புதன், 8 ஏப்ரல், 2020

புதன் 200408: சுஜாதா நாவல்களில் எந்த நாவலில் வசந்த் என்ட்ரி?


  

பானுமதி வெங்கடேஸ்வரன் : 

சுஜாதா நாவல்களில் எந்த நாவலில் வசந்த் என்ட்ரி? ஆரம்ப காலங்களில் கணேஷ் மட்டும்தான்.


* வசந்த் முதலில் வந்தது ப்ரியா அல்லது காயத்ரி. 

& இந்தக் கேள்வியை, ஸ்ரீராம் சொன்ன யோசனைப்படி, எங்கள் அன்பு நண்பர், திரு Ganesh Bala அவர்களை, முகநூல் பெட்டி செய்தி மூலமாகக் கேட்டேன். 
அவர் கூறியது : 



(ஆக, கணேஷே சொல்லிட்டார். அப்புறம் ஏது அப்பீல்!) 


தன்னுடைய சிவந்த கைகள் என்னும் நாவலில் சுஜாதா, "பொய் சொல்ல அசோக்கின் இரண்டு விதிகள், பொய் சொல்லாதே, சொன்னால் அதை எப்படியாவது உண்மையாக்கி விடு" என்று எழுதியிரு்பார். எனக்கு பொய் சொல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் பொழுதெல்லாம் இதை செயல் படுத்துவேன். இப்படி உங்களுக்கு ஏதாவது உண்டா?

# எல்லாருக்கும் இருக்கும். 

& என்னுடைய மனைவியிடம், 'நீதான் உலகத்திலேயே அழகானவள்' என்று சொன்னேன். இதை எப்படி உண்மையாக்குவது? யாரேனும் சொல்லுங்கம்மா ! 

நெல்லைத்தமிழன் : 

1. ஒரு புத்தகத்தை (நாவல் அல்லது எதுவானாலும்) படிக்கும்போது உள்ள சந்தோஷம் அனுபவம் மின்னூல் படிக்கும்போது கிடைப்பதில்லையே? இது எனக்குமட்டும்தானா?

# புத்தகத்தைப் புரட்டும் சந்தோஷம் அலாதி.

& கனமான புத்தகங்களை, சுமந்துகொண்டே படிக்க வேண்டாம் என்ற சௌகரியத்தால், மின்னூல்கள் என்னுடைய தேர்வு. மேலும் புத்தகங்கள் ஓ சி கிடைப்பது கஷ்டம். மின்னூல்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் சொடுக்குப் போட்டுப் பிடித்துவிடலாம். 


2. தேன் குரல் அப்படீங்கறாங்களே. அப்படீன்னா என்ன? 

#  இனியது, வேறென்ன ?

& அதை விட எனக்குப் பிடித்த தேன்கு_ல் இதுதான் : 






3. இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே - காதுல தேன் விட்டுக்கிட்டா இன்பமாவா இருக்கும்?

# கவிதையை இப்படியெல்லாம் டிஸெக்ட் செய்யலாகாது. போண்டா அற்புதமாக இருக்கிறது என்றால் அது என்ன தாஜ்மஹாலா என்று கேட்க முடியுமா? 

& இவரு அதைத்தான் செய்துகொண்டார் போலிருக்கு. 




4 நம் நிலத்துக்கு அந்நியமான உணவைச் சாப்பிடுவது நல்லதா? உலகமே கைக்குள் அடக்கமாகிவிட்டதால் சீசனல் உணவு,பழம், அந்த அந்த பகுதிக்கு உரித்தான உணவுப் பழக்கம் மறைவது உடல் ஆரோக்கியத்தில் என்னவிதமான பாதிப்பை ஏற்படுத்தும்?

# உருளை தக்காளி வெங்காயம் கேரட் எல்லாமே நம் நிலத்துக்கு அன்னியமாகத்தான் இருந்தன. 
வசுதைவ குடும்பகம் &  யாதுமூரே யாவருங்கேளிர் என்ற மகாவாக்கியங்களை மதிப்பதானால் அசலாவது அந்நியமாவது. ஜிஹ்வா அரக்கனுக்கு அனைத்தும் நைவேத்தியம் தான்.

$ நம் நிலத்துக்கு அந்நியமான உணவுகள் பழங்கள் எல்லாம் பல வகையில் ஏமாற்றம் அளிப்பவை.  உதாரணம்..dragon fruit 
ஆரோக்யம் மாற்றம் பற்றி அறிய நாம் கல்கி வரும் வரை காத்திருக்க நேரிடலாம்.

ஏஞ்சல்   : 

1, மீண்டும் பள்ளி பருவம் செல்ல நேரிட்டால்     :) உங்கள் விருப்ப விளையாட்டு எதுவாயிருக்கும் ?     கோலி ,கில்லி ,பம்பரம் ?

# பள்ளி நாட்களில் நான் எந்த விளையாட்டிலும் ஆர்வமோ திறனோ இல்லாத சோனிப் பிச்சு. நெக்ட் கொஸ்சன் ப்ளீஸ்..

& கோலி, பம்பரம், கிட்டிப்புள். 

2, சிலரை புரிந்துகொள்ள முடியாம இருக்கே ஏன் ? இல்லை அவர்கள் அதற்கெல்லாம் அப்பாற்பட்டவர்களா ?

 # நம் புரிதல் திறனில் குறைபாடு. 

& வர வர கமல் பற்றிய கேள்விகள் அதிகமாகிக்கிட்டே போகுது! 


3, ஐம்புலன்களில் மிக சிறந்ததும் அவசியமானதும் இன்றியமையாத புலன் எது ?

# கண், அடுத்தபடியாக காது, அதன்பின் பேச்சுக்கான நாக்கு. (தின்னும் வாயும் மூச்சுக்கான மூக்கும் உயிருள்ளவரை இயங்கும் என்பதால்)


4, வாழ்க்கை  ..இதனை ஒரே வார்த்தையில் அனைவருக்கும் புரியறமாதிரி கூறவும் ?     உதாரணம் எனக்கு வாழ்க்கைன்னா இறைவன் .

 # ரசனை.

& வாழ். 

5, பணம்,  அந்தஸ்து  , மகிழ்ச்சி இதையெல்லாம் அளவிடக்கூடிய ஒரு சாதனம் கிடைச்சா அதை பயன்படுத்துவீங்களா ?   

# சாதனம் இருக்கிறது. பயன்படுகிறது.

& என்ன பிராண்ட்? என்ன விலை? 

6, மனசுக்குள்  பேசிக்கொண்ட அனுபவம் இருக்கா ?ஒரு நாளைக்கு எத்தனை முறை மனசுக்குள் பேசியிருக்கீங்க ?

# நிறைய இருக்கிறது. தினசரி நூற்றுக் கணக்கில். 

& இருக்கலாம். மறந்து போச்சு. 

7, நிறங்கள்...  கோபம் உற்சாகம் சோகம் போன்ற உணர்வுகளை தூண்டுபவையா ?

# அப்படித்தான் சொல்கிறார்கள். 

& இந்தப் படத்தைப் பாருங்கள் : 



இதுல பல நிறங்களை ஒப்புக்கொள்ளலாம். ஆனால், போஸ்ட் ஆபீஸ், போஸ்ட் பாக்ஸ், போலீஸ் ஸ்டேஷன் என்று 'போ' எல்லாவற்றுக்கும் சிவப்பு நிறம் ஏன்? ஆஸ்பத்திரிகளுக்கு பச்சை நிறம் ஏன்? படத்துல பார்த்தா அந்த நிறங்கள் அவற்றுக்குப் பொருந்துமா என்ற ஐயம் எழுகிறது. 

8, சமீபகாலமா கவலையில் ஆழ்த்தும் ஒரு விஷயம் எது ?

# சவாலாக இருக்கும் வைரஸ்தான் - வேறென்ன ?

9, ஆரம்பிக்கும்போது மோசமா ஆரம்பிச்சி ஆனா எண்ட் ப்ராடக்ட் சூப்பர்பா வந்த உணவு பதார்த்தம் எது உங்கள் நளபாகத்தில் ?

 # அம்பேல்.

& ஆரம்பிக்கும்போது சுப்பர்பா ஆரம்பிச்சி, ஆனா எண்டு பிராடக்ட் மோசமா வந்த உணவு பதார்த்தங்கள்தான் அதிகம். சென்ற வருடம் ஜவ்வரிசி வடாம் செய்யலாம் என்று அமர்க்களமாக ஆரம்பித்தேன். ஜவ்வரிசி, உப்பு, எலுமிச்சம்பழம், பச்சைமிளகாய் - பார்த்துப் பார்த்து வாங்கினேன். எண்டு பிராடக்ட் : வடாத்தில் முழி முழி என்று முழித்துக்கொண்டிருக்கும் முரட்டு ஜவ்வரிசிகள், அதிக உப்புப் போட்டு, காயவைத்த நேரத்தில் பெய்த மழை எல்லாம் சேர்ந்து என்னைப் பழிவாங்கிவிட்டன. இப்போ அதை எல்லாம் தோட்டத்தில் மேய வருகின்ற பூனைகளை விரட்ட பயன்படுத்தி வருகிறேன். 

10, சரியெனப்படும் தவறு எது ? அதாவது அது தப்புதான் ஆனாலும் பரவாயில்லை சரின்னு நீங்க நினைப்பது எதை ?

 # தீதில்லாப் பொய்கள்.

& சிறு சிறு சமாச்சாரங்களை (உதாரணம் : பரங்கி விதை பருப்புகள், சூரியகாந்தி பூ விதைகள், சாக்கலேட் போன்றவற்றை) அடிக்கடி சாப்பிடுவது. 




11, வீட்டம்மாவுக்கு பிடிச்ச பொருளை தெரியாமல்  உடைச்சி அதை ஒளித்திருக்கிறீர்களா ?

# இல்லை. 

& வீட்டம்மாவுக்குப் பிடிச்ச பொருளே நான்தாங்க! 

12, பல திரைப்படங்களை பார்த்திருப்பீர்கள் அதில் இந்த முடிவு தேவையா என்று பதறிய திரைப்படம் எது ?     எனது பதில் 1,பருத்திவீரன் ,2, 7g  ரெயின்போ காலனி 

 # அம்பேல் 2.

& வியட்நாம் வீடு, நாயகன். 


13, மாந்த்ரீகம் ,பில்லி சூனியம் இவையெல்லாம் நிஜம்மாவே இருக்கா ? அல்லது கட்டுக்கதைகளா ?

# நம்பவைக்குமளவுக்கு பிரமிப்பூட்டும் (கட்டுக்)கதைகள் நிறைய இருக்கின்றன. 

& நிஜமாவே இருக்கு என்று நினைக்கும்படி  சில நிகழ்வுகளைப் பார்த்திருக்கிறேன். 


14, அந்த காலத்தில் நாங்க .. என்ற வசனம் பெரும்பாலும் கேட்கும்போது என்ன தோணும் ? 

# பேசுவதே நானாகையால் ரொம்பப் பொருள் பொதிந்ததாகத் தோன்றும்.

& இன்னும் இவர்கள் பழங்காலத்திலேயே வசித்துக்கொண்டிருக்கிறார்களே என்ற பரிதாபம் தோன்றும். நான் இந்த வசனத்தை இதுவரை யாரிடமும் சீரியசாக சொன்னதில்லை. விளையாட்டாக சொல்லியிருக்கலாம்! 

15,உங்களை அதிகமா எரிச்சலூட்டும் ஒலி எது ?
     எனக்கு செருப்பை வறட்டு வறட்டுன்னு தேச்சி நடந்தா    பயங்கர கோபம் வரும். 

# இரைச்சல் அளவில் சினிமா சங்கீதம்.

& உணவை சத்தமாக மெல்லும் ஒலி. 
 

16, ஒரு முகம் ,இருமுகம் என தங்கள் திருமுகத்தை அகத்தின் அழுக்கை வெளிப்படுத்தும் பன்முக மக்களை கண்டா கோபம் வருதே என்ன செய்வது  ?
அவர்களை பார்க்காமல் இருக்கலாம் தவிர்க்கலாம் என்ற பதில்களை கூற தடை :) 

 # நமது ஒரு இரு பல முகங்களைப் புரிந்து கொண்டால் சரியாகிவிடும்.

 $ நாம் எப்படி என்றும் நினைத்துப் பார்க்கலாமே!
என் கோபப் படவேண்டும்?

& அறிமுகம் ஆகாதவர்கள் என்றால் கவலை இல்லை. அறிமுகம் ஆனவர்கள் பன்முகம் காட்டினால், அதில் நமக்குப் பிடித்த நன்முகத்தை மட்டும் ரசிக்கலாம். எந்த முகமும் பிடிக்கவில்லை என்றால், முக கவசம் அணிந்து ஓடிடலாம். 

17, ஒரு நோய்  அல்லது எதோ ஒரு சமூக சூழலை அமைதியை பாதிக்கும் விஷயம் ஹை பீக்கில் இருக்கும்போது எல்லாரும் அதையே பற்றி பேசுவது பகிர்வது மன நலத்துக்கு கேடு விளைவிக்காதா ?

# ஓரளவு டிப்ரெஷன் ஏற்படும் எனினும், பேசாமல் மனதுக்குள் அடைத்து வைப்பது அதனினும் கேடாகலாம்.

$ பேசுவதில் தவறில்லை. தன் குற்றம் நீக்கிப் பிறர் தவறு பற்றிப் பேசுவதை தவிர்த்தல் நலம். Overdose என்றால் நகர்ந்து விடலாம்.

& ஆம். உண்மைதான். ஏதேனும் ஒரு டைவர்சன் ஏற்படுத்திக்கொண்டால் நல்லது. 

18, பெரியவங்க சின்னவங்களுக்கு முன்னோடியா ?? அதாவது நல்ல விஷயங்கள் நல்ல செயல்கள் பேச்சு செயல் எல்லாவற்றிலும் முன்னுதாரணமா இருக்கணும் என்பதை ஆதரிக்கின்றீர்களா ? 

# நிச்சயமாக. இளம் வயதினர் பார்த்தும் கேட்டும் கற்பது ஏராளம்.
                   
 $ பெரியவர்கள் முன்னோடியாக இருத்தல் நல்லது.  சிறியவர்கள் தாமாகவே செய்யும் நற்செயல்கள் பெரிய அளவில் பாராட்ட ப் படவேண்டும். (சி நா தா நா பீலாவைப் பாராட்டுவது போலவா என்கிறார்  பின்னிருந்து எட்டிப் பார்க்கும் நண்பர்.) 

19, இருகோடுகள் சௌக்கார் பாட்டி முதல் சிங்கப்பெண் :) BEELA ராஜேஷ் வரை நான் அவதானித்தது ஜப்பானிய ஹை நெக் ப்ளவுஸ் ஸ்டைல் :) இது எதேச்சையா அமைந்ததா அல்லது சிவில் சர்வீஸ் க்கு ஒரு ட்ரெஸ் கோட் இருக்கா ?

# தெரியவில்லை. 

& நீங்க சொன்ன அப்புறம்தான் எனக்கும் இந்த பாயிண்ட் மனசில் படுகிறது. ஆனால், அவர்களை அப்படிப் பார்க்கும்போது மனசுல அவங்க மேல் ஒரு மரியாதை ஏற்படுகிறது. 

20, fortune குக்கீஸ் அளிக்கப்பட்டா அதைப்பிரித்து சாப்பிடும்முன்  உள்ளே என்ன quote இருக்கு என்றும் எடை மெஷினில் விழும் அட்டையில் என்ன வாசகம் இருக்கு என்றும் பார்ப்பதில் ஆர்வம் காட்டுவோர் எவ்வகை ??

# இயல்பான ஆவலுணர்வு கொண்டவர். 

$ curiosity இல்லாதவரைக் காணல் அரிது.

& இப்படி எல்லாம் ஆர்வம் காட்டாதவர்களைத்தான், இவர்கள் எந்த வகை என்று வியந்து நோக்கத் தோன்றும். வாக்குச் சாவடியில் வெயிலில் கஷ்டப்பட்டு, கியூவுல நின்று, உள்ளே போய் NOTA வுக்கு வாக்கு அளிப்பவர்களைப் போல! 

21, இந்த டல்கோனா காஃபி எப்பிடி சார் இருக்கும் ?? தன்னை ஸ்வீட் 16 என்று அடிக்கடி சொல்லிக்கொள்ளும் பதிவுலக பட்டப்பெயர் தொடரி  இதை பற்றி இன்ஸ்டாக்ராமில் போட்டோவா போட்டு தள்ளுகிறார்         ஆகவே டல்கோனா பற்றி என்னைப்போல் அறியாக்குழந்தைகளுக்கு விளக்கப்படுத்தவும்        ??

 # செய்து பார்க்கலாம் அல்லது பார்த்தவர் சொல்லக் கேட்கலாம்.

 $ அப்படீன்னா?

& டல்கோனா செய்முறை - என்ன சொல்கிறார்கள் என்றால், சம அளவு இன்ஸ்டன்ட் காபி பவுடர், சர்க்கரை, தண்ணீர் (1:1:1) கலந்து, நுரை/creamy ஆக வரும் வரை whipping செய்யவும். பிறகு இந்தக் கலவையை குளிர்ந்த அல்லது சூடான பாலில் கலந்து குடிக்கவும். அவ்வளவுதான். 

நான் அந்தக் காலத்தில் (பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன்பு) செய்த Dalgona கிட்டத்தட்ட இந்த வகையில்தான். வேண்டிய அளவு இன்ஸ்டன்ட் காபிப் பவுடர், சர்க்கரை, பால் பவுடர் சேர்த்துக் கலதுகொள்வேன். அஹிம்ஸாவாதி என்பதால் whipping எல்லாம் செய்யமாட்டேன். அப்புறம் இந்தக் கலவையில் கொதிக்கும் நீர் அளவாக ஊற்றி, அதை ஆற்றிக் குடித்துவிடுவேன். இன்ஸ்டன்ட் காபி:  நெஸ்கஃபே கிளாசிக் அல்லது நரசுஸ் கிரீன் பாக்கெட். டேஸ்ட் சூப்பரா இருக்கும். 


கீதா ரெங்கன் : 

எனக்கு மண்டையில் ஓடிக் கொண்டிருக்கும் ஒன்னு இங்கு கேள்வியாக.

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் போது என்னாகப் போகுதோன்னு மனசுல ஒரு கவலை இருந்துகிட்டே இருக்கு. கொரோனா இன்னும் அடங்காத நிலையில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டால் எல்லா மக்களும் முண்டியடித்து தியேட்டர் கடைகள், மால், ரயில் பேருந்துனு அதே பழைய கூட்டம் சேருமே..அதுவும் முண்டியடித்துதானே நம் பழக்கம்...அப்போ என்னாகும்? அதுவும் அப்பாவி ஜனங்கள் அவர்கள் வியாபரத்தையும், தொழிலையும் பார்க்க வேண்டுமே அவர்களின் நிலை.?

& பயமே வேண்டாம். படிப்படியாகத்தான் விலக்கிக் கொள்ளப்படும். சில பகுதிகள் மட்டும் கண்காணிப்புப் பகுதியாக அறிவிக்கப்படலாம். ஆனால், முண்டியடிப்பது எல்லாம் நிச்சயம் நிகழாது என்று நினைக்கிறேன். 

============================================

210 கருத்துகள்:

  1. இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்..

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதை எத்தனை பேர் செய்வாங்க? ஒரு 2% செய்தாலே ஆச்சர்யம். ஒருத்தன் கெடுதல் செஞ்சா உடனே நீதிபதியாக மாறி அவனுக்கு தண்டனை கொடுப்பவர்கள்தான் அனேகம். மிச்சம் மக்கள் தண்டனை கொடுக்கும் நிலையில் இல்லாதவர்களாக இருக்கும் (ஆபீஸ் பாஸ் செய்யும் அநியாயத்தைப் பொறுத்துக்கொண்டு பிள்ளப்பூச்சியா இருக்கும் மனைவியிடம் வீரத்தைக் காண்பிக்காத முந்தைய ஜெனரேஷன் ஆட்களும் அபூர்வம்

      நீக்கு
    2. திருவள்ளுவர் சொன்னது, நமக்கு இன்னா செய்தாரை நாம் மன்னித்தல் - நம் மக்கள் புரிந்துகொண்டது - மற்றவர்களுக்கு இன்னா செய்தாரை நாம் மன்னித்தல் - இதுவே அவருக்கு இன்னா செய்தாரை என்று வந்தால் --- என்ன செய்வார்கள்?

      நீக்கு
    3. இன்னல் செய்தவர்கள் அதற்காக நாணும் தன்மை உடையவர்களாக இருப்பார்களே ஆனால் அவர்களுக்கே நன்னயம் செய்து அப்படி செய்த எண்ணத்தையும் மனதில் இருந்து விட்டு விடுதல் ...

      என்று புலவர் கீரன் அவர்களது இலக்கிய விரிவுரையில் கேட்டிருக்கிறேன்...

      நீக்கு
    4. சூப்பர் விளக்கம். நன்றி.

      நீக்கு
    5. அதானே...

      இன்னும் பெரும்பாலான மக்களுக்கு நாணம் இருப்பதால் தான்
      நாடு நாடாக இருக்கிறது....

      நீக்கு
  2. ஜவ்வரிசிகள், அதிக உப்புப் போட்டு, காயவைத்த நேரத்தில் பெய்த மழை எல்லாம் சேர்ந்து என்னைப் பழிவாங்கிவிட்டன. இப்போ அதை எல்லாம் தோட்டத்தில் மேய வருகின்ற பூனைகளை விரட்ட பயன்படுத்தி வருகிறேன். HAHHAHHHAAA.
    Good Morning Friends. Wishing everyone a happy day.

    பதிலளிநீக்கு
  3. அனைத்துக் கேள்விகளும் சுவாரஸ்யம்.
    அனைத்துப் பதில்களும் சூப்பர்.

    அன்பு துரை, அன்பு ஸ்ரீராம் மற்றும் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    அதிராவின் காப்பியை எங்கள்ப்ளாக் தயாரித்தது இனிமை.

    வெளியே மழை வலுக்கிறது.என் வளையைப் பார்த்துப் போகிறேன்.
    பிழைத்துக் கிடந்து கண்ல கண்டு பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவலை வேண்டாம். எல்லாம் நல்லபடி நடக்கும்.

      நீக்கு
    2. வல்லிம்மா ..புளிப்பொங்கல் ரெசிப்பி உங்க பக்கம் தேடி போனேன் காணோமே ?

      நீக்கு
  4. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக இருக்கவும் இறைவனை மனதாற பிரார்த்தித்து கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. அனைவருக்கும் நல்வரவும், வாழ்த்துகளும், பிரார்த்தனைகளும். கொரோனா தொற்றிலிருந்து விரைவில் விடுபடச் சிறப்புப் பிரார்த்தனைகள். நாளை மாலை ஆறு மணிக்குப் பரமாசாரியாரின் படத்துக்கு முன்னால் விளக்குகள் ஏற்றிப் பிரார்த்திக்கும்படிக் காஞ்சி மடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது. விருப்பம் உள்ளவர்கள் செய்யலாம்.

    பதிலளிநீக்கு
  6. கேள்விகள், பதில்கள் அனைத்தும் சுவாரசியம். ஸ்ரீராம் ஒரே பதில் மட்டும் (சுஜாதா பற்றிய கேள்வி) கொடுத்துவிட்டு அமைதியாகி விட்டாரே! ஏஞ்சல் சளைக்காமல் கேள்விமாரி பொழிகிறார். பள்ளியில் படிக்கையில் இவங்க வகுப்பு ஆசிரியர் நிலையை நினைச்சால் பாவமா இருக்கு! :)))))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ! ஆனால் அவங்க படிக்கிற காலத்துல ரொம்ப சுட்டியா இருந்ததால, பாடத்துல டவுட்டே வந்ததில்லையாம்!

      நீக்கு
    2. ஹாஹாஹா :) ஸ்கூல் நாளிலும் நிறைய கேள்வி கேப்பேன் ஆனா கேக்க ஆரம்பிக்குமுன்னேயே பிற ஸ்டூடண்ட்ஸ் என்னை மிரட்டி வைப்பாங்க அதனால் பயந்துட்டு விட்ருவேன் :) 

      நீக்கு
  7. ஜவ்வரிசி வடாம் மட்டும் கொஞ்சம் அதிக நாட்கள் காயவேண்டும். முழித்துப் பார்த்தாலும் நன்றாகக் காய்ந்து விட்டால் நன்றாகப் பொரியும். நீங்க போட்டதிலே எங்கே தப்புனு புரியலை. பார்த்தால் சொல்லலாம். ;)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜவ்வரிசியை ஊற வைத்து, கொதிக்க வைக்காமல் விட்டதால் இருக்கலாம்.

      நீக்கு
    2. My MIL used to put javvarisi directly without soakin or cooking the javvarisi. It is also one type of making vadam.

      நீக்கு
    3. இது எப்படி சாத்தியம் என்று தெரியவில்லை!

      நீக்கு
    4. ஒருவேளை தொழில் ரகசியம் மருமகளுக்குத் தெரியக்கூடாதுன்னு இரவில் தெரியாமல் ஊறப்போடுவாங்களா இருக்கும்னு உங்களுக்குத் தோணலையா?

      நீக்கு
    5. ஓ ! அப்படி ஒன்று இருக்கிறதோ! நாராயண, நாராயண!

      நீக்கு
    6. ஜவ்வரிசிக்குத் தேவையான வெந்நீரைக் கொதிக்க வைப்பார்கள். பச்சைமிளகாய்+உப்பு+பெருங்காயம் சேர்த்து அரைத்து வடிகட்டித் தயாராக இருக்கும். கொதிக்கும் வெந்நீரில் சுத்தம் செய்த ஜவ்வரிசியை அப்படியே கொட்டுவார்கள். நாங்க யாரானும் அதைக் கிளறிக் கொடுப்போம். குறிப்பிட்ட நேரம் வரை அது கொதித்து ஜவ்வரிசி நிறம் மாறியதும் வெந்துவிட்டது எனக் கீழே இறக்கி ஆறியதும் உப்புக்காரத்தோடு எலுமிச்சையும் பிழிந்து பின்னர் மொட்டை மாடியில் ப்ளாஸ்டிக்(அப்போல்லாம் வெள்ளை வேட்டி தான். நனைத்துப் போடுவோம்.) கரண்டியால் எடுத்து ஊற்ற வேண்டியது தான். சிலர் எலுமிச்சை சேர்க்காமல் மோர் அல்லது தயிரும் சேர்ப்பார்கள்.

      நீக்கு
    7. சுவையான செய்முறைக்கு நன்றி.

      நீக்கு
  8. உங்கள் வீட்டுத் தோட்டத்தில் மேய்வதற்குப் பூனைகளா வருகின்றன? அது சரி, அவை ஜவ்வரிசி வடாத்தைக் கண்டால் பயப்படுகின்றனவா? பரவாயில்லையே, நல்ல முறைதான் இது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜவ்வரிசி வடாம் என்று எனக்குத்தான் தெரியும். அவைகளுக்கு அது UFO. Unidentified Flying Object!

      நீக்கு
    2. ஹாஹாஹா! ஏஞ்சல் இதைப் பார்க்கலை போலும்! :)))) அப்பாடா! நிம்மதியா ஆச்சு இப்போத் தான்!

      நீக்கு
    3. ஹாஹாஹா :) கீதாக்கா நீங்க கூப்பிட்டது  காதில் விழுந்துச்சு :) ஓடி வந்துட்டேன் :)

      நீக்கு
    4. @கௌதமன் சார் :) அநேகமா நீங்க இருக்கும் குடியிருப்பு வளாகத்தில் உங்களுக்கு முன்னாடி இப்போ வருகைதரும் பூனைகளின் முன்னோர்கள் வசித்திருப்பாங்க அதான் இருப்பிடம் தேடி வராங்க 

      நீக்கு
    5. கீதாக்கா இந்த ufo வெப்பன்காரரரை கூட விட்டுடுவேன் ஆனா அந்த ஸ்பிரிட் பாட்டில் எடுத்தவரை மட்டும் எப்படியாச்சும் பிடிச்சு கொடுத்திடுங்க :) அவர்தான் இப்போதைக்கு என் target :)

      நீக்கு
    6. இவரையும் விடாதீங்க! :))))

      நீக்கு
  9. வணக்கம் சகோதரரே

    இன்றைய சரமாரியான கேள்விகளும் பதில்களும் எப்போதும் போல் அருமை.
    வசந்த் வருகை பற்றி அறிந்து கொண்டேன். கேள்வியின் நாயகி சகோதரி ஏஞசலுக்கு பாராட்டுகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  10. காலை வணக்கம். நிறைய ஏள்விகள். பதில்கள் சுவாரசியம்.

    எரிச்சலூட்டும் ஒலி - அட... செருப்பைத் தேய்த்து நடப்பது, அருகில் இருந்துகொண்டு கரமுர கரமுர என மெல்வது .... என்னைப்போல் பலருக்கும் எரிச்சலூட்டுமா?

    ஆனா, பொது இடத்தில் மொபைலில் பாட்டு, சீரியல், வாட்சப் காணொளி, கேட்டொலி போட்டு அடுத்தவர் கழுத்தை அறுப்பது எப்படி உங்கள் நினைவுக்கு வராமல் போனது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுதான் அடுத்தது. தலைவலியோடு பகல் வேளையில் மின்வண்டியில் பயணிக்கும்போது பெரிய இரைச்சலோடு பேசுபவர்கள், பாடல் கேட்பவர்கள்.

      நீக்கு
  11. பணம், அந்தஸ்து மகிழ்ச்சி - பதில் தெளிவாக இல்லை

    நிலத்துக்கு அந்நிய உணவு - இதற்கும் நீண்ட அலசல் வேணும்னு நினைக்கிறேன். நம் உடலின் சம நிலையை வெகுவாக மாற்றும் வல்லமை அதற்கு உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க கட்டுரை எழுதினால் வெளியிட நாங்கள் தயார்.

      நீக்கு
  12. இனியகாலை வணக்கம் கௌ அண்ணா ஸ்ரீராம் மற்றும் எல்லோருக்கும்

    காலைல ஓப்பன் செஞ்சதுமே தேன் குழல் கொடுத்து வரவேற்ற கௌ அண்ணா வாழ்க!! நன்றி ஹா ஹா ஹா ஹா

    தேன் குழல் ஆஹா அதுதான் முதல்ல கண்ணைக் கவர்ந்தது. மிகவும் பிடிக்கும் அரிசிமாவில்
    செய்யப்படுவது...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்! எங்கள் அம்மா செய்யும் தீபாவளி பட்சணங்களில் எனக்கு மிகவும் பிடித்தவை : தேங்காய் பர்பி, தேன்குழல்.

      நீக்கு
    2. //எங்கள் அம்மா செய்யும் தீபாவளி பட்சணங்களில் எனக்கு மிகவும் பிடித்தவை : தேங்காய் பர்பி, தேன்குழல்.// அம்மா சமைத்துப் போட்டதை விட அதிக காலங்கள் மனைவி சமைத்துப் போட்டாலும், ஆண்களுக்கு பட்சணங்கள்,அல்லது பிடித்த உணவு என்றால் அம்மாவின் நினைவு வருவதற்கு காரணம் என்னவாக இருக்கும்?(இதற்கு எந்த சாயமும் பூசாமல் உளவியல் காரணம் கூற வேண்டுகிறேன்)

      நீக்கு
    3. சொல்லிடறேன் --- என்னைத் துரத்தாதீங்க ! என் மனைவி கோதுமை அல்வா, வெஜிடபிள் பிரியாணி, அவியல் செய்வதில் எக்ஸ்பர்ட். ஆனால், தேங்காய் பர்பியை இனிப்புப் பாயாசமாகவும், தேன்குழலை பழுப்பு நிற பல்லுடைக்கும் வஸ்துவாகவும் செய்வார்கள்.

      நீக்கு
    4. /அம்மாவின் நினைவு வருவதற்கு காரணம் என்னவாக இருக்கும்?// - பசங்க அப்போ சாப்பிடும் வயசு. அம்மாவோ, பசங்க என்ன கேட்டாலும் செய்துபோடத் தயாரா இருப்பார். அந்த இன்னொசன்ஸிலிருந்து வரும் விருப்பம், அன்பினால் நிறைவேற்றப்படுவதால்தான் மனதில் அது நின்று அம்மா நினைப்பைத் தருது.

      நம்ம எல்லாருக்கும், 'சின்ன வயசுல வாழ்க்கை நன்றாகவும் சந்தோஷமாகவும் சென்றது'' என்று தோன்றும் உளவியல் காரணம்தான் இதுக்கும்.

      இந்தப் பெண்கள் எல்லாரும் இந்த விஷயத்துல வரிந்துகட்டிக்கொண்டு வர்றாங்க.

      தன் பையன் 'என்னம்மா இது..நல்லாவே இல்லை. முன்னால பண்ணுவியே அது கொஞ்சம் சாஃப்டா ப்ரவுனா வருமே' என்று சொன்னால், 'அப்படியாடா... சரி அடுத்த தடவை அதே போல செய்யறேன்' என்று சொல்வாங்க. இதே வார்த்தையை கணவன் சொன்னால், 'போதுமே.. எதைப் பண்ணினாலும் அதுல ஏதேனும் குறை கண்டுபிடிக்கறதே உங்களுக்கு வழக்கமாப் போச்சு.. வயசாகுதே தவிர, நாக்கு மட்டும் முழ நீளம்' என்று ஏன் (பெரும்பாலானவர்கள்) சொல்றாங்க (அல்லது அனேகமா மனசுல நினைச்சுக்கறாங்க?) - இது புதன் கேள்விதான்..ஹா ஹா

      நீக்கு
    5. ///ஹாஹாஹா :) ஸ்கூல் நாளிலும் நிறைய கேள்வி கேப்பேன் ஆனா கேக்க ஆரம்பிக்குமுன்னேயே பிற ஸ்டூடண்ட்ஸ் என்னை மிரட்டி வைப்பாங்க அதனால் பயந்துட்டு விட்ருவேன் :) ///


      garrrrrrrrrrrrrrr 321258989-08761214svkjew5bbn rok, 32k

      நீக்கு
  13. //இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே - காதுல தேன் விட்டுக்கிட்டா இன்பமாவா இருக்கும் ?//


    காதுல எறும்பு மொய்க்குமே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. லட்டு னு குழந்தையைக் கூப்பிடறதால கடிச்சு சாப்பிட்டுருவாங்களா இல்லை பட்டாணின்னு கூப்பிடறதால குருமா செய்யும்போது தேடுவாங்களா? இதெல்லாம் அனுபவிக்கணுமே தவிர ஆராயக்கூடாது என்று பதில் சொல்லுவாங்கன்னு நினைத்தேன். ஹா ஹா

      நீக்கு
    2. நீங்களே கேள்வியை கேட்டு, நீங்களே பதிலையும் சொல்கிரீர்கள். கேள்வியும் நானே, பதிலும் நானே என்று ஒரு புது பகுதி ஆரம்பிக்க யோசனை சொல்கிரீர்களோ?

      நீக்கு
    3. எங்க குட்டிக்குஞ்சுலுவை அவ அப்பா (பையர்) லட்டு என்றே கூப்பிடுவார். பிறந்த நாள் கேக்கில் கூடக் கீழே லட்டு என எழுதி இருப்பார்.

      நீக்கு
  14. கேள்விகள் எல்லாம் ஆ.........!.

    அதற்கான பதில்கள் எல்லாம் ஆ..........!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதற்கு விளக்கம் கேட்பீர்கள் என்று நினைத்திருந்தேன்..

      விளங்கிவிட்டதா!..

      நீக்கு
    2. இப்போதான் குழம்பிட்டேன். விளக்கம் சொல்லிடுங்க .....

      நீக்கு
    3. சுஜாதாவின் "ஆ" நாவல் நினைவில் வருதே!

      நீக்கு
  15. என்னுடைய மனைவியிடம், 'நீதான் உலகத்திலேயே அழகானவள்' என்று சொன்னேன். இதை எப்படி உண்மையாக்குவது? யாரேனும் சொல்லுங்கம்மா ! //

    ஹா ஹா ஹா ஹாஹ் ஆ

    மனைவி சொல்லியிருப்பார்!! ஆஹா மிக்க நன்றி beauty lies in the eyes of beholder என்று நிரூபித்தமைக்கும் உதாரணமாக இருப்பதற்கும்!!! நு..

    கீதா

    பதிலளிநீக்கு
  16. நெல்லையின் கேள்விக்கு...

    புத்தகம் வாசிப்பது அலாதிதான் கணினியில் வாசிப்பது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கு ஆனால் புத்தகம் வாங்க இயலாதவர்களுக்கு, பேண முடியாமல் போவதற்கு என்று எல்லாம் பார்க்கும் போது கணினி என் சாய்ஸ். அதுவும் கதைப் புத்தகங்கள் வாசிப்பதே கூடாது என்பவர்களுக்குத் தெரியாமல் வாசிக்கலாமே ஹா ஹா ஹா ஹா ஹா...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் கீதா, அனால் கண் சீக்கிரம் ட்ரை ஆகி விடுகிறது. தவிர புது புத்தக வாசனையை மிஸ் பண்ணவோம்.

      நீக்கு
  17. //இருகோடுகள் சௌக்கார் பாட்டி முதல் சிங்கப்பெண் :) BEELA ராஜேஷ் வரை நான் அவதானித்தது ஜப்பானிய ஹை நெக் ப்ளவுஸ் ஸ்டைல் :)// இந்த வகை ஹை நெக் ரவிக்கைகள் என்னுடைய கல்லூரி காலத்தில் ஃஃபேஷன்! ஆனால் இது எல்லோருக்கும் சூட் ஆகாது. மிகவும் ஒல்லியாக இருந்தலும் நன்றாக இருக்காது, குண்டாக இருந்தாலும் நன்றாக இருக்காது. இந்தி நடிகை ரேகாவிற்கு நன்றாக இருக்கும். நம் குழும சீனியர் சிடிசன்களுக்கு ஞாபகம் இருக்கலாம். அப்படித்தானே நெல்லை?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரே கல்லுல ரெண்டு மாங்கா அடிச்சுட்டீங்களே!

      நீக்கு
    2. //அப்படித்தானே நெல்லை?// - நான் பிறர் மனை நோக்காப் பேராண்மை உடையவன் என்பதால் எனக்கு இதில் கருத்து எதுவும் கிடையாது.

      "யான்நோக்கும் காலை நிலன்நோக்கும்" இல்லை... எப்போதுமே நிலம் நோக்கி அல்லது முகம் நோக்குவேன்.

      அது இருக்கட்டும். நம் பதிவர் உலகில், சிலர் தங்களை எப்போதும் 16 அல்லது குழந்தை என்று சொல்லி மற்றவர்கள் தங்களைவிட வயதானவர்கள் என்று சொல்லிக்கொள்வார்கள். சிலர், மற்றவர்களுக்கு வயதை ஏற்றிவிட்டு, அதன் மூலம் தாங்கள் சின்ன வயதுடையவர்கள் என்று காட்டிக்கொள்வார்கள். நீங்கள் எப்படிப்பட்டவர் என்று நினைக்கிறீர்கள்? (ஐயையோ..கேள்விக்குறி பா.வெ மேடத்தை நோக்கி.... கேஜிஜி சாருக்கு அல்ல)

      நீக்கு
    3. @ நெல்லைத்தமிழன்  //சிலர் தங்களை எப்போதும் 16 அல்லது குழந்தை என்று சொல்லி மற்றவர்கள் தங்களைவிட வயதானவர்கள் என்று சொல்லிக்கொள்வார்கள். //

      ஹ்ஹா எதுனாலும் தைரியமா சொல்லுங்க அந்த குழை சாதம் சொற்பொழிவுளாம் காட்டி உங்களை மிரட்டியதால் நீங்க பயப்படக்கூடாதது 

      நீக்கு
    4. @ஏஞ்சலின் - அப்படி அதிராவை மட்டும் சொல்வது தப்பல்லோ.. இப்போதான் ஒருத்தர், நீங்க எங்களுக்கு முந்தின ஜெனெரேஷன்னு சொன்னாங்க. அவங்களை எப்படி விட்டுவிடமுடியும்?

      நீக்கு
    5. ஹாஹ்ஹா :) இந்த பாயிண்ட்டும் சரிதான் :)

      நீக்கு
    6. சபாஷ் சரியான போட்டி ! நடக்கட்டும். அதிராவின் அதிரடி என்ட்ரி சீனுக்கு வெய்ட்டிங் !

      நீக்கு
    7. //நெல்லைத் தமிழன்8 ஏப்ரல், 2020 ’அன்று’ பிற்பகல் 1:49
      //அப்படித்தானே நெல்லை?// - நான் பிறர் மனை நோக்காப் பேராண்மை உடையவன் என்பதால் எனக்கு இதில் கருத்து எதுவும் கிடையாது.//

      பிறர் மனை என்றால் அடுத்தவர்களுடைய வீடாக்கும்:)) அப்போ இவர் அடுத்த வீட்டைப் பார்ப்பதே இல்லையோ:)) ஹா ஹா ஹா என்னை ஆரும் பேய்க்காட்ட முடியாது:))..

      ஆர் என்ன ஜொன்னாலும் என் சுவீட் 16 வயசு மாறிடுமோ?:)) அதெல்லாம் மாறாது.. வேணுமெண்டாம் ஒரே வழிதேன் இருக்கு:)).. நீங்களும் என் கட்சிக்கு வந்திடுங்கோ ஹா ஹா ஹா:))

      நீக்கு
  18. நம் நிலத்துக்கு அன்னியமானவை சாப்பிடக் கூடாது என்று சொல்லப்படுகிறதுதான் ஆனால் இது யதார்த்தத்தில் வருவது கடினம் தான். அப்படிப் பார்த்தால் மிளகாய், ஆங்கிலக் காய்கள் என்று சொல்லப்படுவது எல்லாம் பயன்படுத்தக் கூடாதே.

    திவசங்களில் நாட்டுக் காய்கள் மட்டும் தான் பயன்படுத்தப்படுகிறது என்பதற்கு காரணம் அக்காலத்தில் இந்த ஆங்கில காய்கள் இல்லாததால் நம்மூரில் விளைந்தவற்றைப் பயன்படுத்தி அப்படியே அதுவழக்கமாகியது அதுவும் பல திவசங்களில் மிள்காய் பயன்படுத்த மாட்டார்கள். மிளகுதான் ஸோ அப்படியாக இருக்கலாம் என்று எனக்குத் தோன்றும்.

    ஒரு மாமா கூடச் சொல்லிய நினைவு அப்போதெல்லாம் இது போன்ற காரியங்கள் வீட்டில் செய்ய மாட்டார்களாம். ஆற்றங்கரை ஓரமாக குளத்தங்கரை ஓரமாகத்தான் செய்வார்களாம்.

    அப்போ அங்கு தோட்டத்தில் கிடைப்பவற்றைச் சமைத்து சாப்பிட்டிருப்பார்கள் என்றும் தோன்றியதால் ...சேம்பு, வாழை, அவரை, புடலை, பலா, மா, இல்லையா என்றும் மாமாவிடம் கேட்டேன்...பொருந்திப் போகிறது என்றார்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது எப்படி கரெக்ட் ஆகும்? பாஸ்தா, பிட்சா, டோக்ளா, கிச்சடிலாம் நம்ம உணவா? இல்லை அவகேடோ, ஸ்ட்ராபெர்ரி புளூபெர்ரி, வாட்டர்மெலன் இதெல்லாமா?

      பழமையானவற்றைத் தொடர்பவர்கள் வீட்டில், நமக்கு அந்நியமானவற்றை உபயோகிக்கமாட்டார்கள்.

      நம்ம தெய்வங்களுக்கு மிடி மினி ஸ்கர்ட், சுடிதார், ஜீன்ஸ் இவைகளைப் போடாடதற்கும் காரணம் அந்தக் காலத்தில் இத்தகைய உடைகள் நம் நிலத்தில் இல்லாததுதான் காரணம்னு சொல்லுவீங்க போலிருக்கு. (காய்கறி லாஜிக்தான் இதுக்கும்).

      இதைப்பற்றி ஒரு நாள் யோசித்து எழுதறேன்.

      நீக்கு
  19. கோலி, பம்பரம், கிட்டிப்புள். //

    ஆஹா மீ க்கும் நான் பம்பரம் விடுவதிலும் கிட்டிப்புள் விளையாடுவதிலும் கில்லி!!!! அப்போ...ஹா ஹா கோலிக் குண்டில் பெரும்பாலும் என்றாலும் சில சமயம் குறி தப்பும்!!!!! சில வருடங்களுக்கு முன் நம் வீட்டுக் குழந்தைகள் சின்னவங்களா இருந்தப்ப கிட்ட்ப் புள் பம்பரம் ஊத்திக்கிடுச்சு..ஆனா கோலி நல்லா விளையாடினேன்!!!! குழந்தையாக மாறிய அனுபவம்!! வாவ்!! அப்படியே இருந்துடலாமேன்னும் தோணிச்சு..

    கீதா



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதயபூர்வமான கருத்து நன்றி. ஆனால் எங்க ஊர்ல - நான் தெருவில் விளையாடிய காலங்களில் பெண்கள் பாண்டி, ஏழாங்காய், இன்னும் ஏதோ L O N D O N = லண்டன் என்று கூவும் விளையாட்டு போன்றவைகள்தான் விளையாடுவார்கள். ஒரே ஒரு ரவுடி பெண் மட்டும் கோலி விளையாட பையன்களோடு வீதியில் இறங்குவாள் - அவளை வெல்லுவதற்கு எங்கள் தெருவில் எந்தப் பையனுக்கும் இயலாது.

      நீக்கு
    2. என் தம்பிக்காக நான் கிட்டிப்புள், பம்பரம், கல்லாட்டம் ஆடி இருக்கேன். அப்பாவுக்குத் தெரியாமல் தான். தெரிந்தால் நான் வீட்டிலேயே இருந்திருக்க முடியாது! :)))))

      நீக்கு
  20. வர வர கமல் பற்றிய கேள்விகள் அதிகமாகிக்கிட்டே போகுது! //

    ஹா ஹா ஹா ஹா

    கேள்வி மன்னி கேள்வி மழையா பொழிஞ்சு தள்ளிருக்காங்க. நானும் பள்ளியில், கல்லூரியில் கேட்டதுண்டு...நிறைய ஆனா ஆனா அதுக்கப்புறம் ....இப்பவும் வருது ஆனால் ஹிஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
  21. என் கேள்விக்கான பதில் நல்லாருக்கு அப்படி நடந்தால் மிக்க மகிழ்ச்சியாக இருக்கும்

    மிக்க நன்றி ஆசிரியர்க்ளுக்கு

    கீதா

    பதிலளிநீக்கு
  22. மனசுக்குள்ள நிறைய பேசுறேனே...ஆனால் வெளில தெரியறா மாதிரி இருந்துச்சுன்னா அதுக்கு வேறு பெயர் ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  23. //நம் நிலத்துக்கு அந்நியமான உணவைச் சாப்பிடுவது நல்லதா?//இட்லிகூட நம் நாட்டு உணவு கிடையாதாம். வெளி நாட்டிலிருந்து நம் நாட்டுக்கு வந்தது என்று ஒரு முறை நீயா நானாவில் கோபினாத் கூறினார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விட்டால் கொழுக்கட்டையும் மோதகமும் கூட வெளிநாட்டில் இருந்துதான் வந்த்து என்பார்கள்....

      மோதகத்தின் இன்னொரு வடிவம் தானே இட்லி...

      மோதகம் இறுக்கம்...
      இட்லி சற்றே இளக்கம்...

      நீக்கு
    2. உப்புமாவின் பூர்வீகம் உஹான் என்றும் இனி நமது டிவி-க்களில் சொல்வார்கள். எப்படியாவது தமிளனின் அரிவு வளந்தாச் செரி..

      நீக்கு
  24. //& என்னுடைய மனைவியிடம், 'நீதான் உலகத்திலேயே அழகானவள்' என்று சொன்னேன். இதை எப்படி உண்மையாக்குவது? யாரேனும் சொல்லுங்கம்மா !// எந்தப் பொய்யை உண்மையாக மாற்ற முடியுமோ அப்படிப்பட்ட பொய்களைத்தான் கூற வேண்டும். இருந்தாலும், சிகை அலங்காரத்தில் சில மாற்றங்கள், பொருத்தமான உடை அணிவது, புன்னகை பூத்த முகம், தன்னம்பிக்கை,இவை எல்லாவற்றையும் விட த வே வீ கேரி அவர்செல்ஃப் நம்மை அழகாகக் காட்டும்.

    பதிலளிநீக்கு
  25. & ஏதோ ஜோக் அடித்திருக்கிறார், இதற்குப் போய் ஸீரியஸ்ஸாக பதில் சொல்லிக் கொண்டிருக்கும் என்னை என்ன செய்தால் தேவலை? இதிலிருந்து ஒரு கேள்வி பிறக்கிறது. நகைச்சுவை உணர்ச்சியை வளர்த்துக் கொள்ள முடியுமா?

    பதிலளிநீக்கு
  26. அறுவை சிகிச்சை செய்யும் பொழுது உடையில் ரத்தக்கறை படிய வாய்ப்புள்ளதால் பச்சை அல்லது நீல நிற ஆடையில் அவை ப்ரகாசமாக தெரியாது என்பதாலேயே மருத்துவர்கள் அறுவை சிகிச்சையின் பொழுது பெரும்பாலும் பச்சை நிற ஆடைகளை அணிகிறார்கள் என்று எங்கோ படித்த நினைவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தகவலுக்கு நன்றி. பச்சை நிறம், கண்களில் இரத்த ஓட்டத்தை சீராக்கும் என்று படித்துள்ளேன்.

      நீக்கு
  27. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

    கேள்விகளும், பதில்களும் அருமை.

    பதிலளிநீக்கு
  28. கேள்வி பதில்களில் உள்ள நகைச்சுவைகளையும் ரசித்தேன்...

    பதிலளிநீக்கு
  29. ஆரம்பிக்கும்போது மோசமா ஆரம்பிச்சி ஆனா எண்ட் ப்ராடக்ட் சூப்பர்பா வந்த உணவு பதார்த்தம் எது உங்கள் நளபாகத்தில் ?//

    இப்படி நிறைய புது பதார்த்தங்கள் கிடைத்ததுண்டு. கௌ அண்ணா சொல்லிருப்பது போல சொத்தப்பிச்சுனா கூட அதை கீதாக்காவின் மொழியில் சொல்றதுனா திப்பிசம் செஞ்சு புதுசாக்கிடுவோம்ல...ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  30. கௌ அண்ணா அந்த ஜவ்வரிசி வடாமை இங்க போட்டு தேம்ஸ் பூஸாரையும் பேய்க்காட்டியிருக்கலாமல்லோ?!!!!!!!!!!!!!!!!!! ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா நான் டக் டிக் டோஸ் ஆக வெங்காய வடகம் செய்தேன் மொத்தம் 9 தான் வந்துது, வெயிலில் காயுது இப்போ.. இங்கு யூப்பர் வெயிலாக்கும் ஆனாலும் குளிர் குறையவில்லை..

      நீக்கு
  31. வீட்டம்மாவுக்குப் பிடிச்ச பொருளே நான்தாங்க! //

    ஹா ஹா ஹா ரசித்த பதில்!

    கீதா

    பதிலளிநீக்கு
  32. எனக்கு மாந்திரீகம், பில்லி சூனியம் போன்றவற்றில் நம்பிக்கை கிடையாது. அதுவும் மனதில் நல்ல பிரார்த்தனைகளோடு நேர்மறையாக இறைவனைத் தொழும் போது..பிரார்த்தனையில் அதீத நம்பிக்கை...அதைப் பற்றி யோசித்ததும் இல்லை. கதைக்காக அன்றி.... ஆனால் படங்களில் வருவது தெரியும். எனக்கு இப்படிச் சொல்லப்படும் இடங்களுகுச் சென்று பார்க்க வேண்டும் என்ற ஆவல் உண்டு. அப்படி எப்படி இறைவனை மிஞ்சி ஒன்று நடக்கிறது என்ற ஒரு நோக்கில்...

    பொதுவாசச் சொல்ல்ப்படும் பாசிட்டிவ் இருந்தால் நெகட்டிவ் கண்டிப்பாக உண்டு. வெறும் பாசிட்டிவ் மட்டும் இருக்காது. வெறும் நெகட்டிவ் என்பதும் இருக்காது. கடவுள் பாசிட்டிவ் என்றால் சைத்தான் நெகட்டிவ். அதனால்தான் பெரும்பாலான கதைகளில் ஹீரோ வில்லன். பாசிட்டிவ் நெகட்டிவ். நெகட்டிவ் பாசிட்டிவாக மாறும் அல்லது அழியும். இ

    இதை மேலும் சிந்திக்க வைத்தது..மகனின் நண்பனின் கேள்வி. நண்பர்கள் எல்லோரும் எங்கள் வீட்டில் ஒரு பேய்ப்படம் ஆங்கிலப்படம் பார்த்துக் கொண்டிருந்த போது மகனின் நண்பன் என்னிடம் என்னாமா பயமா? வாங்க இங்க வந்து பாருங்க என்றார். நான் கிச்சனில் எல்லோருக்கும் சாப்பாடு செய்வதில் இருந்ததால் பார்க்க முடியலை. பயம் சுத்தமாகக் கிடையாது. உடனே அவர் சொன்னார் எனக்கும் நம்பிக்கை இல்லை சும்மா ஜாலியா பார்க்கறதுதான்ன்னு அப்போது இருவருக்கும் ஒரு பேச்சு எழுந்தது. நான் சொன்னேன் எனக்குப் பேய் நம்பிக்கை எல்லாமி ல்லை சோ நோ பயம். அவருக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது. உடனே அவர் கேட்டார் நீங்கள் கடவுளை நம்புறீங்களே என்றார். ஆமான்னதும், கடவுள் இருக்கார்னு நீங்க நம்பினீங்கனா பேயும் இருக்குன்னுதானே நம்பணும்...அதெப்படி அது இல்லை ன்றீங்க என்றார். கடவுள் என்பதும் நம் மனம் செய்யும் கற்பனை தானே. கடவுள் இருந்தால் சைத்தான் உண்டு இல்லைனா இதுவும் இல்லை...கடவுளுக்கு பூசை செய்யறாங்கலியா அது போல பேயை ஓட்ட அல்லது வசியம் செய்ய பூசை செய்யறாங்க அவ்வளவுதான். அவர் வாதம் சரிதான். ஏற்கனவே நான் அடிக்கடி சொல்லும் பாசிட்டிவ் நெகட்டிவ் போல இதுவும் யோசிக்க வைத்தது. எனக்கு என் நம்பிக்கையைக் குறித்து வாதம் செய்திருக்கலாம் ஆனால் செய்யவில்லை. அவருக்குக் கடவுள் நம்பிக்கை இல்லாததால் நான் முனையவில்லை. ஆனால் அவர் மிக மிக நல்லவர் மனித நேயம் உள்ள அருமையானவர். அவர்கள் வீட்டில் எல்லோருமே.

    கௌ அண்ணா சொல்லியிருப்பது போல் நிஜமாவே இருக்குமோ என்று நினைக்கும்படி சில நிகழ்வுகளைப் பார்க்க வில்லை சமீபத்தில் கப்ஸா கட்டுக்கதை எல்லாம் விடாத உண்மை பேசும் தோழி ஒருவர் அவருக்கு நடந்ததைச் சொல்லிய போது எனக்கு வியப்பு ஒரு புறம் அதே சமயம் ஓ என்று தோன்றியது. வாய் வழியாக வயிற்றிலிருந்து வசியத்திற்குக் கொடுக்கப்ப்டும் பொருளை வெளியே எடுத்தல் போன்ற காணொளிகள் உள்ளன. ஆனால் எனக்கு அதில் எனக்கு இன்னும் நம்பிக்கை வரவில்லை. இறை சக்திதான் மனதில் வருகிறது. சிலது பற்றி தோழியிடம் மீண்டும் பேச் வேண்டும்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுவாரஸ்யமான கருத்துரை. நன்றி.

      நீக்கு
    2. மேலே கீதா எழுதியிருப்பது சனிக்கிழமை வரவேண்டிய ‘கடவுள் - பேய்’ கட்டுரைதானே? Advance publish ஆகிவிட்டதா!

      நீக்கு
  33. அந்தக் காலமா ஆஆஆஅ இதுதாங்க இப்ப வாட்சப்ல வந்துக்கிட்டே இருக்கு! கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  34. //& வர வர கமல் பற்றிய கேள்விகள் அதிகமாகிக்கிட்டே போகுது!//
    ஆரம்பத்தில் பெரிசா ஈர்க்கலை ஆனா இப்போ அதிகமா அவதானிக்கிறேன் அதனாலோ :)))இன்னிக்கு கேள்விகளிலும்வரும் அவர் அவர் சார்ந்தோர் பற்றி ஹஹ்ஹஹ்ஹா :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆழ்ந்து சிந்தித்திருக்கிறீர்கள் ! ஹா ஹா ! நன்றி.

      நீக்கு
  35. இந்தாங்க இவ்வார கேள்வி பாஸ்கெட் :)

    1, நாம் ஒன்றை நினைத்து பேச அதை அருகிலிருப்பவர் கேட்டு பின்பு மயங்கிய ( பேயறைஞ்சு போன ) தருணங்கள் இருக்கா ?    

    2, மனித பலவீனங்களில்  கிடைத்த தருணத்தை பயன்படுத்தி ஏறி சவாரி செய்பவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் ?

    3, வாய்ப்பும் சக்தியும் சூழலும் அமையும்போது அதை பயன்படுத்தினால் அது சந்தர்ப்பவாதமா ?

    4, சாகசங்கள் நிறைந்ததா மனித வாழ்க்கை ?

    5,வாழ்க்கையின் யதார்த்தத்தை ஒதுக்கி தள்ளிவிட்டு கனவுலகில் வாழ்கிறோமா நாம் ?
     
    6, சமீபத்தில் நீங்கள் ரசித்து துக்கத்திலும் விழுந்து புரண்டு சிரித்த ஒரு பின்னூட்டம் எது ?   //If this isnt played at my funeral I'm not going// 
     Vera Lynn - We'll Meet Again யூடியூப் காணொளியில் வந்த பின்னூட்டம்   இதுதான் நான் நேற்று பார்த்து வலியுடன்   சிரித்தது காரணம் உலகப்போரில் செல்லுமுன் சோல்ஜர்ஸ் இந்த பாட்டை பாடினாங்கன்னு பிரிட்டிஷ் மஹாராணி கொரோனா வைரஸ் பற்றிய உரையில் கூறினார் .

    7, அடையாளங்கள் அவசியமா ?தற்போதைய சூழலில் ஏறக்குறைய அனைவரும் தங்களுக்கான          அடையாளத்தை வெளிப்படுத்தனும் நிலைநிறுத்தணும் என்கிற முனைப்புடன் இருக்கிறார்கள்  ஏன் ?அல்லது     இருக்கிறாற்போல் தோன்றுவது ஏன் ?

     8,மறைமுகமா நட்பு பாராட்டுவது நேரடியா நட்பு பாராட்டுவது இதை பற்றி இப்படிப்பட்ட மன நிலை உள்ளவர்களைப்பற்றி  உங்கள் கருத்து என்ன ? ********  இந்த கேள்விக்கு பிஞ்சு சொற்பொழிவாளர்  பதில் சொல்ல தடை போடப்பட்டுள்ளது   :))))))))  
    9,  இந்த மினி இட்லின்னு சொல்றாங்களே அது பார்க்க குட்டியா இருக்கே அதை சாப்பிட்டா    மற்ற இட்லிமாதிரி சுவை  திருப்தி வருமா ?      நான் இதுவரை சுவைத்ததில்லை அதான் கேட்கிறேன் 

    10, ஒரு தலைமுறை செய்யும் தவறுகளுக்கு அவர்களின் அடுத்த தலைமுறையையும் (அவர்களுக்கு பெற்றோர்   செய்யும் செய்த எந்த ஒரு விஷயத்திலும் சம்பந்தமில்லாதபோதும் ) அவர்களையும் சேர்த்து  திட்டுவது சரியா ?

    11, உண்மையான கம்யூனிசம் என்பது என்ன ? வெள்ளிக்கிண்ணத்தில் உணவுண்டு எல்லாவித வசதிகளுடன் வளர்ந்த ஒருவரால்  பாட்டாளி வர்க்கத்தின் அல்லல்களைப்பற்றியம் புரட்சி  நிஜ கம்யூனிசம் பேசுவது இயலுமா ?

     12, எந்த சந்தோசம் நிரந்தரமானது ?   
      1, வாழ்க்கையில் தனக்கு பிடித்த விஷயங்களை செய்வதில் கிடைப்பது        2, பிறருக்காக சில விஷயங்களை செய்வது இவ்விரண்டில் எதில் கிடைக்கும் சந்தோஷம் நிரந்தரமானது ?

    13, சில நேரங்களில் சில மனிதர்கள் எதோ ஒரு பாதிப்பை நம்மில் நம்முள் ஏற்படுத்தி சென்றுவிடுவார்கள் அப்படி நீங்கள் சந்தித்த ஓரிரண்டு பேரை பற்றி கூறவும் ?

    14, இன்றைய வெற்றி நாளைய தோல்விக்கு மனதை பண்படுத்துமா ? 

    15, பொழுது போகாத மாலை வேளையில் வானத்தை பார்த்தபோது  அதில் இருந்த விதவிதமான டிசைன் பஞ்சு பொதிகளை பார்த்து உதித்த கேள்வி இது       ஆறுக்கு பெயர் இருக்கு மரத்துக்கு பெயர் இருக்கு நிலத்துக்கு பெயர் இருக்கு ஆனா ஏன் மேகத்துக்கு மட்டும் பெயர் வைக்கலை நம் முன்னோர் ???              

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேகங்களுக்குப் பெயர் உண்டுனு நினைக்கிறேன். சம்ஸ்கிருதப் பெயர்கள் என்பதாக நினைவு. சாண்டில்யன் கதையிலோ என்னமோ படிச்சிருக்கேன். மேகங்களின் ஆங்கிலப் பெயர்கள் சுஜாதா கதைகள், கட்டுரைகளில் அடிக்கடி வரும். அதுவும் பறக்கும் நிகழ்வைப் பற்றிஎழுதினால் மேகங்களுக்கு மேலே விமானம் பறப்பதைப் பற்றிக் குறிப்பிடுகையில் கீழே உள்ள மேகம் என்ன என்பதைச் சொல்லி இருப்பார்.

      நீக்கு
    2. ஆஹா !! நான் சுஜாதா ஸ்டோரீஸ் படிச்சா அளவு கட்டுரைகள் படிக்கலை நிச்சயம் பெயர்கள் இருக்கணும் .சொன்னா மீ ஆப்பி :)

      நீக்கு
    3. கேள்விகள் கேட்டதற்கு நன்றி. பதில்கள் அளிப்போம்.

      நீக்கு
  36. அப்புறம் கௌதமன் சார் ..போன வாரம் நீங்க பதிலில் சொன்ன புழுங்கல் அரிசி உடைத்த கஞ்சி மோர் /ரசம் காம்பினேஷனில் அட்டகாசமா இருந்துச்சி .இதுமட்டகிரி நிறைய சுலப ரெசிப்பீஸ் வழங்கவும் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது மாதிரி ///நிறைய சுலப ரெசிப்பீஸ் வழங்கவும் :)

      நீக்கு
    2. @ஏஞ்சல், புழுங்கலரிசியைக் களைந்து நீரை வடிகட்டி வெறும் வாணலியில் வறுத்துக்கொண்டு கஞ்சி காய்ச்சி அதில் கஞ்சி பாதி கொதிக்கையிலேயே ஒரு தக்காளிப்பழம் பொடியாக நறுக்கிச் சேர்த்துச் சுக்குப் பொடி போட்டுவிட்டு உப்புப் பெருங்காயம் சேர்த்துக் கொதிக்கவிட்டுச் சூடாக இருக்கும்போதே நெய்யில் மிளகு, ஜீரகம், கருகப்பிலை தாளித்துப் பின்னர் அரிசி அப்பளத்துடன் சேர்த்துச் சாப்பிட்டுப் பாருங்கள்!

      நீக்கு
    3. அஆவ் !! இதுவும் சூப்பரா இருக்கே செஞ்சிடறேன் .தக்காளிதான்  வாங்க கடைக்கு போகணும் .ஒரு வாரமாச்சுக்கா இல்லை 10 நாலேகா கடைப்பக்கம் போயி .எனக்கு லைன் வரிசையில் நிக்க  இஷ்டமில்லை 

      நீக்கு
    4. மிளகு, ஜீரகம் உடைத்துக் கொண்டு நெய்யில் பொரித்துப் போட்டால் சொர்க்கம்!

      நீக்கு
    5. யெஸ் யெஸ் :) வீட்டில் இப்போல்லாம் அடிக்கடி மிளகு ரசம் தான் செய்றேன்..

      நீக்கு
    6. கருத்துரைக்கும், மேலும் சில சமையல் குறிப்புகளுக்கும், ஏஞ்சல் மற்றும் கீ சா அவர்களுக்கு நன்றி.

      நீக்கு
  37. ///பேயறைஞ்சு போன ) தருணங்கள் இருக்கா ? //

    என் ரீசன்ட் அனுபவம் :) எங்க முன் கதவை ஒட்டி ஒரு எட்வர்ட் ரோஸ் வளருது என்னமோ தெரிலா இம்முறை கதவை நோக்கி உள்ளே வர உணர்வு எனக்கு அதனால் முந்தாநேத்து தண்ணி ஊற்றும்போது ..என்ன ராஜா உனக்கு வீட்டுக்குள்ளே வரணும்போலிருக்கானு கேட்டேன் ..அப்போ கணினியில் எதோ செஞ்சிட்டிருந்த கணவர் யாருகிட்ட பேசறீங்கன்னு கேட்டாரா .செடிக்கிட்டேன்னு சொன்னேன் அதைக்கேட்டு ஷாக் ஆகிட்டார் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படிக்கிற எங்களுக்கே பக்குனு இருக்கே - கேட்ட அவருக்கு எப்படி இருந்திருக்கும்!

      நீக்கு
    2. நிற்க. கல்யாணம் ஆன புதிதில், வீட்டின் கொல்லைப்புறத்தில் என் மனைவி, " இருடீ உனக்கு என்ன அவசரம்? உனக்கும் கொடுக்கறேன் சமர்த்தா கொத்தித் தின்னு " என்று பேசிக்கொண்டிருந்ததை என்னுடைய அம்மா கேட்டு விட்டு, அங்கே சென்று பார்த்தால், என் மனைவி கையில் வைத்திருந்த அரிசிப் பாத்திரத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக அரிசியை குருவிகளுக்குப் போட்டுக் கொண்டிருந்தார். இதை என் அம்மா என்னிடம் சொல்லும்போது மிகவும் ரசித்துச் சொன்னார்கள்!

      நீக்கு
    3. நாங்கல்லாம் மரம், செடி,கொடியோடல்லாம் பேசி இருக்கோம்.:) இப்போப் பக்கத்துத் தோப்பு நெட்டிலிங்க மரத்தோடும் அதில் வரும் பறவைகளோடும் அவ்வப்போது பேசுவேன்.

      நீக்கு
    4. பார்த்திங்களா இதை நெல்லைத்தமிழனு க்கும் காட்டுங்க பெண்கள் மென் மனத்துடையோர் .குருவியைக்கூட வாடி போடின்னு சொல்வது செம அழகு .
      hi 5 geethaakaa :)

      நீக்கு
  38. மீண்டும் வரேன் :))))))))))) தோட்டத்துக்கு போனா  இனனும் கேள்விகள் வரும் 

    பதிலளிநீக்கு
  39. ஏஞ்சல் 17 ...யெஸ் யெஸ் டிட்டோ...

    பீலா ராஜேஷ் அவங்களுக்கு அந்த ஹைநெக் ப்ளவுஸ் சூப்பரா இருக்குல்ல. அவங்க எலெகென்ட் ட்ரெஸ்ஸிங்க் ஒரு மரியாதை உள்ள கமாண்டிங்க் பெர்சனாலிட்டி எலெகன்ட் லுக், டீசன்ட் மரியாதை வரவழைக்கும் லுக் கொடுக்கிறது.

    டல்கோனா புதிது போலத் தெரியலையே...பேர் தான் ஏதோ டல்கோனான்னு வருது. ஃபேமஸ் ஆகிடுச்சு. எல்லாம் நாங்க செய்யறதுதான் கௌ அண்ணா சொன்னது போல இன்ஸ்டன்ட் காஃபி பௌடர், பால் பவுடர் சர்க்கரை, தண்ணீர் போட்டு அண்ணா அஹிம்சா வாதி நான் ஹிம்சா வாதி அதைப் போட்டு நல்லா பீட் செய்து விட்டு அதில் பால் கலந்து....கையால் பீட் செஞ்சதில்லை அவங்க செய்யறது போல எலக்ற்றிக் பீட்டர் போட்டுத்தான்...கையால செஞ்சா அத்தனை க்ரீமியா அவங்க காட்டுவது போல வந்ததில்லை எனக்கு கஷ்டமா இருக்கும்....மில்க் பௌடர் போட்டு செஞ்சா நல்ல திக்கா வரும். அதுவும் பீட்டர் தான்...

    அது சரி...//தன்னை ஸ்வீட் 16 என்று அடிக்கடி சொல்லிக்கொள்ளும் பதிவுலக பட்டப்பெயர் தொடரி இதை பற்றி இன்ஸ்டாக்ராமில் போட்டோவா போட்டு தள்ளுகிறார் //

    ஹா ஹா ஹா இது யாருன்னு தெரிஞ்சுருச்சே!! இன்ஸ்டாக்ராம்ல வந்துச்சுனா அப்ப பதிவுலயும் வந்துரும்னு சொல்லுங்க இல்ல திங்க பதிவுக்கு வருதோ?!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // அண்ணா அஹிம்சா வாதி நான் ஹிம்சா வாதி அதைப் போட்டு நல்லா பீட் செய்து விட்டு..// சிவ சிவா ! அபச்சாரம்!

      நீக்கு
  40. எல்லாமே நல்லாருக்கு கௌ அண்ணா...

    ரசித்தேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  41. அது சரி உங்களுக்கு உங்க ப்ரைமினிஸ்டர் கிட்டருந்து லெட்டர் வந்துச்சா ?எங்களுக்கு போரிஸ் எல்லாருக்கும் கைப்பட சைன் போட்ட லெட்டர்ஸ் அனுப்பியிருக்கார் இப்போதான் எங்க லெட்டர் வந்தது 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹூம், எங்களைத் தொலைபேசியிலேயே அழைத்துப் பேசறாங்க, நீங்க வேறே! அதுவும் மத்தியானம் வேலைகளை முடித்துக் கொண்டு சற்றுப் படுப்போம்னா இவங்க யாராவது கூப்பிட்டுடுவாங்க! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      நீக்கு
    2. அடடா ..இங்கே அப்படி வரலை ஒன்லி லெட்டர் ..அதை பிறக்காலத்துக்கும் வைக்கலாம் ஞாபகமா 

      நீக்கு
    3. எல்லோரும் நலம் பெற பிரார்த்திப்போம்.

      நீக்கு
    4. எங்களுக்கு நேற்றே வந்துவிட்டது:)) அஞ்சுவுக்குச் சொல்லிட்டேன் நேற்றே:)).. ஸ்கொட்லாந்தில எல்லாமே ஸ்பீட்டாக்கும்:)) மக்களைப்போல:)) ஹா ஹா ஹா:))

      நீக்கு
  42. சரி எல்லாருக்கும் தற்காலிக பை bye :) தோட்டத்துக்கு போயி அணில் பிள்ளை புறாக்களையோடு பேசணும் பிறகு வரேன் 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த பாஷை எங்களுக்கும் சொல்லிக் கொடுக்கலாமே!

      நீக்கு
    2. அது ரொம்ப ஈஸி  :) டெய்லி மூணு வேளை தோட்டத்துக்கு போய் (ufo இல்லாம ) செடி கொடி எல்லாத்துகிட்டயும் குட்மார்னிங் குட் afternoon குட் ஈவ்னிங் சொல்லணும் .செடிக்கு தண்ணி ஊத்தும்போதே நலம் விசாரிக்கணும் ..நீங்க ufo விட்டெரிஞ்சதை செடியும் பார்த்து பயந்திருக்கும் அவங்க பயத்தை நீக்கம் குறிப்பா மியாவ்ஸ் கூட பிரென்ட் ஆகணும் .என் தோட்ட விசிட்டர் புறா என் கைக்கருகே வருது இப்போல்லாம் .இப்போவே ஆரம்பிங்க :)

      நீக்கு
  43. //& இந்தக் கேள்வியை, ஸ்ரீராம் சொன்ன யோசனைப்படி, எங்கள் அன்பு நண்பர், திரு Ganesh Bala அவர்களை, முகநூல் பெட்டி செய்தி மூலமாகக் கேட்டேன்.
    அவர் கூறியது : //

    நீங்க ஐக்கிய நா ச தலைவர் ரேஞ்சுக்குப் போயிட்டீங்க கெள அண்ணன் ஹா ஹா ஹா...

    பதிலளிநீக்கு
  44. // "பொய் சொல்ல அசோக்கின் இரண்டு விதிகள், பொய் சொல்லாதே, சொன்னால் அதை எப்படியாவது உண்மையாக்கி விடு" என்று எழுதியிரு்பார்//

    எங்கட கண்ணதாசன் அங்கிள் இதை எப்பவோ ஜொள்ளிட்டார்ர்:)).. ஒரு பொய் சொல்லிட்டால், அதை உண்மையாக்க 1000 பொய் சொல்லோணும் அதனாலே பொய் சொல்லாதே என:))

    பதிலளிநீக்கு
  45. //& என்னுடைய மனைவியிடம், 'நீதான் உலகத்திலேயே அழகானவள்' என்று சொன்னேன். இதை எப்படி உண்மையாக்குவது? யாரேனும் சொல்லுங்கம்மா ! //

    அப்போ அது உண்மை இல்லையா?:)) ஹா ஹா ஹா ஹையோ எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதை எப்படி உண்மையாக்குவது என்றுதானே கேட்டுள்ளேன். அதற்குள் கோள் மூட்டறீங்களே!

      நீக்கு
    2. ஹா ஹா ஹா என்னில ஒரு குணம் இருக்குது கெள அண்ணன், இது உங்களிடமும்/பலரிடமும் இருக்கலாம்.. அதாவது ஒருவரைப் பார்த்த உடன், அழகானவர் எனச் சொல்ல முடியாத அழகில் இருந்தாலும்... கொஞ்சம் பழகினேனோ.. அவர்களை என் மனதுகுப் பிடிச்சுப்போச்சோ.. நாளுக்கு நாள் அவர்களைப் பார்க்கும்போதெல்லாம் ரொம்ப ரொம்ப அழகாக வந்து கொண்டிருப்பினம்.. இது என் வாழ்வில் பல தடவைகள் நடந்திருக்கு.. நடந்து கொண்டேயுமிருக்குது..

      அதனால நான் அதிகம் நம்பும் அழகு.. அவர்களின் மனம்தான்..

      நீக்கு
  46. //நெல்லைத்தமிழன் :

    1. ஒரு புத்தகத்தை (நாவல் அல்லது எதுவானாலும்) படிக்கும்போது உள்ள சந்தோஷம் அனுபவம் மின்னூல் படிக்கும்போது கிடைப்பதில்லையே? இது எனக்குமட்டும்தானா?//

    இது என்ன இது ரிப்பீட்டில கொஸ்ஸன்ஸ் கேட்டுக்கொண்டு கர்:)).. கெள அண்ணன் ஒரு சொஃப்ட்வெயார் இருக்குது, அதை உங்கட கொம்பியூட்டரில இறக்கி விடுங்கோ:)) அது ரிபீட் கொஸ்ஸன்ஸ் வந்தால் ரெட் மார்க் போடும்:)).. அதன் பெயர் “அதிரஃபி”

    பதிலளிநீக்கு
  47. //
    2. தேன் குரல் அப்படீங்கறாங்களே. அப்படீன்னா என்ன? //

    இங்கின ஒரு உண்மை ஜொள்ளியே ஆகோணும்:))).. நான் பானுமதி அக்காவின் பெயரை மட்டும் பார்த்தேன், கீழே நெ தமிழனின் பெயரைக் கவனிக்காமல், தொடர்ந்து படிச்சேனா.. இக்கேள்வி கண்ணில பட்டதும், சத்தியமாக இது நெ தமிழன் தானே இப்படிக் கேட்பார் என நினைச்சு செக் பண்ணினேன் கரீட்டூஊஊஊஊ ஹா ஹா ஹா:))

    பதிலளிநீக்கு
  48. //ஏஞ்சல் :

    1, மீண்டும் பள்ளி பருவம் செல்ல நேரிட்டால் :) உங்கள் விருப்ப விளையாட்டு எதுவாயிருக்கும் ? கோலி ,கில்லி ,பம்பரம் ?//

    அது நீங்க ஒண்ணும் டப்பா எடுத்திடாதீங்கோ கெள அண்ணன், அஞ்சுப்பிள்ளை இப்போ முதியோர் கல்விக்குப் போவதால எழுந்ததே இக் கொஸ்ஸ்ஸ்ஸான்:)) ஹா ஹா ஹா...

    இந்த வயசில போய்க் கையைக் காலைத் தூக்கிடாமல், ஓரிடத்தில அடக்கொடுக்கமாக இருந்து ஏதாவது வெளாடச் சொல்லுங்கோ.. :))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெசம்மாவே வாய் விட்டு உரக்கச் சிரித்துவிட்டேன்! நன்றி.

      நீக்கு
    2. ஹா ஹா ஹா ஆள் வருவா இப்போ ரொக்கெட் வேகத்தில:)) அதுக்கு முன் மீ ஓடிடோணும் கொமெண்ட்ஸ் போட்டு விட்டு:))

      நீக்கு
    3. ஹலோ இங்கேதான் இருக்கேன் :) எப்பவும் ஒரு கேள்வியை கேட்டா அந்த இடத்தில தங்களை வைச்சுப்பார்ப்பது நீங்கதான் அதனால் நீங்களே முதியோர் கல்விக்கு போறதை இப்டி உளறி கொட்டிப்பிட்டீங்க :)))

      நீக்கு
  49. //2, சிலரை புரிந்துகொள்ள முடியாம இருக்கே ஏன் ? இல்லை அவர்கள் அதற்கெல்லாம் அப்பாற்பட்டவர்களா ?//

    புரிஞ்சுகொள்ள முடியவில்லையா.. ஒதுங்கிப் போயிட வேண்டியதுதான்:)) எதுக்கு புரிய முயற்சி செய்து கஸ்டப்படோணுமெங்கிறேன்ன்:)) ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
  50. //4, வாழ்க்கை ..இதனை ஒரே வார்த்தையில் அனைவருக்கும் புரியறமாதிரி கூறவும் ? உதாரணம் எனக்கு வாழ்க்கைன்னா இறைவன் .//

    எனக்கு வாழ்க்கை எண்டால் மகிழ்ச்சி.. ஆப்பீஈஈஈஈஈ...
    மகிழ்ச்சியாக இருந்தால் அனைத்தும் வந்து சேர்ந்திடும் நம்மோடு:)) இறைவன் கூட:))

    பதிலளிநீக்கு
  51. //6, மனசுக்குள் பேசிக்கொண்ட அனுபவம் இருக்கா ?ஒரு நாளைக்கு எத்தனை முறை மனசுக்குள் பேசியிருக்கீங்க ?//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா இது என்ன “மனசே நான் பேசப்போகிறேன்.. நீ ரெடியோ? உன் காதுகளைக் கூர்மையாக்கு “ எனச் சொல்லிப்போட்டுப் பேசும் விசயமோ?:)).. கண் விழிச்சதில இருந்து பேசிக்கொண்டுதானே இருக்கிறோம் இடைவிடாமல்:)).. என்ன சிலதை கொஞ்சம் சத்தமாகப் பேசும்போது வெளியே கேட்கிறது.. அதனை மற்றவர்களோடு பேசுகிறோம் எனச் சொல்கிறோம் ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
  52. //7, நிறங்கள்... கோபம் உற்சாகம் சோகம் போன்ற உணர்வுகளை தூண்டுபவையா ?//

    100 வீதம்.. ஸ்கூலிலும் படிப்பிக்கிறோம்.. அது மட்டுமில்லை ஒவ்வொரு கலருக்கும் ஒவ்வொரு குணமும் இருக்கும்.. அதனாலதான் வெயில் காலத்தில் கடும் கலர்கள் போடக்க்கூடாது, இப்பூடி எல்லாம் இருக்கே..

    ஆவ்வ்வ்வ்வ் மை பிங்கூஉ மை பிங்கூஊஊஊஉ ஹா ஹா ஹா என் பிங் கலரின் தன்மை பார்த்து மீ ஷையாகிறேன்ன்ன் ஹா ஹா ஹா:))..

    எனக்கு முதலாவது பிங் பின்பு பேப்பிள் அதன்பின்னர் ஒரேஞ் புளூ கிரீன்.. இப்படி... வெள்ளை.. கறுப்பு பெரிசாகப் பிடிக்காது.

    பதிலளிநீக்கு
  53. //8, சமீபகாலமா கவலையில் ஆழ்த்தும் ஒரு விஷயம் எது ?//

    கே எஃப் சி யை மூடிட்டாங்கோ:)) ஹா ஹா ஹா ஹையோ மீ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே இந்த fast food டேக் அவே mcdonalds kfc burgar கிங் மூடினத்தில்தான் :))))))))))

      நீக்கு
  54. //9, ஆரம்பிக்கும்போது மோசமா ஆரம்பிச்சி ஆனா எண்ட் ப்ராடக்ட் சூப்பர்பா வந்த உணவு பதார்த்தம் எது உங்கள் நளபாகத்தில் ?//

    ஹா ஹா ஹா இது வேறொன்றுமில்லை அஞ்சு வீட்டு அச்சு முறுக்கு:)).. ஆரம்பிச்சது அஞ்சு.. ஆனா செய்ய முடியல்ல, முடிவில அஞ்சுவின் ஆத்துக்காரர் களம் புகுந்து சூப்பராகச் செய்து முடிச்சார்ர்:)) ஹா ஹா ஹா மீ வல்லாரை குடிக்காமலேயே நினைவிருக்காக்க்கும் எல்லாம்:))..

    லிங் தேடப் போயிருந்தேன்:))) ஆதாரத்துடன் நிரூபிக்கோணுமெல்லோ ஹா ஹா ஹா:))

    http://kaagidhapookal.blogspot.com/2017/12/christmas-dinner-for-homeless-rose.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ஸ்ஸ் நேற்று பிளாக்கை ஒளிக்கணும்னு ஒரு thought வந்துச்சி ..கர்ர்ர்ர் நேத்தே செஞ்சிருக்கணும் :)

      நீக்கு
  55. //10, சரியெனப்படும் தவறு எது ? அதாவது அது தப்புதான் ஆனாலும் பரவாயில்லை சரின்னு நீங்க நினைப்பது எதை ?//

    நமக்குச் சரி எனப்படுவது, இன்னொருவருக்குத் தவறாகப் படலாமெல்லோ.. ஆனாலும் என் மனதுக்குப் பிடிக்காத பல பல விசயங்கள் கூட, போனாப்போகுதென விட்டிடுவேன் 90 வீதமும் பெரிசா எடுக்க மாட்டேன்ன்.., சிலதை மட்டும் மனம் ஏற்றுக் கொள்ளவே மாட்டுது:))

    பதிலளிநீக்கு
  56. //14, அந்த காலத்தில் நாங்க .. என்ற வசனம் பெரும்பாலும் கேட்கும்போது என்ன தோணும் ?///


    # பேசுவதே நானாகையால் ரொம்பப் பொருள் பொதிந்ததாகத் தோன்றும்.///

    ஹா ஹா ஹா சூப்பர் அண்ட் 100 வீதம் உண்மை:)) ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
  57. //19, இருகோடுகள் சௌக்கார் பாட்டி முதல் சிங்கப்பெண் :) BEELA ராஜேஷ் வரை நான் அவதானித்தது ஜப்பானிய ஹை நெக் ப்ளவுஸ் ஸ்டைல் :) இது எதேச்சையா அமைந்ததா அல்லது சிவில் சர்வீஸ் க்கு ஒரு ட்ரெஸ் கோட் இருக்கா ?//

    ஹா ஹா ஹா போட்டு வாங்கிறா.. கெள அண்ணன் உசாராக இருங்கோ:)).. இவ்விடத்தில்.. நான் பெண்கள் அணியும் உடைகளைக் கவனிப்பதில்லை எனச் சொல்லிட்டால்ல் வீட்டில கிச்சின் திறக்கப்படும் ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா :) நானும் தொடர்ந்து இப்படி இவரை மாட்டிவிடற மாதிரி கேள்வி  கேக்கறேன் :) ஆனாலும்பக்க விளைவுகள் எதுவும் தெரியமாட்டேங்குது :))))))))

      நீக்கு
    2. அதுக்காக முயற்சியைக் கை விட்டிடாதீங்கோ அஞ்சு:)) தொடரட்டும் உங்கள் முயற்சி.. நா இருக்கேன்:)) ஹா ஹா ஹா:)

      நீக்கு
    3. அது தொடரும் தொடருவோம் :))))))))))))))))))))) 

      நீக்கு
    4. ஒரு திட்டமாத்தான் இருக்காங்க போலிருக்கு. உஷாரா இருந்துக்கணும் (என்னைச் சொன்னேன்)

      நீக்கு
  58. //21, இந்த டல்கோனா காஃபி எப்பிடி சார் இருக்கும் ?? தன்னை ஸ்வீட் 16 என்று அடிக்கடி சொல்லிக்கொள்ளும் பதிவுலக பட்டப்பெயர் தொடரி இதை பற்றி இன்ஸ்டாக்ராமில் போட்டோவா போட்டு தள்ளுகிறார் ஆகவே டல்கோனா பற்றி என்னைப்போல் அறியாக்குழந்தைகளுக்கு விளக்கப்படுத்தவும் ??//

    ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இன்ஸ்டகிராமா? அப்பூடின்னா?:)) ஆனாலும் டல்கோனா சூப்பர்ர்ர்ர்:)).. இப்போ நான் ரெசிப்பி செய்து காட்டுறதோ வாணாமோ?:))

    பதிலளிநீக்கு
  59. பல கேள்விகளும், பல பதில்களும் சூப்பர், ரசித்தேன்... தொடரட்டும்.. அதுசரி இம்முறை புதன் கிழமை ஊசிக்குறிப்பேதும் இல்லையே மேலே கீழே:))

    பதிலளிநீக்கு
  60. நானும் என் பங்குக்கு சில கிளவிகளைக் கூட்டி வந்திட்டேன்:)) சே சே கேள்விகளையாக்கும்:))..

    1. அல்லிக்கும் சந்திரனுக்கும்தான் பொருத்தம் என்பார்கள், மாலையில் மலர்வதைத்தவிர வேறேதும் காரணம் உண்டோ?

    2.சிலர் ரிவி, மற்றும் சினிமா பார்க்கும்போது, மற்றவர்கள் இருப்பதையும் கவனிக்காமல், சத்தமாக பேசுவார்கள்.. அடி அடி விடாதே, துரத்து, ஆஆ பாவம் விட்டிடு...., ஆஆஆ ஓகே பண்ணிடுவார் பாரு.. ஹா ஹா ஹா இப்படிப் பல.. இவர்கள் மனநிலையில் எப்படியானவர்கள்?
    [[[சமீபத்தில் பாட்டி ஒருவர், இப்போ வீட்டுக்குள் ரிவி பார்க்கும்போது லொக்டவுன் நேரத்தில்.. இப்படிச் சத்தம் போடுகிறாவாம் என ஊரிலிருந்து வந்த செய்தி கேட்டதும் உதிச்ச கேள்வி:))] ஆனா இப்படிப் பலரைப் பார்த்திருக்கிறேன்.]].

    3.கிராமத்து வாழ்க்கையை விரும்பிக் கொண்டும் ரசிச்சுக் கொண்டும், ஆனா கிராமத்தில் போய் வாழ விரும்பாமல் நகரத்திலேயே வாழ்க்கை நடத்துவோர் பற்றி என்ன நினைக்கிறீங்க?

    4.ஒருவரின் நடை உடை பாவனையைப் பார்த்து ஓரளவாவது அவர்கள் எப்படிப்பட்டவர்கள் எனக் கணக்கெடுக்க முடியுமோ? அது சரியாக வருமோ?

    5.மனிதர்களில்தான் அதிக அன்பு பாசம் நேசம் இரக்கம் வைப்பது நல்லதோ? இல்ல 5 அறிவான பறவை விலங்குகளில் வைப்பது நல்லதோ? ஒன்றை மட்டும் கூறவும்:))[இது அஞ்சு சம்பந்தப்பட்ட கேள்வி அல்லவாக்கும்:))].

    6. முற்காலத்தில் கணவனோடு உடன்கட்டை ஏறும் பழக்கம் ஏன் ஏற்பட்டது? அன்பால இல்லை என்பது மட்டும் புரிந்தது.. ஏனெனில் பாண்டு இறந்தபோது இரு மனைவிகளும் பேசி, ஒரு முடிவுக்கு வந்த பின்னர் ஒருவர் உடன்கட்டை ஏறினாராம்.. அப்போ இது கட்டாயத்தின் பேரிலதானே நடந்திருக்குது.

    7. வாழ்க்கையில் நமக்கு எதிலாவது எப்பவாவது திருப்தி கிடைத்து விடுமோ?.. மீண்டும் தேவைப்படாத .. தேடாத அளவுக்கு?

    இப்போதைக்கு இது இருக்கட்டும்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ஸ்ஸ்ஸ் யப்பா :) பிஞ்சு இன்னிக்குதான் நீங்க என் ப்ரண்டுனு (பூவோடு சேர்ந்த ) ப்ரூவ் பண்ணியிருக்கிங்க :) இன்னும் நிறைய கேளுங்க 

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!