Who is the caller லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Who is the caller லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

3.12.12

ஹலோ யார் பேசறது?

"குறையொன்றுமில்லை.... மறைமூர்த்தி கண்ணா..." மேஜை மேலிருந்த செல்ஃபோன் பாடி அழைத்தது. அழைப்பு வந்திருப்பதைச் சொன்னது!
                                                          

ராகவன் சற்று நேரம் அதை எடுப்பதா வேண்டாமா என்று பார்த்துக் கொண்டிருந்து விட்டு, 'ராம கிருஷ்ணன் அழைக்கிறார்' என்னும் திரையைப் பார்த்து விட்டு பட்டனை அமுக்கி,"ஹல்லோ..." என்றான்.

மறு முனைக் குரல் "யார் பேசறது ?" என்று அதட்டியது!

ராகவன் அலைபேசியை முகத்தை விட்டு விலக்கி திரையை ஒருமுறை பார்த்தவன், மறுபடி காதில் வைத்து பொறுமையாக  "நீங்கள் யார் ?" என வினவ, 

                                                

மறு முனை "உங்களுக்கு இந்த அழைப்பு யாரிடமிருந்து வருகிறது என்பது தெரியாதா?" என்றது!
   
ராகவன் அமைதியாக "இந்த ஃபோனில் விடியோ வசதி ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லையே" என்றான்.

மறு முனை " அதில்லை சார், என் கஸ்டமர் ஒருவர் அவர் ஃபோனை இங்கே வைத்து விட்டுப் போய் விட்டார் எனத் தோன்றுகிறது.  அதை பையன் எடுத்துக் கொடுத்தான். உரியவர்களிடம் சேர்க்க நினைத்தேன். அதனால் தான் அதிலிருந்து நண்பர் என்று மார்க் செய்திருக்கும் பெயரில் இந்த நம்பர் இருந்ததால் நான் உங்கள் நம்பரை அழைத்தேன்" என்றார் 

ராகவன் " அட நண்பர்கள் என்றால் இப்படி அல்லவோ இருக்க வேண்டும் !  என்ன ஆச்சரியம் பாருங்கள்! இதுவும் என் கடையில் யாரோ விட்டு விட்டுப் போன ஃபோன் தான். அதனால்தான் நானும் இப்படி எச்சரிக்கையாகப் பேச வேண்டியதாயிற்று!" என்றான்.