Wednesday, January 17, 2018

வார வம்பு 180117சில எஃப் எம் சானல்களில் நமது பாரம்பரிய பக்திப் பாடல்களை / சுலோகங்களை , (உதாரணம்: கஜானனம் பூத கனாதி சேவிதம் என்ற சுலோகம் )    அவற்றுக்குரிய ராக, லயம், இல்லாமல், கிடார், டிரம்ஸ் பின்னணியுடன், இஷ்டத்துக்கு இழுத்து பாடுகிறார்களே, அது பற்றி, உங்கள் கருத்து என்ன? 

என்னால் அவற்றை இரசிக்க முடியவில்லை. 

அவற்றைக் கேட்கையில், மனதில் நிம்மதி, பக்தி போன்ற உணர்வுகள் தோன்றுவதில்லை. அவைகள் இந்தக் கால இளைஞர்களை ஈர்ப்பதற்காக உருவாக்கப்பட்டிருக்கலாம்.  ஆனால் இதனால், இளைஞர்கள் யாரும் ஈர்க்கப்பட்டிருக்கிரார்களா? உங்கள் கருத்து என்ன? 

14 comments:

Madhavan Srinivasagopalan said...

1 Me the first..
2 அவுட் ஆஃப் சிலபஸ்....
3 நான் ரேடியோலாம் கேக்குறது இல்லை

KILLERGEE Devakottai said...

ரேடியோ கேட்கும் பழக்கம் உண்டா ?

நெல்லைத் தமிழன் said...

ஒரிஜினல் பாட்டை ரீமிக்ஸ் செய்து பாடுவதைத்தான் நீங்க கேட்டிருக்கீங்கன்னு நினைக்கறேன். அப்படிச் செய்வது, 'திறமை' இல்லாதவர்களின் வேலை. அவர்களுக்கு புதிதாக உருவாக்கத்தெரியாமல் அடுத்தவன் திறமையை காப்பி அடிக்கும் வீணர்கள்.

இரண்டாவது, இந்த மாதிரி திரையிசைப் பாடல்களை காப்பி செய்து அதுக்கு பக்தி ரசம் கொண்டுவர முயற்சி செய்ததில், ஐயப்பன் பாடல்களுக்குத்தான் முதலிடம். அவைகள் பக்தி உணர்வைச் சிதைத்து, மலின உணர்ச்சிக்குக் கொண்டுசெல்பவை.

நல்ல பக்தி டியூனை 'ஒரு மாதிரி' பாடல்களுக்கு உபயோகப்படுத்தியதில் தேவாவுக்குத்தான் முதலிடம். அவர்தான், கந்த சஷ்டி கவச ராகத்தை விரச பாடலுக்கு உபயோகப்படுத்திய முதல் இசையமைப்பாளர்.

KILLERGEE Devakottai said...

நண்பர் நெ.த. அவர்களின் கருத்தை வழிமொழிகிறேன்.

தேவா முதல் குற்றவாளியே...
கலைக்கொலையாளி

ஏகாந்தன் Aekaanthan ! said...

ஒவ்வொரு துறையிலும் அசல் என்கிற பெயரில் நகல் ஆட்டம்போடும் காலமிது. வான்கோழிகள் விதவிதமாக அலங்கரித்துகொண்டு, மயில்களாக வேஷமிட்டு ஆடு ஆடுவென ஆடுகின்றன. சராசரிகளும், சராசரிக்கு கீழிருக்கும் கும்பல்களும் விடாது கைதட்டி, விசிலடித்து ஆர்ப்பரிக்கின்றனர்.

இந்த தப்பாட்டம் எண்டர்டெய்ன்மெண்ட் இண்டஸ்ட்ரியில் மேலும் அதிகம். காசுபுழங்கும் துறையல்லவா! குறிப்பாகச் சொன்னால், நமது சினிமாத் துறையில் ’கலைஞர்கள் ’ என அழைக்கத் தகுதியானவர்கள் 5% கூட இல்லை. (இங்கே நான் குறிப்பிடுவது பட்டத்தை அல்ல எனப் புரிந்துகொள்வதே பலருக்குக் கஷ்டம்.) இருந்தும் பாலாபிஷேகம், தேனாபிஷேகம், கோவில் கட்டுதல், பச்சைகுத்திக்கொள்ளுதல் இத்தியாதிகளில் தமிழ்நாட்டை மிஞ்ச மாநிலமில்லை. இனமில்லை. நமது மக்களின் ரசனை நிலை அவ்வளவு அதளபாதாளத்தில் வீழ்த்தப்பட்டுக் கிடக்கிறது.

நீடிக்கும் இத்தகைய கலாச்சார அபச்சார சூழலில், குப்பைகள் அதிகமாகிக் கூத்தடிப்பதைத் தவிர்த்தல் எளிதல்ல.

துரை செல்வராஜூ said...

தட்டிக் கேட்க ஆளில்லா விட்டால்
தம்பி சண்டப் பிரசண்டன்..

பழம் பெரும் கலைஞர்களின் வாழ்நாளைக் குறைத்ததில் இன்றைய இளம் கலைஞர்களுக்கு நிறையவே பங்கு உண்டு..

யார் யார் எனப் பெயர்களைச் சொல்வதில் விருப்பம் இல்லை.. அவரவர் சிந்தித்து புரிந்து கொள்ளவும்..

Thulasidharan V Thillaiakathu said...

ஆஆஅ! நான் இன்று லேட்டு!ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்.

கௌதம் அண்ணா நானும் உங்கள் கட்சி இதில்!

சில பாடல்கள் ரீமிக்ஸ் செய்கிறார்கள் அதாவது வெஸ்டர்ன் இசையுடன் கர்நாடக இசைப்பாடல்கள்...ஹரிஹரன் கூட கொலொனியல் கஸின்ஸ் என்று ஆல்பம் போட்டிருந்தார். அது ஓகே...

ஆனால் பக்திப் பாடல்கள் வருவது எனக்கும் ரசிக்க முடிவதில்லை

பக்திப்பாடல்கள் என்றாலே எம் எஸ், சீர்காழி, ஒரு சிலவற்றிற்கு சூலமங்கலம், டி எம் எஸ், அருமையா இருக்கும்...அந்த இசையும் அப்படியே. ஆனால் அவை இப்படியாவதை ஏற்றுக் கொள்ள மனம் மறுக்கிறது.

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

நான் இப்படிச் சொன்னதும் எனக்கு வயசாகிப் போச்சுனு அதிரா சொன்னால்...உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஹா ஹா ஹா

கீதா

G.M Balasubramaniam said...

சில கர்நாடக இசைப்பாடல்களை இப்படிக் கேட்டதுண்டு கர்நாடக இசைக்கு ஓக்கேவானால் பக்திப்பாடல்களுக்கும் ஓக்கேதானே என் நண்பன் ஒருவர் வீட்டில் ஹோம் தியேட்டரில் இதுமாதிரி நிறையவே இருக்கிறது ஒரு முறை இது பற்றி ஒருபதிவு கூட எழுதிய நினைவு

Geetha Sambasivam said...

காலம்பர எத்தனை நாழி வந்து வந்து பார்த்துட்டுப் போனேன்! :) எஃப்.எம். ரேடியோ மட்டும் இல்லை, ரேடியோவே கேட்கிறதில்லை. சென்னை, அம்பத்தூரில் இருந்தப்போவரைக்கும் ஆகாஷவாணியின் ஹிந்திப்பாடல்கள் ஒலிபரப்புக் கேட்டுக் கொண்டிருந்தேன். காலை வேளையில் ஒன்பது மணியிலிருந்து கர்நாடக இசைக்கச்சேரி கேட்டதுண்டு. அதுக்கப்புறமா இங்கே வந்தப்புறமா எதுவும் இல்லை!

Avargal Unmaigal said...

//கஜானனம் பூத கனாதி சேவிதம் என்ற சுலோகம் ) அவற்றுக்குரிய ராக, லயம், இல்லாமல், கிடார், டிரம்ஸ் பின்னணியுடன், இஷ்டத்துக்கு இழுத்து பாடுகிறார்களே, அது பற்றி, உங்கள் கருத்து என்ன? //


சுலோகங்களை அதன் ஒரிஜனல் வடிவத்தில் சொல்லுவதுதான் சிறப்பு

Bhanumathy Venkateswaran said...

அப்படிப்பட்டவைகளை நான் கேட்டதில்லை என்பதால் கருத்து சொல்ல முடியவில்லை.காயத்ரி மந்திரத்தை காலிங் பெல்லாக கேட்டிருக்கிறேன். மனசு கஷ்டமாக இருக்கும்.

பூ விழி said...

படித்து முடித்தவுடன் கீழே பார்கிறேன் முதல் கருத்து கொடுத்துள்ள MS சகோ கொடுத்துள்ள கருது படித்தவுடன் ஹா ஹா ஹா இன்னமும் தொடர்கிறது
பக்தி பாடல்களை மாற்றும் போது அதனுடைய உணர்ச்சிபாவம் குறையாமல் பார்த்து கொண்டால் மனசுணக்கம் வராது

Babu said...

/அவைகள் இந்தக் கால இளைஞர்களை ஈர்ப்பதற்காக உருவாக்கப்பட்டிருக்கலாம்./
நிச்சயமாக பக்தியின் பால் ஈர்ப்பதற்காக இல்லை.
இறை நம்பிக்கை உள்ள எவரும் இத்தகு இசையை விரும்ப மாட்டார்கள்.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!