என்னைக் கடுப்பாக்குகிறார் யுவர் ஆனர்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அடுத்தவரைக் குறை கூறலாம் // - ஏனுங்கோ.... நல்லா எழுதறவர், இன்னும் எழுதி மற்றவர்கள் படிக்க வாய்ப்பு கொடுத்தா என்னவாம் என்ற ஆதங்கத்தில் எழுதினேன். ப்ளாக் திறக்கிறவங்க எல்லாரும் நல்லா எழுதறாங்கன்னு சொல்ல முடியாது. சிலர் ரொம்பவே நல்லா எழுதுவாங்க. நல்லாருக்கே என்று தொடர்ந்தால், கடையை மூடிவிட்டு முகநூலுக்குத் தாவிடறாங்க. அதனால் கேட்டேன்.

      நீக்கு
    2. அச்சச்சோ நெல்லைத்தமிழன் இப்போதெல்லாம் ரொம்ம்ம்ம்பச் சூடாகிடுறாரே:)) ஆண்டவா வைரவா என்னைக் காப்பாத்துங்கோ மீ ஒரு அப்பாவீஈஈஈஈஈ:))

      நீக்கு
  30. கேட்க நினைத்து பின் மறந்துவிடுபவர்கள்தான் அதிகம்! //

    இது எனக்கு ரொம்பவே பொருந்தும். கண்ட நேரத்தில் கேள்வி பிறந்து அப்புறம் மறந்தே விடும்...ஹிஹிஹி

    நோய்த்தொற்று அதிகமாக இருக்கும்போதே ஊரடங்கைத் தளர்த்தியதும், பேருந்துகள், ஆட்டோக்கள் ஓடவிட்டதும் சரியா?//

    ஆனால் ஊரடங்கு அதிக நாட்கள் என்பது மிகவும் கடினம்தான். இதில் மக்களின் பங்கு மிக மிக முக்கியம். மக்கள் ஒத்துழைக்காத போது என்ன செய்ய முடியும்?

    கீதா

    பதிலளிநீக்கு
  31. //2. உங்கள் ஆன்மிக குரு என யாரும் இருக்கிறார்களா?//
    எனக்கு மனிதர்களைத் தெய்வமாகவோ, குருவாகவோ நினைத்து வழிபடுமளவுக்கு மனம் வருவதில்லை, ஆனா இப்படிக் குரு, ஞானி, முனிவர்...என நேரில் ஆரையாவது கண்டால்.. டென்சனாகிக் காலில விழுந்திடுவேன் என்பது வேறு கதை ஹா ஹா ஹா.. முன்பு நடந்திருக்குது, பின்பொருமுறை சொல்கிறேன்...:).

    ஆனா குரு, ஞானி, எனப்படுவோர் ஆர் நல்ல விசயம் சொன்னாலும் பொறுக்கிக் கொள்வேன்... பிரசங்கங்கள் பிடிக்கும்.. இப்பகூட ஒரு குருவின் பிரசங்கள் கையில் கிடைச்சு.. கேட்கத் தொடங்கியிருக்கிறேன் ஆனால் சொல்ல மாட்டனே அவரின் பெயரை ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் பெயரை ரகசியமா எனக்கு மட்டும் சொல்லிடுங்க.

      நீக்கு
    2. ஹா ஹா ஹா ஒரு சின்னக் குளூ.. அவர் ஒரு எஞ்சினியர் இதுக்கு மேல ஜொள்ள மாட்டேன்ன்ன்:))

      நீக்கு
    3. ஹா ஹா ஹா இல்லை கெள அண்ணன்.. அவர் நம் சமயத்தவர்தான்.. விட்டிடலாம்.. பப்ளிக்கில் எதுக்கு.. ஏனெனில் பலருக்கு நம்பிக்கை உண்டு, ஆனால் பலர் திட்டுவினம் அதனால நான் அடக்கி வாசிக்கிறேன் ஹா ஹா ஹா:))

      நீக்கு
  32. நெல்லைத்தமிழன், வல்லிம்மா, கீசாக்காவின் கேள்விகளையும் அதற்கான பதில்களையும்,
    சிலதை ரசிச்சேன்,
    சிலதை கவனத்தில் கொள்கிறேன் ---மனதில போட்டு வைக்கிறேன்.

    அனைத்தையும் பாராட்டுகிறேன், நேரம் போதவில்லை.. இப்போதைக்கு ஓடிவிடுகிறேன்...

    பதிலளிநீக்கு
  33. நல்ல கேள்விகள். பதில்களும் அப்படியே.

    கோயிலுக்குச் செல்வது என்பது அது ஆனந்தமே.

    பக்தி ஆன்மீகம் இரண்டும் இயைந்து இருந்தால் நல்லது என்றாலும் ஆன்மீகம் எனும் போது மனம் முதிர்ந்த பக்குவ நிலைக்குச் செல்ல உதவும்.

    தொற்று பற்றிச் சொல்ல வேண்டும் என்றால் மக்களிடம் இன்னும் சரியான விழிப்புணர்வு இல்லை என்றே தோன்றுகிறது. பலரும், அடுத்த வீட்டில் உள்ளவருக்கு வரும் வரை, இது நமக்கு வராது என்ற நிலையில் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். வந்தாலும் கூட சுற்றுவோரும் உளர். இவர்கள் மற்றவர்களுக்குப் பரப்புகிறோமே என்ற பொறுப்புணர்வு இல்லாமல் இருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  34. நல்ல கேள்வி பதில்கள் அதற்கான ஊட்டங்கள்.

    பதிலளிநீக்கு
  35. நான் பேசி நீங்கள் கேட்டு என்ன பயன்...?

    ஏகாந்தன் ! ஐயா... மேலே உள்ளது இணைப்பு...! 2014 ஆண்டு எழுதிய அந்தப் பதிவிலே இணைப்பை கொடுத்துள்ளேன்...!! (இன்னுமொரு இணைப்பும் அந்தப்பதிவில் உண்டு...!!!)

    நண்பர் திருமிகு சீனிவாசன் அவர்கள், ஒரு சேவையாகவே இதை செய்கிறார்... அதனால் குறிப்பிட்ட சில பதிவுகளை தொகுத்து அனுப்பி விட்டால், மின்னூலாக நமக்கு கிடைக்கும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விபரம், இணைப்புக்கு நன்றி.
      மேலே உங்கள் இணைப்பையும் போய்ப் பார்த்தேன். இன்னொன்றையும் திறந்து கண்டுகொண்டேன்! திரு. சீனிவாசன் பாராட்டுக்குரிய நண்பர். தமிழ்ச்சேவை தேவை இத்தகைய காலகட்டத்தில்.

      நீக்கு
  36. மனிதன் எனும் பெரு மிருகம் கொரோனா காலம் எனப்படும் ஆபத்தான சூழலில் கூட அடங்கி நடக்க விரும்புவதில்லை...

    பல நாட்களுக்குப் பிறகு திறக்கப்பட்டிருக்கும் வணிக வளாகங்களுக்குச் செல்லும் வேளையில் கூட ஒருவரை ஒருவர் உரசிக் கொண்டும் இடித்துக் கொண்டும் சமூக இடைவெளியைப் பேணாமல்...

    என்ன ஜென்மங்கள் இவை...

    எகிப்தியர்களிடமும் பங்க்ளாதேஷிகளிடமும் நியாயங்களைப் பேசவே முடியாது...

    ஏன்... நம்ம ஆட்கள் மட்டும் உசத்தியா?...
    மட்டும் அல்ல.. மட்டம் தான்!...

    பதிலளிநீக்கு
  37. சரி ...
    பக்தி என்பது எது?..
    ஆன்மீகம் என்பது என்ன?...

    ஜீ பூம்பா..
    இவை அடுத்த வாரக் கேள்விகளாகட்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆன்மாவை அறிவது ஆன்மிகம். பக்தி என்பது அதற்கான நடைமேடை மட்டுமே! நான் இன்னமும் அந்த நடைமேடையை விட்டு மேலே ஏறவே/நகரவே ஆரம்பிக்கலை.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!